Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அஞ்சலீனா ஜோலி, அன்ரோனியோ பன்ட்டாறஸ் மற்றும் யாழ் களம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனிடமிருந்து  இன்னுமொரு  நல்ல பதிவு.  எனக்கு இரண்டு வித்தியாசமான  நண்பிகள் இருக்கிறார்கள். பிரெஞ்சுக்காரிகள் தான்.  ஒரு நண்பி  இருபால் சேர்க்கை கொண்டவர். ஒரு குழந்தையும் உண்டு  அவரது நண்பியும் கணவனும்  ஒன்றாகவே  வசிக்கிறார்கள்.  மற்றையவளிற்கு கணவனும் காதலனும் உண்டு  அவர்களிற்கு இரண்டு பிள்கைள்  தான் யாருடன்  அன்றைய இரவை கழிப்பது என்பதை அவளே தீர் மானிக்கிறாள். பிள்ளைகளை பெரும் பாலும் கணவனே  கவனிக்கிறார்  அதே நேரம்  காதலனும் பிள்ளைகளை பாடசாலையால் அழைத்துவர போவார். இவர்களிடம் வெறும் காமத்தை மட்டும் நான் காணவில்லை  காதலும் இருக்கின்றது.அன்பு இரக்கம் இருக்கின்றது மனிதம் இருக்கின்றது. அனைத்துமே இருக்கின்றது . கலாச்சாரம் என்கிற போலி போர்வை இல்லை. இந்த காதல்  காமம் பற்றி எனது  அனுபவங்களே  யாழ் களத்தை  சூடாக்கி விட்டிருந்தது  இவை பற்றியும் எழுதலாமா  என யோசித்தக்கொண்டிருக்கிறேன். ஆனாலும் உங்கள் பாணியிலான பார்வை  நன்றாக இருக்கின்றது தொடருங்கள்.

  • Replies 53
  • Views 6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
 
சாத்திரி, தும்பளையான், உதயம், கலைஞன், புங்கையூரான், நந்தன், கலைஞன், சுகன், அர்யுன்.தமிழீழன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
 
மிகவும் சங்கடப்பட்டுக்கொண்டு இந்தப்பதிவினைப் பதிந்திருந்தேன். கருத்துக்கள் அனைத்தும் மிகவும் பக்குவப்பட்ட முறையிலும் ஆழமாகவும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. மிக்க நன்றிகள். 
 
கலைஞன் கேட்காது கேட்டகேள்வியாக நான் பார்ப்பது, ஒரு வைத்தியரே தன்னைப் பரப்பும் ஆசை கட்டுக்கடங்காதவராகத் தன்னைப் பரப்புகிறார் என்கையில், ஆணின் 'தன்னைப் பரப்பும்' ஆசைக்கு வரைவிலக்கணம் உண்டா? அது எப்போது கட்டுப்படும் என்பது. குறித்த வைத்தியரை வேண்டுமாயின் நாம் விதிவிலக்கு என்றோ வருத்தமுடையவர் என்றோ ஒதுக்கக்கூடினும், விலங்கு இராச்சியத்தில் ஆண்கள் வாழும் வரை விதைப்பதில் ஆசையுடையவர்களாவே இருக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. மனிதன் மட்டுமே உலகில் இந்த விலங்கியல் உந்துதலைக் கட்டுப்படுத்தியவனாக, இரண்டு பிள்ளைகளுடனோ அதற்குக் குறைவாகவோ தன்னால் திருப்த்திப்படமுடியும் என்று காட்டிக்கொண்டிருக்கிறான். அந்த அவதானிப்பு இந்தப் பதிவின் கோணத்திற்கு ஆதரவானது என்றே எனக்குப் படுகின்றது.
 
சுகனது, வழமைபோன்ற ஆழமான பார்வையில் ஒரு விடயம்; சார்ந்து எனக்குச் சற்று மாறுபட்ட பார்வை இருக்கிறது. எந்த ஒரு செயலிற்கும் விழைவு இருக்கிறது என்பதனை ஏற்றுக்கொள்ளும் அதே வேளை, காமத்தின் விழைவு குழந்தையாகவோ மனிதப்பரம்பலாகவோ தான் இருக்கவேண்டும் என்பதில் சற்று எமது பார்வைகள் மாறுபடுகின்றன. இன்றைய உலகில், கண்டுபிடிப்புகள் எதுவுமே அவை கண்டுபிடிக்கப்பட்ட காரணத்திற்காக மட்டும் பாவிக்கப்படுவதில்லை. அது விஞ்ஞானம் முதற்கொண்டு அத்தனை முனைகளிலும் அவ்வாறே இருக்கின்றன. இன்றைய வாழ்க்கைச் சூழலில், மிகப்பெரும்பான்மையானவர்கள், ஏற்கனவே குழந்தை உருவாக்கத்தையும் காமத்தையும் பிரித்து விட்டார்கள். குழந்தைபேற்றின் அடிப்படை அறிவு கூட அற்ற பாமரர்கள் ஒருவேளை பெண்ணிற்கு மெனோபோஸ் வரும்வரை குழந்தைகளைப் பெறக்கூடும். எனினும் இப்பதிவின் வாசகரை எடுத்துக் கொண்டால் அவர்களிற்குள் குழந்தைப்பேறும் காமமும் ஏற்கனவே பிரிக்கப்பட்டுவிட்டன. சராசரியாக இரு குழந்தைகள் இன்றைய குடும்ப அளவு என்று எடுத்துக் கொண்டால், அதற்கு மேல் உடலுறவு இன்பத்திற்காக மட்டுமே செய்யப்படுகின்றது, ஆனால் ஒழுக்கநெறி அந்த இன்பத்தை சோடிமாறாது கட்டுப்படுத்துகிறது. எனவே செயல் விழைவு என்று பார்க்கையில், இன்றைய உலகில் காமம் என்ற செயலின் விழைவு குழந்தைப்பேறாக மட்டும் இருக்கவில்லை. சிற்றின்பம், பெழுதுபோக்கு என்பன போன்ற விழைவுகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. அதே வேளை நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, பெண்கள் உத்தியோகம் முதலிய காரணிகள் சார்ந்து, எதிர்காலத்தில் வாடகைத் தாயில் இருந்து இன்னபல தொழில்நுட்பங்கள் குழந்தை உருவாக்கத்திற் பயன்பட்டு காமம் என்பது பொழுதுபோக்காக மட்டும் தான் ஆகிப்போகும் சாத்தியம் அதிகம். அத்தகைய ஒரு பொழுதுபோக்கு அம்சம் சோடிமாறாது தான் நடக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டிற்குப் பல அழுத்தங்கள் இருந்து கொண்டே இருக்கும்.
 
தும்பளையான் கூறுகின்ற, இல்லறத்தில் கணவன் மனைவிக்கிடையே ஏற்படுகின்ற காமத்தையும் காதலையும் பிரிக்கமுடியாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இ;வ்வுணர்வுகள் ஒருத்தனிற்கு ஒருத்தி என்ற வரையறைக்குள் மட்டும் தான் சாத்தியமா என்ற கேள்வி அதற்குப் புறம்பானது. இவள் எனக்கு மட்டுமானவள் அல்லது இவன் எனக்கு மட்டுமானவன் என்ற சிந்தனை, அது மீறப்படுகையில் குறித்தவரிற்கு வலியைக் கொடுக்கும். நாம் அன்பு வைத்திருப்பவர் நோகக் கூடாது என்பதற்காக நாம் அச்செயல்களைத் தவிர்க்க முயலுகிறோமே தவிர, ஒருவர் மீது மட்டும் தான் ஒரு நேரத்தில் காதலும் காமமும் இருக்கமுடியும் என்று கூறிவிடமுடியவில்லை.
 
அர்யுன், நீங்கள் கட்டுரையில் இருந்து எடுத்துக்கொண்ட சாரம் பதிவு பேசவிழைந்த விடயங்களில் ஒன்று என்பது சரியே. நீங்கள் சொல்வதைப் போல இந்த நிலை முன்னர் இருந்து நாம் அதைத் தாண்டி வந்திருக்கலாம். ஆனால், உலகில் புதியன புகுவதற்காகக் கழிக்கப்பட்ட பழையன அனைத்தும் நிரந்தரமாக மறைந்துபோவதில்லை. புதியன சரியென்று காலங்கள் கழிந்தபின் பழையன பற்றிய மீழ் சிந்தனை பலமுனைகளில் நிகழ்ந்துள்ளன. இனியும் நடக்கும். 
 
இப்போ ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம், முற்றிலும் மனதொருமித்த, சோல்மேற்ஸ் என்று வரையறைப்படுத்தக் கூடிய ஒரு தம்பதியர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். பாலியலை விட்டுவிட்டு வெறும் பேச்சை எடுத்துக்கொள்வோம். மேற்படி இருவரும் மணிக்கணக்காகப் பலமுனைகளில் மனமொருமித்து லயித்துப் பேசிக்கொண்டிருக்கக்கூடியவர்கள் என்றும் கொள்வோம். இந்நிலையில் இவர்கள் இருவரும் வேலையிடத்திலோ, வேறு எங்கோ தமது அலைவரிசைக்குட்பட்ட பிறநபர்களைச் சந்திக்கிறார்கள் என்றால் அத்தகைய நபர்களோடு அவர்கள் மணிக்கணக்காக ஒரு கோப்பிக் கடையில் இருந்து தனித்தனியே கதைக்கிறார்கள் என்றால் அது எவரிற்கும் ஒரு பொருட்டாகவே இருக்காது. பிறருடன் மனமொருமித்து லயித்துப் பல விடயங்களைப் பேசுவதால், தம்பதியினரிற்கிடையேயான பேச்சுக் குறைந்துபோகவேண்டும் என்பதில்லை. பிற நபர்கள் மூலம் புதிய கோணங்கள் அவர்களது பேச்சை மெருகூட்டும். மனித பரிமாற்றங்களில், பாலியல் உறவைத் தவிர அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அன்னியோன்னியமான தம்பதியர் ஏதேனும் சோகம் நேர்ந்தால் தங்கள் நண்பர் ஒருவரின் தோழில் தலை சாய்;த்து மனதார அழுவதையோ, நண்பரால் ஆசுவாசப்படுத்தப்படுவதையோ பற்றி எவரும் எதையும் பேசப்போவதில்லை. உடளம் உடல் என்ற அனைத்திற்குள்ளும், இனப்பெருக்க உறுப்பு ஒன்று தான் இத்தகைய பரிமாற்றங்களிற்கு அனுமதி பெறாததாக இருக்கிறது. ஒழுக்கம், இந்த உறுப்பைச் சுற்றி மட்டும் தான் இருகக்கிறது. கைகொடுக்கலாம், கன்னத்தில் முத்தமிடலாம், ஆரத்தழுவலாம், கதைத்து மகிழலாம், உணவைப் பரிமாறலாம் ஆனால் உடல் உளம் என்ற பெரும்பரப்பில் பாலியல் முனை மட்டும் ஒழுக்கத்தால் கட்டுப்படுத்தப்படும். அது சரியா பிழையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அது ஏன் அப்படி இருக்கிறது என்பதே விவாதப் பொருள். அதுவும் நோய் வராது, பொருளாதார சட்ட சிக்கல்கள் வராhது, குழந்தை உருவாகாது பொழுதுபோக்கா இருப்பது கூட ஏன் எடுத்த எடுப்பில் பிழையாகத் தெரிகின்றது. அதுவும் தொழில் சார்ந்து குடும்பக் கட்டமைப்பிற்குள் இருப்பவர்கள் கமராவில் செய்யக்கூடிய செயல்கள் பொழுதுபோக்கிற்காக மறுக்கப்படுவதன் தார்ப்பரியம் விவாதப் பொருளாகிறது. இது வெறுமனே பாலியல் தொழிலாளரை அணுகுவதாகத் தான் இருக்கவேண்டும் என்பதில்லை. ஆனால், பாலியல் தொழிலாளியின் இருப்பு தனித்த காமத்திற்கு ஒரு உதாரணம். மேலும்  இன்று சமூகத்தில் மிகப்பெரும்பான்மையினரது மனங்களில், திருமணம் என்பது ஏறத்தாள 99 விழுக்காட்டிற்கு மேல் 'பாலியல் எக்குளுசிவ்னஸ்' என்பதாக ஆகிப்போயிருக்கின்றது. பாலியல் கட்டுப்பாட்டிற்கு அப்பால் திருமண பந்தம் என்றால் என்ன என்பதும் விவாதப் பொருள்.
 
நீங்கள் கூறுவதைப் போல முழு மனிதர்களும் பாலியல் கட்டுப்பாடற்ற திருமணத்தை ஏற்பார்கள் என்பது இப்போதைக்குச் சாத்தியமற்றது. அப்படி ஒரு நிலை நோக்கிப் பரிந்துரைப்பதும் இத்தலைப்பின் நோக்கமல்ல. ஏலவே கூறப்பட்டதைப் போல, அண்மைக்காலமாக யாழ்களத்தில் உரையாடப்பட்ட கள்ளத்தொடர்புகள், விட்டுவிட்டு ஓடுதல்கள் சார்ந்து அஞ்சலீனாவின் காட்சியினை வைத்து ஒரு மாற்றுப் பார்வை முனையப்பட்டது மட்டுமே பதிவின் நோக்கம். அத்தகைய ஒரு பார்வை என்பது, அனைவரையும் திறந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள உதவாவிடினும், வழிதவறிய சோடியகளின் மீளிணைவிற்கு உதவக்கூடும். மீளிணைவிற்கான உள்ளாhந்;த உந்துதல் இருந்தும் பாலியல் ஒழுங்கு மீறல் பூதம் போல் அவ்விணைவைத்தடுக்கையில், மாற்றுப் பார்வை ஒருவேளை பூதத்தைக் கொல்லக்கூடும். அவ்வளவு தான்.
 
ஆதித்திய இளம்பிறையனிற்கான பின்னூட்டத்தில் கூறியதைப் போல, நாற்றுக்களை நட முயற்சிக்கலாம். அவை வளர்வதும் கருகுவதும் தளங்களைச் சார்ந்தது.
 
சாத்திரி கட்டாயம் உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்.
 
இந்தச் சங்கடமான தலைப்பில் பங்கேற்ற அனைத்துக் கருத்தாளர்களிற்கும் மனதார்ந்த நன்றிகள்.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இதில் துணிவான கருத்துக்களை முன்வைத்துள்ள ஆண்கள் தங்கள் மனைவி இன்னொருவனுடன் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. சேர்ந்து இருப்போம் எனில் சம்மதிக்கும் வரும் துணிவு கொண்டவர்களா.???எல்லாம் எட்டுச் சுரக்காய்.

  • கருத்துக்கள உறவுகள்
இதில் துணிவான கருத்துக்களை முன்வைத்துள்ள ஆண்கள் தங்கள் மனைவி இன்னொருவனுடன் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. சேர்ந்து இருப்போம் எனில் சம்மதிக்கும் வரும் துணிவு கொண்டவர்களா.???எல்லாம் எட்டுச் சுரக்காய்.

 

நல்ல கேள்வி. அப்படியான நிலை பொருளாதார, சமூக தாக்கங்கள் இன்றி வருமாக இருந்தால் சிலர் சம்மதிக்கலாம். அவுஸ் வந்த ஆரம்பத்தில் நான் வேலை செய்த ஒரு நிறுவனத்தின் வருடாந்த இரவு விருந்து நடந்தது. அதற்கு வேலை செய்பவர்கள் அவர்களின் துணைகள் (partners) அழைக்கப் பட்டிருந்தார்கள். அப்போது கலியாணம் கட்டாததால் தனியாக விருந்திற்கு சொன்றிருந்தேன். என்னுடம் வேலை செய்யும் ஒரு வெள்ளை பெண் dance floor  இல் என்னுடன் மிக நெருக்கமாக ஆடினார். அவளுடைய அப்போதைய ஆண் நண்பரும் கையிலே இருந்த பியரை உறிஞ்சியபடி எம்மை பாத்து சிரித்துக் கொண்டிருந்தார். எனக்கு அவன் வந்து எனக்கு அடிக்கப் போகிறானோ என மிகவும் பயமாக இருந்தது. நான் விலத்தி விலத்தி போனாலும் அந்தப் பெண் மூன்று பாட்டுகள் வரை என்னுடன் ஆடினாள். பின்னர் வேலையிலே ஆளைக் கண்ட போது ஏன் அவ்வாறு நடந்தாய் எனக் கேட்டு நான் பயந்த கதையயும் கூறினேன். சிரித்தபடியே I was teasing him என்றும் we had the best  night ever என்றும் கூறினால். என்னப்பா மொட்டு வெள்ளைக்காரன் என்று அன்று யோசித்தேன், ஆனால் இன்று பல வருட அனுபவங்களின் பின்னர் "she had  a point" என்பது மட்டும் புரிகிறது.

  • தொடங்கியவர்
இதில் துணிவான கருத்துக்களை முன்வைத்துள்ள ஆண்கள் தங்கள் மனைவி இன்னொருவனுடன் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. சேர்ந்து இருப்போம் எனில் சம்மதிக்கும் வரும் துணிவு கொண்டவர்களா.???எல்லாம் எட்டுச் சுரக்காய்.

 

 

உங்கள் கேள்வி நியாயமானது. இதற்கு முகமூடிகள் (என்னையும் சேர்த்து) "ஆம்" என்று சொன்னாலும் "இல்லை" என்று சொன்னாலும் அதனால் எதுவும் நிகழப்போவதில்லை. மாற்றம் தன்னனளவில் நிகழவேண்டும். எமது சமூகத்த்தில் இந்த முனையில் ஏகப்பட்ட விடயங்கள் தினமும் நடந்து கொண்டிருக்கின்றன. 'முற்போக்கு' என்று துளியும் வரையறுக்கமுடியாத பலர் கூட நிஜ வாழ்வில் பல மாற்றங்களோடு வாழ்கின்றனர். தனித்தனியாகப் பெயர் கூறிப் பேசுவது ஏற்புடையது அல்ல. ஆனால் இந்தப் பதிவின் வாசகர்களிற் பெரும்பாலானவர்களிற்கு அவ்வாறான சோடிகளைத் தத்தமது மட்டத்தில் தெரியக்கூடும்.
 
வெறும் இரு தசாப்த்தத்திற்கு முன்னர் தாம் திருமணம் செய்யும் பெண் virginனாக இருக்கவேண்டும் என்பதில் அடுத்த சிந்தனைக்கிடமில்லாது இருந்தது தமிழ் ஆணின் மனநிலை. திருமணத்திற்கு முன் உறவு ஏற்பட்டுவிட்ட பெண் தமிழ் உரையாடலில் 'அந்தப் பிளளையைப் பழுதாக்கிப் போட்டான்' என்ற ரீதியில் பேசப்பட்டாள். இன்று, குறைந்தபட்சம் புலத்தில், virgin என்பது அலட்டிக்கொள்ளப்படாதபடி பெரும்பாலும் ஆகிவிட்டது..
 
இந்தத் தலைப்பில் விவாகரத்தான மனைவியின் புதுக்கணவனிடம் தொழில்சார் சேவை பெறும் மனிதர் பற்றிப் பேசப்பட்டுள்ளது. இது கூட மிகச் சில வருடங்கள் முன்னர் புருவத்தை உயர்தியிருக்கக்கூடிய நிகழ்வு. பிரிந்து, சோடி மாறி, பின் மீள இணைந்தவர்கள் இருக்கிறார்கள். பொதுவில் வேறு தொடர்பேற்பட்டால் விட்டுப்பிரிந்து புதுச்சோடியுடன் வாழுங்கள் என்று சொல்வது இன்று சர்வசாதாரணமாகிவிட்டது. ஆக மாற்றம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
 
ஆனால், ஏற்கனவே கூறப்பட்டதைப் போல, பாட்டுக்கேட்பது அனுமதிக்கப்பட்டது என்பதால் மட்டும் எவரும் பாட்டுக்கேட்பதும் இல்லை, அனைத்துப் பாட்டையும் கேட்டுவிடவேண்டும் என்று நினைப்பதும் இல்லை.ஒழுங்கு விதி என்பதற்கு அப்பால்  தெரிவு என்பன இருக்கவே செய்கின்றன.
 

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலான பெண்கள் ஒழுக்கம் என்பதைக் கடைப்பிடிப்பதால்த் தான் இன்றுவரை எம் சமூகம் மற்றையது போல் சிதைந்து போகாதுள்ளது. இங்கு வாழும் இளம் பெண்கள் பலர் தம் கன்னித்தன்மையைக் காத்துத்தான் திருமணம் செய்கின்றனர். அதற்குக் காரணம் எங்கே தம் திருமண வாழ்வு முரிந்துவிடக் கூடாது என்னும் நோக்கம் தான். சில விதிவிலக்குகளும் இருக்கலாம். ஆனால் நாம் இதை பகிரங்கமாக எழுதும்போது, விவாதிக்கும் பொது அப்படி ஒழுக்கமாக இருப்பவர்கள் கூட ஓ இது அப்ப சாதாரணமாகிவிட்டது என்னவும் செய்யலாம் என்னும் மனோநிலையை அடைவார்கள். எனவே நீங்கள் கூறியது போல் முகமூடிபோட்டத்தில் எதுவும் கதைக்கலாம்,எழுதலாம். ஆனால் அதுவே எம் இளம் சந்தததியை சீர்கெடுக்கும் என்பது என்கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
பெரும்பாலான பெண்கள் ஒழுக்கம் என்பதைக் கடைப்பிடிப்பதால்த் தான் இன்றுவரை எம் சமூகம் மற்றையது போல் சிதைந்து போகாதுள்ளது.

 

இந்த கருத்தில் எனக்கு முழுமையாக உடன்பாடுண்டு.

இதை விபரித்து எழுதக்கூட நான் தயங்குவதற்கு காரணம் சமூகம் சார்ந்த பொறுப்புத்தான்.

 

இங்கு வாழும் இளம் பெண்கள் பலர் தம் கன்னித்தன்மையைக் காத்துத்தான் திருமணம் செய்கின்றனர். அதற்குக் காரணம் எங்கே தம் திருமண வாழ்வு முரிந்துவிடக் கூடாது என்னும் நோக்கம் தான்.

உண்மை

சில விதிவிலக்குகளும் இருக்கலாம்.

எல்லா  இடத்திலும் எல்லா காரியங்களிலும் உள்ளது தானே....

ஆனால் நாம் இதை பகிரங்கமாக எழுதும்போது, விவாதிக்கும் பொது அப்படி ஒழுக்கமாக இருப்பவர்கள் கூட ஓ இது அப்ப சாதாரணமாகிவிட்டது என்னவும் செய்யலாம் என்னும் மனோநிலையை அடைவார்கள். எனவே நீங்கள் கூறியது போல் முகமூடிபோட்டத்தில் எதுவும் கதைக்கலாம்,எழுதலாம். ஆனால் அதுவே எம் இளம் சந்தததியை சீர்கெடுக்கும் என்பது என்கருத்து.

 

ஒரு பொழுதுமே எம் முன்னோர்கள் முட்டாள்கள்  என நான் நினைத்து பார்த்ததில்லை.  எல்லாவற்றிலும் ஒரு சமூகப்பார்வையும் தூரப்பார்வையுமுண்டு.

 

இப்படி பார்ப்போம்

எமது படுக்கை அறை விடயங்களை  இங்கு எவராவது எழுதத்தயாரா??

இல்லை

காரணம்?????????

 

அதுவே இது போன்ற சில விடயங்கள் பற்றி  எழுதும் போதும் இருக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பார்ப்போம்

எமது படுக்கை அறை விடயங்களை  இங்கு எவராவது எழுதத்தயாரா??

 

யாரும் எழுதுவதில்லை.. :unsure: ஆனால் யாராவது எழுதினால் வாசிக்க கிளுகிளுப்பாக இருக்குமல்லவா? :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சச்சனம் ஒரு மார்க்கமாய்த்தான் திரியினம்  :lol:

  • தொடங்கியவர்

இப்படி பார்ப்போம்

எமது படுக்கை அறை விடயங்களை  இங்கு எவராவது எழுதத்தயாரா??

இல்லை

காரணம்?????????

 

அதுவே இது போன்ற சில விடயங்கள் பற்றி  எழுதும் போதும் இருக்கணும்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101533

 

<quote>

விசுகு, on Posted 26 April 2012 - 11:44 AM, said

:

உண்மையில்

அதைவிட அது முடிய கொஞ்ச நேரம் அணைத்தபடி இருந்து நித்திரை வருமே அதுவே அதைவிட சுகம்

அனுபவித்தவர்களுக்கு புரியும்.

முன்பெல்லாம் தனியே இருவரும் இருக்கும்போது அப்படியே எனது சறத்துக்குள்ளே இருவரும் படுத்து விடுவோம். விடிய காலைப்பூசை மீண்டும் ஆரம்பமாகி..........................  :wub:  :lol:  :D </quote>

 

 

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்
இன்னுமொருவன் யாழில் அடிக்கடி எழுதா விட்டாலும் மற்றவர்கள் எழுதுவதை எல்லாம் கவனமாய் வாசிக்கிறார் என எனக்கு இப்பத் தான் தெரியும் :lol:  :D  :lol:
 
  • கருத்துக்கள உறவுகள்
யாரும் எழுதுவதில்லை.. :unsure: ஆனால் யாராவது எழுதினால் வாசிக்க கிளுகிளுப்பாக இருக்குமல்லவா? :icon_idea:

 

நான் சொல்லவந்ததை புரிந்து கொண்டுள்ளீர்கள்.  நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

 

மேலே நீங்கள் காட்டிய  பதிவு

அதற்கு பின்னர் நித்திரை கொள்ளாதீர்கள் என்ற திரிக்கானது.

 

நேரமின்மை காரணமாக நான் எழுதிய  கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்று நினைக்கின்றேன்.

சறத்துக்குள் ஒன்றாக கிடப்பதையே இங்கே தூக்கிப்போடும் எமது சமூதாயத்துக்குள் இதுவே அதிகம் அல்லவா???

 

(வாயை  கிண்டிப்போட்டியள் இந்தாங்கோ)

படுக்கை அறை அனுபவங்களை 64 கலைகளிலும் என்னால் எழுதமுடியும்.

அதனை அப்படி ரசித்தவன் யான்.

ஆனால்

பெண் என்பவளுக்கு பல பொறுப்புக்கள் உள்ளன.  எனது விளையாட்டுக்களுக்கு இன்று இவ்வளவு மரியாதையுடன் இருப்பதற்கு எனது மனைவியின் பொறுப்புணர்வே காரணம்.

 

ஆண்களின் மனம் அலை பாயக்கூடியது.   கட்டுப்பாடற்றது. அதிலும் காமம் தலைக்கேறிய  வேளைகளில் கண்டதையும் செய்யத்தூண்டுவது.

அதை ஒரு எல்லைக்குள் வைத்திருக்கும் முழுப்பொறுப்பும் பெண்ணுக்கு வந்து விடுகிறது.

அதே நேரம் கணவனை திருப்திப்படுத்தல்  மற்றும் தன்னை கணவன் தவறாக கணிக்கிடுவதை தடுத்தல் என பெண்ணின் நிலை பெரும் அவலத்துக்குரியது.

இதை சரியாக பயன்படுத்தி ஒழுங்கமைத்து சமனாக்கி வாழ்வோரே இன்று நிம்மதியாகவும் மரியாதை புகழோடும் வாழ்கின்றனர்.

அந்தவகையில் நான் எல்லை மீறி போதும்   கோபப்பட்ட போதும் அதை சரியாக அனுமதித்து வடிகட்டியவளை  அந்த நேரம் வெறுத்திருந்தாலும் இன்று பெருமைப்படுகின்றேன்.

 

இந்த வகையில்தான் சுமேவின் கருத்துக்கு எனது பதிலிருந்தது.

அத்துடன் இது குடும்பநிலை சார்ந்த எனது கருத்தே.

 

அப்புறம் கல்யாணம் கட்டி  இன்னொருத்தரை வைத்திருப்பது.

வைத்திருந்தவரையே அடுத்தவருக்கும் இடமளிப்பது...

 

அவற்றையே  பொறுப்புக்கருதி தவிர்த்தல் நலம் என்று எழுதினேன்.

ஏனெனில்  இவை மனிதனுக்குள் சில சமயம் வரும் மிருக குணங்கள்.

அதை பெரிது படுத்துதலோ அல்லது அவற்றை உதாரணமாக  எடுத்தலோ புதிய சமூதாயத்துக்கு பிழையான வழிகளைக்காட்டிவிடக்கூடியது.

 

(இதையும் வேறு இடங்களில்  கொண்டு  வந்து தாக்காதீர்களப்பா.  எந்த திரியிலும் எமது  எல்லைக்குள் தேவைப்பட்டால் எல்லையைக்கடந்தும் எழுதமுடியும்)

இங்கு ஒருவர் திசை தெரியாமல் வந்து தத்தளிக்கின்றார் போலிருக்கு ?

தயவு செய்து யாராவது காப்பாற்றி மற்ற கரையில் விடவும் .

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புரியாத ஒரு விடையம் என்னவென்டால் வேலை செய்யும் இடத்தில் கூட வேலை செய்யும் ஆண்கள் பெண்களை(எமது)கொஞ்சலாம் தொடலாம் ஆனால் தமிழ் ஆண்களுக்கு கை கூட கொடுக்கக் கூடாது என்று கணவர்மார் நினைப்பது ஏன். 

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான பார்வைகளும் நடைமுறைகளும் வித்தியாசமான ஆடை அணிகலன்களும்

ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ கவர்ந்து கொள்ளும்.

 

குடும்ப வாழக்கை என்பது ஒரு நீண்ட தூரப்பயணம். அந்தப்பயணத்தில் இன்பம் துன்பம் எல்லாம் மாறிமாறி 

வந்து செல்லும். ஆனால்  சலிப்பு என்பது மட்டும் வரக்கூடாது. கணவன் மனைவிக்கிடையே இருக்கும்

உறவில் சலிப்பு என்பது வரும்போது ஆணோ பெண்ணோ இன்னுமொருவன் கூறுவதைப் போல 

விட்டுவிட்டு ஓடலாம் அல்லது கள்ளத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

கணவன் மனைவிக்கிடையே புரிந்து நடத்தலும் புரிய நடத்தலும் இன்றியமையாத ஒன்று.

 

ஆனாலும் இன்னுமொருவன் எழுதியதைப் போல ஒரு காலத்தில் சோடி மாற்றுதல் என்ற விடயம்

உலகின் எதோ ஒரு மூலையில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தலாம்.

 

சோடி மாற்றல் மூலம் மட்டுமே இந்தக் கள்ளத் தொடர்புகளையும் விட்டுவிட்டு ஓடுதல்களையும் கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் மனம் ஒரு குரங்கு என அந்தக்காலத்திலேயே கூறியிருக்கின்றார்கள்.

ஒவ்வொரு நாளும் சோடி மாற்றம் நிகழ்வதும் சலிப்பையே தரும்.

 

அந்தச் சலிப்பு என்பதை உங்கள் குடும்ப வாழக்கையில் கிட்ட வராமல் பார்த்துக்கொண்டால்

சோடி மாற்றங்களும் கள்ளத் தொடர்புகளும் விட்டுவிட்டு ஓடுதல்களும் நிகழ்தல் குறையும்.

 

வித்தியாசமான பார்வைகளும் நடைமுறைகளும் வித்தியாசமான ஆடை அணிகலன்களும்

ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ கவர்ந்து கொள்ளும்

  • கருத்துக்கள உறவுகள்
பெரும்பாலான பெண்கள் ஒழுக்கம் என்பதைக் கடைப்பிடிப்பதால்த் தான் இன்றுவரை எம் சமூகம் மற்றையது போல் சிதைந்து போகாதுள்ளது. இங்கு வாழும் இளம் பெண்கள் பலர் தம் கன்னித்தன்மையைக் காத்துத்தான் திருமணம் செய்கின்றனர். அதற்குக் காரணம் எங்கே தம் திருமண வாழ்வு முரிந்துவிடக் கூடாது என்னும் நோக்கம் தான். சில விதிவிலக்குகளும் இருக்கலாம். ஆனால் நாம் இதை பகிரங்கமாக எழுதும்போது, விவாதிக்கும் பொது அப்படி ஒழுக்கமாக இருப்பவர்கள் கூட ஓ இது அப்ப சாதாரணமாகிவிட்டது என்னவும் செய்யலாம் என்னும் மனோநிலையை அடைவார்கள். எனவே நீங்கள் கூறியது போல் முகமூடிபோட்டத்தில் எதுவும் கதைக்கலாம்,எழுதலாம். ஆனால் அதுவே எம் இளம் சந்தததியை சீர்கெடுக்கும் என்பது என்கருத்து.

 

சுமோ இன்னுமொருவன் எழுதியது கள்ளக் காதலைப் பற்றியோ,கள்ளத் தொடர்பு பற்றியோ அல்ல...கணவன் அனுமதியுடன் மனைவியும் அல்லது மனைவி அனுமதியுடன் கணவரும் அல்லது இருவரும் ஒருவருக்குகொருவர் ஒளிவு,மறைவில்லாமல் மாற்றானுடன் உறவு வைப்பது பற்றியதாகும்

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு தமிழகத்தில் இருந்தபோது, பணக்கார சோடிகள் மாறிக்கொள்வது பற்றி ஒரு ஊடகத்தில் படித்த ஞாபகம். அவர்கள் தங்களின் வாகனங்களின் திறப்புக்களைக் குலுக்கிப் போட்டு சோடிகளைத் தெரிவு செய்வார்களாம்.. :rolleyes: (நல்லவேளை.. நாங்கள் கிரிக்கட்டில் யார் முதலில் மட்டை பிடிக்கிறது என்கிறதுக்கு மண்ணில் கீறிப் போடுறமாதிரி சேய்யேல்லை.. :D )

 

இவ்வாறு நல்லபடியாக இந்தச் சோடி மாற்றம் நடந்துகொண்டிருந்தபோது சில ஊழல் பேர்வழிகள் மனைவி என்று விலைமாதர்களை அழைத்துச் சென்று சோடி மாற்றிப் புகுந்து விளையாடிவிட்டார்களாம்.. :icon_mrgreen: அதுக்குப் பிறகு சோடி மாற்றம் நடந்திருக்காது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். :D

உந்த வாகன திறப்பை குலுக்கி சோடியை மாறி கொண்டு போகும் விடயம் எனக்கு முதலில் சொன்னது உமாதான் .கொழும்பில் பெரிய இடத்தவர்களில் இது சகஜம் என்று சொன்னார் ஆனால் இன்று வரை நான் அதை நம்பவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
உந்த வாகன திறப்பை குலுக்கி சோடியை மாறி கொண்டு போகும் விடயம் எனக்கு முதலில் சொன்னது உமாதான் .கொழும்பில் பெரிய இடத்தவர்களில் இது சகஜம் என்று சொன்னார் ஆனால் இன்று வரை நான் அதை நம்பவில்லை .

 

ஏன் அண்ணா  சும்மா இருக்கிற வாய்க்குள்ள அவலை  அள்ளிப் போடுறியள்  :)

  • கருத்துக்கள உறவுகள்

இது எதோ பெரியவங்க சமாச்சாரம் போல இருக்கு சுண்டலுக்கு இங்க என்ன வேலை?

அப்ப நான் வட்டா....

  • கருத்துக்கள உறவுகள்

உந்த வாகனத்திறப்பு விடையம் புஷ்ப்பாதங்கத்துரையின் நாவலில் படித்தது.

Edited by sagevan

வாகனத் திறப்பு முறை வசதியான இடங்களில் உள்ளதாகக் கேள்வி.

 

இங்கு வேறு முறை ஒன்று நடை முறையில் உள்ளது. அதனை 'Dogging' (நாய்கள் மாதிரி) என்று கூறுவார்கள்.  அதற்கென்றே குறிப்பிட்ட 'Dogging Sites' உண்டு. அது ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள car park, மைதானங்களாக இருக்கலாம். அங்கு காரில் இருந்து கொண்டு உடலுறவில் ஈடுபடுவார்கள்.

 

ஒரு முறை தனியே வெளியூர்  ஒன்றிற்குச் சென்ற பொழுது, இடம் தெரியாமல் மாறி இப்படியான  ஒரு இடத்திற்கு சென்று ஒடி வந்தேன்.  

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்
வாகனத் திறப்பு முறை வசதியான இடங்களில் உள்ளதாகக் கேள்வி.

 

இங்கு வேறு முறை ஒன்று நடை முறையில் உள்ளது. அதனை 'Dogging' (நாய்கள் மாதிரி) என்று கூறுவார்கள்.  அதற்கென்றே குறிப்பிட்ட 'Dogging Sites' உண்டு. அது ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள car park, மைதானங்களாக இருக்கலாம். அங்கு காரில் இருந்து கொண்டு உடலுறவில் ஈடுபடுவார்கள்.

 

ஒரு முறை தனியே வெளியூர்  ஒன்றிற்குச் சென்ற பொழுது, இடம் தெரியாமல் மாறி இப்படியான  ஒரு இடத்திற்கு சென்று ஒடி வந்தேன்.  

 

இதை நாங்கள் நம்புறம்... :wub:

  • கருத்துக்கள உறவுகள்
பலருக்கு இன்னுமொருவன் எழுதியது ர‌தி விளக்கவுரை கொடுத்ததும் தான் புரியுது :lol:  :D  :rolleyes:
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.