Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல் காதல் கடிதம் - திவ்யா (மறுபக்கம்)

Featured Replies

அப்போ எனக்கு பதினாலு வயசு தான் இருக்கும். வயசுக்கு ஏத்த மிடுக்கும், பருவ வளர்ச்சியும்  என்னையும் ஒரு சினிமா கதாநாயகியுடன் ஒப்பிடும் அளவு மனபக்குவத்தை எனக்குள் வளர்த்து இருந்தது. பூப்படைதலுக்கு பின்னான பெண்களின் உணர்வுகளை எளிதில் மற்றவர்களுக்கு புரியவைக்க முடியாது. என்ர முகவெட்டு கொஞ்சம் நடிகை கௌசல்யாவை ஒத்திருந்தமையால் நானும் அவவை போல முடி வெட்டை மாற்றி கொண்டேன்.

ரோட்டாலே போகும்போது பெடியங்கள் என்னை கௌசல்யா என்று கூப்பிடும்போது, அவங்களை பார்த்து முறைச்சாலும், மனசுக்குள் ஒரு இனம்புரியாத சந்தோசம். வீட்டை வந்தவுடனே ஓடி சென்று கண்ணாடிக்கு முன்னாலே நிண்டு தலையை ஒரு கோணலாய்  சாய்ச்சு, இடுப்பை வளைச்சு, கண்ணை சிமிட்டி, உதட்டை கடிச்சு எல்லாம் போஸ் குடுத்து பாப்பன். பெடியள் ரோட்டிலே சொன்ன வார்த்தைகளை திரும்ப ஒரு முறை சொல்லியும் பார்த்தேன். என்ன ஒரு சந்தோசம். 

அம்மா தான், பெட்டைக்கு நட்டு கழண்டு போச்சோ எண்டு பயந்து போய், உப்பு மிளகு, செத்தல் மிளகாய் எல்லாம் வைச்சு, ரோட்டிலே இருக்கிற மண்ணையும் கொண்டுவந்து மேலே இருந்து கீழே மட்டும் சுத்தி மூண்டுதரம் துப்ப சொல்லுவா.நானும் காறித்துப்புவேன். பிறகு கொண்டுபோய் எரியிற அடுப்புக்குள்ளே போட்டிட்டு உப்பு வெடிக்கிற சத்தத்தை கேட்டு சொல்லுவா, பாத்தியாடி என்ர பிள்ளைக்கு எவ்வளவு நாவூறு எண்டு.

உண்மையிலே அம்மாவுக்கு தான் மறை கழண்டு போச்சு.. என்னை சுத்தாமல், அவ நேரேயே கொண்டுபோய், அடுப்புக்க போட்டிருந்தால் இன்னும் கூட வெடிச்சிருக்கும். நான் துப்பிதான் வெடிக்கிறது குறைவா இருக்குது எண்டு எங்கட அம்மாவுக்கு எப்பத்தான் விளங்கபோகுதோ. நான் தான் தனிப்பிள்ளை அதனால அவைக்கு என்மேலே கண்மூடித்தனமான பாசம்.

நாங்கள் தெல்லிப்பளையில் இருந்து போன கிழமைதான் இங்கே வந்தனாங்கள். என்னடி இவள் இப்பத்தான் மண்டை கழண்டதுகளை பற்றி கதைச்சு போட்டு, தெல்லிப்பளையில் இருந்து வந்தது எண்டு வேற சொல்லுறாள் எண்டு பார்க்காதீங்கோ. 

எங்கட சொந்த இடம் தெல்லிப்பளை, கே.கே.எஸ் ரோட்டிலே தெல்லிப்பளை சந்தியிலே இருந்து, துர்க்கை அம்மன் கோயில்பக்கமாக வந்தால் இடப்பக்கம் வார முதலாவது ஒழுங்கைக்குள்ளே நாலாவது வீடு. அம்மான சொல்லுறன் அந்த காலத்திலேயே தெல்லிப்பளை சந்தியிலே நிக்கிற பெடியங்களிட்டே வந்து கௌசல்யா வீடு எது  எண்டு கேட்டால் அவங்கள் எங்கட வீடு மட்டும் கொணந்து காட்டுவாங்கள். நம்பிறண்டால்  நம்புங்கோ.

ஆமி, செல்லடி பிரச்சனைகளால நாங்கள் இடம்பெயர்ந்து தான் இங்கே வந்தனாங்கள். வந்த புதுசிலே ஒருத்தரையும் தெரியாது.அம்மா தான் சொன்னா வீட்டிலேயே சும்மா கிடக்கிற நேரம் கோயிலுக்கெண்டாலும் போயிட்டு வாவண்டி எண்டு.

அண்டைக்கு வெள்ளிக்கிழமை, உள்வீதியிலே வடமேற்கு மூலையிலே இருந்த முருகனை கும்பிட்டு, கண்ணை மூடியபடியே நெஞ்சிலே கைகளால் தொட்டு கும்பிட்டு திரும்ப, கிணத்துக்கு மேலே பூப்புடுங்கி கொண்டிருந்த குரங்கு ஒண்டு, கிணத்தடியிலே கால் கழுவிட்டு போன தண்ணிக்குள்ளே விழுந்து என்ர  சட்டை முகம் எல்லாம் சேத்து தண்ணி.

விழுந்தது எழும்புவம், ஒரு மன்னிப்பு கேட்பம், எண்டு விவஸ்தையே இல்லாமல் தண்ணிக்குள்ளேயே கிடந்தது ஒரு சேத்துப்பண்டி மாதிரி. முகவெட்டு நல்லா இருந்தாலும் பென்சிலால வடிவேலு வைச்ச மீசை மாதிரி ஒரு மீசை, இதுக்கு முதல்ல பொம்பிளை பிள்ளைகளையே பார்க்காத மாதிரி ஒரு பார்வை. 

எனக்கு உள்ளுக்குள்ளே அருவருத்தது. ஏனோ தெரியாது சிலரை பார்த்ததும் அவங்களால் நாங்கள் கவரபட்டுவிடுவோமோ என்ற தன்னுணர்வால் ஏற்படும் ஒரு வெறுப்பு அப்போது எனக்கு அவனில் ஏற்பட்டு இருந்தது.மனசுக்குள்ளே திட்டினேன். குரங்கு... சனியன்.... மூதேசி... எண்டு எல்லாம், ஆனால்  அது என்ர வாயை பார்த்துகொண்டு தண்ணிக்கையே கிடந்தது. பண்டி.

அண்டைக்கு முழுக்க சுடுதண்ணி குடிச்ச நாய் மாதிரி நாக்கை தொங்க போட்டு கொண்டு கோயிலையே சுத்தி சுத்தி வந்தது. நந்தியை ஐஞ்சு தரம் சுத்தினது என்றால் பாருங்கோவன் . அது நந்திக்கு மேல இருந்த மோதகத்தை எடுக்கத்தான் சுத்திச்சோ தெரியாது. எனக்கு பொம்மர் வந்து குண்டு போட முதல்ல சுத்திற சீ பிளேன் தான் ஞாபகத்துக்கு வந்தது. அதுவே பார்க்க ஒரு மூஞ்சூறு மாதிரி, எங்க தான் விழுந்து கும்பிடுறது எண்டே தெரியாமல் பிள்ளையாற்றை எலியை கூட விழுந்து கும்பிட்டது எண்டால் பாருங்க. சேர்கஸ்காரன் வைச்சிருக்கிற குரங்கு அது.

ஏன்தான் கோயிலுக்கு வந்தோம் எண்டு இருந்திச்சு. எண்டாலும் அம்மா சொன்ன மாதிரி எனக்கு ஒரு அருமையான தோழி கிடைச்சாள். வெண்ணிலா எண்டு பெயர். எல்லாருக்கும் பெயர் சரியா அமையுறதில்லை. ஆனால் அவள் பெயருக்கேற்ற வெண்ணிலா, கள்ளம் கபடம் இல்லாத வட்டமுகம். அவளை பார்த்தாலே அவளிண்ட பேரை கேட்க தேவை இல்லை. அவளும் நானும் ஒரே பள்ளிக்கூடம் வேம்படி. அப்பா தன்ர செல்வாக்கை பாவிச்சு பொன்னம்பலம் ரீச்சரிட்டை அட்மிசன் வாங்கி இருந்தார். 

வெண்ணிலா வீட்ல தான், அந்த குரங்கோட முதன்முதல் பேசினேன். எனக்கு அவனோட பேசி இருக்கவே தேவை இல்லை. வெண்ணிலா தான் சொன்னாள், அவன் ஒரு இளிச்ச வாயன் நீ சொன்னால் தலைகீழா நிண்டு கொண்டு செய்வான் எண்டு. நானும் சும்மா டெஸ்ட் பண்ணி பார்ப்பம் எண்டு தான், எட்னா கண்டோசுக்குள்ளே வார அனிமல்ஸ் படம் போட்ட ஸ்டிக்கர் இருக்கா  எண்டு கேட்டதுக்கு அடுத்தநாளே பத்து ஸ்டிக்காரோட வந்து நிண்டுது.என்னை பாத்து சும்மா வழியுறதும், எடுப்பு காட்டுறதும் எனக்கு ஏதோ புரியுற மாதிரியும் இருந்தது, புரியாத மாதிரியும் இருந்தது. 

வழக்கமா நான்  வெண்ணிலா வீட்டிலே இரவு படிக்க வாறனான். அண்டைக்கு அந்த குரங்கு வெண்ணிலாவின் அண்ணனோட வந்திருந்த நேரம் பார்த்து, பழைய மீடியம்வே ரேடியோவில தூத்துக்குடி வானொலி நிலையத்திண்ட ஒரு மூண்டு பாட்டு, எட்டே முக்காலுக்கு போச்சுது. 

அதிலே ஒரு பாட்டு, மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மூச்சுவிடாமல் பாடின பாட்டுக்கு  என்னை மறந்து போட்ட தாளத்துக்காக, அடுத்தநாள் அந்த குரங்கு அதே  பாட்டை கழுதை மனுசரூபத்திலே வந்து பாடுறமாதிரி பாடி, பிரக்கடிச்சு, கண்ணால மூக்கால வாயால தண்ணி வந்தது தான் மிச்சம். நான்  அண்டையோட அந்த பாட்டை கேட்கிறதே விட்டுட்டேன். உண்மையா பிறகு எப்ப அந்த பாட்டு போனாலும், இந்த குரங்கு பாடினது தான் ஞாபகம் வந்து தொலைக்குது.

பிறகு ஒரு நாள் அந்த குரங்கு, அதிண்ட கூடத்தோட சேர்ந்து கிரிகெட் விளையாடி கொண்டிருந்தது. வெண்ணிலா தான் வெளிக்கிடும் மட்டும் கிரிகெட் பாத்து கொண்டு நிக்க சொன்னாள் எண்டதுக்காக வந்து நிண்டேன். நான் நினைக்கிறேன் அந்த குரங்கு, நான் தன்னை தான் பார்க்க வந்தேன் எண்டாக்கும் Bat ஐ சுலட்ட்டி கொண்டு போய், விறகு கொத்திற மாதிரி கொத்தி கொண்டு நிண்டது. அதுக்குள்ளே அதுக்கு எடுப்பு வேற, டென்னிஸ் ball பிட்ச்ல புல்லு புடுங்கி கொண்டு இருந்திச்சு. போட்டான் பாருங்க ஒரு ball. இது வீடு கூட்டுறது  மாதிரி bat ஐ சுலட்டிச்சு, பந்து நடு விக்கட்டை ஐஞ்சடிக்கு அங்காலே தூக்கி எறிந்சிட்டுது. கீப்பர் போய், விக்கட்டை தூக்கி கொண்டு வாறான், இது திரும்பி கூட பார்க்கவில்லை என்னை பார்த்து பார்த்து bat ஐ கொஞ்சிக்கொண்டு இருந்தது. அம்பயர் அவுட் எண்டு சொன்ன பிறகுதான் திரும்பி பார்க்குது. 

இதெல்லாம் கிரிகெட் விளையாடினால் கிரிகெட் உருப்பட்ட மாதிரி தான். எனக்கு வந்த சிரிப்பை அடக்கவே முடியவில்லை. உண்மையா கவுண்டமணி படத்துக்கு கூட அப்படி சிரிச்சிருக்க மாட்டேன். நிறைய காலத்துக்கு பிறகு வாய் விட்டு சிரிச்சேன்.தன்னை பார்த்து தான் சிரிக்கிறேன் எண்டு கூட தெரியாமல் என்ர வாயை பார்த்து கொண்டு இருந்தது அந்த குரங்கு.

சரி இவ்வளவும் சொல்லிட்டேன். அந்த குரங்கிண்ட பெயரை சொல்லேல.

அதுக்கு பெயர் பகலவன்....

தொடரும்.

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்லி இருக்கவே வேண்டியதில்லை பகலவன், உங்கள் முதல் காதல் கதையின் மறுபக்கம் என்பது எழுத்தோட்டத்தினூடாக நன்றாகவே புரிந்துகொள்ள முடிகின்றது.

'பெண்கள், இப்படி 'எல்லா மிருகங்களின் பெயர்களையும் சொல்லித் திட்டுவார்களா என்ன?:) !!...'சரியான 'லூசு" என்று மட்டும் தான் நான் சொல்லி இருக்கிறேன். :).

நல்லாத்தான் போகுது!!....

  • கருத்துக்கள உறவுகள்

தகடு குடுத்தவங்க கொஞ்சம் ஓவரா  யோசிச்சு  குடுத்திட்டாங்க  :(

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நேரம் எனக்கு எல்லாம் குழம்பிப் போச்சு. எண்டாலும் அது வாசிக்கேக்கை இருந்த விறுவிறுப்பு இப்ப போட்டுது பகலவன் அப்பிடியே தொடர்ந்திருக்கலாம்

'பெண்கள், இப்படி 'எல்லா மிருகங்களின் பெயர்களையும் சொல்லித் திட்டுவார்களா என்ன? :) !!...'சரியான 'லூசு" என்று மட்டும் தான் நான் சொல்லி இருக்கிறேன். :).

---

Edited by நிழலி
நீக்கப்பட்டுள்ளது

(நிர்வாகமும் வாசகர்களும் மன்னிக்கவேண்டும் முதல் காதல் கதையின் மறுபக்கத்தை வேறு ஒரு பெண்  (முகில்) பெயரில் எழுத நினைத்தேன் ஒரு விறுவிறுப்புக்காக. அது என் தவறு தான்.)

நல்ல ஐடியா. எழுத்து நடையை மாற்றியிருந்தால் வித்தியாசமாக விறுவிறுப்பாக இருந்திருக்கும். எழுத்து நடையும் நகைச்சுவையும் காட்டிக் கொடுத்திட்டுது.

அது சரி பெண் பெயரில் எழுதும் பொழுது யாராவது வாலிப வயோதிப அன்பர்கள் தனி மடலில் தொடர்பு கொண்டார்களா? :D

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை கல்லாடிகள்.உண்மையான புதியவர்களையே இப்ப நம்புறது இல்லை.

.

அது சரி பெண் பெயரில் எழுதும் பொழுது யாராவது வாலிப வயோதிப அன்பர்கள் தனி மடலில் தொடர்பு கொண்டார்களா? :D

நேரம் கானாமல் போச்சு :D

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமா நான் தனிமடல் அணுப்பல்ல

  • கருத்துக்கள உறவுகள்
 இதுக்கு முதல்ல பொம்பிளை பிள்ளைகளையே பார்க்காத மாதிரி ஒரு பார்வை. 

இதைத் தான் சொல்லுறது, நாறல் மீனைப் பூனை பாக்கிறது போல எண்டு! :D

தொடருங்கள், பகலவன்!

சத்தியமா நான் தனிமடல் அணுப்பல்ல

 அப்ப மற்றவர்களுக்கு அனுப்பியிருக்கின்றீர்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்
சத்தியமா நான் தனிமடல் அணுப்பல்ல

நானும் அனுப்பேல்ல. :lol:

அருமையாக எழுதி வருகின்றீர்கள்!
தொடருங்கள் பகலவன்.... தொடர்ந்து வாசித்து வருகின்றேன். :)

  • கருத்துக்கள உறவுகள்
பகலவனுக்கு நல்ல எழுத்தாற்றல் இருக்குது. பாராட்டுக்கள்...மெம்மேலும் வித்தியாச‌மாக எழுதி உங்கள் எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ளவும்.
 
இந்த கதை ஒரு பெண் சொல்வது மாதிரி எழுதியிருந்தாலும் இதை எழுதுவது ஒரு ஆண் என இலகுவாக கண்டு பிடித்து விட‌க் கூடிய மாதிரித் தான் இருக்குது...எப்படித் தான் எழுதினாலும் ஒரு ஆணால் பெண்ணினது உணர்வுகளை அப்படியே எழுத முடியாது அதே போல் ஒரு பெண்ணால் ஆணினது உணர்வுகளை அப்படியே எழுத முடியாது...நன்றி
 
ரோட்டாலே போகும்போது பெடியங்கள் என்னை கௌசல்யா என்று கூப்பிடும்போது, அவங்களை பார்த்து முறைச்சாலும், மனசுக்குள் ஒரு இனம்புரியாத சந்தோசம். வீட்டை வந்தவுடனே ஓடி சென்று கண்ணாடிக்கு முன்னாலே நிண்டு தலையை ஒரு கோணலாய்  சாய்ச்சு, இடுப்பை வளைச்சு, கண்ணை சிமிட்டி, உதட்டை கடிச்சு எல்லாம் போஸ் குடுத்து பாப்பன். பெடியள் ரோட்டிலே சொன்ன வார்த்தைகளை திரும்ப ஒரு முறை சொல்லியும் பார்த்தேன். என்ன ஒரு சந்தோசம்.

உங்கள் சொல்லாடல்கள் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளன . எழுத எழுத இன்னும் மெருகேறும் . வாழ்த்துக்கள் பகலவன் 

 வாழ்த்துக்கள் பகலவன்,  தொடருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமை

  • தொடங்கியவர்

சொல்லி இருக்கவே வேண்டியதில்லை பகலவன், உங்கள் முதல் காதல் கதையின் மறுபக்கம் என்பது எழுத்தோட்டத்தினூடாக நன்றாகவே புரிந்துகொள்ள முடிகின்றது.

'பெண்கள், இப்படி 'எல்லா மிருகங்களின் பெயர்களையும் சொல்லித் திட்டுவார்களா என்ன? :) !!...'சரியான 'லூசு" என்று மட்டும் தான் நான் சொல்லி இருக்கிறேன். :).

நல்லாத்தான் போகுது!!....

உண்மைதான் தமிழ்தங்கை, அபப்டி சொல்லி இருக்க தேவை இல்லை, இருந்தாலும் சிலர் புரிய தவறியமையால் அப்படி எழுதினேன். பெண்கள் எல்லாமாதிரியும் மனசுக்குள் திட்டுவார்கள். வெளியில் தான் நாகரிகமா நடந்து  கொள்ளுவதாக நடிப்பார்கள். :lol:  நன்றி உங்கள் கருத்துக்கு.

தகடு குடுத்தவங்க கொஞ்சம் ஓவரா  யோசிச்சு  குடுத்திட்டாங்க  :(

நந்து, தகடு குடுக்கிறது என்று நிறைய யோசிச்சிடாங்கள். எல்லாமே எல்லாருக்கும் புரிவதில்லை. எல்லாம் நன்மைக்கே .

கொஞ்ச நேரம் எனக்கு எல்லாம் குழம்பிப் போச்சு. எண்டாலும் அது வாசிக்கேக்கை இருந்த விறுவிறுப்பு இப்ப போட்டுது பகலவன் அப்பிடியே தொடர்ந்திருக்கலாம்

---

என்ன செய்கிறது சுமோ அக்கா, எல்லாம் கையை விட்டு போச்சே .. :lol: 

நல்ல ஐடியா. எழுத்து நடையை மாற்றியிருந்தால் வித்தியாசமாக விறுவிறுப்பாக இருந்திருக்கும். எழுத்து நடையும் நகைச்சுவையும் காட்டிக் கொடுத்திட்டுது.

அது சரி பெண் பெயரில் எழுதும் பொழுது யாராவது வாலிப வயோதிப அன்பர்கள் தனி மடலில் தொடர்பு கொண்டார்களா? :D

அதெல்லாம் வெளியிலே சொல்ல முடியாது தப்பிலி. அதை வைச்சு இன்னொரு கதை எழுதுவம் எண்டு இருக்கிறேன். :lol:  :icon_idea: 

எங்கடை கல்லாடிகள்.உண்மையான புதியவர்களையே இப்ப நம்புறது இல்லை.

நேரம் கானாமல் போச்சு :D

எங்கடை ஆக்களிண்ட வண்டவாளங்கள் வெளியிலே வந்தால் தான் தெரியும்  :D 

சத்தியமா நான் தனிமடல் அணுப்பல்ல

சுண்டல் நீங்களே உங்களை காட்டி கொடுத்திடுவவீங்கள் போல இருக்கே :lol: 

இதைத் தான் சொல்லுறது, நாறல் மீனைப் பூனை பாக்கிறது போல எண்டு! :D

தொடருங்கள், பகலவன்!

பார்த்த அனுபவம் இருக்கா புங்கை அண்ணா. அதெல்லாம் பார்க்கும்போது இருக்கும் சுகமே தனி  :lol: 

 அப்ப மற்றவர்களுக்கு அனுப்பியிருக்கின்றீர்கள் :lol:

எப்படி கண்டுபிடிசீங்கள்  :icon_idea: 

நானும் அனுப்பேல்ல. :lol:

அக்கா வேணாம் நான் அழுதிடுவேன்  :lol: 

அருமையாக எழுதி வருகின்றீர்கள்!

தொடருங்கள் பகலவன்.... தொடர்ந்து வாசித்து வருகின்றேன். :)

நன்றி கவிதை. உங்கள் தொடரையும் நான் தவறாது படிப்பவன் முடிவை காண ஆவல்.

பகலவனுக்கு நல்ல எழுத்தாற்றல் இருக்குது. பாராட்டுக்கள்...மெம்மேலும் வித்தியாச‌மாக எழுதி உங்கள் எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ளவும்.
 
இந்த கதை ஒரு பெண் சொல்வது மாதிரி எழுதியிருந்தாலும் இதை எழுதுவது ஒரு ஆண் என இலகுவாக கண்டு பிடித்து விட‌க் கூடிய மாதிரித் தான் இருக்குது...எப்படித் தான் எழுதினாலும் ஒரு ஆணால் பெண்ணினது உணர்வுகளை அப்படியே எழுத முடியாது அதே போல் ஒரு பெண்ணால் ஆணினது உணர்வுகளை அப்படியே எழுத முடியாது...நன்றி
 
அப்படியா ரதி...? உங்கள் எழுத்துக்களும் அப்படிதான் போல. :lol:  நான் ஒரு பெண் சொல்ல சொல்ல எனது பாணியில் எழுதுகிறேன். சில வேளைகளில் அதுவே அப்படி தோணலாம். நன்றி உங்கள் கருத்துக்கு.

ரோட்டாலே போகும்போது பெடியங்கள் என்னை கௌசல்யா என்று கூப்பிடும்போது, அவங்களை பார்த்து முறைச்சாலும், மனசுக்குள் ஒரு இனம்புரியாத சந்தோசம். வீட்டை வந்தவுடனே ஓடி சென்று கண்ணாடிக்கு முன்னாலே நிண்டு தலையை ஒரு கோணலாய்  சாய்ச்சு, இடுப்பை வளைச்சு, கண்ணை சிமிட்டி, உதட்டை கடிச்சு எல்லாம் போஸ் குடுத்து பாப்பன். பெடியள் ரோட்டிலே சொன்ன வார்த்தைகளை திரும்ப ஒரு முறை சொல்லியும் பார்த்தேன். என்ன ஒரு சந்தோசம்.

உங்கள் சொல்லாடல்கள் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளன . எழுத எழுத இன்னும் மெருகேறும் . வாழ்த்துக்கள் பகலவன் 

நன்றி கோ. உங்களை  போன்றவர்களில் ஊக்கம் தான் அதற்கு ஒரே காரணம் 

 வாழ்த்துக்கள் பகலவன்,  தொடருங்கள்

நன்றி சுந்தரம் உங்கள் வருகைக்கும் பதிவிற்கும்.

அருமை

ஒரே வார்த்தை என்றாலும் உங்கள் வாயில் இருந்து வருவதில் ஒரு பெருமை இருக்கு :D

  • தொடங்கியவர்

பகலவன்... சும்மா பெயரை கேட்டாலே எரியுதில்லே..அப்படி தான் எனக்கும் அவன் பெயரை கேட்டாலே எரிச்சல் எரிச்சலாக தான் வரும்.

அவன்ர பெயர் எனக்கு தெரிய வேணும் எண்டதுக்காகவே, அவனின் நண்பர்கள் தூரத்தில் இருந்து அவனை பகலவன் என்று கூப்பிடுறதும். எனக்கு பக்கத்தாலே போகும் போது மச்சான் ..பகலவன் என்று பக்கத்திலே போறவனையே பெயரை சொல்லி கூப்பிடுறதும், அவங்கட அழும்பு தாங்கமுடியுறதில்லை.

வாழ்க்கையிலேயே அவன்ர பெயரை உச்சரிக்க கூடாது எண்டு, தமிழ் பாட சோதனையிலே சூரியனுக்கு ஒத்த சொல்லு கேட்ட போது  கூட கதிரவன் எண்டு தான் எழுதினேன். அப்படி  ஒரு வெறுப்பு அவன் பெயரில்.

அண்டைக்கு ஒரு வெள்ளிக்கிழமை,  தேவார புராணம் ஓதாருக என்று ஐயர் மந்திரம் சொல்லி முடிக்கவும் ஒருத்தரும் தேவாரம் படிக்கவில்லை , எட்டாத கயிற்றில் தொங்கி தொங்கி மணி அடிச்சு கொண்டிருந்த ( இவன் மணியை அடிச்சானோ, மணி தான் இவனை தூக்கி தூக்கி அடிச்சிதோ எண்டு இண்டைக்கும் மட்டும் எனக்கு சந்தேகம் தான்)  இவனை பார்த்து ஐயர் கையை காட்ட, எனக்கு உள்ளுக்குள்ளே செம நடுக்கம்.

ஐயோ... இவன்ட ஆந்தை குரலில் தேவாரம் படிக்க  சாமி வசந்த மண்டபத்தை விட்டு ஓடினாலும் ஓடி போயிடுமே என்று நானே எனக்கு தெரிஞ்ச தேவாரத்தை படிச்சேன். "குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமிண் சிரிப்பும் " என்று நான் பாட, அவன் கண்டாமணி கயித்திலே தொங்கின படி ( கயித்தை விட்டால் பிறகு இவன் ஏணி வைச்சு தான் பிடிக்க வேணும்) என்னையே பார்த்து வழிஞ்சபடி நிண்டான். என்ர தேவாரத்தை கேட்டு கொண்டு கயித்திலே தொங்கினபடியே நித்திரை அவன். அய்யர் தம்பி கண்டாமணி கண்டாமணி என்று மூன்று தரம் கூப்பிட்ட பிறகுதான் சூரியன் படத்திலே வாற கவுண்டமணி மாதிரி அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா எண்டு கண்டாமணியை அடிக்க தொடங்கினான்.

கோயிலின் மூன்றாம் வீதியில் சாமி வலம் வந்தபோது எனக்கு முன்னால தீவட்டிக்கு என்னை விட்டுகொண்டிருந்த தம்பி ஒருத்தன் அக்கா, இந்த எண்ணையை கொஞ்சம் ஊத்துங்கோ வாறன் என்று எண்ணெய் வாளியை  தந்துவிட்டு போய்விட்டான். வாளியை வாங்கி கொண்டு தீவட்டிகாரனை பார்க்கும்போது எனக்கு தேள் கொட்டின மாதிரி இருந்தது. அது அவன் தான். ஒவ்வொருக்கா என்னை விடும்போதும் வழிஞ்சு கொண்டு ... எப்படா சாமி கோயிலுக்குள்ளே வரும் என்று இருந்தது.

எனக்கெண்டா அவன்ர தீவட்டி, நான் ஊத்தின எண்ணெயிலே எரிஞ்ச மாதிரி தெரியவில்லை. அவன்ர மூஞ்சையிலே  இருந்து வழிஞ்ச அசடிலே எரியுற மாதிரி தான் இருந்தது.

மேளக்காறார் வேற "மாங்குயிலே பூங்குயிலே செய்தி ஒன்று கூறு" என்ற பாடலுக்கு மேளம் அடிக்க, இவனோ கரகாட்டகார ராமராஜன் நினைப்பிலே தீவட்டியை அங்கயும் இங்கயும் ஆட்டி தெருக்கூத்து காட்டிகொண்டிருந்தான் .

இப்படியே சில நாட்கள் ஓடிட்டுது. வெண்ணிலாவும் சொன்னாள் அவன் என் மேல பைத்தியமாக அலைகிறான் எண்டு.

இது போதாக்குறைக்கு அண்டைக்கு நான் கோயிலுக்கு வர பிந்தி போயிட்டுது, ஐயர் எல்லாருக்கும் விபுதி குங்குமம் கொடுத்திட்டு போயிட்டார். அங்கே  இருந்த வயோதிப அம்மாவிடம் கேட்டேன், எங்கே விபூதி எடுக்கலாம் எண்டு. அவ சொன்னா ஆட்கள் மிச்ச குங்குமம் விபூதி எல்லாம் பலி பீடத்திலே தான் கொட்டுவினம் அங்கே போய் எடு பிள்ள எண்டு. நான் போய் எடுத்திட்டு திரும்ப தான் தெரிஞ்சுது அந்த லூசு அப்பத்தான் வந்து அதிலே மிச்ச திருநீறை வைச்சிட்டு போய் இருக்கு என்று. உடனே அழிக்கத்தான் பார்த்தேன். பிறகு கடவுளின் திருநீறை ஏன் அழிப்பான் என்று விட்டுவிட்டேன்.

ஆனால் பார்த்தால், அண்டையிலே இருந்து ஒவ்வொரு முறையும் பலிபீடத்திலே திருநீறை  வைச்சிட்டு, ஒளிச்சு நிண்டு பார்ப்பான், நான் எடுக்கிறேனா எண்டு. நான் அந்த பக்கம் போறதே  இல்லை. இது எனக்கெண்டா  அம்மா சனிக்கிழமைகளில் காகத்துக்கு சோறு வைச்சிட்டு ஒளிச்சு நிண்டு சாப்பிடுதா என்று பார்க்கிற மாதிரி தான் இருந்தது.

இதுக்கிடையில் திருவெம்பா வேற தொடங்கிட்டுது, ஐயரில் இருந்து வெண்ணிலா வரை எல்லாருமே நான் தான் பாட வேண்டும் என்று சொல்லிட்டீனம். பகலவனும் அவன் கூட்டமும் வேற பாட வரபோகுது என்று நினைக்கவே, எனக்கு அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை.

தொடரும் 

தொடருங்கள் அண்ணா. இதையும் நல்ல நகைச்சுவையாக எழுதுகிறீர்கள். :D

ஐயோ... இவன்ட ஆந்தை குரலில் தேவாரம் படிக்க  சாமி வசந்த மண்டபத்தை விட்டு ஓடினாலும் ஓடி போயிடுமே என்று நானே எனக்கு தெரிஞ்ச தேவாரத்தை படிச்சேன்.

:lol: :lol: :lol:

வாய் விட்டுச் சிரிக்க வைக்கும் எழுத்து. பாராட்டுகளும் நன்றிகளும். நிறைய எழுதுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

ஹஹஹஹா சூப்பர் அண்ணா அபிடியெ நாங்கள் கோயில செஞ்ச லூட்டியல யாபகப்படுத்திது :D super

  • கருத்துக்கள உறவுகள்
ஆனால் பார்த்தால், அண்டையிலே இருந்து ஒவ்வொரு முறையும் பலிபீடத்திலே திருநீறை  வைச்சிட்டு, ஒளிச்சு நிண்டு பார்ப்பான், நான் எடுக்கிறேனா எண்டு. நான் அந்த பக்கம் போறதே  இல்லை. இது எனக்கெண்டா  அம்மா சனிக்கிழமைகளில் காகத்துக்கு சோறு வைச்சிட்டு ஒளிச்சு நிண்டு சாப்பிடுதா என்று பார்க்கிற மாதிரி தான் இருந்தது.

இது, உவமான, உவமேயங்களின் உச்சம்! :D

ஒவ்வொருவரின் 'பார்வைகளில்' தான் எத்தனை வித்தியாசம்!

பகலவனின் பார்வை, பாதிக் கிளாஸ் full என்ற மாதிரி!

திவ்வியாவின் பார்வை,  பாதிக் கிளாஸ் empty எண்ட மாதிரி!

நான் பகலவனைத் தான், நம்பிறன்! :o  

  • தொடங்கியவர்

தொடருங்கள் அண்ணா. இதையும் நல்ல நகைச்சுவையாக எழுதுகிறீர்கள். :D

:lol: :lol: :lol:

நன்றி துளசி, உண்மையை எழுதிப்பார்த்தேன் நகைச்சுவையாக இருக்கிறது. :D

வாய் விட்டுச் சிரிக்க வைக்கும் எழுத்து. பாராட்டுகளும் நன்றிகளும். நிறைய எழுதுங்கள் .

நன்றி நீதிமதி, புதிய உறுப்பினரான உங்களை கூட என் எழுத்துக்கள் கவர்ந்துள்ளமை எனக்கு உத்வேகத்தை தருகிறது.

ஹஹஹஹா சூப்பர் அண்ணா அபிடியெ நாங்கள் கோயில செஞ்ச லூட்டியல யாபகப்படுத்திது :D super

சுண்டல் எல்லா கோயிலிலும் அதே பகலவன் திவ்யா இருக்கத்தான் செய்வார்கள். எவ்வளவு தொழினுட்பம் வந்தாலும் அந்தகாலத்து காதலுக்கு ஈடாகாது. :lol:

இது, உவமான, உவமேயங்களின் உச்சம்! :D

ஒவ்வொருவரின் 'பார்வைகளில்' தான் எத்தனை வித்தியாசம்!

பகலவனின் பார்வை, பாதிக் கிளாஸ் full என்ற மாதிரி!

திவ்வியாவின் பார்வை,  பாதிக் கிளாஸ் empty எண்ட மாதிரி!

நான் பகலவனைத் தான், நம்பிறன்! :o  

நன்றி புங்கை அண்ணா, கருத்துக்கு மட்டுமல்ல பகலவன் மீதான உங்கள் நம்பிக்கைக்கும். நாணயம் என்று நாங்கள் நேர்மையை குறிக்கும் பொருள்/ சொல்லுக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கத்தானே செய்கின்றன.

பகலவன்... சும்மா பெயரை கேட்டாலே எரியுதில்லே..அப்படி தான் எனக்கும் அவன் பெயரை கேட்டாலே எரிச்சல் எரிச்சலாக தான் வரும்.

எனக்கு எரியேலை பகலவன்  :lol:  :lol: .  நல்லாய் இருக்கு தொடருங்கோ :) :) .

நன்றி நீதிமதி, புதிய உறுப்பினரான உங்களை கூட என் எழுத்துக்கள் கவர்ந்துள்ளமை எனக்கு உத்வேகத்தை தருகிறது.

 நான்தான் புதியவர்  ஆனால்,  நீங்கள் உட்பட யாழில்  உள்ள அனைவரது எழுத்துகளும் எனக்குப் புதிதல்ல. இங்கு சிலர் என் நண் (ப, பி,) கள். சிலர் மிகவும் மரியாதைக்குரியவர்கள் , இப்படி பல .............

மிக நன்றாக இருக்கிறது பகலவன் உங்கள் கதை... தொடர்ந்து வாசித்துக் கொண்டு தான் இருக்கிறேன்...

வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் உங்கள் தொடரை தொடருங்கள்.   ..... ஒவ்வொரு நிகழ்வுமே அழகாக இருக்கிறது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.