Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள கிரிக்கெட் - 2013

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

cricket_pitch-yarl.jpg

 

யாழ் திண்ணை வீரர்களுக்கும்.. யாழ் கள வீரர்களுக்கும் இடையிலான அணிக்கு 6 பேர் கோண்ட 6 ஓவர்கள் அடங்கிய "சிசிசிசிசி சின்னப்பு" ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்று.. மோகன் அண்ணா மற்றும் சோழியான் அண்ணா  பிரதானா மத்தியஸ்தம் வகிக்க நியானி மூன்றாம் மத்தியஸ்தம் வகிக்க.. சமீபத்தில் யாழ் கள விளையாட்டு அரங்கில் நடந்து முடிந்தது.

 

யாழ் திண்ணை அணிக்கு நிழலி தலைமை தாங்கினார்.

 

யாழ் கள அணிக்கு நுணா தலைமை தாங்கினார்.

 

இந்தப் போட்டியில்  ஊர்க்குருவி விசேட அழையா அதிதியாக கலந்து கொண்டிருந்தது. அது அங்கு படம்பிடித்து அனுப்பிய காட்சிகளின் அடிப்படையில்..

 

இதோ போட்டி பற்றிய கைலைட்ஸ் (Highlights)...

 

யாழ் கள விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போட்டியில்.. ராஸ்ட்டில் வெல்லும்.. நம்பிக்கையோடு.. நிழலியும் நுணாவும் களத்துக்குள் நுழைகின்றனர்.

 

நிழலியின் பின்னே.. சுண்டல் கற்பூரம் ஒன்றைக் தேங்காயில் கொழுத்திய படி பின் தொடர்கிறார். மூன்றாம் மத்தியஸ்தர் நியானி அதனை ரிவி திரையில்  பார்த்து விட்டு ஒலிபெருக்கியில் கத்துகிறார். சுண்டல் எரியும் கற்பூரத்துடன்.. உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறவும்.. இன்றேல்.. மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

 

சுண்டல் மனதுக்குள்.. கற்பூரம் தேங்காய்..தும்பில பட்டு பத்தி எரியுது.. அவனவன் என்ன செய்யுறதென்று தெரியாம திண்டாடுறான்.. அவர் அங்க ஏசிக்க இருந்து கொண்டு.. ஈசியா கத்துகிறார்.. ஓடியாந்து கற்பூரத்தை அணைப்பம் என்றில்ல....

 

ச்சா.. அமலாப்பால இந்த மச்சுக்கு கூப்பிட்டிருந்தா.. என்ர ஆட்டத்தைப் பார்த்திட்டு அவாவே.. என்னைக் கட்டி அணைச்சு பாராட்ட வைச்சிருக்கலாமில்ல.. என்ற கனவில் மிதந்து கொண்டிருந்த நிழலி....நியானியின் கூக்குரலைக் கேட்டு.. திடுக்கிட்டு விழித்து.. யோவ் சுண்டல்.. அதை அங்கால.. போடையா.. அவன் பாவி.. கத்துறானில்ல... உங்களோட என்னெண்டு தான் காலந்தள்ளப் போறனோ.. ஒரு கெஞ்ச நேரம்.. நிம்மதியா.. dream இல கூட அமலாபால நினைக்க விடுறாங்கலில்ல.. என்று தலையில் அடித்துக் கொள்ள.. மத்தியஸ்தர்கள் நிழலியை தேற்றிக் கொண்டு.. சுண்டலை மைதானத்தை விட்டு ஓடி விடுமாறு விரட்டுகின்றனர். சுண்டல்.. அவர்களை பார்த்து ஒரு முறாய்ப்பு முறாய்த்தபடி வாய்க்குள் புறுபுறுத்தபடியே.. மைத்தானத்தை விட்டு அகல்கிறார். இந்தக் காட்சிகளை மெளனமாக அவதானித்துக் கொண்டிருந்த.. நுணா கொடுப்புக்குள் ஒரு சிரிப்புச் சிரிச்சுக் கொண்டு.. மத்தியஸ்தர்களுடன்.. பிச்சின் நடுவில் போய் நிற்கிறார்.

 

அவரைப் பிந்தொடர்ந்து பிச்சுக்கு வந்த நிழலி.. போட்டி முடியுறதுக்கிடையில என் மண்டையைப் பிச்சிடுவாங்க போலக் கிடக்குது. பேசாம திண்ணையை இழுத்துப் பூட்டிட்டா.. ஒரு கரைச்சலும் இல்ல... இப்படி ஒரு போட்டியே ஏற்பாடாகி இருக்காது.. இல்ல நுணா என்று நுணாவைப் பார்த்துப் புலம்ப.. உந்தாளின் கதைக்கு பதில் சொல்லப் போய்.. நாம வீணா மாட்டிக்கப்படாது.. என்றிட்டு.. நுணா மீண்டும்.. ஒரு கொடுப்புப் புன்சிரிப்போடு பேச்சுக்கு முடிவுகட்ட...

 

சரி யார் நாணயத்தை சுழற்றப் போறீங்கள் என்று.. மத்தியஸ்தர்.. சோழியண்ணா கேட்க.. நுணா.. நிழலியே சுழற்றட்டும் என்று நாணயத்தின் பாரத்தை அங்கால தள்ளி விடுகிறார்.

 

எனக்கு நாணங்களைச் சுழற்றித்தான் பழக்கம்.. நாணயத்தை வேற.. சுழற்றச் சொல்லுறாங்கள்.. என்று தனக்குள் தானே பேசிக் கொண்ட நிழலி.. சோழியண்ணாவிடம் இருந்து பெற்ற நாணயத்தை தூக்கி வீசுகிறார்.

 

என்ன நிழலி.. நாணயத்தை சுழற்றச் சொன்னால்.. அதை தூக்கி வீசுகிறீர்களே.. என்று கேட்க..  தூக்கி வீசினாலும் நாணயம் சுழன்று கொண்டு தானே கீழே விழும்.. சோழியண்ணா.. அது தான் அதன் கள விதி.. சா.. தலைவிதி..  என்று சொல்ல.. முடியல்ல.. என்று நினைச்சுக் கொண்டு சோழியன் அண்ணா மெளனமாகிறார்.

 

மேலே தூக்கி எறிந்த நாணயம் கீழே மைதானத்தில்.. எங்கையே போய் விழ..தலையைக் குனிந்தபடி நின்று சோழியண்ணாவை கடைக்கண்ணால்.. பார்த்துக் கொண்டு நின்ற நிழலி.. யோவ் நுணா.. சும்மா நின்று வேடிக்கை பார்க்காம.. அதைத் தேடி எடுத்துக் கொண்டு வாருமைய்யா.. என்று நுணா மீது.. சீறிப் பாய்ந்தார். உடனே மோகன் அண்ணா தலையிட்டு.. சரி.. அதை விடுங்க.. நான் ஒரு நாணயம் வைச்சிருக்கிறன்.. அதை நுணா நிதானமாகச் சுழற்றட்டும் என்று சொல்லிக் கொடுக்க.. நுணா அதனை நிதானமாக சுழற்றி வீச.. சற்றும் தாமதிக்காமல்.. எனக்கு தலை என்று கத்தினார் நிழலி. நுணா.. அப்போதும் மெளனமாக.

 

நாணயம் தலையாக கீழே விழ.. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில்.. துள்ளிக் குதித்த நிழலி.. எந்த ஒரு யோசனையும் இன்றி.. துடுப்பை (பற்றிங்கை) தெரிவு செய்கிறார்.

 

நிழலி நாணய சுழற்சியில் வென்றதை.. கண்டுவிட்டு.. அவரின் அணியைச் சார்ந்த.. அர்ஜீன் அண்ணா.. மைதானத்துக்குள் ஓடி வருகிறார். மத்தியஸ்தர்கள் அவரைத் தடுக்க முயல.. யோவ் விடுங்கையா.. எனக்கு நிழலியை கனடாவில வைச்சே தெரியும். நீங்க என்ன மறிக்கிறது. அதுபோக.. நான் யாழ் இந்துவின் முன்னாள் கிரிக்கெட் வீரன். இன்னாள் கனடா ரீம் வீரன். என் கிரிக்கெட் அறிவுக்கு முன்னே.. நீங்கள் வெறும் தூசு. நீங்களும் உங்கட மத்தியஸ்தமும். இது புலிகளுக்கு நோர்வே மத்தியஸ்தம் செய்தது போல எல்லோ இருக்குது... என்று மத்தியஸ்தர்களைப் பார்த்துத் திட்ட.. மத்தியஸ்தர்கள் மெளனமாகி ஒருவரை ஒருவர் பார்த்து முழுசிக் கொண்டே.. உந்தாளோட என்னத்தைக் கதைக்கிறது என்றிட்டு.. போட்டியை ஆரம்பிக்கும் ஏற்பாடுகளில் இறங்கினர்.

 

அட.. இந்தாள் பற்றிங் ஓடரில.. கூப்பிடுறதிக்கிடையிலேயே.. இஞ்ச ஓடி வந்திட்டுதே.. கடவுளே.. என்னாகப் போகுதோ... என்று அர்ஜீன் அண்ணா மைதானத்துக்குள் நடுவர்களோடு பிரச்சனைப்படுவதை கண்டிட்டு.. நினைச்ச நிழலி.. அர்ஜீன் அண்ணா அவையோட பிரச்சனைப்படாதேங்கோ.. உங்களை ஓப்பினிங்கில போடுறன் ஓகேயா.. என்று கத்த.. நிழலி ஒருத்தன் தாய்யா ஜனநாயக வழில சிந்திக்கிறான்.. மிச்ச எல்லாம் புலி வாலுகள்.. என்று கத்தியபடி.. பற்றை எடுக்க பவிலியனுக்கு ஓடுகிறார்.. அர்ஜீன் அண்ணா.

 

இதனை நுணாவும்.. அவரின் அணி  வேகப்பந்து வீச்சாளர் மருதங்கேணியும் நிதானமாக அவதானித்துக் கொண்டிருந்தனர்....

 

 

மிகுதி விளம்பர இடைவேளையின் பின்...தொடரும்...

 

(இந்த ஒளிப்பரப்பு தொடர்பான ஆட்சேபனைகள் முன்கூட்டியே வரவேற்கப்படுகின்றன. இவை கிரிக்கெட் - நகைச்சுவைக்கு அப்பால் எடுக்கப்படக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்படுவதுடன்... இந்த ஒளிபரப்பு ஒளிபரப்பு விதிமுறைகளை மீறின்.. தடைசெய்யும் உரிமை யாழுக்கு அளிக்கப்படுகிறது.

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மேலோட்டமாக... வாசித்தேன். நன்றாக உள்ளது நெடுக்ஸ். பின்னேரம் ஆறுதலாக வாசித்து கருத்து எழுதுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் சூப்பர் மீண்டும் யாழில் ஒரு காமடித்திருவிழா ஆரம்பம் நல்லா இருக்கு தொடருங்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் ன் நகைச்சுவை உணர்வு அழகு. 

தொடருங்கள் :D 

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர், பல்லுப் படாமக் கடிக்கிறதுக்கு, உங்களிட்டப் படிக்கவேணும்!

 

நல்லாயிருக்கு! தொடருங்கோ! :D

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா நடுவர்களோடு.. ஏற்படுத்திய பதட்டம்.. பதறல்களின் மத்தியிலும்.. போட்டியை நடுவர்கள் ஆரம்பித்தனர்.

 

நுணா தலைமையில் வந்த யாழ் கள.. தடுப்பு அணியில் இருந்து மருதங்கேணி வேகப்பந்து வீச்சாளராகவும் ஓப்பினிங்காகவும் பந்து வீச ஆயத்தமானார். கலைஞன் விக்கட் காப்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.

 

திண்ணை அணி சார்பில் அணித்தலைவர் நிழலியும்.. அர்ஜீன் அண்ணாவும் பற்றிங் செய்ய பிச்சுக்கு வந்தனர்.

 

அர்ஜீன் அண்ணா பிச்சின் நடுவிற்கு வந்து நிழலியிடம் ஏதோ சொல்லிவிட்டு.. பந்தை எதிர்கொள்ளும் முனைக்கு நகர்ந்தார்.

 

அப்போது.. இதென்னடா இது பிச் பள்ளமும் திட்டியுமா இருக்குது. இதுக்குள்ளையும் என்னவோ சதி செய்திருக்கிறாங்கள்.. என்று அர்ஜீன் அண்ணா கத்தத் தொடங்க... உடனே லெக் அம்பயரா கடமையாற்றிய மோகன் அண்ணா விரைந்து வந்து பள்ளம் திட்டிகளை காலால் சரி செய்ய முற்பட்டார். யோவ்.. மோகன்.. உமக்கென்ன விசரே.. காலால மொழுகிக் கொண்டு நிற்கிறீர்.. உடன புள்டோசரை கொண்டு வரச் சொல்லும்.. இந்தப் பிச் அளாப்பிப் பிச்.. இதில நான் விளையாடமாட்டன். நிழலி.. இதுக்கு ஒரு முடிவு கட்டும்.. நான் உவன்.. அர்ஜீண ரணத்துக்கவுக்குச் சமன்... சரியே.. விளங்கிக்கொள்ளும். எனக்கு.. கிரிக்கெட்டின் அடி முதல் நுனி வரை எல்லாம் அத்துபடி. தெரியுமே.. என்ன ஒருத்தரும் ஏமாத்த முடியாது...

 

போச்சுடா போச்சு.. பிச்சிலும் கைவிச்சிட்டாங்களா.. எனி விளையாடின மாதிரித்தான்.. என்று நினைத்த நிழலி.. மெயின் அம்பையர் சோழியண்ணாவை அணுகி.. அண்ணை இதுக்கு நீங்கள் தான் ஒரு முடிவு கட்டனும்.. கிரிக்கெட் என்றால்.. எங்கட ஆக்கள்.. வழமையா அம்பயரில தான் கைவிக்கிறவங்கள்.. அது பறுவாயில்லை அடிவாங்கினாலும்.. அம்பயரை மாத்திட்டு விளையாடலாம்.. இது.. இப்ப பிச்சிலையே.. கைவைச்சிட்டாங்கள்.. மச்சுக்கே வேட்டு வைச்சிடுவாங்கள் போலக் கிடக்குது.. உதுகளோட கிரிக்கெட்டே விளையாட முடியல்ல.. அரசியல் சதுரங்கம் எப்படி விளையாடுறதோ... அண்ணை ஏதாவது பார்த்துச் செய்யுங்கோவன்..

 

தம்பி நிழலி.. கவலைப்படாதையும்.. இந்த.. சிசிசிசிசி சின்னப்பு மெமோறியல் கப் போட்டிய நான் என்ன பாடுபட்டெண்டாலும் நடத்தி முடிப்பன்.. என்று நிழலியை தேற்றிய சோழியன் அண்ணா.. அர்ஜீன் களத்துக்கு வந்திட்டா.. உங்கட சட்டதிட்டம் எல்லாம் பேசக் கூடாது. அதை அங்க உங்கட வீட்டோட வைச்சிட்டு வந்திடனும். இங்க வந்திட்டா.. எல்லாருக்கும் ஒரு சட்டம் தான். நீங்கள் அதுக்கு கட்டுப்படனும். இல்லை என்றால்.. உங்களை களத்தில இருந்து வெளிக்கிடுத்திப் போடுவன்.. என்று வெருட்ட.. அர்ஜீன் அண்ணா.. கொஞ்சம் பயந்து தான் போனார்.

 

சமாளிச்சுப் போவம்.. இல்லையெண்டால்.. உதில விளையாட விடாமல் துரத்திப் போடுவாங்கள் போலக் கிடக்கு.. அப்புறம் என்ர கிரிக்கெட் கெட்டித்தனத்தை பற்றியும் கெக்கட்டிச் சிரிப்பாங்கள்..  என்று நினைச்ச..அர்ஜீன் அண்ணா.. சோழியன் அண்ணாவை நோக்கி.. சமாளிப்புக்கேசனை அள்ளி வீசினார். இல்ல சோழியான்.. அது வந்து... பிச்சில.. பள்ளம் திட்டியைக் கண்டோடன கொஞ்சம்.. கடுப்பாகிட்டன். இப்ப எல்லாம் சரி போலக் கிடக்குது... மோகன்.. புள்டோசர் வேண்டாம்.. நானே பற்றால சரிக்கட்டி விடுறன். அப்ப சோழியான்.. போளைப் போடச் சொல்லும்... என்றார்.

 

தம்பி நுணா..நிழலி.. அர்ஜீன் கூல் ஆகிட்டார் போல. அப்ப நாங்கள் போட்டியை ஆரம்பிப்பம். எனி யாரும் எந்த முறைப்பாடு இருந்தாலும்.. மத்தியஸ்தரட்டத்தான் முதலில முறையிட வேண்டும். சும்மா சும்மா வடிவேல் மாதிரி சீன் போடக் கூடாது ஓக்கே.. என்று எச்சரிச்ச சோழியான் அண்ணா.. பந்தை.. மருதங்கேணியிடம் கையளித்தார்.

 

பந்தை.. கையில் எடுத்த மருதங்கேணி.. நுணாவிடம்... கண்ணால் பேசிவிட்டு.. இது பந்தா.. இல்ல மவனே.. பெரிய கல்லு.. மவனே அர்ஜீன்.. மாட்டினாடி மாட்டினாய். உதால.. கபாளம் பிளக்காமல்.. வீட்ட அனுப்பப் போறதில்ல.. என்று நினைச்சுக் கொண்டே.. பந்து வீச ஓடிவர...

 

அர்ஜீன் அண்ணா கத்தத் தொடங்கினார்....சோழியான்.. சோழியான்.. அவர் ஓடி வாறதைப் பார்த்தா ஏதோ கொலைவெறியோட ஓடி வாறதாய் தெரியுது. உடன.. அவரை பிடிச்சு நிப்பாட்டும். மோகன்.. உடன எனக்கு ஒரு சிறீலங்கன்  ஆமி கெல்மெட்டும்.. போள் புரூவ்.. உச்சி முதல் உள்ளம் காவரை போடக்கூடிய கவசமும் அனுப்பச் சொல்லும்..

 

ஊஊஊ.. கடைசி நேரத்தில...கொஞ்சம் உசாராகி இராட்டி.. கிரிக்கெட் என்று கூப்பிட்டு வைச்சு.. போட்டுத் தள்ளி இருப்பாங்கள்....! தப்பினன்டா சாமி.. இந்தப் பிணாமிகளை நம்பவே கூடாது... எப்பவும் நாங்கள் எங்களுக்க தான்டா விளையாடனும்.... அது தான் சேவ்.. என்று மனசுக்குள்ள நினைச்சும் கொண்டார்.

 

அர்ஜீனின் அண்ணாவின்.. கோரிக்கைக்கு பதிலளித்த மோகன் அண்ணா.. கலோ அர்ஜீன்.. நீங்கள் விளையாடுறது கிரிக்கெட்.. இது போர்க்களம் இல்ல.. யாழ் கள கிரிக்கெட் களம். மருந்தங்கேணி வைச்சிருக்கிறது போள்.. கிரனைட் இல்ல. சோ.. ஆமி கெல்மெட்.... புளட்  புரூவ்.. போள் புரூவ் என்று கத்திக் கொண்டு நிற்க முடியாது. விட்டால் பற்றுக்குப் பதிலா துவக்கும் கேட்பீங்கள் போல இருக்குது... வேணுன்னா.. கிரிக்கெட் கெல்மட்டும்.. பாட்ஸும்.. காட்ஸும் தரலாம் கட்டிக்கொண்டு ஆடுங்கோ. இல்லை இடத்தை விட்டு காலி பண்ணுங்கோ.. என்றார் கொஞ்சம் காட்டமாகவே.

 

சரி எதையோ தந்து தொலையுங்கப்பா.. இவன் நிழலியை நம்பி வந்து படிற பாடு.. ஒரு ஓவரையே சமாளிக்க முடியல்ல.. 6 ஓவரை.. எப்படி சமாளிக்கப் போறனோ..??!  ம்ம்.. ஒன்று செய்வம்.. (f)பெஸ்ட் போளிலையே.. தூக்கிக் குடித்திட்டு.. கச்சில போவம்.. இல்ல கிளீன் போல்ட் ஆகி டக்கில போவம்.. அதுதான் நமக்கும் பெருமை.. நம்ம ஊருக்கும் பெருமை.. நம்ம தலைக்கும் சேவ்..... என்று நினைத்துக் கொண்டு கெல்மெட்.. பாட்ஸ்.. காட்ஸுக்கு  பிச்சில்.. காத்துக் கொண்டிருந்தார் அர்ஜீன் அண்ணா...

 

[மிகுதி..  கைலைட்ஸ்.. செய்தி அறிக்கையின் பின் ஒளிபரப்பாகும்.. நேயர்கள் கொஞ்சம் பொறுமை காக்க கேட்கப்படுகின்றனர்...]

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பவிலியனில் இருந்து பிச்சுக்கு.. கெல்மட்டும், பாட்ஸும் மற்றும் காட்ஸும் வந்ததும்.. மருதங்கேணி வேகமாக பந்து வீச.. ஓடின ஓட்டத்தைக் கண்டு.. அருண்டு போயிருந்த அர்ஜீன் அண்ணா.... அண்டைய அயலில் கூட்டம் நிற்கிறதே என்ற எந்த உறுத்தலும் இன்றி..  உடல் நடுங்க.. உடைகளை களைந்து.. பாட்ஸுகளையும் காட்ஸுகளையும் கட்டிக்கொண்டு.. எப்படியாவது நம்ம இமேசை யாழில காப்பாத்திடண்டாப்பா...என்ற நினைத்தவர்.. மீண்டும் ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.. துப்பெடுத்தாட தயாரானார்.

 

அப்போது மெயின் அம்பையர்.. சோழியான் அண்ணா.. அர்ஜீன்.. நீங்கள் பிச்சில் பெற வேண்டிய எல்லா..உச்ச சலுகைகளையும் ஏலவே பெற்றுவிட்டீர்கள். நீண்ட நேரத்தையும் ஒரு பந்தையும் எதிர்கொள்ளாமல் வீணடித்துவிட்டீர்கள். இதுவே உங்களுக்கான இறுதி வாய்ப்பு.. இதனை சரியாகப் பயன்படுத்தி பந்துகளை சரியான முறையில்.. அடித்தாடுங்கள்.. என்று அருண்டு போயிருந்த அர்ஜீன் அண்ணாவை.. உற்சாகப்படுத்திக் கொண்டு.. தம்பி மருதங்கேணி நீங்கள் இப்போது பந்து வீசலாம் என்று மருதங்கேணியை மீண்டும் பந்து வீச அழைத்தார்.

 

அர்ஜீன் அண்ணாவோ.. போங்கையா.. போங்க.. நீங்களும் உங்க சலுகைகளும். உவன் மருதங்கேணி பந்தோட..ஓடிவாற ஓட்டத்தில இருக்கிற கொலைவெறி..  இங்க ஸ்ரம்பில பற்றோட.. நின்று பார்க்கிற எனக்கெல்லோ தெரியும்... என்று தனக்குள் புறுபுறுத்துக் கொண்டு மருதங்கேணியின் பந்து வீச்சை கைகளில் நடுக்கம் தாண்டவமாட.. எதிர்கொண்டார்.

 

முதல் பந்தை வேகமாக ஓடி வந்து மருதங்கேணி போட.. மருதங்கேணி ஓடி வாற வேகத்தையே பார்க்க விரும்பாத அர்ஜீன் அண்ணா கண்களை இறுக மூடிக்கொண்டு.. பற்களைக் கடித்துக் கொண்டு..  மட்டையை.. ஸ்ரம்புக்கு குறுக்கே வைச்சுக் கொண்டு.. குறுட்டுவாக்கிற்கு ஆடினார். இதனை ஓடி வரும்போதே கவனித்து விட்ட மருதங்கேணி.. மவனே.. கெல்மட்டும் பாட்ஸும் காட்ஸும் கட்டின துணிவில.. குறுக்க நிற்கிறியோ.. போடுறண்டி போடு.. விண் கூவ என்று மனசுக்க சொல்லிக் கொண்டு.... ஒரு சுப்பர் பவுன்சரை வீச.. அது அர்ஜீன் அண்ணாவின் காதோரம் கெல்மட்டை அண்டி உரசிபடி..... உய்ங்ங்.. என்று கூவிக் கொண்டு போனது.

 

அட பாவி.. இந்த வேகத்தில போடுறானே. முதல் போளிலையே.. காதுக்கால விண் கூவப் போகுது என்று.. சிம்பாலிக்கா சொல்லிட்டானே. அடுத்த போளில துலைஞசன் என்று நினைத்த அர்ஜீன் அண்ணா.. எனியும் தாங்காதடாம்பி இந்த உடம்பு.. என்று எண்ணியவர்.. விக்கெட்டை நோக்கி பாய்ந்து வந்த அடுத்த பந்தை வேண்டும் என்றே தடுத்தாடாமல் விட.. அது மிடில் ஸ்ரம்பை பிடுங்கிக் கொண்டு போய் கலைஞனிடம் சரணடைந்தது. அர்ஜீன் அண்ணாவும்.. போதுமடா சாமி நீங்களும் உங்கட கிரிக்கெட்டும்..தப்பினேன் பிழைத்தேன் என்று பவிலியனிக்கு ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தார்.

 

மறுமுனையில்.. அர்ஜீன் அண்ணா டக்கில் அவுட்டானத்தை உள்ளூர ஆனந்தத்தோடு ரசித்துக் கொண்டிருந்த நிழலி.. அப்பாடா.. ஓவரை வேஸ்ட் பண்ணாமல் போய் சேர்ந்ததே பெரிய காரியம்... என்று நினைத்துக் கொண்டிருக்க.. மைதானத்தின் ஓரமாக.. சுமே அக்கா தலைமையில்... யாழ் திண்ணை அணி.. சியேர்ஸ் கேர்ள்ஸ் சாரி.. சியேர்ஸ் ஆன்ரிங்க சாரைசாரையாக.. சாறி கட்டி..நடனமாடிய படி.. வந்து கொண்டிருந்தார்கள்..! அவர்கள் எல்லோரும்.. காட்டுக் கூச்சலில்.. அடிடா மச்சி.. பவுரன்ரி.. சிக்ஸர்.. அடிடா மச்சி.. பவுரன்ரி.. சிக்ஸர்.. என்று முழங்கிக் கொண்டும் இருந்தனர்.

 

என்னடா சங்கதி.. இவ்வளவு நேரமும் குவைட்டா இருந்த மைதானம்.. களைகட்டுதே என்று கூர்ந்து பார்த்தால்... சுண்டல்.. துள்ளி எழுந்து.. பவிலியனில் இருந்து.. பிச்சை நோக்கி மட்டையை விசுக்கிக் கொண்டே வந்தார்..! அப்படியே வாற வழியில் போற.. வாற, கண்ணில.. காணுற..படுற.. சியேர்ஸ் ஆன்ரிகளுக்கும் காய்.. கவ் ஆர் யுடா... ஐ லவ் யுடா..மிஸ் யு டா.. என்றும் சொல்லிக்கொண்டே வந்தார்.

 

உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

 

 

(ஒளிபரப்பு தடங்கலுக்கு வருந்துகிறோம். இங்கே ஒளிபரப்பு நிலையத்தைச் சுற்றி கடும்பனிப்பொழிவு இருப்பதால்.. ஊழியர்கள் நடுங்கிக் கொண்டிருக்கினம். வேலை செய்ய சோம்பல் வேற படுகினம். அதனால்.. இந்த ஒளிபரப்பு மீண்டும்.. பின்னர் பிறிதொரு நேரத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது. நேயர்கள் காலநிலை செய்துவிட்ட இந்தச் சதிக்காக எம்மைத் திட்டாமல்.. பொறுமை காக்க வேண்டுகிறோம்.) :)

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ச்சுக்கு இத்தனை நகைச்சுவை உணர்வு இருக்கா????? நம்பமுடியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆடுகளத்திற்கு.. சியேர்ஸ் ஆன்ரிகள் கூட நின்ற பிகருகளைக் கண்ட உற்சாகத்தில்.. ஆடிக்கொண்டே வந்த சுண்டல்.. நிழலியை கண்டும் காணததும் போல நேராப் போய் கிரீஸில் நின்று கொண்டு.. மீண்டும் மீண்டும்.. சியேர்ஸ் ஆன்ரிகள் பக்கம் ஒரு கண்ணோட்டமாகவே சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தார். அதற்கு ஒரு காரணமும் இல்லாமல் இல்லை.. சியேர்ஸ் ஆன்ரிகளோடு அவர்களின் வளர்ந்த செல்ல மகள்களும் யாழ் கள கிரிக்கெட்டைக் காண... வந்திருந்தனர். அந்த வேகத்திலேயே.. மருதங்கேணியின் வேகப் பந்துகளையும்.. சந்திக்கத் தொடங்கினார்... சுண்டல்..

 

சியேர்ஸ் ஆன்ரிகள் பக்கம் அற்லீஸ்... ஒரு சிக்ஸராவது போட்டு அங்க வந்திருக்கின்ற.. பிகருகளை இம்பிரஸ் பண்ண முயற்சித்த சுண்டல் தொடர் தோல்வியால் விரக்தியுற்று.. மட்டையை தரையில் அடித்து ஆத்திரத்தைக் கொண்டியதோடு.. பிச்சில் இருந்து புழுதியும் கிளப்பிக் கொண்டிருந்தார்.

 

இறுதியில்.. கடும் கோபத்தோடு.. வழமா வந்த.. மருதங்கேணி வீசிய பந்துகளில் ஒன்றை தூக்கி.. சியேர்ஸ் ஆன்ரிகள் பக்கம் ஓங்கி அடிக்க அது சிக்ஸருக்குப் போனது தான்.. மச்சி சுண்டல்.. இன்னும் வேணும் சிக்ஸர்.. சின்னப் பையன் நீ.. சோ உன் எனேர்ஜி.. விளாசுடா விளாசு.. சியேர்ஸ் ஆன்ரிகள்..நாங்க உன் விசிறிகள்... அதுவே உனக்கு பூஸ்ட்.. ரெட் புள்.. வொட்கா.. விஸ்கி.. பிரண்டி.. என்று எல்லாம்.. அப்படின்னு.. கோசம் எழுப்ப.. சுண்டலும் உசுப்பேறி.. அடுத்த சிக்ஸர் போடிற வெறியோடு  அடுத்த பந்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்....

 

இதனைக் கண்ட.. நிழலிக்கோ பத்திக் கொண்டு வந்தது. அவர் சின்னப் பையன் என்றால்.. ஜஸ்ட் இப்ப கிட்டடில ஒரு ஏழு..எட்டு வருசதுக்கு முன்னாடி கலியாணம் கட்டின நாங்க என்ன பெரிய பையங்களா... என்று நினைத்துக் கொண்ட நிழலி.. பிச்சுக்கு வந்து இவ்வளவு நேரமா.. தலையை பிச்சிக்கிட்டு நிற்கிறன்.. ஓவரில.. 5 பந்துகளும் முடிஞ்சு போச்சுது.. ஒருத்தரும் எனக்கு தட்டிக்கொடுறாங்கள் இல்லையே. எல்லாரும் என்னை நொன் ஸ்ரைக்கர் எண்டில கவனிப்பாரில்லாமல் காயவிட்டிட்டு.. தாங்கள் தாங்கள்.. சோ காட்டிக்கிட்டு இருக்காங்களே.. என்று புளுங்கிக் கொண்டிருந்தவர்.. ஆற்றாப்போக்கில்.. தன்னைக் கடந்து போள் போடப் போன..மருதங்கேணியை பார்த்து ஒரு சிரிப்புச் சிரிச்சு விட்டார்..!

 

சிரிப்பின் அர்த்தம் புரிந்து கொண்ட மருதங்கேணி சுண்டலுக்கு ஒரு டொஸ் கொடுப்பம் என்றிட்டு.. ஜோக்கர் ஒன்று போட.. ஜோக்கர் தானே என்றிட்டு சுண்டல் கவனக்குறைவா சியேர்ஸ் ஆன்ரிகள் பக்கம் சிக்ஸர் போடுற கனவில ஆட.. கிளீன் போல்டாகி மைதானத்தை விட்டு.. தலையைக் குனிந்த படி..ச்சா... இதிலும்  எவேட்ஸ் சரியா அமையல்லையே.. என்ற கவலையோடு.. வெளியேறினார்.

 

சுண்டலின் வெளியேற்றத்தோடு.. மருதங்கேணியின் ஓவரும் முடிவுக்கு வர...நிழலிக்கு பெருமூச்சு வந்தது.

 

அடுத்து யாழ் கள அணி சார்பில்.. அணித்தலைவர் நுணா பந்து வீச தயாரான போது கிருபண்ணா பவிலியனில் இருந்து பிச்சுக்கு வந்திருந்தார்.

 

அப்புறம்.. நிழலி - கிருபண்ணா கூட்டு.. செய்த சாகசம் தான்  போட்டியின் ரேனிங் பொயிண்ட்.. அது பற்றிய கைலைட்ஸை பார்க்க நேயர்கள் நீங்களும்.. கொஞ்சம் வெயிட் பண்ணனும். அதற்கிடையில் ஒரு நீண்ட விளம்பரம் ஒன்றை ஒளிபரப்பிட்டு வாறமே....

Edited by nedukkalapoovan

அது சரி நெடுக்கர் நீங்கள் எந்த அணிப்பக்கம்? திண்ணையா அல்லது களமா,

 

நன்றாக நகைச்சுவையுடன் நேர்வர்ணனையை தந்துகொண்டிருக்கும் நெடுக்கர்  விளப்பர இடைவேளையில் எமது யாழ்கள வர்த்தக நண்பர்களின் விளம்பரங்களையும் சேர்த்துகொள்ளவும். 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ... கதையை... வாசித்து, முடித்தேன் நெடுக்ஸ். சுண்டலை, வேளைக்கே.... மைதானத்தை விட்டு வெளியேற்றியதை கண்டிக்கின்றேன். நுணாவிலானின்... கொடுப்புச் சிரிப்பை பார்க்க, ஆசையாயிருக்கு, அந்தச் சிரிப்பு... எப்படி இருக்கும் என்று, ஒரு படம் போட்டுக் காட்டுங்கோவன்.

  • கருத்துக்கள உறவுகள்

அசத்துங்கோ நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
இப்போ... கதையை... வாசித்து, முடித்தேன் நெடுக்ஸ். சுண்டலை, வேளைக்கே.... மைதானத்தை விட்டு வெளியேற்றியதை கண்டிக்கின்றேன்.

 

 

சுண்டல்  மைதானத்இதுக்குள் நிற்பது தான்  பலருக்கும் நல்லது.

அவரை  வெளியேற்றியதன் மூலம் நிழலி    லஞ்சம் பெற்றுக்கொண்டார் என்ற  சந்தேகம் வலுக்கிறது :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்  மைதானத்இதுக்குள் நிற்பது தான்  பலருக்கும் நல்லது.

அவரை  வெளியேற்றியதன் மூலம் நிழலி    லஞ்சம் பெற்றுக்கொண்டார் என்ற  சந்தேகம் வலுக்கிறது :lol:  :D  :D

ஹி... ஹீ...... ஹி..

கி... கீ... கி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போ... கதையை... வாசித்து, முடித்தேன் நெடுக்ஸ். சுண்டலை, வேளைக்கே.... மைதானத்தை விட்டு வெளியேற்றியதை கண்டிக்கின்றேன். நுணாவிலானின்... கொடுப்புச் சிரிப்பை பார்க்க, ஆசையாயிருக்கு, அந்தச் சிரிப்பு... எப்படி இருக்கும் என்று, ஒரு படம் போட்டுக் காட்டுங்கோவன்.

 

யாழ் திண்ணை அணியின் நட்சத்திர வீரர் சுண்டல் ஆடுகளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு அவரின் திறமை இன்மை அல்ல காரணம். சியேர்ஸ் ஆன்ரிகளும்.. கூட வந்த பிகருகளும்.. அணித்தலைவருமே காரணம்..! அதைப் பற்றி.. கைலைட்டை தொடர்ந்து பார்த்தால் தான் விபரம் புரியும் தமிழ்சிறி. :lol:

 

இதோ நுணாவின் கொடுப்புச் சிரிப்பு.. :lol:

 

Cool_face.jpg

ஆக்கத்தைப் படித்து கருத்துச் சொன்ன உறவுகள் அனைவருக்கும்.. நன்றி. தொடர்ந்து படியுங்க..! :)

சூப்பர் சூப்பர் தொடருங்கள் நெடுக்ஸ் ........

.சிக்ஸர் அடித்த சுண்டலுக்கு வாழ்த்துக்கள் .....அர்ச்சூன் அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள் .........தனது அதிவேக பந்து வீச்சினால் இரண்டு மலைகளையும் சாய்த்த மருதங்கேணிக்கு பாராட்டுக்கள் ................ :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

இதனைக் கண்ட.. நிழலிக்கோ பத்திக் கொண்டு வந்தது. அவர் சின்னப் பையன் என்றால்.. ஜஸ்ட் இப்ப கிட்டடில ஒரு ஏழு..எட்டு வருசதுக்கு முன்னாடி கலியாணம் கட்டின நாங்க என்ன பெரிய பையங்களா... என்று நினைத்துக் கொண்ட நிழலி.. பிச்சுக்கு வந்து இவ்வளவு நேரமா.. தலையை பிச்சிக்கிட்டு நிற்கிறன்.. ஓவரில.. 5 பந்துகளும் முடிஞ்சு போச்சுது.. ஒருத்தரும் எனக்கு தட்டிக்கொடுறாங்கள் இல்லையே. எல்லாரும் என்னை நொன் ஸ்ரைக்கர் எண்டில கவனிப்பாரில்லாமல் காயவிட்டிட்டு.. தாங்கள் தாங்கள்.. சோ காட்டிக்கிட்டு இருக்காங்களே.. என்று புளுங்கிக் கொண்டிருந்தவர்.. ஆற்றாப்போக்கில்.. தன்னைக் கடந்து போள் போடப் போன..மருதங்கேணியை பார்த்து ஒரு சிரிப்புச் சிரிச்சு விட்டார்..!

 

சிரிப்பின் அர்த்தம் புரிந்து கொண்ட மருதங்கேணி சுண்டலுக்கு ஒரு டொஸ் கொடுப்பம் என்றிட்டு.. ஜோக்கர் ஒன்று போட.. ஜோக்கர் தானே என்றிட்டு சுண்டல் கவனக்குறைவா சியேர்ஸ் ஆன்ரிகள் பக்கம் சிக்ஸர் போடுற கனவில ஆட.. கிளீன் போல்டாகி மைதானத்தை விட்டு.. தலையைக் குனிந்த படி..ச்சா... இதிலும்  எவேட்ஸ் சரியா அமையல்லையே.. என்ற கவலையோடு.. வெளியேறினார்

 

 

தொடரட்டும் நெடுக்ஸ் :D  :D  :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம்  பந்தி பந்தியா  கதைகேட்ட எங்களுக்கு  இது கொஞ்சம் அதிர்ச்சிதான் . வாழ்த்துக்கள்  நெடுக்ஸ்  :D

  • கருத்துக்கள உறவுகள்

Aunties-Housewifes-Ladies-Photos-Images-

சுமோ, நெடுக ஜீன்ஸ் தான் போடுவா.... நெடுக்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்.. நல்லா இருக்கு உங்கட வர்ணனை.. :D ஆனால் சியர்ஸ் அன்ரிமார்தான் கொடுமையா இருக்கு.. :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக் காலங்களில் யாழ் இணையத்தில் நான் கண்ட அருமையான பதிவுகள் ஒரு சிலவற்றில் இதுவும் ஒன்று. படிக்கும் போது மனத்தில் உள்ள அழுத்தம் (tension) குறைவது போன்ற உணர்வு உண்டாகின்றது.

 

தொடருங்கள் நெடுக்ஸ்.

 

வாழ்த்துக்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்.. நல்லா இருக்கு உங்கட வர்ணனை.. :D ஆனால் சியர்ஸ் அன்ரிமார்தான் கொடுமையா இருக்கு.. :rolleyes::D
Aunties-Housewifes-Ladies-Photos-Images-

அவ்..... சேம், பிரச்சினை... எனக்கும், இருக்குது.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆடுகளத்தில் நிழலி ஸ்ரைக்கர் எண்டுக்கு வந்ததும்.. திண்ணை அணி.. சியேர்ஸ் ஆன்ரிகள் பக்கம் ஒரு வித களேபரம். திடீர் என்று.. வண்ண வண்ண சேலைங்க.. காற்றில் பறக்க ஆன்ரிகள் எல்லோரும் அதைக் கழற்றி காற்றில் வீசும்.. ஸ்ரிப்பர்.. நடனம் ஒன்று..ஆடிக்கொண்டே... உள்ள போட்டிருந்த லெக்கிங்க்ஸ்.. ரீசேட்டுக்கு மாறிக் கொண்டிருந்தனர்.  இதனைக் கண்ணுற்ற நிழலிக்கோ நிலைக்கொள்ள முடியாத சந்தோசம். ரீசேட்டுக்களில் எல்லாம்.. "Touch me U brave" என்று வேற எழுதி இருந்தார்கள். அந்த நடனத்தோடு.. பவிலியனில் இருந்தும்.. சியேர்ஸ் ஆன்ரிகளை நோக்கி.. ஒரே விசிலடி. பார்த்தால் திண்ணை அணி சார்பில்.. தமிழ்சிறி.. செம உசாராகி.. கூவிக்கூவி சியேர்ஸ் ஆன்ரிகள் பக்கம்.. வைத்த கண் வாங்காமல்... மூச்சு வாங்க வாங்க.. விசிலடித்துக் கொண்டிருந்தார்.

 

பிச்சில்.. நொன் ஸ்ரைக்கர் எண்டில் நின்று கொண்டிருந்த.... கிருபண்ணாவிற்கோ.. செமக் கடுப்பு. ஜஸ்ட் சுண்டல் அடிச்ச ஒரு சிக்ஸரோட ஸ்கோர் போர்ட் நிற்குது.. இந்தாள் நிழலி.. அங்க  சியேர்ஸ் ஆன்ரிகள் பக்கம் ஜொள்ளு வழிஞ்சிட்டு நிற்கே என்று கடுப்பாகிக் கொண்டிருந்தார். அந்த வேளை..

 

திடீர் என்று மைதானத்தின் அடுத்த பக்கமிருந்து... கிருபனுக்கு ஒரு ஜே.. கிருபனுக்கு ஒரு ஜே.. என்று யாழ் கள அணி சியேர்ஸ் ஆன்ரிகள் பக்கமிருந்தும்.. ஒரு கோஷம் விண்ணை முட்டியது. இதென்ன அநியாயம்.. யாழ் கள அணி சியேர்ஸ் ஆன்ரிகளும் கட்சி தாவி திண்ணை அணி ஆன்ரிகள் பக்கம் சேர்ந்திட்டாங்களோ என்று வியந்துபோய்....  கண்ணைக் கசக்கிக் கொண்டு கூர்ந்து பார்த்தா.... அங்க ரதி அக்கா.. நின்று கொண்டிருந்தா..! அவா மட்டும் தான் அப்படி உணர்ச்சிவசப்பட்டு கத்திக் கொண்டிருந்தது. இதைப் பார்த்து வாழ்க்கையில்.. என்றுமே கடுப்பாகி இராத நுணா அன்று தான் கடுப்பின் காரம்.. என்ன என்று மனதளவில் உணர ஆரம்பித்திருந்தார்.

 

திண்ணை அணி சியேர்ஸ் ஆன்ரிகளின் அட்டகாச சேலை கழற்றி எறியும் நடனத்தில்.. காட்சிகள் கண்டு களைத்துப் போன நிழலி.. ஸ்ரைக்கர் எண்டில் நின்று கொண்டு.. பவிலியனை நோக்கி.. குடிக்க தண்ணி கொண்டு வாங்கடா என்று கைகளால் சைகை செய்தார். இதனை அவதானித்த அந்த நேர மெயின்  அம்பையர் மோகன் அண்ணா.. நான் ஒரு மனிசன் கால் கடுக்க..இதில நிற்கிறன்.. என்னையும் ஒரு மனிசனா மதிச்சு.. ஒரு பெமிசன் கேட்டானோ..??! இல்ல.... உடன தண்ணி என்று தன்பாட்டில.. கையைக் காட்டி ஆக்களைக் கூப்பிடுறானே.. என்ன திணாவெட்டு.. இவனுக்கு..  என்று உள்ளூர.. நினைச்சுக் கொண்டார்.

 

நிழலி தண்ணி கேட்க.. உசாரான சுண்டல்.. மவனே திட்டம் போட்டு.. என்னை வெளியேற்றிட்டு.. இப்ப தண்ணியோ தண்ணி கொண்டு வாறேண்டி உங்க இரண்டு பேருக்கும் ஆப்பு என்று.. மச் வென்றாலோ.. தோற்றாலோ.. தண்ணிப் பாட்டி தான் என்ற முடிவில் செம ஏற்பாட்டோடு வந்திருந்த திண்ணை அணியினர்.. பதுக்கி வைச்சிருந்த.. ஒரு பெரிய பெப்சிக்குள்.. அரைவாசிக்கு ஜக் டானியளை ஊற்றிக் கலந்தார். இன்னொரு பெரிய 7up க்குள் வொட்காவை ஊற்றிக் கலந்தார். பின்னர் அவற்றை நல்லா குலுக்கி கலந்து கொண்டு.. மைதானத்தை நோக்கி கொண்டு ஓடினார்...

 

(மிச்ச கைலைட்டுக்கு... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. நிலையக் கலையகத்தில்.. பனிப்புயல்.. காரணமாக மின்சாரத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கைலைட் கொஞ்சம் தாமதமாக ஒளிபரப்பாகும்.. என்பதை வருத்தத்தோடு அறியத்தருகிறோம்.)

 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதோ நுணாவின் கொடுப்புச் சிரிப்பு.. :lol:

 

Cool_face.jpg

ஆக்கத்தைப் படித்து கருத்துச் சொன்ன உறவுகள் அனைவருக்கும்.. நன்றி. தொடர்ந்து படியுங்க..! :)

 

இது கொடுப்புச் சிரிப்பில்லை. கொடுமைச் சிரிப்பு. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

 நல்லா இருக்கு தொடருங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.