Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

Featured Replies

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தினூடாக அறிந்துகொள்ள முடியும்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2777



வெளியாகியுள்ள கல்விப்பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் வீரக்கெட்டிய ராஜபக்ஷ மத்திய வித்தியாலயத்தைச்சேர்ந்த மாணவர்கள் இருவர் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளனர்.

 

அதன்பிரகாரம் ஹம்பாந்தோட்டை, வீரக்கெட்டிய ராஜபக்ஷ மத்திய வித்தியாலய மாணவர்களான ஆர்.எஸ்.பி.கசுன் லக்மால் விஞ்ஞான பிரிவிலும் ருசிரு கம்பீரா ஆராச்சி கணிதப் பிரிவிலும் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58013-2013-01-30-17-22-05.html

  • கருத்துக்கள உறவுகள்

கடுமையான உழைப்பே வெற்றிக்குக் காரணம்; யாழில் முதலிடம் பெற்ற மிதுரிகா
news

கடின உழைப்பே எனது வெற்றிக்கு வழிவகுத்தது. இவ்வாறு கூறினார் க.பொ.த. உயர்தரப் பெறு பேறுகளின் அடிப்படையில் உயிரியல் பிரிவில் யாழ்.மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ள வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிகுந்தன் மிதுரிகா.
 
தனது வெற்றி குறித்து உதயனுக்கு அளித்த விசேட செவ்வியின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவித்ததாவது:
 
பரீட்சைப் பெறுபேறுகள் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. எனது விடாமுயற்சிக்குக் கிடைத்த பரிசாகவே இதனைக் கருதுகின்றேன். அன்றன்று கற்கும் பாடங்களை உடனுக்குடனேயே மீட்டுப் பார்த்துவிட்டுத்தான் மறுவேலையில் ஈடுபடுவேன்.
 
இதனால் எனக்கு கல்வி ஒரு சுமையாகத் தென்படவில்லை. நாம் எமது பாடங்களை அன்றன்றே கற்போமானால் கற்றல் மிக இலகுவானதாக அமையும். நான் எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
 
யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் பயிலும் தென்மராட்சி உசனைச் சேர்ந்த மாணவியான மிதுரிகாவின் தந்தை விவசாயபீடப் பேராசிரியர் குணசிங்கம் மிகுந்தன். தாயார் விவசாய பீடஇயந்திரவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி துஷ்யந்தி மிகுந்தன்.

31 ஜனவரி 2013, வியாழன் 9:50 மு.ப

http://www.onlineuthayan.com/News_More.php?id=546661804731828422

  • கருத்துக்கள உறவுகள்

க.பொ.த

உயர்தர பரீட்சை 2012 முடிவுகளின் படி, கணிதப்பிரிவில் யாழ் மாவட்டத்தில்

முதலிடத்தையும், அகில இலங்கை ரீதியாக மூன்றாம் இடத்தையும் வடமராட்சி ஹாட்லி

கல்லூரியை சேர்ந்த பாலகோபாலன் கபிலன் என்னும் மாணவன் பெற்றுள்ளார்.  

 

ஹாட்லியின் மைந்தனுக்கு எனது வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/KCuJ1M28_mc

 

ஹாட்லியின் மைந்தனுக்கு பாராட்டுக்கள்.! :)

  • கருத்துக்கள உறவுகள்
யாழ் பாடசாலைகளில் இம்முறை அதிக பெறுபேறுகள்.

வியாழக்கிழமை, ஜனவரி 31, 2013


jaffnaKili_02_40680_435.jpg

 

யாழ்.இந்துக் கல்லூரி கணிதம் மற்றும் வர்த்தகப் பிரிவிலும் வேம்படி மகளிர் உயர்தரப்
பாடசாலை விஞ்ஞானப் பிரிவிலும் முன்னிலையில் உள்ளன.

.
இதன்படி யாழ். இந்துக் கல்லூரியில் கணிதப்பிரிவில் எண்மர் 3ஏ பெற்றுள்ளனர்.
சிவஞானம் அமுதீசன், மகேஸ்வரன் கஜீபன், அகிலதாஸ் விமோசனன், கணேசலிங்கம்
கணபாலன், திருச்செல்வம் ஜனதன், குணரட்ணம் சுஜீவன், பாஸ்கரக்குருக்கள்
ஜெனார்த்தனசர்மா, விக்னேஸ்வரன் மகிழன் ஆகியோராவார். கணிதப்பிரிவில் 9பேர்
2ஏ பியும் பெற்றுள்ளனர்.

.
வர்த்தகப் பிரிவில் அறுவர் 3ஏ பெற்றுள்ளனர். குணசீலன் கௌதமன் சிவகுமாரன் பிரகாஸ் பாஸ்கரன் றனுஜன்,
புஸ்பராசன் ரின்சி கேதீஸ்வரன் துசியந்தன் ஜகதாஸ் வேணுகானன் ஆகியோராவர்.
ஐவர் 2ஏபியும் விஞ்ஞானப் பிரிவில் 10 பேர் 2ஏபியும் பெற்றுள்ளனர்.

.
வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவில் எம்.மிதுரிகா 3ஏ (மாவட்ட
நிலை 01), எஸ்.சுமிதா 3ஏ (மாவட்ட நிலை 04), என். மாதங்கி (மாவட்ட நிலை 10)
ஆருரன் 2ஏசி பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

.
இதேவேளை


யாழ். இந்துமகளிர் கல்லூரியில் வர்த்தகப் பிரிவில் ஐவருக்கு மேல் 3ஏ
பெறுபேற்றைப் பெற்றுள்ளனர். இதனிடையே வீரகெட்டிய ராஜபக்ஷ மத்திய
மகாவித்தியாலய மாணவர்களான ஆர்.எஸ்.பி.கசுன் லக்மால் விஞ்ஞானப்பிரிவிலும்,
ருசிரு கம்பீராராச்சி கணிதப்பிரிவிலும் தேசிய ரீதியில் முதலிடம்
பெற்றுள்ளனர்.

 

http://www.eelanatham.net/story/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

கபிலனுக்கு வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துக் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் 14 பேருக்கு “3A”

 

அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ் இந்துக்
கல்லூரி மாணவரர்கள் 14 பேர் ”3A" சித்திகளைப் பெற்று கல்லூரிக்கு பெருமை
சேர்த்துள்ளார்கள். அதனடிப்படையில் கணிதப் பிரிவில் 8 பேரும், வணிகப்
பிரிவில் 6 பேருமாக மொத்தம் 14 பேருக்கு 3A சித்திகள் கிடைத்துள்ளன.


அதனடிப்படையில் 3A பெற்ற மாணவர்களின் பெயர் விபரம்:

combined Maths :


1) Sivagnanam Amutheezan

2) Maheswaran Hageeban

3) Ahiladas Vimosanan

4) Kaneshalingam kanabalan

5) Thiruchchelvam Jenathan

6) Kunaratnam Sujeevan

7) Baskarakurukkal Janarthanasarma

8) Vigfneshwaran Magilan


Commerce :


1) Gunaseelan Gowthaman

2) Sivakumaran Piragash

3) Baskaran Ranujan

4) Pusparajan Tency

5) Ketheeswaran Thushyanthan

6) Jegathas Venuganan


இதனை விட,

உயிரியல் பிரிவில் 10 மாணவர்களுக்கு 2A,B

கணிதப்பிரிவில் 9 மாணவர்களுக்கு 2A,B

வணிகப்பிரிவில் 6 மாணவர்களுக்கு 2A,B கிடைத்திருக்கிறது
 
 
 
 
2012 உயர்தரப் பரீட்சையில் விசேட சித்திகள் எய்திய மற்றும் சித்தி எய்திய யாழ் இந்துவின் மைந்தர்களுக்கு இந்து அன்னையின் பாதம் பணிந்து வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். சித்தி எய்தத் தவறிய மாணவர்கள்.. மனம் தளராது தொடர்ந்து இயலுமான துறைகளில் அல்லது மீள் பரீட்சையில் முயற்சி கொண்டு வெற்றி ஈட்டவும் வாழ்த்துக்கள்.
 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புச் சித்திகள் பெற்ற யாழ் இந்துவின் மைந்தர்களுக்கு, இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்! :D

  • கருத்துக்கள உறவுகள்

வேம்படியில் முன்னணி பெறுபேறு பெற்ற மாணவிகளில் ஒருவர்..

 

http://youtu.be/Rmp7jEZrR90

 

வேம்படி ஆக்கள் கொஞ்சம் பீற்றர் பார்ட்டிகள் போல.. தங்கள் இணையத்தில் ஆங்கிலத்தில் மட்டும் தான் செய்தி போடினம்.. அதனால அவைட செய்தியை முழுசாப் போட முடியல்ல. சுருக்கமா போடுறம்..

 

The Department of Examinations of  Sri Lanka has released the results of the G.C.E Advanced  Level Examination held in August 2012.Sixteen(16) students obtained A’s in all three  subjects,while 14  Students got 2AB.(see results)

 

மிச்சத்தை அவையிட இணையத்தளத்தில் போய் படியுங்கள்.. http://www.vembadi.sch.lk/web/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துவில்

எனது மருமகன் ஒருவரும் விஞ்ஞானப் பிரிவில்  2ஏசியும் பெற்று வைத்தியத்துறைக்கு தெரிவாகியுள்ளார்.

 

சிறப்புச் சித்திகள் பெற்ற பிள்ளைகள் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

சித்தி பெற்ற அனைத்து தமிழ் மாணவர்களுக்கும் பாராட்டுக்கள்

 

 

பி.கு. உங்களுக்கு திறமைகள் இருந்தும் நாடு இல்லாதததால் .... என எண்ணும்பொழுது  :(

சிறப்புச் சித்திகள் பெற்ற பிள்ளைகள் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துவில்

எனது மருமகன் ஒருவரும் விஞ்ஞானப் பிரிவில்  2ஏசியும் பெற்று வைத்தியத்துறைக்கு தெரிவாகியுள்ளார்.

 

சிறப்புச் சித்திகள் பெற்ற பிள்ளைகள் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

 

உங்கள் மருமகனுக்கு இந்த யாழ் இந்து மைந்தனின்.. பிரத்தியேக வாழ்த்துக்கள் விசுகு அண்ணா. :)

சித்தி பெற்ற அனைத்து தமிழ் மாணவர்களுக்கும் பாராட்டுக்கள்

 

 

பி.கு. உங்களுக்கு திறமைகள் இருந்தும் நாடு இல்லாதததால் .... என எண்ணும்பொழுது  :(

 

எங்களுக்கென்றொரு தேசம் இருந்தால்.. இந்த பரீட்சைப் பெறுபேறுகளின் அளவு இதனை விடப் பல மடங்கு அதிகம் சிறப்பாக இருந்திருக்கும்.. (ஐக்கிய இராய்ச்சியத்தில்.. இதே பரீட்சையில் சித்தியடையும் மாணவர்கள் சதவீதம் 97%... பல்கலைக்கழகம் நுழைவோர் தொகை ஆண்டுக்கு 650,000.. சனத்தொகை ஐக்கிய இராய்ச்சியத்தில் இலங்கை விட ஒரு 3 மடங்கு தான் அதிகம். அதன் படி பார்த்தால் இலங்கையில்.. குறைஞ்சது 200,000 மாணவர்கள் பல்கலைக்கழகக் கல்வி பெற வேண்டும்.. ஆனால்...வெறும் 24,000 பேர் வரை தான் பல்கலைக்கழகம் போகின்றனர். பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களோ 300,000 க்கும் மேல்...!) அகூதா அண்ணா. எத்தனையோ பாகுபாடுகள்.. சீரழிவுகள்.. திட்டமிட்ட இன அழிப்புச் செயற்பாடுகள்.. போர் பாதிப்புக்கள்.. கல்வி கற்க ஏதுநிலையற்ற இராணுவச் சூழ்நிலைகள்.. அரசியல் சூழ்நிலைகள்.. பொருண்மிய நெருக்கடிகள்.. சிங்கள அரசின் காலத்துக்கு ஒவ்வாத கல்விக் கொள்கைகள்.. என்று பல சிரமங்கள்.. மத்தியில் ஈட்டப்பட்ட வெற்றிகளே இவை. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

எங்களுக்கென்றோரு தேசம் இருந்தால்.. இந்த பரீட்சைப் பெறுபேறுகளின் அளவு இதனை விடப் பல மடங்கு அதிகம் சிறப்பாக இருந்திருக்கும்.. அகூதா அண்ணா. எத்தனையோ பாகுபாடுகள்.. சீரழிவுகள்.. திட்டமிட்ட இன அழிப்புச் செயற்பாடுகள்.. கல்வி கற்க ஏதுநிலையற்ற சூழ்நிலைகள்.. பொருண்மிய நெருக்கடிகள்.. சிங்கள அரசின் காலத்துக்கு ஒவ்வாத கல்விக் கொள்கைகள்.. என்று பல சிரமங்கள்.. மத்தியில் ஈட்டப்பட்ட வெற்றிகளே இவை. :icon_idea:

 

படித்த பட்டதாரிகளுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு என சிங்கள தேசத்தில் பெரிதாக எதிர்பாக்க முடியாத அவல நிலை தொடர்கின்றது.

 

அநேகமானவர்கள் 'வெளிநாட்டு வேலை வாய்ப்பு' என எதிர்பார்கின்றனர்.

அங்கேயும் நிலைமைகள் .... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பெறுபேறுகளைப் பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..!

 

மாணவர்களின் பெயர்களைப் பார்க்கும்போது கடந்த பதினெட்டு வருடங்களாக யாழ்ப்பாணம் எதிரியின் கைகளில் சிக்கியுள்ளது என்பது தெரிகிறது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சித்திகள் பெற்ற பிள்ளைகள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சித்தி பெற்ற அனைத்து தமிழ் மாணவர்களுக்கும் பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சித்தி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். சித்தி பெறாதவர்கள் தொடர்ந்து முயற்சி செய்யவும்.அகில இலங்கையில் முதலாவதாக எந்த தமிழ் மாணவனும் எந்த துறையிலும்  வராதது கவலை தருகிறது.

சித்தியடைந்த அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

சிறப்புச் சித்திகள் பெற்ற அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்

தணிகாசலம் தர்சிகாவுக்கும்,உருத்திரன் உமாதாசனுக்கும் மனம்கனிந்த வாழ்த்துக்கள்.

 

http://www.battinews.com/2013/01/p.html

 

http://www.battinews.com/2013/01/AMPARA-DISTRICT-RANK-1-ARTS.html

 

 

 

amparai_tharshika.jpg

 

 

 

UMATHASAN.jpg

UMATHASAN%20WITH%20PRINCIPAL%20.jpg

 

சித்திகள் பெற்ற பிள்ளைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


 

  • கருத்துக்கள உறவுகள்

சித்தியடைந்த அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்

ஹாட்லியின் மைந்தனுக்கு பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சையில் நல்ல பெறுபேறுகளை பெற்ற அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் எனது பராட்டுக்கள்...சித்தியடையா மாணவர்கள் கவலைப்பட வேண்டாம் முயற்சி செய்து நல்ல பெறுபேறுகளை அடுத்த தடவை பெறவும் :)

நல்ல பெறுபேறுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். ஏனையோர் உங்களுக்கு பிடித்த துறையை தெரிவு செய்யுங்கள். அல்லது மனம் சோராமல் இன்னொரு முறை முயற்சியுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.