Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

ம்ம்....... தாயும் பிள்ளையும் எண்டாலும் வாயும் வயிறும் வேறப்பா சுமோ!!  நண்பி எண்டாலும் அவவின் பிஸ்னசுக்கை தலையிடக் கூடாது பாருங்கோ. ( வேம்படி வாய் எதையும் விட்டு வைக்காதே விடாதே :lol:  :lol: )



நீங்கள் தேடினது  இதையா

ஏன் இந்தக் கொலை வெறி சாத்தருக்கு??

  • Replies 83
  • Views 5.3k
  • Created
  • Last Reply

நல்ல அலட்டல் கதை .அலட்டுங்கோ நல்லா இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

இது எப்ப இருந்து நம்ம style :D

வடிவாய் யோசித்து சொல்லுங்கோ இது யாரின்டை என்டு. :rolleyes:  :D  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி.

 

சாத்திரிக்குப் போயும் போயும் உதுதான் கிடைச்சுதோ :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் நல்லதை  நினைச்சு உங்கள் பயண அனுபங்களைச் சொல்ல கடுப்பாகியிருக்கும்...

"பெண்ணுக்கு பெண் தான் எதிரி" என்பதை உங்கள் கதையும் நிரூபிக்கிறது போல..

இருக்கும் போதே அனுபவிக்கனும், அதை உங்கள் நண்பி செய்கிறார், தொடருங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி.

 

சாத்திரிக்குப் போயும் போயும் உதுதான் கிடைச்சுதோ :(

 

உங்கடை கதை இந்த வேகத்திலைதானே நகருது அதைத்தான் படம் போட்டு காட்டினனாக்கும். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையான சம்பவங்களின் தொகுப்பு. எதுவித கற்பனைகளும் கலக்க முடியாதது. அதனால் எல்லோருக்கும் நத்தை வேகத்தில் நகர்வதாய்த்தான் இருந்திருக்கும். அதற்காக அனைவரும் மன்னிக்கவும். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த இரு வாரங்கள் அவளை தொலைபேசியில் பிடிக்க முடியவில்லை. நான் சொன்னது பிடிக்காமல் என்னை தவிர்க்கிறாள் என்று எனக்கு விளங்கியது. சரி கோபம்
ஆறட்டும் என்னிடம் தானே வரவேண்டும் என நினைத்துக் கொண்டு நானும் என்பாட்டில் இருந்தேன். அதற்குள் பிரயாண அலுவலும் பார்த்து அங்கு கொண்டு
போவதற்கென பொருட்கள் ஆடைகள் என வாங்கிச் சேர்த்துவிட்டு நிமிர்ந்தால் இரு வாரங்கள் ஓடிப் போயிருந்தது. சரி அவள் விசரி கோபப் பட்டால் என்ன நான்
எடுத்துச் சொல்லிவிட்டுப் போவோம் என்று தொலைபேசியை அழுத்தினால் யாழினியைப் பிடிக்க முடியவில்லை. சரி வந்து பார்ப்போம் என்று  நானும் விட்டுவிட்டு
என் அலுவலைப் பார்த்தேன்.

நான் தாயகம் சென்று இருமாதங்கள் மகிழ்வாகக் கழித்துவிட்டு கொழும்பு பயணமாகும் நாள் நெருங்குகிறது. இன்னும் இரு நாட்களே இருக்கின்றன. வந்ததுதான்  வந்தோம் ஆகத் தூரம் இல்லையே என் நண்பியின் வீடு. ஒருமுறை போய் வருவோமா என்று கேட்க கணவரும் சம்மதித்தார். பிள்ளைகளோ தாங்கள் மாமி வீட்டிலே  நிற்கிறோம் நீங்கள் போய் வாருங்கள் என்றனர். வெளிநாட்டிலிருந்து வந்துள்ளோம். எல்லோரும் தான் போக வேண்டும். யாழினியின் அம்மா உங்களைக்
காணவில்லை. எனவே நீங்கள் கட்டாயம் வரவேண்டும் என்று பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு  அங்கு போகிறோம். தாய் மகிழ்வோடு எங்களை வரவேற்கிறார்.

அவருடன் ஊர் உலக விடயம் எல்லாம் கதைத்துவிட்டு நீங்கள் ஏன் தனிய இங்க இருக்கிறியள். யாழினியுடன் போய் இருந்தால் இருவருக்கும் நல்லதுதானே
என்றேன். நானும் கேட்டேன் இப்ப உடன கூப்பிட முடியாதாம் இரண்டு வருடங்கள் பொறுக்கச் சொன்னாள் என்றார். உடனே நீங்கள் வாறது யாழிக்குத் தெரியாது போல
என்றார். வரும்வரையும் அவளுக்கு அடிச்சுக்கொண்டே இருந்தனான் அவள் அகப்படவே இல்லை என்றேன். அவள் அவள் என்று தடுமாறிவிட்டு இரண்டரை மாதமாக
இங்குநின்றுவிட்டு போன கிழமைதான் போனவள்  என்றதும் எனக்கு இரண்டாவது தடவையாக தலயில் அடி விழுந்தது. அந்த நேரம் என் கணவர் என்னைப் பார்த்த
பார்வை இருக்கிறதே இப்ப நினைத்தாலும் எதோ செய்கிறது. திரும்பிவரும்போது கணவர் யாழினியின் கதை ஒன்றுகூடக் கேட்காமல் வந்தது இன்னும் எனக்குக் அதிக குற்ற உணர்வைக் கொடுத்தது.

மீண்டும் யேர்மனி வந்து சேர்ந்த பின்னர் அவளுக்கு தொலைபேசியே எடுப்பதில்லை என்ற முடிவோடு தான் வந்தேன். ஆனால் வந்து இரு நாட்களில் அவளே போன் செய்தாள். தாய் போன் செய்து திட்டியிருப்பாரோ என்னவோ நான் உனக்குச் சொல்ல மறந்துபோனன் என்று சாட்டுச் சொன்னாள். சரி போனாப் போகுது தவறு செய்வது இயற்கை தானே என மன்னித்தேன். அவள் பொன் செய்த விடயம் பற்றி என் கணவரிடம் கூறியபோது இனிமேல் உன் நண்பியின் கதை ஒன்றும் எனக்கு நீ சொல்லக் கூடாது. நீயே என்ன எண்டாலும் செய்துகொள் என்றுவிட்டார்.

அதன்பின் நாம் சூழ்நிலைக் கைதியாகி லண்டனுக்கு இடம்பெயரவேண்டி வந்தது. யேர்மனியில் அந்தவருடம் தான் வீடு மாறி எல்லாமே புதிதாக வாங்கியிருந்தோம். லண்டனிலும் வீடுகள் தளபாடங்கள் வசதியானது இல்லை என்பது தெரிந்தது தான். பிள்ளைகளும் முதலில் லண்டன் வருவதைப் பகிஸ்கரித்தனர். அவர்களின் பொருட்கள் எல்லாம் கொண்டு போகலாம் என்றதும் சம்மதித்தனர். அதனால் பெரிய பார ஊர்தி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி எல்லாவற்றையும் கொண்டு லண்டன் புறப்பட்டுவிட்டோம்.

வருவதற்கு இரு நாட்களின் முன் தொலைபேசியில் யாழினிக்கு எடுத்து விடயத்தைக் கூறிவிட்டேன். எப்பொழுதும் நான் என்பக்கம் மற்றவர் குறை கூறாதவாறு
பார்த்துக் கொள்வதில் கவனம். அதனால் அந்தக் கஷ்டத்திலும் அவள் கனநாள் போன் செய்யாததை கருத்தில் எடுக்காது  கூறியபொழுது தங்களுக்கும் லண்டோ வந்து
இருக்கத்தான் ஆசை  என்றாள். அங்கயுமா என மனதுள் நினைத்தேனே தவிரசொல்லவில்லை. அவளின் சித்தி ஒருவர் லண்டனில் இருக்கிறார். அதனால் உனக்குச்
சித்தி இருக்கிறா தானே என்றேன். எனக்கு அவவுடன் பொய் இருக்க விருப்பம் இல்லை. நீ போய் எங்கே இருக்கிறாய் என்று சொல்லு உனக்குக் கிட்ட வாறன்
இருக்க என்றாள். முன்பென்றால் எனக்கு எல்லையில்லா மகிழ்வு ஏற்பட்டிருக்கும். ஆனால் இப்ப ஐயோ தயவுசெய்து எனக்குக் கிட்ட வந்துவிடாதே என மனம் அலறியது. ஆனால் வாயோ அதுக்கென்ன வாவன் என்றது.

முதலே வீடு வாடகைக்குப் பார்க்கும்படி என் கணவரின் நண்பனிடம் பணம் அனுப்பி வீடும் பார்த்தாகிவிட்டதுமூன்று படுக்கை அறைகள் கொண்ட பெரிய வீடு என்று  கூறியதும் நாங்களும் யேர்மன் வீடுகள் போல் பெரிதாக இருக்கும் என்று கற்பனையில் போனால் இரண்டு அறைகள் தான் ஓரளவு பெரிது. மற்றைய அறை மூன்று மீட்டர் நீளமும் இரண்டரை மீற்றர் அகலமும் கொண்ட மிகச் சிறிய அறை. லண்டன் வீட்டில் நாம் கொண்டு போன பொருட்களில் அரைவாசியைக் கூட அடக்க
முடியவில்லை.பிள்ளைகளும் வாங்கோ திரும்ப யேர்மன் போவோம் என ஒரே அழுகை. என்ன செய்வது என யோசித்துவிட்டு எமக்கு வீடு தந்த முகவரிடமே கொஞ்சம் பெரிய வீடாகத் தரும்படி கேட்டோம். அவர்கள் எல்லா வீடும்  இப்படித்தான் இரண்டு வாரங்கள் பொறுத்தால் ஒரு வீடு இருக்கிறது காட்டுகிறோம் என்றார்கள்.
நாமும் சரிஎன்று விட்டு மிகுதிப் பொருட்களை உடைக்காது வரவேற்பறையிலேயே வைத்திருந்தோம்.

இரு வாரம் கழிந்ததும் எனது கைத்தொலைபேசிக்கு ஒரு புதிய இலக்கத்திலிருந்து அழைப்பு வந்தது. இங்கிருப்பவர்களுக்கு என் எண் தெரியாதே. யார் அடிக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டே போனை எடுத்தால் யாழினி. எப்படி உனக்கு என் தொலைபேசி இலக்கம் தெரிந்தது எனக் கேட்டேன். உன்அம்மாவிடம் தான் வாங்கினேன் என்றாள். நாம் வீடு மாற உள்ளோம். அதன்பின்தான்தொலைபேசி எடுக்கலாம். அதனால்த்தான் உனக்கும் எடுக்கவில்லை என்று ஒருவித குற்ற உணர்வுடன் கூறினேன்.

நான் லண்டனில் தான் நிக்கிறேன் என்றாள் யாழினி. நான் தொலைபேசி எண்ணைக் கூடக் கவனிக்கவில்லை என்று மனதில் எண்ணிக்கொண்டு எப்ப வந்தாய் என்றேன். வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. சித்தி வீட்டில்தான் நிக்கிறேன் என்றாள். எப்ப போகிறாய் என்னிடமும் வந்துவிட்டுப் போவன் என்றேன். நாளைக்கு வீட்டில் நிற்பீர்களா? என்றாள். நாம் நிற்போம் எத்தனை மணிக்கு வருகிறாய் என்றேன். மாலை மூன்று  மணிக்குப் பின் வாறன் என்றுவிட்டு எப்பிடி வீட்டு வசதிகள் எல்லாம் என்றாள். சரியான இடைஞ்சலடி கொண்டுவந்த பொருட்கள் எல்லாம் வரவேற்பறையில் தான் இருக்கு என்றேன். சிறிது நேரம் கதைத்துவிட்டு வைத்துவிட்டாள். என்னிடம் விலாசத்தைக் கேட்க மறந்துவிட்டாள். சரி நாளை வரமுதல் அடிப்பாள் தானே என்று எண்ணி நானும் விட்டுவிட்டேன்.

அடுத்தநாள் அவளுக்காக விசேடமாகச் சமையல் செய்துவிட்டு காத்திருந்தோம். மூன்று மணி கடந்து நான்கு மணியாகி ஐந்து மணியான பின்னும் அவளைக் காணவில்லை. அவள் அடித்த இலக்கத்துக்கு நான் அடித்தால் போன் நிப்பாடி வைக்கப்பட்டிருந்தது. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.மீண்டும் மீண்டும் அடித்துப் பார்த்ததுதான் மிச்சம். வழமைபோல் என் கணவர் துருவாசரானார். உனக்கு எத்தனை தரம் பட்டாலும் சுரணை வராதோ அதோ இதோ என்று இத்தனை நாள் சேர்த்து வைத்ததெல்லாம் சேர்த்துத் திட்டினார். எனக்கு அழுகை வந்தது ஆனாலும் அடக்கிவிட்டேன். கணவர் சொல்வதற்கு நானும் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கும் நான் அன்று ஒன்றும் பேசாமல் இருந்தது என் கணவருக்கே சகிக்கவில்லை. திட்டுவதை விட்டு சரி நல்ல சாப்பாடு தானே சமைச்சிருக்கிறாய் வா நாங்களாவது வடிவா ஆறுதலாச் சாப்பிடுவம் என்று கூறிக்கொண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு உணவு மேசைக்குச் சென்றுவிட்டார். பிறகென்ன நானும் உணவைச் சூடாக்கி அவர்களோடு இருந்து உணவை உண்டு மனதை ஆறுதல் படுத்தினேன்.
 

 

இன்னும் தொடரும் .........

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக போகிறது . வெளி நாடு சிலரை மாற்றித்தான் விடுகிறது சூழ் நிலைகாரணமோ தெரியாது........மேலும் தொடர்க .. :D

  • கருத்துக்கள உறவுகள்

 நண்பி முன்னும்,பின்னும் போட்டி போட்டுக்கொண்டு திரிவது போல் தான் இருக்கிறது..எல்லாம் ,எல்லாருக்கும் சொல்லவேண்டும் என்று இல்லைத் தானே நீங்களாவது சற்று விலகி நடந்து கொள்ள முயற்சி எடுத்திருக்கலாம் சுமோ அக்கா..

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

அவருடன் ஊர் உலக விடயம் எல்லாம் கதைத்துவிட்டு நீங்கள் ஏன் தனிய இங்க இருக்கிறியள். யாழினியுடன் போய் இருந்தால் இருவருக்கும் நல்லதுதானே

என்றேன். நானும் கேட்டேன் இப்ப உடன கூப்பிட முடியாதாம் இரண்டு வருடங்கள் பொறுக்கச் சொன்னாள் என்றார். உடனே நீங்கள் வாறது யாழிக்குத் தெரியாது போல

என்றார். வரும்வரையும் அவளுக்கு அடிச்சுக்கொண்டே இருந்தனான் அவள் அகப்படவே இல்லை என்றேன். அவள் அவள் என்று தடுமாறிவிட்டு இரண்டரை மாதமாக

இங்குநின்றுவிட்டு போன கிழமைதான் போனவள்  என்றதும் எனக்கு இரண்டாவது தடவையாக தலயில் அடி விழுந்தது.

கதை, நல்லாயிருக்கு சுமோ!

 

ஏனோ, உங்களின் மற்றக் கதைகளைப் போல, என்னால் இதை உள்வாங்கிக் கொள்ள முடியாமலுள்ளது! :wub:

 

இன்னொருவரது தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவது, அது அவர்களின் நன்மைக்கென்று இருந்தாலும் சரியைல்லைப் போல கிடக்கு! அவரின் தனிப்பட்ட பிரச்சனைகளை முற்றாக அறிந்து கொள்ளாமல், எங்களது புத்திமதிகள், அவருக்கு நன்மையானவை என்று நாம் எப்படி முடிவு செய்யலாம்? :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப் பகிர்ந்த யாயினி, நிலா அக்கா, வந்தி, புங்கை ஆகியோருக்கு நன்றி.

நட்பு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரி இருக்கும். என்னைப் பொறுத்தவரை நான் அவளிடம் எதையும் ஒழிக்கவில்லை. இத்தனை காலம் பழகுகிறோம். வெளிப்படையாக இருந்தால்தான் நேர்மை என்று நான் நினைத்தேன். அவளும் வெளிநாடு வரும் வரை எதையும் எனக்கு ஒழிக்கவில்லை என்று நான் எண்ணியிருந்தேன்.

ஆண்களின் நட்புக்கூட ஒவ்வொன்றும் ஒருவிதம்தான் புங்கை. ஆனால் பெண்களின் நிலையிலிருந்து ஆண்களால் பார்க்க முடியாது என்பதும் உண்மை. எதற்கும் முழுவதையும் முடித்துவிட்டுக் கருத்து எழுதுவது நல்லது என்று நினைக்கிறேன்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா இருக்கு .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப் பகிர்ந்த லியோவுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுமேரியர். வாசிக்க ஆவலாக இருக்கிறது. :rolleyes:

உங்கள் கதை பல விடையங்களைத் தொட்டுச்செல்கின்றது . அதேவேளை நித்தம் போனால் முத்தம் சலிக்கும் என்பதையும் உங்கள் நண்பியின் பாத்திரம் சொல்லாமல் சொல்கின்றது . எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

அலட்டலையும்,விடுப்பையும் தொடருங்கோ கேட்க/வாசிக்க ஆசையாகவுள்ளது...:D

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கே உரித்தான குணாதிசயங்களுடன் கதை செல்கின்றது


விடுப்பு அறிய எங்களுக்கும் விருப்பம் தான் :D


 

தொடருங்கள் சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கதையை வாசித்ததில் இருந்து சின்னனில் இருந்து நீங்கள் அவவை கொஞ்சம் குறைத்து தான் வைச்சிருக்கிறீங்கள்...அவவும் உங்களை விட வசதி,வாய்ப்புக்களில் குறைந்தவராதால் உங்களோட போட்டி,பொறாமையோட பழகி இருக்கிறார்...எது எப்படியாயினும் மிச்சத்தை எழுதி முடியுங்கோ பார்ப்போம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில்  கள்ளவேலையும் செய்து அகதிக் காசும் எடுத்துக் கொண்டிருந்தால்

கடன் என்றுதான் மற்றவர்களுக்குச் சொல்லவேண்டும்.

விசாக்கிடைத்ததும் சேர்த்த காசைச் செலவழிக்க எங்கேயாவது செல்லத்தானே வேண்டும்.


 

மற்றவர்கள் செய்வதை அறியத் துடிப்பதும் 

நாங்கள் செய்வதை மற்றவர்களுக்கு அறியத்தரத் துடிப்பதும் 

நட்பாக இருந்தாலும் நன்று அன்று  .  :) 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கதையை வாசித்ததில் இருந்து சின்னனில் இருந்து நீங்கள் அவவை கொஞ்சம் குறைத்து தான் வைச்சிருக்கிறீங்கள்...

 

எனக்கு நீங்கள் கூறுவது விளங்கவில்லை ரதி. எப்படிக் குறைத்து வைத்திருப்பது ??? விளங்கும்படி கூறுங்கள்

 

 

மற்றவர்கள் செய்வதை அறியத் துடிப்பதும் 

நாங்கள் செய்வதை மற்றவர்களுக்கு அறியத்தரத் துடிப்பதும் 

நட்பாக இருந்தாலும் நன்று அன்று  .  :) 

 என்னைப் போன்றவர்களுக்கு பட்டால்த்தான் தெரிகிறது வாத்தியார்.

 

அலட்டலையும்,விடுப்பையும் தொடருங்கோ கேட்க/வாசிக்க ஆசையாகவுள்ளது... :D

 

ஆண்கள் எல்லோரும் விடுப்புச் சுப்பர்களாகத்தான் இருக்கிறியள். :D :D

 

பொறாமை, போட்டி, இருக்கும் மனத்தில் உண்மை நட்பு இருக்காது. இப்படியானவர்களின் குணம் தெரியத்தொடந்கியவுடனேயே விலத்திவிட வேண்டும் . பாவம் நீங்கள்  :(
 

ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார் 

கேண்மை ஒரீதி விடல் 
 
மருவுக மாசற்றார் கேண்மையொன்  ரீதும் 
ஒருவுக ஒப்பிலார் நட்பு 

சுமோ தொடருங்கள்!! 



சுமோ தொடருங்கள்!! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.