Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விற்றுத் தீர்ந்த காதல் கதை (பாகம்-24)

Featured Replies

அப்பொழுது அஞ்சலி லண்டனிலுள்ள அவளது ஒன்றுவிட்ட அக்காவின் வீட்டில் தங்கியிருந்தாள்.

Kingston College இல் தனது கல்வியினைத் தொடர்ந்து கொண்டிருந்தவளுக்கு அப்பகுதியிலிருந்த KFC இல்

பகுதி நேர வேலை.
 

அந்த KFC வேலைக்கு அவள் சென்றிருந்த ஆரம்பத்தில் ஒரு சம்பவம் நடந்திருந்தது.
 

அஞ்சலியிடமிருந்து அழைப்பு வர அதை எடுத்தவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

மறுமுனையில் அஞ்சலி விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். இவனுக்கோ என்ன ஏதென்று ஒன்றுமே புரியவில்லை.

"அஞ்சு என்னாச்சுமா? ஏன் அழுகிறாய்?" எனக் கலக்கத்தோடு கேட்டான். ஆனால் அவளோ அழுகையை நிறுத்தியபாடில்லை. "அஞ்சு...!" எனக் கொஞ்சம் அழுத்தமாக அழைத்தவன்... "என்ன நடந்தது அஞ்சு..?" என அழுத்தத்தைக் குறைத்து.... கொஞ்சம் வாஞ்சையுடன் கேட்க,
 

"சொறிடா... என்னை மன்னிச்சுக்கொள்ளு! கழுத்தில இருந்த கயிறைக் கழட்டிப்போட்டன்" எனச் சொல்லிவிட்டு

மீண்டும் அழத் தொடங்கினாள். அதைக் கேட்டதும் இவனுக்கு அழுவதா... சிரிப்பதா...? என்று தோன்றினாலும்,

அந்தக் கறுப்புக் கயிற்றினை அவள் எந்தளவுக்கு மதிக்கிறாள் என்பதும் தெளிவாகப் புரிந்தது.

 

அஞ்சலியின் அப்பா ஒருமுறை இந்தியா சென்றுவரும்போது ஏதோவொரு கோயிலில் இருந்து கொண்டுவந்திருந்த  கறுப்புக் கயிறுதான் அது. அதனை எடுத்துக்கொண்டு வந்த அஞ்சலி.... அவனது கையால் தனது கழுத்தில் கட்டிக்கொண்டபோது அஞ்சலி சொன்னது...." நீங்கள் எனக்கு தாலி கட்டும் வரைக்கும் இதுதான் என்ர தாலி" என்பதுதான்.

 

சில சமயங்களில் ஏதாவது விசேசங்களுக்குப் போகும்போது  நகைகளை அணியவேண்டி வரும்போது அந்தக் கறுப்புக் கயிறைக் கழற்றிவிடும்படி அவளின் தாயர் வற்புறுத்தியிருக்கிறார். ஆனால் ஏதாவது காரணங்களைச் சொல்லி அதைக் கழற்ற மறுத்துவிடுவாள்.

 

அந்தக் கயிற்றினை அவள் சாதரண கயிறாக நினைக்கவில்லை. அதனைத் தனது தாலி என்றே கருதி வந்தால். அது எப்பொழுதும் அவளது கழுத்தினைவிட்டு அகன்றதில்லை. அப்படியிருக்க... இப்பொழுது ஏன் கழற்றினால்? என்ற கேள்வி அவனது மனதிற்குள்   எழுந்தது.
 

"அஞ்சலி...! முதலில் அழுறத நிப்பாட்டுமா! என்ன நடந்தது எண்டு  சொன்னாத்தானே... எனக்கு விளங்கும். என்னமா நடந்தது?" என மிகுந்த பரிவோடு கேட்டான் அவன்.
 

"KFC இல வேலை செய்யக்குள்ள அந்த  கறுப்புக் கயிறைப் போடக்கூடாதாம். கழட்டச் சொல்லிப்போட்டினம்! உனக்குத் தெரியுந்தானேடா? அந்தக் கயிறு எனக்கு எவ்வளவு முக்கியம் எண்டு. ஆனா... வேற வழி தெரியேல. கழட்ட வேண்டியதாப் போச்சு! அந்த வேலையும் வேணாம்... ஒண்டும் வேணாம் எண்டுபோட்டு வந்திருப்பன். ஆனா.. அந்த வேலையை அத்தான்தான் எடுத்துத் தந்தவர். 'ஏன்... எதுக்கு?' எண்டு கேள்வி வந்தால்... எல்லாம் மாட்டுப் பட்டிடும்.அதுதான்.... என்னால ஒண்டும் செய்யேலாமப் போச்சுடா" என சிறு குழந்தை போல ஒப்புவித்துவிட்டு.... திரும்பவும் விசும்ப ஆரம்பித்தாள்  அஞ்சலி.

 

"அஞ்சு.... என் செல்லமே!" என செல்லமாக விளித்தவன்,
"வேலை செய்யிற இடத்திலதானே போட ஏலாது. வீட்டில இருக்கைக்குள்ள போட்டிருக்கலாந்தானே!? இதுக்குப்போய் ஏனம்மா அழுகிறாய்? கயிறுதானே விடு! கெதியில.... தங்கத்தில தாலிக்கொடியே கட்டுறன்... கவலைப்படாதே!" எனச் சொல்லவும்,
 

"போடா...! உனக்கெங்க தெரியப்போகுது என்ர கவலை..?" எனச் செல்லமாக அவனைக் கோபித்துக் கொண்டவனின் குரலில் கொஞ்சங் கொஞ்சமாக மீண்டும் சந்தோசம் குடிகொள்ள ஆரம்பித்தது.
 

இதன் பின்னர் அஞ்சலி அவனிடம் அழுத சம்பவம் அவளது இந்தியப் பயணத்தின்போது நடந்திருந்தது. அந்த சம்பவத்திற்கு முன்னர் நடந்த வேறுசில சம்பவங்களையும் இங்கு சொல்ல வேண்டும்.
 

அவன் மலேசியா வந்த  ஒரு மாதத்திற்குள்ளாகவே பாதுகாப்புக் காரணங்கள் கருதி அவனது குடும்பத்தினை இந்தியாவிற்கு அனுப்பி வைத்திருந்தான். அவனது குடும்பத்தினர் சென்னை வளசரவாக்கத்தில் வாடகை வீடொன்றெடுத்துத் தங்கியிருந்தனர்.
 

அதைப்போலவே 2008இன் ஆரம்பத்தில் அஞ்சலியின் குடும்பமும் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்திருந்தனர்.
திடீரென ஏற்பட்ட இப்படியான எதிர்பாராத நிகழ்வுகளால் இலங்கையில் வசதியாக வாழ்ந்த  அஞ்சலியின் குடும்பம் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து கொஞ்சம் கஷ்டமான நிலைமையில் வாழவேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. அவர்களும் சென்னையின் வேறொரு பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து வசித்து வந்தனர்.
இப்படியான நிலைமையிலேயே... அஞ்சலிக்குக் கிடைத்த ஒருமாதகால விடுமுறையில் அவளது இந்தியப் பயணம் முடிவாகியிருந்தது.

 

13-08-2008


அஞ்சலி இலண்டனிலிருந்து இந்தியாவிற்குப் பயணமாகிறாள்.

தான் இந்தியாவில் இருக்கும் சமயத்தில் தொலைபேசி எடுப்பதற்கு சிரமமாயிருக்கும். தனது தாயார் எப்பொழுதும் கூடவே இருப்பார் என்பதனை முன்னரே அவனுக்கு அறிவுறுத்தியிருந்தாள் அஞ்சலி.
ஆனாலும்... சென்னை சென்றடைந்த அன்றிரவே தாயாரின் தொலைபேசியை எப்படியோ எடுத்து,  அவள் அங்கு வந்து சேர்ந்துவிட்டதை அவனுக்கு தெரியப்படுத்தினாள். ஆனால் அதன்பின், இரு நாட்களாக எந்த அழைப்பும் அவனுக்கு வரவில்லை.
 

தினமும் தவறாமல் அவளோடு கதைப்பவனிற்கு... அந்த இரு நாட்களும் என்னவோ போலிருந்தது. ஆனாலும் 'அவளது  சூழ்நிலை என்னவோ...?' என நினைத்து தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.
மூன்றாம் நாள்.... அவளது தாயாரின் தொலைபேசியிலிருந்து அழைப்பு வருகின்றது. அவன் ஆவலோடு எதிர்பார்த்திருந்த  அவனது செல்லத் தேவதை அஞ்சலி தேவதைகளுக்கே உரிய அழகான செல்லக் குரலில் பேசத் தொடங்கினாள்.

அவனது கவலைகள் எல்லாம் காற்றாய்க் கரைந்துபோக.... அளவிலா மகிழ்வுடன் அவனும் அவளுடன் கதைக்க ஆரம்பித்தான்
 

இரு நாட்களாக பேசாதவர்களிடம் கதைபதற்கு நிறைய விடயங்கள் இருப்பதுபோல் இருந்தது. நிறையப் பேசினார்கள்.
அப்படியே பேசிக்கொண்டிருக்கையில் திடீரென அஞ்சலி,
"நான் அத்தையைப் போய்ப் பார்க்கட்டுமா?" எனக் கேட்கவும் "அம்மாவையா? எப்படி அஞ்சலி?" என முடியுமா என்ற சந்தேகத்தோடு கேட்டான் அவன்.

(அஞ்சலி எப்போதும் அவனது தாயாரை 'அத்தை' என்றுதான் அழைப்பாள். வழமையாக எல்லோரும் அழைப்பதுபோல் 'மாமி' என்று அவள் ஏனோ அழைப்பதில்லை.)
 

அவன் அப்படி ஆச்சரியமாகக் கேட்கவும்....
 "நான் ஒரு பிளான் வைச்சிருக்கிறன் செல்லம். நான் லண்டனில இருந்து வரும்போதே எப்படியாவது அத்தையைப் போய்ப் பார்க்கோணும் எண்டு பிளான் பண்ணிட்டன். அதனால் வரக்குள்ள அதைக்கு குடுக்க கொஞ்ச சாமான் கொண்டு வந்தனான். அதைக் குடுக்கிற சாட்டில் அத்தையைப் பார்த்துக் கதைக்கலாம்" என அவள் சொல்லவும்.....

 

"அதெப்பிடி ஏலும்? உங்கட அப்பா விடுவாரோ?" என அவன் மீண்டும் சந்தேகத்தோடு குறுக்கிட்டுக் கேட்கவும்,
 

"ஏன் அவசரப்படுறீங்கள்? உங்களுக்கு எல்லாத்துக்குமே அவசரந்தான். நான்  சொல்லுறத முதலில கேளுங்கோவன்." எனச் செல்லமாக அவனைக் கடிந்துகொண்டவள் தொடர்ந்து தன் திட்டத்தை விளக்கினாள்.
 

"என்னோட லண்டனில படிக்கிற சிநேகிதப் பிள்ளையின்ர அம்மா ஆக்கள் இங்க இருக்கிறதாகவும் அந்தப் பிள்ளை தன்ர அம்மாவிட்டக் குடுக்கச்சொல்லி தந்த சாமான்தான் அது எண்டும் அப்பாட்டச் சொன்னாப் போதும். எல்லாம் ஓகே! எப்பிடி என்ர பிளான்?" என முழுமூச்சாய்ச் சொல்லிவிட்டு கெட்டிக்காரக் குழந்தைபோல் சிரித்தாள் அஞ்சலி.
 

அவனுக்கும் அந்தப் பிளான் ஓகே ஆகும் என்று தோன்றியது. "ம்ம்ம்..... நல்ல பிளான்தான். என்னோட பெண்டாட்டி எண்டுறதை நிரூபிச்சிட்டாய்" என அவன் நக்கலாகச் சொல்லவும்,
ஆளப்பாரன்.... என்ன நக்கலா?  என மீண்டும் செல்லமாகக்  கோபித்துக்கொண்டாள்.
 
 அவர்கள் நினைத்ததைப் போலவே அவர்களின் அந்தத் திட்டம் வெற்றி பெற்றது.
முதன் முதலாக அஞ்சலி அவனது தாயாரைச்  சந்திக்கிறாள். கூடவே அஞ்சலியின் தந்தையும் வந்திருந்தார். ஆனால்.... தான் தனது சம்மந்தியின் வீட்டிற்குத்தான் வந்திருக்கிறார் என்பதனை அவர் அப்பொழுது அறிந்திருக்க வாய்ப்பில்லைத்தான்.

அஞ்சலியின் தந்தை வரவேற்பறையில் இருக்க, தன் அத்தையுடன் பேசுவதற்கு விரும்பிய அஞ்சலி,  தேநீர் எடுத்துவரச் சென்ற அவனது தாயாருடன் பேச்சுக்கொடுத்தபடியே... தன் தந்தைக்கு சந்தேகம் வராதமுறையில் சமயலறைக்குள் நுழைந்தாள்.

 

உள்ளே சென்றதும்... அவனது தாயாரின்  பாதங்களைத் தொட்டு வணங்கி ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டாள். உண்மையிலேயே.... அவனது தாயார்,  அஞ்சலியின் பணிவிலும் பாசத்திலும் மிகவும் பூரித்துப் போனார் என்றுதான் சொல்லவேண்டும்.அவளைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்து முத்தமிட்டு தன் அன்பினையும் வெளிப்படுத்திக்கொண்டார் அவனது தாயார்.
 

அஞ்சலியின்  தந்தைக்கு வேறு வேலைகள் இருந்ததால் அவர்களால் நிறைய நேரம் பேச முடியவில்லை. கொஞ்ச நேரமே பேசிக்கொண்டாலும் பாசத்துடன் நிறையப் பேசிக்கொண்டார்கள்.
உள்ளே... வார்த்தைக்கு வார்த்தை "அத்தை! அத்தை!" என பாசமாக அழைத்தவள்... வெளியே வந்ததும்,

"போயிட்டு வாறன் அன்ரி... கவனமா உடம்பப் பார்த்துக் கொள்ளுங்கோ!" என அக்கறையுடன் சொல்லிவிட்டு தன் தந்தையோடு விடைபெற்றாள்.
 

ஆனால்.... 'அவள் இனி எப்பொழுதுமே திரும்பி வரப்போவதில்லை' என்பதனை அந்த பாசமான அத்தை அப்பொழுது அறிந்திருக்கவில்லை.
 

தொடரும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதையை நன்றாக நகர்த்துகிறீர்கள் .. தொடருங்கோ.. :)

 

இப்பவும் வளசரவாக்கத்தில் தானா?

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்,கவிதை.

ஆரம்பத்தில் உங்களுடைய இந்தக்கதையை ஊக்குவித்த நான் இப்பொழுது அப்படியில்லை . எதைமறக்க உங்கள் இடமாற்றம் கைகொடுத்ததோ , அங்கிருந்து உங்களை வருத்தி உங்கள் ரணத்தில் இருந்து வரும் குருதியை சுவைக்க நான் தயாராக இல்லை . எனவே இந்தக் கதையை இத்துடன் நிறுத்தி உங்கள் எதிர்காலத்தை முன்னிலைப்படுத்துவதே இப்பொழுது உள்ள வேலை . அதனால்தான் இந்த அஞ்சலிகளை  தோலுரிக்கமுடியும் . உங்கள் சோகம் அஞ்சலிகளுக்கு மிதப்புகளை கொடுத்து பல அஞ்சலிகளை உருவாக்கும் என்பதே எனது கருத்து .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகப் போகிறது கவிதை.

  • கருத்துக்கள உறவுகள்

விரைவிலேழு தி முடித்து ...விடவும். சோ கம் மட்டும் வாழ்க்கை அல்ல .

 

வாழ்க்கைக்கு மறுபக்கமும் இருக்கிறது.

கவிதை, கவிதை, கவிதை!  யோசித்துப் பாருங்கள் உந்த அஞ்சலியை. எவ்வளவு துரோகி! நேற்று தனது பெற்றோர்களுக்குப் பொய் சொல்லி ஏமாத்தினாள், இன்று உங்களை, நாளை..?? இப்படியான துரோகியை நினைக்க எப்பிடித் தான் உங்களால் முடிகிறது??சுமோ எழுதிய கதையில் வந்த மது தான் நிணைவுக்கு வருக்கிறது. துரோகிகளைத் தூக்கி எறிந்து விட்டு உங்கள் எதிர்காலத்தைப் பற்றி யோசியுங்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், கவிதை!

 

மீண்டும், பழைய கவிதையைக் கண்டது மாதிரியிருக்கு! :D

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை தொடருங்கோ.......அலைமகள் ஏன் தொடர்கின்றார் :D.....

கவிதை தொடருங்கோ.......அலைமகள் ஏன் தொடர்கின்றார் :D.....

 

 

ஏன் என்று தெரியவில்லை சிலவேலை போஸ்ட் பண்ணினால் 2 / 3 முறை பதியப்படுகிறது! புங்கை சொன்ன மாதிரி...... :D

  • தொடங்கியவர்

கதையை நன்றாக நகர்த்துகிறீர்கள் .. தொடருங்கோ.. :)

 

இப்பவும் வளசரவாக்கத்தில் தானா?

 

நன்றி ஜீவா.  தொடர்கிறேன். :)

இப்பொழுது வளசரவாகத்தில் இல்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் உங்களுடைய இந்தக்கதையை ஊக்குவித்த நான் இப்பொழுது அப்படியில்லை . எதைமறக்க உங்கள் இடமாற்றம் கைகொடுத்ததோ , அங்கிருந்து உங்களை வருத்தி உங்கள் ரணத்தில் இருந்து வரும் குருதியை சுவைக்க நான் தயாராக இல்லை . எனவே இந்தக் கதையை இத்துடன் நிறுத்தி உங்கள் எதிர்காலத்தை முன்னிலைப்படுத்துவதே இப்பொழுது உள்ள வேலை . அதனால்தான் இந்த அஞ்சலிகளை  தோலுரிக்கமுடியும் . உங்கள் சோகம் அஞ்சலிகளுக்கு மிதப்புகளை கொடுத்து பல அஞ்சலிகளை உருவாக்கும் என்பதே எனது கருத்து .

 

 

கோமகன் கவிதை அவருடைய மன ஆறுதலுக்காக எழுதுகிறார்.எழுதட்டும் விடுங்கள்...அந்த பெண்ணது சூழ்நிலை தெரியாமல் தப்பாக கதைப்பது பிழையென்றே நினைக்கிறேன்...எதுவாயினும் கவிதை கதையை எழுதி முடிக்கும் வரை பொறுமை காப்போம்
 
தொட‌ருங்கள் கவிதை
  • தொடங்கியவர்

தொடருங்கள்,கவிதை.

 

பொறுமையாக தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி நுணா. தொடர்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

தம்பி உங்களுக்கு என்ன சொலிறது எண்டு தெரியேலை உங்களை கடவுள்தான் காப்பத்தவேணும் கதைக்கு நன்றி சொல்லிறன்
  • தொடங்கியவர்

ஆரம்பத்தில் உங்களுடைய இந்தக்கதையை ஊக்குவித்த நான் இப்பொழுது அப்படியில்லை . எதைமறக்க உங்கள் இடமாற்றம் கைகொடுத்ததோ , அங்கிருந்து உங்களை வருத்தி உங்கள் ரணத்தில் இருந்து வரும் குருதியை சுவைக்க நான் தயாராக இல்லை . எனவே இந்தக் கதையை இத்துடன் நிறுத்தி உங்கள் எதிர்காலத்தை முன்னிலைப்படுத்துவதே இப்பொழுது உள்ள வேலை . அதனால்தான் இந்த அஞ்சலிகளை  தோலுரிக்கமுடியும் . உங்கள் சோகம் அஞ்சலிகளுக்கு மிதப்புகளை கொடுத்து பல அஞ்சலிகளை உருவாக்கும் என்பதே எனது கருத்து .

 

காதலுக்கு நேசிக்க மட்டுமே தெரியும் கோ. வெறுக்கவோ பழிவாங்கவோ தெரியாது.

சில சமயங்களில் கோபம் வரும். ஆனால்... காதலின் நினைவுகளில் மறைந்துபோகும்.

 

இந்தக் கதையை எழுதுவது ஒருவகையில் வலி. இன்னொருவகையில் ஆறுதல். மறக்க முடியாத நினைவுகளை எழுத்துக்களில் தொகுக்கின்றேன்.

 

அவள் மறந்துபோனாலும்... ஒருநாள்,அவளுக்கு ஞாபகமூட்டும் இந்த எழுத்துக்கள்!

கவிதை , நீங்கள் அஞ்சலியை போலவே காதலையும் ஆழமாக நேசிக்கிறீர்கள்.

ஆனாலும் யதார்த்தம், சமுதாயம், எதிர்கால வாழ்க்கை என்று நிறைய இருக்கு கவிதை.

நான் என் மனசார சொல்லுகிறேன், உங்கள் அஞ்சலியை விட எல்லா விதத்திலும் உயர்ந்த ஒரு பெண் உங்களுக்கு நிச்சயமாக கிடைப்பாள்.

நம்பிக்கை மட்டுமே வாழ்க்கை.

  • தொடங்கியவர்

நன்றாகப் போகிறது கவிதை.

 

நன்றி அக்கா

  • தொடங்கியவர்

விரைவிலேழு தி முடித்து ...விடவும். சோ கம் மட்டும் வாழ்க்கை அல்ல .

 

வாழ்க்கைக்கு மறுபக்கமும் இருக்கிறது.

 

விரைவில் எழுதி முடிக்கத்தான் எனக்கும் ஆசை அக்கா. ஆனால் தற்பொழுது உள்ள சூழ்நிலை அதற்கமைய அமையவில்லை. முடிந்தவரை விரைவாக எழுதுகின்றேன்.

 

நிலா அக்கா... வாழ்க்கையில் மறுபக்கம் என்பது இருக்குதென்றால் முன்பக்கம் என்பதும் தவிர்க்க முடியாதது. கடந்துபோனவை சாதரணமானவை அல்ல மறந்துபோவதற்கு.

முயற்சி செய்கின்றேன். நன்றி நிலா அக்கா. :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி எல்லாம் ஆறுதாலாக சொல்லலாம்.இப்ப கதையை எழுதுங்கோ :D

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை , நீங்கள் அஞ்சலியை போலவே காதலையும் ஆழமாக நேசிக்கிறீர்கள்.

ஆனாலும் யதார்த்தம், சமுதாயம், எதிர்கால வாழ்க்கை என்று நிறைய இருக்கு கவிதை.

நான் என் மனசார சொல்லுகிறேன், உங்கள் அஞ்சலியை விட எல்லா விதத்திலும் உயர்ந்த ஒரு பெண் உங்களுக்கு நிச்சயமாக கிடைப்பாள்.

நம்பிக்கை மட்டுமே வாழ்க்கை.

 

இதுதான் எனது கருத்தும் . கவிதை மீதியையும் எழுதி முடியுங்கோ. எழுத்தும் ஒருவகை மனசை ஆற்றுப்படுத்தும் வல்லமை.

 

இதுதான் எனது கருத்தும் . கவிதை மீதியையும் எழுதி முடியுங்கோ. எழுத்தும் ஒருவகை மனசை ஆற்றுப்படுத்தும் வல்லமை.

 

 

 

விடுப்புக்கேக்க மச்சி படுகிறபாடு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

விடுப்புக்கேக்க மச்சி படுகிறபாடு :lol:

 

அலைமச்சி ஒரு சாங்கமாத்தான் புதினம் பாக்கிறியள்  மச்சி . :lol:

 

  • 1 month later...
  • தொடங்கியவர்

கவிதை , நீங்கள் அஞ்சலியை போலவே காதலையும் ஆழமாக நேசிக்கிறீர்கள்.

ஆனாலும் யதார்த்தம், சமுதாயம், எதிர்கால வாழ்க்கை என்று நிறைய இருக்கு கவிதை.

நான் என் மனசார சொல்லுகிறேன், உங்கள் அஞ்சலியை விட எல்லா விதத்திலும் உயர்ந்த ஒரு பெண் உங்களுக்கு நிச்சயமாக கிடைப்பாள்.

நம்பிக்கை மட்டுமே வாழ்க்கை.

 

உண்மைதான் பகலவன்.... ! 

காலங்களோடு வரும் மாற்றங்கள் இடங்கொடுத்தால்... எல்லாம் நன்றே நடக்கும்.

நீங்கள் சொன்னதைப் போல நம்பிக்கை மட்டுமே வாழ்க்கை.

மிக்க நன்றி பகலவன்.

  • தொடங்கியவர்

இதுவரை தாமதத்திற்கு தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள் உறவுகளே!

இப்பொழுதுதான் யாழில் பழையபடி தொடர்ந்து இணைந்திருக்க சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது.

எனவே இனிமேல் அதிகம் தாமதமாகாமல் இக்கதையினை தொடரமுடியும் என நம்புகின்றேன்.

விரைவில் அடித்த பாகத்துடன் வருகின்றேன். :)

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் கவி ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.