Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிட்டுக்கு மனம் சுமந்து .....

Featured Replies

சிவப்பு அரிசிமா புட்டு கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தோடை இல்லாட்டி பிலாப்பழத்தோடை சாப்பிட வேணும். வெள்ளைமாப் புட்டுக்கு கட்டாயம் நண்டுக்கறி இருக்க வேணும். குரக்கன்மாப்புட்டுக்கு தேங்காய்ப்பூவும் சீனியும் போதும். வடமராட்சிப் பகுதியில் உழுத்தம்மாவில் பால்ப்புட்டு செய்வார்கள் அதன் சுவையும் சொல்லி வேலையில்லை.

  • Replies 147
  • Views 25.7k
  • Created
  • Last Reply

வழமையாக இலங்கையில் அரைக்கும் சம்பலா இது? ( தேங்காய்ப்பூ, மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை,தேசிக்காய்புளி)

'கூனி' மிகச் சிறிய வகை இறால் கருவாடு. ஊரில் தெருவோர உணவு வண்டிகளில் கூனியை customise பண்ணி பல உணவுகளில் சேர்ப்பார்கள்.

இங்கு கிடைக்கும் சிறிய இறால் கருவாடும் (dry shrimp) பாவிக்கலாம். கூனியை வறுத்து சம்பலுடன் அரைக்க வேண்டும். நறுவல் துருவலாக அரைப்பது எனக்குப் பிடிக்கும். சம்பல் அரைக்கும் பொழுது தேங்காய்ப் பூவுடன் வெங்காயம், பச்சை கொச்சிக்காய் , கருவேப்பிலை, வறுத்த காய்ஞ்ச கொச்சிக்காய் / சிறிது சின்னச் சீரகம் / பெருஞ் சீரகம், கறிவேற்பிலை போட்டு அரைப்பேன். அரைவாசி தேங்காய்ப் பூவை வறுத்து அரைத்தாலும் நன்றாக இருக்கும். உப்பு தேவையானவர்கள் கடல் உப்பு கற்களையும் சேர்த்து அரைக்கலாம். நிறைய தேசிப் புளி போடுவேன். இதுவெல்லாம் தனிப்பட்ட விருப்பம். உங்கள் சுவைக்கேற்ப சம்பலைச் செய்து பண்அதனுடன் வறுத்த கூனியைச் சேர்க்கலாம்.

சிவப்பு அரிசிமா புட்டு கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தோடை இல்லாட்டி பிலாப்பழத்தோடை சாப்பிட வேணும். வெள்ளைமாப் புட்டுக்கு கட்டாயம் நண்டுக்கறி இருக்க வேணும். குரக்கன்மாப்புட்டுக்கு தேங்காய்ப்பூவும் சீனியும் போதும். வடமராட்சிப் பகுதியில் உழுத்தம்மாவில் பால்ப்புட்டு செய்வார்கள் அதன் சுவையும் சொல்லி வேலையில்லை.

ஆஹா .............

பச்சை அரிசி மாவில் செய்த புட்டும் கறுத்தக் கொழும்பானும் , புட்டும் கெட்டித் தயிரும் தேனும், புட்டும் எதரை வாழைப்பழமும், புட்டுடன் பழைய நண்டுக் கறிக்கும் ஈடேயில்லை. புட்டுடன் எதைக் கலந்தாலும் சுவை தனியானது.

  • கருத்துக்கள உறவுகள்

சோத்தோட தயிர் சேர்த்து சாப்பிடுவது ஓகே...புட்டோட யாராவது தயிர் சேர்த்து சாப்பிடுவார்களா :unsure:  :D
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புட்டும் மலையாளத்து உணவு என்பது தான் எனது ஆய்வின் முடிவும்! :D

பிட்டு, இசை கூறியதுபோல் தமிழர்களின் உணவுதான். உடனே உங்களுக்கு கேரளத்துக்

குட்டிகள் நினைவுக்கு வந்து, பிட்டு கேரளா தான் என்று கூறுகிறீர்களோ

புங்கை. :D :D

கோழிக்காகப் பிட்டுப் பானையை கூடவா சாத்திரி. பாவம் உங்கள் மனைவி.

எல்லா சாப்பாட்டிலையும் வாய்வைக்க அலையும் தம்பிமாரின் கவனத்திற்கு!
எல்லாச்சாப்பாடும் எல்லாருக்கும் சரிவராது! ஓடிஆடி பார வேலை செய்யிற மனிசருக்குத்தான் புட்டு,ஆட்டுறைச்சி,கணவாய்,றால் எல்லாம் சரிவரும்......செமிக்கும்.
 
சுழல்கதிரையிலை இருந்து கொண்டு வேலை செய்யுறவைக்கு ஒரு துண்டு பாண்,ஒரு தக்காளிப்பழம்,ஒரு அப்பிள்......இதுவே கூடிப்போச்சு........எல்லாரும் எல்லாத்துக்கும் ஆசைப்படக்கூடாது. :icon_idea:

அண்ணா உயிரோட இருக்கும்போதே ஆசைப் பட்டத்தை உண்டுவிடவேண்டும்.

குழல் புட்டுக்கு சில்லை(அதுவும் தேங்காயில் எடுத்த ஒரு துண்டுதான் ) அடியில் போட்டு மாவையும் தேங்காய் பூவையும் மாறிமாறி போட்டு அதற்கு ஒரு சில்லு மூடி போட்டு அவிப்பதை கண்டுபிடித்தவர்கள்  உண்மையில் பேய்காய்கள் தான் .

அடியில் போடும் சில்லை வடிவாக வைக்காவிட்டால் புட்டு தண்ணிக்குள் கொட்டுண்டுவிடும் .

புட்டும் முட்டை பொரியலும் தான் எனது பேவரிட் .

அதுகும் சின்ன வெங்காயம் வெட்டிப் போட்டுப் பொரிக்கும் முட்டையுடன் உண்பது அதைவிட உருசி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்பவாவது தாரா முட்டைப் பொரியலுடன் சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

கடைகளில் விற்கிறார்களா தாரா முட்டை ???

கடைகளில் விற்கிறார்களா தாரா முட்டை ???

இங்கு சில இடங்களில் விற்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவாவது தாரா முட்டைப் பொரியலுடன் சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

உவாக் சத்தி வருது... :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புட்டும் கருவாட்டுப் பொரியலும் அல்லது புட்டும் பழைய மீன் கறியும் அந்தமாதிரி இருக்கும்.    :wub:

கருவாடு என்னும் போதே வாய் ஊறுகிறது.

அலைக்கும் வயது போகுது :D

புட்டும் வெந்தயக் குழம்பும் (நான் சைவம் என்பதால்!) நல்ல விருப்பம்.. ஆனாலும் குழல் புட்டு ஏனோ பிடிப்பதில்லை.

தமிழ்ப் பெட்டையள் புட்டு மாதிரி லேசில இறங்கமாட்டுது ஆனால் வெள்ளைக் குட்டியள் குளுக்கோஸ் மாதிரி டக்கென்று இறக்கிடலாம் என்று எனது நண்பன் சொல்லுவான். நான் இந்த உவமானங்களுக்காக புட்டை விட்டுக் குடுப்பதிலை :icon_mrgreen:

நான் எவ்வளவு பதமாக வெந்தயக் குழம்பு வைத்தாலும் அம்மாவின் சுவை வருவதே இல்லை.

சுமே சமையலில் கிங் என்று கேள்வி. அடுத்தமுறை லண்டன் வரேக்க குழல்புட்டு அவிச்சுத் தருவீங்களோ சுமேயக்கா?

பி.கு:- புட்டவிக்கத் தெரியாமல் சுமேவீட்டுக்கு போகப்போறியோண்டு யாரும் அடிக்க வரப்படாது. :huh:

யாருக்கும் சமைத்து உணவு கொடுப்பது எனக்கு மிகவும் பிடித்த விடயங்களில்

ஒன்று சாந்தி. அதனால் பிட்டு மட்டுமல்ல எது வேண்டுமோ சாப்பிடலாம்.

எனக்கு பிடித்த உணவு புட்டும் கொத்து ரொட்டியும். மூங்கில் குழலில் அவித்தால் தனியே ஒரு வாசம் வரும். சமையல் நன்றாகத் தெரியும். இந்த புட்டு அவிக்கிற 'ரெக்னிக்' மாத்திரம் இன்னும் பிடிபடுகுதில்லை. வெள்ளிக் கிழமைகளில் கட்டாயம் புட்டு வேண்டும். வழமையாக மீன் குழம்புடந்தான் சாப்பிடுவேன்.

இந்தத் திரியைப் பார்த்ததால் இரவு புட்டுடன் வெந்தயக் குழம்பு, நெத்தலிக் கருவாட்டுப் பிரட்டல், கூனி தேங்காய்ப் பூச் சம்பல், ஆணம், முட்டைப் பொரியலுடன் சாப்பிட்டேன்.

தனிமடலில் வேண்டுமானால் உங்கள் தொடர்பிலக்கம் தாருங்கள். பிட்டவிக்கும் நுணுக்கத்தைக் கூறுகிறேன். :D

சிவப்பு அரிசிமா புட்டு கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தோடை இல்லாட்டி பிலாப்பழத்தோடை சாப்பிட வேணும். வெள்ளைமாப் புட்டுக்கு கட்டாயம் நண்டுக்கறி இருக்க வேணும். குரக்கன்மாப்புட்டுக்கு தேங்காய்ப்பூவும் சீனியும் போதும். வடமராட்சிப் பகுதியில் உழுத்தம்மாவில் பால்ப்புட்டு செய்வார்கள் அதன் சுவையும் சொல்லி வேலையில்லை.

எங்கள் வீட்டு மாமரத்தை நினைவுபடுத்திவிட்டீர்களே.

சோத்தோட தயிர் சேர்த்து சாப்பிடுவது ஓகே...புட்டோட யாராவது தயிர் சேர்த்து சாப்பிடுவார்களா :unsure:  :D

ஒருக்காச் சாப்பிட்டுப் பாக்கிறதுதானே ரதி. :rolleyes:

உவாக் சத்தி வருது... :icon_mrgreen:

நீங்கள் சாப்பிடாமலே எப்படி கூறலாம் சுபேஸ்?

சோத்தோட தயிர் சேர்த்து சாப்பிடுவது ஓகே...புட்டோட யாராவது தயிர் சேர்த்து சாப்பிடுவார்களா :unsure:  :D

ஊரில புட்டும் தயிரும் காலையில் வழக்கமான உணவு.வாழைப்பழமும் கலந்தால் இன்னும் சோக்கா இருக்கும்.

இங்க 'ஓட்ஸ்' அல்லது 'வீட்டாபிக்ஸ்' உடன் கொழுப்பில்லாத தயிரைக் கலந்து சாப்பிட்டாலும் அதே 'எபக்ட் ' கிடைக்கும். வெள்ளை இன நண்பர்கள் வேலையில் சாப்பிடுவார்கள்.

நானும் புட்டேடை பன்குளம் முட்டிதயிரும் சேத்து சாப்பிட்டனான் :lol::D :D .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மா புட்டு அவிக்கிறது "நீத்துப் பெட்டி"யிலை தான். சுப்பரா இருக்கும். அண்ணி அவிச்சு தாறது பில்டரிலை.

விதம் விதமா அம்மா அவிப்பா .. எனக்கு வெள்ளைப் புட்டு தான் பிடிக்கும். ஆனால் புட்டுக்கு எது என்றாலும் ருசி தான்.

வெள்ளைப்புட்டும், ஈரல் வறுவலும்,மாட்டிறைச்சிக்கறியும், முட்டைப் பொரியலும்  சொல்லி வேலையில்லை. :rolleyes:

மலேசியாவிலை கொஞ்சநாள் இருக்கும் போது பொடியளோடு சேர்ந்து அவித்தது புங்கையூரான் அண்ணா சொன்ன புட்டுத்தான். :)

புட்டுக்கு கத்தரிக்காய், உருளைகிழங்குப் பொரியல் அந்த மாதிரி. பால் புட்டும் அந்த மாதிரி

1985 களில் தனி எபாட்மெண்ட் எடுத்து இருந்தேன். 1990 வரைக்கும் அப்படித்தான். இதானால் எங்கள் ஊர் சாப்பாடுகளுக்கு சில வசதிகள் செய்து தயாரிக்க கற்றுக்கொண்டேன்.

1986 காலங்களில்  சனிக்கிழமை முழுவதும் மொன்றியல் டவுன் ரவுனில் சொப்பிங்க செய்வேன். ஒருமுறை THE BAY ல் ஒரு சுவாரசியமான பொருள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டேன்.  அமெரிக்கா வந்து சேரும் வரை நான் கேக் என்பதையே சுவைதிருக்காதாலால் அது என்ன என்று விளங்கவில்லை(இப்பொதும் விலத்த முடியாத இடங்களில் மட்டும்தான் கேக் சாப்பிடுவேன்). பலர் அதை இயக்கி பார்ப்பதை பார்த்துக்கொண்டிருந்தேன். மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. இது வரை அடிக்கடி கஸ்டப்படும் கடின அலுவலுக்கு சரியான முடிவு.

அதன் பக்கத்தில் 3X2X2 அடி அழகிய பெட்டிகள் வைக்கப்படிருந்தன. விலை $450 என்றார்கள் அத்துடன் பல பாகங்களும் சேர்த்திருந்தன. உடனே BAY கிறடிட் காட்டில் கட்டிவிட்டு சப்வேயில் இழுத்தும்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். சென்ற வருடம் புதிசு வாங்கும் வரை அதையேதான் புட்டு குழைக்க பாவித்தேன்.

அதுதான் இது http://www.ebay.com/itm/Oster-Kitchen-Center-Designer-mixer-blender-food-processor-10-speed-/121075752362?pt=Small_Kitchen_Appliances_US&hash=item1c30ad5daa.

அதில் புட்டவிக்க தேவயானது இந்த dough maker மட்டுமே.

399657532fpstsm5101.jpg

கொதிக்க கொதிக்க ஸ்ரிமரில் இருந்து அவித்த வெள்ளை மாவை போலுக்குமாற்றி அதனுடன் சிவப்பு அரிசிமாவையும் கலந்து கொதி நீரையும் ஊற்றி புட்டு ஆக்குவேன். ஒரு கிழமைக்கு தேவையான புட்டை 8-10 நிமிடங்களில் நனறாக கலந்துதரும்.

எனக்கும் புட்டு நன்றாக நீர்த்தாக இருக்க வேண்டும். குழைக்கும் போது அளவுக்கதிகம் நீரைவிட்டால் புட்டு டப்புக்கட்டிகளாவிடும். எனவே மிதமான கொதி நீருடன் தயார் செய்து அவித்து ஆறவிட்டு விட்டு குறைந்தது ஒரு நாளுக்கு குளிர்சாதன பெட்டியில் போட்டுவிடுவேன். மறுநாள் எடுக்கும் பொது அது உலர் புட்டாக இருக்கும். அளவான நீர் பணிக்கி திரும்ப ஒரு தடவை அவிய வைப்பேன். இப்போது தும்பை பூ போல துவளும் அதே நேரம் நன்றாக நீர்த்த புட்டு வரும். உடனேயே உருளைகிழங்கு, கத்தரிக்காய், சிவப்பு வெங்காயம், கறிவேப்பிலை எல்லாம் போட்டு புட்டு பிரியாணி செய்துவிடுவேன். எனது வீட்டில் யாரும் புட்டு சாப்பிடுவதில்லை என்பதால் இன்றும் அப்படி செய்யும் புட்டுடன் ஒரு கிழமை கொண்டாட்டம் தொடரும்.

குழல் புட்டு அடிக்கடி செய்வதில்லை. மலையாளத்து உலோக குழல்தான் பாவிப்பது. ஆனால் அவர்கள் தந்த "செம்பு பானையை" எப்பவோ தூக்கி எறிந்து விட்டேன். குழலில் அவிக்கும் போது எனது பிறெஸர் குக்கரைத்தான் பாவிப்பேன். அதிலும் ஒரு சுவராசியம் தான். பிறெச குக்கரை பாவித்தால் ஒவ்வொரு 3-4 நிடங்களுக்கு ஒரு முறை ஒரு குழல் அவிந்து விடும். (இப்போது விலையாகும் சில பிறெச குக்கர்களில் மேலே ஆவி வெளியேரும் Jet சரியாக இல்லை. இவை மலையாளத்து உலோக புட்டுக்குழலுடன் சேரமட்டா)

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பிட்டும் எதாவது ஒரு குழம்பும் முட்டடைப்பொரியல் சின்ன வெங்காயம் பச்சை மிழகாய் சேர்த்து நல்லெண்ணையில் பொரித்து சாப்பிட்டால் ஆகா எழுதும் போதே keyboard குழம் அகிட்டுதே :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

நான் அலுமினியப் பிட்டுக் குழல்தான் வைத்திருக்கிறேன். இதுகும் இரண்டு மூன்று நிமிடங்களில் அவிந்துவிடும். சில்வர் குழல் பிட்டு களியாக

வந்துவிடும். ஈழத்திலிருந்து மூங்கில் பிட்டுக்குழல் எடுத்து வைத்திருந்தேன். நான்காவது தடவை அவிக்க குழல் வெடித்துவிட்டது. ஏனென்று

தெரியவில்லை. அதன்பின் அதைப் பாவிப்பதில்லை.

அம்மா புட்டு அவிக்கிறது "நீத்துப் பெட்டி"யிலை தான். சுப்பரா இருக்கும். அண்ணி அவிச்சு தாறது பில்டரிலை.

விதம் விதமா அம்மா அவிப்பா .. எனக்கு வெள்ளைப் புட்டு தான் பிடிக்கும். ஆனால் புட்டுக்கு எது என்றாலும் ருசி தான்.

வெள்ளைப்புட்டும், ஈரல் வறுவலும்,மாட்டிறைச்சிக்கறியும், முட்டைப் பொரியலும்  சொல்லி வேலையில்லை. :rolleyes:

மலேசியாவிலை கொஞ்சநாள் இருக்கும் போது பொடியளோடு சேர்ந்து அவித்தது புங்கையூரான் அண்ணா சொன்ன புட்டுத்தான். :)

நான் நீத்துப் பெட்டி கூட வைத்திருக்கிறேன். அனால் எப்பவாவதுதான் அவிப்பது. ஏனெனில் அதைக் கழுவுவது கடினம்.

பிட்டும் எதாவது ஒரு குழம்பும் முட்டடைப்பொரியல் சின்ன வெங்காயம் பச்சை மிழகாய் சேர்த்து நல்லெண்ணையில் பொரித்து சாப்பிட்டால் ஆகா எழுதும் போதே keyboard குழம் அகிட்டுதே :D

நல்லெண்ணையில் கத்தரிப் பிஞ்சுடன் எண்ணைக் கறி செய்து சாப்பிட்டுப் பாருங்கள் பிட்டுடன் வேறு எதுவும் தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு புட்டுப் பிரியன் ஆனால் உடம்பு வைக்கும் என்பதால் இரவில் சாப்பிட கொஞ்சம் தயக்கம். மனிசி அந்த மாதிரி புட்டவிக்கும். கூடுதலாக ஸ்டீமர் தான் பாவிப்பது. அலுமினிய குழலும் இடைக்கிடை பாவிப்பாள். ஒருமுறை விருந்தினர்களுக்கு புட்டு நைட் வைத்தோம். புட்டு, கோழிக்கறி, டெவில்ட் சிக்கின், முட்டை ஒம்லட், உருளைக்கிழங்கு சொதி எண்டு அந்த மாதிரி இருந்திச்சு. புட்டுடன் பாலும் சீனியும் எனக்கு பிடிக்கும். அதிலும் ஊரிலே அரிசிமாப் புட்டுடன் பாலாடையுடன் சேர்ந்த பாலை கொஞ்சம் சீனி சேர்த்து சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும். புட்டுடன் தேங்காய்ப் பாலும் சேர்த்து
சாப்பிடலாம். நீங்கள் யாராவது தேங்காய்ப் பாலுடன் சாப்பிட்டிருக்கிறீர்களா?

556208_353364174732379_1632497474_n.jpg
 
599567_353363904732406_1816517412_n.jpg
 
304461_393314907403972_606296359_n.jpg
 
290305_388361434565986_145147940_o.jpg
 
புட்டுக்கு ஏற்ற இன்னொரு அடுக்கணி வெந்தைய குழம்பு, பொரிச்ச மோர் மிள்காய், வடகம், மோர். சனிக்கிழமைகளில் தான் அது முடியும். நிறைய வெங்காயம், தக்காழிம்பழம், ஒரு உருளை கிழங்கும் போட்டு வெந்த குழம்பு வைப்பதுண்டு. உள்ளியை வெங்காயத்துடனே போட்டு பொரித்தால் சுவையாக இருக்கும். வெந்த குழம்பு செய்தால்  குறைந்தது ஒரு நாளாவது fridge ல் இருக்க வேண்டும். இல்லையெல் அதன் உண்மையான சுவையை புட்டில் காண முடியாது. வெந்த குழம்பில் போடும் கறிவேப்பிலை ஒரு நாளுக்கு மேலாக சாப்பிட்ட கையில் மணக்கும்.  :D

நானும் ஒரு புட்டுப் பிரியன் ஆனால் உடம்பு வைக்கும் என்பதால் இரவில் சாப்பிட கொஞ்சம் தயக்கம். மனிசி அந்த மாதிரி புட்டவிக்கும். கூடுதலாக ஸ்டீமர் தான் பாவிப்பது. அலுமினிய குழலும் இடைக்கிடை பாவிப்பாள். ஒருமுறை விருந்தினர்களுக்கு புட்டு நைட் வைத்தோம். புட்டு, கோழிக்கறி, டெவில்ட் சிக்கின், முட்டை ஒம்லட், உருளைக்கிழங்கு சொதி எண்டு அந்த மாதிரி இருந்திச்சு. புட்டுடன் பாலும் சீனியும் எனக்கு பிடிக்கும். அதிலும் ஊரிலே அரிசிமாப் புட்டுடன் பாலாடையுடன் சேர்ந்த பாலை கொஞ்சம் சீனி சேர்த்து சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும். புட்டுடன் தேங்காய்ப் பாலும் சேர்த்து

சாப்பிடலாம். நீங்கள் யாராவது தேங்காய்ப் பாலுடன் சாப்பிட்டிருக்கிறீர்களா?

599567_353363904732406_1816517412_n.jpg

304461_393314907403972_606296359_n.jpg

சாப்பாடு மட்டுமில்ல உங்கள் வீட்டு டைனிங் றூம், பமிலி றூம் எல்லாம் வடிவாய் இருக்கு. நன்றி படம் இணைத்ததற்கு!

புட்டுக்கு ஏற்ற இன்னொரு அடுக்கணி வெந்தைய குழம்பு, பொரிச்ச மோர் மிள்காய், வடகம், மோர். சனிக்கிழமைகளில் தான் அது முடியும். நிறைய வெங்காயம், தக்காழிம்பழம், ஒரு உருளை கிழங்கும் போட்டு வெந்த குழம்பு வைப்பதுண்டு. உள்ளியை வெங்காயத்துடனே போட்டு பொரித்தால் சுவையாக இருக்கும். வெந்த குழம்பு செய்தால்  குறைந்தது ஒரு நாளாவது fridge ல் இருக்க வேண்டும். இல்லையெல் அதன் உண்மையான சுவையை புட்டில் காண முடியாது. வெந்த குழம்பில் போடும் கறிவேப்பிலை ஒரு நாளுக்கு மேலாக சாப்பிட்ட கையில் மணக்கும்.  :D

வசதியாயின் சுவையான வெந்தய்க் குழம்பு எப்பிடி செய்கின்றனீர்கள் என்று ம் எழுதுங்கோ மல்லை, சுமோவுக்கும், நிழலிக்கும் மிக உதவியாய் இருக்கும் :lol: ( பக்கத்து இலைக்குப் பாயசம் வேணுமப்பா :lol: )

  • கருத்துக்கள உறவுகள்

வசதியாயின் சுவையான வெந்தய்க் குழம்பு எப்பிடி செய்கின்றனீர்கள் என்று ம் எழுதுங்கோ மல்லை, சுமோவுக்கும், நிழலிக்கும் மிக உதவியாய் இருக்கும் :lol: ( பக்கத்து இலைக்குப் பாயசம் வேணுமப்பா :lol: )

மச்சி வெக்கப்படாம கேளுங்கோ உங்களுக்கில்லாத வெந்தயமா ?

மச்சி வெக்கப்படாம கேளுங்கோ உங்களுக்கில்லாத வெந்தயமா ?

மச்சிதான் பக்கத்து இலைக்கு சொதி இல்லை என்றிருக்கிறவே. நீங்களும் அதே துணிச்சலுடன் சொல்லியிருந்தால் போனால் போகுது ஒரு சட்டி குழம்பிலை  இன்னுமொரு மாங்காய் விழுகிறது என்று சொல்லி உங்களுக்கும் ஒரு சட்டி குழம்பு அனுப்பி வைத்திருக்கமாட்டேனா. :lol: :lol:

இருந்தாலும் இரண்டு பேருமே இரப்பானை பிடித்த பறை பிராந்துகள்தான். இனித்தன்னும் சும்மா பகிடி சேட்டை விளங்காதவர்களுக்காக உண்மையாக ஒரு வெந்தய குழம்பு வைத்துப் பார்த்துவிட்டு எழுதுகிறேன். அதற்கிடையில் யாரும் வந்து என்னை காப்பாத்தினாலும் பரவாயில்லை. :D

Edited by மல்லையூரான்

தும்பளையான் சொன்னதுபோல, எனக்கு சின்னன்ல பால் புட்டு ரொம்ப பிடிக்கும். நான் நினைக்கிறேன் தேங்காய்ப்பால், சீனி போட்டு தான் செய்வார்கள் என்று. அம்மா எப்பாவது இருந்திட்டு தான் செய்வா. இப்போ நினைச்சாலும் நாவூறுது.

குழல் புட்டும் பழைய மீன் கறியும் மாதிரி, அல்லது குழல் புட்டும் கூழாம் பிலாப்பழம் மாதிரி சுவையை நான் பார்த்ததில்லை. அவ்வளவு சுவை. இதை எழுதும்போதே வாயிலிருந்து வடிந்து விசைபலகை மேலே விழுகிறது வீணீர். :lol:

நான் புட்டும் கறிகளும் பற்றி எழுதியதில் முக்கியமான ஒன்று விடுபட்டுவிட்டது. அவர் தான் புட்டும் வாழைப்பழமும், சீனியும்.  புட்டில் வாழைப்பழம் (முக்கியமாக கதலி) போட்டு சீனியும் போட்டு குழைத்து (குழைக்கும் போது 5 விரல்களாலும் குழைக்க வேண்டும்) சாப்பிடும் போது இருக்கும் சுவையே தனி.

நானும் சிறு வயதில் பால்புட்டு சாப்பிட்டு இருக்கின்றேன். சிலர் சுறாப் புட்டும் செய்வார்கள். இங்கு கனடாவில் என் உறவினர் ஒருவர் Spinach கீரைய அரிஞ்சு புட்டு மாவோடு கலந்து கீரைப் புட்டு செய்து சாப்பிடுவார்.

புடு சாபிடும்பொது விக்காமல் இருக்க தண்ணி குடிக்கவெணும்.இல்லாட்டி புட்டு விக்க்யே ஆக்கள் செத்துபொயிருக்கினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.