Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தீர்மானத்திலுள்ள வார்த்தைகளே இந்தியாவின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும்' - மன்மோகன் சிங்

Featured Replies

'தீர்மானத்திலுள்ள வார்த்தைகளே இந்தியாவின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும்'
புதன்கிழமை, 06 மார்ச் 2013 23:33 


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கின்ற தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக உள்ளடக்கப்படுகின்ற  வார்த்தைகளே இந்தியாவின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

 

இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவிருக்கின்ற தீர்மானத்தை ஆதரிக்குமாறு தமிழக கட்சிகள் மற்றும் அமைப்புகள் கோரிக்கை விடுத்துவருக்கின்ற நிலையிலேயே இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60167-2013-03-06-18-04-59.html



Wording of resolution against Sri Lanka will decide India's stand, says PM



The Prime Minister today said that whether India votes against Sri Lanka when the top human rights body of the UN meets this month in Geneva will depend on the wording of the resolution that the United States plans to introduce.

 

Dr Manmohan Singh is under pressure from his ally, the DMK, to support the resolution which will focus on alleged war crimes by Sri Lankan defence forces as they defeated the Tamil Tiger rebels after a lengthy civil war.

 

Last month, new photos released by UK's Channel 4 suggested that the 12-year-old son of V Prabhakaran, the head of the Tamil Tigers,  had been executed in cold blood.  The Sri Lankan government has said the photos are morphed.  They will feature in a documentary that will screen in Geneva during the session of the UN Human Rights Council.

 

http://www.ndtv.com/article/india/wording-of-resolution-against-sri-lanka-will-decide-india-s-stand-says-pm-339118

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?????

 

ஆகா, மீண்டும் ஒருமுறை இந்தியா முதுகில் குத்தியிருக்கிறது.

 

உப்புச் சப்பில்லாத தீர்மானத்திலிருக்கும் சொற்களை இன்னும் குறைக்க வேண்டுமென்று இந்தியா கோருகிறதென்றால், அதன் நோக்கம் என்னவென்று தெளிவாகிறது.

 

தந்தையர் நாடும் தொப்புள்கொடி உறவும் எங்கே போனது ??

 

 

Edited by ragunathan

  • தொடங்கியவர்

தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்காவிட்டாலும் தீர்மானம் நிறைவேறும் சாத்தியங்கள் உள்ளன.

 

அதேவேளை காங்கிரஸ் மீள எழமுடியாத களமாக தமிழகம் மாறும்.

  • தொடங்கியவர்

கடந்த வருடம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் நடந்த வாக்களிப்பு

 

533643_10150693987079057_1352630011_n.jp

தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்காவிட்டாலும் தீர்மானம் நிறைவேறும் சாத்தியங்கள் உள்ளன.

 

அதேவேளை காங்கிரஸ் மீள எழமுடியாத களமாக தமிழகம் மாறும்.

இதுவே யதார்த்தமானது.

 

வாக்களிக்காமல் போனாலும் இந்த பிரேரினை வெல்லும் சாத்தியங்களே அதிகம்.

 

வாக்களிக்காமல் போனால் தமிழகத்தில் தோன்றும் அருவெறுப்பை சமாளிக்கவேண்டிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

தீர்மானத்தை இந்தியா எதிர்ப்பதும், அதனை ஏனையநாடுகளது ஆதரவுடன் நிறைவேறுவதுமிலேயே எமது வெற்றி தங்கியிருக்கின்றது. இதன்மூலம்," தமிழர்விரோததேசமாகிய" இந்தியாவின் கோரமுகத்தை வெளிக்கொண்டுவரமுடியும். தாய்த்தமிழகத்திலிருந்து காங்கிரசை, வேரோடும் வேரடிமண்ணோடும் புடுங்கி எறியும் கால அவகாசத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் அண்மிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது வரையும், பிரேரணையை நீத்துப்பூசணிக்காயாக்கும் இந்தியாவின் முயற்சி கை கூடவில்லைப் போல தான் உள்ளது!

 

அதை நீர்த்துப் போகச் செய்த பின்னர் அதற்கு இந்திய ஆதரவு கிடைப்பதிலும் பார்க்கப் பிரேரணை விவாதத்திற்கு வருவதே ஏற்றதாகும்!

 

இது இந்தியா என்ற நந்தியை உலகத்துக்குத் தெளிவாக அடையாளம் காட்டவாவது உதவக்கூடும்!

  • கருத்துக்கள உறவுகள்

தீர்மானத்தை இந்தியா எதிர்த்து வாக்களித்தால் அது தமிழர்களுக்கு நன்மையாகவும் இந்தியாவுக்கு சிக்கலாகவும் மாறும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா 3 விடயங்களை இதில் கணக்கிடுகிறது..

 

1. சிறீலங்காவின் மனித உரிமை மீறல்கள் முக்கியம் பெற்று ஒரு சர்வதேச விசாரணைக்கு உலக நாடுகள் வர நிர்ப்பந்திக்கப்பட்டால்.. அப்படி ஒரு நிலை வருமாயின்.. காஷ்மீர் மற்றும் மேற்கு மாநிலங்களில் இந்தியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் சர்வதேச ஊடுருவல்கள் இருக்கும் என்ற பயம்.. இந்தியாவிடம் நீண்ட காலமாக உள்ளது. அதனை ஈழத்தமிழர்களுக்காக ஹிந்திய தேசம் ஒரு போதும் விட்டுக்கொடுக்காது.

 

2. மனித உரிமை விடயங்களை முன்னிறுத்தி முற்று முழுதாக அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலின் பின்னால் இந்தியா சென்று கொண்டிருப்பதை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தொடர்ந்து அனுமதிக்கமாட்டார்கள். அது இந்தியாவின் பிராந்திய செல்வாக்கையும் அது சார்ந்து எழும் அதன் சர்வதேச முக்கியத்துவங்களையும் பாதிக்கச் செய்யும்.

 

3. சிறீலங்கா மீதும் இந்து சமுத்திரப் பிராந்தியம் மீதும்.. தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வது..!

 

இதை எல்லாம் ஹிந்தியா ஈழத்தமிழருக்காக.. றிஸ்க் எடுத்து மாற்றி அமைத்து வரும் என்பது வெறும் பகல் கனவே..! நாம் இந்தியாவிடம் இன்றும் அதிகமாக எதிர்பார்த்து ஏமாந்து போகக் காரணம்.. இந்தியா இது தான் என்பதை தெளிவாக வரையறுத்துக் கொள்ளாமையும் ஆகும்.

 

இந்தியாவின் இந்த நிலையை தமிழக மக்களால் மட்டுமே மாற்ற முடியும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

'தீர்மானத்திலுள்ள வார்த்தைகளே இந்தியாவின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும்' என்பதின் பொருள் தீர்மானத்தின் வார்த்தைப்பிரயோகம் இந்தியாவுக்கு ஏற்புடையதாக இல்லையென்றால் பொறுமையுடன் காத்திருந்து அதற்கு எதிராக வாக்களிப்போம் என்பதாக மட்டும் இருக்காது. வாக்கெடுப்புக்கு வருமுன்பே இந்தியா தனது அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின வார்த்தைப் பிரயோகத்தை(அதாவது இலங்கைக்கு ஒரு காலவரையறையை வழங்கி கட்டளையிடும், அந்த நாட்டை குற்றவாளியாக காண்பிக்கும், இந்தியாவை உடந்தை நாடாக இதற்குள் இழுத்துவிடும் தொனியில் அமையும் வார்த்தைகளை) மாற்றியமைப்பதற்கு இராஜதந்திர மற்றும் வேறு வழிமுறைகளில் முயற்சிப்போம் என்பதும் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஈழத்தமிழருக்கு எதிரான தனது வக்கிர அணுகுமுறையை மாற்றியமைக்காதபட்சத்தில் எமக்கு ஆயுத போராட்டத்தில் அடுத்தமுறை என்று ஒன்று இருந்தால் அந்தப் பயணம் இந்தியாவில் தான் ஆரம்பமாகும்.

இந்தியா ஈழத்தமிழருக்கு எதிரான தனது வக்கிர அணுகுமுறையை மாற்றியமைக்காதபட்சத்தில் எமக்கு ஆயுத போராட்டத்தில் அடுத்தமுறை என்று ஒன்று இருந்தால் அந்தப் பயணம் இந்தியாவில் தான் ஆரம்பமாகும்.

 

மதுரையில் இருக்கும் காங்கிரெஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பை அதிகபடுத்த சொல்லி இந்திய உளவுத்துறை அறிவிப்பு - தற்போதைய செய்தி  :-)

  • கருத்துக்கள உறவுகள்

அகோதா அவர்கள் இணைத்துள்ள அரசியல் உலகப் படத்துக்கு நன்றி. உண்மையில் இத்தகைய பங்களிப்புகள் இல்லாமல் இராசதந்திர் அரசியலை உருவாக்குவது கடினம். இன்று இந்திய நேரம் 9 - 10 மணிக்கு புதிய தலைமுறை நேர்படப்பேசு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். அதற்காக உங்கள் விவாதங்கலை வாசித்து உள்வாங்கிக்கொண்டிருக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஈழத்தமிழருக்கு எதிரான தனது வக்கிர அணுகுமுறையை மாற்றியமைக்காதபட்சத்தில் எமக்கு ஆயுத போராட்டத்தில் அடுத்தமுறை என்று ஒன்று இருந்தால் அந்தப் பயணம் இந்தியாவில் தான் ஆரம்பமாகும்.

 

நன்றி வணங்காமுடி.. மன்னர் காலத்திலேயே நடந்ததுதான். ஈழத்தமிழ் மன்னர்களுக்கு பிரச்சினை என்றால் சோழ, பாண்டிய மன்னர்களிடம்தான் போவார்கள்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் இந்தியாவின் பங்களிப்பில்லாமல் தீர்மானம் நிறைவேற்றப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன.இந்தியா வெல்லும் குதிரையில் காசைக்கட்ட தான் வழமையாக  முயலும்.அதே  நேரம் சிறிலங்காவையும் சமாதானப்படுத்த வார்த்தைகளின் கடுமையையாவது குறைக்க எத்தனிக்கும்.பீரிஸ் தொடக்கம் மகிந்த வரை டெல்கி சென்று ஏந்திய பிச்சைப்பாத்திரத்துக்கு இந்தியா கட்டாயம் தனது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்யும்.சிறிலங்காவுக்கு  ஆதரவாக வாக்களித்தால் காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டில் பெட்டியை கட்ட வேண்டியது தான்.(கடந்த தேர்த்தல் தோல்வி தொடரும்)

அகோதா அவர்கள் இணைத்துள்ள அரசியல் உலகப் படத்துக்கு நன்றி. உண்மையில் இத்தகைய பங்களிப்புகள் இல்லாமல் இராசதந்திர் அரசியலை உருவாக்குவது கடினம். இன்று இந்திய நேரம் 9 - 10 மணிக்கு புதிய தலைமுறை நேர்படப்பேசு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். அதற்காக உங்கள் விவாதங்கலை வாசித்து உள்வாங்கிக்கொண்டிருக்கிறேன்

திரியுக்கு பொருத்தமில்லாத பதிவு. 

 

புதிய தலைமுறை டி.வியில் தோன்றும் கருத்துக்கும் இந்த திரியும் தொடர் பில்லை. வலிந்த கருத்தொன்றை  செருகி அகுதாவின் உலகப்படத்திற்கு கருத்து வெளிவிடப்படிருக்கு. நோக்கம் எப்படியாவது இந்த திரிக்குள் உள் நுளைவதாகும்.

 

மன்மோகன் சிங் கின் அறிவிப்பு தொடர்பான திரி இது. அது பற்றி எதுவும் குறிப்பிட்டில்லை.

  • தொடங்கியவர்

"காஸ்மீரை வைத்து இந்தியாவை சிங்கள தேசம் வெருட்டலாம்"

 

- இது எவ்வளவு தூரம் சாத்தியம்?

- அப்படியே அதை செய்வது என்றால், ஏன் அதை பாகிஸ்தான் இவ்வளவு நாளும் செய்யவில்லை?

- சிங்களம் வெருட்டினாலும் அதனால் எவ்வாறான பாதிப்பை அது தனித்து உருவாக்க முடியும்?

- சிங்களத்திற்கு யார்? ஏன்? ஆதரவு தருவார்கள்?

தமிழ்நாட்டு தலைமை திராவிட கட்சிகளின் நிலைப்பாடு பற்றி இல்லாமல் இந்தியா இந்த முறை வாக்களித்தேயாக வேண்டும். அதே நேரம் தீர்மானத்தில் எதுவும் இல்லையாக இருந்தாலும்,தன்னால் இயன்றளவு தீர்மானத்தை இந்தியா குழப்பியே ஆகும். இதில் மன்மோகன் சிங் சொல்வது வழமையான அரசியல் கதை.

தி.மு.க வின் போக்கு காங்கிரசை கை கழுவுவதாக இருப்பதாக எப்போதோ தொடக்கம் ஆரூடங்கள் வெளிவருகின்றன. எனவே சிங்கின் கருத்து தி.மு.க வின் நிலைப்பாட்டை சாந்தம் செய்ய அல்ல.

மிரட்ட முடியுமாயின் இலங்கையை மிரட்டி 13ம் திருத்தத்தை நிறை வேற்றிவிட முயற்சிக்கிறாதா என்று கேட்டால் அதில் கங்கிரஸ் இப்போது தான் எவ்வளவு முட்டாள் என்பதை அறிந்து கொண்டுள்ளது. இலங்கை இந்தியாவை சந்திக்க தூதுக்குழு அனுப்ப முயன்ற போது சல்மான் அமெரிக்காவிடம் பேசிக்கொள்ளும் படி சொன்னதே தன்னால் இனி இ்ங்கையிடம் மண்டியிட்டு 13ம் திருத்தத்தை நிறைவேற்றி வைக்க முடியாது என்பதாலேயே.

இனி அதை பிரேரணைகளில் தான் அதை புகுத்த பார்க்கும். அதுவேதான் கடந்த யூனில் இலங்கைக்கான காலத்தவணை மீளாய்வு ஐ.நாவில் வந்த போது இந்தியா இ்லங்கையிடம் ஒரு பிரேரணையையும் வையாமல் 13ம் திருத்ததைதை மட்டும் கேட்டது.

 

மொத்தத்தில் சிங்கின் இந்த அறிக்கை அரசியல் பெறுமதி இல்லாதது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வணங்காமுடி.. மன்னர் காலத்திலேயே நடந்ததுதான். ஈழத்தமிழ் மன்னர்களுக்கு பிரச்சினை என்றால் சோழ, பாண்டிய மன்னர்களிடம்தான் போவார்கள்.. அது உதவி கேட்பது, நான் சொன்னது உதவி கொடுப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இத்தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்பதிலேயே இதன் வெற்றி தங்கியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இலங்கையைக் குற்றம் சுமத்தும் ஒரு தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதென்பது நடவாத காரியம். ஆக இந்தியா அத்தீர்மானத்தை ஒன்றில் எதிர்க்க வேண்டும் அல்லது தீர்மானத்தின் கடுமையை வலுவிழக்கச் செய்ய வேண்டும். அப்படி வலுவிழக்கச் செய்யும் பட்சத்தில் அத்தீர்மானம் கொண்டுவரப்படுவதின் நோக்கமே இல்லாதொழிக்கப்படுகிறது. ஆகவே தீர்மானத்தின் கடுமை அப்படியே காக்கப்பட்டு இந்திய எதிர்த்து வாக்களிப்பதால் இரண்டு விடயங்கள் எங்களுக்குச் சாதகமாகின்றன.

 

ஒன்று, தீர்மானம் எந்தத் தடையுமின்றின் நிறைவேற்றப்படுதல் அல்லது அதற்காக சிங்களத்தை வற்புறுத்தல்.

 

இரண்டு, இந்தியாவின் கோரமுகம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஏனைய வட மாநிலங்களுக்கும் தெளிவாகத் தெரிதல். இதன் மூலம் தமிழ்நாட்டில் ஒரு எழுச்சியைக் கொண்டுவரமுடியும்.

 

இந்தியா என்ன செய்கிறதென்று பார்க்கலாம். 

  • தொடங்கியவர்

cartoon_10_03_2013.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.