Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் 17 வயதுச் சிறுமிக்கு எயிட்ஸ் - அதிர்ச்சித் தகவல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

v-aidsnewsjaffna.jpg

யாழ் நகர்ப்பகுதியில் 17 வயதுச் சிறுமிக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாக போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

யாழில் நாள் ஒன்றுக்கு சராசரியாக தன்னை 3 ஆண்கள் பாலியல் தொடர்பு கொண்டதாக குறிப்பிட்ட சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

வன்னியில் தாய், தந்தையை இழந்த இச் சிறுமியை அழைத்து வந்த பெண் யாழ் நகருக்கு அண்மையில் தனது வீட்டில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகத் தெரியவருகின்றது. 

இதில் அதிர்ச்சி அடைய வேண்டிய சில முக்கிய விடயங்கள் 

குறித்த சிறுமியை தொடர்பு வைத்த பல நூற்றுக் கணக்கான ஆண்களின் நிலை என்ன??? 

இந்த ஆண்களால் ஏனைய பெண்களுக்கும் எயிட்ஸ் பரவும் ஆபத்தை எவ்வாறு தடுப்பது? 

சிறுமியுடன் தொடர்பு கொண்ட குடும்பஸ்தர்களின் மனைவிகளுக்கும் , அவர்களின் வயிற்றில் வளரும் கருவுக்கும் ஏற்படப் போகும் ஆபத்துக்கள் என்ன? 

இவ்வாறு தவறான முறையில் உறவு கொண்டவர்கள்  இந்தச் செய்தியை அறிந்து யாழ் போதனா வைத்தியசாலையை நாடி வந்தால்  யாழ் போதனா வைத்தியசாலை சரியான முறையில் அவர்களை பரிசோதனை செய்யும் அளவில் இருக்கின்றதா?? 

நாம் அறிந்த வகையில் யாழ் போதனா வைத்தியசாலைப் பிரிவில் எயிட்ஸ் சோதனைப் பிரிவு செயலிழந்த நிலையிலேயே காணப்படுகின்றது.  இந்தச் சிறுமியின் விடயமும் சிறுமி கர்ப்பம் தரித்திருந்த வேளையே அறியப்பட்டது. அதுவும் இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பபட்டே சோதனை செய்யப்பட்டது. 

ஆகலே யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் இவ்வாறான செயற்பாட்டிக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது??? 

குறிப்பிட்ட சிறுமி தொடர்பாகவும் யாழ்ப்பாணத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆண்கள் தொடர்பாகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய தகவல்கள் இன்னும் சில நாட்களில் நாம் இங்கு தரவிருக்கின்றோம். காத்திருங்கள்.

 
 
  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே...இதனால் எத்தனை அப்பாவிகள் பாதிக்கப்படப்போகிறார்கள்...ஒரு ஜந்து நிமிடத்துக்காக வாழ்க்கையையே அடகுவைக்கும் மூடர்கள் புரிந்துகொள்வார்களா..?

  • கருத்துக்கள உறவுகள்

எமக்காக ஒரு அரண் இருந்தபோது இப்படியான செய்திகள் வருவதில்லை

 

எல்லாவற்றையும் இழந்து இப்போது இந்த நிலையில் 

நாங்கள் இருப்பது வருந்தத்தக்க விடயம்   

  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட வேகமாக ஒரு சமூகத்தை வேறு எதனாலும் அழிக்க முடியுமா..? யுத்தத்தால் அழிந்த நாம்..இப்பொழுது இவற்றினாலும் அழிகிறோம்..ஒன்று பத்தாகும்..அந்த பத்து நூறாகும்...நூறு நாளை ஆபிரிக்கா போல் லட்சமாக எவளவுகாலமாகும்..? போதிய விழிப்புணர்வு இல்லாவிட்டால் ஈழத்தமிழன் என்ற இனம் வேகமாக அழிந்துபோனதற்கு இதுகூட ஒரு காரனமாகிவிடலாம்.. :(

  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட வேகமாக ஒரு சமூகத்தை வேறு எதனாலும் அழிக்க முடியுமா..? யுத்தத்தால் அழிந்த நாம்..இப்பொழுது இவற்றினாலும் அழிகிறோம்..ஒன்று பத்தாகும்..அந்த பத்து நூறாகும்...நூறு நாளை ஆபிரிக்கா போல் லட்சமாக எவளவுகாலமாகும்..? போதிய விழிப்புணர்வு இல்லாவிட்டால் ஈழத்தமிழன் என்ற இனம் வேகமாக அழிந்துபோனதற்கு இதுகூட ஒரு காரனமாகிவிடலாம்.. :(

வட கிழக்கில்  மகிந்தவின் வசந்தம் வீச ஆரம்பித்திருக்கின்றது

ஒட்டுக்குழுக்களும் சிங்கள இனவெறி ராணுவமும்

அகற்றப்படும் வரை  இப்படித்தான் வட கிழக்கில்  வசந்தம் வீசும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட கிழக்கில்  மகிந்தவின் வசந்தம் வீச ஆரம்பித்திருக்கின்றது

ஒட்டுக்குழுக்களும் சிங்கள இனவெறி ராணுவமும்

அகற்றப்படும் வரை  இப்படித்தான் வட கிழக்கில்  வசந்தம் வீசும்

வாத்தியார் இப்படி போட்டிருக்கலாம்

 

 

வட கிழக்கில்  மகிந்தவின் வசந்தம் நாற ஆரம்பித்திருக்கின்றது
ஒட்டுக்குழுக்களும் சிங்கள இனவெறி ராணுவமும்
அகற்றப்படும் வரை  இப்படித்தான் வட கிழக்கில்  வசந்தம் நாறும் 
  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியின் நம்பகத்தன்மை என்ன? உதயன், வலம்புரி போன்றவற்றில் வந்ததா?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் வெறும் தேச விடுதலைக்காக மட்டும் போராடி இருக்கவில்லை. ஒரு இனத்தின் ஒட்டுமொத்த இருப்பையும் தீர்மானிக்கும் சக்திகளாக வழிகாட்டிகளாக அவர்கள் இருந்துள்ளனர்.

 

நாங்கள் யாழ் இந்துவில் விடுதலைப்புலிகளின் ஒத்துழைப்போடு.. மக்கள் மத்தியில் எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை.. எயிட்ஸ் இல்லாத காலத்திலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கொண்டு வந்து தராதிருக்க மக்களை விழிப்புணர்வூட்டிய நிகழ்வுகளில் மாணவர்களாகப் பங்கேற்றிருக்கிறோம்.

 

ஆனால் இன்று.. அன்று நாம் எம் மக்களை எந்தக் கொடிய வியாதியில் இருந்து காப்பாற்ற அக்கறை காட்டினமோ.. அது இன்று சர்வ சாதாரணமாக பரவ விடப்பட்டுள்ளது.

 

இது கண்டு.. யாழின் கல்விச் சமூகமும் கண்மூடிக் கிடக்கிறது..??! அரசியல் தலைமைகளும்.. நிர்வாகத் தலைமைகளும் சீரழிந்து போய்.. நிற்கின்றன. இராணுவ ஆக்கிரமிப்பும்.. இனத்துவேசமும் பேரினவாதமும் மதவாதமும் தலைவிரித்தாடுகிறது. அது எம் மக்களை பல வழிகளிலும் சீரழிக்கிறது..! இதில் இருந்து மீள வேண்டின்.. யாழ் கல்விச் சமூகம் எமது மக்களை வழிநடத்தும் பொறுப்பை தட்டிக்கழிக்காது உட னே செய்ய முன்வர வேண்டும்..!

 

அப்பாவிப் பெண்களை தவறான வழிக்கு இட்டுச் செல்பவர்கள் யாராக இருந்தாலும்.. அவர்களை எதிரியும் அவனுக்கு சார்ப்புள்ளவர்கள் காத்து நின்றாலும் அவர்களைத் தண்டிக்க கிடைக்கக் கூடிய சந்தர்ப்பத்தில்.. சட்டத்தையோ.. இல்லை அதிகாரத்தையோ யாரும் பயன்படுத்தாமல் விடக்கூடாது. தமிழ் மக்கள் மீது அக்கறை உள்ள உள்ளூர் ஊடகங்கள் இதில் முனைப்போடு செயற்பட்டால்.. நிச்சயம் எம் மக்களை இவ்வாறான பேரழிவுகளில் இருந்து காக்கலாம்.

 

ஒரு சிறிய இன மக்களாக உள்ள நாம்.. இப்படியான தொற்று வியாதிகளை எமக்குள் பரப்பின் நாமே.. அதற்கு இரையாகி வீழ்ந்துவிடும் நிலை ஏற்படும். இது சிங்களப் பேரினத்தின் இன்னொரு இன அழிப்பின் வடிவம். இதில் எமது மக்கள் அறியாமல் தம்மை அழிக்கும் நிலை தோன்றியுள்ளமை.. வருந்தத் தக்கது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
மக்கள் விழிப்புணர்வாக இருக்கும் வரை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.வறுமையில் பல பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் அல்லது ஈடுபடுத்தப்படுகிறார்கள்.பாதுகாப்பு உறை இல்லாமல் உடலுறவு கொள்ளப்படும் போது எய்ட்ஸ் நோய் இலகுவாக பரவுகிறது.
 
விபச்சாரத்தை இல்லாதொழிப்பது கடைசிக்கட்டமாகவும் (கடினமானதால்)பாதுகாப்பான உடலுறவு முதற்படியாகவும் செய்ய சமூக தொண்டர் நிறுவனங்கள் முன் வர வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

பணம்! பணம்!! பணம்!!

 

இது தானே, தமிழ் சமூகத்தை இப்போது வழி நடத்துகின்றது?

 

மருத்துவர், பொறியியலாளர், உயர்ந்த உத்தியோகம்!

 

இவை அனைத்துக்கும் பின்னாலிருப்பது, சேவை மனப்பான்மை எனில், நான் பெருமைப்படுவேன்!

 

ஆனால், இதில் மறைந்திருப்பதும் வெறும் சுயநலமே! :wub:

 

சுயநலம் என்பது மனிதனின் அடிப்படை என்றாலும், எமது சமூகத்தில் அது பொதுநலமாக விரிவது மிகவும் குறைவு! ஆக மிஞ்சிப்போனால், அந்தப் பொதுநலமானது, கோவில் கோபுரங்களாகவோ அல்லது தேர்முட்டிகளாகவோ அல்லது அன்னதானங்களாகவோ தான் விரிவதுண்டு!

ஒரு வாசகசாலையாகவோ, மருத்துவ மனையாகவோ விரிவது கிடையாது!  

 

அந்தக் குழந்தைக்காக அனுதாபப்படும் அதேவேளை, முதன் முறையாக, மரண  தண்டனையுடன் ஒத்துப் போகின்றேன்! இந்தப் பெண்ணை, இந்த நிலைக்குக் கொண்டுவந்த அந்தப் பெண்ணுக்கு, அந்தத் தண்டனையே பொருத்தமானது!

 

ஆனாலும், எம்மைத் தவிர வேறு எவரும் இதற்குத் தீர்வு காணவும் முடியாது!

 

உடைந்துபோன சமுதாய அமைப்பைத் திரும்பக் கட்டி எழுப்புவதாயின், இராணுவமும், அதையண்டிப் பிழைக்கும் ஒட்டுக்குழுக்களும் அகற்றப்பட வேண்டும்!

 

இல்லாவிட்டால், இந்த இன அழிவிலிருந்து ஆண்டவனாலும், எம்மைக்காப்பாற்ற முடியாது! :wub:

 வரலாற்றில் முதல் முறையாக வடக்கிற்கு 1350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம அண்மையில் கூறியிருந்தார்.  வன்னிப் பெருநிலத்திலுள்ள பிரதான நகரங்களில் தொழிலற்ற பெண்களின் தொகை குறைந்து வருவதைக் காணமுடிகின்றது. வீட்டு வேலைகளுக்கோ அல்லது சமைப்பதற்கோ பெண்களை வேலைக்கமர்த்த முடியாதபடிக்கு அங்கே வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஒப்பீட்டளவில் பரவாயில்லாத சம்பளத்தை வழங்கும் தொழில் துறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

 

உதாரணமாக பண்ணைகளில் வேலைசெய்யும் பெண்களுக்கு சுமாராக 18,000 ஆயிரம் கொடுக்கப்படுகிறது. இது தவிர வீதி திருத்தப்பணிகளிலும் பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன.

துரித அபிவிருத்தியின் மூலம் பணப்புழக்கமுடைய ஒரு மத்திய தர வர்க்கத்தை உருவாக்கி அதனூடாக யுத்தத்தால் உண்டாகிய கூட்டுக் காயங்களை சுகப்படுத்தலாம் அல்லது மறக்கச் செய்யலாம் அல்லது மேவிச் செல்லலாம் என்று அரசாங்கம் சிந்திக்கின்றது. விடுதலைப்புலிகளின் காலத்தில் இருந்ததைப் போலவே அபிவிருத்திநடவடிக்கைகள் நகரங்களை மையமாகக் கொண்டு நிகழ்வதாகவும் கிராமங்கள் இதில் கைவிடப்படுவதாகவும் விமர்சனங்கள் உண்டு.

 

பெருஞ்சாலைகளின் மருங்கில் காணப்படும் சிறிய மற்றும் பெரிய பட்டினங்கள் யுத்தத்தின் பின்னரான காட்சியறைகளாக கட்டியெழுப்பப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் உண்டு. இச்சிறிய மற்றும் பெரிய வன்னிப் பட்டினங்களில் மிகக் குறைந்தளவே நிதி புழக்கம் இருப்பதாகவும் பெரும்பாலான வணிகர்கள் கடனில் ஓடுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஒரு சமூகத்தின் கூட்டுக் காயங்களை காப்பெற் வீதிகளால் மூடிப் போர்க்க முடியாது என்று தீவிர தமிழ்த் தேசியவாதிகள் விமர்ச்சிக்கி;றரர்கள்.

 

 

- நிலாந்தன்:   http://www.yarl.com/forum3/index.php?showtopic=118682

 

 



வெளிநாடு பணம் ..... : http://www.yarl.com/forum3/index.php?showtopic=118591

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே...இதனால் எத்தனை அப்பாவிகள் பாதிக்கப்படப்போகிறார்கள்...ஒரு ஜந்து நிமிடத்துக்காக வாழ்க்கையையே அடகுவைக்கும் மூடர்கள் புரிந்துகொள்வார்களா..? இனி தமிழினத்தை அழிக்க இராணுவம் தேவையில்லை. காலப் போக்கில் எயிட்ஸ் நோயே எங்களை அழிக்கும்.

குறிப்பிட்ட சிறுமி தொடர்பாகவும் யாழ்ப்பாணத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆண்கள் தொடர்பாகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய தகவல்கள் இன்னும் சில நாட்களில் நாம் இங்கு தரவிருக்கின்றோம். காத்திருங்கள்.

 

 
காத்திருங்கள் விரைவில் அதிர்ச்சி விருந்து படைக்கவிருக்கின்றார்கள்.
 
 

ஒட்டுக்குழுக்களும் சிங்கள இனவெறி ராணுவமும்

அகற்றப்படும் வரை  இப்படித்தான் வட கிழக்கில்  வசந்தம் நாறும் 

 

 

இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்பதை எல்லோரும் அறிவார்.

 

 

யாழ்ப்பாணத்தில் சாதராணமாக வெளிப்படையாக ஒரு பெண்ணோ ஆணோ காண்டம் வாங்குமளவுக்கு அறிவுபூர்வமான நாகரீகம் கிடையாது. இரண்டு காதலர்கள் பார்க்கில் ஒன்றாக இருப்பதையே ஒளிந்து நின்று படமெடுத்து இணையங்களில் ஏற்றி கலாச்சாரம் அழியுது என்று குய்யோ முறையே என்று கூச்சலிட்டு சுய இன்பம் தேடும் நிலையில் காண்டம் எங்கே வாங்குவது? அதில்தான் எத்தனை தடைகள்? பாதுகாப்பற்ற ரகசியமான பாலியல் நடத்தை பாரிய சமூக அழிவை ஏற்படுத்தத்தான் போகின்றது. எந்த ஒரு செயலுக்கும் விழைவு இருக்கின்றது அந்தவகையில் சமூக இறுக்கமே சுருக்கு கயிறாக மாறுகின்றது.

 

 

 நெடுந்தீவைச் சேர்ந்த 13 வயதுடைய ஜேசுதாசன் லக்சினி கடந்த 3ஆம் திகதி கொடூரமான பாலியல் வன்புணர்வின் பின்னர் கல்லால் குத்தி தலை சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

 

இந்தப் படுபாதகச் செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஈ.பி.டி.பியின் முன்னாள் உறுப்பினர் என்று கூறப்படும் கந்தசாமி ஜெகதீஸ்வரன் (வயது 31) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=99460

சிங்கள இராணுவ பிரசன்னமும் இவ்வாறான சமூக பிரச்சனைகள் வளர காரணமாகின்றது!

 

482823_10152133451769057_652663431_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பணம் பலபேரின்  வாழ்க்கையை வாட்டி வதைக்கிறது உதாரண்ம் வேலை இல்லை
அம்பாறை சிங்கள பகுதியில் தனது குழந்தையின் மருத்துவ செலவுக்காக விபச்சார விடுதி நடத்திய தாய் [மாதம் மாதம் இரத்தம் மாற்றல்]அண்மையில் பொலிசாரால் பிடிக்கப்பட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

----

வன்னியில் தாய், தந்தையை இழந்த இச் சிறுமியை அழைத்து வந்த பெண் யாழ் நகருக்கு அண்மையில் தனது வீட்டில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகத் தெரியவருகின்றது. 

-----

 

தாய், தந்தையை... இழந்த சிறுமியை அழைத்து வந்து, தனது வீட்டில் வைத்து விபச்சாரம் நடத்திய பெண்மணிக்கு, எவ்வளவு கொடூரமான இதயம் இருந்திருக்க வேண்டும் :o . இப்படியும், பணம் சம்பாதிக்கத்தான் வேண்டுமா? :huh:

யாழ்பாணத்தில் எயிட்ஸ் ,புலம் பெயர்ந்த தேசத்தில் அனைத்து வியாதியும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத்தில் சாதராணமாக வெளிப்படையாக ஒரு பெண்ணோ ஆணோ காண்டம் வாங்குமளவுக்கு அறிவுபூர்வமான நாகரீகம் கிடையாது. இரண்டு காதலர்கள் பார்க்கில் ஒன்றாக இருப்பதையே ஒளிந்து நின்று படமெடுத்து இணையங்களில் ஏற்றி கலாச்சாரம் அழியுது என்று குய்யோ முறையே என்று கூச்சலிட்டு சுய இன்பம் தேடும் நிலையில் காண்டம் எங்கே வாங்குவது? அதில்தான் எத்தனை தடைகள்? பாதுகாப்பற்ற ரகசியமான பாலியல் நடத்தை பாரிய சமூக அழிவை ஏற்படுத்தத்தான் போகின்றது. எந்த ஒரு செயலுக்கும் விழைவு இருக்கின்றது அந்தவகையில் சமூக இறுக்கமே சுருக்கு கயிறாக மாறுகின்றது.

கவலைப்படாதேங்கோ!.....ஆமிக்காறங்கள் இப்ப டசின்கணக்கிலை பொக்கற்றுக்கை வைச்சுக்கொண்டுதான் திரியிறாங்களம்.....அவங்களுக்கும் எயிட்ஸ் பயம் வந்திட்டுது போலை....அவர்களுக்கும் விழிப்புணர்வு வந்துவிட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

கவலைப்படாதேங்கோ!.....ஆமிக்காறங்கள் இப்ப டசின்கணக்கிலை பொக்கற்றுக்கை வைச்சுக்கொண்டுதான் திரியிறாங்களம்.....அவங்களுக்கும் எயிட்ஸ் பயம் வந்திட்டுது போலை....அவர்களுக்கும் விழிப்புணர்வு வந்துவிட்டது.

 

கடவுளே, நல்ல காலம் இது அப்ப சிங்கள எட்ஸ் இல்லை. ...தமிழ் எட்ஸ்தான் -ஒட்டுக்குழு என்றால் பிரச்சனை தான் எண்டாலும், தமிழ் என்று மனஆறுதல் படவேண்டியதுதான்.

30 வருடம் யுத்தம் நடந்த நாட்டில் என்ன என்ன அவலங்கள் வரும் என்று, 30 வருடம் போர் செய்யும்போது தெரியவேண்டும்,அப்படியில்லை என்றால் போர் முடிந்த பிறகாவது தெரிய வேண்டும். இல்லை, இன்னும் அந்த யுத்தத்தின் நேரடி, மறைமுக விளைவுகளை இன்னமும் யுத்தத்தினால்தான் வெல்ல வேண்டும் என்றால்...இன்னும் இன்னும் அதிர்ச்சி தகவல்கள் வருவது தவிர்க்க முடியாது, அதை (எழுதி??) வித்து காசாக்குவதையும் தவிக்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.