Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தின் சிறப்புப் பட்டிமன்றம் கருத்துகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தைரியலஷ்சுமி தைரியம் பெற்று மேடைக்கு வந்து.. பட்டிமன்றம் இப்போதைக்கு தொடங்காது போல இருக்குது. எனவே.. ரசிகர்கள் பேசாம.. புலி - மான் வேட்டை சோங்.. கேட்டிட்டிட்டு சா  பார்த்திட்டு.. இனிய சொப்பனம் கண்டு கொண்டு.. நித்தா கொள்ள வேண்டியது தான். :lol:

 

http://youtu.be/rg77ahQTuuE

  • Replies 591
  • Views 31.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

dog-1_zps9779ac47.jpg

 

வணக்கம். யாழ்கள சிறப்பு பட்டி மன்றத்திற்காக  அதில் கலந்து கொள்(ல்)பவபர்களை  சிறப்பு  செவ்வி காண்பதற்காக  புலநாய்  இதோ  ....யாருமே கை தட்டேல்லையா  பரவாயில்லை.  புலநாய் முதலதவதாக "புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே       

என்கிற அணித்தலைவர் இசைக்கலைஞனை செவ்வி காண்கிறது.

 

புலநாய்....வணக்கம் இசைக் கலைஞன் அவர்களே  இந்த பட்டி மன்றத்தை பற்றி உங்கள் கருத்து என்ன??

 

இசை...சே இப்பிடி ஒரு நாய் என்னை பாத்து கேள்வி கேக்கிறதை விட ஊரிலையே இருந்திருக்கலாம்.

 

புலநாய்...ஓ அப்போ ஊரில் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கலாம்  என்று எதிரணிக்கு வலு சேர்க்கிறீர்கள் அப்படித்தானே

 

இசை. நிலைமை தெரியாமை  நீ வேறை  எனது அணி சார்பாக  தமிழச்சியை  கதைக்க  கூபப்பிட்டிருந்தன்.  கூப்பிட்டு ஆறு மணி நேரமாகிது  ஆளையே காணேல்லை  இன்னமும் மேக்கப் போட்டு முடியேல்லையாம்.

 

புலநாய்.நல்லவேளை  பட்டி மன்றத்திற்கே  ஆறுமணி நேரம் என்றால் அலங்கார அணிவகுப்பிற்கு  அழைத்திருந்தால்  நிலைமை என்ன  உங்கள் அணியை பார்த்தால் எனக்கு  ஒரே ஊழையா வருது ..ஊஊஊஊஊ...ஊஊஊஊ...

 

இசை..சே போ நாயோ  நாங்கதான் வெல்லுவம் அப்ப வாலை ஆட்டிக்கொண்டு  நீ திரும்பவும் இங்கைதான் வருவாய் அப்ப வைச்சுக்கிறன் உன்னை.

 

புலநாய் ..ஜயோ என்னையா  வேண்டாம்.....(ஓடுகிறது)

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும், எல்லாரையும் பேய்க் காட்டிக் கொண்டு திரிந்த புல நாய்  தெரிந்தோ தெரியாமலோ பட்டிமன்றத்துக்குள் நுழைந்து விட்டது!

 

எங்கள் தையிரிய லட்சுமியின் ஒரு பார்வையிலேயே புல நாய் எதுக்கோ போய்விடப் போகின்றது! :D

 

எதிரணியினர் வரும்போது, கைகாவலாக ஒன்றிரண்டு பால் போத்தல்களையும் கொண்டு வரவும்! :icon_idea:

 

glass---peeing-dog_1.jpg

734020_597890833571899_756236819_n.jpgt

தான் சீரியஸ் ஆக தொடங்கிய பட்டி மன்றம் வெறும் பச்சை புள்ள விளையாட்டாக இருக்கு என்ற கோவத்தில் நடுவர் கோ தனது வேட்டியை கழட்டிவிட்டு  சொட்ஸ் உடன் வருகின்றார் .பார்வையாளர் இனி அடுத்து என்னவோ என்று திகைத்து நிற்கின்றார்கள்

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்


 

-----

புலம்பெயர்ந்த தமிழ் மக்களாகிய எமது ஊர் பற்றிய கவலையானது நாம் ஊரைவிட்டுப் பிரிந்திருப்பதே தவிர, சிறந்த வாழ்வியலை இழந்த கவலையல்ல.  நாம் புலம்பெயர்ந்த காரணத்தினாலேயே எமக்கு இவ்வாய்ப்பைத் தந்த யாழ்களமே உருவாகியது.  நாம் ஊரில் இருந்திருந்தால் எம்மில் பலர் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் வளமான வாழ்க்கையை வாழ்ந்திருக்க மாட்டோம்.  நாங்கள் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் சௌகரியங்களை நாம் அங்கு அனுபவித்திருப்போமா?  எங்கள் பிள்ளைகள் அத்தனை பேரும் கல்வியில் சிறந்து விளங்கியிருப்பார்களா?  இங்கு வளரும் பிள்ளைகளில் அதிகம் பேர் உயர்கல்வியைக் கற்று மிகச் சிறந்த வேலைகளில் அமர்ந்திருக்கிறார்கள்.  அமரப் போகிறார்கள்.  இவை நாம் ஊரிலிருந்திருந்தால் எத்தனை வீதம் சாத்தியப்பட்டிருக்கும்?  ஊரிலிருந்திருந்தால் எம் பிள்ளைகளில் ஒரு பத்து வீதமானோர்தான் பல்கலைக்கழகம்வரை சென்று சிறந்து விளங்கியிருப்பார்கள்.  ஆனால், புலம்பெயர்ந்த நாடுகளிலோ அனைத்துப் பிள்ளைகளும் மேற்படிப்பு படிக்கும் வாய்ப்புள்ளது.  அப்பிள்ளைகளின் பட்டமளிப்பின்போது பெற்றோர் படும் ஆனந்தம் இருக்கிறதே, அதனை வார்த்தைகளில் வடித்து விட முடியாது நடுவர்களே.  ஆனால், நாட்டில் ஒரு வருடத்தில் ஒவ்வொரு ஊரிலிருந்தும் அல்லது பாடசாலைகளிலிருந்தும் ஆகக்கூடியது பத்து மாணவர்களாவது பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பிருக்கிறதா?  பொதுவாக, தாயகத்தில் ஒரு ஊரிலிருந்து அல்லது பாடசாலையிலிருந்து ஓரிருவர் மட்டுமே பல்கலைக்கழகம் செல்வதைக் கண்டிருக்கிறோம்.  எத்தனை மாணவர்கள் படிப்பில் சுட்டியாக இருந்தாலும் ஓரிரு மதிப்பெண்கள் வித்தியாசத்தில் வாழ்வியலை இழந்திருக்கிறார்கள்?  அவர்களிடம் திறமைகள் இருந்தாலும், சாதாரண வேலைகளையே செய்யும் நிர்ப்பந்தம் இருக்கிறது.  அப்படிச் சாதாரண வேலையில் அமர்ந்தாலும் தொடர்ந்து அச்சாதாரண வாழ்வியலை வாழும் வாய்ப்பே அங்கு அதிகம்.  மேலதிகமாக முன்னேறுவது கடினம்.  ஆனால், இங்கோ ஒருவர் பல்கலைக்கழகம் செல்லாவிட்டாலும் வேலைத்தளங்கள் வாயிலாகத் தொடர்ந்தும் படித்து வேலையில் உயர்நிலைகளுக்கு வந்திருக்கிறார்கள்.  அங்கு சாதாரண வகுப்போடு படிப்பை முடித்த பலர் புலம்பெயர்ந்த பின்பு இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு பல நல்ல வேலைகளில் இருப்பது கண்கூடு நடுவர்களே.

 

-------

 

சபாஷ்.... தமிழச்சி, அழகான வாதத்தை முன் வைத்திருக்கிறீர்கள். :) 
இந்த வாதத்துக்கு, எதிரணியால்... கருத்துக்களை வைக்க முடியுமா? என்பது சந்தேகமே. :) 

சக குழு உறுப்பினர்களுக்கு வேலை வைக்காமால் தமிழச்சியே எல்லாவற்றையும் தெளிவாக எழுதிவிட்டார்.

 

எதிரணியினர் இனி ரூம் போட்டுத்தான் யோசிக்க வேணும். :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சியின் வாதம் பட்டிமன்ற வாதமாகவே இல்லை... அப்படியே புலம்பெயர்ந்த.. எம்மவர்களின் மனசுக்க புகுந்து உள்ள கிடக்கிற புலம்பெயர் வாழ்வு பற்றிய அத்தனை எண்ணங்களையும் ஒன்றும் விடாமல்..எடுத்து வந்து ஒட்டிவிட்ட உண்மைகளாக உள்ளன.

 

ஒன்றை மட்டும் வடிவாச் சொல்ல மறந்திட்டா.. புலம்பெயர் வாழ்க்கை வாழ வந்த பின் தான் சாதாரண ஈழத்தமிழர்களும்.. அந்ததந்த நாடுகளில் மட்டுமன்றி.. கொழும்பு.. கண்டி.. சென்னை.. டெல்லி.. டுபாய்.. கோலாலம்பூர்.. சிங்கப்பூர்.. என்று வீடுகள் வாசல்கள் வாங்க முடிஞ்சிருக்குது..! இதெல்லாம் ஊரில இருந்திருந்தா.. கிடைச்சிருக்குமா..??! இப்பவும் வடலியும் வாசியசாலையும் என்று தான் இருந்திருக்கனும்..! இப்பவாவது.. புரிஞ்சுதா.. நாங்க.. பொருளாதார அகதிகளா.. அரசியல் அகதிகளான்னு...??! அப்படின்னு ஒரு போடு போட்டிருக்கிறா.. பார்ப்போம் எதிரணியினர் எப்படி சமாளிக்கப் போறாங்கன்னு..!! இப்படி உண்மையை புட்டுபுட்டு வைச்சிட்டதால.. அவங்க பாடு.. கஸ்டம் தான். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

விவாதத்தை அழகாக ஆரம்பித்து வைத்த தமிழச்சிக்கு  நன்றிகள்!

 

'இப்போதும் காலம் கடந்துவிடவில்லை!

 

புறநானூற்றுப் பரம்பரையில் வந்தவர்கள், எமது அணியினர்!  :icon_idea:

 

புரிந்து கொள்வார்கள்! :D

Edited by புங்கையூரன்

தங்களின் விவாதத்தை முன்வைத்த தமிழிச்சிக்கு நன்றிகள்.

 

இதையெல்லாம் கண்டு அஞ்சுவதற்கு நாங்கள் ஒண்டும் நரிகள் அல்ல நாங்கள் ......

இதற்கான சரியான பதிலடி எழும்ப இயலாத நெத்தியடி உங்களுக்கு விரைவில் கிடைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழிச்சி என்ற தைரியத்தின் புயல் முதல் பந்திலேயே சிக்சரை அடித்துள்ளார்.பார்க்கலாம் நீண்ட நெடிய இன்னிங்சில் எதுவும் நடக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா அக்கா தமிழ் அடிச்சா அடியில் பந்து எல்லை கோட்டை தாண்டி காணமல் போய் விட்டது யாரவது கண்டு பிடிச்சா சொல்லுங்கப்பா

  • கருத்துக்கள உறவுகள்

புலநாய்.அடுத்ததாக அர்ஜுனை பேட்டி எடுப்பதற்காக போகின்றது. கோட் சூட் போட்டு ரையை சரிபார்த்துக் கொண்டிருந்தவரிடம்.

 

புலநாய்... காய் அர்ஜுன் யாழிலை பட்டிமன்றம் நடத்துறாங்களாமே ? நீங்கள் கலந்து கொள்ளவில்லையா??

 

அர்ஜுன்...கா....கா...கா... நக்கலாக சிரிக்கிறார்.

 

புலநாய். எதுக்காக இப்ப காக்காவை கூப்பிடுறீங்கள்.புரட்டாசி மாசம் வேறை இல்லை.

 

அர்ஜுன்...அதில்லை அங்கை இருக்கிறதெல்லாம் மொக்கனுகள். நான் பிரான்சிஸ் கரிசனைப் பற்றி கதைச்சால் அவங்கள் செத்துப்போன  மைக்கல் ஜக்சனை பற்றி கதைக்கிறாங்கள். நான் பிரிட்டிஸ் டேவிட் கமறூன் பற்றி எழுதினா  அவங்கள் அவரா அவதார் படம் எடுத்த கமறூன் எண்டு ஜேம்ஸ் கமறூனை பற்றி எழுதிறாங்கள். மொக்கு கூட்டம் பிறகு எப்பிடி பட்டி மன்றத்திலை கதைக்கிறது

 

புலநாய்.சரி அவங்கள்தான் படிக்கேல்லை நீங்களாவது வந்து அவங்களுக்கு சொல்லி குடுக்கலாமே?

 

அரஜுன்....நோ..நோ....அதுக்கு ஒரு பத்தாம் வகுப்பாவது பாஸ் பண்ணியிருக்கவேணும் அதுக்கை இருக்கிறதெல்லாம் எட்டாம் வகுப்பு கோஸ்ரியள்...அதாலை  நோ  வே...அதைவிட எனக்கு முக்கியமானதொரு வேலை இருக்கு என்னை  டிஸ்ரெப் பண்ணாதை

 

புலநாய்...எது லட்டு திங்கிறதா??

 

அர்ஜுன் சப்பாத்தை கழற்றி புலநாய்க்கு எறிகிறார்.....

 

funny-dog-pic-5.jpg

 

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

கனம் நடுவர் சுமேரியர் அவர்களை..பட்டிமன்றத்தின் இடை நடுவில் புட்டவிக்கப்போறன்,அத்தார் வந்திட்டார் ரீ ஊத்தப்போறன் எண்டு எழும்பி போகவேண்டாம் என்று கடும்தொனியில் :D கேட்டுக்கொள்கிறோம்....உங்கள் அத்தாருக்கு மட்டுமல்ல, பட்டிமன்றத்துக்கு வருகைதரும் அத்தனை புட்டுப்பிரியர்கலுக்கும் தேவையான புட்டை ரசிகர் சைட்டில் இருந்து அலைமகளும் தப்பிலி அண்ணாவும் அவித்துக்கொட்டுவார்கள்... :D

 

அலையும் தப்பிலியும் புட்டு அவிச்சு மேடைக்குப் பக்கத்திலேயே கொட்டுற விஷயம் முதலே தெரிஞ்சிருந்தா நான் அத்தானுக்கு ஆறு நாளுக்கும் புட்டவிச்சு பிறிச்சில வச்சிருக்க மாட்டன். அத்தானை பட்டிமன்றத்துக்கே வந்து சாப்பிட்டுட்டு கட்டிக்கொண்டும் போகச் சொல்லியிருப்பன்.ம் ...... டூ........ லேற்  :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புலனாய் புலனாய் தான் சாத்திரி. தருவதற்குப் பச்சை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணாவின் புலனாய்வுத் தொல்லை கடி தாங்கலை.. :D நல்லா தகவல்களை அறிஞ்சு வச்சிருக்குது..! :D



http://www.yarl.com/forum3/index.php?showtopic=118692#entry873096

 

முதல் இறக்கமே அதிரடி ஆட்டக்காரராக இறக்கியிருக்கிறோம்..  :wub:  மிகவும் ஆழமாக சிந்தித்து அருமையான வாதங்களை முன்வைத்த தமிழச்சிக்கு நன்றிகள்..! எதிர்க்கட்சிக்கு இனியும் ஒரு வாய்ப்பிருக்கு? நான் நம்பலை.. :D

காவாலின் வாதம் சொந்த மண்ணில் வாழும் மகத்துவத்தை, நெஞ்சைத் தொட்டுச் சொல்லியுள்ளது. 'முருங்கையை வெட்டி சட்டிக்குள் வைத்து குளிர் நாட்டில் வளர்ப்பது போல' புலம் பெயர்ந்த வாழ்க்கை என்பதைக் கூறியுள்ளார்.
 

இதற்கு, இரவல் தேசத்தில் வாழ்வைத் தேடும் எதிரணியினர் என்ன கூறப் போகிறார்கள் ?

தமிழிச்சி என்ற தைரியத்தின் புயல் முதல் பந்திலேயே சிக்சரை அடித்துள்ளார்.பார்க்கலாம் நீண்ட நெடிய இன்னிங்சில் எதுவும் நடக்கலாம்.

 

 

:lol:  :lol: :lol:  

 

எதிரணியினர் காய்ச்சல் வந்து படுத்துவிட்டதாக எமது புலநாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=118692#entry873199

 

ம்ம்ம்.. நல்லதொரு வாதத்தைத்தான் முன்வைத்திருக்கிறார் யாழ்வாலி.. :D

 

ஆனால் அடுத்தடுத்து தங்கள் அனியினரையே பேச வைக்கும் எதிரணியினரின் உத்தி எந்த நாட்டு அரசியலிலும் இதுவரை நாம் காணாதது.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சிச்சிக்கு ஒரு பச்சை...தன்னால் முடிந்தளவுக்கு விடையங்களை பகிர்ந்திருக்கிறார்..இன்னும் சில விடையங்களை சேர்த்திருக்கலாம் பறவா இல்லை. இது  கூட நன்றாக தான் சொல்லப்பட்டு இருக்கிறது.. :)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=118692#entry873199

 

ம்ம்ம்.. நல்லதொரு வாதத்தைத்தான் முன்வைத்திருக்கிறார் யாழ்வாலி.. :D

 

ஆனால் அடுத்தடுத்து தங்கள் அனியினரையே பேச வைக்கும் எதிரணியினரின் உத்தி எந்த நாட்டு அரசியலிலும் இதுவரை நாம் காணாதது.. :lol:

 

 

அவர் இன்னும் பழைய காலத்துப் பட்டிமன்ற ஸ்ரைலிலேயே நிற்கிறார்.   :lol:  :lol:  :lol:

தமிழச்சிச்சிக்கு ஒரு பச்சை...தன்னால் முடிந்தளவுக்கு விடையங்களை பகிர்ந்திருக்கிறார்..இன்னும் சில விடையங்களை சேர்த்திருக்கலாம் பறவா இல்லை. இது  கூட நன்றாக தான் சொல்லப்பட்டு இருக்கிறது.. :)

 

இதைவிட, அதிக ஆழமாக யோசித்து வைத்திருந்தேன்.  இவர்கள் அவசரப்படுத்தியதால் விரைவில் முடிக்க வேண்டி வந்து விட்டது.  மிகுதியை எமதணியினருக்குத் தாரை வார்க்க உள்ளேன்.  ஆகவே, கவலைப்படாதீர்கள்.  இத்திரியின் முதற்பக்கங்களைச் சென்று பாருங்கள்.  எப்படிக் கூச்சல் போட்டார்கள் என்று.  பார்க்கலாம் எதிரணியினரும் ஒரு நாளுக்குள் பதிலைப் போடுகிறார்களா என்று.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=118692#entry873199

 

ம்ம்ம்.. நல்லதொரு வாதத்தைத்தான் முன்வைத்திருக்கிறார் யாழ்வாலி.. :D

 

ஆனால் அடுத்தடுத்து தங்கள் அனியினரையே பேச வைக்கும் எதிரணியினரின் உத்தி எந்த நாட்டு அரசியலிலும் இதுவரை நாம் காணாதது.. :lol:

 

மன்னிக்கவும் இசை அண்ணா, நான் இன்னும் எனது வாதத்தை முன்வைக்கவே இல்லையே. பட்டிமன்ற வழக்கப்படி தலைமை உரை கொடுத்திருக்கின்றேன். தவறென்றால் நடுவர்களின் முடிவின்படி நீக்கிவிடட்டும். மற்றும்படி தமிழுடைய வாதத்துக்கு சுலபமா பதிலளிக்க முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழச்சி அக்கா எதிரணி மட்டுமல்ல, தன்னோட அணியினரே பேச முடியாதவாறு "சேம் சைட் கோல்" அடிச்சு தான் ஒரு தைரியலட்சுமி என்று நிரூபித்து விட்டார். வாழ்த்துக்கள் சிஸ்..... :D

  • கருத்துக்கள உறவுகள்


 

-------

நடுவர் அவர்களே, ஒரு புலம்பெயர் தமிழனின் வாழ்கையில் வெறும் பொருளீட்டல், கல்வி, சுகாதார வசதிகள் மட்டும் மகிழ்வைத் தந்து விடமுடியாது. மறாக அவனுடைய மண்ணுக்கே உரியவகையில் அந்த மண்ணுடன் இணைந்த இயல்பான வாழ்க்கைமுறையே முழுமையான மகிழ்வைத் தரும்

----

அதெல்லாம் சரி உன் கழுத்தில என்ன ஒரு பட்டி இருக்கு எண்டு காட்டுநாய் கேட்டிச்சாம். அது கூட்டை விட்டுவெளியில வந்தாப் பிறகு என்னைச் சங்கிலி போட்டுக் கட்டி வைப்பார்கள் எண்டிச்சாம் வீட்டுநாய். காட்டுநாய் சொல்லிச்சாம் காட்டில இங்கமாதிரி வசதிகள் இல்லைத்தான் ஆனால் அங்கு நான் சுதந்திரமாக வாழ்கின்றேன்.

--------


வாவ்... காவாலி,
தாய்மண்ணின் வாசனையே... ஒரு மனிதனுக்கு, உண்மையான மகிழ்ச்சியை தரும், என்று கூறியதோடு மட்டுமல்லாமல்... காட்டு நாய்க்கும், வீட்டு நாய்க்கும் நடந்த உரையாடலை, உதாரணமாகக் காட்டிய காவாலியின் கேள்விக்கு, எதிரணியினர் என்ன பதிலை வைத்திருக்கிறார்கள்? :)

 


 

 


 

  • தொடங்கியவர்

தமிழச்சி காவாலி உங்கள் இருவருக்கும் எனது மனந்திறந்த பாராட்டுக்கள் :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

பட்டிமன்ற அன்பர்களுக்கு வாழ்த்துகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.