Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

40ஆவதுஇலக்கியசந்திப்பு-லண்டன் 06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கியவாதிகள் எல்லோரும் சேர்ந்து புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்மொழியை வளர்க்கப் போகின்றார்கள் என நினைத்தால் எல்லாம் தலைகீழாக நடக்கின்றது :D

 

  • Replies 88
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நட்புடன் சாத்திரிக்கு....

உங்களின் பின்வரும் கூற்று தமிழ் மேலாதிக்க கூற்றிலிலையா....?

இவ்வாறுதானே சிங்களப் பேரினவாதமும் தமிழர்கைளப் பார்த்துக் கூறுகின்றது....

நன்றி

 

 

"கடந்த காலங்களில்  முஸ்லிம் சமூகமானது  சில சுயநல அரசியல் வாதிகளினதும். இலங்கை ஆட்சியாளர்களது சூழ்ச்சிகளாலும்.குறுகிய நோக்கம் கொண்ட மதவாதிகளாலும் தவறாக வழிநடத்தப் பட்டதன் எதிரொலியாக  அவர்களிற்கும் தமிழர்களிற்கும் இடையில் தோன்றிய  முரண்பாடுகளால் இரு தரப்பிலுமே  பழிவாங்கல்கள் கொலைகள் கொள்ளைகள்   கிழக்கில்  தமிழ் கிராமங்கள்  மீதான் தாக்குதல்கள்  யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்களின்  வெளியேற்றம் என  இரு  இனங்களிற்கிடையேயும் பாரியதொரு இடைவெளி தோன்றி விட்டிருக்கின்றது.

"

 

மீரா பாரதிக்கு   எனது கூற்று  தமிழ் மேலாதிக்க கூற்றா  இல்லையா என்பதற்கு  வர முதல்  எனது கட்டுரையில்  நான் கூறிய மற்றைய விடயங்கள் என்னவென்றால்.

 

இங்கு நான் பெளத்த சிங்கள இனவாதிகளை  பேரினவாதிகள்  என்று அழைப்பது எதனால் என்றால்  தமிழ் சமூகமும்  சிங்கள இனவாதத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாத அதேயளவு மூர்க்கத்தோடும் பழிவாங்கும் உணர்வுகளோடும் காலங்காலமாய்  தமிழினத்தை வழி நடாத்தியவர்களால் வளர்க்கப்பட்டுள்ளது.அதற்கு சாதாரணமான அண்மைக்கால உதரணம் ஒன்றையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.2009ம் ஆண்டு புலிகள் அமைப்பின்  முடிவின் பின்னர் நடந்த கடந்த தேர்தலானது  தமிழர்களிற்கு முக்கியமானதொரு தேர்தலாகவும் அந்தத் தேர்தல் முடிவுகளாவது தமிழர் அரசியல் சூனியத்தில் ஒரு ஒற்றையடி பாதையாவது காட்டி விடும் என்கிற நம்பிக்கை பலரிற்கு இருந்தது நான் உட்பட. அந்தத் தேர்தல் நெருங்கும்போது இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசியலிற்குள்ளும்  மாற்றம் ஏற்படுகின்றது.புலிகளை அழித்து வெற்றிக் கொடியேற்றிய இராணுவத்தளபதி பொன்சேகாவை  உண்மையான  சிங்கள வீரன் கெமுனுவின் வாரிசு என்று பதக்கம் குத்தி பாராட்டிய  மகிந்தாவிற்கும்  பொன்சோகாவிற்கும்.பங்கு பிரிப்பில் பிரச்சனை வந்து விடுகிறது...

அங்கையும் பங்கு பிரிப்பாலைதான் பிரச்சனை.. .....

இதனால் அவர் எதிரணிக்கு  தாவி தேர்தல் வேட்பாளராகிறார்.தமிழர் தரப்பில் புலிகள் அமைப்பு இருந்த காலத்தில் அவர்கள் ஆசீர்வாதம் பெற்று தமிழர் தரப்பில் பலமாக இருந்த  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு  தனித்து போட்டியிடுவதா அல்லது யாருடன் கூட்டு சேருவது என்று ஆலோசனைகள் நடாத்திக்கொண்டிருந்தார்கள்.அப்பொழுது சிங்கள இடதுசாரித் தலைவரான  விக்கிரமபாகு கருணாரட்ண தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக   இலங்கை வாழ் தமிழர்களிற்கு   பிரச்சனை உள்ளது நான் ஆட்சிக்கு வந்தால்  அவர்களும் இந்த நாட்டில்  சகல உரிமைகளோடும் வாழும்  சுய நிர்ணய முறையிலான  தீர்லை கொடுப்பேன் என்று அறிவிக்கிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தன்னோடு இணைந்து கொள்ளுமாறு  அழைப்பு விட்டு பேச்சு வார்த்தைகளும் நடந்தது அதே காலகட்டப் பகுதியில் விக்கிரமாபாகு  அவர்களின் செவ்வியொன்றை  பிரான்சில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி ஒன்றிற்காக செவ்வி காணுவதற்காக  அவரோடு தொடர்பு கொண்டு  அவரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது  தமிழர் தரப்பு தலைமைகள்  ஆதரவு தனக்கு எந்தளவு இருக்கும் என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் அவரிற்கு சொன்ன விடயம் என்னவென்றால் தமிழ் இனவாதம் என்பது  சிங்கள இனவாதத்திற்கு சற்றும் குறைவில்லாத ஒன்று. எனவே ஒரு இனவாம்  இன்னொரு இனவாதத்துடன் தான் கைகுலுக்கிக்கொள்ள விரும்புமே தவிர  உங்களைப்போன்ற இடதுசாரிகளுடன் கைகுலுக்கும் என்பது சந்தேகமே...ஆனாலும் முயற்சித்து பாக்கலாம் என்று கூறியிருந்தேன்.

 

அதே போல தமிழர்களிற்கு பிரச்சனை இருக்கின்றது அவர்களிற்கு சுய நிர்ணய அடிப்படையில் தீர்வு காணுவேன் என்று அறிவித்த விக்கிரமபாகுவை நிராகரித்து விட்டு  இந்த நாட்டில் எந்தப் பிரச்சனையுமே இல்லை  அவர்களிற்கு எதுவுமே கொடுக்கத்தேவையில்லை என்று அறிவித்த  பொன்சேகாவோடு கூட்டு சோர்ந்தார்கள். இங்கு ஒரு வரலாற்று உண்மையையும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்  1956 ஆம் ஆண்டு பருத்தித்துறை தொகுதியில்பி.கந்தையா எனும் கம்யூனிஸ்ட்டை நாடாளுமன்ற உறுப்பினாராய் தெரிவு செய்ததைத் தவிர வேறு எந்தொரு இடதுசாரியையும் தமிழ் மக்கள் தமது நீண்ட வரலாற்றில் தெரிவு செய்திருக்கவில்லை.

 

 

இதற்கு பின்னர்தான் நீங்கள் குறிப்பிட்ட வசன்ங்கள் வருகின்றது.  இன்றைய கால கட்டத்தில்  தமிழ் இனவாதம் தான் தமிழ்த்தேசியம் என்றாகி விட்டது. இந்த தமிழ்த்தேசியம் என்பது  1944 ம் ஆண்டு  பொன்னம் பலத்தால்  அகில இலங்கை தமிழ் காங்கிரசில் இருந்து தொடங்கி  பிறகு காலங்காலமாக  தலைமை தாங்கியவர்களால்  தமிழ் இனவாதமாக மாற்றம் பெற்றது. அதன் வரலாறுகளை நான் உங்களிற்கு  தெளிவு படுத்தத் தேவையில்லையென நினைக்கிறேன். இங்கு நான் இன்றைய தமிழ்த்தேசிய வாதி கிடையாது. எனவே தமிழ் இனவாதியும் கிடையாது அதனால் எனது கூற:று தமிழ் மேலாதிக்க கூற்றாக இருக்காது என நம்புகிறேன்.  முஸ்லிம்கள பற்றி நீங்கள் அடிக் கோடிட்டு காட்டியுள்ளீர்கள்.  அதற்கான எனது புரிதல் என்னவெனில். கிழக்கில்  80 களின் பின்னர் முஸ்லிம்  அடிப்படைவாத  குழுவான ஜிகாத் மற்றும் இலங்கை இராணுவ பிரிவில் இயங்கிய கப்ரன் முனாஸ் தலைமையிலான குழுவால் அழிக்கப் பட்ட தமிழ் கிராமங்களும்  நடத்தப் பட்ட படுகொலைகளும்  ஏராளம்.அவை பதிவுகளாகவே உள்ளன.  இன்றுவரை  கிழக்கில் தங்கள் சொந்த கிராமங்களிற்கு  தமிழர்கள் திரும்பவில்லை  அம்பறை  திகாடுமல்ல என்கிற பெயரோடு சிங்கள  மாவட்டமாகி உள்ளது.  இன்று கிழக்கில் நடக்கும் எல்லை பிரிப்பில் தமிழர்களிற்கு ஒரேயொரு  கிராமம்  மட்டுமே மிஞ்சப்போகின்றது. கிழக்கில் காத்தான்குடி படுகொலை  மற்றும் யாழில் முஸ்லிம் வெளியேற்றம் என்பன நானும் எங்கும் ஆதரிக்கவில்லை . ஆனால் அதற்காக  புலிகளின் தலைமை மன்னிப்பும் கேட்டிருந்தது. கிழக்கில் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளை நடத்தி முடித்த கருணா தற்சமயம் இலங்கையரசோடுதான் இருக்கிறார் வேண்டுமானால்  இலங்கையரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் வழக்கு தொடரலாம்.  ஆனால் இதுவரை கிழக்கில் நடந்து முடிந்த தமிழர்கள் மீதான  வன்முறைகளிற்கு  ஏதாவது ஒரு முஸ்லிம் குழு அல்லது அரசியல் கட்சி வேண்டாம் மதத் தலைவர்கள் யாராவது மன்னிப்பு   வேண்டாம் வருத்தமாவது தெரிவித்திருக்கிறார்களா?? அப்படி தெரிவித்திருந்தால் அறியத் தரவும் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். மற்றும்படி  எங்கள் கருத்தாடல்கள் தொடரவேண்டும் என கூறி விடை பெறுகிறேன்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலை வெறும் புலி அழிப்பாக காட்ட நினைக்கும்.. சிங்களத்தின் நிலைப்பாட்டை அடியொற்றி நிற்கும்.. ஒழுக்குழு.. மற்றும் முஸ்லீம் பாசிசவாதத்திற்கு தமிழ் மக்களின்.. இன இருப்புக்கான நிலைப்பாடுகள்.. இனவாதமாக தெரிவதில்.. ஆச்சரியமில்லை.

 

எந்த ஒரு முஸ்லீம் இலக்கியவாதியும்... கல்முனையில் கூட வாழ்ந்த தமிழ் மக்களை கூட்டுப் படுகொலை செய்ததை இன்று வரை பதிவு செய்ததில்லை. லங்கைத் தீவின் வரலாற்றில் ஒரு நகரில் இருந்து ஒரு இன மக்கள் மிகக் குறுகிய காலத்தில் துடைத்தழித்த சம்பவமாக அது பார்க்கப்படுகிறது. அதில் சிங்கள இராணுவத்தோடு முஸ்லீம் வர்த்தக ரவுடிக் கும்பல்களும் இணைந்து செயற்பட்டிருந்தனர்.

 

The town of Kalmunai was allegedly subjected to intense shelling by the Army. As a result, the LTTE had to withdraw from the town. Subsequently, the massacre began on June 20, 1990.[2] An account of one part of the alleged massacre claimed that Sri Lankan Army personnel took position at Kalmunai Rest House junction where Tamil civilians were allegedly kidnapped. The abducted were then allegedly burned behind the shops of Muslim businessmen. While the death toll is disputed, a member of Sri Lanka's parliament alleged that more than 160 people were killed.[1] However, the UTHR alleged that the number of people who died or disappeared was in excess 1000 and alleged that over 250 were killed.[2][3] It further alleged that this massacre was the "largest bout of slaughter a single town in the island had witnessed in such a short time".

 

http://en.wikipedia.org/wiki/Kalmunai_massacre

 

 

அதேபோல்.. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பற்றி ஒரு மனிதாபிமான கண்ணோட்டத்தைக் கூட முஸ்லீம்கள் இதுவரை பதிவு செய்ததில்லை. மாறாக தமிழ் மக்களின் நிலங்களை அபகரிக்க மல்லுக்கட்ட நிற்கின்றனர்.

 

இப்படிப்பட்ட ஒரு மனநிலை கொண்ட சமூகத்தோடு எந்த நாகரிகமான மனித இனம் கூட்டுச் சேர்ந்து வாழ முடியும் என்ற கேள்வி எழுகிறது..???!

 

இதற்கு முஸ்லீம் இலக்கியவாதிகள் முஸ்லீம் காங்கிரஸ்வாதிகள் காத்தான்குடி படுகொலை நீலிக்கண்ணீர் வாதிகள்.. யாழ்ப்பாண இடம்பெயர்வு கருசணையாளர்கள்.. பதில் சொல்வார்களா..??!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் தரப்பிற்கு சிங்கள தரப்பு கொடுக்கும் அழுத்தங்களை ஒரு ஓரமாக நிண்டு பாத்திட்டு இருக்கிறது தான் தமிழர் தரப்பு கையாளக்கூடிய மிகச்சிறந்த ராஜதந்திரமாக இருக்கும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு தடைவை பதியப் பட்டிருப்பதால் நீக்கியுள்ளேன்.

Edited by sathiri

யாழ்ப்பாணம் அல்ல. வடக்கு முஸ்லீம்களின் அன்றைய வெளியேற்றம் நியாயத்தின் அடிப்படையில் அவர்களுக்குப் பாதகம் அல்ல.

 

மூதூரிலும் கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு சிங்கள அரச ஆதரவோடு..முஸ்லீம் குழுக்கள் அவிழ்த்துவிட்ட வன்முறைகளின் பெருக்கத்தை தடுக்கவும்.. இரு இனங்களையும் மோதவிட்டு சிங்கள அரசு ஆதாயம் தேடுவதை தடுக்கவும் அந்த நடவடிக்கை பெரிதும் உதவி இருந்தது.

 

முஸ்லீம் கடும்போக்கு மதவாதிகளால் அது திரிக்கப்பட்டு புலிகள் மீதான மோசமான விமர்சனமாக அது முன்வைக்கப்பட்டது. குறிப்பாக அரசியல் செய்ய வழி இன்றி இருந்த அஸ்ரப் போன்றவர்களிற்கு அதைப் பாசிசமாகக் காட்டி ஒரு கட்சி வளர்க்கும் நோக்கம் இருந்தது. அந்த அடிப்படையில் பிறந்ததே முஸ்லீம் காங்கிரஸ். இன்று கூட அது தமிழ் மக்களின் அரசியலோடு ஒட்டிப் போகும் தன்மையைக் கொண்டிருக்கவில்லை. வெளிக்காட்டியதும் இல்லை. இதே தான் அன்று யாழ்ப்பாணத்திலும் இருந்தது.

 

முஸ்லீம்கள் தங்களை தனி ஒரு துருவமாக்கி வைத்துக் கொண்டு மற்றைய இனங்கள் நடுவே ஒட்டுண்ணி வாழ்க்கை வாழலாம் என்று தொடர்ந்து செயற்பட முடியாது. மற்றைய இனங்களுக்கு ஆதாயம் தரக்கூடியதும்.. முஸ்லீம்கள் ஆதாயம் பெறக் கூடியதுமான ஒரு கூட்டு சமூக வாழ்விற்கு அவர்கள் தங்களை அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாவும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

இன்று முஸ்லீம்களுக்காக கூவும் ஒட்ழுக்குழுக்கள்.. அவர்களின் வரலாற்று நெடுகிலும் அவர்களின் அமைப்பில் முஸ்லீம்களுக்கு இடமளித்ததில்லை. புலிகள் முஸ்லீம்களுéக்கு அளித்த முக்கியத்துவத்தை எந்த ஒரு அமைப்பும் அளித்தது கிடையாது. ஆனால் இன்று நன்றி கெட்டதனமாக புலிகளைச் சார்ந்த சிலரே.. சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஒரு ஆராய்ந்தலும் அற்ற கட்டுரைகள் வரைந்து சுய விளம்பரம் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

 

இந்தியப் படைகள் காலத்தில்.. முஸ்லீம் இளைஞர்களை விரட்டி விரட்டி துன்புறுத்தியவர்கள் இன்று..  முஸ்லீம்களுக்காக.. யாழ்ப்பாண வெளியேற்றம் குறித்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். இவர்கள் என்ன நினைத்துக் கொண்டார்கள். இலக்கியம் என்ற போர்வையில் தங்களின் சுத்த பித்தலாட்டங்களை எல்லாம்.. மக்கள் மதிப்பற்ற அரசியலாக தொடர்ந்து முன்னெடுக்கலாம் என்றா..! இவற்றை ஏற்றுக் கொள்ள மக்கள் தயார் நிலை.

 

இந்த போலி இலக்கியவாதிகள் ஒன்றில் வெளிப்படையாக ஒட்டுக்குழு அரசியல் செய்ய வேண்டும் இன்றேல்.. தமிழ் கூறும் உலகின் நடைமுறையில் இருந்தும் விலகி தமக்கான ஒற்றையடிப் பாதையில் பயணிக்க வேண்டும். நிச்சயம் இவர்களை மக்கள் ஒருபோதும் இலக்கியவாதிகள் என்று கருதமாட்டார்கள் என்பதற்கு இவர்களின் நிகழ்வுகளிற்கு வரும் மக்களின் பங்களிப்பே சான்று..!

 

முஸ்லீம்களின் வடக்கு இடம்பெயர்வு இப்போ 23 வருடங்களாக பேசு பொருளாக உள்ளது. ஆனால் இதே முஸ்லீம்களால் தமிழ் மக்கள் 1986 இல் இருந்து தொடர்ச்சியாக இடம்பெயரச் செய்யப்படுவதோடு.. தமிழ் மக்களின் காணி நிலங்கள் பறிக்கப்படுவது குறித்து எந்த முஸ்லீமும் பேசியதில்லை. ஒட்டுக்குழு இலக்கியவாதிகளும் அதனை முன்னிறுத்தியதில்லை. இன்று சிங்களத்தில் ஒரு பொதுபல சேனை தோன்றக் காரணம்.. முஸ்லீம்களின் கடும்போக்கு மதவாதம் என்றால் அது மிகையல்ல. இப்படியான நிலைப்பாடுகளை எவரும் எதிர்ப்பிலக்கியம் என்று படைப்பதில்லை. கல்முனையில் 250 க்கும் மேற்பட்ட தமிழ் வர்த்தக குடும்பங்களை சார்ந்த மக்கள்.. வெட்டியும் எரித்துக் கொள்ளப்பட்டபோது.. அதை மறைக்கத் தெரிந்த முஸ்லீம்கள் காத்தான்குடிப் படுகொலையை மட்டும் முன்னிறுவது மட்டும் நீதியான செயலா..???!

 

தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த மூதூர்.. கிண்ணியா.. போன்ற இடங்கள் இன்று முழு  முஸ்லீம் பிரதேசங்களாக்கப்பட்டுள்ளன. அதே நிலை வடக்கு மன்னாரிலும்.. இன்று முல்லை முள்ளியவளையிலும் தோற்றிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அடாவடி முஸ்லீம் காங்கிரஸின் அரசியல் அணுகுமுறையோடு. இதை எவர் தட்டிக் கேட்கிறார்கள்..???!

 

கூட்டுச் சமூக முறை இருந்த காத்தான்குடி இன்று தனி முஸ்லீம் பிரதேசமாக்கப்பட்டுள்ளது. ஏன் ஒரு அரபுப் பிரதேசம் போல உள்ளது.

 

சனத்தொகை அடர்த்தி நிறைந்த வடக்கில் ஒரு பல்கலைக்கழகத்துள் மூவின மக்களும் உள்வாங்கப்படும் வேளை.. கிழக்கில்.. இரண்டு பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டு ஒன்றில் கூடிய அளவு முஸ்லீம்கள் உள்வாங்கப்படுகின்றனர். இந்த.. சமநிலைகளற்ற வளப் பாகுபாடு பற்றி எவர் பேசுகிறார்கள்..??! யாரும் இல்லை. கதைப்பது எல்லாம்.. யாழ்ப்பாண இடம்பெயர்வும்.. காத்தான்குடி படுகொலையும்..??!

 

இலக்கியம் என்பது.. காலக் கண்ணாடி. வெறுமனவே 1990 இல் நக்கூரமிட்டு நிற்பது அல்ல. அதுவும் புலிகளைச் சுற்றி மட்டும் பின்னப்படுவதல்ல இலக்கியம்..! மக்களை மக்களின் துயரை நெருக்கடியை வாழ்வியலை நோக்கி பின்னப்படுவதே இலக்கியம். முஸ்லீம்கள் பற்றிப் பேச இலக்கியம் உதவுது என்றால்.. அங்கே ஏன்.. தமிழ் மக்கள் முஸ்லீம்களால் பட்ட அவஸ்தைகளைப் பற்றிப் பேச அந்த இலக்கியங்கள் இடம் கொடுப்பதில்லை...??!

 

இதில் இருந்து தெரிவது என்ன..???!

 

சிலர் இனவாதத்திற்கும் உரிமைக் குரலுக்கும் இடையில் வித்தியாசம் அறியாமல்.. தம்மை இலக்கியவாதிகள் என்று சுயபிரகடனம் செய்து திரிகின்றனர். இவர்கள் ஒன்றைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.. தமிழ் மக்கள் தமது வாழ்வுரிமைக்காக பாதுகாப்புக்காக இருப்பிற்காக முன்னிறுத்தும் குரலை இனவாதம் என்று கூறுவார்களாக இருந்தால்.. அந்த இலக்கியவாதிகள்.. சுத்தப் பாசிசவாதிகள் என்ற முடிவுக்கு மிக இலகுவாக வரலாம்..!

 

இலக்கியம் என்பது பக்கச்சார்பானதல்ல. காலத்தின்.. கால நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. அது 1990 க்குள் மட்டும் சுழலக் கூடாது. வெறுமனவே புலிகளை தமிழ் மக்களின் தவறுகளை மட்டும் பற்றிச் சுழலக் கூடாது. அந்த மக்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்ட பின்னணிகள் குறித்தும் பேச வேண்டும். அவை.. பதியப்பட வேண்டும். மாற்றங்கள் எல்லா சமூகங்களிடமும் வர வேண்டும். தமிழ் மக்களிடம் மட்டும் அதனை எதிர்பார்க்கக் கூடாது.

 

புலிகள்.. இன்றிய இந்தக் கால இடைவெளியில்.. ஒட்டுக்குழுக்கள்.. தமது பிரச்சார வடிவமாக இலக்கியத்தை பயன்படுத்த நினைக்கிறார்களே தவிர... இவர்களின் இந்த நிகழ்வுகள் தமிழுக்கும்.. தமிழ் கூறும் நல்லுலகிற்கும் ஆற்றிய காத்திரமான பங்களிப்பு என்பது பூச்சியமாகும்..! :icon_idea::)

. சரியான காலத்தின் தேவை அறிந்த கருத்துக்கள் நன்றி நெடுக்ஸ் நான் எழுதினால் வெட்டுகிறார்கள் அதனால் நான் கருத்து எழுதவில்லை
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தன்னோடு இணைந்து கொள்ளுமாறு  அழைப்பு விட்டு பேச்சு வார்த்தைகளும் நடந்தது அதே காலகட்டப் பகுதியில் விக்கிரமாபாகு  அவர்களின் செவ்வியொன்றை  பிரான்சில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி ஒன்றிற்காக செவ்வி காணுவதற்காக  அவரோடு தொடர்பு கொண்டு  அவரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது  தமிழர் தரப்பு தலைமைகள்  ஆதரவு தனக்கு எந்தளவு இருக்கும் என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் அவரிற்கு சொன்ன விடயம் என்னவென்றால் தமிழ் இனவாதம் என்பது  சிங்கள இனவாதத்திற்கு சற்றும் குறைவில்லாத ஒன்று. எனவே ஒரு இனவாம்  இன்னொரு இனவாதத்துடன் தான் கைகுலுக்கிக்கொள்ள விரும்புமே தவிர  உங்களைப்போன்ற இடதுசாரிகளுடன் கைகுலுக்கும் என்பது சந்தேகமே...ஆனாலும் முயற்சித்து பாக்கலாம் என்று கூறியிருந்தேன்.

 

விக்கிரமபாகுவுக்கு தவறான கற்பிதத்தை வழங்கியுள்ளீர்கள்..!

 

இனவாதம் என்பது என்ன? தன் இனத்தை முன்னிறுத்துவது. தமிழ் இனவாதம் என்பது தமிழ் இனத்தை முன்னிறுத்துவது. இது எதன் விளைவு? சிங்கள இனவாதத்தின் விளைவு அல்ல.. மாறாக சிங்களப் பேரினவாதத்தின் (Sinhala Majoritarianism) எதிர்விளைவுதான் தமிழ் இனவாதம்.

சிலோனீஸ் என்று இருந்தபோது ஏற்படாத பல வில்லங்கங்கள் சிறீலங்கன் என்கிறபோது வந்தன அல்லவா? அதாவது சிலோனீஸ் என்கிற அடையாளம் இருந்தபோது இனங்கள் தமக்குள் முரண்பட்டாலும் ஒரு குடையின்கீழ்தானே வாழ்ந்துவந்தன.?

மாறாக சிறீலங்கன் அடையாளத்தை பெரும்பான்மை இனம் திணித்தபோது வந்த வினைகள்தான் நாம் எல்லோரும் அறிந்தவை.

ஆக, சிறீலங்கன் என்று எல்லோரையும் உள்ளடக்க நினைத்த சிங்களவனுக்கு தன் சிங்கள இனத்தை முன்னிறுத்தவேண்டிய தேவை இருக்கவில்லை. ஆனால் பேரினவாதத்தின் ஊடாக மாற்றப்பட்ட இன ஆரம்பகால அடையாளத்தை சிறுபான்மை இனங்கள் எதிர்க்கும்போது தமது சுய அடையாளத்தை முன்னிறுத்துவது இயல்புதானே..

 

ஆகவே தமிழ் இனவாதம் என்பது சிறுமையானது அல்ல.. அது காலத்தின் தேவை.. பேரினவாதம் மறைந்தால் சிறு இனங்களின் இனவாதமும் மறைந்து போகும்.

நட்புடன் சாத்திரிக்கு....

உங்களின் பின்வரும் கூற்று தமிழ் மேலாதிக்க கூற்றிலிலையா....?

இவ்வாறுதானே சிங்களப் பேரினவாதமும் தமிழர்கைளப் பார்த்துக் கூறுகின்றது....

நன்றி

 

 

"கடந்த காலங்களில்  முஸ்லிம் சமூகமானது  சில சுயநல அரசியல் வாதிகளினதும். இலங்கை ஆட்சியாளர்களது சூழ்ச்சிகளாலும்.குறுகிய நோக்கம் கொண்ட மதவாதிகளாலும் தவறாக வழிநடத்தப் பட்டதன் எதிரொலியாக  அவர்களிற்கும் தமிழர்களிற்கும் இடையில் தோன்றிய  முரண்பாடுகளால் இரு தரப்பிலுமே  பழிவாங்கல்கள் கொலைகள் கொள்ளைகள்   கிழக்கில்  தமிழ் கிராமங்கள்  மீதான் தாக்குதல்கள்  யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்களின்  வெளியேற்றம் என  இரு  இனங்களிற்கிடையேயும் பாரியதொரு இடைவெளி தோன்றி விட்டிருக்கின்றது.

"

 

 

தமிழ் முஸ்லிம்களுக்கிடையே நடந்த கடந்த கால கசப்பான நிகழ்வுகளால்  இரு இனங்களிற்கிடையே மேலும் பிளவுகள் உருவாகியுள்ளதை. அந்தப் பந்தி சுட்டிக் காட்டுகிறது. இதில் எங்கே தமிழ் மேலாதிக்கம் உள்ளது?

கடந்த காலங்களில் நடந்த தவறுகள் விமர்சிக்கப்பட்டு திருத்தப்பட வேண்டும் எனும் குரல்கள் ஓங்கி ஒலிக்கப்பட்டு வரும் நேரத்தில், புலிகளை மாத்திரம் விமர்சித்து விட்டு மற்றயவர்களின் பிழைகளை  காணாமல் விடுவது தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் முஸ்லிம்களுக்கிடையே நடந்த கடந்த கால கசப்பான நிகழ்வுகளால்  இரு இனங்களிற்கிடையே மேலும் பிளவுகள் உருவாகியுள்ளதை. அந்தப் பந்தி சுட்டிக் காட்டுகிறது. இதில் எங்கே தமிழ் மேலாதிக்கம் உள்ளது?

கடந்த காலங்களில் நடந்த தவறுகள் விமர்சிக்கப்பட்டு திருத்தப்பட வேண்டும் எனும் குரல்கள் ஓங்கி ஒலிக்கப்பட்டு வரும் நேரத்தில், புலிகளை மாத்திரம் விமர்சித்து விட்டு மற்றயவர்களின் பிழைகளை  காணாமல் விடுவது தவறு.

 

நீங்கள் அவரது ஐனநாயகத்தை இன்னும் புரிந்து கொள்ளவில்லை என குறைநினைக்கப்போறார்....... :(

நட்புடன் சாத்திரிக்கு...
இங்கு நான் எழுதுவதன் நோக்கம் நமக்குள், தமிழ் பேசும் மனிதர்களுக்குள், இருக்கின்ற இனவாத ஆதிக்க கூறுகனைக் களைவதைக் நோக்கமாகக் கொண்டதே.
நாம் சிறிலங்கா பேரினவாத அரசின் பன்முக அடக்குமுறைகளை ;எதிர்கொள்கின்ற தே;சமாக இருந்தபோதும்

இன்னுமோரு தளத்தில் நமது ;பிரசேதங்களிலிருக்கின்ற சிறுபான்மையினரை அடக்குபவர்களாகவூம்  அவர்களுக்கு எதிரான இனவாதப் போக்குகளை உடையவர்களாகவூம் இருக்கின்றேம்.

இன்னுமொரு தளத்தில் அக அடக்குமறைகளையூம் கொண்டுள்ளொம்.

 

நான் தமிழிழ் எழுதுகின்ற பல ;விடயங்கள் எமக்குள்ளிருக்கின்ற ஆதிக்க இனவாத போக்குகளையூம் அக அடக்குமுறைகளையூம் எவ்வ்hறு களைவது என்பதையோ நோக்கமாகக் கொண்டுள்ளது. மாறாக நம்மை; அடக்குகின்றவர்களை நோக்கியோ ;நாம் அடக்குகின்றவர்களை ;நோக்கியோ அல்ல.

 அவர்களுடன் உரையாடும் பொழுது அது வேறு ஒரு தளம். அதற்கேற்ப அங்கு உரையாடுவேன். அது நிச்சயமாக சிங்க மக்களை நோக்கிய பணிவூம் முஸ்லிம் மக்களை நோக்கிய அதிகாரத்துவ பண்பாக அது இருக்காது. இதற்கு மாறானாதாகவே இருக்கும்.

 

இந்த உரையாடல்கள் நமக்குள் நடைபெறும் உரையாடல்கள்.

இது பார்ப்பதற்கு ;நான் தமிழ் எதிர்ப்பாளராகவூம் சிங்கள முஸ';லிம் ஆதவரவாளரான தோற்றத்தையூமு; தரலாம். ஆனால் உண்மையிலையே நமக்குள் இருக்கின்ற குறைகளையூம் அழுக்குகளையூம் பிற்போக்குத்தனங்களையூம்  அகற்றுவதை நோக்கமாகக் கொண்டதே எனது எழுத்துக்கள்.

 

இதற்குக் காரணம் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான செயற்பாட்டாளராக 90களிலிருந்து 95ம் ஆண்டு வரை; சிங்கள் இனவாதிகளை பல்கலைக்கழத்தில் தனித்தும் வெளியில் நண்பர்களுடனும் இணைந்த ;எதிர்கொண்ட அனுபவத்தில் அடிப்படையிலானது. அடக்குகின்ற ;பெரும்பான்iமையினருக்குள் அகப்பட்ட ;அடக்கப்படுகின்ற தேசத்தைச ;சேர்ந்த ஒருவர் சிறுபான்மையாக ;இருந்ந்து அல்லது தனித்து இருந்து  எதிர் கொள்வது என்பது அவ்வளவூ இலேசான் காரியமல்ல. இது தொடர்பாக வேறு ஒரு பதிவை விரிவாக ;எழுதுகின்றேன். இந்தடிப்படைகளில் தமிழ் பிரதேசங்களில் சிறுபான்னமையினராக இருக்கின்ற முஸ்லிம்களை; நாம் எவ்வாறு ;அணுகுவது என்பது முக்கியமான ;அக்கறைக்குரிய விடயமாகும்.

 

இது தொடர்பாக ஜெயபாலன் அவர்கள் மேலும ;ஆழமாக விளக்கலாம் என்றே நம்புகின்றேன். ;ஏனெனில் நானறிந்தவரையில் இவர் ஒருவரே முஸ்லிம்கள் தொடர்பாக  அன்றிலிருந்து தமிழ் தேசத்திருந்து குரல் கொடுப்பவர். அவர் தனது அரசியல் நிலைப்பாட்டில் மாறாமல் இப்பொழுதும் இரு;நதால் இதற்குப் பங்களிக்கலாம்.

 

முதலாவது சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களிடம் மூவரிடமும் இனவாதம் ஆழமாக வேருண்றியிருக்கின்றது என்பதில ;சந்N;தகமில்லை. இது மட்டுமல்ல காலத்திற்கு காலம் இவ்வாறான முரண்பாடுகள் வெளிவரும் பொழுது அவற்றினடிப்படையிலான செயற்பாடுகளும் மிகவூம் ஆக்கிரோசமாக வெளிப்பட்டிருக்கின்றன அல்லது படுகின்றன. இதை நாம் ஒவ்n;வ்h;ரு சந்த்ரப்பத்திலும் காணலாம்.

ஆனால் இந்த இனவாதங்களும் இதன் அடிப்படையிலான ;அடக்குமுறைப் பண்புகளும் அளவூகளும் வேறானவை.

 

இலங்கையைப் பொருத்தவரை சிங்கள பௌத்த் பேரினவாதே எல்லா வகையிலும் உச்சத்தில் இருக்கின்றது. இது அரசு இராணுவம் மதம் எனப் பலவகைகளில் நிறுவனமயப்பட்டு பிற இனங்களுக்கும் மதங்களும் எதிராக செயற்படுகின்றது ;என்பதில் நமக்கு முரண்பாடுகள் இல்லை.

 

 

தமிழ் மக்களைப் பொறுத்தவரை மே 2009 வரையூமான காலம். மற்றது அதற்குப் பின்னான காலம் என இரண்டைக் கொண்டுள்ளது. இக்கால மாற்றத்தில் தன்னிடமிருக்கின்ற இனவாதத்க் கருத்தை வெளிப்படுத்தும் பண்பில;  மாற்றத்தைக் கொண்டிருக்கின்றது. ஆனால் அதே கருத்து:க்கைள இன்னும் கொண்டிருக்கின்றது. இந்த இனவாதமானது; சிங்கள மக்களை நோக்கி தம் மீதான அவர்களின் ;அடக்குமுறைகளுக்கு எதிரான செயற்பாடாக வெளிப்படுகின்றது. இங்கு இது முற்போக்கான பாத்திரத்தை ஆற்றுகின்றது.
ஆனால் இந்த இனவாதம் முஸ்லிம்களுக்கு ;எதிராக திருப்பப்படும் பொழுது பிற்போக்கானதாக மாறுகின்றது.

இவ்வாறு திருப்பப்படும ;கருத்துக்கள் மிகவூம ;நச்சத்தன்மை கொண்டவையாக இன்னும ;இருக்கின்றன. முஸ்லிம்களுக்கு ;எதிராக முன்வைக்கப்படும் கருத்துக்கள் இதற்கு ஆதாரமானவை. ;இப்பொழுதும் முஸ்லிம்க ள்வெளியேற்றத்தை நியாயப்படுத்தும் போக்கு காணப்படும் இடத்து தமிழ் தேசம் கேட்ட மன்னிப்பு அர்த்தமிழந்து போகின்றது... தமிழ் தேசத்தின் இவ்வாறான போக்கு ஆபத்தானது. இதை நாம் இப்பொழுதே கேள்விக்குட்படுத்து வேண்டும்.

 

இந்தடிப்படையில்தான் உங்கள் கருத்தின் மீதான எனது விமர்சனம் இருக்கின்றது.
அடக்குமுறையை எதிர்நோக்குகின்ற தேசம் என்றவகையில் நாம் ;மிகவூம் நுHண்ணுணர்வூ கொண்டவர்களாக இருக்கவேண்டும். ஆனால் அது நம்மில் குறைவாகவே இருக்கின்றது.

நாம் முஸ்லிம்களுக்கு எதிராக செய்த செயற்பாடுகளுக்குhக மன்னிப்பு கேட்பது ;நமது பொறுப்பு. ஆனால் மறுவளமாக நாம் மன்னிப்பு ; கேட்Nடோம்  அவர்கள் செய்த தவறுக்கு அவர்கள் மன்னுப்பு கேட்கவில்லை என எதிர்பார்ப்பது இனு:மொருவகையான அதிகாரத்துவமாகும்.
அவர்கள் கேட்பதும் கேட்காமல் இருப்பதும் அவர்களைப் பொறுத்தவிடயம்.

 

நாம் புறம் அடக்கப்படுகின்றவர்களாகவூம் மறுபுறம் நமக்குளிருக்கின்ற சிறுபான்மை இனத்திற்கு எதிரான அடக்குமுறைக் கூறுகளைக் கொண்டிருக்கின்றௌம் என்பதானலும் நமது கருத்துக்கள் செயற்பாடுகள் பண்புகள் மிகவூம் உயரந்தவையாக இருக்கவேண்டி உள்ளது. இது அவசியமான ஒன்றாகும்.

 

விக்கிரமபாகு மற்றும் சரத் தொடர்பாக உங்களைப் போலவே நானும் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். ஆனால் அது கணக்கில் எடுக்கப்படவில்லை.

தேர்தல் 2010: தமிழ் பேசும் ... - தேசம்

 

 

http://thesamnet.co.uk/?p=17994

 

 

முள்ளிவாய்க்காலில் நடந்தது இராணவ ;அரசியல் தற்கொலை. ;இத் தற்கொலையூடன் உடன்படவில்லையாயினும் நம் கைகளை விட்டு சென்று விட்டது.
ஆனால் சரத்திற்கு ஆதரவளித்தமை தமிழ் தேசம் செய்யத இரண்டாவது அரசியல் தற்கொலை.
என்ன செய்வது நாம் அரசியலில் முன்னேற ;இன்னும் நிறைய இருக்கின்றது.

 

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் மீராபார‌தி திரிக்கு சம்மந்தம் இல்லாத கேள்வி நீங்களா நட்சத்திர‌ன் செவ்வந்தியன்?...பதில் சொல்ல விருப்பமில்லா விட்டால் விட‌வும்

தவறான தகவல்... ரதி

அவரிடமிருந்து வெகு துரத்தில் இருப்பவன்....
இடத்தாலும் கருத்துக்களாலும்...

 

  • கருத்துக்கள உறவுகள்

தவறான தகவல்... ரதி

அவரிடமிருந்து வெகு துரத்தில் இருப்பவன்....

இடத்தாலும் கருத்துக்களாலும்...

 

ஓ நன்றி தகவலுக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தடிப்படையில்தான் உங்கள் கருத்தின் மீதான எனது விமர்சனம் இருக்கின்றது.

 

 

அடக்குமுறையை எதிர்நோக்குகின்ற தேசம் என்றவகையில் நாம் ;மிகவூம் நுHண்ணுணர்வூ கொண்டவர்களாக இருக்கவேண்டும். ஆனால் அது நம்மில் குறைவாகவே இருக்கின்றது.

நாம் முஸ்லிம்களுக்கு எதிராக செய்த செயற்பாடுகளுக்குhக மன்னிப்பு கேட்பது ;நமது பொறுப்பு. ஆனால் மறுவளமாக நாம் மன்னிப்பு ; கேட்Nடோம்  அவர்கள் செய்த தவறுக்கு அவர்கள் மன்னுப்பு கேட்கவில்லை என எதிர்பார்ப்பது இனு:மொருவகையான அதிகாரத்துவமாகும்.

அவர்கள் கேட்பதும் கேட்காமல் இருப்பதும் அவர்களைப் பொறுத்தவிடயம்.

 

 

பதிலிற்கு நன்றிகள்.  நீங்கள்  குறிப்பிட்டது போல  நாம் முஸ்லிம்களிற்கு  எதிராக  செய்த செயற்பாடுகளிற்கு மன்னிப்பு  கேட்பது நமது பொறுப்பு  ஆனால் அவர்களிடம் அதை எதிர் பார்ப்பது  இன்னொரு வகையான  அதிகாரத்துவம் என  குறிப்பிட்டுள்ளீர்கள்.  நல்லது  இங்கு தனிப்பட்ட முறையில்  எனக்கு நிறைய முஸ்லிம்  சிங்கள நண்பர்கள உள்ளார்கள் . நான் இயக்கதில் நான் வேலை செய்த காலங்களில் கூட  அவர்களோடு நட்பாகவும்  பல விடயங்களில் எனக்கு உதவியாகவும் இருந்திருக்கிறார்கள்.எனக்கு  நெருங்கிய  கிழக்கு மாகாண முஸ்லிம் நண்பன் ஒருவன் உள்ளான்  இப்பொழுதும் அரபு நாட்டில்  பொறியியலாளராக  இருக்கிறான். புலிகள் அமைப்பில் இருந்தவன் பின்னர் புலிகள் அமைப்பில் இருந்து  முஸ்லிம்கள்  வெளியேற்றப் பட்ட போதும் களையெடுக்கப் பட்டபோதும்  அவன் இயக்கத்தில்  இருந்து வெளியேறி கொழும்பில்  இருந்த காலங்களில்  என்னோடு தொடர்பிலும் இருந்தவன். அது இன்னமும் தொடர்கின்றது. கிழக்கில் முஸ்லிம்களால்  தமிழர்கள் தாக்கப் பட்ட போதும். தமிழர்களால் முஸ்லிம்கள் பள்ளி வாசலில் கொலை செய்யப் பட்ட நிகழ்வு யாழ் முஸ்லிம் வெளியேற்றம் என நடந்த போதும் அதைப்பற்றி நாங்கள்  பெரிதாய் கதைத்ததே கிடையாது காரணம் அதன் பின்னான  அரசியல்.  பழிவாங்கல் என்பன எமக்கு தெளிவாக தெரிந்திருந்தது.ஆனால் கொழும்பில் ஒரு  சந்தர்பத்தில்  ஒரு நடவடிக்கையை  செய்ய போன இடத்தில் எனக்கும் அவனிற்கும் பிரச்சனையாகி அவன் எனது முகத்தில் துப்பிவிட கோபம் வந்து நான் அவனை அடித்துவிட  செய்யப்போன காரியம் நடக்குமா இல்லையா என்கிற சூழல் அதைவிட எங்கள் பல ஆண்டு நட்பு  உடையுமா என்கிற நிலை. நான் சில வினாடிகளிலேயே  நான் அவனிடம் மன்னிப்பு கேட்க  அவனும் தனது கையால் எனது முகத்தில் இருந்த எச்சிலை  துடைத்தபடி மன்னிப்பு கேட்டிருந்தான். நாங்கள் செய்யபோன  காரியத்தை வெற்றி கரமாக முடித்திருந்தோம். இன்றுவரை நட்பு தொடர்கிறது.  இதனை நான் இங்கு எழுதக் காரணம்.

 

சாதாரணமாக  இரண்டு நபர்களிற்குள் நடந்த விடயத்திலேயே  பரஸ்பரம் புரிந்தணர்வு  நான் மன்னிப்பு கேட்டது அவனும்  என்னை மன்னித்து மன்னிப்பு கேட்டிருந்தான். அதே நேரம் எனது மன்னிப்பை  தெரிவித்த  பின்னரும் இது  நான் அவன் மீது  செலுத்தப்போகும்  ஆதிகத்திற்கான மன்னிப்பு . அல்லது  அவனிடம்  நானும்  மன்னிப்பை எதிர் பார்க்கிறேன் இது எனது திமிர்  என நினைத்திருந்து அப்படியே விடாமலல்  தனது வருத்தத்தை தெரிவித்திருந்ததால்   இது அடுத்த கட்டத்தை நகர்த்த உதவியது. எங்கள்  செயற்பாட்டை வெற்றி கரமாக  முடித்திருந்தோம்.

 

ஆனால் அவன் மட்டும் மன்னிப்பு கேக்காமல்   திமிரோடு அடுத்த கட்டத்தை நகர்த்த முயன்றிருந்தால் நான் அவனிற்கு ஒத்துளைப்பு  கொடுத்திருக்க மாட்டேன். இது சாதாரண மனித இயல்பு.  எனவே சாதாரண இரண்டு மனிதர்களிற்கிடையே இத்தனை  உணர்வு நிலை சார்ந்த பிரச்சனை வருக்கின்றபோது  இரண்டு இனம் சார்ந்த பிரச்சனையில்.  நாங்கள் மன்னிப்பு கேட்டிட்டம். அவங்கள் வருத்தமாவது தெரிவித்தால்  தொடர்ந்து  இணைந்து போகலாம் என்பதற்கும் அப்பால் இருவரிற்குமே பொதுவான எதிரியை எதிர்க்கலாம்.என்பது  முக்கியமாகிறதல்லவா??இங்கு நாம் அனைவரும் வெறும் ஆத்மாக்கள் தான் மகாத்மாக்கள் கிடையாது.

Edited by sathiri

நன்றி ;சாத்திரி....
நீங்கள் கூறுவது சரி....

பரஸ்பரம் மன்னிப்பது நல்ல விடயம்...வரவேற்கப்பட வேண்டியது... ஆனால் அதை இருவரும் உணரவேண்டும்...

 

தனிப்பட்ட நபர்களுக்கிடையிலான இவ்வாறு செயற்பாடு என்பது அவர்களது புரிந்துணர்வைப் பொறுத்தவிடயம்....
இது உங்களுக்கு இடையிலான ;ஆத்மார்த்த உறவைக் காண்பிக்கின்றது...த ;
ஆனால் அவ்வாறான புரிந்துணர்வூம் ஆத்மார்த்தமான உறவூம் இலங்கையில் இருக்கின்ற ;தேசங்களுக்கிடையில் இருக்கின்றதா என்றால் அது கேள்விக்குறி.

 

முன்கை எடுத்து ஆரோக்கியமான பாதையில் செல்ல் விரும்புகின்றவர்கள் செல்லலாம்... மற்றவர்கள் வருவது அவர'களது தெரிவூ... அல்லது வரும் வரை காத்திருக்க வேண்டும்... இவ்வாறு வரமுடியாமைக்கு பல காரணங்கள் இருக்கலாம்...;

இக் காரணங்களை ;அடக்கிய தேசம் ஒன்று மதிப்பிட ;முடியாது...
 

 

மாகாத்மாக்கள் என்று ;யாரும் இல்லை...
நாம் எல்லோரும் சாதாரண ஆத்மாக்களே...

 

  • கருத்துக்கள உறவுகள்

 

ஷோபா சக்தி எல்லாருடனும் பகிரும் தன் முகப்புத்தகத்தில் எழுதியிருப்பது:

 

 

 
 
 
கேள்விக்கு உள்ளாகும் நபர் அவற்றிற்கு பதிலளிக்க வேண்டியது அவரது கடமையாகிறது. கேள்விகளை தட்டிக் கழித்துப் ஏளனப் புன்னகையோடு கடந்து செனற காட்சி நேற்று மட்டுமே நடந்தேறியது. கேள்விகள் கேட்டதற்காக இலக்கியச் சந்திப்பு அமைப்பாளர்கள் கேள்விக்கு உள்ளானவரிடம் மன்னிப்புக் கேட்ட கேவலமும் புதிதாக நேற்றே நிகழ்ந்திற்று.
 
 
 

 

 

 

 

இதைச் சொல்லும் சோ.ச‌ வே த‌ன‌து இணைய‌ப் ப‌க்க‌ங்க‌ளில் சில‌ பின்னூட்ட‌ங்க‌ளையும் கேள்விகளையும் அக‌ற்றி விட்டுக் க‌ம்மென்று இருப்பார். ஒரு த‌ட‌வை யாரோ கேட்ட‌ போது "உங்க‌ள் குப்பைக‌ளைப் போட‌ என‌து இணைய‌ப் ப‌க்க‌ம் குப்பைத்தொட்டிய‌ல்ல‌" என்று ப‌தில் அளித்திருந்தார். ஆலோசனை சொல்ல‌ த‌குதியான‌ ஆள் தான் இந்த‌ சோ.ச‌. இந்தத் த‌ண்ணிச் சாமிக‌ளெல்லாம் இல‌க்கிய‌ வாதிக‌ளாகினால் க‌ட்டாய‌ம் ஒரு நாள் த‌மிழ் இல‌க்கிய‌த்திற்கு நோப‌ல் ப‌ரிசு கிடைத்து விடும்! <_<

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி தனி இரு நபர் சார்ந்த விடயம் என்பதனால்,நீங்களும் உங்கள் நண்பரும் மன்னிப்புக் கேட்டுவிட்டீர்கள். அத்தோடு விடயம் முடிந்தது. ஆனால் இரு சமூகங்களில் எத்தனை தரப்பட்ட மக்கள் இருப்பார்கள். அதில் ஒரு 5% மக்கள் கூட சேர்ந்து பயணிக்க முடியாது போன எம் சமூகத்துடன் கட்டிக் கொடுப்புக்கள், சுயநலம், தன் தேவையை மட்டுமே முக்கியமாகக் கருதும் இனம் எப்படி சேர்ந்து பயணிக்கும் என எண்ணுகிறீர்கள்.???இரு இனங்களுக்கும் இடையேயான காலம் காலமாக ஊறிப்போன இனத் துவேசத்தை விடுத்து, முஸ்லிம் மக்கள் எம்முடன் சேர்ந்து பயணிப்பது என்பது கடைசிவரை நடக்க முடியாத, பழக்கமில்லாத ஒருவர் கயிற்றில் அந்தரத்தில் நடப்பது போன்றதே.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ;சாத்திரி....

நீங்கள் கூறுவது சரி....

பரஸ்பரம் மன்னிப்பது நல்ல விடயம்...வரவேற்கப்பட வேண்டியது... ஆனால் அதை இருவரும் உணரவேண்டும்...

 

தனிப்பட்ட நபர்களுக்கிடையிலான இவ்வாறு செயற்பாடு என்பது அவர்களது புரிந்துணர்வைப் பொறுத்தவிடயம்....

இது உங்களுக்கு இடையிலான ;ஆத்மார்த்த உறவைக் காண்பிக்கின்றது...த ;

ஆனால் அவ்வாறான புரிந்துணர்வூம் ஆத்மார்த்தமான உறவூம் இலங்கையில் இருக்கின்ற ;தேசங்களுக்கிடையில் இருக்கின்றதா என்றால் அது கேள்விக்குறி.

 

முன்கை எடுத்து ஆரோக்கியமான பாதையில் செல்ல் விரும்புகின்றவர்கள் செல்லலாம்... மற்றவர்கள் வருவது அவர'களது தெரிவூ... அல்லது வரும் வரை காத்திருக்க வேண்டும்... இவ்வாறு வரமுடியாமைக்கு பல காரணங்கள் இருக்கலாம்...;

இக் காரணங்களை ;அடக்கிய தேசம் ஒன்று மதிப்பிட ;முடியாது...

 

 

மாகாத்மாக்கள் என்று ;யாரும் இல்லை...

நாம் எல்லோரும் சாதாரண ஆத்மாக்களே...

 

 

 

மெசொபொத்தேமியா சுமேரியர்

Posted Today, 05:50 PM

சாத்திரி தனி இரு நபர் சார்ந்த விடயம் என்பதனால்,நீங்களும் உங்கள் நண்பரும் மன்னிப்புக் கேட்டுவிட்டீர்கள். அத்தோடு விடயம் முடிந்தது. ஆனால் இரு சமூகங்களில் எத்தனை தரப்பட்ட மக்கள் இருப்பார்கள். அதில் ஒரு 5% மக்கள் கூட சேர்ந்து பயணிக்க முடியாது போன எம் சமூகத்துடன் கட்டிக் கொடுப்புக்கள், சுயநலம், தன் தேவையை மட்டுமே முக்கியமாகக் கருதும் இனம் எப்படி சேர்ந்து பயணிக்கும் என எண்ணுகிறீர்கள்.???இரு இனங்களுக்கும் இடையேயான காலம் காலமாக ஊறிப்போன இனத் துவேசத்தை விடுத்து, முஸ்லிம் மக்கள் எம்முடன் சேர்ந்து பயணிப்பது என்பது கடைசிவரை நடக்க முடியாத, பழக்கமில்லாத ஒருவர் கயிற்றில் அந்தரத்தில் நடப்பது போன்றதே.

 

 

 

மீரா பாரதி  மற்றும்.சுமே...அந்த சம்பவத்தை ஒரு உதாரணத்திற்காகத்தான் குறிப்பிட்டிருந்தேன் அதாவது  இரு தனிப்பட்டவர்களிற்கிடையேயே  பிரச்சனை  எனும்போது பரஸ்பரம் மன்னிப்பு விட்டுக்கொடுத்தல் என்பது இரண்டு பக்கமுமே அவசியமாகின்றபோது இரண்டு இனங்களிடையேயான  30 ஆண்டு கால யுத்தம் கொடுத்த  மனக்கசப்புக்கள் வடுக்கள் என்பன மாறுவதற்கு  எத்தனை விட்டுக் கொடுப்பக்கள்  எவ்வளது தடைவை மன்னிப்புக்கள்.செய்யவேண்டியிருக்கும் அப்பொழுதான்  மீண்டும் ஒரு அடிப்படை   நம்பிக்கையை   கட்டியெழுப்பலாம்.சாதாரணமான கணவன் தனைவி சண்டைகளே  கோபம் தணிவதற்கு இரண்டு நாள் எடுக்கும் போது  இரண்டு இனங்களிடேயான  மனக்கசப்புக்கள்  தீருவதற்கு  பல வருடங்கள் எடுக்கும். அவை இரண்டு தரப்பு விட்டுக் கொடுப்புகளால் மட்டுமே முடியும்.இல்லையேல் பொது எதிரியான சிங்களம் இரண்டு இனங்களையும் வைத்து  தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும்.  நாங்கள் இணைத்து  பொது எதிரியை எதிர்ப்பதா?? அல்லது  நாங்கள் சண்டையிட்டு  பொது எதிரியிடம் பலியாவதா அதனை அங்கு உள்ள  இரண்டு இன மக்களுமே தீர்மானிக்கவேண்டும்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்தர்களிடம் முஸ்லீம் காங்கிரஷ் தலைவர் ஹக்கீம் பகிரங்க மன்னிப்பு கோரினார்

Published on August 10, 2012-10:13 am   · 

rauf_hakeem.jpgஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சில நாட்களுக்கு முன் தனது மாகாணசபை பிரசாரத்தின்போது தான் பேசிய பேச்சு தொடர்பாக மகாசங்கத்திடமும் ஜாதிக ஹெல உறுமயவிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
கல்முனை சாய்ந்தமருதுவில் அண்மையில் ஹக்கீம் கூறிய கருத்து, பௌத்த பிக்குகள் மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியோரிடையே இடையே மிகவும் கடுமையான விசனத்தை தோற்றுவித்திருந்தது.
இதனையடுத்து ஹக்கீம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
சகல பௌத்த மக்களிடமும் தயக்கம் ஏதும் இன்றி மன்னிப்பு கேட்கின்றேன். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற வகையில் இதற்கு முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றேன். எனவே இந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும்படி இலங்கை மகாசங்கத்திடம் விசேடமாக கேட்டுக்கொள்கின்றேன் என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தான் பேசிய பேச்சு இலங்கையின் பிரதான சமயமான பௌத்தத்தின் பாதுகாவலர்களான மகாசங்கத்தினர் பற்றி தரக்குறைவான கருத்துரைத்தது போன்று அமைந்துவிட்டது என தெரிவித்திருக்கும் ரவூப் ஹக்கீம் அதற்காக பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.



http://www.thinakkathir.com/?p=40102

 

தமது தேவைக்கு ஏற்ப ,சுயநலத்துக்காக முஸ்லிம் தலைவர்களால் மன்னிப்பு கேட்க முடிகிறது.

 

 

Edited by nunavilan

சிறிலங்கா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தமிழர்கள் சிறிலங்கா அரசுகளிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள், ஆனால் பிரச்சினை தீரவில்லை.ஆகையால் இப்படியே இனியும்  பேசிக் கொண்டு இருப்பதால் பிரச்சினை தீரப் போவதில்லை.

 

சிலர் இன்னமும் சிறிலங்காவின் அடிப்படைப் பிரச்சினைகளை விளங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை அல்லது விளங்கியும் சுய தேவைகளுக்காக நடிக்கிறார்கள்.

 

சிறிலங்கா அரச கட்டமைப்பு பவுத்த பேரினவாதத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது. பவுத்த பேரினவாத்தைக் கையில் எடுக்காத எவருமே ஆட்சி அமைக்க முடியாது என்பது சிறிலங்காவின் வரலாறு.

இன்று மகிந்த தோற்கடிக்கப்பட முடியாத மன்னராக இருப்பதுவும் அதனாலேயே. தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கி ஆட்சியை இழக்க எந்த ஆட்சியாளர் தான் விரும்புவார். இதனாலேயே இந்திய , அமெரிக்க அரசுகளின் சொற்களையே உதாசீனம் செய்யும் நிலையில் மகிந்த அரசு இருக்கிறது. இத் தகைய நிலையில் சிறிலங்கா அரசுடன் பேசிக் தீர்க்கலாம் என்று சொல்வது எத் தகைய அரசியல் ஆக இருக்க முடியும்? நீங்கள் வட்ட மேசை, சதுர மேசை சர்வ கட்சி எனப் பேசிக் கொண்டே இருங்கள் நாங்கள் அந்தக் கால அவகாசத்தில் , தமிழர் தாயகம் என்பதையும் தமிழர் என்னும் அடையாளத்தையே இல்லாமல் செய்து விடுவோம் என்னும் , சிங்கள பவுத்த மேலாண்மையின் பாற்பட்டவர்களின் திட்டத்தை வலுப்படுதுவதே இந்த , 'பேசிக்' கொண்டே இருங்கள் என்னும் கோசம்.

 

இன்றைய நிலையில் , இந்து சமுதிரத்தை மையப்படுத்திய , ஒரு பூகோள அரசியல் சிறிலங்காவில் நிகழ்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இதனையும், இந்திய -சீன முரண்பாட்டையும், தமிழகம்,புலம் சார் தமிழர்களின் போராடும் சக்திகளையும், தமிழக - இந்திய அரசுகளையும் சார்ந்து , ஒரு மதியூகமான அரசியல் சதுரங்கத்தை விளையாடுவதன் மூலம், சிறிலங்கா பவுத்த பேரின வாதத்திற்கு மிகப் பெரிய நெருக்கடியை எம்மால் கொடுக்க முடியும். 

 

சிறிலங்காப் பொருளாதரம் மிகப் பெரிய அளவில் சர்வதேச சக்திகளால் முண்டு கொடுக்கப்பட்டு வருகிறது. எப்போதெல்லாம் சிறிலங்கா அரசு பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்கிறதோ அப்போது அவை வெளிச் சக்திகளின் சொற்படி நடந்து இருக்கின்றன.

 

எமது மூலோபாயம் என்பது பல் வேறு அமைப்புக்கள் , தமிழக மக்கள் , தமிழக அரசு என்பனவற்றிற்கூடாக , தமிழர்களுக்கான அரசு ஒன்றை நிறுவும் செயற்பாட்டினூடாகவே , சிறிலங்காவில் தமிழர்களுக்கு ஒரு பாதுகாப்பான நிரந்தரமான தீர்வை எட்ட முடியும் என்னும் யதார்த்ததில் இருந்து கட்டி அமைக்கப் பட வேண்டும். 

 

இவற்றின் அடிப்படையிலேயே கூட்டமைப்பாகட்டும், மக்கள் முன்னணியாகட்டும், பிரித்தானிய தமிழர் பேரவை ஆகட்டும், நாடு கடந்த அராசாகட்டும், தமிழ் சொலிடாரிட்டி ஆகட்டும் , தமிழக மாணவர் கூட்டமைப்பு ஆகட்டும் செயற்பட்டு வருகின்றன.

 

புலத்தில், களத்தில், தமிழகத்தில் எனச் செயற்படும் இவ் அமைப்புக்களின் செயற்பாடுகளுக்கு அவற்றுடன் இணைத்து  அவ் அப் பகுதி மக்கள் செயற்பட வேண்டும். இவ் அமைப்புக்கள் தமக்கிடையே புரிந்துனர்வை வளர்ப்பதற்காக தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டு தான் இருக்கின்றன.இவ் அமைப்புக்களுக்கு வெளியே இருப்பவர்கள் தான் இவற்றிற்கிடையே ஆன முரண்பாடுகளை வளர்க்கிறார்கள் அல்லது இருப்பதாகாக் கருதிக் கொள்கிறார்கள்.ஆனால் இவ் அமைப்புக்கள் தமது தளத்திற்க்கு ஏற்றவாறு தமது செயற்பாடுகளை வடிவமைத்துக் கொண்டிருப்பதால் அவற்றின் செயற்பாட்டில் வேறு பாடுகள் இருக்கின்றன.இந்த வேறு பாடுகள் அடைய நினைக்கும் இலக்கில் இல்லை. எல்லாப் பாதைகளும் ரோமுக்கே என்பதைப் போல் செயற்பாட்டு வடிவில் இருக்கும் வேறு பாடுகளை ஊதிப் பெருக்கி வெறும் வாயை மெல்வது தமிழர் தரப்பிற்கு எந்த நன்மையையும் தரப் போவதில்லை.

 

நாற்பது ஆண்டு கால புலம் பெயர் ' மாற்றுச் சிந்தனை' எந்த மக்களுக்காவது எதாவது பயனைத் தந்திருக்கிறதா? ஒரு சிறு பொறியைக் கூட அது கிழப்பவில்லை.

தமக்கு இருக்கும் இணைய ஊடக வழி , தம்மைத் தாமே  முதுகு சொரிந்து கொள்ள மட்டுமே இது உதவி இருக்கிறது.

 

சரியான அரசியற் தெளிவுள்ளவர்கள் , மக்கள் மீது உண்மையான கரிசனை உள்ளவர்கள்  சரியான அமைப்புக்களைத் தேர்ந்தெடுத்து, செயற்படுவதே சிறந்த தெரிவாக இருக்க முடியும். சுய சொரிதலில் இன்பம் காண்பவர்கள், இவ்வாறான 'இலக்கியச் சந்திப்புக்களில்' சொரிந்து கொண்டு இருக்கட்டும்.    

 

 

அண்ணை, இலக்கிய சந்திப்பிற்கும் இலங்கை பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம் ,அது கூட விளங்காமல் தமிழர்களுக்கு தீர்வு சொல்லும் அளவிற்கெல்லாம் வந்துநிற்கின்றார்கள். 

வெறும் கையால் முழம் போடுவதற்கு எம்மவரைவிட்டால் விட்டால் ஆளில்லை .இலங்கை சுதந்திரம் கிடைத்ததில் இருந்து எமது உரிமைக்காக போராடுகின்றோம் ஆனால் எதையாவது உருப்படியாக செய்தோமா ? 

போன மாதம் எழுந்த தமிழ்நாட்டு மாணவர் கிளர்சியை பார்த்து இனி எமக்கு விடுதலை என்று எவன் கதைத்தாலும் அவனை இருத்தி வைத்து அருவரி படிக்க வைக்கவேண்டும் (கன பேர் வெளிக்கிட்டுஇருக்கினம் ,அது முன்னர் நான் எழுதிய படுத்திருக்கும் நாய் காரை துரத்திய கதைதான் ),இதற்குள் புலம் பெயர்ந்த மேலே சொன்ன அமைப்புகள் விடுதலை எடுத்து தரும் என்ற கருத்து அருவரியில் விட்டாலும் சரிவராத கேசுகள் .

இப்படியே ரூம் போட்டு கற்பனையில் பனை வளர்த்து கள்ளு குடித்துக்கொண்டுதான் பல தமிழர்கள் இருக்கின்றார்கள் .யுத்தத்திற்கு பின்னால் எமது மண் ,மக்கள் நொடிந்து போய்தான் உள்ளார்கள் தொடர்ந்தும் எதுவித தீர்வும் இல்லாமல் இப்படியே இழுபட்டால் நேரடியாக பாதிக்கபடுபவன் ஏதோ ஒருவழியில் தீர்வை தேடுவான் அப்போது சிலவேளை ஏதும் தீர்வு கிடைக்கலாம் .

 

குறிப்பு -பவுத்த பேரினவாதத்தை கையில் எடுத்து சந்திரிகா ஆட்சியை பிடிக்கவில்லை ,யுத்தத்தால் வெறுப்படைந்த மக்கள் சந்திரிகாவை தேர்ந்தெடுத்தார்கள் .

குறிப்பு -மக்களைப்பற்றி ,சர்வதேசத்தை பற்றி எள்ளளவும் கவலைப்படாத வெறும் ஆயுதத்தை வைத்து நாடுபிடிப்பம் என்று சொன்ன புலிகளின் பின்னால் சென்றவர்கள் எதையும் நம்புவார்கள் .

////அண்ணை, இலக்கிய சந்திப்பிற்கும் இலங்கை பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்//

 

இது தான் எனக்கும் கன காலமா விளங்காம இருக்கு, இதை இந்தச் சந்திப்பை நாடாத்துபவர்கள் தான் விளங்கப்படுத்த வேணும்.

 

 

//பவுத்த பேரினவாதத்தை கையில் எடுத்து சந்திரிகா ஆட்சியை பிடிக்கவில்லை//

 

ஆட்சி பிடிப்பதற்கான/இழப்பதற்கான  காரணங்கள் பல இருக்கலாம், ஆட்சி தொடர்ந்து நடாத்த சமாதனத்திற்கான யுத்தம் நாடாத்தியவர் சந்திரிகா என்பதை மறந்து விடீர்களா? பச்சையும், நீலமும் மாறி மாறி வரலாம் ஆனால் பவுத்த பேரினவாதம் இன்றி ஆட்சி நடாத்த முடியாது.  

 

//தொடர்ந்தும் எதுவித தீர்வும் இல்லாமல் இப்படியே இழுபட்டால் நேரடியாக பாதிக்கபடுபவன் ஏதோ ஒருவழியில் தீர்வை தேடுவான் அப்போது சிலவேளை ஏதும் தீர்வு கிடைக்கலாம் .//

 

நேரா நாங்கள் எல்லோரும் தான் பாதிக்கப்பட்டோம், அதனால் தான் தீர்வைத் தேடிக் கொண்டு இருக்கிறோம். அதற்காகத் தான் அமைப்புக்கள் இயக்கங்கள் எல்லாம்.தனி நபர்கள் பலம் அற்றவர்கள். பல தனி நபர்கள் கூடிச் சில செயல்களைச் செய்வதற்க்குத் தான் அமைப்புக்கள் இயக்கங்கள் தேவை. அவ்வாறு அல்லாது செயற்படும் அமைப்புக்கள் அழிந்து போகும், புதிய அமைப்புக்கள் ,தலைவர்கள் உருவாகிறார்கள். தனி நபர்கள் இவ்வாறு கூடிக் கதைத்து  மாறி மாறி சொரிந்து விட்டு  கலைந்து போவார்கள்.

 

 

 

 

கீழே உள்ள லிங்கை வாசிக்க தான் தெரியுது இலக்கிய சந்திப்பின் இரண்டாம் நிகழ்வை பற்றி .....இவைக்குள்ளை இருந்த கன காலம் இருந்த உள் குத்தின் வெளிப்பாடு தான் முதல் நாள் புதிசா போன இரண்டு பேச்சாளர்கள் மேலை  பாய்ந்திருக்கிறான்கள் என்று  நினைக்கிறன்

http://www.ciththan.blogspot.de/

 

http://inioru.com/?p=34690

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Tu Senan
il y a 10 heures, à proximité de Londres

இலக்கியச் சந்திப்பு –தொடரும் அவதூறுகள்

எங்களுக்குள்ள ஒண்டும் நடக்கேல்ல – கடைசி இலக்கிய சந்திப்பில் நடந்த கலவரத்துக்கு காரணம் வெளியில இருந்து வந்து புலி நாக்குகளின் சதி –என்ற பாணியில் ராகவன் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். ராஜா பொருத்தமற்ற குற்றச்சாட்டுகளை வைத்தார். நான் அதை பொருட்டாக எடுக்கவில்லை. என்று பெருந்தன்மை காட்டியுள்ளார். குற்றச்சாட்டு வைத்தால் அதை மறுத்து எழுதவேண்டும் - இல்லை என்றால் ஏற்று மன்னிப்புத் தெரிவிக்கவேண்டும். பொருட்டாக எடுக்கவில்லை என பிராமணிய நழுவல் கதைகள் கதைக்கக்கூடாது. தவிர நான் இரண்டாம் நாள் மாலை நிகழ்வுக்கு மட்டும் வந்ததாக ஒரு பொய் வேறு சொல்லியிருக்கிறார். இவரது நன்பர்கள் பலருக்கும் மெயிலில் அனுப்பிக்கொண்டிருக்கும் சில பொய்களையும் அவதூறுகளையும் கீழே தந்துள்ளேன்.

"இந்த இலக்கிச் சந்திப்பின் இரு நாள் அமர்வுகளிலும் கலந்துகொண்டு அங்கு நிகழ்ந்தவற்றை அவதானித்தவன் என்று சிவலிங்கம் எழுதுவது உண்மையாகும்.பதிவு செய்ய வேண்டும் என்று போலிக்கூச்சல் போடும் சேனன் என்பவன் இலக்கியச்சந்திப்பில் பதிவுசெய்யாமல்,பிரவேசக்கட்டணமும் கட்டாமல் உள்ளே புகுந்தவன்.மூவாயிரம் பவுண்டு செலவு என்றும் காசு துண்டு விழுகிறது என்றும் சந்திப்புநடத்தியவர்கள் மேடையில் சொல்லியும் இவன் மாதிரி ஆள்கள் தொப்பியும் போட்டுக்கொண்டுநுளைந்து விடுகிறானுகள்.இரண்டுநாள்கள் மண்டபம் எடுத்து சந்திப்புநடத்துபவர்களுக்கு எவ்வளவு கஷ்டம் என்று இம்மாதிரி பொறுக்கிகள் யோசிப்பது இல்லை.வாய் கிழிய புரட்சி பேசவெட்கப்படமாட்டார்கள.இவனுகள் கருத்துதெரிவித்து கட்டுரை எழுதவெளிக்கிட்டுவிடுவானுகள்"

"அப்துல் காதர் இலக்கியசந்திப்பு பற்றி எழுதியுள்ளார் .இலண்டனில் நடைபெற்ற மூன்று இலக்கிய சந்திப்புகளிலும் தான் கலந்துகொண்டதாக எழுதியுள்ளார். 1994 ல் இலண்டனில் நடந்த முதல் இலக்கியசந்திப்பில் இவர் எப்போது கலந்து கொண்டார்?
2006 ல் இவர் கலந்து கொள்ளவேஇல்லை.இவர் அரசியல் ஆய்வு செய்யும் பம்மாத்து இருக்கட்டும்.முதலில் பொய் சொல்லாமல் இருக்க பழகவேண்டும் .தன்னை அறிமுகப்படுத்தும் படலத்திலேயே இப்படி பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார் .
பார்வையாளர்களை தீர்மானம் எடுக்கும் பிரதிநிதிகளாகக்கருதுவதிலுள்ள ஆபத்தையும் அபத்தத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் நன்கு புரிந்துகொண்டு இத்தீர்மானம் எடுக்கப்படவேண்டும் என்று எழுதியிருக்கிறார் இந்தப்பிரபலம் .
ஏதோ இந்த அறிவாளிகள் ஒருபக்கம் பொழிந்து தள்ளுவார்கள் ,மறுபக்கம் பார்வையாளர்கள் என்று ஒரு ஆபத்தான,அபத்தமான ,சந்தர்ப்பவாத முட்டாள் கூட்டம் ஒன்று இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு இவர் தெரிவித்துள்ள கருத்தின் விஷத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கையில் அடுத்த கூட்டத்தை நடத்தக் கூடாது என்று இவர் பேசுவதற்கு யாராவது கேனயன் மண்டபம் எடுத்துக்கூட்டம் நடத்தவேண்டும் .இந்தப்பிரபலம் பேசிவிட்டுப் போய்விடும்.இலக்கிய சந்திப்பின் இறுதி அமர்வு வரை உக்கார இவருக்கு நேரம் ஏது? அடுத்த GTF கூட்டத்திற்கு பேசப்போகவேண்டுமே!
இலக்கியசந்திப்பில் காலாவதியாகிப்போன பழைய நபர்களை நீக்கி புதியவர்களை ஆக்க வேண்டும் என்று தேசம் எழுதியிருப்பதை கவனம் எடுக்கவேண்டும் ."

 

வெட்டியாய் இலக்கிய சந்திப்பு என்று ஒன்று அதில் போய் நன்றாக மூக்குமுட்ட சாப்பிட்டுவிட்டு வெட்டிக் கதைகள் சனத்துக்கு உர்ர்முழுக்க.

 



:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.