Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் அழகிப்போட்டி தேவையானதா ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண் பிள்ளைகள் வற்புறுத்தல் இன்றி ஆர்வத்துடன் பங்கெடுத்தால் என்ன தவறு இருக்கின்றது? தன்நம்பிக்கையையும் துணிச்சலையும் வளர்க்க இப்படியான போட்டிகள் உதவும்தானே.

அதற்காக பிகினியில் வரவேண்டும் என்று வீணீர் வடிக்கவேண்டாம் அல்லது பிகினியில் வந்து கலாச்சாரத்தைக் காற்றில் பறக்க விட்டுவிடுவார்களே என்று அங்கலாய்க்கவும் வேண்டாம்.

திடீரென ஏற்பட்ட பணவீக்கமும்

திடீரென ஊடுருவும் பழக்கவழக்கங்கள் நாகரீகங்களும்

சமூகத்துக்கு ஏற்புடையதல்ல......

அவற்றை கையாள எம்மால் முடியாது

அசிங்கப்பட்டு நிற்கப்போகின்றோம் :(

  • Replies 52
  • Views 5.3k
  • Created
  • Last Reply

என்னைப் போன்ற அழகியல் உணர்ச்சி ததும்பி வழிகின்ற, எதையும் கலைக் கண்ணுடன் பார்க்கின்ற இளந்தாரிகளுக்குத்தான் இப்படியான நிகழ்ச்சிகளின் அருமை பெருமை புரியும். புலம்பெயர் ஒவ்வொரு நாட்டிலும் மாதம் தோறும் இப்படியான நிகழ்சிகள் கண்டிப்பாக வைக்க வேண்டும்

சாமத்திய சடங்கு எனும் அசிங்கப் புடிச்ச நிகழ்ச்சியை விட இது 1000 மடங்கு சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

திடீரென ஏற்பட்ட பணவீக்கமும்

திடீரென ஊடுருவும் பழக்கவழக்கங்கள் நாகரீகங்களும்

சமூகத்துக்கு ஏற்புடையதல்ல......

அவற்றை கையாள எம்மால் முடியாது

அசிங்கப்பட்டு நிற்கப்போகின்றோம் :(

புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமாக வேரூன்றியுள்ளது தமிழ் சமூகம். எனவே நீங்கள் விரும்புகின்றீர்களோ இல்லையோ மாற்றங்கள் தானாகவே எமது சமூகத்தில் வந்துகொண்டே இருக்கும். இவற்றைத் தவிர்க்கமுடியாது.

தமிழ்ச் சமூகத்தினர் தங்களால் இயன்றவரை தமது பிள்ளைகளைக் கட்டுக்கோப்பாகவும் அதேவேளை கட்டுப்பெட்டித்தனம் இன்றியும் வளர்க்க முயல்கின்றார்கள் என்பது தெரிகின்றது.

உண்மையான யதார்த்தமான கருத்து கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான யதார்த்தமான கருத்து கிருபன்.

ரோசாப்பு ரவிக்கைக்காரி என்ற சிவகுமார் நடித்த பழைய படம் ஒன்றை சில வருடங்களுக்கு முன்னர் பார்த்திருந்தேன். ரவிக்கை அணிவதற்கே கிராமத்தில் எதிர்ப்புக் காட்டியிருந்தார்கள். அத்தகைய பாரம்பரியத்தில் இருந்து வந்த தமிழர்கள் நாகரிகம் என்று வருவது எல்லாவற்றையும் நல்லதோ, கெட்டதோ என்று ஆராயாமல் பூதம், பூச்சாண்டி என்று வெருட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் மாற்றங்கள் இவர்களையெல்லாம் தாண்டி வந்துகொண்டுதான் இருக்கும்!

இலண்டனில் தமிழர்களின் களியாட்ட வைபவங்களுக்கு போகும் அனுபவம் நிறைய இருக்கின்றது. சில இடங்களில் பெண்கள் நடனமாடாமல் இருந்து வேடிக்கை/விடுப்புப் பார்ப்பார்கள். சில இடங்களில் ஆண்கள், பெண்கள் எல்லோரும் சேர்ந்து நடனமாடுவார்கள். தங்கள் இடப் பெண்களை நடனமாட அனுமதிக்காத ஆண்கள் சிலர், பிற இடத்தாரின் களியாட்டங்களில் போய் பெண்களை இழுத்து நடனமாடவும் விரும்புவார்கள். இப்படியான வெளி வேஷங்கள் எதற்கு என்று யோசிப்பேன்!

என்னைப் போன்ற அழகியல் உணர்ச்சி ததும்பி வழிகின்ற, எதையும் கலைக் கண்ணுடன் பார்க்கின்ற இளந்தாரிகளுக்குத்தான் இப்படியான நிகழ்ச்சிகளின் அருமை பெருமை புரியும். புலம்பெயர் ஒவ்வொரு நாட்டிலும் மாதம் தோறும் இப்படியான நிகழ்சிகள் கண்டிப்பாக வைக்க வேண்டும்

சாமத்திய சடங்கு எனும் அசிங்கப் புடிச்ச நிகழ்ச்சியை விட இது 1000 மடங்கு சிறந்தது.

இந்த  சாமத்திய சடங்கை  செய்பவர்கள் தங்கள் உறவினர்களுடன் செய்தாலும் பரவாயில்லை, ஒரு சில இடங்களில் தம்முடன் பணிபுரியும் வேற்று

இனத்தவர்களைகூட இந்த நிகழ்வுக்கு அழைத்து அவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

கனடாவில் பத்து வருடங்களுக்கு முதலே இவையெல்லாம் தொடங்கிவிட்டது .தமிழர்களுக்குரிய பாரம்பரிய :wub:  முறையில் தான் நடந்தது .

சிலவருடங்களுக்கு முதல் அழகு ராணியாக வந்தவரை எனக்கு தெரியும் .அவ்வளவு அழகு இல்லை ஆனால் நன்றாக பரதநாட்டியம் ஆடுவார் .

என்னைப் போன்ற அழகியல் உணர்ச்சி ததும்பி வழிகின்ற, எதையும் கலைக் கண்ணுடன் பார்க்கின்ற இளந்தாரிகளுக்குத்தான் இப்படியான நிகழ்ச்சிகளின் அருமை பெருமை புரியும். புலம்பெயர் ஒவ்வொரு நாட்டிலும் மாதம் தோறும் இப்படியான நிகழ்சிகள் கண்டிப்பாக வைக்க வேண்டும்

சாமத்திய சடங்கு எனும் அசிங்கப் புடிச்ச நிகழ்ச்சியை விட இது 1000 மடங்கு சிறந்தது.

கலைக்கண்ணா காமக்கண்ணா, நீங்க சும்மா பார்த்தாலே பத்துமாசம் :lol:

காலத்தின் தேவையிது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப் போன்ற அழகியல் உணர்ச்சி ததும்பி வழிகின்ற, எதையும் கலைக் கண்ணுடன் பார்க்கின்ற இளந்தாரிகளுக்குத்தான் இப்படியான நிகழ்ச்சிகளின் அருமை பெருமை புரியும். புலம்பெயர் ஒவ்வொரு நாட்டிலும் மாதம் தோறும் இப்படியான நிகழ்சிகள் கண்டிப்பாக வைக்க வேண்டும்

சாமத்திய சடங்கு எனும் அசிங்கப் புடிச்ச நிகழ்ச்சியை விட இது 1000 மடங்கு சிறந்தது.

தம்பியருக்கு இன்னும் சாமத்திய வீட்டின்ரை உள்விசயம் விளங்கேல்லை எண்டு நினைக்கிறன்....... சாமத்திய வீட்டிலை சின்னனுகள் பூத்தட்டுக்கள் வரிசையிலை கொண்டு போவினம்..அப்ப சட்டை நகை டிசைனை கண்டு களிக்கோணும்......அதுக்குப்பிறகு குத்துவிளக்கோடை குளிர்ச்சியாய் ஒரு கும்பல் வரும்...அதுதான்  காவ்சாறி&கில்லிட்டு நகை அதையும் அம்சமாய் ரசிக்கோணும் கணக்கெடுக்கோணும்.....அதுக்குப்பிறகு புட்டுத்தட்டு,பணியாரதட்டு,தேங்காய்த்தட்டு எண்டு ஒரு பெரீய குறூப் வரும்.....சண்ரீவியிலை வாற சீரியல் வில்லிகளை பாத்தமாதிரியிருக்கும்....சாறியள் நகையள்....அவையின்ரை அக்சன் சொல்லிவேலையில்லை.....வயது வட்டுக்கை போனாலும் வரிசையாய் வரேக்கை!!!!! :lol:  :D  
வெள்ளைக்காரன்ரை அழகிப்போட்டியிலையும் விதம்விதமாய் குடை,கைப்பையோடை வரிசையிலை போயினம்....எங்கடை சாமத்தியவீட்டிலையும் விதம்விதமான தட்டுக்களோடை,குத்துவிளக்கோடை வரிசையிலை போயினம்...அவையின்ரை நேரடி விளம்பரவியாபாரம்.எங்கடை கலாச்சாரவியாபாரம். :(
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த  சாமத்திய சடங்கை  செய்பவர்கள் தங்கள் உறவினர்களுடன் செய்தாலும் பரவாயில்லை, ஒரு சில இடங்களில் தம்முடன் பணிபுரியும் வேற்று

இனத்தவர்களைகூட இந்த நிகழ்வுக்கு அழைத்து அவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அது மட்டுமா?  அவர்களைச் சினிமாப்படம் எடுத்து யூடியிப்பில் வேறு தரவேற்றுகிறார்கள்.  யூடியுப்பில் இவ்வாறானவை குவிந்து போய்க் கிடக்கின்றன.  பெற்றோரே பிள்ளைகளை இப்படிப் படமெடுத்துப் போடும்போது, இதனைப் அழகிப் போட்டி என்ற பெயரில் நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வாவ் வாவ் சூப்பர்.... Swiss ல இருக்கிற தமிழ் பொண்ணுங்க எல்லாமே அழகு தான்.... அதுவும் அவங்க பேசுற தமிழ் இருக்கே வரே வா.....

அண்ணா மாரே அக்கா மாரே Australia விழும் இப்பிடி ஒரு போட்டி வைக்க மாடிங்களா?

அது சரி ஆஸ்திரேலியா ல எங்க தமிழ் பொண்ணுங்க தமிழ் பேசுறாங்க..... அதானால மிஸ் தமிழ் ஆஸ்திரேலியா என்றது கஷ்டம் தான்...

  • கருத்துக்கள உறவுகள்

Swiss தமிழ் அழகிகள் ஓன்று கூடி பஞ்சாபி செலக்ட் பண்ணும் அழகை இப்பொழுது வாசகர்களுக்கு காட்டபோகின்றோம்.....

http://m.youtube.com/watch?feature=fvwrel&v=Bj-TJ3RNHx0

இதில அறிவிப்பு செய்ற வாவ கொண்டு போய் சன் டிவி ல விட்டா .... சனம் எல்லாம் தலைய பிச்சுக்கிட்டு ஓடும்.....

முடியல்ல.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
படையினரின் ஏற்பாட்டில், கிளிநொச்சியில் இன்று அரங்கேறுகிறது அழகு ராணிப் போட்டி - வெற்றிபெறுபவர்களுக்கு ஸ்கூட்டி பப் மோட்டார் சைக்கிள் 
[Thursday, 2013-04-11 08:13:53]
 
கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு படையினரின் ஏற்பாட்டில் அழகுராணி போட்டியொன்று இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ள நிலையில் இது குறித்து மாவட்டத்திலுள்ள சமுக ஆர்வலர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட களியாட்ட நிகழ்வுகளுக்காக கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகம் தற்போது பெருமெடுப்பில் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இங்கு பல களியாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. இதில் மிக முக்கியமான நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர் என்ற பெயரில் சேர்க்கப்பட்ட தமிழ் இளம் பெண்களைக் கொண்டு அழகுராணி போட்டி நடத்தப்படவுள்ளது. மேலும் முக்கிய பங்காளிகளாக இளம் முன்பள்ளி ஆசிரியர்களே கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் போட்டியில் வெற்றியீட்டும் மாவட்ட அழகுராணிக்கு ஸ்கூட்டி பப் மோட்டார் சைக்கிள் ஒன்று படையினரால் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  
மேலும் போட்டியில் பெண்கள் கலந்துகொள்ளுங்கள் என படையினர் மாவட்டத்தில் அழகான பெண்களின் வீடுகளுக்குச் சென்று கோரிக்கை விடுத்து வருகின்றார்களாம். இந்நிலையில் போரும் பண்பாடும் நிறைந்திருந்த மண்ணில் இந்த புல்லுருவிகளின் அட்டகாசத்தை பொறுக்க முடியாத நிலையில் மாவட்டத்திலுள்ள புத்திஜீவிகளும், சமுக ஆர்வலர்களும் அதிர்ச்சியில் உறைந்துபோயிருப்பதாக கூறப்படுகின்றது.

http://seithy.com/br...&language=tamil

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120824#entry886396

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிலும்  யாராவது செய்யினமோ  :D

லண்டனிலும்  யாராவது செய்யினமோ  :D

செய்தாப் போயிற்று. யாழ் லண்டன் மகளிர் அணியினரை கேட்டுப் பார்ப்போம். :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணைப் பொம்பிளை பாக்கிறதுக்கே, வீட்டுக்குப் போய் அவளது மனதை, நோகடிக்கக் கூடாது என்று, கோவிலில் பெண்ணைப் பார்க்கும் வழக்கம் கொண்ட ஒரு இனம், ஒரு பெண்ணை, முற்றத்தில் நிற்கவிட்டு, அணு அணுவாக, அவளின் அழகை ரசிப்பது அசிங்கமில்லையா? :o

பெண் என்பவள், போகப்பொருள் என்பதையும் விட்டு, இன்னுமொரு படி மேலேறி, விற்பனைப் பொருளாகிறாள்! 

  • கருத்துக்கள உறவுகள்

 சனத்துக்கு, கொழுப்பு மிஞ்சினால்...,
தனரை மகளையும்... பூனை நடை, நடக்க விடும். 

  • கருத்துக்கள உறவுகள்

அழகி போட்டி என்றால் என்ன?

இதற்கு விடை கண்டால்............ தேவையா இல்லையா என்பதற்கு தானாக  விடை பிறக்கும்.
 
மேலே ஒரு கருத்து
சிலருக்கு பாடவரும்..........
சிலருக்கு பேச்சு வரும் .........
சிலருக்கு படிப்பு வரும்......
சிலருக்கு அழகு வரும் என்று இருக்கிறது. 
அன்பென்று சொன்னால் எனது அம்மாவை விட அழகான ஒருத்தியை நான் காணவில்லை. ஓவருவருக்கும் அப்படி என்றே நான் நினைக்கறேன். அதற்காக நான் ஐஸ்வர்யா ராயை இன்னும் காணவில்லை என்று பொருள் இல்லை. 
குரல் இருந்தால் பாட முடியாது பயிற்சி வேண்டும்.
பள்ளிக்கு போனால் படிப்பு வராது படிக்க வேண்டும்.
அழகி போட்டி நடாத்தும் நிறுவனத்தில் பெயரை பதிந்து அந்த நிறுவனத்தின் வியாபார பொருளின் விற்பனை நோக்கிய உடையணிந்து மேடை ஏறி நின்றால் அழகுராணி ஆகிவிடலாம். (அது பெயர் பதியும் எல்லோருக்கும் கிடைக்காது ஆனால் ஒருவருக்கு இப்படிதான் கிடைக்கிறது ).
இதையும் ஒரு மருத்துவ துறை பெண்ணையும் ஒன்று என்று நினைப்பது ஒருவித கோளாறு. அப்படியொரு கோளாறை பணக்கார அதிகார வர்க்கம் தமது விற்பனை பொருளின் விளம்பர யுத்தி ஊடாக பல பேரில்  விட்டது என்பது அவர்களுடைய பெருத்த வெற்றி.
 
ஐஸ்வர்யா ராய் உலக அழகி என்று அந்த அழகி போட்டி நடத்திய நிறுவனம்தான் சொல்கிறது. என்னுடைய வாதம் ஐஸ்வர்யா அழகி இல்லை என்பதில்லை. ஆனால் ஐஸ்வர்யா உலக அழகி  இல்லை என்பதுதான். ஐஸ்வர்யாவை அழகி ஆக்க வேண்டிய தேவை அந்த நிறுவனத்திற்கு அப்போது நிறையவே இருந்தது. அழகு சாதன பொருட்களின் சந்தையை இந்தியா நோக்கி விரிப்பது என்று போட்ட திட்டத்தில்  ஐஸ்வர்யா  அழகி ஆனார். அதோடு நிற்கவில்லை சந்தை திறப்பு வெற்றி காணும் வரை அடுத்தடுத்து  இந்தியாவில் இருந்து யார் போனார்களோ அவர்கள் உலக அழகி ஆகி வந்தார்கள். பாயர் அன் லவ்லி மட்டும் பூசி வந்த இந்திய பெண்களுக்கு இப்போது  ப்யர் அன் லவ்லியை  புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழ் இந்திய கடைகளில் இருந்து வாங்கி  அனுப்பினால்தான் காண கிடைக்கும் என்ற நிலை.
பிரான்ஸ் ஓரியல் லின் மொத்த வருமானத்தின் 20வீதம் இந்தியாவில் இருந்து கிடைத்திருக்கிறது கடந்த வருடம்.  இப்போதும் கூட இவை இந்திய மேல் தட்டு பெண்களுக்கே கட்டுபடியாகும் ............. தற்போது மத்திய தர பெண்களை இலக்கு வைத்து  சந்தை விரிகிறது. 
(மருதங்கேணி என்பது இலங்கையை பொருத்தவரை ஒரு குக் கிராமம் 2006 சுனாமியின் காரணமாக அங்கு சென்ற போதே எனது ஒன்றுவிட்ட சகோதரிகள் சம்பூ என்றால் பான்டீன் மட்டுமே பாவிப்பார்கள். விலை அதிகம் என்பதால் அதே உள்ளடக்கத்துடன்  இங்கிருக்கும் கடைகள் தயாரிக்கும் சம்பூ தான் நான் பாவிக்கிறேன் ) வியாபார யுத்தி எப்படி ஊடிருவுகிறது என்பதை புரியவே இதை எழுதுகிறேன். 
 
ஒரு நிறுவனம் அழகுராணி போட்டி நடத்துகிறது.............
ஒருவர் அழகு ராணியாக வருகிறார் அல்லது தேர்வாகிறார். அழகு ராணிக்கும் போட்டி நடாத்தும்  நிறுவனத்திற்கும் இடையே செய்ய படும் ஒப்பந்ததத்தின் அடிப்படை என்ன ??? 
இதை புறகணித்த கருத்துக்களே மேலே அதிகமாக இருக்கிறது.
 
இதை ஒரு வித முன்னேற்றம் என்று சிலர் மேலோட்டமாக பார்த்து ஏமாந்து போகிறார்கள். அல்லது நாகரிக வளர்ச்சி என்று நம்புகிறார்கள். நாகரீகம் என்றால் என்ன என்ற கேள்விக்கு இவர்களிடம்  விடை இல்லை என்பதையே அவர்கள் இன்னொரு விதமாக சொல்கிறார்கள் .
 
யார் இந்த தமிழை கண்டு பிடித்தார்களோ தெரியவில்லை எனக்கு பிடித்த ஒரு தமிழ் சொல் மிகவும் அர்த்தம் தரும் தூய்மையான ஒரு தமிழ் சொல். "நுகர்வு சந்தை" 
இதன் தாக்கங்கள் எமக்கு தெரியாமல் எம்மை தாக்கிகொண்டிருக்கும். 
அப்படியான தொன்றுதான் சுவிஸ் தமிழ் அழகு ராணி  போட்டி.
 
உலகில் எப்படி கொக்ககோலா ஊடுருவியது ? கொக்ககோல இல்லாத நாடு 80களிலேயே உலகில் இருக்கவில்லை. இந்த கொக்க கோலாவுடன் அமெரிக்க நிறுவனங்களின்  தாகங்களையும் சேர்த்தே உலக மக்கள் பருகி வந்தார்கள்.
ஒரு பொருளை நாம் வாங்கி பாவிக்க தொடங்கும்போது அந்த பொருள் எம்மீது ஒரு அதிகாரத்தை எமக்கு தெரியாமல் நிறுவி விடும்.
எங்கள் வீடுகளில் இருக்கும் மைக்ரோவேவ் எமது சாப்பாட்டு முறையில் இவளவு மாற்றத்தை  கொண்டுவந்திக்ருக்கிறது என்று ஒருமுறை எண்ணி பாருங்கள்.
இப்படியே இன்டெர் நெட் செல்போன் ............. சவர்காரம் ........... குடிநீர் என்று எல்லாமே ஒரு மாற்றத்தை எம்மில் உண்டுபண்ணிவிடும். எமக்கு இப்போது புரிய வாய்பிருக்காது பல வருடம் கடந்த பின்பு இதன் தாக்கம் புரியும்.
 
இந்த மாற்றம் சுவிஸ் தமிழ் உலக அழகு ராணி போட்டியை இன்று கொண்டுவந்து இருக்கிறது.
 
இது சரியானாதா? தவறானதா? என்று என்னை கேட்டால். நிழலி அவர்களுடைய நிலைபாடுதான் எனதும். (காரணம் இதை நிறுத்த முடியாது. இது சில தமிழ் பெண்களின் உடலை ஏலத்தில் விற்கிறது  இருந்தும் நிறுத்த முடியாது. தமிழை தூக்கி அல்லது கழட்டி  வைத்தால் ஒரு ஆணாக இதை ரசிக்க முடியும்) 
இன்று இல்லா விட்டாலும் நாளை ஒருநாள் நீச்சல் உடையில் தமிழ் அழகு ராணி போட்டி நடக்கத்தான் போகிறது. நாம் இளமையாக இருக்கும் போதே நடந்தால்?? இனிமை கொஞ்சம் அதிகம் அல்லவா? அதலால் எனது ஆதரவு  இதற்கு எப்போதும் உண்டு. உதவிகள் என்றாலும் முடிந்த அளவில் நாம் (இளைஞர் கள் ) முன் நின்று செய்து  அடுத்த கட்டத்தை துரித படுத்துவதே புத்திசாலி தனமாகும்.

இதை வாசிச்சு என்னால முடியல?...எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுது

புலம்பெயர் தமிழ்அழகிப்போட்டி தேவையானதா ?

சுவிஸ் நாட்டில் தமிழ் அழகிப்போட்டி 2013 நடைபெறவுள்ளது. இதில் எமது தமிழ்ப்பெண் பிள்ளைகளே கலந்து கொள்கின்றனர். இன்றைய வியாபார உலகில் எமது பிள்ளைகளை காட்சிப்படுத்தும் இந்த அழகிப்போட்டி தேவையானதா ?

இவ்விடயத்தை எமது சமூகத்து மனநிலையையும் கருத்தில் கொண்டு ஒரு விவாதமாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

புலம்பெயர் தமிழ் அழகிபோட்டி வைக்க கூடாது என்பதுக்கு  உங்கள் கருத்துகள் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

ரதியக்கா தனக்கு ஏதும் புரியவில்லை என்று எழுதவில்லை.

இதை வாசித்த பிறகும் தன்னால் அழகு ராணி யாக முடியல்ல ? என்றுதான் எழுதியிருக்கிறா?

ஓவரு பெண்ணும் ஓர் அழகு அந்த ஒன்று உள்ளே நூறழகு.

அழகை அறியாத பாவங்கள் அருகே வாழவேண்டிய ஒரு சூழ்நிலையில் ரதியக்காவின் வாழ்வு அமைந்துவிட்டது.

தெரிய வேண்டிய கண்களிலே தெரிந்துவிட்டால் ரதியக்கவும் உலக அழகிதான் !

நியானி: மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசிச்சு என்னால முடியல?...எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுது

சுருக்கி எழுதினால் ...........

உலகில் ஓவரு மூலைகளிலும் எதோ  ஒரு பொருளை யாரோ ஒரு மனிதன் (அல்லது விஞ்ஞானிகள்) வடிவமைத்து கொண்டே இருக்கிறான்.
இந்த ஓவரு பொருளும் மனித வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டுவரும்.
அந்த மாறுதல்களில் நன்மையையும் தீமையும் கலந்திருக்கும்.
 
அப்பொருட்டகளில் மெய்பொருள் காண்பது எமது அறிவு ஒன்றே.
உலகில் எல்லோரும் அணிகிறார்கள் என்றவுடன் உடலுக்கு அவ்சொகரியங்கள் கொடுக்கும் இறுக்கமான ஜீன்ஸ்களை பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் அணிவது சாதாரண பெண் அறிவு.
அதை சொன்னால் அங்கே எடுபடாது.
குறைந்தபட்சம் ரசித்துவிட்டாவது போகலாமே? இது எங்களை போன்ற ஆண்களின் சாதாரண அறிவு.
 
இதுவும் முடியல்ல! என்றால் அறிய தாருங்கள். சுருக்கமாக எழுத இன்னும் ஒரு வழி  இருக்கு  கொஞ்சம் ஆபாசம் என்று தூக்கிவிடுவார்கள். முடிந்த அளவிற்கு முயற்சிக்கிறேன்.
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோ வை ஒரு முறை முடிந்தால் பாருங்கள்.

இன்னும் 5 பத்து வருடங்களில் யாழ்பாணத்தில் நடக்க போகும் ஒன்று.
நாகரிக வளர்ச்சியா .......??
மாயை தோற்ற மயக்கமா ...??
 
3:30- 4:50 இடைபட்ட நிமிடங்களை சிலமுறை திருப்பி பாருங்கள். 4:30 இல் தொடங்கும் பெண்ணின் குரலை கவனமாக கேளுங்கள். (அதில்தான் விடை இருக்கிறது) இந்த பெண் மொடலிங் உலகில் இருந்து வந்தவர் என்பதை கவனத்தில் எடுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ் அழகிபோட்டி வைக்க கூடாது என்பதுக்கு  உங்கள் கருத்துகள் என்ன?

மேலே மருதங்கேணி எழுதிய கருத்துத்தான் எனதும். மருதங்கேணியின் கருத்தை ஒருக்கா வாசியுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

சுருக்கி எழுதினால் ...........

உலகில் ஓவரு மூலைகளிலும் எதோ  ஒரு பொருளை யாரோ ஒரு மனிதன் (அல்லது விஞ்ஞானிகள்) வடிவமைத்து கொண்டே இருக்கிறான்.
இந்த ஓவரு பொருளும் மனித வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டுவரும்.
அந்த மாறுதல்களில் நன்மையையும் தீமையும் கலந்திருக்கும்.
 
அப்பொருட்டகளில் மெய்பொருள் காண்பது எமது அறிவு ஒன்றே.
உலகில் எல்லோரும் அணிகிறார்கள் என்றவுடன் உடலுக்கு அவ்சொகரியங்கள் கொடுக்கும் இறுக்கமான ஜீன்ஸ்களை பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் அணிவது சாதாரண பெண் அறிவு.
அதை சொன்னால் அங்கே எடுபடாது.
குறைந்தபட்சம் ரசித்துவிட்டாவது போகலாமே? இது எங்களை போன்ற ஆண்களின் சாதாரண அறிவு.
 
இதுவும் முடியல்ல! என்றால் அறிய தாருங்கள். சுருக்கமாக எழுத இன்னும் ஒரு வழி  இருக்கு  கொஞ்சம் ஆபாசம் என்று தூக்கிவிடுவார்கள். முடிந்த அளவிற்கு முயற்சிக்கிறேன்.

நீங்கள் மேலே எழுதினது எனக்கு விளங்கவில்லை என்று சொல்லவில்லை...இப்படித் தமிழை எழுதி இருக்கிறீர்கள் என்று தான் ஆச்சரியப்பட்டேன்...நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.