Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.எப்.சி (KFC) சிக்கனில் புழு: அதிர்ச்சியில் மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வேலையில் கதைத்தது.

சக ஊழியர் ஒருவரின் நண்பர் அண்மையில் KFC சாப்பிட்ட பொழுது ஒரு பகுதி வித்தியாசமான சுவையாகவும் திரவத் தன்மையாக கிரீம் போல இருந்ததாம். சந்தேகப்பட்டு அதனைப் பகுப்பாய்விற்கு  அனுப்பியுள்ளார். அந்தத் திரவம் 'சீழ்' (abscess) என இப்பொழுது முடிவு வந்துள்ளது. தற்பொழுது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிக்கிறார்.

ஐயோஓ சீஈஈஈஇ அருவருப்பாக்கிறார்களேஏ.. உங்களை இந்த தலைப்புக்கு கருத்தெழுதச்சொல்லி யாராவது சொன்னார்களா தப்பிலி அண்ணா.. ஒய் திஸ் கொலைவெறி

... :D  :D உவாக் சகிக்கமுடியலை  :D 

Edited by சுபேஸ்

  • Replies 57
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கோழியை அவர் கொடுத்த உடனேயே தூக்கி உள்ளே வைக்கலாம்தானே.. அது லேசில் பழுதாகாதுதானே..Deep Freezer இல் வைத்தால் இருக்கும்தானே?

கோழி வெட்டின இடத்தில் இருந்து கடைகளுக்கு வந்து சேருவதற்குள்,  எத்தனையோ இடங்களில் ஏற்றி இறக்குவார்கள் .

பிறகு கூலரே போடாத வாகனத்தில் (டீசல் மிச்சம் பிடிக்கினமாம்) கொண்டுவந்து எங்கட தலையில் கட்டிவிட்டு அவன் காசை வாங்கிக் கொண்டு போடுவான் .Deep Freezer ல்  வைத்துவிட்டு  உடனடியாக எடுத்து பொரிக்க முடியாது .கூலர்ரூமில்  தான் 

வைப்பது  வழமை 

அப்பிடியென்றால் வேறு வழியில்லை.. :unsure: மறினேட் பண்ணியது என்று சொல்லி விற்க வேண்டியதுதான்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியென்றால் வேறு வழியில்லை.. :unsure: மறினேட் பண்ணியது என்று சொல்லி விற்க வேண்டியதுதான்.. :lol:

இன்னும் சொல்லலாம்  ஆனால் யாழில்(என்னுடைய ) கண்ணீர் அஞ்சலி போடும்  செலவை நீங்கள் ஏற்கவேண்டிவரும்  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சொல்லலாம்  ஆனால் யாழில்(என்னுடைய ) கண்ணீர் அஞ்சலி போடும்  செலவை நீங்கள் ஏற்கவேண்டிவரும்  :lol:

இனிமேல் கோழிக்கடைக்குப் போனால், முதலாளியை ஒரு துண்டு சாப்பிட வச்சுப்போட்டுதான் வாங்கி வரவேணும்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Delivery accept பண்ணும் போது temperature செக் பண்ணி accept பண்ணனும் குறிப்பிட்ட அளவுக்கு இருக்காட்டி திருப்ப அனுப்பிறது தானே?

  • கருத்துக்கள உறவுகள்

Delivery accept பண்ணும் போது temperature செக் பண்ணி accept பண்ணனும் குறிப்பிட்ட அளவுக்கு இருக்காட்டி திருப்ப அனுப்பிறது தானே?

நீங்க  எந்த நாட்டில் இருக்கீங்க ,...மன்னிக்கவும்  இது லண்டன்  :D

நான் எனது கண்ணால் புழுவை காணமட்டும் கோழியை அமுக்கி கொண்டே இருப்பேன் .

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அவுசில் கோழி போரித்திருக்கிறேன். நந்தன் அண்ணா சொல்லுவது போல கூல் றூமினுள் தான் வைப்பது, பிரீசரில் வைத்தால் இறுகி விடும். ஆனால் இங்கு பிரீசர் வாகனத்தில் தான் கொண்டு வருவார்கள். வெப்பநிலை ஒரு டிகிரி குறைந்திருந்தாலும் அவளவும் குப்பயினுள் போகும். தேவைக்கேற்ற மாதிரி ஓடர் பண்ணுவதால் பிரச்சனை இல்லை ஆனால் ஒருமுறை சில பை fry எறிந்திருக்கிறோம். எமது கடை கோழி அந்த மாதிரி. நானும் கண்ணை மூடிக்கொண்டு நம்பிக் கைவைப்பேன். சில மனேச்சர் மார் stock control ஒழுங்காக செய்வதில்லை. அவர்களின் பஞ்சியின் விளைவு தான் இது. First In First Out (FIFO) முறைதான் எல்லா உணவகங்களிலும் பாவிப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

கேஎப்சி போன்ற கடைகளில் டெம்ரேச்சர் செக் பண்ணுவதில்லை என்பதை அறியும் போது ஆச்சரியமாக உள்ளது.இந்த கடைகளிலே செக் பண்ணாட்டி சாதரண கடைகளில் எப்படி செக் பண்ணுவார்கள்? நினைத்தாலே அருவருப்பாய் இருக்குது

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில சமச்சி சாப்பிட களவில மனிசன்மார கடவழிய இழுத்து திறியிற பொம்பிளையழுக்கு இந்ததண்டனை பத்தாது... :D

வீட்டில் கோழி சமைப்பது மிக குறைவு ...ஏனனில் எங்காவது தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அங்கே கொழிக்கறி நல்ல  உறைப்பாய்

கிடைக்கும் ................. :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

கோழி  பொரித்தலில்  கொஞ்சம் அனுபவம் இருப்பதால்  சொல்கிறேன் .கோழி சப்ளை பண்ணுறவன்  நாலு நாளைக்குள் பொரிச்சு வித்துப்போடு 

எண்டு சொல்லி வெட்டி அனுப்பிவிடுவான் .நாங்க  என்னதான் முக்கி வித்தாலும் சில வேளைகளில் பொறுத்துவிடும் ,முடிவுத்திகதி 

இண்டைக்கோ  நாளைக்கோ என்டிருக்கேக்க  சாதுவா  ஒரு மணம் கிளம்பும் உடனடியா தயாரா இருக்கிற வினிகர் போத்தலை 

திறக்கவேண்டியதுதான் :D .சூட்டோடு சூடா பொரிச்சு வித்துப்போடோனும்  :D

நந்து இப்பிடி தொழில் இரகசியங்களை  சொல்லக் கூடாது.நான் வேலை கடையிலும் கோழி விற்போம் ஆனால்  வாட்டிய முழுக்கோழி.  திகதி துடிந்து லேசாய் வாசம் கிழம்புப் போதே  நந்து சொன்னது போல் வினாகிரியில் ஒரு அமத்து அமத்திட்டு  வாசனை  இலை ஒண்டை உள்ளை தள்ளிட்டு வாட்டி வித்திடுவம்.வாசனை வராது.

feuilles-laurier.gif

பி.கு. நான்  வீட்டைத் தவிர எனது கடையில் மட்டுமல்ல வேறு எந்த உணவகங்களிலிலுமே சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்த்தே வருகிறேன். எங்காவது பயணம் போனால் வேறு வழியின்றி உணவகங்களில் சாப்பிடவேண்டி வரும்.

Edited by sathiri

வீட்டில சமச்சி சாப்பிட களவில மனிசன்மார கடவழிய இழுத்து திறியிற பொம்பிளையழுக்கு இந்ததண்டனை பத்தாது... :D

ஆ... இன்னொரு சம்பவம். இது மரக்கறிக்காரருக்கு.

தெரிந்த தமிழ் கடையில் நன்றாக முளை வந்து சூம்பிப் போய் ஒதுக்கி வைத்த 'சைப்பிரஸ்' உருளைக் கிழங்குகளை, எனக்கு தோட்டத்தில் நாட்டுவதற்குத் தேவை பின்னேரம் வந்து எடுக்கிறேன் என்று கடையில் வேலைக்கு நின்ற பொடியனிடம் சொல்லி விட்டு வந்தேன்.  பின்னேரம் போன பொழுது அதைக் காணவில்லை. முதலாளி நண்பரிடம் கேட்ட பொழுது, அதை சாப்பாட்டுக் கடைக்காரர் பொரித்த உருளைக் கிழங்கு குழம்புக் கறி வைக்க வாங்கிப் போனதாகவும் அதே போல கத்தரிக்காய் பழுதாகப் போனால் அவர்கள் வந்து மிக மலிவு விலைக்கு வாங்கிப் 

 போவதாகவும் சொன்னார்.

Edited by தப்பிலி

கலோ! கெட்டாலும் செட்டி, கிழிஞ்சாலும் பட்டு. காய்பிஞ்சை அடிக்க ஒன்றும் இல்லை.  வாட விட்டு வத்தல் போட்டும் கத்தரிக்காய்  சாப்பிடலாம். புளு இல்லாவிட்டால் சரி. 

Edited by மல்லையூரான்

யாழ் களம் நிர்வாகம் எங்கே போய்விட்டது..... :o

சாப்பாடு முடிந்து இரண்டு மணித்தியாலங்களிற்குள் இந்தத் தலைப்பை பார்வையிடுவது அபாயகரமானது என்றொரு அறிவிப்பை போடத் தவறிய நிர்வாகத்தை வன்மையாகக் கண்ணடிக்கிறேன். மன்னிக்கவும் கண்டிக்கிறேன்...

கலோ! கெட்டாலும் செட்டி, கிழிஞ்சாலும் பட்டு. காய்பிஞ்சை அடிக்க ஒன்றும் இல்லை.  வாட விட்டு வத்தல் போட்டும் கத்தரிக்காய்  சாப்பிடலாம். புளு இல்லாவிட்டால் சரி. 

புழு இருக்கா இல்லையா என்றெல்லாம் பார்ப்பதில்லையாம். பொரித்துக் குழம்பு வைத்தால் ஒன்றும் தெரியாதாம்.

அப்படிப் புழு இருந்தாலும், இறால் போட்டு குழம்பு வைத்த 'எபக்ட்' கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

புழு இருக்கா இல்லையா என்றெல்லாம் பார்ப்பதில்லையாம். பொரித்துக் குழம்பு வைத்தால் ஒன்றும் தெரியாதாம்.

அப்படிப் புழு இருந்தாலும், இறால் போட்டு குழம்பு வைத்த 'எபக்ட்' கிடைக்கும்.

அப்ப இறால் செலவும் மிச்சம்.. :(:D

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே எப்போ இந்தப் பகுதி லொக் பண்ணுப்படும்.. :(

புழு இருக்கா இல்லையா என்றெல்லாம் பார்ப்பதில்லையாம். பொரித்துக் குழம்பு வைத்தால் ஒன்றும் தெரியாதாம்.

அப்படிப் புழு இருந்தாலும், இறால் போட்டு குழம்பு வைத்த 'எபக்ட்' கிடைக்கும்.

"அறிஞ்சவன் அறிய வேணும் அரியாலை பிணாட்டு தட்டை." உந்தமாதிரி குழம்புகள் வைக்க நான் அறிந்திருக்கவில்லை. :D

ஒரு தடடை ஒருவர் கள்ளுக்கொட்டடில் வாங்கிய ஒரு வடையுடன் பாதையில் போய்க்கொடிருந்தாரம்.  பயங்கர வெறி. பாதை யெல்லாம் மழையும், வெள்ளமும். கையில் இருந்த வடையை வாய்க்கு கொண்டு போகும் போது அது தவறி வெள்ளத்துள் விழுந்துவிட்டது.  வெள்ளத்தில் மிதந்தை எடுத்து வாய்க்குள் வைத்து கடித்தாராம். கீச்சென்று ஒரு சத்தம் வந்தது. "என்ன நான் 5சதம் கொடுத்து வாங்கி வாறன் நீ கீச்சு என்கிறாய்" என்று கூறி ஒரு வாயில் முடித்துவிட்டாராம்.

ஒருவேளை மறுநாள் கள்ளுக்கொட்டிலில் கடைக்காறன் மனிசியை கண்டால், நேற்றைய வடைகளில் மிச்சம் இன்றும் வீட்டில் இருந்தால் ஒன்று எடுத்து வரமாட்டாயா என்று கேட்டிருப்பாராக்கும்" :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கே.எஃப்.சி யின் சுகாதார‌ம் எல்லா நாடுக‌ளில‌யும் குறைவு போல‌த் தான் தெரியுது. இங்க‌யும் பார்த்தா இலையான் ஓட்டிக் கொண்டிருப்பார்க‌ள். உயிரிய‌ல் அறிவுள்ள‌வ‌ர்க‌ளுக்கு விள‌ங்கும். ஒரு சேத‌ன‌ப் பொருளின் மீது இலையான்க‌ள் வ‌ந்து முட்டை போட‌ அந்த‌ முட்டை பொரித்துத் தான் இலையான்க‌ளின் ஒரு வ‌டிவ‌மான‌ புழுக்க‌ள் உருவாகின்ற‌ன‌. என‌வே மூடி வைத்து விற்காத/அனுப்ப‌ப் ப‌டாத‌‌ ப‌ண்ட‌ங்க‌ளில் புழு வ‌ர‌த்தான் செய்யும். மூடி வைத்தும் ச‌ரியான‌ வெப்ப‌ நிலையில் பேண‌ப் ப‌டாத‌ உண‌வுக‌ளில் வேறு பிர‌ச்சினை: ப‌ற்றீரீயா நுண்ண‌ங்கிக‌ளின் வ‌ள‌ர்ச்சி. இது ப‌கிடியான‌ விச‌ய‌ம‌ல்ல‌. மிக‌வும் அதிக‌மாக‌ உண‌வுக‌ளில் வ‌ள‌ரும் ஈ.கோலை (E. coli) வ‌கை ப‌ற்றீரியாக்க‌ள் ம‌னித‌ன‌தும் ஏனைய‌ வில‌ங்குக‌ளின‌தும் குட‌லில் இருந்து உண‌வில் தொற்றுகின்ற‌ன‌. இதில் எந்த‌ ம‌ருந்துக்கும் அசைந்து கொடுக்காத‌ கொடிய‌ ஈ.கோலை வகைக‌ளும் அரிதாக‌ உண‌வில் வ‌ள‌ர‌க் கூடும் என்ப‌தால் ச‌ரியாக‌ப் பேண‌ப் ப‌டாத‌ உண‌வை உண்ப‌து Russian roulette விளையாடுவ‌து போன்ற‌து!

இந்த‌ விள‌க்க‌ம் வீட்டுச் ச‌மைய‌லை விட்டுக் க‌டைக‌ண்ணிக‌ளில் கை ந‌னைக்கும் சுபேஸ் போன்ற‌ பிர‌ம்ம‌ச்சாரிக‌ளுக்குச் சம‌ர்ப்ப‌ண‌ம்! :D

இந்தப் பிரச்சனைகளுக்காகத் தான் நான் கடையில் இப்படியான உணவு எதுவும் வாங்கி பிள்ளைகளுக்கு கொடுப்பதில்லை, நானும் அநேகமான நேரங்களில் கடை உணவுகளை உண்பதும் இல்லை.

கோழிக்கால்களை (Drum stick) வாங்கி, marinate பண்ணி அரை மணி நேரம் ஊற வைத்து விட்டு oven இல் வைத்து வேக வைத்தால், ஆரோக்கியமான கோழிப் பொரியல் கிடைக்கும்.  அல்லது நல்லெண்ணையில் deep fry செய்தாலும் மிகவும் சுவையுடன் கோழிப் பொரியல் கிடைக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் நாங்களே சுத்தமாக சமைத்து சாப்பிடுவதுதான் நல்லது. உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும் வேக உணவகங்களில் (Fast Food) வாங்கி உண்ணும் உணவுகளை எப்படி தயாரிக்கின்றார்கள் என்பது தெரியாது அத்தோடு குளிரூட்டியில் மாதக்கணக்காக இருந்த பொருட்களில் பெரும்பாலும் உணவுகள் தயாரிக்கப்படுவதனால் அந்த உணவினை  நம்பமுடியாது 

நாம் சமைக்கும் உணவுகளில் அதிக வாசனை திரவியங்களும் காரம் போன்றவை கலப்பதனால் உணவில் இருக்கும் கேட்ட கிருமிகள் இறந்து சுவையான ஆரோக்கியமான உணவாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் கோழியை வேண்டி நாங்கள் பொரிச்சாலோ அல்லது அவனுக்குள் வைத்தாலோ கேஎப்சியின் சுவைக்கு ஈடாகாது :D

சாப்பாட்டின் தரம் கடையை நடத்துபவர்கள் கையிலே தங்கியுள்ளது. 

முன்பு KFC இல் வேலை செய்த அனுபவமுண்டு. KFC நிறுவனத்தால் நடத்தப்படும் கடைகளில் கடுமையான தரக் கட்டுப்பாட்டைக் கடைப் பிடிப்பார்கள். தனியார்களால் நடத்தப்படும் (Franchise) கடைகளிலும் அதே தரக் கட்டுப்பாடுகளைத்தான் நடைமுறைப்படுத்த வேண்டும்.  மாதமொருமுறை வாடிக்கையாளராக வந்து உணவின் தரம் / பரிசாரகரின் உபசரிப்பு போன்றவற்றையும், கடைக்குள்ளும் வந்து  /  கோழி பொரித்த நேரம் / உணவுப் பொருட்கள் காலாவதியாகும் நேரம் / உணவு தயார்ப்படுத்தும் முறை போன்றவற்றை பரிசோதனை செய்து புள்ளிகள் வழங்குவார்கள். தொடர்ச்சியாக குறைந்த புள்ளிகள் எடுக்கும் தனியார்களின் KFC அனுமதிப் பத்திரம் பறிக்கப்படும்.

உரிமையாளர் / முகாமைத்துவம் சரியில்லாத கடைகளில் எதுவும் நடக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.