Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளுக்கெதிரான சதி பற்றி அன்றே அறிந்த தலைவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Thalaivar%20000006.jpg

போர் உக்கிரமடைந்த 2008ம் ஆண்டு இறுதிப்பகுதியில் கிளிநொச்சியிலிருந்து சமகால நிலவரம் தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் திரு.வீ.மணிவண்ணன் அவர்கள் வழங்கிய கருத்துரையில் தற்காலத்தில் நடைபெறும் நிலைமைகளை, தலைமையின் கணிப்பை துல்லியமாக எடுத்துரைத்திருந்தார்.

அவர் சமகால நிலவரம் தொடர்பாக கூறுகையில்,

சர்வதேசம் விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தி, விடுதலைப்புலிகளின் தலைமையை ஒதுக்கி ஓரங்கட்டி தமிழீழம் என்ற கொள்கையில் இருந்து இறங்கவைக்க கடும் அழுத்தத்தை பிரயோகித்தன.

09052013%20025.JPG

இதன் மூலம் தாம் நினைத்தவாறு தமிழர் பிரச்சனைகளை கையாள்வதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள போராட்டத்துக்கான ஆதரவான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான "மெத்தப்படித்த தமிழர்களுக்கு"நிதியுதவிகள், பயிற்சிகள், ஊடக முக்கியத்துங்கள், சலுகைகள் என்பனவற்றைக் கொடுத்து, விடுதலைப்புலிகளின் கொள்கைகளை முன்னெடுக்கக்கூடாது எனவும் தமிழர் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்த நீங்கள்தான் சரியானவர்கள் என உருவேற்றியும் விடப்பட்டுள்ளார்கள்.

போராட்டத்துக்கான பட்டறிவு, போராட்டத்துக்கான விடுதலை அரசியல் என்பதுக்கும் விக்கிற அரசியல் என்பதுக்கும் சரியான வேறுபாட்டை நாங்கள் அறிந்து கொள்ளவேண்டும். இப்படியான ஒரு சதி மேற்குலகினால் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த விடயங்கள் தொடர்பாக நாம் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேற்கூறிய கருத்துக்கள் தலைவர் அவர்களின் பணிப்பின் பெயரில் அன்றைய போரின் இறுதிக்காலத்தில் சர்வதேசத்தில் உள்ள செயற்பாட்டாளர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் திரு.வீ.மணிவண்ணன் அவர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவற்றின் பின்னணியிலேயே கே.பியால் உருவாக்கப்பட்ட உருத்திரகுமாரனின் தலைமையிலான நாடுகடந்த கும்பல் செயற்படுவது வெளிப்படையான உண்மை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

http://www.sankathi24.com/news/29503/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி தமிழரசு..

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளை ஓரம்கட்டி தமிழர் பிரதிநிதிகளை மேற்குலகம் உருவாக்கியிருந்தாலும், இந்தியா ஒருபோதும் தமிழர்கள் உரிமை பெறுவதை அனுமதித்திராது. அப்படி அனுமதி கிடைக்க வேண்டுமானால், தமிழன் தான் தமிழன் என்ற அடையாளத்தை அழித்துவிட்டு ஆரியத்தின் அடியொற்றி அதன் கால்கழுவி வாழ்ந்தால் ஒருவேளை சாத்தியமாகலாம்!. தமிழினத்திலிருந்து பிரிந்துபோன மலையாளி தொட்டு, இன்று சிங்களம்வரையில் ஆரியத்தின் அடியொற்றி வாழும் நிலையையே வெளிப்படுத்தி வருகிறது. இந்த இழிநிலையை உயிரை இழந்தாலும் தமிழன் மேற்கொள்ள மாட்டான் என்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சாட்சியாக உள்ளனர்.

சிங்கள அரசிற்கெதிரான கருத்துக்களை வைப்பதை விட அதிகமாக ருத்ரகுமாரனின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தைச் சாடுவதையே சிலர் முழு நேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர்...

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றின் பின்னணியிலேயே கே.பியால் உருவாக்கப்பட்ட உருத்திரகுமாரனின் தலைமையிலான நாடுகடந்த கும்பல் செயற்படுவது வெளிப்படையான உண்மை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

போராளி மணிவண்ணன் குறிப்பிட்ட விடயங்கள் மேற்குலக நாடுகளின் உலக அரசியலை அவதானிக்கிற எவைக்கும் புதிய விடயமாகத் தெரியாது. அவர் அந்த அவதானிப்பின் அடிப்படையில் தான் விடுதலைப்புலிகளை ஓரங்கட்ட மேற்குலகம் மேற்கொண்டுள்ள நகர்வுகளை விளக்கியும் கூறியுள்ளார்.

ஆனால்.. அதனை இன்று நா.க.த.அ க்கும் உருத்திரகுமாரனுக்கும் எதிராகக் கொண்டு வருவது என்பது.. மணிவண்ணன் குறிப்பிட்டது உருத்திரகுமார் போன்றவர்களை தான் என்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டைக் காட்ட இந்தக் கட்டுரையாளர் முனைவது தான் சந்தேகத்துக்குரியதாக உள்ளது.

நா.க.த.அ என்பது 2009 க்குப் பின் தமிழ் மக்களின் அரசியல் வெற்றிட இடைவெளியில் தோன்றிய ஒரு அமைப்பு. அதற்கு முன்னர் அப்படி ஒரு எண்ணமே எவரிடமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. மேலும்.. அது கேபியின் சிந்தனை தான் என்று வைத்துக் கொண்டாலும்.. இன்று.. உருத்திரகுமாரும் கேபியும் ஒரே நிகழ்ச்சி நிரலில் தான் நிற்கினம் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

மேலும் நா.க.த. அ தவிர மற்ற புலம்பெயர் அமைப்புக்கள்.. தமிழீழம் என்பதை உச்சரிப்பதையே ஏறக்குறைய மெளனித்துவிட்டுள்ள நிலையில்.. மேற்படி குற்றச்சாட்டு என்பது.. சிங்கள அரசின் பிரச்சாரமாக அதுவும் தமிழீழ தேச சாசனம் முரசறையப்பட உள்ள நேரத்தில் நா.க.த.அ வை குறிவைத்து..வெளியிடப்பட்டிருப்பதானது.. பலமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மணிவண்ணன் பேசிய காலத்திலும்.. உருத்திரகுமாரன் தலைவரின் சட்ட ஆலோசகராக இருந்தவர். அவர் மீது தலைவரோ புலிகளோ எந்த விதமான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திராத நிலையில்.. கேபி முன்மொழிந்தார் என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில்.. நா.க.த.அ வினை தொடர்ச்சியாக தாக்குவதென்பது சிங்கள அரசின் எதிர்பார்ப்பினைப் பூர்த்திசெய்ய உதவுமே அன்றி.. நா.க.த.அ நல்லதா கெட்டதா செய்கிறது என்பதை காலத்தே உணர வகை செய்யாது.

அந்த வகையில்.. இந்தக் கட்டுரை தொடர்பில் மக்கள் மிக விழிப்போடு இருக்க வேண்டும். மணிவண்ணன் குறிப்பிட்ட அந்த படித்த ஆக்களில் வேறு பலர் உள்ளனர். மகிந்த லண்டனுக்கு வந்த போது கூடி இருந்து கூத்தடித்தவர்கள் உட்பட. அவர்களை எல்லாம் விட்டுவிட்டு.. நா.க.த.அ வை நோக்கி மட்டும் இதனை திருப்பி விடுவது என்பது நா.க.த.அ தமிழீழம் நோக்கி உறுதியாக செயற்படும் நிலையை விரும்பாத தன்மை இந்தக் கட்டுரையில் பின்னால் இருக்கவும்.. அதற்கு மணிவண்ணனின் பேச்சை தவறான நோக்கில் உதாரணமாக்கியும் பாவித்துள்ள சாமர்த்தியமே தெரிகிறது.

மக்கள் இதனைக் கடந்து களத்தில்.. புகலிடத்தில் நிகழ்வதை மையமாக வைச்சு சிந்திக்க வேண்டும். நா.க.த.அ இதுவரை கொள்கை விலகி.. தமிழீழத்தை காட்டிக்கொடுத்தோ.. கைவிட்டோ செயற்படாத நிலையில்.. விடுதலைப்புலிகளை ஓரம்கட்டி தம்மை முன்னிலைப்படுத்தாத நிலையில் அதன் மீதான குற்றச்சாட்டுக்கு இந்த காணொளி பாவிக்கப்பட்டிருப்பது மிகுந்த சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது. :icon_idea:

தமிழ்மக்கள் நிச்சம் சிந்திப்பார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கென்னவோ படித்தாக்களை  கொஞ்சம் விலத்தி வைக்கிறது நல்லது போலத்தான் கிடக்கிறது..அது உருத்திரகுமார் என்றால் என்ன, வன்னி வீதியை கொண்டுவந்த லோகன் என்றால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

தீர்க்க தரிசனம் நிறைந்தவர்கள் இருந்ததால்தான் இப்போது கும்பலாகச் சேர்ந்து சேர்த்த நிதிகளை எதிர்காலப் போராட்டத்திற்காக பத்திரப்படுத்தி பாதுகாக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு உறுதுணையாக தமிழ் மக்கள் இருக்கவேண்டும் என்பதில் தவறில்லைத்தானே.

உருத்திரகுமாரன் தலைமையிலான நா.க.த.அ. செய்யும் அரசியல் சதிகளைத் தெரிந்தவர்கள் ஏன் அவரையும் கே.பி. ஐயும் இறுதிப் போர்க்காலத்தில் சரணடைவு பற்றிய பேச்சுவார்த்தைகளுக்கு தேர்வு செய்திருந்தார்கள்? சிலவேளை அவர்களை அம்பலப்படுத்த ஆடிய நாடகம் என்று புதுக்கதை சொன்னாலும் சொல்வார்கள்!

தமிழீழ விடுதலைப்புலிகளைப்போல் வேடமிட்டு மக்கள் நிதியைக் கையகப்படுத்திய பினாமிகளே நா.... உருவாகிவிடாது தடுப்பதற்கு அதீதப் பிரயத்தனம் எடுத்துவருகின்றனர். அரசு உருவாகினால் தங்கள் பதவிகள் பறிபோவதோடு தாங்கள் மக்கள்முன்பு தலைகாட்ட முடியாது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அத்தகய பினாமிகளுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய ஒரு பதிவாகவே இந்தப் பின்னூட்டம் உள்ளதுபோல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கஸ்ரோ அண்ணாவின் தியாகம் என்பதும், அவர் இறுதி நேரம் வரை ஆற்றிய பணியும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனாலும், எல்லா விடயங்களிலும் சரியாக முடிந்தனவா என்பது தொடர்பாக முழுமையாக திருப்தி இல்லை. சில விட்டுக்கொடுப்புக்கள், இராச தந்திரங்களைப் பாவித்திருக்கலாம். தவிர 2008 இன் இறுதி மாதத்தின் பின்னர் தான் களநிலமை முழுமையாக மாறியது....
 
நாடு கடந்த அரசுக்கும் தாயகத்தில் வாழும் தமிழர்களுக்கும் இடையில் அடிப்படையில் எந்தவிதமான அரசியல் தொடர்பும் இல்லை. ந க அரசு என்பது முற்றுமுழுதாக புலம்பெயர்ந்த தமிழனின் கருத்தியல் சார்ந்தது. குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழனில் மேட்டுக்குடி அடயாளந்தேடல் புத்திஜீவித அடயாளந்தேடல் சார்ந்த ஆர்வமுள்ளவர்களின் கருத்தியல் சார்ந்தது. இந்த கருத்தியலால் தாயகத்தில் ஒரு புல்லை தன்னிலும் நடவோ புடுங்கவோ முடியாது என்பது அதில் உள்ளவர்களுக்கும் தெரியும் அதை ஆதரிப்பவர்களுக்கும் தெள்ளத்தெளிவாகத் தெரியும். தெளிவற்றவர்கள் கடந்த ஐந்து வருட அதன் செயற்பாட்டில் ஒரு வீதமாகினும் தாயக மக்களின் அரசியலில் அல்லது அபவிருத்தியில் அல்லது பாதுகாப்பில் தலையிட முடிந்திருக்கின்றதா என்று தங்களை தாங்களே கேள்விகள் கேட்டு தெளிவை பெறவேண்டியதுதான். ந க அரசு மட்டுமில்லை தமிழ்த்தேசீயப்போர்வையில் இயங்கும் பல்வேறு குழுக்கள் அமைப்புகள் தனிநபர் சார்ந்த கோஸ்டிகள் எதனாலும் தாயக மக்களின் அரசியலில் அபிவிருத்தியில் பாதுகாப்பில் சாதகமான எந்த தலையீட்டையும் செய்ய முடிந்ததில்லை.  

புலம்பெயர்ந்த பெரும்பான்மை மக்கள் தாயகம் குறித்த பற்றோடும் அங்கு அவலப்படும் மக்கள் குறித்து அக்கறையோடும் இருந்த நிலையில் அவர்களின் உணர்வுகளை முடக்கியது இவ்வாறான அமைப்புகளே ! மக்கள் மூன்று முக்கிய விடயங்களில் இயங்கத் தயாகராக இருந்தார்கள். ஒன்று தாயக மக்களின் இருப்புக்கும் புனர்வாழ்வுக்கும் உதவுவது. இரண்டாவது போர்க்குற்றங்களுக்கு எதிராக குரல்கொடுப்பது. மூன்றாவது தாயக மக்களின் அரசியல் எழுச்சிக்கும் அதுசார்ந்த செயற்பாட்டுக்கும் ஒத்துழைப்பது. இப்படியாக மக்களின் இயல்பான சிந்தனையை முடக்கி மக்களுக்கு வட்டுக்கோட்டை வாக்கெடுப்பை கொண்டுவந்தார்கள். முப்பது வருடம்போராடி ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தியபின் வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு. அடுத்து நாடுகடந்த அரசு. பாராளுமன்ற அமர்வு. அரசியல் சாசனம். யாகம். மறுபுறத்தே தலமைச்செயலகம் தெடர்பகம் நெடியவன் கஸ்ரோ வினாயகம் பரிதி பாம்புக்குழு என்று ஆதிக்கப்போட்டிகள் தொடர்ந்தது. புலம்பெயர்ந்த மக்கள் எதைசெய்யவேண்டுமோ எதை செய்யக் கூடிய நிலையில் இருந்தார்களோ அத்தனையும் திசை திருப்பப்பட்டது. திட்டமிட்டு திசை திருப்பப் பட்டது. இன்று தேசீயம் என்ற கருத்தியலுக்கு தான் தான் தர்மகர்த்தா என்ற போட்டி நடக்கின்றது. இந்தப்போட்டியில் கலந்துகொள்ள  வீத மக்கள் தயாகராக இல்லை. எந்த ஒரு அமைப்பையும் நம்ப  மக்கள்  தயாராக இல்லை.  இது சிங்களத்தின் அரசியல் வெற்றி. முள்ளிவாய்க்கால் அதன் இராணுவ வெற்றி.

புலிகள் தமிழ் ஈழம் அமைத்தவுடன்........

அதில் வீடு கட்டி சுகமாக வாழ 95 வீதமான மக்கள் தயாராக இருந்தார்கள்.
 
இனியும் இருந்து பயனில்லை.
எழுந்து நடக்க வேண்டும்!
 
மக்கள் புரட்சியை மக்கள்தான் செய்ய வேண்டும்!
பிரபாகரனோ 
காஸ்ட்ரோவோ செய்ய முடியாது.
 
இதற்கு பிறகும் ஒரு மணி நேரம் எழுந்து நிற்க முடியாவிட்டால்.
நா க அ செய்வது எல்லாம் உலக அதிசயம் என்பதுதான் தெளிவான உண்மை.
 
நாடு கடக்காத அரசின் தலைமை பீடமும் தளபதி பீடங்களும் வெறுமையாகத்தான் இருக்கிறது.
நீங்கள் ஒருமுறை சரியான பாதையில் செயற்படுத்தி பார்க்கலாம். மக்கள் எழுந்து நடந்து வருவார்கள்............. சுதந்திரம் பெறலாம்!
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழனில் மேட்டுக்குடி அடயாளந்தேடல் புத்திஜீவித அடயாளந்தேடல் சார்ந்த ஆர்வமுள்ளவர்களின் கருத்தியல் சார்ந்தது. இந்த கருத்தியலால் தாயகத்தில் ஒரு புல்லை தன்னிலும் நடவோ புடுங்கவோ முடியாது என்பது அதில் உள்ளவர்களுக்கும் தெரியும் அதை ஆதரிப்பவர்களுக்கும் தெள்ளத்தெளிவாகத் தெரியும்.

இது சிங்களத்தின் அரசியல் வெற்றி. முள்ளிவாய்க்கால் அதன் இராணுவ வெற்றி. :icon_mrgreen:

ஆரம்ப காலத்தில் தமிழ் இளைஞர்கள் துப்பாக்கியைக் கையில் எடுத்தபோது, இதுகளால் எதையும் புடுங்க முடியாது. இதுகளெல்லாம் கொள்ளைக்கூட்டம். குருவியைக்கூட இதுகளால் சுடமுடியாது என்று கொக்குவிலில் சுடப்பட்டு இறந்த பொலீஸ் சம்பந்தன் அன்று கூறியது இன்றும் காதில் ஒலிக்கிறது.

ராஜீவ்காந்தி கொலை. முஸ்லீம்கள் வெளியேற்றம் போன்றவை ஆண்டாண்டுகாலம் திரும்பத்திரும்ப விடாது ஒப்புவிப்பது போல் மேட்டுக்குடி, கீழ்க்குடியும் திரும்பத்திரும்ப விடாது ஒப்புவிக்கப்படுகிறது.

எனக்கென்னவோ படித்தாக்களை  கொஞ்சம் விலத்தி வைக்கிறது நல்லது போலத்தான் கிடக்கிறது..அது உருத்திரகுமார் என்றால் என்ன, வன்னி வீதியை கொண்டுவந்த லோகன் என்றால் என்ன?

ஓமோம் படிச்ச ஆக்களை விலத்தி வையுங்கோ எதிர்கருத்தாளர்களை மண்டையில போடுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கமுள்ளவர்கள் களத்தில் முன்னுக்கு நிற்பது நல்லது.. அதற்காக படித்தவர்கள் எல்லோரும் விளக்கம் உள்ளவர்கள் என்று அர்த்தம் ஆகாது.. :D

அறிவு வெறும் சான்றிதழைப் பெறுவதுடன் கிடைத்துவிடுவதில்லை. பட்டறிவு இருந்தால்தான் பட்டப்படிப்புக்கே மகிமை கிடைக்கும். அதனால்தான் வேலை அனுபவம் உள்ளவர்களுக்கே வேலைதர முன் நிற்பார்கள்..

அதுபோல நடக்கும் காரண காரியங்களை சுய விருப்பு வெறுப்புகளை மீறி ஆய்ந்து ஏன் எதற்கு என்று சுயத்தைக் கேட்கக் கூடியவர்களும், அதன்பால் நடக்கக்கூடியவர்களும்தான் அரசியல் போராட்டத்தில் முன்னிற்கவேண்டும். மற்றவர்கள் வெறும் விமர்சகர்களாகவே இருந்துகொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசுக்கும் தாயகத்தில் வாழும் தமிழர்களுக்கும் இடையில் அடிப்படையில் எந்தவிதமான அரசியல் தொடர்பும் இல்லை. ந க அரசு என்பது முற்றுமுழுதாக புலம்பெயர்ந்த தமிழனின் கருத்தியல் சார்ந்தது. குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழனில் மேட்டுக்குடி அடயாளந்தேடல் புத்திஜீவித அடயாளந்தேடல் சார்ந்த ஆர்வமுள்ளவர்களின் கருத்தியல் சார்ந்தது. இந்த கருத்தியலால் தாயகத்தில் ஒரு புல்லை தன்னிலும் நடவோ புடுங்கவோ முடியாது என்பது அதில் உள்ளவர்களுக்கும் தெரியும் அதை ஆதரிப்பவர்களுக்கும் தெள்ளத்தெளிவாகத் தெரியும். தெளிவற்றவர்கள் கடந்த ஐந்து வருட அதன் செயற்பாட்டில் ஒரு வீதமாகினும் தாயக மக்களின் அரசியலில் அல்லது அபவிருத்தியில் அல்லது பாதுகாப்பில் தலையிட முடிந்திருக்கின்றதா என்று தங்களை தாங்களே கேள்விகள் கேட்டு தெளிவை பெறவேண்டியதுதான். ந க அரசு மட்டுமில்லை தமிழ்த்தேசீயப்போர்வையில் இயங்கும் பல்வேறு குழுக்கள் அமைப்புகள் தனிநபர் சார்ந்த கோஸ்டிகள் எதனாலும் தாயக மக்களின் அரசியலில் அபிவிருத்தியில் பாதுகாப்பில் சாதகமான எந்த தலையீட்டையும் செய்ய முடிந்ததில்லை.  

புலம்பெயர்ந்த பெரும்பான்மை மக்கள் தாயகம் குறித்த பற்றோடும் அங்கு அவலப்படும் மக்கள் குறித்து அக்கறையோடும் இருந்த நிலையில் அவர்களின் உணர்வுகளை முடக்கியது இவ்வாறான அமைப்புகளே ! மக்கள் மூன்று முக்கிய விடயங்களில் இயங்கத் தயாகராக இருந்தார்கள். ஒன்று தாயக மக்களின் இருப்புக்கும் புனர்வாழ்வுக்கும் உதவுவது. இரண்டாவது போர்க்குற்றங்களுக்கு எதிராக குரல்கொடுப்பது. மூன்றாவது தாயக மக்களின் அரசியல் எழுச்சிக்கும் அதுசார்ந்த செயற்பாட்டுக்கும் ஒத்துழைப்பது. இப்படியாக மக்களின் இயல்பான சிந்தனையை முடக்கி மக்களுக்கு வட்டுக்கோட்டை வாக்கெடுப்பை கொண்டுவந்தார்கள். முப்பது வருடம்போராடி ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தியபின் வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு. அடுத்து நாடுகடந்த அரசு. பாராளுமன்ற அமர்வு. அரசியல் சாசனம். யாகம். மறுபுறத்தே தலமைச்செயலகம் தெடர்பகம் நெடியவன் கஸ்ரோ வினாயகம் பரிதி பாம்புக்குழு என்று ஆதிக்கப்போட்டிகள் தொடர்ந்தது. புலம்பெயர்ந்த மக்கள் எதைசெய்யவேண்டுமோ எதை செய்யக் கூடிய நிலையில் இருந்தார்களோ அத்தனையும் திசை திருப்பப்பட்டது. திட்டமிட்டு திசை திருப்பப் பட்டது. இன்று தேசீயம் என்ற கருத்தியலுக்கு தான் தான் தர்மகர்த்தா என்ற போட்டி நடக்கின்றது. இந்தப்போட்டியில் கலந்துகொள்ள  வீத மக்கள் தயாகராக இல்லை. எந்த ஒரு அமைப்பையும் நம்ப  மக்கள்  தயாராக இல்லை.  இது சிங்களத்தின் அரசியல் வெற்றி. முள்ளிவாய்க்கால் அதன் இராணுவ வெற்றி.

ஆனாப்பட்ட அமெரிக்கா,மற்றும்நேச நாடுகளால் கூட சிறிலங்காவை ஒன்றும் செய்ய முடியவில்லை. நா.க.அரசு எம்மாத்திரம்??

அந்தப் பெருமைகளில் நீங்கள் குறைச்சல் இல்லையே. மண்டையன் குழுக்களை இயக்கிய வரலாறுகள். பிள்ளை பிடித்த வரலாறுகள். போட்டுத் தள்ளிய வரலாறுகள்.. இப்போதும்.. கழிவு எண்ணெய்.. கல்லெறிதல்.. தீ வைத்தல்.. நையப்புடைத்தல்.. அச்சுறுத்தல்.. கடத்தல்.. காணாமல் போகடித்தல்..கப்பம்.. வன்புணர்தல்.. விபச்சாரம்.. மணல் அள்ளுதல்.. கள்ள வியாபாரம்.. ஆயுதம் அச்சுறுத்தல்..  என்று தொடர்ந்து கொண்டிருப்பது கண்ணிற்கு தெரியவில்லைப் போலும். இவை தான் ஒட்டுக்குழு ஆயுத சன நாயகம் என்பது உலகிற்கே தெரியும். அந்த வகையில்..முதலில் அதை நிறுத்திட்டு வந்து அடுத்தவருக்கு வேதாந்தம் போதிப்பதே சிறப்பு..! :lol::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாப்பட்ட அமெரிக்கா,மற்றும்நேச நாடுகளால் கூட சிறிலங்காவை ஒன்றும் செய்ய முடியவில்லை. நா.க.அரசு எம்மாத்திரம்??

நாடு  கடந்த அரசை  ஆரம்பித்தவர்களுக்கு

அதை ஆதரிப்பவர்களுக்கு

அதன் தொழிற்பாடு

அதன் வலு

அதன் படிமுறை  தெரியும்

எனவே அவர்கள் அதன்படி செயற்படுகிறார்கள்  அல்லது  முயல்கிறார்கள்

நாடு கடந்த அரசை  விரும்பாதவர்களுக்கு  அல்லது தமிழருக்கு எதுவுமே கிடைத்துவிடக்கூடாது என்பவர்களுக்குத்தான் இது போன்று நாடு கடந்த அரசு பற்றி  பெரும் பயமும் அது பற்றி பெரும் கற்பனையுமுண்டு. அதை இங்கும் காணலாம்.

இப்போதைக்கு நாடு  கடந்த அரசை விட்டால் தமிழீழம் என்று ஒரு பேருக்கு கூட ஒரு அமைப்பு இல்லாத நிலையில் நாங்கள் நாடு கடந்த தமிழீழ அரசை ஆதரிப்பதில் என்ன தப்பு உள்ளது ?

osted Today, 11:57 AM

Keddavan, on 14 May 2013 - 08:40 AM, said:snapback.png

அந்தப் பெருமைகளில் நீங்கள் குறைச்சல் இல்லையே. மண்டையன் குழுக்களை இயக்கிய வரலாறுகள். பிள்ளை பிடித்த வரலாறுகள். போட்டுத் தள்ளிய வரலாறுகள்.. இப்போதும்.. கழிவு எண்ணெய்.. கல்லெறிதல்.. தீ வைத்தல்.. நையப்புடைத்தல்.. அச்சுறுத்தல்.. கடத்தல்.. காணாமல் போகடித்தல்..கப்பம்.. வன்புணர்தல்.. விபச்சாரம்.. மணல் அள்ளுதல்.. கள்ள வியாபாரம்.. ஆயுதம் அச்சுறுத்தல்..  என்று தொடர்ந்து கொண்டிருப்பது கண்ணிற்கு தெரியவில்லைப் போலும். இவை தான் ஒட்டுக்குழு ஆயுத சன நாயகம் என்பது உலகிற்கே தெரியும். அந்த வகையில்..முதலில் அதை நிறுத்திட்டு வந்து அடுத்தவருக்கு வேதாந்தம் போதிப்பதே சிறப்பு..! :lol::)

நெடுக்கு அண்ணாவின் கருத்துதான் எனது கருத்தும்.

Edited by நவரத்தினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
எமக்குள் என்னும் எத்தனை தலைமை உருவாகும் - இது ஒரு காலப்பதிவு!

இந்த திரிக்கு பொருத்தமானதாக  இருக்கும் என்று நம்புகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ படித்தாக்களை  கொஞ்சம் விலத்தி வைக்கிறது நல்லது போலத்தான் கிடக்கிறது..அது உருத்திரகுமார் என்றால் என்ன, வன்னி வீதியை கொண்டுவந்த லோகன் என்றால் என்ன?

ஓமோம் படிச்ச ஆக்களை விலத்தி வையுங்கோ எதிர்கருத்தாளர்களை மண்டையில போடுங்கோ

கெட்டவனின் பின்னூட்டம் வொல்கானோவுக்கு மண்டையில் போடுவதுபோல் தெரிகிறது. வொல்கானோவுக்குரிய பின்னூட்டத்தை நெடுக்காலைபோவன் கெட்டவனுக்கு ஊட்டிவிட்டதுபோல் ஒரு சந்தேகம். சத்தியமாக எனக்கு வொல்கானோவையோ, கெட்டவனையோ பற்றித் தெரியாது. நெடுக்காலைபோவனுக்கு இவர்கள்பற்றித் தெரிந்திருந்தால் என்னை மன்னிக்கவும்.

நாடு கடந்த அரசுக்கும் தாயகத்தில் வாழும் தமிழர்களுக்கும் இடையில் அடிப்படையில் எந்தவிதமான அரசியல் தொடர்பும் இல்லை. ந க அரசு என்பது முற்றுமுழுதாக புலம்பெயர்ந்த தமிழனின் கருத்தியல் சார்ந்தது. குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழனில் மேட்டுக்குடி அடயாளந்தேடல் புத்திஜீவித அடயாளந்தேடல் சார்ந்த ஆர்வமுள்ளவர்களின் கருத்தியல் சார்ந்தது. இந்த கருத்தியலால் தாயகத்தில் ஒரு புல்லை தன்னிலும் நடவோ புடுங்கவோ முடியாது என்பது அதில் உள்ளவர்களுக்கும் தெரியும் அதை ஆதரிப்பவர்களுக்கும் தெள்ளத்தெளிவாகத் தெரியும். தெளிவற்றவர்கள் கடந்த ஐந்து வருட அதன் செயற்பாட்டில் ஒரு வீதமாகினும் தாயக மக்களின் அரசியலில் அல்லது அபவிருத்தியில் அல்லது பாதுகாப்பில் தலையிட முடிந்திருக்கின்றதா என்று தங்களை தாங்களே கேள்விகள் கேட்டு தெளிவை பெறவேண்டியதுதான். ந க அரசு மட்டுமில்லை தமிழ்த்தேசீயப்போர்வையில் இயங்கும் பல்வேறு குழுக்கள் அமைப்புகள் தனிநபர் சார்ந்த கோஸ்டிகள் எதனாலும் தாயக மக்களின் அரசியலில் அபிவிருத்தியில் பாதுகாப்பில் சாதகமான எந்த தலையீட்டையும் செய்ய முடிந்ததில்லை. 

மக்கள் மூன்று முக்கிய விடயங்களில் இயங்கத் தயாகராக இருந்தார்கள்.

நாடு கடந்த அரசைப்பற்றி அறிந்திராமையைபற்றி கவலைப்பட வேண்டும். நாடுகடந்த அரசைபற்றி தெரியுமாயின் அதை பற்றிய மேற்கண்ட அனுமானங்களை அடைய வந்த தரவுகளை  ஒழிவு மறைவின்றி மேற்கோள் காட்டலாம்.

சிலர் கோமாளித்தனமாக மேட்டுக்குடி, மேட்டுக்குடி என்று எழுதவதால் மட்டும் தாம் "படித்த அரசியல் எழுதுவதாக" நினைத்து தமது படித அரசியல் எழுதும் மேட்டுக்குடித்தன அபிலாசைகளை வெளிக்காட்டுகிறார்கள்.

நாடுகடந்த அரசு வெளிநாடுகளில் இருக்கும் கூட்டமைப்பின் "Unofficial Extension".  இதற்கான சான்றிதள்கள் தேவைப்படும்போது வெளிவிடப்படும்.  6 திருத்தம் இருக்கும் வரை சில கட்டுப்பாடுகளை கூட்டமைப்பு அனுசரித்து போகும்.  சரவதேச யூரர்களால் பொதுமக்களின் பேச்சுரிமையை மறுக்கும் சட்டம் எனப்படும் 6ம் திருத்தம்  நீக்கப்பட்டத்தின் பின்னர் தாயக மக்களுக்கும் நா.க.அ உள்ள தொடர்பு வெளியே தெரிய வரும்.

தாயகத்தில் பொருளாதார முன்னேற்றத்தை கையேற்க கூட்டமைப்பு முயல்கிறது. கிழக்கில் அது தோல்வியுற்றதின் காரணம், கக்கீம் முஸ்லீம் மக்களின் பொது பொருளாராதர முன்னேற்றத்தை தாரை வார்த்து சில அரச அரச குடும்ப பங்கு கம்பனிகளும் தனது சில உறவுகளும் தொழில் பெறுவதற்காக முஸ்லீம் மக்களை ஏமாற்றி வாக்கு பெற்று கிழக்கில் மிகக் குறைந்த இடங்களில் மட்டும் வென்ற அரச கூட்டணியை பதவியில் இருத்தியமையே. இதனால் நீதித்துறை தொழில் வாய்ப்பில் கக்கீம் வெளிப்படையான டதில்லுமுல்லுகளை செய்ததும் இதை மேற்கோள் காட்டி பொதுபல சேனா போன்ற அமைப்புகள் முஸ்லீம் மக்களின் அடிப்படை உரிமையான கலால் வரைக்கும் கை போட முடிந்ததும் கக்கீமின் சுயநலத்தால் முஸ்லீம் மக்களின் பொது நலம் சிதைக்கப்படுவதின் வெளிப்பாடுகள்,

இப்போது கூட்டமைப்பு வடக்கில் முயல்கிறது.

கிடைக்கும் வெற்றியை பொறுத்து நா.க.அரசு புலம் பெயர் மக்களை இணைத்து வடக்கு கிழக்கில் தமிழர் எப்படி 1956க்கு முதல் இ்லங்கையை கொறியாவிற்கு நிகராக வைத்திருந்தார்களோ அந்த நிலைமைக்கு வடக்கு கிழக்கு திரும்பப் போக உதவும்.  இன்றைய அரச குடும்ப கம்பனிகளின் சுரண்டல்களை வடக்கு கிழக்கில் இருந்து அகற்றி மேற்கு நாடுகளின் முதலீடுகளை வடக்கி கிழக்கில் நெறிப்படுத்த வடிகால்கள் அமைக்கும் திட்டங்களை நடை முறைப்படுத்தும்.  இதில் வெளிநாடுகளில் தொழில் புரியும் தமிழ் ஈழ, தமிழக அதிகாரிகள் தங்கள் செல்வாக்குகளை பயன்படுத்த வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறார்கள்.  இதனால் தான் நா.க. அரசின் செயல்பாடுகளை 100 % வடக்கு கிழக்கில் முடக்க அரச ஊழியர்கள் புலம் பெயர் நாடுகளில் இரவும் பகலும் செய்படுமாறு அரசால் பணிக்கப்பட்டிருக்கிறார்கள். இதைதான் சண்டமாருதன் தங்கள் உழைப்பின் வெற்றியாக அரசுக்கு பறை சாற்றுவததற்கு நா.க அரசால் வடக்கு, கிழக்கில் ஒரு புல்லைக்கூட புடுங்க முடியாது என்று திமிர் கதைக்கும் வெறித்தனம் பறை சாற்றுகிறது.   இல்லையேல் அரச மண்கொள்ளை, கட்டுமான கம்பனிகள் இன்று எயர் லங்கா, மிங்கின் எயர், நெசவுதொழில் கம்பனிகள் மாதிரி தள்ளாட வேண்டிவரும்.  மண்கொள்ளைக் கம்பனிகள் கொள்ளை வருமானம் ஈட்டுவது நா.க.அரசின் பொருளாதார அமைச்சின் முயற்சிகாளாக முன்னெடுக்கப்படும் வெளிநாட்டு மூலதனங்களால் வடக்கு கிழக்கு மக்களுக்கு வேலைவாய்ப்பு தேடும் முயற்சிகளை 100 வீதமும் முடக்குவதால் மட்டுமே முடிகிறது.

மற்றும்படி பல தாயகத்தமிழர் நா.க. அரசின் செயல்பாடுகளை குறித்து அறிவித்திருக்கிறார்கள். (அவை யாழில் பதியப்பட்டிருகின்றன. தேவைப்படும் போது அந்த திரிகளை நான் திரும்ப வெளிக்கொணர்வேன்) நா.க. அரசின் செயல்ப்பாடுகள் எப்படி தாயகத்துடன் தொடுக்கின்றது என்பதை அந்த செய்திகளை படிக்கமால் திரிகளைத் தெரிந்தெடுத்து கருத்து எழுதும் சண்டமாருதன்   அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவரின் நோக்கம் புலம் பெயர் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு தமிழர் அல்ல என்பதும், இவர்களின் சொந்த சகோதரங்கள் அங்கு இல்லை என்றும் நிரூபிப்பதுமாகும். இது வழக்கமான அரசின் நிகழ்சி நிரலினை நடைமுறைப்படுத்தும் திட்டமே. இதன் பாகமேதான் கக்கீமின் புலம் பெயர் அகதி  மக்கள் வடக்குக்கு வந்தால் மட்டுமே வாக்களிக்கலாம் என்பதில் அடங்கியிருக்கும் ஏமாற்று வித்தையும்.  ஆனால் வடக்கு, கிழக்கு மக்களின் முதல் நோக்கமான தம்மை அழித்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் இப்படி தண்டிக்கப்பட்டால்தான் வடக்கு-கிழக்கு மக்கள் சுதந்திரம் அடைந்து ஜனநாயாக பண்புகள் இருந்த வெள்ளையரின் மேலாதிக்க அரசாட்சியின் போதிருந்த பொருளாதார  சுபீட்சத்தை மீண்டும் பெற முடியும் என்ற கருத்தை முன்னெடுத்து வரும் நா.க.அ.  இன்று சர்வதேச நாடுகளையும் இதை ஒத்துக்கொள்ள வைத்திருப்பதால் தான் இன்று மகிந்தா பாரிய இக்கட்டில் இருக்கிறார். சர்வதேச நாடுகள் அதை ஏற்றுகொள்ளத்தொடங்கிய பின்னர்தான் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் இனவழிப்பு, போர்க்குற்றம் என்பனவற்றை பற்றி வெளிப்படையாக கூறத்தொடங்கினார்கள் என்பதும் உண்மை. இது நாடுகடந்த அரசு தாயக மக்களின் நாடி பிடித்து அவர்களின் கருத்தை வெளிக்கொண்டு வந்து, அவர்களுடன்  வைத்திருக்கும் தொடர்பின் வெளிக்காட்டு.

சண்டமாருதன் போட்டுக்காட்டும் நிகழ்சி நிரல் யாரிடமும் எப்போதும் இருந்ததில்லை. இது புலம் பெயர் மக்களின் நிகழ்சிநிரலாக இருந்தை எந்த ஆவணத்தின் மூலமும் சண்டமாருதன் வெளிக்கொண்டு வந்தால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இதை அரசு போட்டு சிலரிடம் பிரச்சாரத்துக்காக கொடுத்திருக்கு. தாயக மக்களின் பிரதிநித்திதுவத்தை திரும்ப திரும்ப நிரூபித்த கூட்டமைப்பு, வெளிநாட்டு ராஜதந்திரகளிடமோ  அல்லது அரசுடன் பேச்சுவார்த்தைகளில் அமர்ந்த போதோ அப்படியான நிகழ்சி நிரல் ஒன்றுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தவில்லை. அந்த நிகழ்சி நிரலை வைத்து பொருளாதார முன்னேற்றம் மூலம் வடக்கு கிழக்கில் தமிழரின் பிரதிநிதித்துவத்தை வன் புணர்வுக்கு உட்படுதும் இரகசிய திடத்துடன் பேசியது அரசு மட்டும்தான். எனவே சண்டமாருதனுக்கு அந்த நிகழ்சி நிரல் கிடைத்தது அரசிடமிருந்து எனபதற்கு யாரும் மறுப்புக் கூறவேண்டிய அவசியமில்லை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கெட்டவனின் பின்னூட்டம் வொல்கானோவுக்கு மண்டையில் போடுவதுபோல் தெரிகிறது. வொல்கானோவுக்குரிய பின்னூட்டத்தை நெடுக்காலைபோவன் கெட்டவனுக்கு ஊட்டிவிட்டதுபோல் ஒரு சந்தேகம். சத்தியமாக எனக்கு வொல்கானோவையோ, கெட்டவனையோ பற்றித் தெரியாது. நெடுக்காலைபோவனுக்கு இவர்கள்பற்றித் தெரிந்திருந்தால் என்னை மன்னிக்கவும்.

ஐயோ பன்ச், எனக்கு ஒருவரையும் தெரியாது....

ஆனால் நீங்கள் சொல்ல வாறதும் பெரிதாக விளங்கவில்லை..ஆனால் நான் மண்டையில போடுகிற லிஸ்ட்ல இல்லாட்டி சரி..விலத்தி வைத்தாலோ, சேர்த்து வைத்தாலோ பரவாயில்லை.

அடுத்த முறை துரோகி தியாகி லிஸ்ட் வரும்போது நான் எங்கே நிற்பன் என்று எனக்கே தெரியாத திருவாளர் பொதுஜனம் தான் நான் என்றால் நம்பவா போறீங்கள்?

நாடு கடந்த அரசுக்கும் தாயகத்தில் வாழும் தமிழர்களுக்கும் இடையில் அடிப்படையில் எந்தவிதமான அரசியல் தொடர்பும் இல்லை. ந க அரசு என்பது முற்றுமுழுதாக புலம்பெயர்ந்த தமிழனின் கருத்தியல் சார்ந்தது. குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழனில் மேட்டுக்குடி அடயாளந்தேடல் புத்திஜீவித அடயாளந்தேடல் சார்ந்த ஆர்வமுள்ளவர்களின் கருத்தியல் சார்ந்தது. இந்த கருத்தியலால் தாயகத்தில் ஒரு புல்லை தன்னிலும் நடவோ புடுங்கவோ முடியாது என்பது அதில் உள்ளவர்களுக்கும் தெரியும் அதை ஆதரிப்பவர்களுக்கும் தெள்ளத்தெளிவாகத் தெரியும். தெளிவற்றவர்கள் கடந்த ஐந்து வருட அதன் செயற்பாட்டில் ஒரு வீதமாகினும் தாயக மக்களின் அரசியலில் அல்லது அபவிருத்தியில் அல்லது பாதுகாப்பில் தலையிட முடிந்திருக்கின்றதா என்று தங்களை தாங்களே கேள்விகள் கேட்டு தெளிவை பெறவேண்டியதுதான். ந க அரசு மட்டுமில்லை தமிழ்த்தேசீயப்போர்வையில் இயங்கும் பல்வேறு குழுக்கள் அமைப்புகள் தனிநபர் சார்ந்த கோஸ்டிகள் எதனாலும் தாயக மக்களின் அரசியலில் அபிவிருத்தியில் பாதுகாப்பில் சாதகமான எந்த தலையீட்டையும் செய்ய முடிந்ததில்லை.  

புலம்பெயர்ந்த பெரும்பான்மை மக்கள் தாயகம் குறித்த பற்றோடும் அங்கு அவலப்படும் மக்கள் குறித்து அக்கறையோடும் இருந்த நிலையில் அவர்களின் உணர்வுகளை முடக்கியது இவ்வாறான அமைப்புகளே ! மக்கள் மூன்று முக்கிய விடயங்களில் இயங்கத் தயாகராக இருந்தார்கள். ஒன்று தாயக மக்களின் இருப்புக்கும் புனர்வாழ்வுக்கும் உதவுவது. இரண்டாவது போர்க்குற்றங்களுக்கு எதிராக குரல்கொடுப்பது. மூன்றாவது தாயக மக்களின் அரசியல் எழுச்சிக்கும் அதுசார்ந்த செயற்பாட்டுக்கும் ஒத்துழைப்பது. இப்படியாக மக்களின் இயல்பான சிந்தனையை முடக்கி மக்களுக்கு வட்டுக்கோட்டை வாக்கெடுப்பை கொண்டுவந்தார்கள். முப்பது வருடம்போராடி ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தியபின் வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு. அடுத்து நாடுகடந்த அரசு. பாராளுமன்ற அமர்வு. அரசியல் சாசனம். யாகம். மறுபுறத்தே தலமைச்செயலகம் தெடர்பகம் நெடியவன் கஸ்ரோ வினாயகம் பரிதி பாம்புக்குழு என்று ஆதிக்கப்போட்டிகள் தொடர்ந்தது. புலம்பெயர்ந்த மக்கள் எதைசெய்யவேண்டுமோ எதை செய்யக் கூடிய நிலையில் இருந்தார்களோ அத்தனையும் திசை திருப்பப்பட்டது. திட்டமிட்டு திசை திருப்பப் பட்டது. இன்று தேசீயம் என்ற கருத்தியலுக்கு தான் தான் தர்மகர்த்தா என்ற போட்டி நடக்கின்றது. இந்தப்போட்டியில் கலந்துகொள்ள  வீத மக்கள் தயாகராக இல்லை. எந்த ஒரு அமைப்பையும் நம்ப  மக்கள்  தயாராக இல்லை.  இது சிங்களத்தின் அரசியல் வெற்றி. முள்ளிவாய்க்கால் அதன் இராணுவ வெற்றி.

முற்றிலும் உண்மை.  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் ஆதிக்கப் போட்டிதான் நடக்கிறதே தவிர, மக்களுக்கான ஒரு அரசாங்கமாக அது நடந்து கொள்வதில்லை.  அங்கு இருப்பவர்களுக்கேற்ப நடந்து கொள்ளும் செயற்பாட்டாளர்கள் மட்டுமே அதற்குள் நிலைத்திருக்க முடியும்.  மற்றவர்கள் சூழ்ச்சிகள் செய்யப்பட்டு வெளியேற்றப்படுவார்கள்.  இது, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும். 

விளக்கமுள்ளவர்கள் களத்தில் முன்னுக்கு நிற்பது நல்லது.. அதற்காக படித்தவர்கள் எல்லோரும் விளக்கம் உள்ளவர்கள் என்று அர்த்தம் ஆகாது.. :D

அறிவு வெறும் சான்றிதழைப் பெறுவதுடன் கிடைத்துவிடுவதில்லை. பட்டறிவு இருந்தால்தான் பட்டப்படிப்புக்கே மகிமை கிடைக்கும். அதனால்தான் வேலை அனுபவம் உள்ளவர்களுக்கே வேலைதர முன் நிற்பார்கள்..

அதுபோல நடக்கும் காரண காரியங்களை சுய விருப்பு வெறுப்புகளை மீறி ஆய்ந்து ஏன் எதற்கு என்று சுயத்தைக் கேட்கக் கூடியவர்களும், அதன்பால் நடக்கக்கூடியவர்களும்தான் அரசியல் போராட்டத்தில் முன்னிற்கவேண்டும். மற்றவர்கள் வெறும் விமர்சகர்களாகவே இருந்துகொள்ளலாம்.

இதுதான் இன்றைய தேவை.  ஆனால், துரதிஸ்டவசமாக, இன்று செயற்படும் அனைத்து அமைப்புகளும் மக்களின் நன்மதிப்பைப் பெறத் தவறியவையாக இருக்கின்றன. 

Edited by தமிழச்சி

முற்றிலும் உண்மை.  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் ஆதிக்கப் போட்டிதான் நடக்கிறதே தவிர, மக்களுக்கான ஒரு அரசாங்கமாக அது நடந்து கொள்வதில்லை.  அங்கு இருப்பவர்களுக்கேற்ப நடந்து கொள்ளும் செயற்பாட்டாளர்கள் மட்டுமே அதற்குள் நிலைத்திருக்க முடியும்.  மற்றவர்கள் சூழ்ச்சிகள் செய்யப்பட்டு வெளியேற்றப்படுவார்கள்.  இது, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும். 

இதுதான் இன்றைய தேவை.  ஆனால், துரதிஸ்டவசமாக, இன்று செயற்படும் அனைத்து அமைப்புகளும் மக்களின் நன்மதிப்பைப் பெறத் தவறியவையாக இருக்கின்றன. 

ஏன் இப்ப இப்படி? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.