Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குத் தெரியுமோ தெரியாது, எனக்கு உந்தக் கணனி மற்றும் போன் ரெக்னோலொயியள் என்றாலே சிம்ம சொப்பனம். ஆனால் கணணி வீட்டில கிட்டத்தட்ட 23 வருடங்களாக இருக்கு. பல விடயங்களிலும் நாட்டம் கொண்டு எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும் எனக்கு, இந்த இரண்டும் பெரிய சவாலாகவே இன்றுவரை இருக்கு. அதோட எனக்குப் போன்கள் நீண்ட நாட்கள் பாவிப்பதும் குறைவு. நான் அடிக்கடி மாத்த யோசிக்காமலே அதுவா விழுந்து உடஞ்சுபோகும். அடுத்தது மாற்றும் மட்டும் வாங்கிற போன் எல்லாம் ஏதாவது ஒரு பிரச்னையை தந்து கொண்டும் இருக்கும் . மாறி மாறி ஒவ்வொரு போன் இலும் முக்கியமானவர்களின் தொலைபேசி இலக்கங்களை மட்டும் பதிந்துவிட்டு வரும் போன்களை மட்டும் பதிந்து கொள்வேன். அதனால் அவசரத்துக்கு தேவைப்படும் என்பதற்காக பழைய தொலைபேசியையும் காவிக்கொண்டு திரிவேன்.

ஒருமுறை மகளிடம் எல்லா இலக்கங்களையும் பதிந்து தந்தால்  £5 பவுண்ட்ஸ் தருவதாக ஆசை காட்டிப் பார்த்தும் பயனில்லை. ஒரு முப்பது இலக்கங்களை மட்டும் பதிந்துவிட்டு உங்கள் காசும் வேண்டாம் உந்த வேலையும் வேண்டாம் என்று தந்துவிட்டுப் போய் விட்டாள். கணவர் ஒரு நாளைக்கு பத்துப் பாத்தாப் பதியன் என்றுகூறினார். அதுக்கும் மனம் கேட்கவில்லை.

சரி எத்தனை விடயங்களுக்காகப் போராடி வெண்டிருக்கிறன். உந்த டெக்னோலொயி  விசயத்தையும் ஒரு கை பாக்கிறதுதான் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, கணவரிடம் எனக்கு ஐபாட் ஒண்டு வாங்கித் தாங்கோ என்றேன். உனக்கு போனே ஒழுங்காப் பாவிக்கத் தெரியாது . உதை வாங்கி என்ன செய்யப் போறாய் என்றார். எனக்கு போற இடங்களில பயன்படுத்த இலகுவாக இருக்கும். அதோடை கொண்டுபோகவும் சுகம் அது இது என்று ஒருவாறு கதை விட்டதில் மனிசனும், அட இவள் என்னட்டை வாங்கித் தரச்சொல்லிக் கேட்டுப் போட்டாளே எண்ட சந்தோசத்தில சரி வாங்கு என்றுவிட்டார்.  நான் மனிசனுக்குச்  சொல்லாமலேயே பல பொருட்களை வாங்கிவிடுவன். திட்டுக்குப் பயந்து பிறகுதான் சொல்லுற வழக்கம் எண்டதையும் சொல்ல வேணும். ஆனா இது கொஞ்சம் விலை அதிகம் என்பதால் சொல்லியே தீரவேண்டிய கட்டாயம் ஒருபுறம், திட்டும் கிடைக்காதுதானே என்ற நினைப்பும் மறுபுறமுமாய் ஒரு மாதிரி சம்மதம் வாங்கியாச்சு.

அடுத்து பிள்ளையள். படிக்கிற பிள்ளையள் இருக்கேக்குள்ள அவைக்கு வாங்காமல் நான் வாங்க ஒரு மாதிரி இருந்தபடியால் மூத்த மகளைக் கேட்டேன். உங்களுக்கு ஐபாட் வச்சிருக்க விருப்பமோ எண்டு. எனக்குத்தானே நல்ல போன் இருக்கு. வீட்டில மடிக் கணணி இருக்கு. உது என்னத்துக்கு என்றாள். சரி ஒரு பிரச்சனை தீர்ந்தது. மற்றவரைக் கேட்டபோது அவரும் இதே பதில்தான். கடைசி மகளை கேட்கவே இல்லை. ஏனெனில் அவர் இப்பதான் ஒன்பதாம் வகுப்பு. அவவுக்கு உதெல்லாம் தேவை இல்லை என்றனர் மற்ற இருவரும்.

அப்பாடா என்று மனதுள் நினைத்துக்கொண்டு நான் ஒரு ஐபாட் வாங்கப்போறன் என்றவுடன் ஒருவித அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தவர்கள் உடனே சிரிக்க ஆரம்பித்தனர். அம்மா உங்களுக்கு உது என்னத்துக்கம்மா என்று. போனையே விழுத்தி உடைக்கிறனீங்கள். ஐபாட் பாவம் என்றாள்  மகள். எனக்கு சரியான ரோசம் வந்திட்டுது. நான் வாங்கத்தான் போறன். உங்களுக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள். எனக்கு ஆசையாக இருக்கு வாங்கப் போறன் என்றதுக்கு, வாங்குங்கோ ஆனால் அதைச் செய்துதாங்கோ இதைச் செய்துதாங்கோ என்று எங்களிட்டை வரக்கூடாது என்று கூறிவிட்டனர்.

எனக்கும் ரோச மானம் இருக்கும் தானே. அதனால் உங்களிடம் ஒன்றுமே கேட்கப் போவதில்லை என்றுவிட்டு, கணவரிடம் இன்றே வாங்கலாமோ என்றேன். சரி வாங்கு. வான்குகிறதுதான் வாங்குகிறாய் நல்லதாக வாங்கு என்று அப்பிளில் கடைசியாக வந்த மொடலை வாங்கித் தந்தார்.   வாங்கின புதிசில கொஞ்சம் அதோட மல்லுக்கட்டினன்தான். கட்டிலில் கொண்டுபோய் வைத்து, சோபாவில் சாய்ந்துகொண்டு, குசினியில் சமைத்துக்கொண்டு என்று எல்லா விதமாகவும் ஆசைதீர வைத்துப் பயன்படுத்தினன். கொஞ்சநாள் போக அது அலுத்துப்போச்சு. நேற்று கணவர் கேட்டார் ஐபாட் இப்ப நீ பாவிக்கிறதில்லையோ என்று. நெடுகப் பாவிக்கிறதும் கூடாதுதானே. அதுதான் இருந்துவிட்டு வீட்டில் பாவிக்கிறனான் என்றேன். இப்ப அலுத்துப் போச்சு என்று எப்பிடிச் சொல்ல முடியும்.

Link to comment
Share on other sites

உங்களுக்கு பிடித்திருந்தால் ஐ பாட்டை தலைமாட்டுக்கு பக்கத்தில் வைத்து விட்டுத்தான் தூங்கி இருப்பீர்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு பிடித்திருந்தால் ஐ பாட்டை தலைமாட்டுக்கு பக்கத்தில் வைத்து விட்டுத்தான் தூங்கி இருப்பீர்கள். :)

இரண்டு மூண்டு நாள் தலை மாட்டிலையும் கிடந்ததுதான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தானை என்ன செய்யுற ஜடியா

இதைத்தான் நானும் யோசிச்சனான்

பாவம் அந்த மனுசன்

வெளியில் சொல்லவும் முடியாமல்

விழுங்கவும் முடியாமல்

துப்பவும் முடியாமல்

என்ன பாடு படுகுதோ............. :lol:  :D  :D

அத்தானையும் பக்கத்தில வச்சிருக்கிறதான்

இதைத்தான் நானும் யோசிச்சனான்

பாவம் அந்த மனுசன்

வெளியில் சொல்லவும் முடியாமல்

விழுங்கவும் முடியாமல்

துப்பவும் முடியாமல்

என்ன பாடு படுகுதோ............. :lol::D:D

அத்தானும் போனும் ஒண்டே ...?.....???...என்னண்ணா நீங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தானையும் பக்கத்தில வச்சிருக்கிறதான்

அத்தானும் போனும் ஒண்டே ...?.....???...என்னண்ணா நீங்கள்

நன்றி

பகிடி விடலாமோ என்று யோசித்தேன்

சகோதரி தானே

பகிடியாக எடுத்துக்கொள்வார் என்று நினைத்தே பதிந்தேன்

சிரித்தால் ஆயுள் கூடுமாம்

ஏதோ நம்மால் முடிந்தது....... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான ஆக்கம் எல்லாம் எடுப்புக்கு எழுதுறது என்பது என் கருத்து :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் இருந்துவிட்டு வீட்டில் பாவிக்கிறனான் என்றேன். இப்ப அலுத்துப் போச்சு என்று எப்பிடிச் சொல்ல முடியும்.

உங்களுக்கு இதெல்லாம் எதுக்கு..???!  எத்தினை அப்ஸ் வைச்சிருக்கீங்க..! ஐபாட் அடிப்படையில் மாணவர்களுக்குரியது. உங்களப் பார்த்தா மாணவராத் தெரியல்ல. இல்லத்தரசியாத்  தான் தெரியுது. அந்த வகையில் உதை.. வாங்கின நேரத்திற்கு ஒரு ஐபோனை வாங்கி இருக்கலாம். மற்றவர்களுக்காவது பிரயோசனப்பட்டிருக்கும்.

இப்பவும் ஒன்றும் அநியாயமாப் போகேல்ல. ஈபே.. கம்றீ அல்லது அமேசனில் விற்பனைக்குப் போட்டால் நல்ல விலைக்கு விற்கலாம். :)

[ஐபாட் ஐ ஐபொட் என்று கருதி எழுதிய பதிலில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.]

Link to comment
Share on other sites

ஒருமுறை மகளிடம் எல்லா இலக்கங்களையும் பதிந்து தந்தால்  £5 பவுண்ட்ஸ் தருவதாக ஆசை காட்டிப் பார்த்தும் பயனில்லை. ஒரு முப்பது இலக்கங்களை மட்டும் பதிந்துவிட்டு உங்கள் காசும் வேண்டாம் உந்த வேலையும் வேண்டாம் என்று தந்துவிட்டுப் போய் விட்டாள். கணவர் ஒரு நாளைக்கு பத்துப் பாத்தாப் பதியன் என்றுகூறினார். அதுக்கும் மனம் கேட்கவில்லை.

தொடர்பு இலக்கங்களை ஒவ்வொன்றாக விரல்களினால் தட்டி 30 இலக்கங்களை பதிவதற்கு £5 பவுண்ட்ஸ் சொற்பமே. எல்லாவற்றையும் பதிந்து தருவதற்கு £50 பவுண்ட்ஸ் சன்மானம் கொடுக்கலாம்.

Link to comment
Share on other sites

 ஐபாட்டில் கேம் விளையாடுங்கோ சுமே , அது தான் நான் செய்வது, அத்தார் ஐபாட் 3 வாங்கின பிறகு ஐபாட் 1 இனை எனக்கும் மகளுக்கும் எண்டு தந்தார் . எங்கட வீட்டில் இது தான் வழமையாக நடக்கிறது, அத்தாருக்கு அலுத்தவுடன் மகள் அல்லது என்னிடம் பழைசுகளை தள்ளிவிடுவது. நான் விரும்பி வாங்குவது எனக்கு எண்டு உடுப்புகளும், கான் பாக்குகளும் தான் 

எலேக்றோனிக்ஸ் சாமான்களில் எனக்கு இன்றஸ்ரே இல்லைப்பா :lol:

Link to comment
Share on other sites

பழயை வேம்படி தெலிபோன் நம்பர்களோ அல்லது புதிசும் ஏதாவது இருக்கோ. யாழ்ப்பாண கோடுகளும்(code) மாறிவிட்டுது :( .

இருந்தாலும் நம்பர்களை காட்டினீங்கள் என்றால் $5க்கு டைப் பண்ணித்தர முடியுமா என்று சொல்லேலும்.

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

பகிடி விடலாமோ என்று யோசித்தேன்

சகோதரி தானே

பகிடியாக எடுத்துக்கொள்வார் என்று நினைத்தே பதிந்தேன்

சிரித்தால் ஆயுள் கூடுமாம்

ஏதோ நம்மால் முடிந்தது....... :D

பகிடி விளங்காத ஆளா  அண்ணா நான். முகக்குறி தவறிவிட்டது. :D :D

இப்படியான ஆக்கம் எல்லாம் எடுப்புக்கு எழுதுறது என்பது என் கருத்து :lol:

இதில என்ன எடுப்பு இருக்கு ரதி??? எனக்கு விளங்கவில்லை.

தொடர்பு இலக்கங்களை ஒவ்வொன்றாக விரல்களினால் தட்டி 30 இலக்கங்களை பதிவதற்கு £5 பவுண்ட்ஸ் சொற்பமே. எல்லாவற்றையும் பதிந்து தருவதற்கு £50 பவுண்ட்ஸ் சன்மானம் கொடுக்கலாம்.

வருகைக்கு நன்றி. நீங்கள் கூறுவது சரிதான். சிம்மில் பதிந்துள்ள இலக்கங்கள் 300 ம் தன்ர  பாட்டில வரும். மிச்சம் தான் பிரச்சனை.

 ஐபாட்டில் கேம் விளையாடுங்கோ சுமே , அது தான் நான் செய்வது, அத்தார் ஐபாட் 3 வாங்கின பிறகு ஐபாட் 1 இனை எனக்கும் மகளுக்கும் எண்டு தந்தார் . எங்கட வீட்டில் இது தான் வழமையாக நடக்கிறது, அத்தாருக்கு அலுத்தவுடன் மகள் அல்லது என்னிடம் பழைசுகளை தள்ளிவிடுவது. நான் விரும்பி வாங்குவது எனக்கு எண்டு உடுப்புகளும், கான் பாக்குகளும் தான் 

எலேக்றோனிக்ஸ் சாமான்களில் எனக்கு இன்றஸ்ரே இல்லைப்பா :lol:

எனக்கு கேம் விளையாடுவதில் நாட்டமும் இல்லை அதற்கு நேரமும் இல்லை அலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு இதெல்லாம் எதுக்கு..???!  எத்தினை அப்ஸ் வைச்சிருக்கீங்க..! ஐபாட் அடிப்படையில் மாணவர்களுக்குரியது. உங்களப் பார்த்தா மாணவராத் தெரியல்ல. இல்லத்தரசியாத்  தான் தெரியுது. அந்த வகையில் உதை.. வாங்கின நேரத்திற்கு ஒரு ஐபோனை வாங்கி இருக்கலாம். மற்றவர்களுக்காவது பிரயோசனப்பட்டிருக்கும்.

இப்பவும் ஒன்றும் அநியாயமாப் போகேல்ல. ஈபே.. கம்றீ அல்லது அமேசனில் விற்பனைக்குப் போட்டால் நல்ல விலைக்கு விற்கலாம். :)

[ஐபாட் ஐ ஐபொட் என்று கருதி எழுதிய பதிலில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.]

எனக்கு எது வேணும் என்று நானெல்லோ முடிவு செய்வது நெடுக்ஸ். நீங்கள் அப்ஸ் என்று அப்பிளிகேசனை கூறுகிறீர்களா?? அல்லது வேறு ஏதாவதா ??? என்று எனக்கு விளங்கவில்லை. தற்போது ஒரு 20 அப்ஸ் தான் வைத்திருக்கிறேன். தேவை ஏற்படின் இத்தனையையும் அதில் டௌன்லோட் செய்துகொள்ளலாம்.  அதுசரி ஐபாட் கறள் பிடிக்காதுதானே. பிறகேன் ebay இல் போட்டு விக்கச் சொல்கிறீர்கள் என்று விளங்கவில்லை.

 Apple iPad with Retina Display, Apple A6X, 1.6GHz, iOS 6, 9.7”, Wi-Fi & Cellular, 128GB, Black

பழயை வேம்படி தெலிபோன் நம்பர்களோ அல்லது புதிசும் ஏதாவது இருக்கோ. யாழ்ப்பாண கோடுகளும்(code) மாறிவிட்டுது :( .

இருந்தாலும் நம்பர்களை காட்டினீங்கள் என்றால் $5க்கு டைப் பண்ணித்தர முடியுமா என்று சொல்லேலும்.

:D

பழைய வேம்படி இலக்கங்கள் எல்லாம் சிம்மில பதின்சதால அப்பிடியே இருக்கு. மிகுதி ஒரு 160 இலக்கங்கள் தான். பதிஞ்சுதர முடியுமோ மல்லை ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழிஞ்சுது போ.....................

நெடுக்கு சொல்வது சுமேக்கு புரிவதற்குள்..............ஐபாட்டில் புதிசா பத்து வந்திடும்...

:lol:

Link to comment
Share on other sites

பழைய வேம்படி இலக்கங்கள் எல்லாம் சிம்மில பதின்சதால அப்பிடியே இருக்கு. மிகுதி ஒரு 160 இலக்கங்கள் தான். பதிஞ்சுதர முடியுமோ மல்லை ??

அக்கா நீண்ட நாளாய் கேட்க வேணும் என்றிருந்தேன் .எனது நண்பிகள் வரிசையில் வேம்படியில் படித்த ஒரு நண்பி பற்றி உங்களிடம் அறிய ஆவலாய் உள்ளேன்.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ ஐயோ..

iPad um ஒரு ஆப்பிள் டிவி யும் இருந்தால்...சிவனே என்று இருந்த  idaththil இருந்து எல்லாம் பார்க்கலாம். சொஞ்சம் காசு இருந்தால் netflix இல்லாட்டி hulu என்ற அப்பாசை இறக்கி வைத்து விட்டு வேண்டிய படத்தை வேண்டிய மாதிரி பார்க்கலாம்.... புத்தகம் வாசிக்கலாம் கடவுளே iPad  வைத்து என்ன செய்கிறது என்று கேக்கிரீர்களே..  

வேம்படியில் படித்த நண்பி என்கிறீர்கள். தொடர்புகள் ஏதும் இல்லையா??? அல்லது மனைவிக்குப் பயந்து எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டீர்களா??? :D :D கேளுங்கள் எனக்குத் தெரிந்திருந்தால் கூறுகிறேன்.

அதுதான் அக்கா கேட்பதா ,விடுவதா ,என்று தவியாய் தவிக்கிறேன் ...........என் குற்றமா அது உன்குற்றமா என பாட்டுக்கூட வருது,,,,,,,,,,,,,,,,, :D  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ..

iPad um ஒரு ஆப்பிள் டிவி யும் இருந்தால்...சிவனே என்று இருந்த  idaththil இருந்து எல்லாம் பார்க்கலாம். சொஞ்சம் காசு இருந்தால் netflix இல்லாட்டி hulu என்ற அப்பாசை இறக்கி வைத்து விட்டு வேண்டிய படத்தை வேண்டிய மாதிரி பார்க்கலாம்.... புத்தகம் வாசிக்கலாம் கடவுளே iPad  வைத்து என்ன செய்கிறது என்று கேக்கிரீர்களே..  

வொல்கானோ,

அததை அந்த விதமாய்த்தான்  செய்யவேணும். படம் தியேட்டரில் பாக்காமல்விட்டாலும் தொலைக்காட்சியில் பார்ப்பதுதான் எனக்குப் பிடிக்கும். மடிக் கணனியில் கூட நான் பார்க்க மாட்டேன். தற்பொழுது இணையங்களிலும், யாழிலும், மெயில் பார்ப்பதும் skype இல் கதைப்பதும் தான் அதில் செய்வது. என்ன செய்வது உங்கள் வருத்தம் புரிகிறது. இதுதான் விதி என்பது. போயும் போயும் என்னட்டை வந்து மாட்டுப்பட்டு கிடக்கு ipad. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ ஐயோ ..."ஆப்பிள் டிவி" என்கிறவர் iPad யும் உங்கட 40/50/60 இஞ்சி பிளாஸ்மா/LCD டிவி யும் வயர்லேஸ் ஆல் இணைகிறவர். (என்னுடைய 2 வயது மகன் செய்வார்..அவர் iPhone ஊடக செய்வார்.- நீங்கள் அதை வடிவாக செய்யலாம்)

Link to comment
Share on other sites

பழைய வேம்படி இலக்கங்கள் எல்லாம் சிம்மில பதின்சதால அப்பிடியே இருக்கு. மிகுதி ஒரு 160 இலக்கங்கள் தான். பதிஞ்சுதர முடியுமோ மல்லை ??

இதைதான் சொல்லுறது வேலுப்பிள்ளை அண்ணைக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாதுதென்டு :D

(உங்களின் ஐபாட்டோடு வேலைசெய்யும் PC Sync Applicationயை கண்டு பிடித்தீர்களாயின் PC யில் தட்டச்சு செய்து ஐபாட்டுக்கு அனுப்புவது இலகு. மேலும் PCஇல் இருக்கும் விலாசங்கள் வேறு பல மென்பொருள்களுடனும்(Outlook, Mail Merge) பாவிக்க முடியும். நான் ஆப்பிள் பாவிப்பத்தில்லை. ஆனால் விண்டொவில் அப்படித்தான் செய்வேன்.) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண் மங்குகின்ற வயதில் இதுகளைப் பாவித்தால் கெதியில் 

கண் பார்வை போய்விடும் போல் இருக்கின்றது.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழிஞ்சுது போ.....................

நெடுக்கு சொல்வது சுமேக்கு புரிவதற்குள்..............ஐபாட்டில் புதிசா பத்து வந்திடும்...

:lol:

அவங்க அதையும் ஒரு ஆண் என்ன கேட்கிறது என்ற கோணத்தில பார்க்கிறது.. கொடுமை. அதைவிடக் கொடுமை.. கறள் கட்டிறது பற்றிக் கதைக்கிறது.

இதில ஜெயில் பிரேக் அதுஇதென்று கதைக்க வெளிக்கிட்டுருந்தால்.. என்ன நான் என்ன கிரிமினல் என்று நினைச்சியோன்னு வேற கேட்டிருப்பாங்க..!

இவர்களை எல்லாம் வேம்படி உருவாக்கி இருக்கேன்னு நினைக்கிறப்போ.. வேம்படி வேப்பமரத்தில தூக்குப் போட்டு மாண்டிடலாமோன்னு தோனுது..! :lol::D

==============

சாரி சிஸ்டர்.. உங்களோட இப்படியான மாற்றர்கள் கதைக்கிறது ரெம்ப தப்புண்ணு புரிஞ்சுக்கிட்டன்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நீங்கள் ஐபாட்லை நிக்கிறியள்....... கை போன் வந்தகாலத்திலை எனக்கு நடந்தகதையை சொல்லுறன்.
 ஜேர்மனியிலை உந்த ரெலிபோன் வந்த புதிசிலை எனக்கும் பெரிய ஆசையாய் இருந்தது.... வாங்குவமெண்டு விலையை கேட்டவுடனை தலைசுத்தி விழாக்குறையாய் தவண்டுகொண்டு திரிஞ்சதையெல்லாம் இஞ்சை சொல்லேலாது..........இருந்தாலும் என்ரை கணக்குக்குக்கு விலை சரிவர நானும் ஒரு கைத்தொலைபேசி வாங்கினன்...வாங்கினன்...வாங்கினதுதான்.....
 
என்ரை ரமிழ் கூட்டுவள்....கண்டவையள்...பார்த்தவையள்...கூடித்திரிஞ்சவையள்,சொந்தங்கள் எல்லாம்  அடிக்காத, நக்கலேயில்லை.....
 
உவர் என்ன கான் போனோடையோ பிறந்தவர்?
பந்தா காட்ட வெளிக்கிட்டுட்டார்?
ரெலிபோன் கதைக்கோணுமெண்டால் உங்கை மூலைக்குமூலை ரெலிபோன் பூத் இருக்கெல்லே?
காசுக்கொழுப்பு?
இவர் என்ன போலிஸ் வேலையோ பாக்கிறார்?
 
எண்டு என்னை நக்கலடிச்சவையெல்லாம்.......இப்ப ரெலிபோனை இடுப்பிலை கட்டிக்கொண்டு திரியினம்.....அதிலையே வாழ்க்கை நடத்தீனம்......
 
வேளாவேளைக்கு சாப்பிடினமோ இல்லையோ அது பிரச்சனையில்லை.....வேளாவேளைக்கு கான்போனுக்கு சார்ச் பண்ணுறதிலை வலு கவனம். :icon_idea:
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனடாவின் (Canada) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைப் பாதுகாவலரும் செயற்பாட்டாளருமான ராதிகா சித்சபைசனின் ( Radhika Chitsabesan) புதிய ஆவணப்படமான ரே ஒப் ஹோப் (நம்பிக்கையின் ஒளிக்கீற்று) இன்றைய தினம் (05) ஸ்காப்ரோவில் (Scarborough) திரையிடப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு தனது ஐந்து வயதில் ராதிகா தமது குடும்பத்துடன் கனடாவுக்குத் தப்பிச் சென்றார்.  இந்தநிலையில் ரே ஒஃப் ஹோப், (Ray of Hope)ஆவணப்படமானது  இலங்கையில் 26 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் மற்றும் தமிழ் மக்களின் இனப்படுகொலையின் தாக்கங்களையும், தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் தனிப்பட்ட கதைகளையும் அனுபவங்கள் மூலம் ஆராய்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பல கனடியர்கள், குறிப்பாக பெரிய பெருநகரங்களில் உள்ளவர்கள் ஒரு தமிழர் அல்லது அவரின் குடும்பத்தை அறிந்திருக்கிறார்கள் - அவர்கள் வாழ்கிறார்கள், கற்றுக்கொள்கிறார்கள், விளையாடுகிறார்கள் அல்லது ஒரு தமிழருடன் வேலை செய்கிறார்கள். இருப்பினும், இங்கு ஏன் இவ்வளவு தமிழர்கள் கனடாவில் இருக்கிறார்கள், என்பதற்கான உண்மையான காரணங்கள் பலருக்குத் தெரியாது என்று சித்சபேசன் தெரிவித்துள்ளார். எங்கள் மூதாதையர் தாயகமான தமிழ் ஈழம், ஏராளமான விளை நிலங்களையும், ஏராளமான கடற்கரைகளையும் கொண்ட அழகிய மற்றும் வளமான இடமாக அறியப்படுகிறது.  எவ்வாறாயினும்,  இலங்கை அரசாங்கத்தின் வேண்டுமென்றே, திட்டமிட்ட மற்றும் நடந்துகொண்டிருக்கும் தமிழ் இனப்படுகொலையால், பல தமிழர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உலகின் பல பகுதிகளில் பாதுகாப்பைத் தேடிக்கொண்டனர், அந்த வகையில் கனடாவில் மிகப்பெரிய புலம்பெயர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இந்தநிலையில் ரதிகா சித்சபேசன் தனது நண்பரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரியான் சிங்குடன் இணைந்து 11 வருடங்களாக இந்த படத்துக்காக பணியாற்றி வருகிறார்.  தமிழ் இனப்படுகொலை புதிய ஆவணப்படம் தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, “இனப்படுகொலையில் இருந்து உயிர் பிழைத்தவளாக தமக்கு கிடைத்திருக்கும் மகத்தான பாக்கியம், தமது கல்வி நிலைகள், தமது தளம் மற்றும் வலையமைப்பு, அத்துடன் எனது உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் கனேடியனாக, தமது பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றின் காரணமாக இந்தப் படத்தை உருவாக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.  வரலாற்று உண்மைகளாக, தப்பித்தல், உயிர்வாழ்வது, பின்னடைவு போன்ற பலரின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் கனடாவில் தமிழர்கள் எவ்வாறு செழித்து வருகிறார்கள் என்பதைக் இந்த ஆவணப்படத்தில் காண்பிப்பது முக்கியம் என்று நாங்கள் நினைத்தோம்.  படத்தின் தயாரிப்பின் போது, காணாமல் போன, அல்லது கொலைசெய்யப்பட்ட தங்கள் மகன்கள் மற்றும் கணவர்களைத் தேடும் போது, போராட்டத்தின் மூலம்  இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக தைரியமாக தொடர்ந்து போராடும் தாய்மார்களுடன் உரையாடல்களை நடத்தினோம்.  காசாவில் இடம்பெறும் மோதல் இந்த திரைப்படம்,  இலங்கை மோதல் மற்றும் காசாவில் தற்போதைய மோதலுக்கு இடையே காணப்படும் ஒற்றுமைகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.  காசாவில் இன்று பாலஸ்தீனியர்கள் வெகுஜன மற்றும் கண்மூடித்தனமான அழிக்கப்படுகின்றனர். இதுவே 2009 மே மாதம்  இலங்கைத் தீவு நாட்டில் தமிழர்களுக்கு நடந்தது.  முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் இரண்டு கிலோமீற்றர் நிலப்பகுதிக்குள் வளைக்கப்பட்டு  படுகொலை செய்யப்பட்டு 15 வருடங்கள் ஆகின்றன. காசா பகுதி 40 கிலோமீட்டர் நீளம் கொண்டது, பாலஸ்தீனியர்கள் இந்த மேற்குக் கரையுடன் பல ஆண்டுகளாகத் தள்ளப்பட்டுள்ளனர், ஆனால் படுகொலை இன்று நடக்கிறது எனினும் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் பாலஸ்தீனியர்கள் மற்றும் தமிழர்கள் இருவருமே தத்தமது பூர்வீக நிலங்களில் நிம்மதியாக வாழ வேண்டும் என்று எப்போதும் விரும்புகின்றனர். அவர்கள் இருவருமே அரசால் இனப்படுகொலைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.  எனவே எங்கள் உண்மைகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும்” என்று ரதிகா சித்சபேசன் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/ray-of-hope-documentary-by-radhika-chitsabesan-1714862461?itm_source=parsely-api  
    • கூழுக்கு தேங்காய் சொட்டு  என்பது பஜனைக்கு பக்க வாத்தியம்போல அருமை........!  😂
    • என்ன செய்வது எம்மைப் போன்றவர்களும், ஏன் பிக்குகளும் அவர்களால் ஆசீர்வதிக்கப் படுபவர்களும் கூட புத்தரின் 16 வதில் இருந்து அவர் வாழ்ந்த 29 வயதுக்குள்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்......அதைத் தாண்டி ஒரு வயது கூட எமக்கு ஏறவில்லை அதற்குள் மரணித்தும் விடுகின்றோம்........! 
    • கள்ளனுக்கு கள்ளன்...திருடனுக்கு திருடன் உதவி....இதிலை எது சரி..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.