Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான அவலம் புலிகளின் மூத்த போராளி தூக்கில் தொங்கிய நிலையில சடலமாக மீட்பு:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் மூத்த போராளியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

 

வடமராட்சியின் இமையாணன் பகுதியினில் வெற்று பனங்காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

 

49 வயதுடைய சித்திரன் கந்தசாமி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்;. லம்போ என்றழைக்கப்படும் குறித்த போராளி சுமார் 30 வருடகாலம் போராட்டத்தில் இணைந்து இருந்ததாக கூறப்படுகின்றது.

 

புலிகளின் தலைவர் பிரபாகரனிற்கு அண்மித்த நிலைகளிலிருந்த லம்போ மோதல்; ஒன்றில் தலையில் படுகாயம் அடைந்துள்ளார். திருமணமாகாது தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்திருந்த லம்போ புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக அயலவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. 

 

இந்நிலையிலேயே இன்று காலை  அவரது சடலம் சந்தேகத்திற்கு இடமாக மீட்கப்பட்டுள்ளது.

தகவலையடுத்து மீட்கப்பட்ட அவரது சடலம் வல்வெட்டித்துறை அரசினர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனைகளின் பின்னர் குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அண்மையில் பொலிகண்டிப்பகுதியில் இதே போன்றே பெண் போராளியொருவர் தனக்கு தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93375/language/ta-IN/article.aspx

நாடு கடந்த அரசுக்கும் அதைப் போன்ற பல அமைப்புகளுக்கும் இவரது பெயராவது தெரிந்து இருக்குமா?

லம்போ வாத்திக்கு அஞ்சலிகள்... 

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்.

 

சிறீலங்காவின் புனர்வாழ்வு நடவடிக்கைகளை மெச்சும்.. இந்திய உபகண்ட.. மற்றும்..மேற்கு நாட்டினருக்கும்.. மேற்கு நாட்டு கணவான் அமைப்புக்களுக்கும்.. உதுகள் தெரியுமோ..??! எங்கட தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற தமிழ் தேசிய அமைப்புக்களுக்கு இந்தப் போராளிகளோடு தொடர்பு பேணி அவர்களிற்கு தேவையானவற்றை மக்களிடம் இருந்து பெற்றுக் கொடுக்க மனசு தான் வருமோ..??!

 

நாட்டுக்குள்ள இயங்க முடியாத நாடு கடந்த அரசைப் பார்த்து கேள்வி கேட்கிற நாங்கள் நாட்டுக்குள்ள இந்தப் போராளிகளின் அருகில் உள்ள ஆக்களைப் பார்த்து ஏன் கேள்வி கேட்கிறமில்ல..! இந்தப் போராளிகள் சாவுக்கு காரணமாக உள்ள அரசை ஊக்குவிக்கும் நாடுகளையும் அமைப்புக்களையும் ஏன் நாங்கள் கேள்வி கேட்கிறமில்ல..??!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்!

 

ஒரு சமுதாயமாக, சமூகமாக, ஒரு இனக்குழுமமெனப் பார்க்கையில், நாங்கள் தோல்வியடைந்து விட்டோம் என்பதே வலி நிறைந்த உண்மையாகும்!

 

ஒரே ஒரு விடயத்தில் மட்டுமே, நாம் .........................

 

resize_20130604072131.jpg

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

உன்னைக்காப்பாற்ற முடியாத இந்த இயலாத்தமிழனின் 

ஆழ்ந்த அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்போராளியின் இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
ஒவ்வொரு தடவையும் யாராவது தற்கொலை செய்யும் போதும்,இறக்கும் போதும் வீர வணக்கமும்,கண்ணீர் அஞ்சலியும் சொல்லிகிட்டு போயிட்டே இருப்போம்  :blink:
 

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தடவையும் யாராவது தற்கொலை செய்யும் போதும்,இறக்கும் போதும் வீர வணக்கமும்,கண்ணீர் அஞ்சலியும் சொல்லிகிட்டு போயிட்டே இருப்போம் :blink:

இதில் என்ன புதுமை?? உற்றார் உறவினர்கூடத்தான் சாகிறார்கள்.. தற்கொலை செய்கிறார்கள்.. பல தடவைகள் அஞ்சலி செய்யாமல்.. அவ்வளவு ஏன்.. ஒரு தொலைபேசி அழைப்புகூட மேற்கொள்ளாமல் போய்க்கொண்டே இருக்கிறோம்..

அஞ்சலிகள்!

 

நாடு கடந்த அரசுக்கும் அதைப் போன்ற பல அமைப்புகளுக்கும் இவரது பெயராவது தெரிந்து இருக்குமா?

 

நாடு கடந்த அரசு, புலம் பெயர் அமைப்புக்கள்... இந்த கொலையைச் செய்த்திருக்க சந்தர்ப்பம் இருக்காது? ஏன் அப்படியா சந்தேகப்படுகிறார்கள்.?
 


 

ஒவ்வொரு தடவையும் யாராவது தற்கொலை செய்யும் போதும்,இறக்கும் போதும் வீர வணக்கமும்,கண்ணீர் அஞ்சலியும் சொல்லிகிட்டு போயிட்டே இருப்போம்  :blink:

 

 

எழுதுபவற்றுக்கு இல்லாவிட்டாலும், நீங்கள் முன்னின்று செய்பவை எல்லாவற்றுக்கும் எனது ஆதரவு இருக்கு.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இது தற்கொலையல்ல. படுகொலை. இதை நாங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் வேதனை.

உண்மையில் சிறிலங்கா அரச புலனாய்வாளர்கள் தான் பலவந்தப்படுத்தித் துாக்கில் போடுகின்றார்கள். சில தகவல்கள் பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாது. ஆனால் இப்படியான கொலைகள் தற்கொலைகள் என்றபெயரில் மறைக்கப்படுகின்றன.

இல்லாவிடின் விபத்தில் கொலை செய்வார்கள். வாகன விபத்து, நீரில் முழ்கி இறந்தார் என்றவகையில்...

நாங்கள் இலகுவாக இதை எடுத்தால் என்னமும் பல படுகொலைகள் இப்படி அரங்கேறும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள். அரசு தங்களில் பழி வராமல்  போராளிகளை தற்கொலை செய்ய நிற்பந்திக்கிறார்கள்.புனர்வாழ்வு முகாமில் தற்கொலை செய்யாதவர்கள் வெளியில் வந்தவுடன் எப்படி தற்கொலை செய்வார்கள் என்பதில் தான் சந்தேகம் எழுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

BA40BBF0BB00BC10B9A0BBF0BA40BCD0BA40BBF0

உன்னைக்காப்பாற்ற முடியாத இந்த இயலாத்தமிழனின் 

ஆழ்ந்த அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது தற்கொலையல்ல. படுகொலை. இதை நாங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் வேதனை.

உண்மையில் சிறிலங்கா அரச புலனாய்வாளர்கள் தான் பலவந்தப்படுத்தித் துாக்கில் போடுகின்றார்கள். சில தகவல்கள் பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாது. ஆனால் இப்படியான கொலைகள் தற்கொலைகள் என்றபெயரில் மறைக்கப்படுகின்றன.

இல்லாவிடின் விபத்தில் கொலை செய்வார்கள். வாகன விபத்து, நீரில் முழ்கி இறந்தார் என்றவகையில்...

நாங்கள் இலகுவாக இதை எடுத்தால் என்னமும் பல படுகொலைகள் இப்படி அரங்கேறும்

 

உண்மை தூயவன்.

அத‌ற்கேற்றால் போல்... எல்லாப் பழிகளையும், புலிகள் ஆதரவாளர் மீது, சுமத்துவதற்கு, ஒட்டுக்குழுக்கள் தயாராக இருக்கின்றார்கள்.

 

கண்ணீர் அஞ்சலிகள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.