Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோடைக்கால விடுமுறைக்கு வடக்கு கிழக்கு சென்று அரைகுறை ஆடைகளுடன் திரியும் புலம்பெயர்த் தமிழர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வலம்புரி பிரசுரித்துள்ள படம் சார்ந்தல்ல விவாதம் இங்கு போய்க்கொண்டிருக்கிறது.

வலம்புரி மட்டுமல்ல... பல ஊடகங்களும் கடந்த காலத்தில்.. யாழ் குடா உட்பட்ட போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உல்லாசப் பயணம் வருவோர்.. பல்வேறுபட்ட சமூகச் சீர்கேடுகளில் ஈடுபடுவது குறித்த முறைப்பாடுகள் செய்து வருகின்றன.

விடுதலைப்புலிகளின் காலத்திலும்.. புலம்பெயர்ந்தவர்கள் காவி வந்த எயிட்ஸ் நோய் தொடர்பான எச்சரிக்கைகள் உட்பட பல எச்சரிக்கைகள் வெளிவந்திருந்தன. இவை அந்த மக்களை சந்தேகக் கண்கொண்டு பார்த்தற்காக அல்ல. அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ.. காவி வரும் பாதகமான விளைவுகள் மற்றவர்களைச் சென்றடையாமல் இருக்கவே.

ரூ பீஸ் என்றால் என்னென்று தெரியாவிட்டால்.. யாரிடமாவது கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அந்த அசிங்கத்தை இங்கு எழுதி பெண்களின் கொஞ்ச நெஞ்ச மானத்தையும் வாங்க விரும்பவில்லை.

ஊரில ஒரு சில ஆன்ரிகள்.. சினிமா மற்றும் தென்னிலங்கை.. வெளிநாட்டுத் தாக்கத்தால்..தறிகெட்டுப் போனதற்காக எல்லோரும் அப்படியென்றில்லை. அப்படியான ஆன்ரிகள் கூட கோவில் என்று வந்துவிட்டால்.. இடத்திற்குரிய நாகரிகத்தை பின்பற்றவே செய்தனர். நல்லூரில் மினி ஸ்கேர்ட் போட்டுக் கொண்டு.. விழுந்து கும்பிட்ட ஆன்ரிகள் இருக்கினமோ..??! நீங்கள் நல்லாவே கற்பனை செய்து கதை எழுதுவீர்கள் என்பது புரியும். நாங்களும் அதே நல்லூரில் தான் வெகு காலம் வாழ்ந்தவர்கள். நானென்றால் அப்படி ஆன்ரிகளைக் காணவில்லை..!!!

ஆடை என்பது கவனச் சிதறல்களுக்கு இடமளிக்காத வகையில்.. அணியப்படுதலே கோவில்.. மற்றும் பொது இடங்களில் வலியுறுத்தப்படுகிறது. அது எல்லா நாடுகளிலும் உள்ள நடைமுறை தான். பீச்சில் போய்.. பார்க்கில் போய் நீங்கள் எப்படியாவது இருக்கலாம். ஆனால் அதே மாதிரி.. பொது இடங்களில்.. பொதுப் போக்குவரத்து ஊடகங்களில்.. நிறுவனங்களில்.. பள்ளிகளில்.. வழிபாட்டிடங்களில் இருக்க முடியாது. அவை அவற்றிற்கு என்று ஓர் உடை ஒழுங்கு (Dress code) மற்றும் உடை ஒழுக்கம்.. ( Dress discipline) உண்டு. அதையே தான் தாயக மக்களும் வலியுறுத்தினம்.

பாலியல் வன்புணர்வு செய்வோர்.. பாலியல் குற்றம் செய்வோர்.. உடைகளை மட்டும் நோக்கி அவற்றைச் செய்வதில்லை. பால்.. வயது.. அவர்களின் மனநிலை சார்ந்து இவை இருக்கிறது. என்றாலும் உடைகளின் தாக்கம் சில சம்பவங்களில் இருந்துள்ளது. அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் பொதுவாக உள்ள ஒன்றுதான். அவற்றை மறுத்து வரும் கருத்துக்களும் உடை வடிவமைப்பாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பிரச்சனை அது அல்ல. ஒரு பெண் அரையும் குறையுமாக ஆடை அணிந்து சென்றால் கவர்ச்சி என்று சித்தரிக்கும் சினிமா ஒழுங்கில் வாழும் மக்களிடம் அதையே நேரில் செய்யும் போது பாதக விளைவுகளுக்கு வாய்ப்புள்ளது. அதனை நிராகரிக்க முடியாது.

சிங்களப் படைகள் தமிழ் பெண்கள் என்ற ஒரு காரணத்திற்காக பாலியல் வெறியாட்டம் செய்கின்றன என்றால் அது 100% உண்மை. அதே நேரம்.. சிங்களப் படைகளின் இலக்குகளாகக் கூடிய கவர்ச்சிகரமான உடை அணியும் தமிழ் பெண்களுக்கு கூடிய ஆபத்து உள்ளது என்பதையும் நிராகரிக்க முடியாது.

அந்த வகையில்.. அது புலம்பெயர் பெண்களுக்கு மட்டுமல்ல.. தாயகத்தில் உள்ள பெண்களுக்கும் ஆபத்தானதாகும். எனவே இது குறித்து பலமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டியது ஒரு சமூகப் பொறுப்புள்ள பிரஜைக்கு அவசியம்.

இங்கிலாந்தில் அண்மையில் பெண் பிள்ளைகள் பாடசாலையில் குட்டைப் பாவாடை அணியத் தடை கொண்டு வரப்பட்டது. அதனை வரவேற்றவர்களும் உளர். எதிர்த்தோரும் உளர். ஆனால் நிர்வாகம் அதனை அமுல்படுத்தியே வருகிறது. அந்த வகையில்.. உடை விவகாரத்தில்.. அந்தந்த நாட்டு மக்கள் தங்களின் பொது வழக்கத்திற்கு மாறாக ஆபத்தான விளைவுகளைத் தரவல்ல.. உடையணியும் உலாவிகள் தொடர்பில் தக்க நடவடிக்கைகள் எடுப்பது அவரவர் சுதந்திரமும் ஆகும். அதை பரிகசிப்பது தான் அறியாமை. அதனையே ரியுலிப் துல்பன் செய்கிறார்.

School bans girls from wearing 'unladylike' short skirts.

school_children_1112974b.jpg

Girls as young as nine have been banned from wearing skirts to school because of concerns they are getting too short and “unladylike”.

http://www.telegraph.co.uk/education/educationnews/10207263/School-bans-girls-from-wearing-unladylike-short-skirts.html

மேற்படி தடை குறித்து ரெலிகிராப் வாசகர் ஒருவரின் கருத்து....

"Good on the school. This ban is the result of some parents not co-operating and ensuring dresses and skirts of a suitable length. It's not appropriate to be flashing their knickers all the time - at some schools the girls wear knee length leggings under their skirts by personal choice which also solves the problem.

This is nothing to do with Islamification in the UK and everything to do with these children increasing flashing absolutely everything inappropriately and their parents no longer showing any concern, altering skirts lengths downwards when necessary or buying new skirts when they are no longer the right size, with these garments never having been cheaper relative to income. You don't have to be a muslim to think that flashing your knickers is not the right thing to be constantly doing at school."

நானும் வலம்புரி போட்ட படத்தை பற்றி கேட்கவில்லை.புலம் பெயர்ந்த நாட்டில் பிறந்தவர்கள் அல்லது இங்கிருந்து போனவர்கள் எந்தெந்த இடத்தில் என்னென்ன உடுப்பு போடுவதென்று தெரியாமல் 'டூ பீஸ்' உடுப்போடு அலைவதை கண்டீர்களா? அல்லது யாராவது கண்டார்களா? என்று தான் கேட்டேன்.அதற்கு அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் நான் சொன்னதையே திருப்பி சொல்கிறீர்கள்.
 
உடை என்பது தன்னம்பிக்கையோடு சம்மந்தப்பட்ட விசயம்.புலிகளின் பெண்  உறுப்பினர்கள் ஆரம்பத்தில் ஜீன்ஸ் அணிய ஆயிரம் கதை கதைத்தவர்கள் உங்களை போல ஆட்கள் :( ஆனால் அதுவே அவர்களுக்கு தன்னம்பியை கொடுத்தது.ஊரில் அழகாய் உடுத்தி வேலைக்கு போய் வரும் பெண்களை பாலியல் பலாத்காராம் செய்வதை விட அமைதியாய்,அடக்க,ஒடுக்கமாய் இருக்கும் பெண்களிடம் தான் பாலியல் பலாத்காரம் செய்வது அதிகமாய் நடக்கிறது
 
நீங்கள் கூட உடைக்கும்,பலாத்காரத்திற்கும் சம்மந்தமில்லை என்று சொல்லி விட்டீர்கள்.எய்ட்ஸ் கூட இங்கு இருந்து போன வெள்ளைகளுடன் அங்கிருக்கும் தமிழ் பெண்கள் கள்ளப் உறவு வைத்ததால் தான் பெருகியதே தவிர புலம் பெயர்ந்து போனவர்களால் அல்ல.எதற்கெடுத்தாலும் புலம் பெயர்ந்தவர்கள் காரணம் எனப் புலம்பாமல் <_< ஊரில் இருப்பவர்களை ஒழுங்காய் இருக்கச் சொல்லுங்கோ.ஊரில் இருப்பதை விட புலம் பெயர் நாட்டில் ஒழுங்காய்த் தான் இருக்கிறார்கள்.
 
யாழ்ப்பாணம் ஒரு காலத்தில் சிங்கப்பூராக மாறினால் அங்குள்ள மக்களும்,இங்குள்ள மக்களைப் போல தான் உடுத்துவார்கள்.ஆனால் புலம் பெயர்ந்த தமிழருக்கும் சரி,அங்குள்ள தமிழருக்கும் சரி குறிப்பாக பெண்களுக்கும் சரி எந்தெந்த நேரத்தில் எந்தெந்த உடுப்பு உடுத்த வேண்டும் என்பது தெரியும்.ஆகவே புலம்பாமல் போய் வேலையைப் பாருங்கோ :)
  • Replies 103
  • Views 7.9k
  • Created
  • Last Reply

இங்க எத்தின அம்மா அப்பா இருக்கிறியள் இப்படி ஒரு பெண் பிள்ளையை வெளிநாட்டில வச்சுக்கொண்டு ? உங்களுக்கு தெரியாதா உந்த வயசு பிள்ளையளுக்கு ஒருத்தரும் அட்வைஸ் பண்ண முடியாது எண்டு?  செவிடன் காதில சங்கு ஊதினா போலத்தான், முக்கியமா வெளிநாடில  வளர்ற பிள்ளையளுக்கு.

சும்மா சந்திரனை பார்த்து குலைச்சு கொண்டு இராமல் உருப்படியா ஏதும் பண்ணுகளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அரைச்சது காணும் போயிட்டு வாங்கோ :lol: யாழுக்கு வாறதே மூகமூடி அணிந்து,என்னையும் சேர்த்துத் தான் :) அதிலும் நேருக்கு,நேர் மோத முடியாமல் இன்னொரு முகமூடியோட வர வெட்கமாயில்லை ^_^

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வலம்புரி போட்ட படத்தை பற்றி கேட்கவில்லை.புலம் பெயர்ந்த நாட்டில் பிறந்தவர்கள் அல்லது இங்கிருந்து போனவர்கள் எந்தெந்த இடத்தில் என்னென்ன உடுப்பு போடுவதென்று தெரியாமல் 'டூ பீஸ்' உடுப்போடு அலைவதை கண்டீர்களா? அல்லது யாராவது கண்டார்களா? என்று தான் கேட்டேன்.அதற்கு அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் நான் சொன்னதையே திருப்பி சொல்கிறீர்கள்.
 
உடை என்பது தன்னம்பிக்கையோடு சம்மந்தப்பட்ட விசயம்.புலிகளின் பெண்  உறுப்பினர்கள் ஆரம்பத்தில் ஜீன்ஸ் அணிய ஆயிரம் கதை கதைத்தவர்கள் உங்களை போல ஆட்கள் :( ஆனால் அதுவே அவர்களுக்கு தன்னம்பியை கொடுத்தது.ஊரில் அழகாய் உடுத்தி வேலைக்கு போய் வரும் பெண்களை பாலியல் பலாத்காராம் செய்வதை விட அமைதியாய்,அடக்க,ஒடுக்கமாய் இருக்கும் பெண்களிடம் தான் பாலியல் பலாத்காரம் செய்வது அதிகமாய் நடக்கிறது
 
நீங்கள் கூட உடைக்கும்,பலாத்காரத்திற்கும் சம்மந்தமில்லை என்று சொல்லி விட்டீர்கள்.எய்ட்ஸ் கூட இங்கு இருந்து போன வெள்ளைகளுடன் அங்கிருக்கும் தமிழ் பெண்கள் கள்ளப் உறவு வைத்ததால் தான் பெருகியதே தவிர புலம் பெயர்ந்து போனவர்களால் அல்ல.எதற்கெடுத்தாலும் புலம் பெயர்ந்தவர்கள் காரணம் எனப் புலம்பாமல் <_< ஊரில் இருப்பவர்களை ஒழுங்காய் இருக்கச் சொல்லுங்கோ.ஊரில் இருப்பதை விட புலம் பெயர் நாட்டில் ஒழுங்காய்த் தான் இருக்கிறார்கள்.
 
யாழ்ப்பாணம் ஒரு காலத்தில் சிங்கப்பூராக மாறினால் அங்குள்ள மக்களும்,இங்குள்ள மக்களைப் போல தான் உடுத்துவார்கள்.ஆனால் புலம் பெயர்ந்த தமிழருக்கும் சரி,அங்குள்ள தமிழருக்கும் சரி குறிப்பாக பெண்களுக்கும் சரி எந்தெந்த நேரத்தில் எந்தெந்த உடுப்பு உடுத்த வேண்டும் என்பது தெரியும்.ஆகவே புலம்பாமல் போய் வேலையைப் பாருங்கோ :)

நீங்கள் என்ன சொன்னீர்கள். எதையுமே சொல்லவில்லையே. ரூ பீஸ் என்றால் என்னென்று தெரியாமல்.. கண்டீர்களா போனீர்களா என்று கேட்பதால் என்ன அர்த்தம்..???! ஊரைப் பற்றி அறியாமல் இருந்து கொண்டு இதுதான் ஊர் என்று காட்ட விளைகிறீர்கள்..!

அண்மையில்.. கசூர்னா பீச் அண்டிய மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் செய்யப்படும் கலாசார சீரழிவுகள் பற்றி படித்தறிந்து கொண்டு கதைப்பது நன்று.

முதலில் ஊருக்குப் போய் அங்கு நடப்பதைப் பாருங்கள். அப்புறம் விபரியுங்கள்..!

மேலும்.. 1990 களின் ஆரம்பத்தில்.. யாழ் இந்துக்கல்லூரியில் விடுதலைப்புலிகளின் சுகாதாரப் பிரிவின் ஒத்துழைப்போடு ரோட்டறிக்கழகம் இணைந்து..எயிட்ஸ் எதிர்ப்புக் கண்காட்சியை செய்த மாணவர்களில் நானும் ஒருவன். அந்த வகையில் யாழ் குடா நாட்டில் எயிட்ஸ் பரவலில்.. கொழும்பு.. மத்திய கிழக்கு மற்றும் மேற்குநாடுகளில் இருந்து வந்த எமது தமிழ் ஆண்களால் எயிட்ஸ் பரவல் குறித்தான யாழ் வைத்தியசாலை புள்ளிவிபரங்களும் அங்கு வைக்கப்பட்டது.

அன்றைய காலத்தில் இருந்ததை விட இன்று எயிட்ஸின் தாக்கம் யாழில் அதிகம். அதற்கு வெளிநாட்டு வெள்ளைக்காரங்கள் அல்ல முக்கிய காரணம். சிறீலங்காப் படைகளும் நம்மவர்களும் தான் காரணம்..!

போர் வீரர்கள் தன்னம்பிக்கைக்காக சீருடை அணிவதில்லை. போர்க்கள.. சீருடை வசதிக்காகவும்.. உருமறைப்பிற்காகவும் வடிவமைக்கப்படுவது. தன்னம்பிக்கை என்பது அடையும் இலக்கைப் பொறுத்து அமைவது..!

வீட்டில் இருக்கும் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு இலக்காகும் சதவீதத்தை விட.. கவர்ச்சியான உடையணிந்து வீதியில் உலாவும் பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகளே அதிகம். இது நிதர்சனமான உண்மையும் கூட..!

உடைக்கும் பாலியல் குற்றங்களுக்கும் சம்பந்தமில்லை என்று முற்றாக மறுதலிக்கவில்லை. நீங்கள் தான் அப்படியாக அந்தக் கருத்தை தவறாக விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள். பாலியல் குற்றங்களோடு உடைகள் சம்பந்தப்பட்டிருக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளன என்பதை இனங்காட்டியே உள்ளோம். ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல.

ஊரில் இருக்கிறதை விட புலம்பெயர்ந்த நாட்டில் உள்ளவர்களின் சனத்தொகையோடு ஒப்பிடும் போது புலம்பெயர் நாடுகளில் எம்மவர்கள் மத்தியில் உள்ள சமூகச் சீர்கேடு அதிகம். அதற்கான சரியான கணிப்பீடுகளைச் செய்தால் அது தெரிய வரும். நம்மவர்கள் வாழும் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளிற்கும்.. புரபேசன் சென்ரர்களுக்கும் வரும் நம்மவர்களின் குற்றங்களை கேட்டுப் பார்த்தாலே புரியுதே சங்கதி. வீட்டிக்குள் இருந்து கொண்டு இந்தக் கணக்கை காட்ட முடியாது.

சிங்கப்பூரிலும்.. தமிழர்கள் அதே தமிழ் கலை கலாசார பண்பாட்டோடு வாழ்கின்றனர் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம்..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

"Good on the school. This ban is the result of some parents not co-operating and ensuring dresses and skirts of a suitable length. It's not appropriate to be flashing their knickers all the time - at some schools the girls wear knee length leggings under their skirts by personal choice which also solves the problem.

This is nothing to do with Islamification in the UK and everything to do with these children increasing flashing absolutely everything inappropriately and their parents no longer showing any concern, altering skirts lengths downwards when necessary or buying new skirts when they are no longer the right size, with these garments never having been cheaper relative to income. You don't have to be a muslim to think that flashing your knickers is not the right thing to be constantly doing at school."

இதிலிருந்து என்ன தெரியுது?? :rolleyes: எம்குலப்பெண்கள் முழங்கால் தெரியாமல் சட்டையை இழுத்துவிடுவதும், சேலையை சரிசெய்வதும் நல்ல பழக்கங்களல்லவா? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூர் சிறீவீரமாகாளி அம்மன் கோவிலில் மக்கள்..

temple-006.jpg?w=620&h=388

http://shimworld.wordpress.com/2012/03/16/little-india-singapore-images-of-sri-veeramakaliamman-temple/

இதிலிருந்து என்ன தெரியுது?? :rolleyes: எம்குலப்பெண்கள் முழங்கால் தெரியாமல் சட்டையை இழுத்துவிடுவதும், சேலையை சரிசெய்வதும் நல்ல பழக்கங்களல்லவா? :icon_mrgreen:

இழுத்து விடுற அளவுக்கு இப்ப எங்க சட்டை போடினம். சரிசெய்யுற அளவுக்கு எங்க சேலை கட்டினம். நாங்கள் தான் கண்றாவிகளைக் காணாமல் இருக்க கண்ணை அங்க இங்க திருப்ப வேண்டிக் கிடக்குது. பேசாமல் வெள்ளைக்காரன் போல கறுப்புக் கண்ணாடியோட போயிட்டாக் கரைச்சல் இல்ல. காட்சிக்கும் காட்சி.. குளிர்ச்சிக்கும் குளிர்ச்சி.. நல்ல பிள்ளைக்கும் பிள்ளை..! :D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன சொன்னீர்கள். எதையுமே சொல்லவில்லையே. ரூ பீஸ் என்றால் என்னென்று தெரியாமல்.. கண்டீர்களா போனீர்களா என்று கேட்பதால் என்ன அர்த்தம்..???! ஊரைப் பற்றி அறியாமல் இருந்து கொண்டு இதுதான் ஊர் என்று காட்ட விளைகிறீர்கள்..!

அண்மையில்.. கசூர்னா பீச் அண்டிய மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் செய்யப்படும் கலாசார சீரழிவுகள் பற்றி படித்தறிந்து கொண்டு கதைப்பது நன்று.

முதலில் ஊருக்குப் போய் அங்கு நடப்பதைப் பாருங்கள். அப்புறம் விபரியுங்கள்..!

மேலும்.. 1990 களின் ஆரம்பத்தில்.. யாழ் இந்துக்கல்லூரியில் விடுதலைப்புலிகளின் சுகாதாரப் பிரிவின் ஒத்துழைப்போடு ரோட்டறிக்கழகம் இணைந்து..எயிட்ஸ் எதிர்ப்புக் கண்காட்சியை செய்த மாணவர்களில் நானும் ஒருவன். அந்த வகையில் யாழ் குடா நாட்டில் எயிட்ஸ் பரவலில்.. கொழும்பு.. மத்திய கிழக்கு மற்றும் மேற்குநாடுகளில் இருந்து வந்த எமது தமிழ் ஆண்களால் எயிட்ஸ் பரவல் குறித்தான யாழ் வைத்தியசாலை புள்ளிவிபரங்களும் அங்கு வைக்கப்பட்டது.

அன்றைய காலத்தில் இருந்ததை விட இன்று எயிட்ஸின் தாக்கம் யாழில் அதிகம். அதற்கு வெளிநாட்டு வெள்ளைக்காரங்கள் அல்ல முக்கிய காரணம். சிறீலங்காப் படைகளும் நம்மவர்களும் தான் காரணம்..!

போர் வீரர்கள் தன்னம்பிக்கைக்காக சீருடை அணிவதில்லை. போர்க்கள.. சீருடை வசதிக்காகவும்.. உருமறைப்பிற்காகவும் வடிவமைக்கப்படுவது. தன்னம்பிக்கை என்பது அடையும் இலக்கைப் பொறுத்து அமைவது..!

வீட்டில் இருக்கும் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு இலக்காகும் சதவீதத்தை விட.. கவர்ச்சியான உடையணிந்து வீதியில் உலாவும் பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகளே அதிகம். இது நிதர்சனமான உண்மையும் கூட..!

உடைக்கும் பாலியல் குற்றங்களுக்கும் சம்பந்தமில்லை என்று முற்றாக மறுதலிக்கவில்லை. நீங்கள் தான் அப்படியாக அந்தக் கருத்தை தவறாக விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள். பாலியல் குற்றங்களோடு உடைகள் சம்பந்தப்பட்டிருக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளன என்பதை இனங்காட்டியே உள்ளோம். ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல.

ஊரில் இருக்கிறதை விட புலம்பெயர்ந்த நாட்டில் உள்ளவர்களின் சனத்தொகையோடு ஒப்பிடும் போது புலம்பெயர் நாடுகளில் எம்மவர்கள் மத்தியில் உள்ள சமூகச் சீர்கேடு அதிகம். அதற்கான சரியான கணிப்பீடுகளைச் செய்தால் அது தெரிய வரும். நம்மவர்கள் வாழும் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளிற்கும்.. புரபேசன் சென்ரர்களுக்கும் வரும் நம்மவர்களின் குற்றங்களை கேட்டுப் பார்த்தாலே புரியுதே சங்கதி. வீட்டிக்குள் இருந்து கொண்டு இந்தக் கணக்கை காட்ட முடியாது.

சிங்கப்பூரிலும்.. தமிழர்கள் அதே தமிழ் கலை கலாசார பண்பாட்டோடு வாழ்கின்றனர் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம்..! :):icon_idea:

உஸ் அப்படியா இனி அடுத்த பதிவில் வந்து என்னத்தை மாத்தி புதுசாய் எழுதப் போறீங்கள் :lol:  ஒரு பதிவில் எழுதினதை வெட்டிக் கொத்தி அடுத்த பதிவில் அப்படி எழுதவே இல்லை என்று சலாப்புற ஆள் தானே :D நீங்கள்,ஏற்கனவே கேட்ட கேள்விகளுக்கு ஒரு பதிலும் இல்லை இனி மேல் புதிதாய் எதாவது எழுதினால் போல பதில் சொல்லவா போறீங்கள் :rolleyes:
 
ஒரு பெண் கெட்டுப் போறதிற்கும்,அவளது உடைக்கும் சம்மந்தமே இல்லை.அடக்கமாய் உடுத்தும் எத்தனையோ பெண்கள் கெட்டுச் சீரழிவதைக் கண்டு உள்ளேன்.இது உங்களுக்கு விளங்கப் போறதில்லை,விளங்கினாலும் விளங்காத மாதிரி நடிப்பீர்கள்
ஐயோ விட்டுடுங்க ஐயனார்களே .........ஒரு பெண்ணின் நல்ல மனம் ,அல்லது அவள் நல்லவளா என்பது அவள் அணியும்  உடைகளில் அல்ல ...............அவரவர் சௌகரியதிற்கேற்ப அணிவது அவரவர் சொந்த பிரச்சனை ..................அந்தப்பெண் எப்படி உடை அணிந்தாலும் அவள் தாய்மை என்னும் விடயத்தில் சரியாக நடந்தால் அதுவே பண்பாடு ,கலாச்சாரம் ..........அதை விட்டு பண்பாட்டு உடைகளுடன் பெண்ணுக்குரிய எந்த வரைவிலக்கணமும் இன்றி வாழும் பெண்களை ..............நாம் என்ன என்று சொல்வது .
 
அதே போல எந்த நவநாகரிக்கமுள்ள உடையில் ஒரு பெண்ணை ஓர் ஆண் பார்க்கும்போது ..........குரங்கின் மனநிலையில் அந்த ஆண் இல்லாமல் இருந்தால் .....எந்த பிரச்சனையும் இல்லை .................இரசிப்பதும் ,பாராட்டுவதும் எம் கலாச்சாரத்தில் ஒன்றிணைந்த பண்புகள் .நன்றி.  :)

உது உங்களின் வழமையான.. கருத்தாடல் தான். சொன்ன கருத்துக்கள் எவையுமே யதார்த்தமானவை அல்ல என்று தெரிந்ததும்.. மறு கருத்தாளர்கள் மீது.. வசைபாடுவது. இப்படியே பதிலுக்கு நாங்களும் பாட.. இறுதியில் நியானி வந்து வெட்டிட்டு.. இரண்டு எச்சரிக்கைப் புள்ளி தர.. நீங்க ஓடிப் பதுங்க.. கிருபண்ணா வந்து கூப்பிடச் சரியா இருக்கும்.

ஒழுங்கா உடுத்திற பெண்கள் கெட்டுப்போகினம்.. அலங்கோலமா உடுத்திறவை.. கெட்டுப்போகல்லை என்பதல்ல இங்கு வாதம். ஒழுங்கா உடுத்திறது மற்றவர்கள் ஆபாசமாக நோக்குவதை குறைக்கும் ஆபத்தை விலைக்கு வாங்குவதை குறைக்கும்.. மற்றது கூட்டும் என்பதே வாதம். அது நியாயமும் கூட.

இதே புரியல்ல.. அப்புறம்..???! உங்களுக்கு விளக்கம் சொல்லி...???! :lol::)

Tulpen,

ஊரில் எத்தனையோ பிரச்சனை இருக்க தேவையில்லாமால் மற்றவர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளில், அவர்கள் உடுத்து உடைகளில் தலையிட்டு விமர்சனம் செய்தும் தேவையில்லாம் நேரத்தை வீண்டித்தும் அதன் தொடர்பாக இந்தத் திரிக்குக் கருத்தெழுதியும் இன்னமும் பழைய நூற்றாண்டு கற்கால மனிதர்களாக, கிறுக்கர்களில் ஒருவராக வாழ முற்படும் எங்களுடன் நீங்களும் இந்தத் திரிக்குக் கருத்தெழுதி, எங்ளுடன் வாழ முற்படுவதை உறுதி செய்வதை ஆமோதித்து வரவேற்கிறேன்.

நன்றி உங்களின் வரவேற்புக்கு நன்றி. நான் என்றும் உங்களுடம் தான். ஆனால் எமது இளைய தலைமுறையையும் எம்மை போல் பழைய நூற்றாண்டில் வாழ சொல்கிறீற்களே அங்கு தான் பிரச்சனை. நீங்களும் நானும் விரும்பினால் அது நடக்காது என்பதே யதார்த்தம். காலம் என்றுமே ஒரு இடத்தில் நிற்பதில்லை.

ஐயோ விட்டுடுங்க ஐயனார்களே .........ஒரு பெண்ணின் நல்ல மனம் ,அல்லது அவள் நல்லவளா என்பது அவள் அணியும்  உடைகளில் அல்ல ...............அவரவர் சௌகரியதிற்கேற்ப அணிவது அவரவர் சொந்த பிரச்சனை ..................அந்தப்பெண் எப்படி உடை அணிந்தாலும் அவள் தாய்மை என்னும் விடயத்தில் சரியாக நடந்தால் அதுவே பண்பாடு ,கலாச்சாரம் ..........அதை விட்டு பண்பாட்டு உடைகளுடன் பெண்ணுக்குரிய எந்த வரைவிலக்கணமும் இன்றி வாழும் பெண்களை ..............நாம் என்ன என்று சொல்வது .
 
அதே போல எந்த நவநாகரிக்கமுள்ள உடையில் ஒரு பெண்ணை ஓர் ஆண் பார்க்கும்போது ..........குரங்கின் மனநிலையில் அந்த ஆண் இல்லாமல் இருந்தால் .....எந்த பிரச்சனையும் இல்லை .................இரசிப்பதும் ,பாராட்டுவதும் எம் கலாச்சாரத்தில் ஒன்றிணைந்த பண்புகள் .நன்றி.  :)

ஐயா தாங்கள் உண்மையில் தமிழ் சூரியன் தான். உங்கள் கருத்துடன் நூறுவீதம் நான் உடன்படுகிறேன். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
... ஒழுங்கா உடுத்திறது மற்றவர்கள் ஆபாசமாக நோக்குவதை குறைக்கும் ஆபத்தை விலைக்கு வாங்குவதை குறைக்கும்.. மற்றது கூட்டும் என்பதே வாதம். அது நியாயமும் கூட.

இதுதான் யதார்த்தமான வரிகள்.

வசதிகள், நமக்கு ஆபத்தை வரவழைக்காமல் பார்த்துகொள்வதே நலம்.

  • கருத்துக்கள உறவுகள்

jaffna singala dance

Sri Lankan dance to new sinhala songs

நன்றி உங்களின் வரவேற்புக்கு நன்றி. நான் என்றும் உங்களுடம் தான். ஆனால் எமது இளைய தலைமுறையையும் எம்மை போல் பழைய நூற்றாண்டில் வாழ சொல்கிறீற்களே அங்கு தான் பிரச்சனை. நீங்களும் நானும் விரும்பினால் அது நடக்காது என்பதே யதார்த்தம். காலம் என்றுமே ஒரு இடத்தில் நிற்பதில்லை.

மேற்கு நாடுகளில் வளரும் நமது சிறுசுகள் சட்டத்தையும் ஒழுங்கையும் அவர்கள் பாணியில் புரிந்து வைத்திருப்பதை தவறாக விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள். நாம் எதோ அந்தக்காலத்தில் படி என்றவுடன் விளையாடப்போவதை கைவிட்டுவிட்டு வீட்டில் இருந்து படித்தோம்.  நாம் தனிமனித சுதந்திர விவாதங்களை எமது அப்பா, அம்மாவுடன் விவாதித்தது கிடையாது.

அது அல்ல நமது இளசுகள் இன்று செய்வது. தமக்கு பிடிக்காதவற்றுக்கு தைரியமாக வாய் தார்க்கம் ஆரம்பிக்கிறார்கள். ஆனல் இதை சட்டத்தையும், ஒழுங்கையும் மறந்து திரிகிறார்கள் என்று அர்த்தப்படுத்துவது தப்பானது. நிச்சயமாக மேற்கு நாடுகளின் சட்டங்களை விளங்கி அவற்றுடன் இசைந்துதான் வாழ்கிறார்கள். மேற்கு நாடுகளில் வாழும் தமது நண்பிகள் வெளியே ஏன் அப்படி உடுத்துகிறார்கள் என்றதை நன்றாக விளங்கி வைத்திருக்கிறர்கள். எமக்கு சொல்லித்தருகிறார்கள். தமக்கு வெளியே செல்லும் போது மேற்குநாட்டு பண்பாடுகள்தான் நியமமாக எடுத்துக்கொள்கிறார்கள். இதனாலேயே தேவாலயங்களுக்கு மேற்கு நாட்டவர் பாரம்பரியமாக உடுத்து போவது போல நாம் அவர்களுக்கு சிறுவயதில் காட்டிக்கொடுத்த உடைகளை மட்டும் தான் தெரிந்து எடுத்து உடுத்துக்கொள்கிறார்கள்.  கோவில்களில் உடுத்துகொள்ள வேண்டிய முறை பற்றி அவர்கள் புரட்சி நடத்துமாப்போல் தெரியவில்லை. (ஆனால் சில பெற்றார்கள் தமது பிளைகளுக்கு தாங்கள் பாரம்பரியங்களை காட்டிக்கொடுதிருக்கவிட்டால், அவர்கள் தாம் கோவிலில் என்ன செய்வது என்று அறியாமல் திண்டாட இடம் உண்டு)

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் யதார்த்தமான வரிகள்.

வசதிகள், நமக்கு ஆபத்தை வரவழைக்காமல் பார்த்துகொள்வதே நலம்.

இது தான் யதார்த்தம் அண்ணா வசதி கூடின புலம் பெயர்ந்த மக்கள் அரைகுறை உடுப்பு போட்டுக் கொண்டுக் கொண்டு யாழ்ப்பாணத்தில் அலைவதை யாராவது கண்டார்களா என்பதை கேட்டுச் சொல்லுங்கள்

மேற்கு நாடுகளில் வளரும் நமது சிறுசுகள் சட்டத்தையும் ஒழுங்கையும் அவர்கள் பாணியில் புரிந்து வைத்திருப்பதை தவறாக விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள். நாம் எதோ அந்தக்காலத்தில் படி என்றவுடன் விளையாடப்போவதை கைவிட்டுவிட்டு வீட்டில் இருந்து படித்தோம்.  நாம் தனிமனித சுதந்திர விவாதங்களை எமது அப்பா, அம்மாவுடன் விவாதித்தது கிடையாது.

அது அல்ல நமது இளசுகள் இன்று செய்வது. தமக்கு பிடிக்காதவற்றுக்கு தைரியமாக வாய் தார்க்கம் ஆரம்பிக்கிறார்கள். ஆனல் இதை சட்டத்தையும், ஒழுங்கையும் மறந்து திரிகிறார்கள் என்று அர்த்தப்படுத்துவது தப்பானது. நிச்சயமாக மேற்கு நாடுகளின் சட்டங்களை விளங்கி அவற்றுடன் இசைந்துதான் வாழ்கிறார்கள். மேற்கு நாடுகளில் வாழும் தமது நண்பிகள் வெளியே ஏன் அப்படி உடுத்துகிறார்கள் என்றதை நன்றாக விளங்கி வைத்திருக்கிறர்கள். எமக்கு சொல்லித்தருகிறார்கள். தமக்கு வெளியே செல்லும் போது மேற்குநாட்டு பண்பாடுகள்தான் நியமமாக எடுத்துக்கொள்கிறார்கள். இதனாலேயே தேவாலயங்களுக்கு மேற்கு நாட்டவர் பாரம்பரியமாக உடுத்து போவது போல நாம் அவர்களுக்கு சிறுவயதில் காட்டிக்கொடுத்த உடைகளை மட்டும் தான் தெரிந்து எடுத்து உடுத்துக்கொள்கிறார்கள்.  கோவில்களில் உடுத்துகொள்ள வேண்டிய முறை பற்றி அவர்கள் புரட்சி நடத்துமாப்போல் தெரியவில்லை. (ஆனால் சில பெற்றார்கள் தமது பிளைகளுக்கு தாங்கள் பாரம்பரியங்களை காட்டிக்கொடுதிருக்கவிட்டால், அவர்கள் தாம் கோவிலில் என்ன செய்வது என்று அறியாமல் திண்டாட இடம் உண்டு)

மேற்படி தங்கள் கூற்றிலிருந்து ஒரு செய்தியை தெளிவாக சொல்லியுள்ளீர்கள்.  கலாச்சாரத்தை உடைகளை அணியவேண்டிய கட்டாயம் தமிழ் பெண்பிள்ளைகளுக்கு மாத்திரமே உண்டு என்ற செய்தி தங்கள் கூற்றிலிருந்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கோவில்களிலும் மற்றைய கலாச்சார நிகழ்வுகள் என்று அழைக்கபடும் நிகழ்வுககளிலும் ஆண்பிள்ளைகள் முற்றாக ஐரோப்பிய உடை அணிவதை நவீன தமிழ் கலாச்சாரம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதுபற்றி எவரும் மூச்சுகூட விடுவதில்லை. பெண்பிள்ளைகளுக்கு மட்டும் கலாச்சார உடைத்திணிப்பு. இது எந்த வகையில் நியாயம். நெடுக்காலபோவான் இணைத்த கோவில்  படத்திலும் ஆண்கள் ஐரோப்பிய உடையிலியே இருக்கிறார்கள். அதுபற்றி அவருக்கு எந்த அக்கறையும் இல்லை.

கோவிலுக்குள் செல்லும்போது இவ்வாறுதான் உடையணிய வேண்டும் என்று பொதுவான கட்டுபாடு இருப்பதில் தவறில்லை. அது நியாயமானது. ஆனால் வெளியில் சுற்றுலா போகும்போது அவரவர் விருப்படி உடை அணிவதை கட்டுப்படுத்த எவருக்கும் உரிமை இல்லை. அப்படி கட்டுபாடு விதிக்க பண்பாட்டு காவலர்கள் என்று கூறிக்கொள்வோரு  விரும்பினால் முதலில் தாங்கள் அனைவரும் வேட்டி சட்டையுடன் எல்லா அலுவலகங்களுக்கும் செல்லட்டும். தாயகத்தில் உண்டு ஆண்களுக்கு அறிவுரை செய்து அனைவரும் வேட்டியுடன் தமது வேலைக்கு செல்ல முயற்சி எடுத்துவிட்டு புலம்பெயர் தமிழ் பெண்பிள்ளைகளுக்கு அறிவுரை செய்யவும். அதற்கு முன்னர் புலம் பெயர் பிள்ளைகளுக்கு அறிவுரை செய்ய எவருக்கும் உரிமை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நாடுகளில் கோவில்களிலும் மற்றைய கலாச்சார நிகழ்வுகள் என்று அழைக்கபடும் நிகழ்வுககளிலும் ஆண்பிள்ளைகள் முற்றாக ஐரோப்பிய உடை அணிவதை நவீன தமிழ் கலாச்சாரம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதுபற்றி எவரும் மூச்சுகூட விடுவதில்லை. பெண்பிள்ளைகளுக்கு மட்டும் கலாச்சார உடைத்திணிப்பு. இது எந்த வகையில் நியாயம். நெடுக்காலபோவான் இணைத்த கோவில்  படத்திலும் ஆண்கள் ஐரோப்பிய உடையிலியே இருக்கிறார்கள். அதுபற்றி அவருக்கு எந்த அக்கறையும் இல்லை.

கோயிலுக்குப் போறதுக்கு சீலை கட்டத்தேவையில்லை என்று வந்தால் மகிழ்ச்சியடையப்போவது கணவன்மார்களாகத்தான் இருக்கும்.. :D பின்ன.. சீலை வாங்கி கட்டுப்படியாகுமா? :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப உந்த கலியாணவீடு சாமத்தியவீடு பிறந்தாள் கொண்டாட்டங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா? எல்லாம் முடிஞ்சு இப்ப பேஷ்புக்கிலைhttps://www.facebook.com/zari.anju தேட வெளிக்கிட்டினம்

நான் ஆண்களும் மதிக்கிறார்கள், மதிக்க வேண்டும் என்றுதான் எழுதியிருக்கிறேன். எனது Judeக்குகான பதிலை நீங்கள் படிக்காமல் கருத்து எழுதுகிறீர்கள். ஆண்கள் அரை நிர்வாணமாக கோவிலுக்கு போகிறார்கள் என்று குற்றம்சாட்டினார் அவர். 

இனி வேட்டியுடன் போனால் காணுமா அல்லது மேலதிகாரியை கண்டவுடன், உத்தரியதை நீக்கி,  சேட்டை கழற்ற வேண்டுமா என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை. நான் வெறித்தனமாக சட்டம் போட்டு வேட்டி கட்டுவதை நிறை வேற்றவேண்டும் என்று சொல்ல வரவில்லை. நான் கொழும்பிருந்து வீட்டுக்கு போனால் வேட்டிதான் கட்டுவேன். அப்போது சைக்கில் சீட்டில் வேட்டிகளை சிதைப்பதா அம்மா கூறுவா. ஆனாலும் எனக்கு பிடித்த உடை அது. 

ஆபிசும், சீருடையும் மேற்குநாட்டவர்கள் ஆரம்பித்துவைத்து அவர்களிடம் இருந்தான் பழகினோம். 

கவலைக்குரிய விடையம் நீங்கள் திரியை மீண்டும்  ஒருகரையில் இழுத்து முடக்குகிறீர்கள்.  ஆண் பெண் சமத்துவதை இன்னொரு திரிக்கு வைக்கலாம். ஆனல் பண்பாட்டை மனித தன்மையுடன் எல்லோரும் மதிக்கத்தான் தனி நாடு.

Edited by மல்லையூரான்

மேலேயோ, கீழேயோ ஒன்றும் தெரியக் கூடவில்லை.

இப்படியொரு பச்சைப் பொய் தேவையா?

கீழே முழங்கால் கால் தெரிகிறது.

மேலே கழுத்து முகம் தெரிகிறது. (அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை சிதைத்துள்ளார்கள்)

:D  

நான் ஆண்களும் மதிக்கிறார்கள், மதிக்க வேண்டும் என்றுதான் எழுதியிருக்கிறேன். எனது Judeக்குகான பதிலை நீங்கள் படிக்காமல் கருத்து எழுதுகிறீர்கள். ஆண்கள் அரை நிர்வாணமாக கோவிலுக்கு போகிறார்கள் என்று குற்றம்சாட்டினார் அவர். 

இனி வேட்டியுடன் போனால் காணுமா அல்லது மேலதிகாரியை கண்டவுடன், உத்தரியதை நீக்கி,  சேட்டை கழற்ற வேண்டுமா என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை. நான் வெறித்தனமாக சட்டம் போட்டு வேட்டி கட்டுவதை நிறை வேற்றவேண்டும் என்று சொல்ல வரவில்லை. நான் கொழும்பிருந்து வீட்டுக்கு போனால் வேட்டிதான் கட்டுவேன். அப்போது சைக்கில் சீட்டில் வேட்டிகளை சிதைப்பதா அம்மா கூறுவா. ஆனாலும் எனக்கு பிடித்த உடை அது. 

ஆபிசும், சீருடையும் மேற்குநாட்டவர்கள் ஆரம்பித்துவைத்து அவர்களிடம் இருந்தான் பழகினோம். 

கவலைக்குரிய விடையம் நீங்கள் திரியை மீண்டும்  ஒருகரையில் இழுத்து முடக்குகிறீர்கள்.  ஆண் பெண் சமத்துவதை இன்னொரு திரிக்கு வைக்கலாம். ஆனல் பண்பாட்டை மனித தன்மையுடன் எல்லோரும் மதிக்கத்தான் தனி நாடு.

மீண்டும் உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். ஆண் பெண் சமத்துவத்தை பற்றி இங்கு நான் பேச வரவில்லை. தாங்கள் வேட்டி விரும்பி உடுப்பதல்ல இங்கு பிரச்சனை. விரும்பிய உடையை தாங்கள் உடுக்கிறீர்கள். அது தங்கள் உரிமை அதில் எவரும் தலையீடு செய்ய முடியாது.  பெண்கள் கலாச்சார உடையை அணிய வேண்டும் என்று கட்டாயபடுத்துவது போல் அனைத்து ஆண்களும் அலுவலம் செல்லும்போது வேட்டி அணியலாம் என்பதையே கூறுகிறேன். அது சாத்தியமில்லை என்று நினைப்போமானால் அவவாறு சட்டம் போடுவது வெறித்தனமானது என்று தாங்கள் கூறினால் பெண்களுக்கும் அது பொருந்தும். அதிலும் ஐரோப்பிய நாடுகளில் பிறந்த பிள்ளைகள் தங்களை விருப்படி நாகரீக உடைகளை  அவர்கள் உரிமை அதில் தலையிட்டு தமிழ் கலாச்சார  உடைகளை மட்டும் அணியவேண்டும் என்று கூறுவது நியாயம் அல்ல. கோவிலுக்கு செல்வதை நான் இங்கு குறிப்பிடவில்லை. கோவிலுக்கு கூட ஆண்பிளைகள் ஜீன்ஸ் உடையுடன் சென்றால் தமிழ் சூழலில்  எவரும் கருத்தில் எடுக்க மாட்டார்கள்  என்பது வேறுவிடயம்.

எனது அப்பாவில் காலத்தில் பாடசாலைக்கு வேட்டியுடன் சென்றதாக அப்பா கூறுவார். எங்கள் காலத்திலேயே நிலமை மாறிவிட்டது. நாங்களை ஐரோப்பிய உடையுடனேயே பாடசாலைக்கு சென்றோம் . அதற்கு எந்த விமர்சனமும் வரவில்லை. அப்பா கூட அதை ஏற்றுக் கொண்டார். தான் வேட்டியுடன் பாடசாலை சென்றதை போல் நாங்களும் செல்லவேண்டும் என்று அடம் பிடிக்கவில்லை. தற்போது அடுத்த நூற்றாண்டும் வந்து விட்டது. காலம் மாறுவது இயல்பு. காலத்திற்கேற்ப தன்னை மாற்றி கொள்பவனே மனிதன்.

(வேட்டி உடுத்துவது சைக்கில் ஓட கஷடம் என்று தாங்களே கூறியியுள்ளீர்கள். தற்போது தாயகத்தில் பெண் பிள்ளைகள் உட்பட மோட்டார் சைக்கில் ஓடுகிறார்கள் என்பதை நினைவில் கொள்க)

ஆண் பெண் சமத்துவத்தை பற்றி இங்கு நான் பேச வரவில்லை. 

அப்போ ஏன் ஆண்கள் ஆபிஸ்சுக்கு  வேட்டி கட்டுவது சாத்தியமில்லை, அதனால் பெண்கள் கோவிலுக்கு போகும் போது ஆன்மீக வழிக்களுக்கு கட்டுப்படவேண்டிய தேவை இல்லை என்ற கரையில் இன்னும் இருக்கிறீர்கள்.

நீங்கள் கலாச்சாரத்தையும், சட்டத்தின் துணையுடன் முன்னெடுக்கப்படும் பெண் அடிமை முறைகளையும் பிரித்து பார்க்க முடியாமல் தடுமாறுகிறீர்கள். மேலும் பெண்கள் தான் பெரும்பாலான இனங்களில் கலாசாரத்தை கட்டுபடுத்துபவர்கள், பொறுப்பெடுப்பவர்கள், பேணுபவர்கள், பாதுகாப்பவர்கள். ஆனால் பெண் அடிமை தலை தூக்கிய இடங்களில் மட்டும்தான் அது மாறி இருக்கிறது. 

இனி மேலை காலங்களில் பெண்களை பின்னே தள்ளிவிட்டு ஆண்கள் ஆராத்தி எடுக்க முடியுமா? ஆண்கள் கோவிலில் மேற்சட்டையை கழற்றினால் ஏன் பெண்களை கழற்ற விடுவதில்லை என்று வாதாடினால் எப்படி?ஏன் பெண்கள் தங்கள் கலாச்சார நடத்தைகளில் ஆண்களை மட்டும்தான் பார்க்க வேண்டும்.

பெண்கள் கோவிலில் தவறாக உடுப்பதை பெண்களே விரும்பமாட்டார்கள் இது பொறாமை அல்ல. 

 அமெரிக்காவில் சில classy உணவகங்களில் "No Shorts Please". அந்த இடங்களில் ஆண்கள் இது வரயில் முழுகாலசட்டையுடன்தான் போகலாம். (இனிமேலைய காலங்களில் அது பெண்களுக்கும் பொருந்தும்.) கேரளாவில் பெண்கள் வேட்டி கட்டுவார்கள் அது அவர்களின் கலாச்சாரம். நம்ம பெண்கள் அதை செய்வதில்லை. அது வேறு எந்த இனத்திலும் இல்லை.  

சட்டத்தில் ஆணும் பெண்ணும். சமன். ஆனால் இதை மதிக்கும் எல்ல சமூகத்திலும் ஆண்கள் ஒரு வழியிலும் பெண்கள் ஒரு வழியிலும்தான் பண்பாடு சம்பந்த பட்ட விஷியயங்களில் நடந்து கொள்வார்கள்.  பண்பாடு பலரால் அந்த சமூகத்தில் ஏற்றுகொள்ளபட்டது. அது மட்டும்தான் அந்த சமூகத்தை வேறுபடுத்தி காட்டும். ஒழுங்காக தொகுக்கபட்ட சட்டம் எல்லா சமூகத்திலும் ஒரே மாதிரி மட்டும்தான் காணப்படலாம்.  

மேலும் நாம் இங்கே செய்தவையை கட்டாயமாக தாயகத்துக்கு எடுத்து செல்லத்தான் வேண்டும் என்பது தவறு. "When in Rome do as Romans do." அங்கே போகும் சப்பைத்தனமாக நான் புலம் பெயர்ந்த நாட்டில் அப்படித்தான் உடுத்தேன் என்றும் அடம்பிடிக்க வேண்டிய தேவை இல்லை. 

ஆபிஸ்சுக்கு கால்சட்டை அணிவது இலகு அது பண்பாட்டின் வந்து சேரும். கோவிலுக்கு தவறாக உடை அணிவது குழப்பத்தை விளைவிக்க்கும். எனவே அது தொடர்ந்து தவிர்க்கப்படும். 

ஒரு காலத்தில் மனிதன் உடை உடுக்கவில்லை. இன்று பொருளாதர நிலை, கண்டுபிடிப்புகள் அதை மாற்றுகின்றன. புதியன வர இருக்கின்றன. ஆனால் சட்டத்தால் மனிதன் இயந்திரமாக மாற்றப்பட்டாமல் இருக்க பண்பாடு அவசியம். 

விவாத்தத்திற்காக மட்டும் என்று தொடர்ந்து ஒரு கரைக்கு உந்தாமல் நாம் மட்டுப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை அங்கீகரிக்கப் பழக வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தையில் மரியாதை  தெரியாதவர்

நன்றி  வணக்கம் :(  :(  :(

இத்திரிக்குக் காரணமான பிள்ளைகளின் கால் தெரியுதோ, தலை தெரியுதோ கருத்தெழுதும் அன்பர்களின் தலைகால்களைப் புரிந்துகொள்வதில் வல்லவர். வாழ்த்துக்கள்!!. 

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவோ முக்கிய செய்திகள் வந்து போகுது அதற்க்கெல்லாம் முக்கியத்துவம் கொட்டுக்காது இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து கள உறவுகளுகளுக்குள் முரண்பாடுகளை வளர்த்ததுதான் மிச்சம், மேலும் இந்த திரியை எண்ணை ஊற்றி எரியவிடாது இத்துடன் அணைப்பதே களத்துக்கு நன்மை பகுக்கும்.    

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுங்கா உடுத்திறது மற்றவர்கள் ஆபாசமாக நோக்குவதை குறைக்கும் ஆபத்தை விலைக்கு வாங்குவதை குறைக்கும்.. மற்றது கூட்டும் என்பதே வாதம். அது நியாயமும் கூட.

இதே புரியல்ல.. அப்புறம்..???! உங்களுக்கு விளக்கம் சொல்லி...???! :lol::)

ஆபாசமாக பார்க்க நினைப்பவனுக்கு சேலை என்ன ஸ்கேர்ட் என்ன? பார்வையும் எண்ணமும் இருந்தால் போதும்..... கையையும் காலையும் பார்க்கிறவன் சும்மா வைத்திருந்தால் போதும் சேட்டை விடப்போனால் தான் பிரச்சனை....... இந்துக்கள் பர்தா போடவேணும் என்ற சட்டத்தை அறிமுகப்படுத்தவும்......:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.