Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிதறுதேங்காய்களாலும் கற்பூரங்களாலும் பூசிக்க முடியா கடவுள்களே...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
லாசப்பலில் இன்று தேர்... தேங்காய்கள்,தீபங்கள்,பலவித வாசனைத்திரவியங்கள்,பணம்போர்த்த மனிதர்கள்,தண்ணியாய் செலவழிக்கப்பட்ட பணம் என்று படங்கள் பல நினைவுகளை கிளறிவிட்டன.. அந்தவேகத்தில் என் பழைய பதிவொன்றை புரட்டியதில் உருவான மனக்குமுறல்...
 
(உன் இனம் ஊரில் உண்ணவழி இன்றி இருக்கையிலும் உருப்படா சாமிகளுக்கு காவடி எடுத்து உன் பணத்திமிரையும் சுய பெருமையையும் அடுத்தவன் தாழ்வாரத்தில் நின்றுகொண்டு காட்டதுடித்தால் நீயும் தமிழனே..)
 
1157629_313434775468364_2024339061_n.jpg
 
இங்குநாம் இறக்கையிலே-உயிர்க்காய்
இரந்து கிடக்கையிலே
எங்குநீர் போனீரோ-இன்று
பொங்கலுக்கு வந்தீரோ
 
கொலுவுற்று எதற்காக-இன்னும்
கோவிலில் வீற்றிருந்து...?
வலுவற்ற கற்களுக்கு-யாரும்
வாழ்வு கொடுக்காதீர்
 
இன்னும் எதற்காக-கோவிலில்
பென்னம் பெருஞ்சிலைகள்
எல்லாம் மண்ணாக-எம்
சாபம் பலிக்கட்டும்
 
சிதறுதேங்காய்களாலும் கற்பூரங்களாலும் பூசிக்க முடியா கடவுள்களே...
---------------------------------------
 
தலைமுறை தலைமுறையாக,சந்ததி சந்ததியாக,யுகம்யுகமாக மரணம் இந்தப்பூமிப்பந்தில் மனிதர்களை இடைவிடாமல் துரத்திக்கொண்டேயிருக்கிறது.பூமியின் வானத்தில் சாவுப்பறவைமட்டும் ஓயாமல் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது.மரணத்தின் பின்னால் சாதாரண மனிதர்களின் வாழ்க்கை அத்தியாயம் முடிவடைந்துவிடுகிறது.இலட்ச்சியத்திற்க்காக மரணித்தவர்களின் வரலாறுகள் மட்டும்தான் தலைமுறைகளைத்தாண்டி பூமிப்பந்தில் காலத்துடன் பயணம் செய்துகொண்டிருக்கிறது.அவர்களின் தியாகங்கள் பல தலைமுறைகளைத்தாண்டியும் சந்ததிகளின் இதயங்களில் மெல்லிய அதிர்வை ஏற்படுத்தியபடியே இருக்கின்றன.
 
ஒவ்வொருவருடைய மனதிற்க்குள்ளும் ஒரு சின்ன உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது.பொது உலகைத்தாண்டி சுயநலம் மிக்க அந்தச் சின்ன உலகமே ஒவ்வொரு மனிதனையும் வழிநடத்துகிறது.மாவீரர்கள் அந்தச் சின்ன உலகத்தை உடைத்தெறிந்துவிட்டு வெளியேறியவர்கள்.இழப்புக்கள்,மகிழ்ச்சிகள்,துயரங்கள்,உறவுகள்,சொத்துக்கள்,பணம்,பதவி என்று நீண்டு விழுதுகள் பரப்பிக்கிடக்கும் சுயநல உலகை உதறிவிட்டு இனத்திற்க்காக பொது உலகில் நின்று போராடியவர்கள்.தங்கள் சந்ததிகளின் சுதந்திர வாழ்வை நெஞ்சுகளில் சுமந்தபடி சிலுவைகளில் மரித்தவர்கள்...
 
நாங்கள் வாழ்வதை நேசித்த கோழைகள்,மாவீரர்கள் இனத்தை நேசித்த வீரர்கள்.சாவு உங்களின் வாயிலில் வந்து வட்டமிட்டது.மரணம் எந்த நிமிடமும் உங்களைக் கொத்திச்செல்லக் காத்திருக்கிறது என்று தெரிந்தும் போராடினீர்கள்.வீழ்வோம் என்று தெரிந்தும் சந்ததி நிம்மதியாக வாழும் என்ற நம்பிக்கையுடன் போராடினீர்கள்.
 
எதை நேசித்தீர்களோ அதற்க்காக எல்லாவற்றையும் கொடுத்துக் கடைசியில் உங்கள் உயிரையும் கொடுத்தீர்கள்.நீங்கள் மடிந்தார்கள்.இலட்ச்சியத்திற்க்காக மடிந்தீர்கள்.ஆயிரம் ஆயிரமாய் மடிந்தீர்கள்.தோழர்களும் தோழிகளும் ஒன்றாக மடிந்தீர்கள்.உங்களின் இரத்தத்தில் நனைந்து சிவந்தது எங்கள் தேசம்.
 
சுதந்திரத்தை நோக்கிய பயணத்தில் எங்களை அழைத்துச்செல்ல உங்களை உருக்கி வழித்தடங்களை உருவாக்கிவிட்டு வரலாறாய்ப்போனவர்களே....உங்களுக்கு எதைச்செய்தும் தீர்க்கமுடியாத பெருங்கடனை வெட்கத்துடனும் வேதனையுடனும் எஞ்சியிருக்கும் நாங்கள் சுமக்கிறோம்....
 
எண்ணங்கள் முழுதும் உங்கள் இனத்தின் விடுதலையுடன் புறப்பட்டு இன்று சன்னங்கள் துளையிட்ட ஏதோ ஒரு ஓலை வீட்டின் சுவரில் சட்டமிடப்பட்ட படமாக 
தொங்கிக்கொண்டிருப்பீர்கள்...உங்களுக்காய் ஏத்தக்கூட ஒரு மெழுகுதிரி இல்லாமல் உருகும் கண்ணீருடன் சுருக்கம் விழுந்த உங்கள் அன்னையின் கன்னங்கள் கண்ணீரால் உருக்கிக்கொண்டிருக்ககூடும்...
 
நீங்கள் கடவுள்கள் என்று சொன்னால்கூட நான் பெரும்பாவி ஆகிவிடுவேன்...ஏனெனில் கடவுள்கூட தனக்கு கற்பூரம் ஏற்றினவனுக்குதான் கருணை செய்வாராம்...நீங்கள் வீழ்ந்த பின் உக்கிப்போக ஆறாடி நிலம்கூட கேட்காமல் போனவர்கள் அல்லவா..
 
மந்திரங்களும் மலர் அர்ச்சிப்புக்களும் 
கைதட்டல்களுமாய் கரைந்து உருகி கற்களுக்கு கற்பூரம் ஏத்துபவர்களே.....
 
விதையாய் வீழ்ந்த அந்தப்புனிதர்களின் கல்லறைகளின் நடுவே அடர்ந்துகிடக்கின்ற புற்க்களின் நடுவே பூத்திருக்கும் பூக்களின் அருகே உங்கள் உதடுகளைக்கொண்டு செல்லுங்கள்.அவற்றை முத்தமிடுங்கள்.அப்பொழுது அவர்களின் ஆன்மாவை முத்தமிடுவதாக நீங்கள் உணருவீர்கள்.அப்பொழுதும் அவர்கள் சந்ததியைப் பற்றியே பாடிக்கொண்டிருப்பார்கள்.
 
எங்களின் கடவுள்களே..!
 
பிள்ளையாருக்கு சிதறும் தேங்காய்களும் முருகனுக்காய் எரியும் கற்பூரங்களும் நீங்கள் நேசித்த அந்த சந்ததிகளுக்காக ஒரு நேர உணவாக,ஒரு சிறு குப்பிவிளக்காய் எரிந்திருந்தால்...???
 
உயிப்பூவிதழ்களின் சாயங்களை வெளுறவைக்கும் இந்த பெருங் கோடையின் கோபம்
ஒருநாள் அனல்சுமந்த பெருமூசுக்களால் தீமூட்டப்பட்டப்படும்...
 
எங்களின் கடவுளர்களே...காலமாகிப் போய்விடாது உங்கள் கனவுகள் வாழ்ந்த அந்தக்காலம்...
 
எதிர்பார்த்து கிடக்கிறது ஒலி எழுப்பிய உங்கள் சிதைவுகள்....
  • Replies 52
  • Views 3.9k
  • Created
  • Last Reply

உள்ளதைச் சொன்னதிற்க்குப் பாராட்டுக்கள் சுபேஸ் . இவர்கள் மாறுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடவுளைக் கண்டவன்...!

கண்ணுக்குள் கலர் கலறாய்

பட்டொளிவீசி பட்டென்று வந்தது

ஒரு உருவம் இருட்டுக்கு மத்தியிலே

என் கண் எதிரே....!!!

கடவுளா காற்றா என்று கண்டுகொள்ள

முடியாத நிலமை

கடவுள்தான் என்று

உறுதிப்படுத்த ஒன்றும் இல்லை

ஊகம்........

இது கடவுள்தான்...!!!

162-1.jpgபக்கத்தில் நின்ற பட்டொளி

பேசியது...

"வணக்கம் பக்தா...!

உன் பக்திக்கு மெச்சினேன்

உனக்காக விண்ணைவிட்டு

மண்ணுக்கு ஓடோடி வந்தேன்...!

உடைந்துபோன மனதுடன்

நின்றுகொண்டு கேட்டான்

"இடிவிழுந்த நெஞ்சின்

இருள் போக்கவந்த

இறைவனா நீ...???

உண்மையில் இறைவன்தானா...?

பக்தா...!!!

என்னை நன்றாகப்பார்த்துக்கொள்

நான்தான் நீ வணங்கும்

ஆதிசிவன்....!!!

ஓ... நீதான் ஆதிசிவனா...?

சில நாட்களுக்கு முன்

பாரீஸின் வீதியிலே

தேரேறிவந்த வினாயகனின்

தந்தையா நீ...???

பல நாட்களுக்கு முன்

பால்குடித்த பிள்ளையார்

என்ற பிள்ளையினைப்

பெற்றவனா நீ....!!!

162-2.jpgஇதில் என்ன சந்தேகம்

பக்தா....!

அங்கும் நானே

இங்கும் நானே

எங்கும் நானே

எதிலும் நானே

இவையெல்லாம் இறைவன்

திருவிழையாடல்கள் பக்தா

மன்னிக்க வேண்டும் இறைவா...!

தாங்கள் எதை திருவிழையாடல்

என்கிறீர்கள்...???

162-3.jpgதேரேறிவந்த வினாயகருக்காக

பக்தர்கள் மூன்றுலட்சம் தேங்காய்களை

தாய்நிலத்தில் இருந்து இறக்குமதிசெய்து

வீதியிலே வீணாக உடைத்து தாயகத்தில்

தேங்காய்க்கு தட்டுப்பாடு உண்டாக்கிய

செய்திதான் திருவிழையாடலா...?

மூன்று லட்சம் தேங்காய்கு

கொடுத்த பணம் இரண்டுலட்சம் யுறோ

இரண்டுலட்சம் யுறோவை வீதியிலே

வீணாக விரையம்செய்ததுதான்

திருவிழையாடலா...???

பல நாட்களுக்கு முன்பு

பிள்ளையார் பால்குடிக்கிறார் என்று

தாய்பசுவிடம் இருந்து

கண்றைப்பிரித்து பால் எடுத்து

பிள்ளையாருக்கு பல லீட்டர் பால்கொடுத்தார்கள்

அழுத கண்றை அனாதையாக தவிக்கவிட்டு

பாலுக்கு அழுகிற பாலகனை கூட கவனிக்காமல்

பிள்ளையாருக்கு பால்...!

அழுகிற பிள்ளைக்கு அடி...!

இதுதான் உன் திருவிழையாடலா...???

162-4.jpgகோயில் இல்லா ஊரில்

குடியிருக்க வேண்டாம் என்று

முன்னவர்கள் சொன்னார்கள்

உண்மைதான்-ஆனால்

குடியில்லா ஊரிலும் கோவில்கள்

கட்டுகிறார்களே இறைவா...???

பக்தர்கள் பரமசிவனுக்கு என்று

பாரீசில் பல கோவில்கள் கட்டுகிறார்கள்

பெற்றவரை வீதியிலே வீடு இல்லாமல்

தவிக்கவிடுகிறார்களே அது ஏன் இறைவா...??

ஆற்றிலே போட்டாலும்

அளந்து போடு என்கிறார்கள்

ஆதிசிவனுக்கு போடையிலே

அளவுகோல் எதுக்கு என்கிறார்கள்

நான் உனக்கு பணத்தைத்தருகிறேன்

நீ எனக்கு வரத்தைத்தா என்கிறார்களே

அது ஏன் இறைவா...??

ஏனப்பா இறைவனுக்கே லஞ்சம்

கொடுக்கின்றாய் எனக்கேட்டால்

லஞ்சத்தை நான் துவக்கவில்லை

ஒளவைப் பாட்டிதான் ஆரம்பித்து

வைத்தவர் என்கிறார்கள்...!

ஒளவை அன்று பாடினார்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம்செய்

தூங்கக் கரிமுகத்து தூமனியே நீ எனக்கு

சங்கத்தமிழ் மூன்றும் தா...

என்று அப்போது அப்படி

லஞ்சம் கொடுத்தார் ஒளவைப்பாட்டி

நாங்கள் இப்போது இப்படி லஞ்சம்

கொடுக்கின்றோம் என்கிறார்கள் இறைவா...!!!

இறைவனைத்தேடி இதையங்கள்

செல்லும் ஆனால் இங்குமட்டும்

தலைகீழாக இருக்கு இறைவா...!

பத்திரிகைகளாலும் ஊடகங்களாலும்

விளம்பரம் செய்கிறார் கடவுள்

ஏங்காதே மனிதனே

என்னைத்தேடி வா என்று...!

அய்யர்மார் கூட வியாபாரிகள்

ஆகிவிட்டார்கள்

மணவறை திருமண மண்டபத்துடன்

அனைத்துக்கும் என்னிடம்

வாருங்கள் என்கிறார்கள் இறைவா...!

இவை அனைத்தும் உங்கள்

திருவிழையாடலா இறைவா...???

அதுவரைக்கும் அமைதியாய்

இருந்த இறைவன்

கொஞ்சம் விழித்தார்

கொஞ்சம் திகைத்தார்

கொஞ்சம் சிரித்தார்

கொஞ்சம் சிந்தித்தார்

பின்னர் பக்தா என்று

பக்தியுடன் அழைத்தார்....!!!

பாசமுள்ள பக்தனே

பாரீசில் இப்படி எத்தனை கோவில்கள்

எனக்காக கட்டப்பட்டது என்று எனக்கே

தெரியாதப்பா...!!!

ஆற்றிலே போடயிலே அளந்துபோட்டும்

ஆதிசிவனுக்கு போடயிலே

அளக்காமலும் என்றாய்

அப்படி எனக்கு யாரும் அளந்தும்

போடவில்லை அளக்காமலும்

போடவில்லையே பக்தா...!!!

என்னைத்தேடி வாருங்கள்

விரும்புவதை வாங்குங்கள் என்று

விளம்பரம் செய்துகொள்ள

நான் நகைக்கடையும் அல்ல

புடவைக் கடையும் அல்ல

இவை என் திருவிளையாடல் அல்ல

எனக்கே தெரியாமல் செய்யும்

சிலரின் திருட்டு விளையாடல்கள் பக்தா...!

இல்லை இறைவா என்னால் நம்ப

முடியவில்லை...!!!

இறைவன் பெயர்சொல்லி எம்மவர்

முதுகுக்குப் பின்னாலே

மோசடி செய்கிறார்கள்

கடவுள் பெயர்சொல்லி

இங்கு களவாடுகிறார்கள்

இதையெல்லாம் இறைவனிடம் சொல்லி

நியாயம் கேட்டால் அது எல்லாம்

எனக்கு தெரியாது என்கிறாய்...!!!

இப்படி தெரியாது என்று சென்னால்

எப்படி நீ எல்லம் கடவுள்....????

பக்தா.............!!!!!!!!

என் கண்ணை நன்றாகப் பார்....!!!

இறைவா உன் கண்களைப்

பார்த்தேன் ஆனால் அதில் எங்கள்

கண்ணீரைத் துடைக்கின்ற கருணையில்லை...!

அன்று நக்கீரன் சொன்னதையே

நானும் இன்று சொல்லுகிறேன்

நெற்றிக்கண் திறந்தலும்

குற்றம் குற்றமே...!

இறைவன் கோபம்கொண்டு

நெற்றிக்கண்ணின் ஒளிக்கீற்றை

என் எதிரே செலுத்தினார்

என் கண்களைநோக்கி வந்த

வெப்பத்துடன் கூடிய ஒளிக்கீற்று

கண்களைச் சுட்டது...!

அது கடவுளின் கண்வழி வந்த

ஒளிக்கீற்று அல்ல

யன்னல் வழிவந்த கதிரவனின்

கதிர்க் கீற்றுக்கள்....!!!

கட்டில்மேல் கனவுகளுடன்

படுத்திருந்த நான்

கனவு மயக்கத்தில் கால்தடக்கி

கீழே விழுந்தேன்...!

நினைவு வந்தது...!!!

ஓ..... கண்டது கடவுள் இல்லை

வெறும் கனவு...!!!

அப்படியானால் கவிதையின் பெயரை

கொஞ்சம் திருத்திக் கொள்கிறேன்

"கடவுளைக் கண்டவன்" அல்ல

கடவுளைக் கனவிலே கண்டவன்'...!!!

(இந்த கவிதை வெறும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் கதையல்ல)

பாரீசில் இருந்து

த.சரீஷ்

http://www.yarl.com/node/238

அருமை..நன்றி நுணா அண்ணா பகிர்விற்கு..

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்கு இது ஒரு இக்கட்டான காலம்.
மக்களுக்காக நாடா? அல்லது நாட்டிற்காக மக்களா?
எனச் சிந்திக்க வேண்டிய காலமிது 

ஆனாலும் இதுவும் கடந்து செல்லும் எமது ஈழவிடுதலைப் போராட்டம்.
 
தாம் என்ன செய்கின்றோம் எதற்காக செய்கின்றோம் என்றால் அதில் நிச்சயமாக ஆன்மீகமோ இறையன்போ துளியும் கிடையாது. அது நல்லூர்த்தேரானாலும் சரி புலம்பெயர்நாட்டுத்தேரானுலும் சரி. வில்லங்கத்துக்கு பரதநாட்டியம் ஆடுகின்றார்கள் அரங்கேற்றுகின்றார்கள் ஏன் என்ற கேள்விக்கு கலையை தக்கவைக்கின்றார்கள் என்றா பொருள்? இல்லை மண்ணின் கலைகளுக்கும் பரதநாட்டியத்திற்கும் என்ன சம்மந்தம் என்றால் எதுவும் இல்லை. நாங்கள் தேங்காய் உடைத்தோம் சட்டையை கழட்டி வேட்டியுடன் உருண்டோம் ஆகவே நாங்கள் பக்திமான்கள் பவ்வியமானவர்கள் உயர்ந்தவர்கள் ! அவர்கள் அப்படிச் செய்தார்கள் நாங்களும் அப்படிச்செய்கின்றோம். நாமும் உயர்ந்தவர்கள். நீங்கள் விரதம் பிடிக்கவில்லையோ? கேள்வியே தன்னை உயர்த்தி அடுத்தவனை தாழ்த்தும். பந்த பகட்டு ஏற்றதாழ்வு வியாபாரம் என்று நடக்கும் இந்தக் கூத்துக்கும் கடவுளுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. ஆன்மீகத்துக்கும் இறையன்புக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. கலாச்சாரத்துக்கும் பரதநாட்டியக் கூத்துக்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அலங்கோலத்தின் அலங்கோலங்கள். பரிதாபத்துக்கும் அப்பாற்பட்ட அருவருப்புகள்.

அரசியலுக்கும் அப்பாற்பட்டவர்கள் அதனால் சர்வதேசமும் எம் பக்கம் இல்லை

ஆன்மீகத்துக்கும் அப்பாற்பட்டவர்கள் அதனால் கடவுளும் எம் பக்கம் இல்லை

சொந்தமான கலாச்சாரத்தை உடையவன் அதனை காலத்துக்கேற்ப திருத்திக்கொள்வான் இரவல் கலாச்சாரத்த்துக்கு அடிமையானவனுகு சுயம் என்று எதுவும் இல்லை.

என்ன சுபேஸ் செய்வது உண்ண வழி இல்லாத ஊரிலிலையெ ஊருப்பட்ட தேங்காய்களை உடைத்து வழி படும் போது உணவு கிடைக்கும் ஊரில் தேங்காய் உடைத்தால் தப்பா? சுற்றி வர அந்நிய ராணுவமும் இனம் அழித்த ஒட்டுக் குழுக்களும் சுற்றி நிற்க  சுதந்திரம் இல்லாமல் பிரதட்டைகளும் காவடிகளும் தூக்கும் நம்மவர்கள் ஊரில் இருக்கும் போது ஓரளவு சுதந்திரமா இருக்கும் புலம் பெயர்மக்கள் மட்டும் ஒன்றும் செய்யக் கூடாது என்று சொல்ல முடியுமா?

அங்குள்ளவர்கள் போராட முடியாது ஆனால் மக்களுக்கு உதவக் கூடவா முடியாது? தல தளபதி படங்கள் வெளிவரும்போது வானுயரக் கட் அவுட் வைத்து பாலாபிசேகம் செய்யும் பன்னாடையல் பத்து கிலோமீடர் தூரத்தில் இருக்கும் வன்னி மக்களுக்கு உதவ முடியாதா? புலத்தை விட யாழில் கோடிக் கணக்கான தேங்காய்கள் உடைக்கப்டுகிறது கோவில் களில் அதில் சிறிதை உதவக் கூடாதா? மானாட மயிலாட பார்க்கும் நேரத்தில் மானிடத்திற்கு உதவலாமே ? சும்மா உர்க்காந்து இந்தியக் குப்பைகளை நாடகம் நிகழ்ச்சி என்ற பெயரில் பார்க்கும் ஊரில் உள்ள சோம்பேறித் தமிழர்கள் அங்குள்ள வறுமையில் வாடும் மக்களுக்கு உதவலாமே . புலம்பெயர் தமிழன் தான் எல்லாம் கிழிக்கணும் என்று இருக்காமல் அவர்களும் செய்ய முன்வரனும் . வெறுமனே  இங்குள்ளவர்களை சாடி பிரயோசனம் இல்லை. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எங்களால் யாரைத் திருத்த முடிந்தது........ஊர் மக்கள் பாவங்கள் அவர்களுக்கும் எங்களால் முடிந்தளவுக்கு உதவனும் என்று ஏதாவது செய்தாலும் அதையே முறையாக பிரியோசனப்படுத்திக்கொள்ள  முடியாமல் இருப்பவர்களும் இருக்கிறார்கள்....உதவி செய்பவர்களின் முகம் தெரியாட்டிக்கும் அடிக்கடி என் கனவில் வந்து போகிறீர்கள், ஆனால் முகம் தெரியவில்லை என்ற பதங்களை  பாவித்து ஐஸ் வைத்து தங்கள் விசயத்தில் கண்ணாயிருப்பவர்களும் இருக்கிறார்கள்..ஆகவே வருசத்தில ஒருக்கா இரத்தம் சிந்தி உழைப்பவர்கள் சிதறு தேங்காய் அடிப்பதில் என்ன தவறு....???என்ன யாயினி நல்லா குளம்பீட்டு என்று நினைக்காதீங்க...சொல்லவேணும் போல இருந்திச்சு .

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான  பதிவு சுபேஸ் 

இந்த கோபம்  வேண்டும்  காண்

ஒரு  காலத்தில் இவர்களுடன் மிகவும் முட்டுப்பட்டவன்

ஆனால் தற்பொழுது இதுவும்  கடந்து போகும்  என்றநிலையில்.......

மக்களில்  பலரகம்   ராசா

இது ஒரு ரகம்...........

இவர்களும் சேர்ந்தது தான்  ஒரு இனம் :(

(இதுவரை இப்படியான  எந்த திருவிழாவிலும்   கலந்து கொண்டது கிடையாது)

  • கருத்துக்கள உறவுகள்

எங்களால் யாரைத் திருத்த முடிந்தது........ஊர் மக்கள் பாவங்கள் அவர்களுக்கும் எங்களால் முடிந்தளவுக்கு உதவனும் என்று ஏதாவது செய்தாலும் அதையே முறையாக பிரியோசனப்படுத்திக்கொள்ள  முடியாமல் இருப்பவர்களும் இருக்கிறார்கள்....உதவி செய்பவர்களின் முகம் தெரியாட்டிக்கும் அடிக்கடி என் கனவில் வந்து போகிறீர்கள், ஆனால் முகம் தெரியவில்லை என்ற பதங்களை  பாவித்து ஐஸ் வைத்து தங்கள் விசயத்தில் கண்ணாயிருப்பவர்களும் இருக்கிறார்கள்..ஆகவே வருசத்தில ஒருக்கா இரத்தம் சிந்தி உழைப்பவர்கள் சிதறு தேங்காய் அடிப்பதில் என்ன தவறு....???என்ன யாயினி நல்லா குளம்பீட்டு என்று நினைக்காதீங்க...சொல்லவேணும் போல இருந்திச்சு .

இரத்தம் சிந்தி உழைக்கும் நீங்கள் (தனிப்பட உங்களையல்ல) வருடத்தில் ஒருநாள் அல்ல ஒவ்வொரு நாளும் சிதறுதேங்காய் அடியுங்கள். அது உங்கள் இரத்தம் உங்கள் உழைப்பு அதனைக் கேட்க யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் ஊர்ப்பிரச்சினையைக் காட்டி அசைலம் அடிச்சதை அடிச்ச ஆக்கள் (மட்டும்) மறந்துவிடக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாரைத்தேடிப் போயும் நீங்கள் செய்வது சரி ராசாக்கள் செய்து கொண்டு இருங்கோ என்று சொல்லப் போவது இல்லை.....எனக்கு அது தேவையும் இல்ல...வெறும் கருத்தை மட்டுமே முன் வைத்தேன் வாலி..

  • கருத்துக்கள உறவுகள்
அவர்கள் தங்கட மனத்திருப்திக்கு தேங்காய் உடைச்சு என்னவோ செய்கிறார்கள்.இப்படியான நேரங்களில் தான் சிலருக்கு ஊரில மக்கள் கஸ்டப்படுகிறது ஞாபகம் வந்து தொலைக்குது போல :(
 
தேங்காய் உடைக்கிறவர்கள் எல்லோரும் ஊரில இருக்கிறவர்களுக்கு உதவாமலும் இல்லை.தேங்காய் உடைக்காமல் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் ஊரில் இருப்பவர்களுக்கு உதவுபவர்களும் இல்லை :)  ^_^
 
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் உருவத்தை நெஞ்சிலே பச்சைகுத்துமளவிற்கு நம்பிக்கை கொண்ட ஒருவன் இன்று அந்தத் தலைவன் இருகிறானா? இல்லையா? என்றே அறியமுடியாத நிலையில், வேறு எவர்மேல் நம்பிக்கை கொள்ளக்கூடிய நிலமை உள்ளது? ஒரே ஒரு நம்பிக்கைதான் உள்ளது! அதுதான் கடவுள் நம்பிக்கை!. இன்று ஊர் உலகமெல்லாம் தமிழர்களுக்கு தலைவர்கள் உள்ளனர், இவர்களில் எவர்மேல் நம்பிக்கை கொள்ளமுடியும்? எவரால் நம்பிக்கையைத் தரமுடியும்? சிதறுதேங்காய்களாலும் கற்பூரங்களாலும் கடவுள்களைப் பூசிக்கும் மக்கள், தங்கள் தாய்மண்ணில் அவலப்படும் மக்கள் அவலங்களைத் தணிப்பதற்கு பங்களிப்புச் செய்வதும் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது. ஒரு வேளை உணவின்றிப் பசியால் வாடும் பெண்ணை பாலியல் வல்லுறவுசெய்து அவளைக் கொலையும் செய்துவிட்டு மக்கள் தலைவனாக மாலைசூடிக் கொள்பவனும் உள்ளபோது, பிள்ளையின் பசிக்கு பால்வாங்க பணம்கொடுப்பவன்தான், கடவுளுக்கும் பால் ஊற்றுகிறான் என்பதையும் அறியாத நிலையில் ஒருவரைப்பற்றி வெளிவரும் விமர்ச்சனங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

இவ்வகையான திருவிழாக்கள் அவரவர் விருப்பம். அதில் எவரும் தலையிட முடியாது. ஆனால் இவ்வகை விழாக்களை மற்றைய இனத்தவர்  முன்  தமிழரின் விழா இது எம்மை பெருமை கொள்ள தக்க விதமாக  நடத்துவது எம் எல்லோருக்கும் நல்லது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இங்கு எழுதப்பட்ட சில கருத்துக்களை பார்க்கும்போது இளையறாஜா நிகழ்ச்சியை தடுக்கவும்,மானாட மயிலாட நிகழ்ச்சி குறித்த பிரச்சாரங்களும்,இந்தியாவில் கலைஞர் ரீ.வி,சன் ரீ.வி முதலானவை எல்லாக்காலங்களிலும் மசாலாக்களையே சொல்வதாகவும் ஈழம்குறித்த பிரக்ஞை அற்றிருப்பதாகவும் சொல்லும் கருத்துக்களும் இன்னும் பலவும் நினைவுக்கு வந்துபோகின்றன.. தனக்கு மட்டும் ஏற்றமாதிரி எல்லாவற்றையும் மாற்றி அமைக்க நினைக்கும் இந்த சுயநல சமூகம் குறித்து கடும் கோபம்வராமல் இருக்கமாட்டது இன உணர்வோடு சிந்திக்கும் எவனுக்கும்.. இங்கு எழுதப்பட்ட சில குறுகிய எண்ணமுள்ள கருத்துக்கள் குறித்து எழுதனும்.. நேரம் இல்லாமல் இருக்கிறது.. நேரம்கிடைக்கையில் விரிவாக எழுதுகிறேன்.. மற்றது ரதி அக்கா.. நீங்கள் யாழில் எழுதுபவை எல்லாம் அப்பொழுது அப்பொழுது ஞாபகம் வரும்போதுதானா. மற்றுமபடி உங்களுக்கு ஞாபகம் வருவதில்லையா??.. ஆனால் உங்கள் எண்ணங்களுடனும் சிந்தனைகளுடனும் மற்றவர்களின் எண்ணங்களையும் சிந்தனைகளையும் பொதுமைப்படுத்தாதீர்கள்..நீங்கள் உங்கள் கருத்தை வெளிப்படுத்தியவிதம் கருத்துக்களவிதிமுறைகளுக்குள் வராத ஆனால் கருத்தாடுபவரை நோக்கி வைக்கப்படும் ஒருவகையான சீண்டல்தன்மையான தனிமனித தாக்குதலே..ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்.. நன்றி..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வகையான திருவிழாக்கள் அவரவர் விருப்பம். அதில் எவரும் தலையிட முடியாது. ஆனால் இவ்வகை விழாக்களை மற்றைய இனத்தவர்  முன்  தமிழரின் விழா இது எம்மை பெருமை கொள்ள தக்க விதமாக  நடத்துவது எம் எல்லோருக்கும் நல்லது.

தமிழர்கள் மட்டுமல்ல அனைத்து இனமக்களுமே தங்கள் கடமையாகக் கொள்ளவேண்டிய கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

அங்குள்ளவர்கள் போராட முடியாது ஆனால் மக்களுக்கு உதவக் கூடவா முடியாது? தல தளபதி படங்கள் வெளிவரும்போது வானுயரக் கட் அவுட் வைத்து பாலாபிசேகம் செய்யும் பன்னாடையல் பத்து கிலோமீடர் தூரத்தில் இருக்கும் வன்னி மக்களுக்கு உதவ முடியாதா? புலத்தை விட யாழில் கோடிக் கணக்கான தேங்காய்கள் உடைக்கப்டுகிறது கோவில் களில் அதில் சிறிதை உதவக் கூடாதா? மானாட மயிலாட பார்க்கும் நேரத்தில் மானிடத்திற்கு உதவலாமே ? சும்மா உர்க்காந்து இந்தியக் குப்பைகளை நாடகம் நிகழ்ச்சி என்ற பெயரில் பார்க்கும் ஊரில் உள்ள சோம்பேறித் தமிழர்கள் அங்குள்ள வறுமையில் வாடும் மக்களுக்கு உதவலாமே . புலம்பெயர் தமிழன் தான் எல்லாம் கிழிக்கணும் என்று இருக்காமல் அவர்களும் செய்ய முன்வரனும் . வெறுமனே  இங்குள்ளவர்களை சாடி பிரயோசனம் இல்லை. :icon_idea:

இதை யாழ் - வன்னி மக்களுக்கிடையேயான மனநிலையாக கொள்ளலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இங்கு எழுதப்பட்ட சில கருத்துக்களை பார்க்கும்போது இளையறாஜா நிகழ்ச்சியை தடுக்கவும்,மானாட மயிலாட நிகழ்ச்சி குறித்த பிரச்சாரங்களும்,இந்தியாவில் கலைஞர் ரீ.வி,சன் ரீ.வி முதலானவை எல்லாக்காலங்களிலும் மசாலாக்களையே சொல்வதாகவும் ஈழம்குறித்த பிரக்ஞை அற்றிருப்பதாகவும் சொல்லும் கருத்துக்களும் இன்னும் பலவும் நினைவுக்கு வந்துபோகின்றன.. தனக்கு மட்டும் ஏற்றமாதிரி எல்லாவற்றையும் மாற்றி அமைக்க நினைக்கும் இந்த சுயநல சமூகம் குறித்து கடும் கோபம்வராமல் இருக்கமாட்டது இன உணர்வோடு சிந்திக்கும் எவனுக்கும்.. இங்கு எழுதப்பட்ட சில குறுகிய எண்ணமுள்ள கருத்துக்கள் குறித்து எழுதனும்.. நேரம் இல்லாமல் இருக்கிறது.. நேரம்கிடைக்கையில் விரிவாக எழுதுகிறேன்.. மற்றது ரதி அக்கா.. நீங்கள் யாழில் எழுதுபவை எல்லாம் அப்பொழுது அப்பொழுது ஞாபகம் வரும்போதுதானா. மற்றுமபடி உங்களுக்கு ஞாபகம் வருவதில்லையா??.. ஆனால் உங்கள் எண்ணங்களுடனும் சிந்தனைகளுடனும் மற்றவர்களின் எண்ணங்களையும் சிந்தனைகளையும் பொதுமைப்படுத்தாதீர்கள்..நீங்கள் உங்கள் கருத்தை வெளிப்படுத்தியவிதம் கருத்துக்களவிதிமுறைகளுக்குள் வராத ஆனால் கருத்தாடுபவரை நோக்கி வைக்கப்படும் ஒருவகையான சீண்டல்தன்மையான தனிமனித தாக்குதலே..ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்.. நன்றி..

உண்மை தான், சுபேஸ்!

சிலர் இங்கு எழுதுவது மாதிரி, அவரவர் விரும்பியதை அவரவர் செய்யலாம் என்பது உண்மை தான்! அதில் எனக்கு உடன்பாடே!

ஆயினும், இவர்களது செயல்கள் எம்மையும் ஒரு வகையில் பாதிக்கின்றது, என்பதே உண்மை! நாமும் புலம்பெயர் தமிழர்களாக இருப்பதால், இப்படியான செயல்களைப் பார்த்துவிட்டுப் பலர் எம்மிடம் விளக்கம் கேட்பதுண்டு! இந்த முட்டாள் தனமான செயல்களுக்கு எப்படியான விளக்கங்களைக் கொடுக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?

சூரன் போர்- இதற்கு என்ன விளக்கத்தைக் கொடுப்பது? நாங்கள் யாருடைய பக்கம்? சூரனினது பக்கம் என்பது தான் உண்மை! ஆனால் அதை எவ்வாறு அவர்களிடம் கூறுவது?

உங்கள் கடவுள் முருகன் என்கிறீர்கள், அப்படியாயின் அவர் எதற்காக உங்களது ஆட்களையே கொல்ல வேண்டும்? ( இதனால், சூரன் கெட்டவன் என்று பொய் விளக்கம் கொடுக்க வேண்டி வருகின்றது! :D )

தேங்காய் உடைப்பது- ஆசையால் ஏற்படும் அழுக்குகள், விலகும் போது, ஆன்மாவின் பரிசுத்தம் வெளிப்படுகின்றது!

சரி, இந்தத் தத்துவத்தை அறிய, ஒரு தேங்காய் உடைத்துப் பார்த்தால் போதாதா? :o

நான் இறுதியில் சாம்பலாகப் போகின்றோம், என்பதை தினமும் நினைவூட்டத் தானே,நெற்றியில் திருநீறு அணிகின்றோம்!

அதற்காக, உடம்பு முழுவதும் திருநீறைப் பூசிக்கொண்டு திரிவதில்லையே?

காவடி எடுக்கும்போது 'செடில்' குத்திக்கொண்டு திரிவது! :lol:  சரி, இதுவும் கலாச்சாரம் தான் என்று வைத்துக்கொள்ளுவோம்!

ஆனால் அதை ஏன் வீதிக்குக் கொண்டு வந்து காட்டி, இங்கு வாழும் மக்களைப் பயப்பிடுத்துவான்? கோவிலுக்குள்ளேயே ஆடலாம் தானே! :D

ஊரில் பிணங்களை, மரங்களை அடுக்கி எரிக்கிறோம்! அதனை இங்கு நாங்கள் செய்வதில்லையே? ஏன்?

எமது கலாச்சாரம் தானே, செய்ய வேண்டியது தானே! :wub:

Edited by புங்கையூரன்

தாம் என்ன செய்கின்றோம் எதற்காக செய்கின்றோம் என்றால் அதில் நிச்சயமாக ஆன்மீகமோ இறையன்போ துளியும் கிடையாது. அது நல்லூர்த்தேரானாலும் சரி புலம்பெயர்நாட்டுத்தேரானுலும் சரி. வில்லங்கத்துக்கு பரதநாட்டியம் ஆடுகின்றார்கள் அரங்கேற்றுகின்றார்கள் ஏன் என்ற கேள்விக்கு கலையை தக்கவைக்கின்றார்கள் என்றா பொருள்? இல்லை மண்ணின் கலைகளுக்கும் பரதநாட்டியத்திற்கும் என்ன சம்மந்தம் என்றால் எதுவும் இல்லை. நாங்கள் தேங்காய் உடைத்தோம் சட்டையை கழட்டி வேட்டியுடன் உருண்டோம் ஆகவே நாங்கள் பக்திமான்கள் பவ்வியமானவர்கள் உயர்ந்தவர்கள் ! அவர்கள் அப்படிச் செய்தார்கள் நாங்களும் அப்படிச்செய்கின்றோம். நாமும் உயர்ந்தவர்கள். நீங்கள் விரதம் பிடிக்கவில்லையோ? கேள்வியே தன்னை உயர்த்தி அடுத்தவனை தாழ்த்தும். பந்த பகட்டு ஏற்றதாழ்வு வியாபாரம் என்று நடக்கும் இந்தக் கூத்துக்கும் கடவுளுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. ஆன்மீகத்துக்கும் இறையன்புக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. கலாச்சாரத்துக்கும் பரதநாட்டியக் கூத்துக்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அலங்கோலத்தின் அலங்கோலங்கள். பரிதாபத்துக்கும் அப்பாற்பட்ட அருவருப்புகள்.

அரசியலுக்கும் அப்பாற்பட்டவர்கள் அதனால் சர்வதேசமும் எம் பக்கம் இல்லை

ஆன்மீகத்துக்கும் அப்பாற்பட்டவர்கள் அதனால் கடவுளும் எம் பக்கம் இல்லை

சொந்தமான கலாச்சாரத்தை உடையவன் அதனை காலத்துக்கேற்ப திருத்திக்கொள்வான் இரவல் கலாச்சாரத்த்துக்கு அடிமையானவனுகு சுயம் என்று எதுவும் இல்லை.

சரியான கருத்து.

உண்மை தான், சுபேஸ்!

சிலர் இங்கு எழுதுவது மாதிரி, அவரவர் விரும்பியதை அவரவர் செய்யலாம் என்பது உண்மை தான்! அதில் எனக்கு உடன்பாடே!

ஆயினும், இவர்களது செயல்கள் எம்மையும் ஒரு வகையில் பாதிக்கின்றது, என்பதே உண்மை! நாமும் புலம்பெயர் தமிழர்களாக இருப்பதால், இப்படியான செயல்களைப் பார்த்துவிட்டுப் பலர் எம்மிடம் விளக்கம் கேட்பதுண்டு! இந்த முட்டாள் தனமான செயல்களுக்கு எப்படியான விளக்கங்களைக் கொடுக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?

சூரன் போர்- இதற்கு என்ன விளக்கத்தைக் கொடுப்பது? நாங்கள் யாருடைய பக்கம்? சூரனினது பக்கம் என்பது தான் உண்மை! ஆனால் அதை எவ்வாறு அவர்களிடம் கூறுவது?

உங்கள் கடவுள் முருகன் என்கிறீர்கள், அப்படியாயின் அவர் எதற்காக உங்களது ஆட்களையே கொல்ல வேண்டும்? ( இதனால், சூரன் கெட்டவன் என்று பொய் விளக்கம் கொடுக்க வேண்டி வருகின்றது! :D )

தேங்காய் உடைப்பது- ஆசையால் ஏற்படும் அழுக்குகள், விலகும் போது, ஆன்மாவின் பரிசுத்தம் வெளிப்படுகின்றது!

சரி, இந்தத் தத்துவத்தை அறிய, ஒரு தேங்காய் உடைத்துப் பார்த்தால் போதாதா? :o

நான் இறுதியில் சாம்பலாகப் போகின்றோம், என்பதை தினமும் நினைவூட்டத் தானே,நெற்றியில் திருநீறு அணிகின்றோம்!

அதற்காக, உடம்பு முழுவதும் திருநீறைப் பூசிக்கொண்டு திரிவதில்லையே?

காவடி எடுக்கும்போது 'செடில்' குத்திக்கொண்டு திரிவது! :lol:  சரி, இதுவும் கலாச்சாரம் தான் என்று வைத்துக்கொள்ளுவோம்!

ஆனால் அதை ஏன் வீதிக்குக் கொண்டு வந்து காட்டி, இங்கு வாழும் மக்களைப் பயப்பிடுத்துவான்? கோவிலுக்குள்ளேயே ஆடலாம் தானே! :D

ஊரில் பிணங்களை, மரங்களை அடுக்கி எரிக்கிறோம்! அதனை இங்கு நாங்கள் செய்வதில்லையே? ஏன்?

எமது கலாச்சாரம் தானே, செய்ய வேண்டியது தானே! :wub:

மேற்கண்ட இரு கருத்துகளுடனும் நான் ஒத்து போகிறேன்.  இதனையே எனது முன்னைய கருத்தில் சுருக்கமாக கூறியிருந்தேன். கடவுளுக்கு ஆன்மீகத்திற்கு இவ்வாறான விழாகளுக்கும் தொடர்பில்லை. ஒரு மகிழ்விற்காக செய்யபடும் நிகழ்வுகளே இவை என்றாலும் அதில் தவறேதும் இல்லை. மகிழ்வூட்டம் நிகழ்வுகளும் மனித உளவள மேம்பாட்டுக்கு அவசியமானவையே.  ஆனால் அன்னிய இன மக்கள் முன்பு செய்யபடுவதால் மற்றயவர்கள் எம்மை பார்த்து எள்ளி நகையாடும் விதத்தில் செய்யாமல்  சற்றே நவீனப்படுத்தி செய்வது நல்லது. உதாரணமாக உணவு பரிமாறும்போது சுற்றாடலை அசுத்தப்படுத்தாத முறை, காவடி எடுக்கும்போது மிருகத்தனமான பழைய சம்பிரதாயங்களை பின்பற்றாமல்  இக்காலத்துக்கு ஏற்ற முறையில் மகிழ்வூட்டும் நடனங்களை ஆடுதல் போன்ற விடயங்களை நிகழ்வை நடத்துவோர் கவனத்தில் எடுப்பது நல்லது என்பது எனது அபிப்பிராயம்.

மேற்கு நாடுகளில் நாம் எடுக்கும் இவ்வாறான நிகழ்வுகள் மற்றையோரால் அவதானிக்கபட்டு அது தொடர்பான கேள்விகள் எழுப்பபடும்போது எமது இளைய சமுதாயத்தினர் அதற்கு பதில் அளிக்க கூடிய விதத்தில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்தல் நல்லது. மொழி அறிவு குறைந்த பழமைவாதிகளுக்கு இக்கேள்விகளால் எந்த பாதிப்பும் இல்லை. ஏதோ வாயில் வந்ததை கலாச்சாரம் என்ற பெயரில் கூறிவிட்டு தம்மை தாமே திருப்தி படுத்திவிட்டு சென்றுவிடுவார்கள். மொழி அறிவு, உலக நடைமுறை அறிவு உடைய, பல்லின சமுதாயத்துடன் அதிகமாக பழகும்  எமது புதிய தலைமுறையினரே மற்றைய மக்கள் முன் அவமானப்பட்டு அதன் விளைவாக தமிழ் நடைமுறைகளே வெறுக்கும் அளவிற்கு கூட  செல்லலாம்.

சண்ட மாருதன் தெளிவாக கூறியது போல் கலாச்சாரம் காலத்திற்கேற்ப திருத்தி கொள்ளப்பட வேண்டியது. எமது முன்னோர்களால் 10 ம் 15 ம் நூற்றாண்டிற்கு பொருந்திய  பல கலாச்சார நடைமுறைகள் தற்போதய 21 ம் நூற்றாண்டுக்கு அறவே பொருந்தாதது. இந்த உண்மை தமிழ் பழைமைவாதிகளுக்கு பிடிப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இங்கு எழுதப்பட்ட சில கருத்துக்களை பார்க்கும்போது இளையறாஜா நிகழ்ச்சியை தடுக்கவும்,மானாட மயிலாட நிகழ்ச்சி குறித்த பிரச்சாரங்களும்,இந்தியாவில் கலைஞர் ரீ.வி,சன் ரீ.வி முதலானவை எல்லாக்காலங்களிலும் மசாலாக்களையே சொல்வதாகவும் ஈழம்குறித்த பிரக்ஞை அற்றிருப்பதாகவும் சொல்லும் கருத்துக்களும் இன்னும் பலவும் நினைவுக்கு வந்துபோகின்றன.. தனக்கு மட்டும் ஏற்றமாதிரி எல்லாவற்றையும் மாற்றி அமைக்க நினைக்கும் இந்த சுயநல சமூகம் குறித்து கடும் கோபம்வராமல் இருக்கமாட்டது இன உணர்வோடு சிந்திக்கும் எவனுக்கும்.. இங்கு எழுதப்பட்ட சில குறுகிய எண்ணமுள்ள கருத்துக்கள் குறித்து எழுதனும்.. நேரம் இல்லாமல் இருக்கிறது.. நேரம்கிடைக்கையில் விரிவாக எழுதுகிறேன்.. மற்றது ரதி அக்கா.. நீங்கள் யாழில் எழுதுபவை எல்லாம் அப்பொழுது அப்பொழுது ஞாபகம் வரும்போதுதானா. மற்றுமபடி உங்களுக்கு ஞாபகம் வருவதில்லையா??.. ஆனால் உங்கள் எண்ணங்களுடனும் சிந்தனைகளுடனும் மற்றவர்களின் எண்ணங்களையும் சிந்தனைகளையும் பொதுமைப்படுத்தாதீர்கள்..நீங்கள் உங்கள் கருத்தை வெளிப்படுத்தியவிதம் கருத்துக்களவிதிமுறைகளுக்குள் வராத ஆனால் கருத்தாடுபவரை நோக்கி வைக்கப்படும் ஒருவகையான சீண்டல்தன்மையான தனிமனித தாக்குதலே..ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்.. நன்றி..

வணக்கம் சுபேஸ் எந்த விதத்தில் என்னுடைய கருத்து தனி மனித தாக்குதலாக இருக்குது என்று சொல்ல முடியுமா?
 
நான் இசைஞானியின் இசை நிகழ்ச்சிக்கு எதிராகவோ,மானாட மயிலாடவுக்கு எதிராகவோ எங்கும் கருத்து வைத்ததாக ஞாபகம் இல்லை.அப்படி எழுதி இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.
 
என்னுடைய கருத்தை நீங்கள் ஏற்க வேண்டும் என்றோ அல்லது உங்களுடைய கருத்தை நான் ஏற்க வேண்டும் என்றோ இல்லை.ஆனால் எனக்கு சரி எனப்படுகிறதை நான் எழுதுகிறேன்.உங்களுக்கு சரி எனப்படுகிறதை நீங்கள் எழுதுங்கள்
 
தேரின் போது வீதியில் தேங்காய் உடைப்பது பிடிக்கவில்லை என்று சொல்லிச்,சொல்லி வருடா வருடம் தேருக்கு போய் வந்து குறை சொல்பவர்கள் தான் அதிகம்.இப்படியானவர்களுக்கு இந்த நேரத்தில் தான் ஈழம் பற்றிய பிரக்கை வந்து போகுமாக்கும்
  • கருத்துக்கள உறவுகள்
எமது இந்து கோவில்களில் மட்டும்தான் தேங்காய் உடைத்து பணத்தை விரயம் பண்ணுகிறோமா??
கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி கொளுத்தி பணத்தை விரயம் பண்ணவில்லையா?
அது என்ன நாம் எதையாவது செய்யும்போதுதான் இவர்களுக்கு கண்ணை கட்டுது. 
  • கருத்துக்கள உறவுகள்
  எங்களுடைய மதம் அற்புதமாக இருப்பதுதான் இவர்களுக்கு பிடிக்கவில்லை.
 
ஒரு கிறிஸ்தவரை முதுகிலும் வாயிலும் முள்ளு கம்பிகளை குத்திக்கொண்டு காவடி ஆட சொல்லுங்கள் பார்க்கலாம்.
இவர்களால் முடியாததை நாம் செய்யும் போது வரும் பொறாமைகளை இப்படி எழுதி தள்ளுகிறார்கள்.
 
தேங்காய் களை உடைக்கும்போது எமது உள்ள இருக்கும் வெள்ளை மனது வெளியில் தெரிகிறது. எமது உண்மையான மனதை பார்பதற்கு ஒருவரிடத்தில் ஒருமுறை தேங்காய் உடைக்க கூடாதா?? 
  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தங்கட மனத்திருப்திக்கு தேங்காய் உடைச்சு என்னவோ செய்கிறார்கள்.இப்படியான நேரங்களில் தான் சிலருக்கு ஊரில மக்கள் கஸ்டப்படுகிறது ஞாபகம் வந்து தொலைக்குது போல :(
 
தேங்காய் உடைக்கிறவர்கள் எல்லோரும் ஊரில இருக்கிறவர்களுக்கு உதவாமலும் இல்லை.தேங்காய் உடைக்காமல் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் ஊரில் இருப்பவர்களுக்கு உதவுபவர்களும் இல்லை :)  ^_^

தேங்காய் ஒரு உணவு பண்டம்.
இந்த உலகில் குறிப்பாக இது மூன்றாம் தர நாடுகளில்தான் உற்பத்தி ஆகிறது. பாலாக அதை ஏற்றுமதி செய்கிறார்கள்.
இது போதாது என்று இருக்க ................
இப்போ மேலை நாட்டு பெண்கள் யோகா  காகா என்று அலைபவர்களுக்கு. தேங்காயின் இளநீர் சிறந்த (anti oxidant) பானம் என்று போட்டு கொடுத்திருக்கிறார்கள். இப்போ இளநீர் ஏற்றுமதி ஆகிறது தேங்காய் ஆகு முன்பே அழிந்து போகிறது.
 
பணத்தின் ஆதிக்கம்..... ஏழைகளின் சொந்த நிலங்களில் விளையும் உணவைக்கூட நிலா சோறு ஆக்கி  இருக்கிறது. அதாவது தேங்காயின் விலையை உள்ளூர் வாசிகளால் எட்டமுடியாது உள்ளது.
 
இந்த நேரத்தில் இந்த உணவு பண்டத்தை அங்கிருந்து கொண்டு வந்து இங்கே வீதிகளில் குப்பையாக  வீசுவதில். கடவுளுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது??
என்று ஒருமுறை உங்கள் மண்டையை உடைத்தால் குறைந்தா விடுவீர்கள்?? 
 
அப்படி என்று கேட்கிறார்களோ என்னமோ ???
  • கருத்துக்கள உறவுகள்

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

உடைந்த தேங்காய்களை அள்ளி எடுத்து கொப்பரை போட்டு எண்ணை வடித்தால் சமையலுக்கு உதவும். இல்லாதவர்களுக்கு இலவசமாகவும் கொடுக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.