Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்கள் மீதான பாலியல் வல்லுறவு

ஆண்கள் மீதான் பாலியல் வல்லுறவு பற்றி உங்கள் எண்ணம் 19 members have voted

  1. 1. ஆண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முடியும் என நினைக்கிறீர்களா?

    • ஆம்
      17
    • இல்லை
      2
  2. 2. ஒரு ஆண் (18+) ஒரு பெண்ணால் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டதாக சொன்னால் , அந்த ஆண் பற்றி உங்கள் எண்ணம் ?

    • தைரியமில்லாத ஆண்
      4
    • பாலியல் உறவு கிடைத்து என்று சந்தோஷ படாமல் அதை பற்றி குறை சொல்லுகிறாய்
      4
    • மட பயல் இதை போய் வெளியில் சொல்லி கொண்டு இருக்கிறான்
      1
    • வெளியில் தைரியமாக சொல்ல வேண்டும், குற்றம் செய்தவருக்கு தண்டனை வேண்டும்
      12
  3. 3. ஒரு ஆண் (18+) தான் இன்னும் ஒரு ஆணினால் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டதாக சொன்னால் , அந்த ஆண் பற்றி உங்கள் எண்ணம் ?

    • தைரியமில்லாத ஆண்
      1
    • பாலியல் உறவு கிடைத்து என்று சந்தோஷ படாமல் அதை பற்றி குறை சொல்லுகிறாய்
      0
    • மட பயல் இதை போய் வெளியில் சொல்லி கொண்டு இருக்கிறான்
      1
    • வெளியில் தைரியமாக சொல்ல வேண்டும், குற்றம் செய்தவருக்கு தண்டனை வேண்டும்
      17

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்களை வசப்படுத்துவது பற்றியும் பெண்கள் ஜடங்கள் என்றும் எந்தக் கருத்தையும் நான் வைக்கவில்லை. அதை எங்கிருந்து எடுத்தீர்கள் என்று காட்டினால் நல்லது.

முதலில் பெண்கள் பாலியல் வல்லுறவின்போது உடன்படுகின்றார்கள் என்று மோசமான கருத்து வைத்தீர்கள். இப்போது இலட்சணக்கானோர் உடன்படுகின்றார்கள், ஒன்றிரண்டு பேர் உடன்படுவதில்லை என்கின்றீர்கள். ஆக மொத்தத்தில் ஊசியை ஆட்டிக் கொண்டிருந்தால் நூலைக் கோர்க்கமுடியாது என்று சொல்லி வழக்கில் வென்ற அப்புக்காத்துவின் திறமையை மெச்சும் ஆட்களில் ஒருவராகத்தான் இருக்கின்றீர்கள்.

சி.கு. என்னுடைய படிப்பு பாலியல், பாலியல் வன்புணர்வு பற்றியதல்ல. எனவே இவை பற்றி நிபுணத்துவமாகக் கருத்து வைக்கமுடியாது. ஆனால் பொதுப்புத்தியை வைத்து பாலியல் வன்புணர்வு பற்றிய உங்கள் கருத்தும் சிந்தனையும் மிக மோசமானது என்று சொல்லமுடியும்.

பொறுத்த கருத்துகளுக்கு எல்லாம் லைக் போடமுடியாமல் காலை வாரிவிடுகிறது. :o

அருமையான விளக்கம். நன்றி கிருபன் அண்ணா. :D

  • Replies 78
  • Views 14.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாக்களிப்புச் சாவடியை.... அவதானித்துக் கொண்டிருக்கும்,
ச‌ர்வ‌தேச‌க் க‌ண்காளிப்பாள‌ர்க‌ள‌து க‌ருத்துப்ப‌டி....
வாக்க‌ளிப்பு மைய‌ம் திற‌ந்து... 12 ம‌ணித்தியால‌ம் வ‌ரை... இர‌ண்டு பேர் வாக்குப் போட்டு, அதில் ஒருவ‌ர‌து வாக்கு திரும்ப‌ப் பெறப்ப‌ட்டுள்ள‌தால்... அதை. ஒரு வாக்காக‌ க‌ருதுகின்ற‌ன‌ர்.
 
விசுகு எழுதிய‌ க‌ருத்தின் பின்... ம‌க்க‌ள் வாக்குப் போட‌ ஆர்வ‌ம் காட்டிய‌தால்... வாக்குப் போட்ட‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை பதின்மூன்றாக‌ உய‌ர்ந்த‌தை... ச‌ர்வ‌தேச‌ தேர்த‌ல் க‌ண்காணிப்பாள‌ர்க‌ள் மிக, மிக‌ உன்னிப்பாக‌ அவ‌தானித்துள்ளார்க‌ள் என்ப‌தை... அறியக் கூடியதாக உள்ளது.
 
அதன் பின்... விசுகின் மேல்... தனிப்பட்ட தாக்குதலை ஆரம்பித்த போது... மக்கள் வாக்களிப்புச் சாவடிக்குச் செல்லாமல்.... தேர்தலை புறக்கணிக்கின்றார்களோ... என்று, ஐ.நா. சந்தேகப்படுவதாக... பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

-தேர்த‌ல் சாவ‌டியிலிருந்து.... யாழ் நிருப‌ர் தானாச்சீனா-
-மேல‌திக‌ த‌க‌வ‌ல்க‌ளுக்கு.... திண்ணையில், காத்து வாங்கிக் கொண்டிருங்க‌ள்- :rolleyes:  :D

  • தொடங்கியவர்

மற்றும்

நிழலி

சொல்வதை  ஏற்றுக்கொள்ளவேண்டுமாயின்

(ஆண்குறி பலப்படாமல் புணர்வு சாத்தியமில்லை)

பெண்குறி

உருகுதல்

விரிதல் இன்றி புணர்வு சாத்தியமில்லை.

இந்த உருகுதல் மற்றும் விரிதலுக்கு காரணம் என்ன???

(மீண்டும் சொல்கின்றேன்

போர்களிலோ  மற்றும் இனம் சார்ந்து அல்லது குழுக்கள் சார்ந்து  நடக்கும் பாலியல் வன் புணர்வுகள் இதில் அடங்கா)

நன்றி  ரதி  கருத்தக்கு...

உங்களது  கருத்திலிருந்து  நான் தள்ளி  நிற்கவில்லை

ஒரு ஆணை ஒருத்தி வன்புணர்வுக்கு உட்படுத்த முடியும்

அவர் ஆட்டம் கண்டுவிடுவார் 

அல்லது

விழுந்துவிடுவார் என என்பது எப்படி சாத்தியம்???

அதற்கு விளக்கம் தந்தால்

மற்றதெல்லாம் எனக்கும் புரிந்து விடும்.

கருத்துக்களுக்கு பதில் எழுதும் முன் மேலே எழுதிய கருத்துகளை வசித்து கிரகித்து கருத்து எழுதுவீர்களா? அல்லது கண்ணனை மூடி கொண்டு நான் நினைப்பது மட்டும் தான் சரி?

அல்லது நீங்கள் சொல்வது பிழையாக இருந்தாலும், அதை சரி என்று நிறுவ தலை கீழாக நிற்பீர்களா? 

  :unsure: 

ஆண் குறி பலப்பட்டாமல் புணர்வு சாத்தியமில்லை, ஆனால் ஆண் உடலுறவை விரும்பாவிட்டால் , ஆண் குறி  பலப்பட்டது என்பது தவறானது

மேலே தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது, ஆண் உணர்வு ரீதியாக உடலுறவுக்கு தயாராக இல்லாவிட்டாலும், ஆண் குறி பலமடைய தொடுகை மட்டுமே போதுமானது.

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

விசுகருக்கு நான் முதலே சொன்னேன், அவர் எழுதியது ஏன் தவறென்று, மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு விட்டு யோசிக்கிறேன் என்ற விசுகர், இப்ப தன் முதல் கருத்தை நியாயப் படுத்த யோனி விரிதல் சுருங்குதல் எண்டு இன்னும் முட்டாள் தனமான கருத்துகளை அடுக்கிக் கொண்டே போறதைப் பார்க்க ஆபிரகாம் லிங்கன் சொன்ன ஒரு வசனம் நினைவுக்கு வருகுது :

"நீங்கள் வாயை மூடிக் கொண்டிருந்தால் உங்களை புத்திசாலி என்று நினைக்கவாவது செய்வார்கள், வாயைத் திறந்தீர்களோ, நீங்கள் முட்டாள் என்பது தெரிந்து விடும்" :rolleyes:

கோவிக்காதீர்கள் விசுகர், உங்கள் மேல் இந்த விஷயத்தில் நான் மிகவும் கடுப்பில் இருக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
நன்றி குளம்ஸ் அண்ணா ஒரு வித்தியாசமான பகுதியை தொட்டதற்கு. எனது வாக்கை ஆம் என்பதற்கும், ஆணோ பெண்ணோ தண்டனை கிடைக்க வேண்டும் என்பதற்குமே போட்டேன். ஒரு ஆணை ஒரு ஆண் வல்லுறவுக்கு உட்படுத்தினால் தண்டனை கொடுக்க வேண்டும் என வாக்குப்போட்டவர்கள் ஒரு ஆணை ஒரு பெண் வல்லுறவுக்கு உட்படுத்தினால், பெண்ணுக்கு தண்டனை வழங்கத் தேவையில்லை என்ற  கருத்து வரும் வகையில் வாக்குப் போட்டதைப் பார்க்க ஓசியில குடுத்தால் ஒயிலையும் குடிப்பார்கள் என்று எண்ண வைக்கிறது.  
 
ஆரம்பத்திலே குறிப்பிடப்பட்டது போல கட்டிய மனைவியின் விருப்பம் இல்லாமல் அவரைத் தொடுவதும் ஒருவகை வல்லுறவு தான். 
 
விசுகு  அண்ணா, உங்களது கருத்து மிகவும் முகம் சுளிக்க வைத்துவிட்டது. அத்துடன் நீங்கள் சொன்ன கருத்து தவறானது என ஒத்துக்கொள்ளாமல் அதை சரி என நிறுவ விளைவதும், சலாப்புவதும், தேசியத்தை தேவையில்லாமல் இழுப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நீங்கள் என்ன, எந்தக் கொம்பன் சொன்னாலும் "ஒரு கட்டத்துக்கு மேல ஒத்துழைக்கிறார்கள்"     
என்று கூறியதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 

( அருமையான ஒரு கருத்தாடலை விசுகண்ணை பக்கம் திருப்பி  திசை திருப்பலை இங்கை நிர்வாகம்  அனுமதிப்பது சரியா...??  ) 

விசுகண்ணை பாலியல் விடயத்தில் அப்பாவி தனமாக இருந்ததை சிலர் காள்புணர்ச்சியோடு அணுகியதை காண அருவருப்பு மட்டுமே விஞ்சியது... 

தாயகத்தில்  பாலியல் சம்பந்தமாக எனக்கு எல்லாம் தெரிந்து இருந்தது எண்று ஒருவர் சொல்வாராக இருந்தால் நம்பும்படியாக இருக்க போவதில்லை...   அக்காலத்தில் இணையமோ பாலியல் சம்பந்தமான புத்தகங்களோ இல்லாது கற்பதும் இலகு அல்ல... 

நான் உட்பட பல புலம்பெயர்ந்து வந்த பின்னரே பாலியல் சம்பந்தமாக ஓரளவு தன்னும் தெரிந்து கொண்டோம் என்பதே உண்மை...  புலம்பெயர்ந்த பின்னரும் விசுகண்ணை தெரிந்து கொள்ளவில்லை ( தெரிந்து கொள்ள முயலவில்லை ) எண்டது கொஞ்சம் நெருடல் தான்...  ( இதை விசுகண்ணை தான் விளக்க வேண்டும்) 

ஜி ஜீ பொன்னம்பலத்தின் ஊசி இடம் கொடுக்காது நூல் நுளைய முடியாது எனும்  வாதாட்ட கருத்துக்கள் விசுகண்ணையால் உள்வாங்கப்பட்டு இருந்திருக்கலாம்....  அதை உண்மை எண்று நம்பியதால் அப்படியான ஒரு கருத்தை அவர் சொல்லி இருக்கவே சாத்தியம் அதிகம்... 

இங்கை அவர் மீது சேறடிக்கும் பெரிய மனிதர்கள்  அவருக்கு புரிய வைப்பதை விட்டு போட்டு  அக்கா அம்மாவை இழுத்து விட்டு கருத்து சொல்வது அவர்களின் குணாதியசமாக மட்டும் தான் பார்க்க முடிகிறது... 

Edited by தயா

இவ்வளவு படிப்பு படித்த  தாங்களே

ஆண்களை வசப்படுத்திவிடலாம்

பெண்கள்  யடங்கள்   என்றும்

லட்சக்கணக்கை விட்டுவிட்டு

வைத்தியசாலைக்குப்போகும் ஒன்று இரண்டை  உதாரணமாக எடுத்து கதைக்கும்  போது...

இனி எதற்கு படிப்பு என்றுதான் எண்ணத்தோன்றுகிறது....... :lol:  :D

விசுகண்ணோய் இது  உங்களுக்கான விளக்கத்துக்கு சின்ன முயற்ச்சி... 

நரம்பு மண்டலம் செக்ஸ் உறவின்போது,

குறிப்பாக செக்ஸ் உணர்வுகள் உச்சத்தை அடையும்போது பெண்களின் நரம்பு மண்டலம் வழக்கத்தை விட அதி வேகத்தில் துடிக்கும். ஆர்கஸத்தின்போது எந்தப் பெண்ணுமே இந்த நரம்பு மண்டலத் துடிப்பை உணர்வதில்லை

 செக்ஸ் அல்லாத சமயத்தில் இதுபோல நடந்தால் பெரும் வலியை உணர நேரிடும். ஆனால் செக்ஸின்போது இது தூண்டப்படுவதால் வலிக்குப் பதில் மகிழ்ச்சி உணர்வுதான் கூடும்.

http://tamil.indiansutras.com/2013/09/the-mind-a-woman-during-orgasm-000865.html#slide337177

இது ஒரு உதாரணம்...   பெண்கள்  உறவுக்கு தயாரில்லாத போதோ  விரும்பாத போது நடக்கும் உறவு என்பது  அவர்களுக்கு பெரும் பாதிப்பை கொடுக்கும்... 

நமது கண்ணோட்டங்கள் சரியாக இருந்தாலும் மற்றவர்களின் கருத்துக்களை மதிக்க ற்று கொள்ள வேண்டும். (நாங்கள் எங்களின் கருத்தை எப்படி மதிக்கவேண்டும் என்று எதிர் பார்க்கிறோமோ). ஒருவரின் கருத்துக்களை வைத்து, அவரை  கீழ்த்தரமாக நோக்கினால், அவர் தன்னுடைய நிலையை defend பண்ண வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். மேலும்  நமது கண்ணோட்டங்களை சிந்திப்பதற்கு பற்‌றி சாத்தியம் இல்லாமல் போய்விடுகிறது. நமது கண்ணோட்டங்களை பற்‌றி சிந்திக்கவிடாமல் கீழ்த்தரமாக  கிண்டல் அடிப்பது  கொடுமைப்படுத்துதலின் ஒரு வடிவம். ஆக, பொதுவாக  எப்போதும் சரியான கருத்தாக இருந்தாலும் ஒருவரை கொடுமை படுத்தல் மூலம் ஏற்று கொள்ள வைப்பது கடினம் :( 

இது எனது பொதுவான கருத்து.என் கண்ணோட்டம் பிழை என்றால் மன்னிக்கவும்sad-puppy-smiley-emoticon.gif

Edited by கா ளா ன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில மாதங்களின் முன்பு....
இங்கு... ஒரு தலைப்பில்,
ஒரு ஆபிரிக்க நாட்டு (கென்யாவாக இருக்கலாம்) இராணுவ வீரனை கடத்திச் சென்ற இரண்டு அழகிகள் மூன்று நாட்களாக... தொடர்ந்து, வன்புணர்வு செய்து விட்டு... அவனை தமது காரில் கொண்டு போய்.. நடுக்காட்டில் தள்ளிவிட்டு... தலையில் பெரிய்ய.... பாறாங்கல்லையும் போட்டு விட்டு, தப்பிலி ஓடி விட்டார்கள் என்று செய்தி வந்ததை.... நீங்கள் அறிந்து, இருந்தால்.... இப்பிடி எல்லாம், சொல்ல மாட்டீர்கள்.

குளக்காடான் முதலில் இவ்வாறு தொடங்குகின்றார்:

Poll: ஆண்கள் மீதான் பாலியல் வல்லுறவு பற்றி உங்கள் எண்ணம்
ஆண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முடியும் என நினைக்கிறீர்களா?
  1.  ஆம்
  2.  இல்லை
ஒரு ஆண் (18+) ஒரு பெண்ணால் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டதாக சொன்னால் , அந்த ஆண் பற்றி உங்கள் எண்ணம் ?
  1.  தைரியமில்லாத ஆண்
  2.  பாலியல் உறவு கிடைத்து என்று சந்தோஷ படாமல் அதை பற்றி குறை சொல்லுகிறாய்
  3.  மட பயல் இதை போய் வெளியில் சொல்லி கொண்டு இருக்கிறான்
  4.  வெளியில் தைரியமாக சொல்ல வேண்டும், குற்றம் செய்தவருக்கு தண்டனை வேண்டும்
ஒரு ஆண் (18+) தான் இன்னும் ஒரு ஆணினால் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டதாக சொன்னால் , அந்த ஆண் பற்றி உங்கள் எண்ணம் ?
  1.  தைரியமில்லாத ஆண்
  2.  பாலியல் உறவு கிடைத்து என்று சந்தோஷ படாமல் அதை பற்றி குறை சொல்லுகிறாய்
  3.  மட பயல் இதை போய் வெளியில் சொல்லி கொண்டு இருக்கிறான்
  4.  வெளியில் தைரியமாக சொல்ல வேண்டும், குற்றம் செய்தவருக்கு தண்டனை வேண்டும்

ஆணோ

பெண்ணோ

ஒரு நிலைக்குப்பின் உடன்பட்டுவிடுகிறார்கள் என்பது தான்  உண்மை.

இதில் ஆண்கள் விரைவில் உடன்பட்டுவிடுகிறார்கள்.

இல்லாது விட்டால்

ஒரு உருப்படி இல்லாத ஆணை  என்ன  செய்யமுடியும்???

ஆணோ

பெண்ணோ

ஒரு கட்டத்துக்கப்பால்

உரசல்கள் மற்றும்  மனமாற்றங்கள் காரணமாக உடன்பட்டுவிடுவதாகவே நான் அறிந்தேன்.

இந்த திரிக்கு  ஏற்ப  ஒரு சாதாரண இருவர் மட்டும் ஈடுபடும் வன்புணர்வின் போது  என்பதற்காக எழுதியதே அது.

இதில் எல்லோரும் என்பதோ

அல்லது

மிகவும் பலத்தை  பாவித்து கொடூர வன்முறை

அல்லது

பலர் ஒன்று சேர்ந்து   பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துதல்  வராது ....

விளக்கமாக எழுதாததால்

அர்த்தம் மாறுபட்டிருக்கலாம் நிழலி.

சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

வணக்கம்

எனது கருத்து தப்பு என்றால் மன்னிப்புக்கேட்க தயங்கப்போவதில்லை.

அதற்கு முன் ஒரு ஆணை  எப்படி வன்புணர்வு செய்யமுடியும்??? 

என விளங்கப்படுத்தமுடியுமா???

பின்னர் விசுகுவின் கருத்துக்கள் மேலுள்ளவாறு தொடங்குகின்றன.

முதலாவது, இது ஓர் வில்லங்கமான விடயம். தவிர, பல்வேறு பகுதிகளை இது தொட்டுச்செல்கின்றது. ஒருபுறம் பாதிப்பு ஆணாகவும், மறுபுறம் பெண்ணாகவும் உள்ளது. விசுகு ஆரம்பத்தில் பல்கோணங்களில் சிந்திக்காது மேலோட்டமாக தனது கருத்தைக்கூறியுள்ளார். ஆனால், அவர் கூறிய அதே கருத்தை வெவ்வேறு சந்தர்ப்ப, சூழ்நிலைக்கேற்ப பிரயோகித்து பார்க்கும்போது நிச்சயம் தவறான பார்வையையே ஏற்படுத்துகின்றது.

இருவர் மட்டும் சம்மந்தப்பட்ட பாலியல் வண்புணர்வாயினும், உதாரணமாக அது இந்திய இராணுவம், அல்லது இலங்கை இராணுவம் அப்பாவி பொதுமகன்/ள் மீது புரிந்ததான சம்பவத்தில் விசுகுவின் கருத்தை வைத்து பார்த்தால் அவரது கருத்து குறித்த சூழ்நிலைக்கு மகா தவறானதாகவே காணப்படும். 

சாத்திரி எழுதிய ஓர் கதையை சிறிது  காலத்திற்கு முன் இங்கு வாசித்தேன். அதில் ஓர் அப்பாவி இளைஞனை சீக்கிய இராணுவத்தினன் ஒருவன் மானிப்பாய்/சண்டிலிப்பாய் பகுதியில் வன்புணர்வு செய்ததாயும் பின்னர் குற்றவாளியை தான் சுட்டுக்கொன்றதாயும் வாசித்ததாக ஞாபகம்.

நிச்சயம் விசுகு கருத்து எழுதும்போது தனது கருத்தை பல்வேறு சூழ்நிலைகளிற்கு ஏற்ப பொருந்தும்படி வைத்து நினைத்து எழுதாது மேலோட்டமாய் Casualஆய் எழுதியிருக்கிறார். இந்தவிடயத்தை தொடர்ந்து இழுத்து மேயாது குளக்காட்டானின் தலைப்பில் கவனத்தை செலுத்தினால் நன்றாக அமையும்.

எமது உணர்ச்சிகளை அப்புறப்படுத்திவிட்டு, தனியே அறிவுபூர்வமாய் விசுகுவின் கருத்தை அணுகினால் அதன் உண்மைத்தன்மையை அறிவதற்கு ஆராய்ச்சிக்கூடத்தில்தான் முயன்று பார்க்கவேண்டும். எனக்கு நேரடியான அனுபவம் இல்லாமல் எப்படி அதை சரியோ அல்லது தவறோ என்று கூறமுடியும் என்றும் விளங்கவில்லை.

இங்கு மகா கெட்டிக்காரர்கள் என்று எவரும் இல்லை, அப்படி ஒருவரும் இருக்கவும் முடியாது. எல்லோரும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கின்றோம். 

குளக்காடனின் வினாக்களுக்கு எனது சுருக்கமான பதில்:

பாதிக்கப்பட்டது நானாக இருந்தால்.. எனது நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்று கூறமுடியாது. சிலவேளைகளில் யாழ் கருத்துக்களத்திலேயே எனக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை மனம்திறந்து கூறுவேன். சிலவேளைகளில் குற்றவாளிக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு செய்வேன். சிலவேளைகளில் அவருக்கு நானே ஒருவரின் உதவியும் இல்லாமல் சங்கு ஊதுவதற்கும் முயற்சி செய்வேன். அது கால, சூழ்நிலைகள், எனது மனநிலையைப் பொறுத்தது. திட்டவட்டமான பதிலை அளிப்பது கடினமானது.

பாதிக்கப்பட்டது வேறொருவர் என்றால் அவரது நடவடிக்கைகள், தீர்மானங்கள் பற்றி நான் என்ன நினைக்கின்றேன் என்று கூறி என்னத்தை செய்வது? அது அவரது மனநிலை, வசதியைப்பொறுத்தது. என்னிடம் நேரடியாக ஏதும் உதவி கேட்டால் பரிசீலனை செய்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து... நாம் அறிவது யாதென்றால்.....
குளக்காட்டானுக்கு சனி பிடிச்சிருக்கோ...
அல்லது... இங்கு நின்று.. மினக்க்கெடும் எமக்குச் சனி பிடிச்சிருக்கோ....
ஐயோ... காப்பாத்துப்பா... ஈஸ்வரா.................

  • கருத்துக்கள உறவுகள்

விசுகருக்கு நான் முதலே சொன்னேன், அவர் எழுதியது ஏன் தவறென்று, மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு விட்டு யோசிக்கிறேன் என்ற விசுகர், இப்ப தன் முதல் கருத்தை நியாயப் படுத்த யோனி விரிதல் சுருங்குதல் எண்டு இன்னும் முட்டாள் தனமான கருத்துகளை அடுக்கிக் கொண்டே போறதைப் பார்க்க ஆபிரகாம் லிங்கன் சொன்ன ஒரு வசனம் நினைவுக்கு வருகுது :

"நீங்கள் வாயை மூடிக் கொண்டிருந்தால் உங்களை புத்திசாலி என்று நினைக்கவாவது செய்வார்கள், வாயைத் திறந்தீர்களோ, நீங்கள் முட்டாள் என்பது தெரிந்து விடும்" :rolleyes:

கோவிக்காதீர்கள் விசுகர், உங்கள் மேல் இந்த விஷயத்தில் நான் மிகவும் கடுப்பில் இருக்கிறேன்!

இதுதான் விசுகு அண்ணா குறிப்பிட்ட கருத்து...

ஆணோ

பெண்ணோ

ஒரு நிலைக்குப்பின் உடன்பட்டுவிடுகிறார்கள் என்பது தான்  உண்மை.

இதில் ஆண்கள் விரைவில் உடன்பட்டுவிடுகிறார்கள்.

இல்லாது விட்டால்

ஒரு உருப்படி இல்லாத ஆணை  என்ன  செய்யமுடியும்???

அவர் சொன்னதில் என்ன முட்டாள் தனம் உள்ளது என்று விளக்குவீர்களா ஜஸ்ரின் அண்ணா. உயிரியல் ரீதியாக உடற்கூற்றியல் ரீதியாக உளவியல் ரீதியாக இந்த விடயத்தை அணுகும் வல்லமை விசுகு அண்ணாவிடம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் சமூகத்தில் அறிந்ததை வைத்து.. ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார். அதில் தவறிருந்தால் அதனை சரியான வழிமுறையில் விளங்கப்படுத்தனும். அதை விடுத்து.. மூடிக் கொண்டிரு.. என்பது போன்ற பழைய தத்துவங்கள் இக்காலத்திற்கு உகந்ததல்ல..! லிங்கன் காலம்.. மிகப் பழையது. இன்றைய காலம்.. தெரியாதை தெரிந்து கொள்ள பல மார்க்கங்கள் உள்ளன. அந்த வகையில்... அவரின் தவறை ஒரு முறை விளக்கிக் கூறினால்.. தான் நீங்கள் சொல்வதில் நியாயமா தவறா உள்ளது என்பதை தீர்மானிக்க முடியும். சொல்லாமல் மூடிக்கொண்டிரு என்பதில் அர்த்தமில்லை.

பாலியல் என்பது அறிவியலால் முற்று முழுதாக விளங்கிக் கொள்ளப்பட்ட ஒரு பகுதி அல்ல. இன்னும் நிறைய விடயங்கள் அங்கு புதிராகவே உள்ளன. பல ஆய்வுகளும் நடத்தப்படுகின்ற ஒரு பகுதி.

இவற்றை எல்லாம் கருத்தில் எடுக்காது ஒரு கருத்தாளனை மட்டம் தட்டுறது ஒரு ஆரோக்கியமான கருத்தாடல் அல்ல.

இங்கு யாருமே அதற்கான சரியான விளக்கத்தை அறிவியல் சார்ந்து முன்வைக்கவில்லை. வைத்திருப்பதாகவும் தெரியவில்லை..! ஆனால் ஆளையாள் விசுகு அண்ணா மீது பாய்வதில் குறியாக இருப்பதன் வாயிலாக இந்தக் கருத்தாடல் வேறோரு தளத்திற்குள் இழுக்கப்படுகுதோ என்ற எண்ணமே மேலிடுகிறது..!

இங்கு சிலர்.. பாலியல் வல்லுறவின் போது.. பெண்களுக்குத்தான் வலிக்கும்.. ஆண்களுக்கு வலிக்காது என்ற கணக்கில் எழுதி வருகிறார்கள். புணர்ச்சி என்பதை ஆணின் உறுப்பை பெண்ணின் உறுப்புக்குள் திணிப்பது என்கின்றனர். எமது முதல் கருத்தில் சொல்லி இருக்கிறோம்.. புணர்ச்சி என்பது பல வகைகளுள் அடங்கும். பெண் கூட ஆணினதை தனக்குள் திணிக்கும் புணர்ச்சிகளும் நடக்கின்றன..!

பாலியல் வல்லுறவின் போதும்.. கூட.. சரியான stimulation இருந்தால்.. பெண்ணிறுப்பு ஆணுறைப்பை உள்வாங்கும் தகுதியைப் பெறும். உளவியலைத் தாண்டி நரம்புகளின் stimulation மூலம் இது சாத்தியமாகும்..! நான் நினைக்கிறேன் விசுகு அண்ணா சமூகத்தில் தான் அறிந்ததை வைச்சு இதையே குறிப்பிட்டிருக்கிறார் என்று. :icon_idea:

When women’s nipples are stimulated the sensation travels to the same part of the brain as when their genitals are aroused, a study has found.

Brain scans of women who made themselves aroused showed that the nipples hit the same spot as the vagina and clitoris.

Edited by nedukkalapoovan

நீங்கள் குறிப்பிடும் "அறிவூட்டல் முயற்சியை" விசுகு கருத்துப் பதிவு செய்து ஐந்து நிமிடங்களுக்குள்ளாகவே நான் செய்து விட்டேன். இது களத்தில் இல்லாமல் திண்ணையில் நடந்தது. மேலும் கிருபன், நிழலி, குளம்ஸ் எல்லாரும் அறிவூட்டத் தான் முயற்சி செய்கிறார்கள். விசுகு என் நண்பர்.  இதனால் தான் முழு உரிமையோடு விசுகின் முட்டாள் தனமான கருத்துகளைச் சாடுகிறேன். மேலும் இது போன்ற விடயங்களை டெய்லி மெயிலிலும் கின்சி ரிப்போர்ட்டிலும் பார்த்தல்ல அறிந்து கொள்வது. காதலித்து, கலியாணம் கட்டி ஒரு பிள்ளையைப் பெத்த என் போன்றவர்களுக்கு இது தெரியும். உங்களுக்கு புத்தகம் படித்து அனுபவத்தை விட அதிகம் தெரியும் என்று நீங்கள் வந்து நீளமாக எழுதினாலும் இது தான் உண்மை. இதற்கு மேல் உங்கள் விருப்பம்!

  • கருத்துக்கள உறவுகள்

 மேலும் இது போன்ற விடயங்களை டெய்லி மெயிலிலும் கின்சி ரிப்போர்ட்டிலும் பார்த்தல்ல அறிந்து கொள்வது. காதலித்து, கலியாணம் கட்டி ஒரு பிள்ளையைப் பெத்த என் போன்றவர்களுக்கு இது தெரியும். உங்களுக்கு புத்தகம் படித்து அனுபவத்தை விட அதிகம் தெரியும் என்று நீங்கள் வந்து நீளமாக எழுதினாலும் இது தான் உண்மை. இதற்கு மேல் உங்கள் விருப்பம்!

இது மிக மோசமான கருத்தியல் நிலைப்பாடு. பிள்ளை பெற்றுக் கொள்பவள் எல்லாம் மருத்துவிச்சிக்குரிய தகுதியோடு இருக்கிறாள் என்பது போல் உள்ளது உங்கள் கருத்து.. அவளே அவளுக்குரிய மருத்துவ வேலையைப் பார்ப்பாள் என்பது போல் உள்ளது.

அனுபவத்திற்கும் ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டாகனும். டெயிலி மிரர்.. தருவது.. சும்மா செய்தியை அல்ல. ஆய்வுக்கட்டுரையை. அந்த வகையில்.. அதனை உள்வாங்கிச் செல்ல வேண்டியதும் அவசியம்..!  உங்கள் அனுபவப் பகிர்வை விட ரெலி மிரரின் ஆய்வுக்கட்டுரை கூடிய கனதி நம்பகத்தன்மை.. உடையது.

அனுபவம் என்ற பெயரில் உளறி வைப்பதை எல்லாம் எவரும் அறிவியல் என்று கொள்வது கிடையாது. இது உங்களுக்கும் நன்கே தெரிந்திருக்கும். இங்கு விசுகு அண்ணாவின் கருத்து  மீது விவாதம் நடக்கவும் அதுதான் காரணம்.

விசுகு அண்ணா உங்களின் நண்பராக இருந்தாலும்.. அவரின் நிலைப்பாட்டை அவர் விட்டுவிலகல்ல என்பது.. நீங்கள் அவர் விளங்கத்தக்க.. திருப்திப்படத்தக்க.. போதிய காரணங்களை சமர்ப்பிக்கல்ல என்பது தானே அர்த்தம்..! இதில் வாயைத் திறந்தால் முட்டாள் என்று பயங்காட்டுவது ஏன். அதனை சரியான விளக்கங்களின் ஊடு தீர்ப்பது தானே கருத்துக்களத்துக்கு நல்லது. படித்து மற்றவர்களும் விளங்கிக் கொள்வார்கள்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம், இங்க மருத்துவிச்சி வேலை பற்றித் தானே கதைச்சுக் கொண்டிருக்கிறம்? அதால உங்கட விளக்கம் பொருத்தமானது தான்! நிப்பிளையும் யோனியையும் தூண்டினால் ஒக்சிரோசின் சுரக்கும் என்பது இருபது வருடம் முன்பாகவே தெரிந்த விடயம், இதில புதிதாக செய்கிற ஆய்வுக்கும் விசுகின் "யோனி விரியாமல் வல்லுறவு எப்படிச் செய்ய முடியும்? அதனால் பெண்ணும் வல்லுறவுக்கு ஒத்துழைக்கிறார் " என்ற வாதத்திற்கும் நீங்கள் முடிச்சுப் போடுவது நல்ல "அறிவியல்". இப்படியே போனால் நீங்க "நல்லா வருவீங்க" தம்பி. உங்களுக்குப் பதில் எழுதி நான் தான் நேரத்தை வீணாக்குறன். நான் போயிற்று வாறன். நீங்கள் விவாதத்தில் வென்றீர்கள்! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

லிங்கனுக்கும் பாலியல் பலாத்காரத்திற்கும் லிங்கு போட்டதை விடவா..???!

உங்களுக்கே தெரியும்.. பெண்ணின் உடல் பாகங்களை தூண்டுவதன் மூலம்.. அவர்களை உறவுக்குத் தயார்படுத்த முடியும் என்று. பாலியல் வல்லுறவின் போதும்.. அதே தந்திரங்களை பாவிக்கலாம். நிப்பிள்.. எங்கோ.. சந்திர மண்டலத்திலா உள்ளது. பாலியல் வல்லுறவின் போது நிப்பிளை தூண்டியும் கூட.... பெண்ணை பாலியல் உறவுக்கு தயார்படுத்தலுக்கு தயார் செய்ய முடியலாம்.. என்பதற்காகவே அந்தக் கட்டுரையை இணைத்திருந்தேன். விசுகு அண்ணாவும் இதனை தான் அங்கு குறிப்பிட்டுள்ளார். பாலியல் வல்லுறவு செய்யுறவைக்கு அது முடியாது என்பது போல இருக்கு உங்கட வாதம். ஆண்களிலும் இந்த நிலைத் தூண்டல் உள்ளது..என்று குறித்த ஆய்வு மேலும் சொல்கிறது.

சும்மா வேலை மிணக்கட்டு.. தான் உந்த 20 வருசக் கண்டுபிடிப்பை மீளச் செய்தவையாக்கும்..????! :lol::D

ஒரு அறிவியலாளனாக இருந்தும்.. நீங்கள் சந்தர்ப்பவசமாக மிக மோசமாகக் கருத்தாட வேண்டிய நிலையையே இங்கு காண்கிறேன். பரிதாபமாக உள்ளது உங்கள் நிலை..! :D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம், இங்க மருத்துவிச்சி வேலை பற்றித் தானே கதைச்சுக் கொண்டிருக்கிறம்? அதால உங்கட விளக்கம் பொருத்தமானது தான்! நிப்பிளையும் யோனியையும் தூண்டினால் ஒக்சிரோசின் சுரக்கும் என்பது இருபது வருடம் முன்பாகவே தெரிந்த விடயம், இதில புதிதாக செய்கிற ஆய்வுக்கும் விசுகின் "யோனி விரியாமல் வல்லுறவு எப்படிச் செய்ய முடியும்? அதனால் பெண்ணும் வல்லுறவுக்கு ஒத்துழைக்கிறார் " என்ற வாதத்திற்கும் நீங்கள் முடிச்சுப் போடுவது நல்ல "அறிவியல்". இப்படியே போனால் நீங்க "நல்லா வருவீங்க" தம்பி. உங்களுக்குப் பதில் எழுதி நான் தான் நேரத்தை வீணாக்குறன். நான் போயிற்று வாறன். நீங்கள் விவாதத்தில் வென்றீர்கள்! :rolleyes:

ஜஸ்டின் இப்படி திடீரென்று விலகிச் செல்வது ஏற்புடையதன்று.. இதை மக்கள் மன்றம் நிராகரிக்கிறது. :D

ஜஸ்டின் இப்படி திடீரென்று விலகிச் செல்வது ஏற்புடையதன்று.. இதை மக்கள் மன்றம் நிராகரிக்கிறது. :D

கோதாரி ஒண்டுக்கும் உதவாத இந்த விவாதத்தில் இப்படி இப்படி எல்லாம் கோபப்பட்டு  மனஸ்தாபப்படலாமா உது முறையோ ,தகுமோ ......... :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இங்கு நான் கருத்தெழுதவிரும்பவில்லை. ஆனாலும்.....

விசுகு அண்ணாவின் கருத்தில் எனக்கு ஒருபோதும் உடன்பாடில்லை. இந்தத் திரியில் பலரை இனம் காணக்கூடியதாக இருந்தது. பலர் செஞ்சோற்றுக் கடன் தீர்த்திருக்கிறார்கள். கருத்து என்னவென்று பார்க்காமல் ஒரு தனிநபரைக் காப்பாற்றுவது மட்டுமே அவர்கள் நோக்கம். இதனால் பலரின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருக்கிறது.

ஜீவா நேரடியாகவே பெயரைச் சொல்லி எழுதியிருக்கலாம்.

ஒருவர் தவறாக கருத்து வைப்பதும் பின்னர் அந்தக் கருத்தினை பின்வாங்கிக்கொள்வதும் கருத்துக் களங்களில் சர்வசாதாரணம். தொடர்ச்சியாக இந்தக் கருத்தை ஆதரித்து எழுதுபவர்கள் கருத்தை வைத்தவர் அதைத்திருத்திக் கொள்ள முடியாதவாறு போலி நம்பிக்கைகளை கொடுத்துவருகின்றனர். இதனால் கருத்தாளராகிய விசுகு அண்ணா மேலும் மேலும் அவமானப்பட வாய்ப்பு உள்ளதே தவிர மதிப்பு உயராது.

சொல்லவேண்டும் போல இருந்திச்சு சொல்லீட்டன்.

Edited by யாழ்வாலி

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும்.. பொத்தாம் பொதுவாக எழுதிச் செல்வது தான் பிரச்சனையே. இங்கு ஆதாரங்களோடும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இல்லை அது அப்படி இல்லை என்று சொல்பவர்கள் அதற்குரிய ஆதாரங்களை கொணர்ந்திருந்தால்.. இந்தத் தலைப்பு இந்தளவுக்கு விசுகு அண்ணாவை மையப்படுத்தி நீண்டிருக்காது.. என்பதே நிஜம்..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா உங்களின் நண்பராக இருந்தாலும்.. அவரின் நிலைப்பாட்டை அவர் விட்டுவிலகல்ல என்பது.. நீங்கள் அவர் விளங்கத்தக்க.. திருப்திப்படத்தக்க.. போதிய காரணங்களை சமர்ப்பிக்கல்ல என்பது தானே அர்த்தம்..! இதில் வாயைத் திறந்தால் முட்டாள் என்று பயங்காட்டுவது ஏன். அதனை சரியான விளக்கங்களின் ஊடு தீர்ப்பது தானே கருத்துக்களத்துக்கு நல்லது. படித்து மற்றவர்களும் விளங்கிக் கொள்வார்கள்..! :) :icon_idea:

பேசாப்பொருள் பகுதியில் தான் இதனை  பேச நான் துணிந்தேன்.

எனது சந்தேகத்துக்கு

நான் வைத்த கேள்விக்கு எவருமே பதில் தரவில்லை.

நண்பர்  Justin திண்ணையில் சுட்டிக்காட்டியபோதும் அவரிடம் இதைத்தெளிவு படுத்துங்கள்  உடனடியாக  மன்னிப்புக்கேட்கின்றேன் என எழுதினேன்.

ஆனால் தன்னால் அது முடியாது என அவர் பதிலளித்திருந்தார்.

எப்பொழுது

எவரும் எமது கேள்விக்கு பதில் தரவில்லையோ

அவர்களுக்கும் அது பற்றி  தெரியாது என்ற முடிவுக்கே நாம் வரலாம்.

.

எனது இந்தக்கேள்வி  மூலம்

உலகெல்லாம்  பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட  பெண்களுக்கு

அபகீர்த்தி  ஏற்படுத்தப்பட்டுள்ளது என உறவுகள் சுட்டிக்காட்டி நிற்பதால்

உங்களிடமும்  அந்த உறவுகளிடமும் மன்னிப்புக்கேட்டுக்கொள்கின்றேன்.

ஆனால் ஒருபோதும் 

அவர்களை  வைத்து இந்தக்கேள்வியை  இங்கு நான் எழுப்பவில்லை

ஒரு சில மாதங்களின் முன்பு....

இங்கு... ஒரு தலைப்பில்,

ஒரு ஆபிரிக்க நாட்டு (கென்யாவாக இருக்கலாம்) இராணுவ வீரனை கடத்திச் சென்ற இரண்டு அழகிகள் மூன்று நாட்களாக... தொடர்ந்து, வன்புணர்வு செய்து விட்டு... அவனை தமது காரில் கொண்டு போய்.. நடுக்காட்டில் தள்ளிவிட்டு... தலையில் பெரிய்ய.... பாறாங்கல்லையும் போட்டு விட்டு, தப்பிலி ஓடி விட்டார்கள் என்று செய்தி வந்ததை.... நீங்கள் அறிந்து, இருந்தால்.... இப்பிடி எல்லாம், சொல்ல மாட்டீர்கள்.

யோவ் பார்த்து எழுதுங்கையா. என்னைத்தான் கடத்திக் கொண்டு போனதா சனம் நினைக்கப் போகுது. :D

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் பார்த்து எழுதுங்கையா. என்னைத்தான் கடத்திக் கொண்டு போனதா சனம் நினைக்கப் போகுது. :D

கல்லையும் தலையில் போடவில்லை!

காலில் தான் போட்டார்கள்! :o

  • கருத்துக்கள உறவுகள்
எனது இந்தக்கேள்வி  மூலம்

உலகெல்லாம்  பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட  பெண்களுக்கு

அபகீர்த்தி  ஏற்படுத்தப்பட்டுள்ளது என உறவுகள் சுட்டிக்காட்டி நிற்பதால்

உங்களிடமும்  அந்த உறவுகளிடமும் மன்னிப்புக்கேட்டுக்கொள்கின்றேன்.

ஆனால் ஒருபோதும் 

அவர்களை  வைத்து இந்தக்கேள்வியை  இங்கு நான் எழுப்பவில்லை

உங்கள் கேள்வி உங்களின் சந்தேகம். ஆனால்.. இந்த வாக்கெடுப்புக் கொத்தில்..

இப்படி ஒரு பதில் இருக்குதே..

பாலியல் உறவு கிடைத்து என்று சந்தோஷ படாமல் அதை பற்றி குறை சொல்லுகிறாய்

இதனால் பெண்களால்... பாலியல் வன்முறைக்கு இலக்கான ஆண்களுக்கு அபகீர்த்தின்னு எவரும் சுட்டிக்காட்டல்ல. அப்புறம்.. உங்கள் கேள்வி மட்டும்.. பெண்களுக்கு அபகீர்த்தியா அமைஞ்சிட்டுதாமோ..?????! என்பதுதான் எங்கள் வினவல்..!

ஆணோ பெண்ணோ.. விரும்பாத இடத்தில்.. விரும்பாத உறவில்... உடல் எவ்வாறோ ஒத்துழைத்தாலும்.. ஒத்துழைக்க வைக்கப்பட்டாலும்.. உளம் ஒத்துழைக்காமல் உறவு கொள்ள வேண்டிய நிலை வந்தால்.. அது வன்புணர்வு தான்.

அந்த வகையில்.. மேற்படி கேள்விக் கொத்தில்.. அதாவது வாக்கெடுப்பில்.. மேற்படி பதில் கூட பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானவர்களை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் விடயமே. அதனை உணராத இடத்தில் உணர வைக்க வேண்டியதும்.. பெண்களுக்கு பாதிப்பு என்றால் தூக்கிப் பிடிக்க இருக்கின்ற எம்மவர்கள்.. அதே ஆண்களுக்கு பாதிப்பு என்றால்.. காலில் போட்டு எவ்வாறும் மிதிக்கலாம் என்ற அடிப்படை மனித உணர்வற்றுச் சிந்திக்கின்ற போக்கை இங்கு காண்கின்ற போது.. உங்களின் கேள்வி பெண்களுக்கு பெரிய அபகீர்த்தின்னு சொல்ல முடியாது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நமது கண்ணோட்டங்கள் சரியாக இருந்தாலும் மற்றவர்களின் கருத்துக்களை மதிக்க ற்று கொள்ள வேண்டும். (நாங்கள் எங்களின் கருத்தை எப்படி மதிக்கவேண்டும் என்று எதிர் பார்க்கிறோமோ). ஒருவரின் கருத்துக்களை வைத்து, அவரை  கீழ்த்தரமாக நோக்கினால், அவர் தன்னுடைய நிலையை defend பண்ண வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். மேலும்  நமது கண்ணோட்டங்களை சிந்திப்பதற்கு பற்‌றி சாத்தியம் இல்லாமல் போய்விடுகிறது. நமது கண்ணோட்டங்களை பற்‌றி சிந்திக்கவிடாமல் கீழ்த்தரமாக  கிண்டல் அடிப்பது  கொடுமைப்படுத்துதலின் ஒரு வடிவம். ஆக, பொதுவாக  எப்போதும் சரியான கருத்தாக இருந்தாலும் ஒருவரை கொடுமை படுத்தல் மூலம் ஏற்று கொள்ள வைப்பது கடினம் :( 

இது எனது பொதுவான கருத்து.என் கண்ணோட்டம் பிழை என்றால் மன்னிக்கவும்sad-puppy-smiley-emoticon.gif

நல்ல கருத்துத் தான் ஆனால் இதே கருத்தை நீங்கள் யாருக்காக இப்ப எழுதிறீங்களோ அவர் மற்றவர்களை நோக்கி அதாவது உங்கள் பார்வையில் கீழ்த்தரமாக நடக்கும் போதும் எழுதி இருக்கலாம் :(

உண்மையில் இங்கு நான் கருத்தெழுதவிரும்பவில்லை. ஆனாலும்.....

விசுகு அண்ணாவின் கருத்தில் எனக்கு ஒருபோதும் உடன்பாடில்லை. இந்தத் திரியில் பலரை இனம் காணக்கூடியதாக இருந்தது. பலர் செஞ்சோற்றுக் கடன் தீர்த்திருக்கிறார்கள். கருத்து என்னவென்று பார்க்காமல் ஒரு தனிநபரைக் காப்பாற்றுவது மட்டுமே அவர்கள் நோக்கம். இதனால் பலரின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருக்கிறது.

ஜீவா நேரடியாகவே பெயரைச் சொல்லி எழுதியிருக்கலாம்.

ஒருவர் தவறாக கருத்து வைப்பதும் பின்னர் அந்தக் கருத்தினை பின்வாங்கிக்கொள்வதும் கருத்துக் களங்களில் சர்வசாதாரணம். தொடர்ச்சியாக இந்தக் கருத்தை ஆதரித்து எழுதுபவர்கள் கருத்தை வைத்தவர் அதைத்திருத்திக் கொள்ள முடியாதவாறு போலி நம்பிக்கைகளை கொடுத்துவருகின்றனர். இதனால் கருத்தாளராகிய விசுகு அண்ணா மேலும் மேலும் அவமானப்பட வாய்ப்பு உள்ளதே தவிர மதிப்பு உயராது.

சொல்லவேண்டும் போல இருந்திச்சு சொல்லீட்டன்.

நல்ல கருத்து காவாலி பச்சை முடிந்து விட்டது

பேசாப்பொருள் பகுதியில் தான் இதனை  பேச நான் துணிந்தேன்.

எனது சந்தேகத்துக்கு

நான் வைத்த கேள்விக்கு எவருமே பதில் தரவில்லை.

நண்பர்  Justin திண்ணையில் சுட்டிக்காட்டியபோதும் அவரிடம் இதைத்தெளிவு படுத்துங்கள்  உடனடியாக  மன்னிப்புக்கேட்கின்றேன் என எழுதினேன்.

ஆனால் தன்னால் அது முடியாது என அவர் பதிலளித்திருந்தார்.

எப்பொழுது

எவரும் எமது கேள்விக்கு பதில் தரவில்லையோ

அவர்களுக்கும் அது பற்றி  தெரியாது என்ற முடிவுக்கே நாம் வரலாம்.

.

எனது இந்தக்கேள்வி  மூலம்

உலகெல்லாம்  பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட  பெண்களுக்கு

அபகீர்த்தி  ஏற்படுத்தப்பட்டுள்ளது என உறவுகள் சுட்டிக்காட்டி நிற்பதால்

உங்களிடமும்  அந்த உறவுகளிடமும் மன்னிப்புக்கேட்டுக்கொள்கின்றேன்.

ஆனால் ஒருபோதும் 

அவர்களை  வைத்து இந்தக்கேள்வியை  இங்கு நான் எழுப்பவில்லை

நன்றீ விசுகண்ணா :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.