Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சிங்கள மக்களுக்கே பிரச்சினை தமிழர்களுக்கு முழுச் சுதந்திரம்"; உதயன் பத்திரிகையிடம் முத்தையா முரளிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரின்போதும் அதன் பின்னரும் இலங்கையின் எப்பாகத்திலும் தமிழர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நிலை இருந்து வருகிறது. ஆனால் சிங்கள மக்கள்தான் அன்றும் இன்றும் சுதந்திரமாக வாழ முடியாதுள்ளனர் என்று கூறியுள்ளார் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். 

 
இங்கே எந்த மக்க ளின் மனித உரிமை கள் மீறப்பட்டுள்ளன? பிரச்சினை யாருக்கு இருக்கிறது? மனித உரிமைகளைப் பற்றிப் பேச வேண்டியவர்கள் யார்? என்று நேற்றுப் பல கேள்விகளைத் தொடுத்தார் அவர்.
 
"போரில் இராணுவத்தினரும் உயிரிழந்தனர். இவர்களின் உயிரிழப்புக்குப் பொறுப்புக் கூறுவது யார்? தமிழருக்கு ஒரு நியாயம் சிங்களவர் களுக்கு ஒரு நியாயமா?'' என்றும் அவர் கேள்விகளை எழுப்பினார்.
 
"நடந்தது நடந்து முடிந்துவிட்டது. இனி நடக்க வேண்டியவற்றைப் பார்ப்போம். அதைவிடுத்து ஒருவர்மீது ஒருவர் குற்றஞ்சுமத்துவதில் பயனில்லை. இலங்கை தொடர்பில் சர்வ தேச நாடுகள், தப்பான அபிப்பிராயத் தைக் கொண்டுள்ளன. இதனை பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனிடமும் நான் எடுத்துரைத்தேன்'' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க இலங்கை வந்திருந்த பிரிட்டன் பிரதமருக்கும் தமக்கும் இடையிலான சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் "உதயனி'டம்  கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
 
போர்க்குற்றங்கள்
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் இரு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மக்கள் மட்டும் பாதிப்படையவில்லை. போரின்போதும் அதன் பின்னரும் நாட்டின் நிலைமைகளில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. 
 
கடந்த மூன்று வருடங்களாக நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர். யுத்தம் பற்றி எனக்கு அதிகமாகத் தெரியாது. அதனால் அது குறித்து நான் பேச விரும்பவில்லை. இருப்பினும், போரில் இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். அப்படியாயின் அவர் களது உயிருக்கு யார் பொறுப்பு கூற வேண்டியவர்கள்?
 
யாருக்கு மனித உரிமை பிரச்சினை?
இலங்கையில், எந்தத் தமிழரும் எங்கும் சுதந்திரமாக வாழலாம் என்பதை இலங்கையின் சாராசரி குடிமகன் - தமிழன் - இலங்கையன் என்ற வகையில் நான் கூறிக் கொள்கின்றேன். போரின்போது தமிழர்கள் வடக்கிலும் வாழ்ந்தனர். 
 
கொழும்பு உள்ளிட்ட தெற்கிலும் சுதந்திரமாக வாழ்ந்தனர். வாழும் உரிமை இருந்தது. ஆனால் சிங்கள மக்களுக்கு போரின்போதும் வடக்கிற்குச் செல்ல முடியாத நிலை இருந்தது. அங்கு சென்று வாழ்ந்திருந்தால் சிங்கள மக்கள் உயிருடன் இருந்திக்க முடியாது.
 
ஆனால் போர் முடிவடைந்துள்ள தற்போதைய சூழ்நிலையிலும், சிங்கள மக்கள் வடக்கில் சென்று வாழ முடியாத நிலை உள்ளது. முல்லைத்தீவில் மட்டும்தான் சிறிதளவு சிங்கள மக்கள் இருக்கின்றனர். 
 
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதியில் சிங்கள மக்களைக் குடியேற்ற வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றது. அப்படியாயின், எந்த மக்களது மனித உரிமைகள் மீறப்படுகின்றன? யாருக்கு அந்தப் பிரச்சினை இருக்கிறது?
 
தப்பான அபிப்பிராயத்தில் சர்வதேசம்
சர்வதேச நாடுகள் இலங்கை தொடர்பில் தப்பான அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளன. இதனை பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனிடம் நான் தெரிவித்தேன். இலங்கை நன்றாக அபிவிருத்தி அடைந்துள்ளது என்று அவர் கூறனார். 
 
அத்துடன், சில விடயங்களில் அரசு அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா முதலான நாடுகள் தங்களது அரசியல் நலன்கருதி இலங்கை தொடர்பில் கருத்து வெளியிடுகின்றன.
 
அரசியல் பேசவில்லை
நான் அரசியல் பேசவில்லை. எனக்கு அரசியல் தேவையும் இல்லை. அதனால் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து நான் கருத்திற்கொள்வதில்லை. வடக்கு மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகளை அரசு செய்கின்றது. என்னால் இயன்ற உதவிகளை நானும் செய்கின்றேன். இன்னும் சிறிது காலத்த்தில் வடக்கு மேலும் அபிவிருத்தி அடைந்துவிடும்'' என்றார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=695892455620287444#sthash.X21LQVUK.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

சுழல் பந்தை தவிர வேறெதுவும் முரளிக்கு தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நீ பந்தை எறிந்த போது எமக்கு தெரியும் நீ எறிகின்றாய் என்று. ஆனால் தமிழ் இரத்தம் என்று பார்த்தோம் நீ பந்தை சுழற்றிய போது எமக்கு தெரியாது சுத்தல் காரன் என்று

Edited by பையன்26

"நடந்தது நடந்து முடிந்துவிட்டது. இனி நடக்க வேண்டியவற்றைப் பார்ப்போம்.

 

That is a no ball!

 

Rules Of Cricket

November 18, 2013 | Filed under: Colombo Telegraph,Opinion | Posted by: COLOMBO_TELEGRAPH

By Mahesan Niranjan -

Prof Mahesan Niranjan

Prof Mahesan Niranjan

The rules of the game

have been refined and updated;

even unknown to our star

cricketer of Mother Lanka.

Forgiveness, the rules define

is begged from the wronged

when full of remorse

and felt from the heart.

When expressed unreserved,

loud and clear by offender,

claiming his guilt

and wanting to move on,

we shall refrain from

calling it a chucker.

 

But think of a man,

surrounded by guns,

evicted from home,

ridden in colourless van,

and hung against gravity.

His bones broken

by boots and batons,

and rifle butts of the bully,

spiced up for pleasure,

with curry powder on willy.

Demand of this man,

“Forgive, or be gone;”

The umpire shall call:

“That is a no ball!”

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை, இந்த நாதாரிக்கு ஆங்கிலமும் ஒழுங்காகத் தெரியாது, டெய்லி மிரர் பேட்டியைப் பார்த்த பிறகு விளங்கியது! இதுக்கு மெனக்கெட்டு ஆங்கிலத்தில் கவிதையா? புரியுமா இதுக்கு? நேர விரயம், மல்லை, நேர விரயம்! சிங்களம் மட்டுமே முரளிக்கு விளங்கும் ஒரே மொழி! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

முத்தையா முரளிதரனை எங்களைவிடவும் அதிதீவிரமான மனநோயாளியாக்கியது யார்?. :blink: உள்ளம் குமுறி வெடிக்கிறார்கள், டக்ளசு, சங்கரி, கருணா, மற்றும்.........இன்னோரன்ன பிறரையும்........ அறிந்தவர்கள் தொடரலாம். :D 

  • கருத்துக்கள உறவுகள்
1459219_717560758255952_999791145_n.jpg

 

மன்னிப்பு கேளுங்கள் உடனே-தமிழகத்திற்குள் நுழைய எண்ணமிருந்தால் ---------------------------------------------------------------------- உங்கள் சுழல்பந்து வீச்சில...் மயங்கி கிடந்த சிறுவர்களில் நானும் ஒருவன் ஒரு காலத்தில்.கடந்த இரு நாட்களாக ஈழத் தமிழர்கள், இனப்படுகொலை குறித்தும்,தற்போது நடந்து வரும் திட்டமிட்ட இன அழிப்பு குறித்து பிரிட்டிஷ் கேமரோனுக்கு அறியச் செய்து நீதி கிடைக்க போராடி வருகின்றனர்.இவ்வேளையில் நீங்கள்,ராஜபக்சே உதவியால் பிரிட்டிஷ் கேமரோனை சந்தித்து, "ஈழத்து தமிழர்கள் வாழ்வு ராஜபக்சே ஆட்சியில் மேம்பட்டுள்ளதாகவும்,தமிழ் மக்கள் போராட்டம் போலியானவை" என வாய் கூசாமல் பொய் கூறி உள்ளாய். இன்னும் எத்தனை கிரிக்கெட் போட்டிகள் ஆடி விட போகிறாய் நீ! ராஜபக்ச ஆட்டும் ஆட்டத்திற்கு எத்தனை நாள் ஆடுவார்கள் இந்த ஈனப் பிறப்புகள்...? தமிழின துரோகப் போக்கை தொடரும் அனைவரையும் நாம் தனிமைப்படுத்துவோம். - தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு
FB
  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள்  என்று தெரியும்

இந்தளவுக்கு .............???

 

 

முகம் தெரியும் காலமிது

ஓலமிட்டு

முகத்தைக்காட்டிய முரளிக்கு நன்றி.

இனி

எப்பொழுதும் தமிழருக்காக நீ  பேசமுடியாது

தமிழராக

நடிக்கக்கூட முடியாது........

 

Edited by விசுகு

தன் மூதாதையர்  மலையகத்தில் படு அவஸ்தை பற்றி மறந்து விட்டார். இன்னும் லய  வாழ்க்கையை விட்டு வெளியே வர முடியாமல்  சிறைக்குள் இருகிறார்கள்.

 

சிங்களவரோடு கூத்து ,தமிழ்நாடு மனைவி. இவர் எப்படி ஈழத்தமிழர்  பற்றி  அரசியல் பேசலாம்.  எல்லாம் எடுபிடிகள். 

நான் நினக்கிறேன் இவர் புத்தகமே படித்ததில்லை போல். வரலாற்றை வாசித்திலையோ.

 

இல்லாட்டி எந்த மொக்கன் சொல்வான் தன் வீடும் எரிந்தது தான் கவலைப்படவில்லை என்று. என்னடா ஒரு சொரனையே இல்லையா.

 

 

யாரோ ஏவி போட்டாங்கள் போல?

சிங்களத்துக்கு மலையாளத்தோட அற்புதமான உறுவு.

  • கருத்துக்கள உறவுகள்

சுழல் பந்தை தவிர வேறெதுவும் முரளிக்கு தெரியாது.

 

அதுவும் அவருக்குத் தெரியாது. கையில் ஏற்பட்ட வளைவு காரணமாக  வந்த அதிஷ்டம் அது. இல்லை முரளி எப்பவோ மலிபன் கொப்பனியோட கிடந்திருப்பார்..! இவரை எல்லாம் தூக்கித் தலையில வைச்சாக்களச் சொல்லனும். யாழ் களத்தில் கூட... இவரை தூக்கி தலையில வைக்கிறப்பவே எதிர்த்தார்கள் பலர்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முரளியைவிட ஆனந்தசங்கரி, டக்லஸ் பரவாயில்லைபோல இருக்கிறது.

முரளிதரன் பொது மன்னிப்புக்கேடக வேண்டும் என்று மனோ கனேசன் கேட்டிருக்கிறார். செல்வம் அடைக்கலநாதன் மன்னிப்பு கேட்காவிட்டால் உறவினரை இழந்த பெண்களை சேர்த்து போர்ராட்டம் நிகழ்த்த வேண்டி வரும் என்று கூறியிருக்கிறார்.  

 

முரளிதரன் மன்னிப்புக்கேட்ப்பாரா?

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் புருசன் பெண்டாட்டி பொத்திக்கொண்டு இருங்கோ என அறிக்கை விட்டவர் முரளிக்கும் ஒரு சூடு வைக்கலாமே முரளி தாக்கி பேசிய 30தாய்மாரின் பகுதி முதல்வர்.........அந்தாள் முதல்வர் காரியாலத்தில் இருந்து பிரேமாணந்தாவிற்க்கு பாத பூஜை செய்யிறார் போல் உள்ளது.

இவர் சாதாரன பிரசை என்று சொன்னதே பொய்! மேலும் இவர் இப்படி பொய் சொன்னால் தான் உயிர் உடமையை மகி்ந்த போன்ற சிங்களவரிடமிருந்து காப்பாறறலாம்,அது அவரிற்கு பழகிவிட்டது போலும்!

முத்தையா சசிதாரணை சிக்கலில் இருந்து வெளியில் கொண்டுவருவதானால் முத்தையா முரளிதரன் தமிழரை நோக்கி சொத்தி பந்து வீசவேண்டும். வீசுகிறார். பெரியவர் மனம் குளிர்ந்து முழு இதனோலையும் இந்த ராசா கொண்டுப்போய்ன் ரசி எங்கு விரைவில் விடுவார். அப்ப இலங்கை கலவை எரிபொருள் இறக்குமதிக்கும் இவருக்கும் தொடர்பா எண்டு அந்த பெரியவருக்கு தான் தெரியும். 
 
செய்ததின் சாராம்சம்:
 
முத்தையா சசிதரன் இங்கைக்குள் இதனோலை இறக்குமதி செய்து உரிய சுங்க வரி கொடுக்காமல் தப்ப முயன்று பிடிப்பட்டுளார். அவருக்கு 15,000,000 அபராதம் விதிக்கப்படுள்ளது. இதை எதிர்த்து பெரியவரின் நீதிமன்றம் போகின்றார். 
 
உலகம் போற போக்கை பாரு யன்னாலுக்குள்ளாளே

 

 

Murali's brother fined Rs. 15m

 
Sri Lanka Customs has fined Rs 33,800,000 for five people who have imported two containers of Ethanol evading custom duties, which was a controversial issue in the country.

Muttiah Sasidharan, Jayalath Peiris, R.D Samarakkodi ( the owner of the company which imported Ethanol), Tarun Sameera Silva ( Company Secretary) , Ramesh Kumarpulle has been thus fined.

First and second suspects have been fined Rs. 15,000,000 while the rest of the suspects were fined Rs. 1,250,000.

The particular containers were seized by the Customs officers on March 8th this year when they were departing from the harbor and discovered that the containers contained 61500 l of Ethanol.

However, the former Sri Lankan spinner Muttiah Muralitharan's brother Muttiah Sasidharan has submitted a motion at the court and paying of his fine has been delayed until the judgement is passed on it.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீரில் எறிந்த முரளீதரனின் அரசியல் சுழற்பந்து!

இலங்கையில் நடந்த போரில் தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக கொன்றதாக குற்றம் சாட்டப்படும் ராஜபக்சவின் சகோதரர்களில் ஒருவரான பசில் ராஜபக்ச காணாமல் போனவர்கள் தொடர்பில் ஒருமுறை குறிப்பிடுகையில் காணாமல் போனவர்கள் காணாமல் போனவர்களே என்று என்றார். ஆனால் இனப்படுகொலை அரசாங்கத்திற்கு தம்மை கடும் விசுவாசிகள் எனக் காட்டிக்கொள்பவர்கள் சிலர் யாரும் காணாமல் போகவில்லை என்று சொல்ல முற்படுவது வேடிக்கையானது.

'முப்பது தாய்மார் தங்களது பிள்ளைகளைக் காணவில்லை என அழுது புலம்பி போராட்டம் நடத்துவதனால் குற்றச்சாட்டுகள் உண்மையாகவிடாது. இந்த மக்களும் பிழையாக வழி நடத்தப்பட்டிருக்கலாம்' காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தியமை தொடர்பில் இலங்கைக் கிரிக்கட் அணியின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சாதாரணமாகச் சொல்லுகிறார். 

இந்தளவுக்கு அதிகாரத்தின் ருசி கண்ணை கட்டி விடுகின்றது என்பது மட்டுமல்ல வடக்கு கிழக்கு மக்களுக்கு எதிராக எந்தளவுக்கு அநீதி செய்கிறார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. உலகத்திற்கே அம்பலமான ஒரு விடயத்தை முத்தையா முரளிதரன் மறுப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

போர்க்குற்றங்களின் தலைவரான மகிந்த ராஜபக்ச போர்க்குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் அவ்வாறு நடந்திருந்தால் தாம் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிப்பார் என்றும் கூறுகிறார். ஆனால் உலக சமூகங்கள் அந்தப் போர்க்குற்றங்களை நிகழ்த்தியவர் என்று ராஜபக்சவையே குறிப்பிடுகின்றன. இலங்கை அரசு போரை எவ்வளவு கொடுமையாக நடத்தியது என்பதும் போரில் எத்தகைய மனித உரிமை மீறல்கள் நடந்தன என்பதும் முழு உலகத்திற்கே வெளிச்சமானது.

அதையெல்லாம் உலகம் அறியாதது போலவும் அல்லது அவை பொய் என்பது போலவும் அல்லது அவற்றை உலக நாடுகள் இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கவே இப்படிச் செய்கின்றன என்பது போலவும் காட்ட முற்படுகிறார்கள். இலங்கைப் போருக்கு மௌனத்தின் மூலம் அனுமதியளித்த உலக நாடுகள் இலங்கையை இன்று நெருக்குவாரத்திற்குள் தள்ளுவது வேறுவிடயம். அதற்காக தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக கொன்றழித்த இலங்கை அரசின் இனப்படுகொலையை மறைக்க இயலாது.

இலங்கை அரச அமைச்சர்கள் சிலர் முள்ளிவாள்க்காலில் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஒத்துக்கொள்ளும்பொழுது தமிழ் அமைச்சர் ஒருவர் முள்ளிவாய்க்காலில் ஒரு பொதுமக்களும் சாகவில்லை என்று சொல்லியிருந்தார். லட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கையில் அவ்வாறான ஒரு பொய்யை சொன்னால் என்ன நடக்கும் என்பதை கடந்த கால தேர்தகளில் பட்டுணர்ந்த அவர் இசைப்பிரியா தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்ற நிலைக்கு இப்பொழுது வந்துவிட்டார். 

இன்றைய நாட்களில் முரளியைப்போல ஆனந்தசங்கரியும் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என்று நற்சான்றிதழ் அளித்துள்ளார். ஒருமுறை கூட்டமைப்பின் கூட்டம் ஒன்று திருகோணமலையில் நடந்தபொழுது அதில் பேசிய ஆனந்தசங்கரி வாய்தடுமாறி பயங்கரவாத்தால் இழந்த அனைத்தையும் ஜனாதிபதியால் மீடடுத்தர இயலுமா என்று கேட்டார். கூட்டமைப்புடன் இணைந்திருக்கும் ஆனந்தசங்கரி கடந்த வட மாகாணசபைத் தேர்தலில் தோல்வியடைந்தவர். படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என்று முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் பொழுது இவர் ஏன் தோல்வியடைந்தார் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. 

இலங்கையில் யாரும் எங்கும்போகலாம் எப்படியும் வழலால் என்று முத்தையா முரளிதரன் சொல்லுகின்றார். அத்துடன் போர்க்காலத்தில் தமிழர்கள் வடக்கிலும் வாழ்ந்தனர் தெற்கிலும் சந்தோசமாக வாழ்ந்தனர் என்று சொல்லுகின்றார். வடக்கில் குண்டுகள் கொட்டப்பட்டு நாளும் பொழுதும் பலர் கொல்லப்பட்டதும் தெற்கில் பலர் கடத்தப்பட்டதும் சுட்டுக்கொல்லப்பட்டதும் முரளி அறியாததா? இன்றைக்கும் எல்லோரும் சந்தோசமாக வாழ்கின்றார்கள் என்று சொல்லுகிறார்.

மாபெரும் படுகொலைக்குப் பின்னர் கொண்;டு வரும் அமைதி என்பது சர்வாதிகாரத்தின் அமைதி. அது மனித உரிமை மீறல்களை மறைக்கும் திட்டமிட்ட அமைதி. இன்றைக்கும் காணாமல் போனவர்களை தேடியலைபவர்களையும் வாழ் நிலத்திற்காகப் போராடுபவர்களையும் அடக்கும் இந்த அமைதியை எப்படி அழைப்பது? இவை எல்லாவற்றையும் மறப்போம் என்பதற்குப் பெயர் மறைப்போல் அல்லவா? மனித குலத்திற்கு விரோதமான இந்த குற்றங்களை மறைப்பது எத்தகைய தவறு? அதுவும் அத்தகைய குற்றங்களுக்கு ஈடானதல்வா?

தான் செய்வது இன்னதென்று அறிந்தே முரளி செய்கின்றார். அவர் வடக்கிற்கு வந்து கிரிக்கெட் பயிற்சிகளை வழங்குகிறார். அவர் அரசியல்வாதி இல்லை. ஆனால் ஒரு அரசியல் திட்டத்தின் அடிப்படையில் செயற்படுகின்றார். இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து எதைச் செய்தும் மறைக்க முடியாத ஒரு சூழலில் அரசியல் கடந்து ரசிக்கப்பட்ட ஒரு விளையாட்டு வீரரை வைத்து அரசியல் செய்து குற்றவாளிகள் தப்பிக் கொள்ள முயல்கின்றார்கள்.

சிலர் தமது புத்தியை பயன்படுத்தி அரசாங்கத்தை காப்பாற்ற பல்வேறு விதமாகப் பேசுவதையும் நடந்த நிகழ்வுகளை மறைப்பதும் புதியவிடயமல்ல. கருணா முதல் அஸ்வர்வரை தொடரந்தும் அரசாங்கத்திற்காகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றும் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஒரு பிரச்சினை இல்லை என்றும் பேசுகிறார்கள். தனது பங்கிற்கு முரளியும் அதனையும் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் புத்தியால் மறைக்கக்கூடிய விடயத்தையோ அல்லது எதுவும் அறியாமல் அணுகக்கூடிய விடயத்தையோ குறித்து அவர் பேசியிருக்கலாம். அரசிற்கு புகழ் பாடியிருக்கலாம். காணாமல் போனவர்களின் கண்ணீரில் சுழற் பந்து வீசி விளையாடுவது எத்தகைய அநீதி?

ஆனால் அந்த நடவடிக்கை படு தோல்வியானது. இனப்படுகொலை செய்ய இலங்கை அரசின் விளையாட்டு அணியில் இருந்தபொழுதும் விளையாட்டில் அரசியல் இல்லை என்பற்காய் ரசிக்கப்பட்டவர் முரளி. தனது சுழற்பந்து வீச்சால் பிரபலமான முரளி தனது அரசியல் சுழல் விளையாட்டால் உலகத் தமிழ் ரசிகர்களை மட்டுமல்ல மனிதநேயமுள்ள எல்லோரது எதிர்ப்புக்கும் இன்று ஆளாகியுள்ளார். ஏனென்றால் காணாமல் போனவர்களின் உறவுகள் சிந்திய கண்ணீரையே கலங்கப்படுத்திய ஒருவரின் வாய்ச்சொற்களை யார் மதிப்பார்? அது மிகப் பெரும் கொடிய செயல் மட்டுல்ல அப்பாசி மக்களுக்கு எதிரான மாபெரும் அநீதியும்கூட. 

முரளி வீசிய இந்த அரசியல் சுழற் பந்து விக்கட்டுக்களை வீழ்த்தாமல் அவரது விளையாட்டு சாதனையை வீழ்த்தி தன் முகத்தில் அறைந்திருக்கிறது.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்

1456722_10151842238708801_1943684103_n.j

 

அரசியல் வேறு விளையாட்டு வேறு, அரசியலுடன் விளையாட்டை சேர்க்க கூடாது என்று கூறியவர்களுக்கு இது சமர்ப்பணம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்திற்கு எதிரான தமிழர்களை பார்த்தோம், பார்த்துக்கொண்டும் இருக்கின்றோம். அவர்கள் எல்லோரையுமே மிஞ்சும்படி, கோத்தபாயாவும் எறியத்தயங்கும் ஒரு பந்தை இந்த முட்டாள் எறிந்துள்ளது தமிழினத்தையே ஆவேசமடையச்செய்து ஆத்திரப்பட வைத்துள்ளது. நாங்கள் எல்லோருமே இவனையும் கண்டிப்பதற்கு மேலும் மேலும் வார்த்தைகளை தேடுகிறோம். தமிழினத்திற்கு எதிரான தமிழர்கள் எப்படித்,தமிழினத்தில் தோற்றம் பெறுகிறார்கள்?. இதனைத் தடுப்பதற்கு முடியுமா? நாடவேண்டிய வழிமுறைகள் என்ன? என்பதுபற்றியும் ஆராய்ந்து செயல்பட முனைவது வரும்காலங்களில் இப்படியான புல்லுருவிகள் தோற்றம்கொள்வதைத் தடுக்க உதவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.