Jump to content

கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!

Recommended Posts

Posted

நீங்கள் இப்போது எந்தப் பக்கம் நிற்கின்றீர்கள். எங்களின் பக்கமா? அவர்கள் பக்கமா? அதை வைத்துத் தான் ஏதும் சொல்ல முடியும்...

அவர் எப்போதும் அவர்கள் பக்கம்தான்.  அதில் எந்த மாற்றமும் இல்லை.  அவரது அறிக்கையிலேயே அது தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.  அவரை நான் ஒரு சகதமிழனாக மட்டுமே பார்க்கிறேன்.

  • Replies 264
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வணக்கம் ஜெயபாலன் அண்ணா,   மீண்டும் சுகமாக திரும்பி வந்ததையிட்டு மிக மகிழ்ச்சி.   எங்கும் கலகக்காரனாக அறியப்பட்ட உங்கள் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. உங்கள் மீதான ஆயிரம் விமர்சனங்களுக்கும்

பகலவன்

அன்புள்ள கவிஞர் ஐயா ஜெயபாலன்,   நீங்கள் கைது செய்யப்பட்ட போது ஒரு கள உறவாக நான் எவ்வளவு வேதனைப்பட்டேனோ அதற்கும் அதிகமாக நீங்கள் விடுதலை செய்யப்பட்டதும் மகிழ்வடைந்தேன்.   ஒரு தமிழனை அதுவும் வெளிநாட்டு

புங்கையூரன்

கவிஞரே, அவசியமில்லாமல் மனிதர்களின் மனங்களைக் காயப்படுத்தக் வேண்டாம்!   நிழலியைப்பற்றிய உங்கள் பதிவு பற்றியே சொல்கின்றேன்!   உங்கள்  'விடுதலைக்கான' முகநூல் போராட்டத்தில் மிகவும் தீவிரமாக நிழலி ஈடுப

Posted

ஒரு உண்மை மட்டும் விளங்குது ஐயா நீங்கள் மீடியா பலம் உள்ள ஆள் என்பதாலும் பிரபலம் என்பதாலும் தப்பி வந்திட்டியள் இதே ஒரு அப்பாவியா எவரும் அறியாதவர் என்றால் அவரின் நிலைமை எப்படி என்று யோசிச்சு பார்க்கிறேன் .

உங்களுக்காக இவ்வளவு பேர் தொடர்பில் இருந்து இருக்கிறார்கள் ஆனால் கண் முன் கைது செய்யபட்ட பலபேர் இன்று இருக்கினமா இல்லையா என்றுகூட இல்லை.

இப்ப வரை நீங்கள் இலங்கை அரசை காப்பற்றும் சொல்லாடல்தான் பாவித்தவண்ணம் உள்ளீர்கள் என்பதுதான் கவலை .

Posted

கவிஞர் ஐயாவை இந்தியாவின் ஒரு அலகாக இலங்கை பார்க்கிறதோ என்கிற சந்தேகம் உள்ளது. இதை கவிஞர்தான் விளக்க வேண்டும்.

ஆடுகளம் திரைப்படத்திற்கு தேசிய விருதை அவர்கள் கொடுத்தபோது நாங்கள் எல்லோரும் திடுக்கிட்டு என்று திரும்பிப் பார்த்தோம். :unsure::D

Posted

விடைபெறுமுன்னம் இறுதிவார்த்தை.

விசாரணையில் என்னிடம் நெடுநேரம் துருவித் துருவிக் கேட்க்கப்பட்டது 

தமிழர்களையும் முஸ்லிம்களையும் இணைத்து வடகிழக்கின் சுதந்திரத்துக்காக போராடும் கருத்தை பிரச்சாரம் செய்திருக்கிறீர் என்பதுதான். அதற்கான வல்லமை உள்ள ஒரே நபர் என்பது அவர்கள் கருத்தாக இருந்தது. அதுவே அவர்கள் அச்சத்துக்கு காரணமாக இருந்தது...

தோழர் சோல்கைமின் அறிக்கை வந்தபின்னர் நான் மேலும் இறுக்கமாகிவிட்டேன்.என்னைவிசாரித்தவர்களின் நிலை இறுக்கம் குறைந்திருந்தது.

அனந்தி என் ஊடக கருத்தரங்குக்கு வந்தது பற்றி கேட்டார்கள்..அநந்தியை நேரில் சந்திக்கவில்லை என்று சொன்னேன்.  நான் புலிகளுக்கு உதவியது பற்றிக் கேட்டார்கள். நான் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் நிகழ்தவைகள் பற்றி பேச மறுத்துவிட்டேன். அனந்தியுடன் தனிப்பட்ட முறையில் பேசவில்லை என்றேன். ஐங்கரநேசனை சந்தித்த தகவல் அவர்களிடம் இருந்தது. மற்றப்படி என்னைச் சந்தித்த நண்பர்கள் யாரின் பெயரையும் வெளியிடவில்லை. 

24 பகல் களுபோவில ஆஸ்பத்திரியில் பொலிசாரின் சதி இடம்பெற்றது..குமர என்கிற  74792 இலக்க  பொலிஸ்காரர் என்னை அச்சுறுத்தியபடி இருந்தார். அவர்  என் தொலைபேசியை சார்ச் பண்ணவிடவில்லை. தொலைபேசியை தாங்கள் சார்ச் பண்ணித் தருவதாக தொலைபேசியை கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன். தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் முதன் முறையாக எச்சரிக்கையானேன்.  நோயாளிகள் சிலரை தூண்டிவிட்டார்கள்.  குடிவரவுத் துறை வந்திராவிட்டால் அந்த இரவு கொல்லப்பட்டுக்கூட இருக்கலாம். குடிவரவுத் துறையினருடனும் அவர் முறுகினார். இதனால் அவருக்கு பலமான பின்னணி இருப்பது தெளிவானது.

குடிவரவுதுறை இங்ஸ்பெக்டர் அமித் பெரரா நிலமையை புரிந்துகொண்டு உடனே என்னை அங்கிருந்து அகற்றியதால் ஆபத்தில் இருந்து தப்பினேன். நான் வெளியேறும்வரை அந்த சம்பவம்பற்றி முறையிடவேண்டாமென்று கேட்டுக்கொண்டேன்.

சிங்கள தோழர்களின் ஆதரவு பிரச்சாரம் மேலோங்கியபோது தியவினவும் ஏனைய சிங்கள ஊடகங்களும் எனக்கெதிராக வகுப்புவாதத்தைக் கக்க ஆரம்பித்தன. இதனால் இறுதி நாட்க்களில் நான் நாட்டை விட்டு உடன் வெளியேறும் அவசியத்தை உணர்ந்து கோபத்தை விட்டுவிட்டு இராசதந்திரத்தோடு செயல்பட்டேன்..

http://www.youtube.com/watch?v=4dOgJclq0Bk&feature=youtu.be

Posted

வடக்கு பகுதி நோக்கிய கருத்துக்கள் வரவேற்க்க தக்கவை. புதியதொரு பார்வை. இதுவரை எந்த ஒரு ஊடகமும் வெளிக்கொண்டு வராத விடயங்கள். நன்றி ஆனாலும் சுய விளம்பரத்துக்காக இலங்கை இராணுவம் நல்லவர்கள் என்று காண்பிக்கும் போக்கு தவறு. அதுவும் குற்ற புலனாய்வு பிரிவு என்பது இலங்கயிலேயே கொடுமையானது...அவர்களை கண்ணியமானவர்கள் என்னும் தொனி தவறு...

இன்னுமா உலகம் நம்புது..... இலங்கையில பிடிச்சால் கத்தி சண்டை போடலாம் எண்டு இப்பதான் தெரியும்.... முடியல...... ஆடுகளம் படத்தில பார்த்தப்பவே புரிஞ்சிடுத்து நடிப்பு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரி அவ்வளவு தானே. வந்ததில் சந்தோசம். இதில் எனிக் கதைப்பதற்கு ஒன்றுமில்லை என நினைக்கின்றேன். தலைப்பினை நிர்வாகம் மூடிவிடலாம்..

Posted

நான் யாழ்குடும்ப உறுப்பினர்களின் கருத்துக்களை வரவேற்கிறேன். அதற்க்கான உரிமை என்க்கு உள்ளது. தூயவன் சொல்வதுபோல

தலைப்பை மூடிவிடவேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோழரை கண்டது சந்தோஷம்.... விரிவாக எழுதுவோம் வங்கோ 2 கிழமை கழித்து. நல்லிணக்கம் பேசி நலிவுற்று உள்ளீர்கள் ஓய்வு எடுத்து வாங்கோ உங்களின் அண்மைய நல்லிணக்கம் பற்றிய அறிக்கை பற்றி விவாதிக்கனும். ஆனால் இங்க கத்தியெல்லாம் கதைக்க கூடாது.

ஒன்றை மட்டும் கவனியுங்கோ அடிபட்டும் கவிஞர் திருந்தலை அதுதான் எனக்கு கவலையாக் கிடக்குது..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாங்கள் எதிர்பார்த்ததில்  ஒருசத வீதம் கூட  உங்கள் அறிக்கையில் இல்லை .எல்லாம் அந்தப்பக்க வழிந்தோடலாகவே இருக்கு :(  :icon_idea:  

Posted

கவிஞர் நினைத்தது நடந்ததுவிட்டது .

இது எல்லோராலும் முடியாது .

Posted

சக கள உறவாக ஐயாவை.. மீண்டும் களத்தில் காண்பதில் மகிழ்ச்சி.

Posted

நான் எழுத வேன்டிய பலவற்றை எழுத நாளாகும். என்னை சந்தித்த எனக்காக பாடுபட்ட பலரின் பாதுகாப்பு பற்றி முதலில் உறுதி செய்யவேன்டியுள்ளது. அதற்க்கு எனக்கு 2 வாரமாவது வேன்டும். அதன்பின்னர் என்னுடைய 2ம் அறிக்கையை எழுதுவேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Jeyabalan%20vasuki_CI.jpg

Posted

வணக்கம் ஜெயபாலன் அண்ணா,

மீண்டும் சுகமாக திரும்பி வந்ததையிட்டு மிக மகிழ்ச்சி.

எங்கும் கலகக்காரனாக அறியப்பட்ட உங்கள் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. உங்கள் மீதான ஆயிரம் விமர்சனங்களுக்கும் அப்பால் உங்கள் கவிதைகள் எப்படி என்றுமே இனிமையாக இருக்கின்றதோ அதே போன்றே உங்கள் விடுதலையும் இனிமையான ஒரு விடயமாகவே எனக்கு என்றும் இருக்கும்.

ஆயினும் வந்து சேர்ந்த சோர்வு ஆறும் முன் நீங்கள் வெளியிட்ட முதல் அறிக்கையில் இருக்கும்  உங்கள் அரசியல், அடக்கு முறைகளை - அது புலிகளின் அடக்கு முறைகளாக இருந்தாலும் சரி, இலங்கை பேரினவாதத்தின் அடக்கு முறையாக இருந்தாலும் சரி எதிர்க்கும் எவருக்கும் - உங்கள் அரசியலை ஆழமாக உணர்ந்தவர்களுக்கு அது பெரிய அதிர்ச்சியைக் கொடுக்காவிடினும்  கூட - சிறிய அதிர்ச்சியையேனும் தரக்கூடிய ஒரு அறிக்கையாகவே பார்க்கப்படும் / பார்க்கப்படுகின்றது.

உங்கள் கைதின் மூலம் சிங்கள அரசு தெளிவான பல செய்திகளை உலகுக்கு உணர்த்தி இருக்கின்றது.  அவற்றில் முக்கியமானவை, புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து, அந்தந்த நாடுகளின் குடியுரிமை பெற்ற தமிழராகவோ அல்லது சிங்கள பேரினவாதத்தினை கேள்வி கேட்பவராகவோ இருந்தால் அவர்களை தாம் நினைச்ச மாதிரி கடத்தவும், கைது செய்யவும், காணாமல் போக்கவும் முடியும் என்பதும்,  அவ்வாறு அரசியல் / இலக்கியம் செய்ய வரும் எவரும் தம் நிகழ்ச்சி நிரலை ஏற்றுக் கொண்டவராக மட்டும் இருக்க வேண்டும் என்பதுவும், இவற்றினை எல்லாவற்றையும் விட  அங்கு முதலீடு செய்ய முனையும் தமிழர்களின் இருப்பையும் ஒரு நிமிடத்தில் இல்லாமலாக்க முடியும் என்பனவும் ஆகும்.

ஆனால் பலரால் உணரப்பட்ட இந்த செய்திகளின் எந்தவொரு சாராம்சத்தினையும் உங்கள் முதல் அறிக்கை கொண்டு இருக்கவில்லை. அத்துடன், இன்று இலங்கை அரசு பற்றிய  சரியான பிம்பம் உலகெங்கும் உறுதியாக உணரப்பட்டுக் கொண்டு இருக்கும் போது, உங்கள் கைது பற்றியும் அதன் பின் விடுதலை செய்யப்படும் வரைக்கும் நடந்த விடயங்கள்  என நீங்கள் வெளியே வந்து சுதந்திரமாக வெளியிட்ட இந்த அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கும் விடயங்களும் அந்த பிம்பத்தினை வெகு சாமர்த்தியமாக உடைக்கும் காரியமாகவே படுகின்றது.

உங்களை கைது செய்த TID பிரிவினரில் இருந்து, பசீர் சேகுதாவுத்தின் சொல்லைக் கேட்டு விடுதலை செய்யச் சொன்ன அச்சாப் பிள்ளை கோத்தா வரைக்கும் சிங்கள் மேலாதிக்கம் ஒரு நெகிழ்வான தன்மையைக் காட்டி இருக்கு என்று காட்டி விட்டு அந்த மேலாதிக்கத்தின் எதேச்சாதிகாரத்துக்கு ஒற்றைப் பிரதிநிதியாக ஒரு சிங்கள பொலிஸ் கான்ஸ்டபிளை மட்டும் காட்டி நிற்கும் உங்கள் சாமர்த்தியம் திட்டமிடப்படாமல் அறிக்கையில் வந்துள்ளதாக நான் நம்பவில்லை. ஒவ்வொரு சொல்லும் மிகவும் கனவமாக கையாளப்பட்டுத் தான் இந்த அறிக்கையை தயாரித்து இருக்கின்றீர்கள் என்பது தெளிவாக புலனாகின்றது.

உங்கள் கடத்தலே ஒரு நாடகம் என்றோ ஜெயபாலன் இலங்கை அரசுடன் இணைந்து நடிக்கின்றார் என்றோ நான் இங்கு எழுத முனையவில்லை. 90 களில் வெள்ளவத்தை ரோகினி ரோட்டில் உங்களை சந்திக்கும் போது எந்தளவுக்கு நீங்கள் இலங்கை அரசின் ஆள் இல்லை என்று நம்பினேனோ அதே அளவுக்கு இன்றும் உங்களை நம்புகின்றேன். . ஆனால் கடத்தப்பட்டு பின் கைது செய்யப்பட்டு பின் விடுதலையாகி வந்த பின்னும் பலரை பகைக்க மனம் இன்றி அவர்களை நோகாமல் அரசியல் செய்யும் உங்கள் தந்திர / சாமர்த்தியமான அரசியலைத் தான் நான் கேள்வி கேட்க விரும்புகின்றேன். சாமர்த்திய அரசியல் செய்கின்றோம் என்று உங்களையும் மற்றவர்களையும் ஏமாற்ற முனையும் சாகசத்தினைத் தான் கேள்வி கேட்கின்றேன். மற்றவர்களின் கடுமையான கேள்விகளை நலித்துப் போகச் செய்யும் வாசகங்களை அறிக்கையில் கொண்டு வந்த உங்கள் இலக்கிய 'நேர்மை' பற்றியே வினவுகின்றேன்.

என் கேள்விகளிலும் வினாக்களிலும் தவறுகள் இருக்குமாயின் அதனை தெளிவுபடுத்தும் வரைக்கும் காத்து இருக்கின்றேன்.

அது வரைக்கும்  நல்ல கவிதைகளை எழுதத் தெரிந்த, பலமுள்ளவர்களை கடுமையாக பகைக்கின் அரசியல் செய்ய முடியாது,  என்று நம்புகின்ற புகழ்ச்சியை மிகவும் விரும்பும் ஒரு வெறும் கலகக்காரனாகவே உங்களை உணர்ந்து கொள்கின்றேன்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடைபெறுமுன்னம் இறுதிவார்த்தை.

விசாரணையில் என்னிடம் நெடுநேரம் துருவித் துருவிக் கேட்க்கப்பட்டது

தமிழர்களையும் முஸ்லிம்களையும் இணைத்து வடகிழக்கின் சுதந்திரத்துக்காக போராடும் கருத்தை பிரச்சாரம் செய்திருக்கிறீர் என்பதுதான். அதற்கான வல்லமை உள்ள ஒரே நபர் என்பது அவர்கள் கருத்தாக இருந்தது. அதுவே அவர்கள் அச்சத்துக்கு காரணமாக இருந்தது...

தோழர் சோல்கைமின் அறிக்கை வந்தபின்னர் நான் மேலும் இறுக்கமாகிவிட்டேன்.என்னைவிசாரித்தவர்களின் நிலை இறுக்கம் குறைந்திருந்தது.

அனந்தி என் ஊடக கருத்தரங்குக்கு வந்தது பற்றி கேட்டார்கள்..அநந்தியை நேரில் சந்திக்கவில்லை என்று சொன்னேன். நான் புலிகளுக்கு உதவியது பற்றிக் கேட்டார்கள். நான் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் நிகழ்தவைகள் பற்றி பேச மறுத்துவிட்டேன். அனந்தியுடன் தனிப்பட்ட முறையில் பேசவில்லை என்றேன். ஐங்கரநேசனை சந்தித்த தகவல் அவர்களிடம் இருந்தது. மற்றப்படி என்னைச் சந்தித்த நண்பர்கள் யாரின் பெயரையும் வெளியிடவில்லை.

24 பகல் களுபோவில ஆஸ்பத்திரியில் பொலிசாரின் சதி இடம்பெற்றது..குமர என்கிற 74792 இலக்க பொலிஸ்காரர் என்னை அச்சுறுத்தியபடி இருந்தார். அவர் என் தொலைபேசியை சார்ச் பண்ணவிடவில்லை. தொலைபேசியை தாங்கள் சார்ச் பண்ணித் தருவதாக தொலைபேசியை கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன். தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் முதன் முறையாக எச்சரிக்கையானேன். நோயாளிகள் சிலரை தூண்டிவிட்டார்கள். குடிவரவுத் துறை வந்திராவிட்டால் அந்த இரவு கொல்லப்பட்டுக்கூட இருக்கலாம். குடிவரவுத் துறையினருடனும் அவர் முறுகினார். இதனால் அவருக்கு பலமான பின்னணி இருப்பது தெளிவானது.

குடிவரவுதுறை இங்ஸ்பெக்டர் அமித் பெரரா நிலமையை புரிந்துகொண்டு உடனே என்னை அங்கிருந்து அகற்றியதால் ஆபத்தில் இருந்து தப்பினேன். நான் வெளியேறும்வரை அந்த சம்பவம்பற்றி முறையிடவேண்டாமென்று கேட்டுக்கொண்டேன்.

சிங்கள தோழர்களின் ஆதரவு பிரச்சாரம் மேலோங்கியபோது தியவினவும் ஏனைய சிங்கள ஊடகங்களும் எனக்கெதிராக வகுப்புவாதத்தைக் கக்க ஆரம்பித்தன. இதனால் இறுதி நாட்க்களில் நான் நாட்டை விட்டு உடன் வெளியேறும் அவசியத்தை உணர்ந்து கோபத்தை விட்டுவிட்டு இராசதந்திரத்தோடு செயல்பட்டேன்..

.

பொதுவாக ஒரு கதை சொல்லும்போது (புத்தகம் திரைப்படம்) ஒரு முறை இருக்கிறது.

அறிமுகம் ..

காரக்டரின் திறமை அல்லது குணாம்சம்...

எதிர் கொள்ளும் பிரச்சனையின் அறிமுகம்...

அதன் குணாம்சம்....

சஸ்பென்ஸ் சொன் (suspense zone)

(ஆ ,,, ஊ ... அடுத்து என்ன ? என்ற விறுவிறுப்பை இதுதான் வாசகர் ரசிகர் இடையே உருவாக்கும் என்பாதால் திரைகதையில் இது முக்கிய பகுதி)

முடிவு.

ஒரு திரைப்படம் பார்பதுபோல் இருக்கிறது.

(விளம்பரம் உட்பட)

உண்மை தன்மை ஏதும் இல்லை. இது என்னுடைய தனிபட்ட கருத்து.

இது தற்செயல் சம்பவம் என்று கூட என்னால் இப்போது எண்ண முடியவில்லை. எல்லாம் ஒரு தாய் செயல் போல் இருக்கிறது.

இந்த கதையில் இவளுவு நாளும் இல்லாத சஸ்பென்ஸ் சொன். இவர் சிங்கள அரசை புகழ்கிறார் என்று பலர் கருத்து வைத்த பின்பு மட்டும் வருகிறது.

ஒரு கதையில் முக்கிய பங்கு....

சென்ஸ் (sense) = தொடுதல் மணத்தல் போன்ற உணர்வுகள்

போலிஸ் காரரின் அடியாள நம்பர் அப்படியானதொன்று.

(அவள் பஸ்ஸில் இருந்து இறங்குகிறாள்.......... அவளுடைய கூந்தலின் நறுமணம் தென்றலில் கலந்து என் மூக்கை அடைகிறது. நான் இதுவரை அறியாத ஒரு வாசனைக்கு அறிமுகம் ஆகிறேன்)

இது வாசகரை நேரே அழைத்து செல்வது அல்லது .....

கதையை கதைபோல் இல்லாது ஒரு உண்மை தன்மை ஆக்குவது என்பதற்கு மிகவும் முக்கியம்.

யோசித்து பார்கிறேன் .........

போட் ஐயாவின் விடுதலை கதையில் போலீஸ்காரரின் அடையாள இலக்கம் கட்டாயம் தேவையா??

அது முக்கிய பதிவாக பதிவாகிறது எனும்போது ............ எனக்கு ஒரு கதை வாசிக்கும் எண்ணம் மட்டுமே வருகிறது.

இந்த கதையில் வரும் சஸ்பென்ஸ் சொனும் எனக்கு பிடித்திருக்கிறது.

விடைபெறுமுன்னம் இறுதிவார்த்தை.

விசாரணையில் என்னிடம் நெடுநேரம் துருவித் துருவிக் கேட்க்கப்பட்டது

தமிழர்களையும் முஸ்லிம்களையும் இணைத்து வடகிழக்கின் சுதந்திரத்துக்காக போராடும் கருத்தை பிரச்சாரம் செய்திருக்கிறீர் என்பதுதான். அதற்கான வல்லமை உள்ள ஒரே நபர் என்பது அவர்கள் கருத்தாக இருந்தது. அதுவே அவர்கள் அச்சத்துக்கு காரணமாக இருந்தது...

தோழர் சோல்கைமின் அறிக்கை வந்தபின்னர் நான் மேலும் இறுக்கமாகிவிட்டேன்.என்னைவிசாரித்தவர்களின் நிலை இறுக்கம் குறைந்திருந்தது.

அனந்தி என் ஊடக கருத்தரங்குக்கு வந்தது பற்றி கேட்டார்கள்..அநந்தியை நேரில் சந்திக்கவில்லை என்று சொன்னேன். நான் புலிகளுக்கு உதவியது பற்றிக் கேட்டார்கள். நான் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் நிகழ்தவைகள் பற்றி பேச மறுத்துவிட்டேன். அனந்தியுடன் தனிப்பட்ட முறையில் பேசவில்லை என்றேன். ஐங்கரநேசனை சந்தித்த தகவல் அவர்களிடம் இருந்தது. மற்றப்படி என்னைச் சந்தித்த நண்பர்கள் யாரின் பெயரையும் வெளியிடவில்லை.

24 பகல் களுபோவில ஆஸ்பத்திரியில் பொலிசாரின் சதி இடம்பெற்றது..குமர என்கிற 74792 இலக்க பொலிஸ்காரர் என்னை அச்சுறுத்தியபடி இருந்தார். அவர் என் தொலைபேசியை சார்ச் பண்ணவிடவில்லை. தொலைபேசியை தாங்கள் சார்ச் பண்ணித் தருவதாக தொலைபேசியை கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன். தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் முதன் முறையாக எச்சரிக்கையானேன். நோயாளிகள் சிலரை தூண்டிவிட்டார்கள். குடிவரவுத் துறை வந்திராவிட்டால் அந்த இரவு கொல்லப்பட்டுக்கூட இருக்கலாம். குடிவரவுத் துறையினருடனும் அவர் முறுகினார். இதனால் அவருக்கு பலமான பின்னணி இருப்பது தெளிவானது.

குடிவரவுதுறை இங்ஸ்பெக்டர் அமித் பெரரா நிலமையை புரிந்துகொண்டு உடனே என்னை அங்கிருந்து அகற்றியதால் ஆபத்தில் இருந்து தப்பினேன். நான் வெளியேறும்வரை அந்த சம்பவம்பற்றி முறையிடவேண்டாமென்று கேட்டுக்கொண்டேன்.

சிங்கள தோழர்களின் ஆதரவு பிரச்சாரம் மேலோங்கியபோது தியவினவும் ஏனைய சிங்கள ஊடகங்களும் எனக்கெதிராக வகுப்புவாதத்தைக் கக்க ஆரம்பித்தன. இதனால் இறுதி நாட்க்களில் நான் நாட்டை விட்டு உடன் வெளியேறும் அவசியத்தை உணர்ந்து கோபத்தை விட்டுவிட்டு இராசதந்திரத்தோடு செயல்பட்டேன்..

.

எனக்கு மிகவும் பிடித்த பகுதி..........

திரைகதையில் ஒரு சில இயக்குனர்களே இதை பாவிக்கிறார்கள்.

வில்லன் கதாநாயகனை துப்பாக்கியால் சுட்டுவிடுவார் .......

துப்பாக்கியில் இருந்து ரவை சீறும் .............

இப்போ....

வேறு ஒரு கரக்டரை உள்ளே நுழைப்பது (குடிவரவு)

அதை வில்லனின் காட்சி பகுதியில் வைத்து காட்சிகளை நகர்த்துவது....

இப்போ வில்லன் சுட்ட தோட்ட கீரோவை சகடித்ததா ? இல்லையா?

கதாநயகன் இறந்துவிட்டாரா? இருக்கிறாரா?

என்ற துடிப்பு ரசிகரிடம் இருக்க வைத்துக்கொண்டே ....

3 . 4 நிமிடம் காட்சியை நகர்த்த வேண்டும்.

மிகவும் விறுவிறுப்பான பகுதி!

கவிஞரின் கதையில் 24 திகதி மிகவும் முக்கியம். காரணம் எல்ல்லருடனும் தொடர்பில் 23 இருக்கிறார் சொல்கெய்ம் ச சா பி பா எல்லோரும் அறிக்கை விடுகிறார்கள் ......

கவிஞர் இனி என்ன விடுதலை ஆகிவிடுவார் என்று ரசிகர்கள் சோர்ந்துவிடுவார்கள்........

கதை விறுவிறுப்பு குறைந்துவிடும்.

உண்மையிலேயே நன்றாக இருக்கிறது.

Posted

ஜெயபாலனுக்கு கிடைத்த இந்த முக்கியத்துவம் பலருக்கு  வயிற்றேரிச்சலை கிளறிவிட்டுவிட்டது .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெயபாலனுக்கு கிடைத்த இந்த முக்கியத்துவம் பலருக்கு  வயிற்றேரிச்சலை கிளறிவிட்டுவிட்டது .

இதில் நிறைய உண்மை இருக்கலாம்!
 
நீங்கள் விளக்கமாக எழுதும்போதுதான் அது தெரியப்படும்.
உலகம் முக்கோணம் என்று சும்மா இவளவு நாளிக்கு சொல்லிதிரிவீர்கள்?
உருண்டை என்றவன் விமானத்தில் ஏற்றி சென்று நேரில் காட்ட தொடங்கி பலகாலம் ஆகிய பின்பு ....??
Posted

நடக்கட்டும், எதுக்கு இவளவு அவசரமாக எழுதினத அழிகிறாங்கள் என்றுதான் புரியவில்லை.
கவிஞரோடு எனக்கு எந்த வித எதிர்ப்பும் இல்லை. அவருடைய கவிதைகளில் முரண்பாட்டிருக்கின்றேன். அவருடைய தனிப்பட்ட...குறிப்பாக....பெ............சார்பாக எனக்கு 100 வீதம் முரண்பாடு. அதில் வெறுப்பும் கோபமும் அதிகம். அதை விடுவம்... தற்போது இவர் குறிப்பிட்ட இந்த பயணத்தின் மூலம் யாரை நல்லவர்கள் என்று வெளி உலகத்துக்கு குறிப்பாக தமிழ் சமூகத்துக்கு காட்ட விருப்புகின்றார்,

அவருடைய முக்கியத்துவம் எமக்கு தெரியும்...அதில் யாரும் வயிறு எரிச்சல் அடையவில்லை.  ஒரு வேளை வந்த குற்ற புலனாய்வு அதிகாரிகள் பெண்களோ ??????

Posted

ஜெயபாலனுக்கு கிடைத்த இந்த முக்கியத்துவம் பலருக்கு  வயிற்றேரிச்சலை கிளறிவிட்டுவிட்டது .

இப்படி ஒரு மலினமான விளம்பரமா...??  இருக்கும் இருக்கும்...  :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை அரசுக்கு வக்காலத்து வாங்க தான் இவர தூக்கி உள்ள போட்டிட்டு விட்டு இருக்காங்க இவருடைய கைதில் ஆரம்பத்தில் இருந்தே எமக்கு நம்பிக்கை இல்லை....

Posted
அன்புள்ள கவிஞர் ஐயா ஜெயபாலன்,
 
நீங்கள் கைது செய்யப்பட்ட போது ஒரு கள உறவாக நான் எவ்வளவு வேதனைப்பட்டேனோ அதற்கும் அதிகமாக நீங்கள் விடுதலை செய்யப்பட்டதும் மகிழ்வடைந்தேன்.
 
ஒரு தமிழனை அதுவும் வெளிநாட்டு குடியுரிமை கொண்ட தமிழனை தான் நினைத்த மாத்திரத்தில் கைது செய்யவோ / கடத்தவோ முடியும் என்று, அதுவும்  வெளிநாட்டு  தலைவர்கள் வந்து சென்று சில நாட்களில்,  உலக ஊடகங்களே உற்று நோக்கும்போதே செய்ய முடியும் என்று சிங்களம் காட்டிய போது, அதை எங்கள் தமிழ் ஊடகங்கள் பயன்படுத்த தவறி விட்டனவே என்று நான் கவலையுடன் இருந்த போது உங்கள் விடுதலை இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது.
 
இந்த வேளையில் உங்கள் விடுதலைக்கு உதவியவர்களுக்கு உங்கள் யாழ் கள உறவாக நானும் நன்றி கூட கடமைப்பட்டுள்ளேன்.
 
 வன்னி எங்கும் எத்தனையோ தமிழ் மக்களை பலிகொடுத்த போது உலகெங்கும் தொலைபேசி எடுத்து மக்கள் கதறி  அழுதபோது பேசாமல் இருந்த உங்கள் நண்பர் நோர்வே சுந்தரலிங்கம்,  வன்னிவிளாங்குளத்தில் உங்களுக்கு நேர்ந்த கொடுமையை இருபது வினாடிகளில்  நோர்வேயில் இருக்கும் உங்கள் நண்பர் சுந்தரலிங்கத்துக்கு  எடுத்து சொன்னபோது (கவனிக்க அந்த மக்களுக்கு உங்களின் நண்பரின் தொலைபேசி இலக்கம் கிடைத்த விதம் உங்களுக்கு தான் தெரியும், சில வேளைகளில் நீங்கள் தொலைபேசி எடுக்க சொல்லித்தான் கத்தினீங்களோ TID   இற்கு தான் வெளிச்சம்)  உங்கள் நண்பர் ஊடகங்களுக்கு அறிவித்தமைக்கு முதலில் நன்றி.  
 
மக்களை கதற கதற கொன்ற சிங்கள பயங்கரவாதிகளின் பயங்கரவாத தடுப்பு பிரிவு,  உங்களின் கத்தலை கேட்டு உங்கள் அம்மாவின் சமாதிக்கு அழைத்து சென்றமைக்காக அவர்களின் மனித நேயத்துக்காக நன்றிகள். (நீங்கள் உங்கள் அம்மாவின் சமாதிக்கு உண்மையிலேயே சென்றிருந்தால் உங்கள் அம்மாவின் ஆன்மா என்னை மன்னிக்கட்டும்.)
 
எத்தனயோ பள்ளிவாசல்கள் உடைக்க பட்ட போதும், ஹலால் எதிர்ப்பு என்ற போர்வையில் எத்தனையோ முஸ்லிம் சகோதரர்களின் கடைகள் எரிக்கபட்ட போதும், கிழக்கில் முஸ்லிம் கலவரங்கள் நடந்த போதும் அரசாங்கத்தை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாத அமைச்சர் ஹக்கீம், உங்களுக்காக அமைச்சு பதவியில் இருந்துகொண்டே அரசை எதிர்த்து பேசியமைக்காக எனது மனமார்ந்த நன்றிகள்.
 
உங்களைப்போல எத்தனயோ தமிழ் கவிஞர்கள், புலவர்கள், எழுத்தாளர்கள், புத்திஜீவிகள், சிங்கள அரசால் கொல்லப்பட்டபோது, அவர்கள் நல்லவர்கள், பொய் பேசாதவர்கள் என்று ஒரு வார்த்தை கூட பேசாத பஷீர் சேகுதாவுத் அவர்கள், உங்களை புகழ்ந்தமைக்காக நன்றிகள்.
 
நடுநிலை வகிக்கவந்த தங்களை  கூட பொருட்படுத்தாமல், பச்சை குழந்தைகளையும், கர்ப்பிணித் தாய்மார்களையும் சிங்கள பேரினவாத அரசாங்கம் குண்டு வீசி அழிப்பதை நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்தும் கூட , ஒரு சொல்லுக்காக கூட வாய்திறக்காத தோழர் எரிக் சோல்கைம்,
கொட்டும் பனியிலும் தங்களின் உறவுகளுக்காக ஆயிரமாயிரம் நோர்வே வாழ் தமிழ் மக்கள் போராடிய போது மௌனமாக இருந்த தோழர் எரிக் சோல்கைம், ராஜதந்திர வழமைக்கு மாறாக  உங்களுக்காக இலங்கை அரசை எதிர்த்து அறிக்கை விட்டமைக்காக என உளப்பூர்வமான நன்றிகள்.
 
வெள்ளிக்கிழமை கைது செய்தால் இரண்டு நாட்கள் அடைத்து வைத்திருந்து திங்கட்கிழமை தான் நீதிமன்றில் முன்னிலைபடுத்த முடியும் என்று இலங்கை சட்டங்கள் தெரிந்த உங்களை பற்றி கூட கொஞ்சமும் அறியாமல், ஒரு தமிழன் கைது செய்யபட்டிருக்கிறான் மனித உரிமைகள் மதிக்கபடுவதில்லை என்பதற்கு பதிலாக, இந்திய தேசிய விருது நடிகர்,புகழ் பெற்ற கவிஞர் கைது என்று கொள்ளை எழுத்தில் வியாபாரம் செய்த ஊடக நண்பர்களுக்கும் புரட்சி வாதிகளுக்கும்  நன்றி.
 
முக்கியமாக மெழுகுதிரி வெளிச்சத்தில் என்னை ஆதவன் பத்திரிகைக்காக சிங்கள அடக்குமுறைக்கு எதிராக பேட்டி எடுக்க வந்த மஞ்சுள வெடிவர்த்தன, இன்று எத்தனையோ தமிழ் இளைஞர்கள் குற்றங்களே செய்யாமல் சிறையில் வாட, உங்களுக்காக விரைந்து செயற்பட்டமைக்காக நன்றிகள்.
 
இதைவிடவும், வெள்ளை கொடியுடன் வந்தவர்களை கதற கதற  சுட சொன்னவரும்,  தமிழ் ஆண்களின் இரத்தம் கடலுக்கு பெண்கள் உங்களுக்கு என்று, சிங்கள படையினருக்கு கட்டளை இட்டு  எத்தனையோ இசைபிரியாக்களை  கத்த கத்த அழிப்புக்கு மூல காரணமான கோத்தபாய, நீங்கள் கத்த கத்த  உங்களின் இரத்தத்தை கடலுக்கு காணிக்கையாக்காமல் விட்டதுக்கு கோடான கோடி நன்றிகள். (சில வேளைகளில் அவனுக்கு தெரிந்திருக்குமோ நீங்கள் மற தமிழன் இல்லை என்று )
 
இறுதியாக நீங்கள் விடுதலையாகி வந்ததும், முதல் அறிக்கை என்ற பெயரில் எண்ணற்ற அறிக்கைகளை விடப்போறீங்கள் என்று உங்கள் முதாலவது அறிக்கையிலேயே குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றிகள்.
 
இங்கு நான் யாருக்காவது நன்றி கூறாமல் விட்டிருந்தால்  மன்னிக்கவும்.
 
இன்னும் சில நன்றி உடையவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டி இருப்பதால் அவர்களின் பாதுக்காப்பை உறுதி செய்தபின்னர் இரண்டு வாரங்களில்  மிச்ச பேருக்கு நன்றி சொல்லலாம் என்று விட்டிருக்கிறேன். 
 
நன்றி.
 
அன்புடன்,
பகலவன்.
 
பிற்குறிப்பு  :
 
ஜெயபாலன் ஐயா,
 
உங்களை கருணாவிடம் இருந்து காப்பாற்றி உங்களை யார் என்று இப்போ உலகுக்கு காட்டியமைக்காக பொட்டம்மானுக்கும் நன்றி.
 
உங்களை வைத்தியசாலையில் வைத்து கொல்லாமல் விட்ட குமர என்கிற  74792 இலக்க  பொலிஸ்காரர் இற்கும் நன்றி.
 
இன்னும் இரண்டு ஒரு வாரங்களில் நான் இலங்கைக்கு சென்று தமிழ்-சிங்கள நல்லிணக்கம் பற்றி பேச விரும்புவதால், என்ன மாதிரியான முன்னேற்பாட்டுடன் செல்ல வேண்டும் என்று உங்கள் ஆலோசனை தேவை.
 
அத்துடன், எனக்கு தமிழ் அரசியல் படிக்க நிறைய நாள் ஆசை. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் பகுதிநேரமாக படிக்க கேட்ட போது, அவர் தனது வயதையும், நேரமின்மையும் சொல்லி உங்களை கேட்டு பார்க்க சொன்னார்.
உங்களுக்கு நேரமிருப்பின் இந்த மடலுடன் சேர்த்து அதற்கும் பதில் தாருங்கள் ஐயா.
 
Posted

நிழலி! இன்றைக்கு கவிஞர் நாடுகடத்தப்பட்டிருக்கிறார். அவர் என்றைக்காவது ஒருநாள் மீண்டும் தாயகம் செல்லுவதை நோக்கமாக கொண்டிருப்பார். இதற்கு சிலரை நோகடிக்காமல் இருப்பது அவசியம்தான். வேறு வழியில்லை.

கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டு திரும்பி வந்தவர்கள், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது போன்று இருக்கின்ற காலத்தில், கவிஞரால் அது பற்றி பேசவாவது முடிகிறது.

எங்கே ஆக்ரோசத்தை வெளிப்படுத்த வேண்டும், எங்கே நிதானத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார் என்றே எனக்கு படுகிறது.

Posted

இங்கு நான் யாருக்காவது நன்றி கூறாமல் விட்டிருந்தால்  மன்னிக்கவும்.
 
இன்னும் சில நன்றி உடையவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டி இருப்பதால் அவர்களின் பாதுக்காப்பை உறுதி செய்தபின்னர் இரண்டு வாரங்களில்  மிச்ச பேருக்கு நன்றி சொல்லலாம் என்று விட்டிருக்கிறேன்.

:lol: :lol:

பகலவன் அண்ணாவின் சுவாரஸ்யமான நகைச்சுவையான எழுத்து முறைக்கே பச்சைகளை அள்ளி வழங்கலாம். :)

பச்சை முடிந்து விட்டது பகலவன் அண்ணா. நாளைக்கு போடுகிறேன். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.