Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

50 வருடங்களின்பின் மத்துக சென்ற் மேரிஸ் பாடசாலையில் - ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://tamilvamban.blogspot.no/2013/12/blog-post.html

 

அது உச்சி வெயில் சுட்டெரிக்கும் பகல் ஒரு மணி. களுத்துறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் மத்துகமை புனித மரியாள் கல்லூரி அருகே நாங்கள் நின்று கொண்டிருந்தோம். அங்கே கல்வி கற்கும் 540 மாணவ மாணவிகளும் வீடு திரும்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். அவ்வேளையில் நாங்கள் ஒரு கடா மீசைக்காரருடன் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தோம். நாங்கள் மீசையை முறுக்கியபடி வந்தவருடன் பள்ளி வாசலடியை நெருங்கியதுமே மாணவர்களின் ஆர்ப்பரிக்கும் சத்தம் சட்டென ஒடுங்கியது. ஒரு சில மாணவர்கள் கடா மீசைக்காரரை அடையாளம் கண்டு கொண்டு பரபரத்தனர்.

 

 

balan-08.jpg  சுமனா ஊருக்குப் போகும் பாதையோரமாக

'ஹே... இவரு ஆடுகளம் படத்துல வர்ற பேட்டைக்காரன் டோய்!' என்று அவர்கள் கூச்சல் போட பேட்டைக்காரன் வந்திருக்கும் செய்தி பள்ளி வளாகத்தில் தீயாக பற்றிக் கொண்டது!

பாடசாலை அதிபர் எம். இஸட். எம். வசீர், சக ஆசிரியர் சந்திரபோஸ் உள்ளிட்டோர் ஆடுகளம் ஜெயபாலனுக்கு வணக்கம் செலுத்தி பள்ளிக் கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்றனர். 



balan-01.jpg

ஆடுகளம் திரைப்படத்தில் நடித்ததற்காக இந்தியாவில் தேசிய விருது பெற்ற ஜெயபாலன், மத்துகமை சென் மேரிஸ் பாடசாலையில் பழைய மாணவர். அதனால் தான் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் திடீர் விசிட். அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது.

ஜெயபாலனின் வருகையை அடுத்து பள்ளி நிர்வாகம் உடனடியாக அவரை கௌரவிக்க உயர் வகுப்பு மாணவர்களை அழைத்து கலந்துரையாடலை நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில் பள்ளி மாணவர்களோடு பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டார்கள். நிகழ்வை ஆசிரியர் எஸ். கமல் தொகுத்து வழங்கினார் பள்ளி மாணவன் எஸ். டிலான் ஜெயபாலன் பற்றி எழுதிய கவிதையை வாசித்தார்.



balan-03.jpg

நிகழ்வில் ஜெயபாலன் பேசும் போது தாம் படித்த நாட்களில் தன்னோடு படித்தவர்களில் சிலரை ஞாபகப்படுத்தினார். அவர்களில் பலர் இறந்து விட்டதாக பள்ளி மாணவர்கள் கூறினார்கள். குறிப்பாக கலேவத்தை எஸ்டேட்டில் இருந்து வந்த ஜெயமங்களம் இறந்து விட்டதாகவும் அவரின் குடும்பத்தினர் அனைவரும் வவுனியாவுக்கு சென்று விட்டதாகவும் சொன்ன போது ஜெயபாலனின் முகத்தில் ஒரு ஏக்கம் தெரிந்தது. 'அப்போது மத்துகமையில் கடை வைத்திருந்த கிருபாகரன்...' என்றதும் அவரும் உயிரோடு இல்லை என்ற பதில் வந்தது. 


balan-04.jpg

காலம் ஒரு பரம்பரையை திண்று வருகிறது என்பதை நினைத்து பாலன் பெருமூச்சு விட்டார். என்னோடு படித்தவர்களை பார்க்க வந்தேன். அவர்களை காண முடியவில்லை, ஆனால் நான் தேடி வந்தவர்களின் உருவங்கள் இந்த பிள்ளைகளின் முகங்களில் தெரிகிறது. அவர்களின் சந்ததிகள் தானே இவர்கள் என்று மனதை ஆறுதல்படுத்திக் கொண்ட அவர் பாடசாலை பிள்ளைகள் சிலரோடு பள்ளி மைதானம் நோக்கி நடந்தார்;  "அதோ தெரிகிறதே அந்த காட்டுப் பகுதியில்தான் நான் என் நண்பர்களோடு சென்று திருட்டுத்தனமாக மங்கூஸ் பறித்து வருவேன்" என்று ஜெயபாலன் சுட்டிக்காட்டிய இடத்தை பட்டமுள்ள கந்த என்று இப்போது அழைக்கிறார்கள். அங்கே மங்கூஸ் மரங்கள் இப்போதும் இருப்பதாக மாணவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.  


balan-06.jpg

"அப்போது இந்த ஸ்கூல் வளாகத்திற்குள் சாரைப் பாம்புகள் வரும். அதன் வாலை சிங்கள மாணவர்கள் பிடித்து சுழற்றி வீசி எறிவார்கள். எனக்கு அது ரொம்பவும் ஆச்சர்யமாக இருந்தது" என்று ஜெயபாலன் சொல்வதை இடைமறித்த ஒரு மாணவி, "நீங்கள் பாம்புக்கு பயமா சார்?" என்றாள். 

"நான் பயமில்ல... ஆனா பாம்மை கண்டால் ஓடிடுவேன்" என்றார். இவரு அட்டைக்கத்தி ஹீரோடா என்று ஒரு மாணவன் சொல்ல.. மற்றவர்கள் கொல்லென்று சிரித்தார்கள். 


balan-02.jpg

"சார் இப்படி கம்பீரமா மீசை வச்சிருக்கீங்களே எப்படி?" என்று ஒரு மாணவி கேட்க,

"அதுவா நான் இவங்கள மாதிரி சின்னப் பையன் கிடையாது.. நான் ஆண்புள்ள சிங்கம்" என்றபடி மீசையை முறுக்கியவரிடம், "அப்போ உங்களுக்கு என்ன வயசு?" என்று அவரை நோக்கி இன்னொரு கேள்வி பறந்தது.

"சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.." என்று தமது கவிதை பாணியில் பதிலளித்து சமாளித்தார் ஜெயபாலன்.

"உங்க முகத்தில் ஏதோ கருப்பா மச்சம் மாதிரி..." என்று ஒரு மாணவி ஆள் காட்டி விரலை நீட்டினாள். 


balan-10.jpg அதிபர் மற்றும் ஆசிரியர்களோடு ஜெயபாலன்

"அதுவா.. ஒரு ஆபிரிக்க கேர்ள் செல்லமா கிள்ளிட்டு போயிட்டா... அந்த தழும்புதான் என்று நகைச்சுவையாக பதிலளித்த ஜெயபாலன் தம்மை கலாய்த்த சியாலினி, சுகன்யா, அருள் மாதவி, ஸ்ரீஸ்கந்தராஜா, அஜித், சுரேஸ், சுபாஸ் ஆகியோருடன் விடைபெற்று நகர்ந்தார். காரில் அமர்ந்த ஜெயபாலனின் மனசு முழுவதும் மரியாள் கல்லூரியை சுற்றி வந்தது. 

"என் பள்ளியில் கால் வைத்து மாணவ மாணவிகளோடு சிரித்து பேசிய அந்த நிமிடங்களில் என் வயசு குறைந்து பள்ளி மாணவனாகவே மாறிப்போனேன்... எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும் திரும்பக் கிடைக்காத ஒரு சுகமான அனுபவம் அது... அப்போது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். கல்லூரியில் உலாவந்த பெரிய வகுப்பு மாணவி பெயர் எட்னா அவள் பந்து விளையாட மைதானத்திற்குள் வரும் வரை நான் என் வயது மாணவர்களோடுதான் விளையாடிக்கொண்டிருப்பேன். 


balan-11.jpg

அவள் வந்ததும் நான் பெரிய வகுப்பு மாணவர்களோடு சேர்ந்து விளையாட முயற்சி செய்வேன். எட்னா என்னைக் கவனிக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம். அப்படி ஒரு நாள் அவள் டீமோடு சேர்ந்து நான் விளையாட முனைந்த போது அவர்கள் அடித்த பந்து என் தலையில் பட்டு கீழே விழுந்தேன். ஆனால் எட்னா இப்போ எங்கே என்றே தெரியவில்லை என்று பெருமூச்சு விட்டு கண்களை மூடிக்கொண்டார் பாலன்.

தான் வசித்த கல்வெல வெளிகொடல என்ற இடத்தில் இருந்த சுமனாவதியையும் ஞாபகப்படுத்திக் கொண்டார்.

"சித்திரை வந்து விட்டால் சுமனாவதி வீட்டில் ஊஞ்சல் கட்டி மேளம் அடிக்க ஆரம்பித்து விடுவார்களாம். நானும் அவளோடு சேர்ந்து மேளம் வாசித்திருக்கிறேன் ஒரு நாள் ஊஞ்சல் ஆடிய சுமனா உனக்கு ஊஞ்சல் ஆடத் தெரியுமா? என்று கேட்டாள். அவள் கேட்டு விட்டாலே என்று நானும் ஊஞ்சலில் ஏறி நின்று ஆடி எனக்கும் முடியும் என்று சுமனாவதிக்கு நான் ஜாடை காட்டினேன்.



 

அடுத்த நொடி கால் தடுமாறி ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்தேன். உடனே சுமனாவதியின் ஆட்கள் என்னை தூக்கி விட்டார்கள்" என்ற ஜெயபாலன் சுமனாவதியைப் பார்க்க வேண்டும் என்றார். உடனே வழி கேட்டு வாகனத்தை சுமனா வாழ்ந்த கிராமத்து பாதையில் விட்டோம். மத்துகமை வாசியான சண்முகராஜா எமக்கு வழிகாட்டினார். ஆனால் கொழும்பிலிருந்து வந்த ஒரு அவசர அழைப்பு பாலனை அழைக்க சுமனாவதியை தேடும் படலத்தை இடையில் நிறுத்த வேண்டியதாயிற்று. தேடல் தொடரும் என்று வானவில் டீமுக்கு சொல்லி விட்டு கொழும்பை நோக்கி திரும்பினார் ஜெயபாலன்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவப்பகிர்வு நன்றாக இருந்தது.. தொடர்ந்து இணையுங்கள்..!

நல்ல பதிவு .பொயட் உண்மையில் ஒரு ஹீரோ தான் .

  • கருத்துக்கள உறவுகள்

படித்த பள்ளியை மறக்காமல் அங்க ஒரு விசிட் அடித்ததை பாராட்டாமல் இருக்க முடியாது. அதுவும் தென்பகுதியில் தனித்துவிடப்பட்ட தமிழ் மொழிப் பிள்ளைகளுக்கு இது உண்மையில்.. ஒரு ஆறுதலாக விடயமாகவும் இருக்கும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

படித்த பள்ளியை மறக்காமல் அங்க ஒரு விசிட் அடித்ததை பாராட்டாமல் இருக்க முடியாது. அதுவும் தென்பகுதியில் தனித்துவிடப்பட்ட தமிழ் மொழிப் பிள்ளைகளுக்கு இது உண்மையில்.. ஒரு ஆறுதலாக விடயமாகவும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவப் பகிர்வுக்கு நன்றிகள், கவிஞரே!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாடசாலையில் நீங்கள் கல்வி கற்க்கும் பொழுது இருந்த இந்து மதத்தை சேர்ந்த பிள்ளைகளின் எண்ணிக்கை இப்பவும் இருக்கின்றதா?அல்லது பயங்கரமாக வீழ்ச்சியடைந்துள்ளதா?இந்த பாடசாலை தமிழ் மொழி பாடசாலையா?அல்லது சிங்கள மொழி பாடசாலையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன் அர்ஜுண் நெடுக்காலபோவான் சுண்டல் புங்கையூரான் அனைவருக்கும் நன்றி, புத்தன் மத்துகமவில் இன்னும் தமிழ்கல்வி வாழ்கிறது.,

இது இருமொழிப் பாடசாலை. மத்துக தாழ் நில ரப்பர்தோட்ட நகரம். உயரம் குறைய குறைய சிங்கள் கிராமங்களின் தொகை அதிகரித்து மலையக தமிழர் குடியிருப்புகள் சுருங்கிவிடும். மாத்தறை ரக்குவான போன்ற பகுதிகளில் பெரும்பாலும் ரப்பர்தோட்டங்களில் வாழும் மலையக தமிழர் பிள்ளைகள் சிங்களம் கற்கும் நிர்பந்தத்துக்குள் அமுங்கிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான கற்ரன் பதுளையின் உயர்நிலங்களில் இந்த பிரச்சினை இல்லை. அவை தமிழ் பகுதி தன்மையை கொண்டிருக்கின்றன.

சிங்களக் கிராமங்களுக்குள் தனித்துபோன தாழ் நில மலையக மக்களுக்கு திரைப்படங்களும் தமிழக தொலைக்காட்ச்சிகளுதான்  தமிழ் தொடர்பாகி வருகிறது.

மத்துகமவில் இன்னும் தமிழ் கல்வி  தப்பி இருப்பது மகிழ்ச்சி தருகிறது.

ஈழத்தில் குறிப்பாக வட ஈழத்தில் வளர்சிப் பணிக்கு தேவையான மக்கள் குடித்தொகை இல்லை.

அதிலும் உழைக்கும் பருவ மக்கள்தொகை வளர்சிக்கு உகந்ததாக இல்லை.

மலையக மக்கள் வருகையை ஊக்குவிக்காவிட்டால் சிங்கள தொழிலாலர் வருகையை தடுக்க மார்க்கமில்லை.

சிங்கள கிராமங்களுள் தனித்துப்போன மலையக மக்கள் வடகிழக்கில் குடியேற நாம் வழி செய்யவேன்டும்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் ஒரு கலர்fபுல்லான ஆள் தான்! நல்லாயிருக்கு! நான் 12 வருடம் படிச்ச பள்ளிக் கூடத்துக்கு நானும் போனேன்! வாசல் காவலாளி உள்ளே விட மாட்டன் எண்டு விட்டார் (அங்கேயே படித்து ஓ.லெவல் தாண்டாத ஒருவர் தான்!). உள்ளே இருந்து கவனித்த உப அதிபர் தான் வெளியே வந்து பிணை எடுத்துக் கொண்டு போனார்! இப்பிடி இருக்குது எங்கட பிரபலம்! :D

  • கருத்துக்கள உறவுகள்

balan-08.jpg  

 

சுமனா ஊருக்குப் போகும் பாதையோரமாக

 

பவ்வியமாக... ஒதுங்கி, நிற்கிறார்... கவிஞர்.
அந்த, நேரத்தில்... எந்த, நாதாரி... ரெலிபோன் அடிச்சது.
இதுக்குத்தான்... கைத்தொலை பேசிகளை, உந்த இடங்களுக்கு, கொண்டு போகப் படாது.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

சுமனா ஊருக்குப் போகும் பாதையோரமாக

 

பவ்வியமாக... ஒதுங்கி, நிற்கிறார்... கவிஞர்.

அந்த, நேரத்தில்... எந்த, நாதாரி... ரெலிபோன் அடிச்சது.

இதுக்குத்தான்... கைத்தொலை பேசிகளை, உந்த இடங்களுக்கு, கொண்டு போகப் படாது.

 

கொண்டு போனாப் பரவாயில்ல! முக்கியமான வேலை பார்க்க வெளிக்கிடும் போது அதை நூத்து வைக்கப் படாதோ? :D

 

கவிஞரே! வாசிக்கும்போதே எமக்கும் நாம் பள்ளிப் பராயத்தில் படித்த பள்ளிக்கு சென்று திரும்பிய உணர்வு. நன்றி. அது சரி சுமனாவை தேடிப் போகேக்கை ரெலிபோனெடுத்த கரடி யாரோ? ஒரு இனிமையான சுக அனுபவத்தை இழந்துவிட்டோம்.


கவிஞரே! வாசிக்கும்போதே எமக்கும் நாம் பள்ளிப் பராயத்தில் படித்த பள்ளிக்கு சென்று திரும்பிய உணர்வு. நன்றி. அது சரி சுமனாவை தேடிப் போகேக்கை ரெலிபோனெடுத்த கரடி யாரோ? ஒரு இனிமையான சுக அனுபவத்தை இழந்துவிட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தேடல்கள் உள்ளவரைக்கும் வாழ்க்கையும் இனிக்கும் பொயட்... தொடருங்கள் பசுமையான நினைவுகளை மீட்டும் இவ்விடம் மிகவும் ரம்மியமாக இருக்கிறது பொயட். உங்கள் எழுத்துகளில் நாங்களும் இளைப்பாறிக் கொள்கிறோம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பழமை என்றும் இனிமை. பள்ளிக்கூட நினைவுகள் அதனைவிடவும் இனிமை. இதனை மீட்ட உதவிய பொயட் மேலும் தொடரட்டும். இந்த இனிமைகளை நீடிக்கவிடாது அரசியல்வாதிகளின் நீடித்த பதவி ஆசையே அனைத்தையும் குழிதோண்டிப் புதைத்து வருகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவப் பதிவுகள் நன்றாக உள்ளது, தொடருங்கள்! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோழ தீழியர்ககள் ஜஸ்ரின், தமிழ் சிறீ, மயூரன் கவிதாயினி வல்வைசகாறா, பாஞ்ச், சுவே எல்லோருக்கும் என் நன்றியும் புதுவருட நல்வாழ்த்துக்களும்.  மிகச் சிறு சிறுபாண்மையினராக இருந்தபோதும் மத்துகம மலையக தமிழ் பிள்ளைகள் இன்னும் தமிழை இறுக பற்றி காப்பதும் தமிழில் புலமைபெற்று இருப்பதும்தான் என்னை மகிழ வைக்கிறதுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.