Jump to content

இந்திய தூதரை பாலியல் தொழிலாளர்களுடன் சிறையில் அடைத்த அமெரிக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Devyani-Khobragade-seithy-20131217.jpg

அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில், துணை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் தேவயானி கோபர்கடே (39) போலியான தகவல்கள் மூலம் விசா மோசடி செய்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் ரூ.1 கோடியே 50 லட்சம் ஜாமீனில் அவர் விடப்பட்டார். இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் அவரை அவமானபடுத்தும் விதமாக அதிகாரி தேவயானி அவர், நியூயார்க்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பொதுவான சிறையில் அடைக்கபட்டார் இதில் போதைமருந்து குற்றவாளிகள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் வைக்கபடும் சிறையாகும்.

  

துணைத்தூதர் அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் இவ்வாறு நடத்தப்படுவது இந்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு டெல்லி வந்துள்ளது. நேற்று அவர்கள் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனன் ஆகியோரை சந்திப்பதாக இருந்தது. ஆனால், இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அவர்களுடனான சந்திப்பு ரத்து செய்யப்ட்டது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=99259&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

  • Replies 172
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலிகாரியிடம் நாடு இருக்கும் வரை கடும் அதிர்ச்சியைதான் இந்தியர்கள் காட்ட முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"உடையை களைந்து அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டனர்" இரு நாடுகளுக்கிடையில் ராஜதந்திர நெருக்கடி:-

devyani-khobragade1_CI.jpg

அமெரிக்காவில் இந்திய பெண் துணைத் தூதர் தேவ்யானி கோப்ரகடே மீதான அவமரியாதைக் கைது நாட்டு மக்களிடயே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து இந்தியா கடுமையான பதிலடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான சில கடுமையான நடவடிக்கைகளுக்கு அது உத்தரவிட்டுள்ளது. அதில் முக்கியமானது, டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு போடப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்புகளை அகற்றுமாறு இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கர்கள் எப்போதுமே பாதுகாப்பு நடவடிக்கைகளில் மிகவும் உஷாராக, கவனமாக இருப்பார்கள் என்பதால் அதில் இந்தியா  கை வைத்துள்ளது. இது அமெரிக்காவை நிச்சயம் தட்டி எழுப்பும் என்று இந்தியா கருதுகிறது.

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு பாதுகாப்புக்காக ஏராளமான தடுப்புகள் போடப்பட்டுள்ளன. அமெரிக்க தூதரகமே இதைச் செய்துள்ளது. அவை அத்தனையையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்தியா உத்தரவிட்டுள்ளது. தூதரகங்களுக்கான மது, உணவுக்கு தடை அதேபோல அமெரிக்க தூதரகம், இந்தியாவில் உள்ள பிற துணைத் தூதரகங்களுக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மது வகைகள், உணவுப் பொருட்களுக்கான அனுமதியையும் நிறுத்த இந்தியா உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க பள்ளி ஆசிரியர்களின் விசா விவரத்தை சேகரிக்க உத்தரவு அதேபோல இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள அமெரிக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விசா, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இந்தியாவிடம் சமர்ப்பிக்கவும் மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்தியப் பெண் தூதரக அதிகாரியின் உடையை களைந்து  அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டனர் - இரு நாடுகளுக்கிடையில் ராஜதந்திர நெருக்கடி:-

 01:49

விசா மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்தியப் பெண் தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடேவின் ஆடையை அவிழ்த்து அதிகாரிகள் சோதனையிட்ட செயல் இரு நாடுகளிடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்தை முக்கியமானதாக எடுத்துக் கொண்டிருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆடையை அவிழ்த்து சோதனையிட்டது மட்டுமல்லாமல், அவரை போதைப் பொருள் குற்றவாளிகளுடன் அமர வைத்தும் அவமானப்படுத்தியுள்ளனர் அமெரிக்க அதிகாரிகள். நியூயார்க்கில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் துணைத் தூதராக இருப்பவர் தேவயானி. இவர் விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து செல்வதற்காகப் போயிருந்தபோது சாலையில்வைத்து இவரைக் கைது செய்த அதிகாரிகள், கை விலங்கிட்டு அழைத்துச் சென்ற செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த செயலுக்கு வழக்கம் போல கண்டனத்துடன் இந்தியா அமைதி காத்து வருகிறது. கடுமையான எச்சரிக்கையோ அல்லது அதிரடி நடவடிக்கை எதையுமோ இதுவரை இந்தியா எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் இந்திய அளவில் ஏற்பட்டு இருக்கின்றது.

தேவயானியிடம் அமெரிக்க அதிகாரிகள் டிஎன்ஏ சோதனைக்கான மாதிரியை எடுத்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில்தான் தேவயானியின் ஆடையை அவிழ்த்து அமெரிக்க அதிகாரிகள் அத்துமீறி நடந்து கொண்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவயானி விவகாரத்தைத் தொடர்ந்து, இந்தியா சென்றுள்ள அமெரிக்க எம்.பிக்கள் குழுவை சந்திக்க லோக்சபா சபாநாயகர் மீரா குமாரும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எஸ்.எஸ்.மேனனும் மறுத்துள்ளனர்.

தேவயானி விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வியன்னா உடன்படிக்கையின் 40வது பிரிவை அமெரிக்கா மீறியுள்ளது. இது மிகவும் கவலைக்குரியது, கண்டனத்துக்குரியது. தேவயானி ஒரு தூதரக அதிகாரி என்பது தெரிந்தும் கூட இப்படி நடந்து கொண்டுள்ளது வருத்தம் தருகிறது. அதிர்ச்சி அளிக்கிறது. வேண்டும் என்றே அவர்கள் இப்படி நடந்துள்ளனர் என்றனர். 1999ம் ஆண்டு முதல் ஐஎப்எஸ் அதிகாரி தேவயானி. அவர் தூதரக அதிகாரி என்றாலும் கூட அவருக்குப் சட்டப் பாதுகாப்பு சிறப்பு சலுகையைத் தர முடியாது என்று அமெரிக்கா திமிராகப் பேசி வருகிறது. மேலும் உயர் மட்ட அளவிலிருந்து வந்த உத்தரவுப்படியே தாங்கள் நடந்து வருவதாகவும், நியூயார்க் போலீஸார் கூறுகிறார்கள்.

இந்திய பெண் தூதர் கைதுக்கு எதிர்ப்பு.. அமெரிக்க எம்.பிக்களைச் சந்திக்க ராகுல், மோடி மறுப்பு

இந்தியத் துணைத் தூதர் தேவ்யானியை அமெரிக்கப் போலீஸார் அடாவடியாக கைது செய்து, கைவிலங்கிட்டும், ஆடைகளைக் களைந்தும் சோதனை செய்த செயலுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று நடப்பதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனான சந்திப்பை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் ரத்து செய்து விட்டனர். ஆனால் இந்தக் காரணத்திற்காகத்தான் ரத்து என்று ராகுல் காந்தியும், ஷிண்டேயும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. மாறாக, நாடாளுமன்றப் பணிகளில் பிசியாக இருந்ததால் இவர்கள் சந்திக்கவில்லை என்று அவர்களது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், துணைத் தூதருக்கு ஏற்பட்ட அவமானத்தால்தான் தான் அமெரிக்க குழுவை சந்திக்கவில்லை என்று வெளிப்படையாக மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்ட செய்தியில், நமது நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், அவர்களுக்குத் துணையாகவும், நமது தூதருக்கு அமெரிக்காவில் நடந்த அவமரியாதைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்த சந்திப்பை நான் நிராகரித்து விட்டேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே இதே குழுவை, இதே காரணத்திற்காக லோக்சபா சபாநாயகர் மீரா குமார் சந்திக்க மறுத்து விட்டார் என்பது நினைவிருக்கலாம். அமெரிக்காவிலிருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜார்ஜ் ஹோல்டிங், பீட் ஓல்சன், டேவிட் ஸ்க்வீகெர்ட், ராபர்ட் உடால், மெடலின் போர்டெல்லா ஆகியோர் அடங்கிய எம்.பிக்கள் குழு டெல்லி சென்றுள்ளது. இந்தக் குழுவைச் சந்திக்கத்தான் இந்தியத் தலைவர்கள் மறுத்துள்ளனர். அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு தனது அரசு வழங்கிய அடையாள அட்டைகளை திருப்பி அளிக்குமாறு இந்திய அரசு, அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டுள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/100469/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

அமெரிக்க ஏட்டுகளுக்கு எல்லா சட்டமும் தெரியும் என்றில்லை.. தெருவில் ஏதாவது சந்தேகத்தில் மறித்திருக்க வாய்ப்பு உள்ளது.. தேவையான அடையாள அட்டை ஏதும் இல்லாமல் சென்றிருந்தால் சிக்கலில் மாட்டியிருக்க வாய்ப்பு உண்டு. :blink:

ஆனானப்பட்ட எம்.கே நாராயணனே சத்தம் வைக்காமல் கொழும்பு வீதியொன்றில்.. நடந்தே ஹோட்டலுக்குப் போனவர்.. :D இதையெல்லாம் பெரிசுபடுத்தப்படாது.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இப்போது நடந்து கொள்ளும் விதம் தான் சிரிப்பாக உள்ளது. பாதுகாப்பினைக் குறைக்கின்றார்களாம்.அமெரிக்கர்களிடம் விசாரணை நடத்துகின்றார்களாம்...உண்மையில் இவ்வளவு நாளும், அமெரிக்கர்கள் இந்தியாவில் முரணாக நடந்து கொண்டதை அனுமதித்தார்கள் போலுள்ளது. தங்களுக்குப் பிரச்சனை வரும்போது தான் அதைக் கிண்டுகின்றார்கள் எனும்போது, அது இந்தியாவின் சட்டத்தை எப்படிப் பின்பற்றுகின்றார்கள் என்ற கேலிக்குரிய அரசாக வெளிப்படுத்துகின்றது. இருக்காதா பின்னே, மின்கலம் வாங்கியதற்காக 22 வருடங்களுக்கு மேலாக ஒருவனைச் சிறையில் போட்டு வதைக்கும் நாடு அல்லவா அது....

அமெரிக்காவின் செயலில் தப்பு உள்ளது போல் தெரியவில்லை. இந்தப் பெண் தூதரக பிரச்சனையில் சிறை செல்லவில்லை. தனிப்பட்டரீதியில் நடந்து கொண்ட விதத்துக்காகச் சிறை சென்றுள்ளார். ஒரு பெண்ணை அளவுக்கு மிஞ்சி வேலை வாங்கியதும், குறைந்த ஊதியம் கொடுத்ததும் மனித உரிமை மீறல். தொழிலாளர் விதியை மீறுகின்றார். நிச்சயம் இதற்குத் தண்டனை கிடைக்கத் தான் வேண்டும். இதற்குப் போய் இந்தியாவில் பழிவாங்குகின்றோம், புடுங்குகின்றோம் என்பது, தேர்தல் நேரத்துக்காப் பாவிக்கும் ச்சாண்டி...

Link to comment
Share on other sites

இந்தியா கடுமையான பதிலடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

 

 

 

குண்டை கொண்டு வந்து போட்டு விடுமோ என பயமாக உள்ளது. சில வேளை 3ம் உலக யுத்தம் கூட உருவாகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த வீடியோவில் மன்மோகன் சிங் என்னத்தை செய்கிறாரோ அதுபோல தான் இந்தியாவின் கடுமையான நடவடிக்கையாக இருக்கும்  :D

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஏட்டுகளுக்கு எல்லா சட்டமும் தெரியும் என்றில்லை.. தெருவில் ஏதாவது சந்தேகத்தில் மறித்திருக்க வாய்ப்பு உள்ளது.. தேவையான அடையாள அட்டை ஏதும் இல்லாமல் சென்றிருந்தால் சிக்கலில் மாட்டியிருக்க வாய்ப்பு உண்டு. :blink:

ஆனானப்பட்ட எம்.கே நாராயணனே சத்தம் வைக்காமல் கொழும்பு வீதியொன்றில்.. நடந்தே ஹோட்டலுக்குப் போனவர்.. :D இதையெல்லாம் பெரிசுபடுத்தப்படாது.. :lol:

 

விசயம் சாதாரண சந்தேகமல்ல. விசா மோசடி, வேலையாளுக்கு உரிய சம்பளம் கொடுக்காமை போன்ற குற்றச் சாட்டுகள் அமெரிக்காவில் பாரதூரமானவை. இது போன்ற விதிமீறல்களை இந்தியர்கள் பலர் இங்கு செய்கிறார்கள். பெற்றோரைப் பிள்ளை பார்க்கக் கூப்பிட்டு விட்டு அவர்களுக்கு தாங்கள் காசு செலவு செய்ததாக பொயக்கணக்கு எழுதி வரி ஏய்ப்பு செய்வது எல்லாம் பல இடங்களில் நடக்கிறது. அது போன்ற ஒரு விடயமாக இருக்கக் கூடும். ராஜ தந்திரப் பாதுகாப்பில் இருக்கும் பல நாட்டவர்கள் இப்படியான வேலைகளைத் துணிந்து செய்வதுண்டு-அண்மையில் ரஷ்யர்கள் பலரும் இப்படியான கேஸ் ஒன்றில் மாட்டிக் கொண்டார்கள். 

 

Link to comment
Share on other sites

விசயம் சாதாரண சந்தேகமல்ல. விசா மோசடி, வேலையாளுக்கு உரிய சம்பளம் கொடுக்காமை போன்ற குற்றச் சாட்டுகள் அமெரிக்காவில் பாரதூரமானவை. இது போன்ற விதிமீறல்களை இந்தியர்கள் பலர் இங்கு செய்கிறார்கள். பெற்றோரைப் பிள்ளை பார்க்கக் கூப்பிட்டு விட்டு அவர்களுக்கு தாங்கள் காசு செலவு செய்ததாக பொயக்கணக்கு எழுதி வரி ஏய்ப்பு செய்வது எல்லாம் பல இடங்களில் நடக்கிறது. அது போன்ற ஒரு விடயமாக இருக்கக் கூடும். ராஜ தந்திரப் பாதுகாப்பில் இருக்கும் பல நாட்டவர்கள் இப்படியான வேலைகளைத் துணிந்து செய்வதுண்டு-அண்மையில் ரஷ்யர்கள் பலரும் இப்படியான கேஸ் ஒன்றில் மாட்டிக் கொண்டார்கள்.

தேவயானி நல்ல களையா இருக்கிறா.. :wub: அவக்கேன் உந்தத் தேவையில்லாத வேலை?? :unsure::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ ஒரு காங்கிரஸ் பெரும்புள்ளியின் கையாளாகத்தான் இந்தப் பெண்மணி இந்தப் பதவியைப் பெற்றிருக்க வேண்டும்.  செய்த பிழையை விசாரிக்க வேண்டியது அமெரிக்கப் பொலீஸாரின் கடமை.  சும்மா முகத்துக்கு அஞ்சி இதையெல்லாம் விடமுடியாது. உவவை பெரிய பதவியில் வைத்து அமெரிக்காவுக்கு அனுப்பியது காங்கிரஸ் அரசாங்கத்தின் தவறு. அதற்காக அமெரிக்காவுடன் ராஜதந்திர இழுபறிகளில் காங்கிரஸார் ஈடுபடுவது இந்தியாவுக்கு நல்லதல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவயானி நல்ல களையா இருக்கிறா.. :wub: அவக்கேன் உந்தத் தேவையில்லாத வேலை?? :unsure::D

 

எந்தச் செய்தியக் கொண்டு வந்து போட்டாலும் அதில இதையே தேடுங்கோ! நல்லா வருவீங்கப்பா நீங்களெல்லாம்! உங்களோட சேர்ந்து என்னை மாதிரி நல்ல பிள்ளையளும் பழுதாப் போகுங்கள், நான் வாறன்! <_<

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவயானி நல்ல களையா இருக்கிறா.. :wub: அவக்கேன் உந்தத் தேவையில்லாத வேலை?? :unsure::D

அதுதானே உடையெல்லாம் களைந்து பரிசோதனை வேற ஐயோ...ஐயோ...இதால இரவு நித்திரையும் போச்சே..
Link to comment
Share on other sites

அதுதானே உடையெல்லாம் களைந்து பரிசோதனை வேற ஐயோ...ஐயோ...இதால இரவு நித்திரையும் போச்சே..

அந்தக் கொடுமையைத் தாங்கின ஏட்டய்யாவுக்கு நிவாரணம் குடுப்பினமா?? :blink::D

Link to comment
Share on other sites

எந்தச் செய்தியக் கொண்டு வந்து போட்டாலும் அதில இதையே தேடுங்கோ! நல்லா வருவீங்கப்பா நீங்களெல்லாம்! உங்களோட சேர்ந்து என்னை மாதிரி நல்ல பிள்ளையளும் பழுதாப் போகுங்கள், நான் வாறன்! <_<

 

ஆமாம் நானும் கொஞ்சம் கெட்டு போய்க்கொண்டிருக்கிற மாதிரி ஒரு பீலிங் .............. :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இப்போது நடந்து கொள்ளும் விதம் தான் சிரிப்பாக உள்ளது. பாதுகாப்பினைக் குறைக்கின்றார்களாம்.அமெரிக்கர்களிடம் விசாரணை நடத்துகின்றார்களாம்...உண்மையில் இவ்வளவு நாளும், அமெரிக்கர்கள் இந்தியாவில் முரணாக நடந்து கொண்டதை அனுமதித்தார்கள் போலுள்ளது. தங்களுக்குப் பிரச்சனை வரும்போது தான் அதைக் கிண்டுகின்றார்கள் எனும்போது, அது இந்தியாவின் சட்டத்தை எப்படிப் பின்பற்றுகின்றார்கள் என்ற கேலிக்குரிய அரசாக வெளிப்படுத்துகின்றது. இருக்காதா பின்னே, மின்கலம் வாங்கியதற்காக 22 வருடங்களுக்கு மேலாக ஒருவனைச் சிறையில் போட்டு வதைக்கும் நாடு அல்லவா அது....

அமெரிக்காவின் செயலில் தப்பு உள்ளது போல் தெரியவில்லை. இந்தப் பெண் தூதரக பிரச்சனையில் சிறை செல்லவில்லை. தனிப்பட்டரீதியில் நடந்து கொண்ட விதத்துக்காகச் சிறை சென்றுள்ளார். ஒரு பெண்ணை அளவுக்கு மிஞ்சி வேலை வாங்கியதும், குறைந்த ஊதியம் கொடுத்ததும் மனித உரிமை மீறல். தொழிலாளர் விதியை மீறுகின்றார். நிச்சயம் இதற்குத் தண்டனை கிடைக்கத் தான் வேண்டும். இதற்குப் போய் இந்தியாவில் பழிவாங்குகின்றோம், புடுங்குகின்றோம் என்பது, தேர்தல் நேரத்துக்காப் பாவிக்கும் ச்சாண்டி...

 

 

நீங்கள் சொன்னது சரி. அவர் கைதுசெய்யப்பட்டிருப்பது சட்டத்திற்குப் புறம்பான ரீதியில் ஒருவரை அமெரிக்காவுக்குள் கொண்டுவந்து மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்தியதற்காகத்தான். மாறாக இந்தியர் என்பதற்காக அல்ல. 

 

அதுமட்டுமல்லாமல், இந்த அதிகாரியின் மேல் இந்தியாவிலேயே சட்டத்திற்குப் புறம்பான வகையில் சொத்துச் சேர்த்ததற்காக வழக்கொன்றும் பதியப்பட்டிருக்கிறது. தனது ராஜதந்திரச் செல்வாக்கைப் பாயன்படுத்தி இவ்விரு குற்றங்களையும் இவர் புரிந்திருக்கிறார் என்று இந்தியச் செய்திச் சேவை ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிற்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Devyani-Khobragade-seithy-20131217.jpg

அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில், துணை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் தேவயானி கோபர்கடே (39) போலியான தகவல்கள் மூலம் விசா மோசடி செய்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் ரூ.1 கோடியே 50 லட்சம் ஜாமீனில் அவர் விடப்பட்டார். இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் அவரை அவமானபடுத்தும் விதமாக அதிகாரி தேவயானி அவர், நியூயார்க்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பொதுவான சிறையில் அடைக்கபட்டார் இதில் போதைமருந்து குற்றவாளிகள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் வைக்கபடும் சிறையாகும்.

  

துணைத்தூதர் அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் இவ்வாறு நடத்தப்படுவது இந்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு டெல்லி வந்துள்ளது. நேற்று அவர்கள் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனன் ஆகியோரை சந்திப்பதாக இருந்தது. ஆனால், இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அவர்களுடனான சந்திப்பு ரத்து செய்யப்ட்டது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=99259&category=IndianNews&language=tamil

 

 

 

இவர் சட்டத்திற்குப் புறம்பான ரீதியில், தவறான வேலைவிசா ஒன்றின்மூலம் ஒருவரை வேலைக்குக் கொண்டுவந்து, அவருக்கு மணித்தியாலம் ஒன்றிற்கு 4 டாலர்களுக்கும் குறைவான ஊதியத்தையே வழங்கி வேலை வாங்கியிருக்கிறார். இத்தனைக்கும் இவர் இந்தியாவில் பெயர் பெற்ற பெண் உரிமை வாதியாம் !!! இது எப்படியிருக்கு???

Link to comment
Share on other sites

சர்வதேச குற்ற்வாளிகளான விஜய் நம்பியார், கமேஸ் சர்மா, சிவசங்கர் மேனன் போன்றவர்களை கொண்ட நாடு, தேவயானியை கொண்டிருப்பதில் எந்த வெக்ககேடும் இல்லை. இவர்கள் பிரபாகனை ஏமாற்றியது மாதிரி எல்லோரையும் ஏமாற்றிவிட்டத்தாக நினைத்தால் அவர்கள் பார்த்து வைத்திருப்பார்கள் என்றதை புரிந்து கொள்ள வேண்டும். காவாட்டில் துப்பல் வங்கிய படி பயணம் செய்த சுப்பிரமணிய சுவாமியால் மகிந்தா கொடுக்கும் பணத்துக்கு மகிந்தாவை காப்பாற்ற முடியும். இந்த தேவயானி தானும் யாருக்காவது பணம் கொடுத்து பார்க்க வேண்டியதுதானே.

எத்தனைதரம் இந்திய ராஸ்ரபதி அபுதுல் கலாமை சோதனை செய்தார்கள். அப்போது எதுவும் செய்யாமல் தட்டிகழித்த்தால்தான் இது வந்தது. 

 

அமெரிக்க ரேடியோ செய்திகளின் படி இந்தியா அமெரிக்க தூதுவராலய அதிகாரிகளுக்கு ஜெனிவா மகாநாட்டின் கடமைகளை மறுத்துவிட்டத்தாக குற்றம் சாட்டப்படுகிறது. குற்றவாளியை தண்டித்தற்காக குற்றம் இழைக்காத அதிகாரிகளை இந்தியா தண்டிக்கிறது. இது இஹ்தியாவில் முசோலினியின் ஆட்சி நடைபெறுவதாலாகும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான நடுத்தர வயது aunty விட்டுப் பிடித்திருக்கலாம். :D

Link to comment
Share on other sites

அழகான நடுத்தர வயது aunty விட்டுப் பிடித்திருக்கலாம். :D

 

என்னத்தை… விட்டு… என்னத்தை… பிடிச்சு…!!!  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ

இந்தியாவில் பெண்களை  ரொம்ப நன்றாக நடாத்துவது  போல்........... :(  :(

Link to comment
Share on other sites

இந்தியா இப்படி துள்ளுவது ஒரு விதத்தில் நல்லது...அப்போது தான் இந்த பிரச்னை இன்னும் பெரிதாக எல்லாராலும் பார்க்கப்படும்...பின்

எல்லா நாடும் அங்கு உள்ள இந்திய தூதரகங்களை கவனித்தால் அவர்கள் செய்யும் தில்லு முள்ளு எல்லாம் வெளியில் வரும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பொதுவாக, உலக நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் விதி முறைகளுக்குள் அடங்கும் என நினைக்கிறேன்!

 

பொதுவாகப் புதிதாக ஒருவரை, மற்றவர்கள் இருக்கும் சிறைக்குள் அனுமதிக்கும் போது, ஏதாவது போதை வஸ்துக்கள், மற்றும் தடுக்கப்பட்ட பொருட்களை, உள்ளே எடுத்துச் செல்லாமல் தடுப்பதற்காக, (In the body cavity) பெண் காவலர்களாலேயே செய்யப்படும் சோதனையாகும்! 

 

இதில் 'இந்தியர்' என்பதற்காக, ஏன் விதிவிலக்குக் கொடுக்கப்படவேண்டும் எனத் தெரியவில்லை! :o

 

இந்தியர்கள் பொதுவாக, உணர்ச்சி வசப்பட்டுத் துள்ளுவது வழமை தானே!

 

லட்சுமியின் படத்தில் 'நீச்சலுடை'  அணிந்ததற்காக. சிட்னியில் அண்மையில் துள்ளினார்கள்! :wub:

 

267625-india-australia-fashion-protest.j

 

நான் இலட்சுமியை அவமதித்து சரியென்று சொல்ல வரவில்லை!

 

இந்தியாவில் சாராயத் தவறணையில், கல்லாப்பெட்டிக்குப் பக்கத்தில் 'லட்சுமி' படம் இருக்கிறது தானே?

 

அங்கு ஏன் இந்தியக்கொடியை இவர்கள் எரிப்பதில்லை? :icon_mrgreen:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய போன்ற நாடுகளில் சிறைகளில் அரசியல்வாதிகள், நடிகர்கள், சாமிமார்கள் இருப்பதால் அவர்களோடு இவர் போன்ற குற்றவாளிகளை அடைக்கலாம். என்ன செய்வது அமெரிக்காவில் பாலியல் தொழிலாளர்களே பெரும்பான்மையாகக் குற்றவாளிகளாக உள்ளனர் போலுள்ளது. அதனால் தான் அவர்களோடு அடைக்க வேண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

டெல்கி பாலியல் வழக்கை PBS ல் ஒருதடவை ஆராய்ந்தார்கள். இந்தியாவில் பாலியல் கடுப்பு நோய் தலைவிரித்து ஆடுவதாக முடிவுக்கு வந்தார்கள். தமிழ் படங்களை பற்றி பிரஸ்தாபித்தார்கள். அங்கு Rape காட்சி படங்கள் சக்கை போடு போடுமென்றார்கள். இந்துச் சாமிகள் தம்பாடு அதே நேரம் இந்த இந்திய சாமிகளும் தம் பாடு.

 

இந்தியாவை மதிக்க  வேண்டிய நாடுகளான சீனா, பாகிஸ்த்தான்,  இந்தியாவால் இலங்கையில் ஒன்றும் செய்ய முடியாமல் இருப்பதை காண்கிறார்கள். இதனால் எல்லையில் உபத்திரவம் கொடுக்கிறார்கள். மேற்கு நாடுகள் இந்தியாவுக்காக புலிகளை அழிக்க உதவிவிட்டு இந்தியாவால் இந்து சமுத்திரத்தில் ஏதாவது செய்ய முடியுமா எனக் காத்திருந்தார்கள். இந்தியாவால் சீனாவுடன் இந்து சமுத்திரத்தில் வாலாட்ட முடியவில்லை.

 

இனி அவர்கள் இந்து சமுத்திரத்தில் தாம் காலூண்ற இலங்கையை நேராக கையாள முயல்வார்கள். அது தமிழருக்கு இழப்பாகவும் இருக்கலாம். 

 

 

Link to comment
Share on other sites

இலங்கையை மேற்கு நேரடியாக கையாளாமல் இருக்க, இந்தியாவுக்கு இலங்கைத்தீவில் இப்போது ஒரு "பிரச்சினை" தேவைப்படுகிறது. ஒரேயடியாக மௌனிக்கப்பட்ட காரணம் இப்போது தெரியவருகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.