Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

AK 47 தானியங்கித் துப்பாக்கியை கண்டுபிடித்தவர் மரணம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏ.கே 47 ரக ரஷ்சியத் தயாரிப்பு தானியங்கித் துப்பாக்கியை கண்டுபிடித்த Mikhail Kalashnikov தனது 94 வயதில் ரஷ்சியாவில் இயற்கை மரணம் அடைந்துள்ளார். இவர் இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியினரின் துப்பாக்கிகளுக்குப் போட்டியாக இதனை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தி இருந்தாலும்.. உலகம் பூராகவும்.. மிக பெருமளவில் பாவிக்கப்படும் அதேவேளை.. பெருமளவு மனிதப்படுகொலைகளுக்கு காரணமாக இருக்கும் ஆயுதமாக இது இன்று மாறி உள்ளது. 

தமிழில் செய்தி ஆக்கம்: நெடுக்ஸ். பிரதான மூலம்: http://www.bbc.co.uk/news/world-europe-25497013

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆயுதத்தை பெருமளவு தயாரித்து வெளியிடுவதில் பெண்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பிறக்காமலே இருந்திருக்கலாம்!

உலகம் இன்னும் அழகியதாக இருந்திருக்கும்!

குறிப்பாக ஆபிரிக்காவும், ஆசியாவும், தென் அமெரிக்காவும்........!!! :o

  • கருத்துக்கள உறவுகள்
இடது கை வளமானவர்களுக்காக கண்டு பிடிக்கப்பட்டது AK 47 அனேகமாக இவரும் இடது கை வளமுடையவராகத்தான் இருக்கவேண்டும்  :unsure:
 
நீ போனாலும் உன் நாமம் இருந்து கொண்டே இருக்கும்  

உங்களுக்கு  என் வீரவணக்கம்.

என்னையும் என் மக்களையும் காப்பாற்ற சிலகாலம் பயன்பட்டமைக்காக.

நீயில்லாமல்  சிலகாலம் எனக்கு நித்திரை வருவதில்லை. கைகள் தலையணையை தாண்டி உன்னை தேடுவதை என்னால் தடுக்க முடியவில்லை. உன்னுடன் சேர்த்து mag torch ஐயும் தேடுகிறது.

Edited by பகலவன்

unkalukku thalai vananki vanakkam.

  • கருத்துக்கள உறவுகள்

பல பேருக்கு அஞ்சலி செய்ய வைத்தவனுக்கு அஞ்சலிகள்

உலகில் பல கெரில்லா விடுதலை அமைப்புகளால் பயன்படுத்தபட்ட ஆயுதம் ஏ கே 47 ஆகும். இடத்திற்கு இடம் நகரும் கெரில்லா இயங்கங்களுக்கு இந்த ஆயுதம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பிறக்காமலே இருந்திருக்கலாம்!

உலகம் இன்னும் அழகியதாக இருந்திருக்கும்!

குறிப்பாக ஆபிரிக்காவும், ஆசியாவும், தென் அமெரிக்காவும்........!!! :o

உங்கள் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  ஏ.கே 47 இல்லாது இருந்தால், அமெரிக்க அல்லது சீனத் தயாரிப்புக்கள் அந்த இடத்தை நிரப்பியிருக்கும்.ஆமெரிக்கா இன்னும் இன்னும் தனது வியாபார நலனுக்காக போர்களை ஊக்குவித்திருக்கும். 

இந்தத் துப்பாக்கியின் அதியுயர் தரமே பல நாடுகளிலும் இந்தத் துப்பக்கியை ப்யன்படுத்துவதிற்கு ஏதுவாயிற்று. 

சுருக்கமாகச் சொல்லப்போனால், ஏழைகளின் சிறந்த தெரிவு இந்தத் துப்பாக்கி.

மற்றும்படி எல்லாத் துப்பாகிகளுமே மற்றையவர்களின் உயிரைக் குடிக்கவே கண்டுபிடிக்கப்பட்டு பாவிக்கப்படுகின்றன. இதில் நல்லதுப்பாக்கி, கெட்ட துப்பாகியென்றெல்லாம் கிடையாது.

மற்றும்படி எல்லாத் துப்பாகிகளுமே மற்றையவர்களின் உயிரைக் குடிக்கவே கண்டுபிடிக்கப்பட்டு பாவிக்கப்படுகின்றன. இதில் நல்லதுப்பாக்கி, கெட்ட துப்பாகியென்றெல்லாம் கிடையாது

எனக்கு ஒரு துப்பாக்கியையும் பிடிக்காது, ரகுநாதன்! :o

நாங்கள் 'கூர்ப்பின் பாதையின்' இடைவழியில் தான் நிற்கிறோம்! :rolleyes:

எனவே எந்தத் துப்பாக்கியும், முழுவதும் மனவளர்ச்சியடையாத ஒரு குழந்தையின் கையில் கத்தியைக் கொடுப்பது போன்றதே! :icon_idea: 

தனது மனைவியைக் கொல்பவனும், தனக்கென ஒரு 'நியாயம்' வைத்திருப்பான் தானே!

அவன் கையில் துப்பாக்கியிருந்தால்  அவன் கொலை செய்ய எடுப்பது, சில வினாடிகளே!

அடித்து அல்லது கழுத்தை நெரித்துக் கொல்ல , சில நிமிடங்கள் எடுக்கும்! அவனுக்குத் தனது மனதை மாற்றிக்கொள்ளக் கொஞ்சம் அவகாசம் கிடைக்கும்! :D

 ஏ.கே 47 இல்லாது இருந்தால், அமெரிக்க அல்லது சீனத் தயாரிப்புக்கள் அந்த இடத்தை நிரப்பியிருக்கும்.ஆமெரிக்கா இன்னும் இன்னும் தனது வியாபார நலனுக்காக போர்களை ஊக்குவித்திருக்கும். 

இந்தத் துப்பாக்கியின் அதியுயர் தரமே பல நாடுகளிலும் இந்தத் துப்பக்கியை ப்யன்படுத்துவதிற்கு ஏதுவாயிற்று. 

aarampathil STF (SAS Trained) American version M16 ai paaviththaarkal. kanni vetiyil  sithainthathaal athu niruththappattathu.

மூன்றாம் உலகநாடுகளின் மரபு வழி இராணுவங்கள் முதல் உலகிலுள்ள அனைத்து விடுதலை இயக்கங்கள் வரை பொது தாக்குதல் ஆயுதமாகப் பயன்படுத்திய Kalachnikov என்று அழைக்கப்படும் ஏகே 47 என்ற பெயரால் உலகம் முழுவதும் அறியப்பட்ட தானியங்கி துப்பாக்கியின் உருவாக்குனர்-தயாரிப்பாளர் மிக்கைல் கலாஷ்நிகோவ்   (Mikhaïl Kalachnikov) தனது 94 வது வயதில் நேற்று திங்கட்கிழமை காலமானார்.

நீண்ட காலமாக நோய்வாய்பட்டிருந்த அவர் கடந்த ஒரு மாதமாக ரஷ;ய தலைநகர் மொஸ்க்கோவிலிருந்து 1300 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அவரது சொந்த ஊர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலமானதாக ரஷ;ய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.200px-michael_kalashikov.jpg?w=190

1938 ல் செஞ்சேனைப் படைப்பிரிவில் சேர்ந்த மிக்கைல் கலாஷ்நிகோவ்  (Mikhaïl Kalachnikov)அங்கே பீரங்கி படை பிரிவின் ஒட்டுநர் மற்றும் பணியாளராக பணியமர்த்தப்பட்டார். விரைவில் டி 34 பீரங்கிப் படைக்கலன் அணியிலுள்ள 24 வது பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இந்த படைப்பிரிவு நாசிப்படைகளுக்கு எதிரான பிரயன்ஸக் தாக்குதலில் எனப்படும் போர் முனையில் மிக மோசமான தோல்வியை சந்தித்து பின் வாங்கின

இந்த போருக்குப்பின் ஏற்பட்ட காயம்காரணமாக மிக்கைல் கலாஷ்நிகோவ்   (Mikhaïl Kalachnikov)6 மாதம் ஒய்வில் இருக்கும் நிலை ஏற்பட்டது

அவர் மருத்துவமனையில் இருக்கும் போது சோவியத் செஞ்படையை சோந்த பல வீரர்கள் படையில் பயன்படுத்தும் துப்பாக்கிகளின் செயல்பாடுகள் குறித்து மேலிடத்துக்கு முறைப்பாடு செய்ததை அறிந்தார். செம்படைகளிடம் உறுதியான செயல் திறன் கொண்ட துப்பாக்கிகள் இல்லாத நிலையை மாற்ற வேண்டும் என்று அவர் விரும்பினார்

250px-ak-47_type_ii_part_dm-st-89-01131.உடல் நலிவடைந்திருந்த நிலையிலும் யுத்த முனையில் தானியங்கி தாக்குதல் ஆயுத்தை கையாள்வதில் உள்ள சிக்கல்களையும் இக்க150px-mikhail_kalashnikov.jpg?w=140ட்டான நிலையில் தானியங்கி ஆயுதங்கள் செயலழந்து இயங்கா நிலையை அடையும் போது ஏற்படும் ஆபத்தையும் இழப்புக்களையும் கவனத்தில் கொண்டு மிக இலகுவான வகையில் கையாளக் கூடிய தானியங்கி துப்பாக்கியை அவர் வடிவமைத்தார் 

ஆனால் அவர் உருவாக்கிய முதல் எந்திரத்துப்பாக்கியை செம்படை தலைமை கட்டளைப்பீடம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் தனது முயற்சியை கைவிடாத அவர் தன்னுடைய தேடல் மற்றும் அனுபவம் என்பவற்றை வைத்து 1947 ல் ஏகே 47 ரக தானியங்கி துப்பாக்கியை வடிவமைத்து ஆயுத செயற்பாட்டில் மாபெரும் பாச்சலையும் புரட்சியையும் ஏற்படுத்தினார்.

சோவித் செம்படையில் மட்டுமல்லாமல் அதன் நேச நாட்டுப்படைகள் மற்றும் விடுதலை இயக்கங்கள் என அனைவரும் பயன்படுத்தும் அளவுக்கு ஏகே 47 தானியங்கி துப்பாக்கி புகழ்பெற்றது.அத்துடன் சேர்த்து அவருடைa கலாஷ்நிகோவ்   Kalachnikov என்ற பெயரும் உலகளவில் பிரபலமானது

அதன் பின் இந்த துப்பாக்கியின் அடுத்தகட்ட வடிவங்களான ஆர் பி கே மற்றும் பி கே வகைத் துப்பாக்கிகளும் அவரால் வடிவமைக்கப்பட்டது.

ak-47.jpg?w=567&h=2481997ம் ஆண்டு ஏகே 47 தானியங்கி துப்பாக்கி வடிவமைக்கப்பட்ட 50 வது ஆண்டுப் பொன் விழாவில் உரையாற்றிய மிக்கைல் கலாஷ்நிகோவ்  ((Mikhaïl Kalachnikov)

‘தான் தனது படைப்புகளுக்காகப் பெருமையடைவதாகவும் அதே வேளையில் அதைத் தீவிரவாதிகளும் சமூக விரோதிகளும் அப்பாவி மக்களுக்கும்; குழந்தைகளுக்கும் எதிராகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டு அதைக் கண்டுபிடித்தமைக்கு மிகுந்த வேதனை அடைவதாகவும்’ குறிப்பிட்டார்

மிக்கைல் கலாஷ்நிகோவ்  (Mikhaïl Kalachnikov); இரு முறை சோசலிச தொழிலாளர்களின் மாவீரன் (Hero of the Socialist Labours) என்றப் பட்டத்தைப் பெற்றுள்ளார். தொழில்நுட்ப அறிவியலில் உயர்தர முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். உலகளவில் இதுவரை 10 கோடிக்கும் அதிகமான ஏகே 47 ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கின்ற போதிலும் அவர் அதற்காக எந்தப் பயனும் அடைந்ததில்லை. அவர் சன்மானமாகப் பெற்றுக் கொண்டது மாநில ஒய்வூதியம் மட்டுமே.இறக்கும் வரை அரச ஓய்வூதியம் பெறும் ஒருவராகவே வாழ்ந்து மடிந்தார்

http://sivasinnapodi.wordpress.com/2013/12/23/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%87-47-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

Edited by navam

ஆழ்ந்த இரங்கல் AK 47 :(

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  ஏ.கே 47 இல்லாது இருந்தால், அமெரிக்க அல்லது சீனத் தயாரிப்புக்கள் அந்த இடத்தை நிரப்பியிருக்கும்.ஆமெரிக்கா இன்னும் இன்னும் தனது வியாபார நலனுக்காக போர்களை ஊக்குவித்திருக்கும். 

இந்தத் துப்பாக்கியின் அதியுயர் தரமே பல நாடுகளிலும் இந்தத் துப்பக்கியை ப்யன்படுத்துவதிற்கு ஏதுவாயிற்று. 

சுருக்கமாகச் சொல்லப்போனால், ஏழைகளின் சிறந்த தெரிவு இந்தத் துப்பாக்கி.

மற்றும்படி எல்லாத் துப்பாகிகளுமே மற்றையவர்களின் உயிரைக் குடிக்கவே கண்டுபிடிக்கப்பட்டு பாவிக்கப்படுகின்றன. இதில் நல்லதுப்பாக்கி, கெட்ட துப்பாகியென்றெல்லாம் கிடையாது.

இவருக்கு நோபல் பரிசு வேறு கொடுத்ததாக ஞாபகம் ,

எங்கட ஆட்களும் AK 47 ஐ மரத்தில செய்து வைத்திருந்தவை .

என்னை பொறுத்தவரை செல்போன் மாதிரிதான் உதுவும்,பாவிப்பவரை பொறுத்துத்துதான் எல்லாம் .எதற்கு கண்டுபிடித்தார்கள் என்பதையே தெரியாதவர்கள் கையில் போனால் அம்பிட்டுத்தான் .

ஒரே மிஸ் கால் தான் .மன்னிக்கவும் ஒரே மிஸ் பயர் தான் :icon_mrgreen: .

இன்னைக்கு வெள்ளனவே சந்திரமுகி ஆட்டமாக்கும் கடும் குளிர் பாவம் நீங்களும் விடியல்காலைமை மட்டு வெட்டும் இந்தகருத்தை தெரி......

கெற்றபோல் அடிக்கின்ற ஆட்களின்ரை கையில  AK போனால் எப்படிஇருக்கும் . :icon_mrgreen: .

  • கருத்துக்கள உறவுகள்

கெற்றபோல் அடிக்கின்ற ஆட்களின்ரை கையில  AK போனால் எப்படிஇருக்கும் . :icon_mrgreen: .

நீங்கள் எந்த துப்பாக்கி வைத்திருந்தீர்கள் ?? கற்றபொலோ?? அல்லது மரத்துப்பாக்கியோ?? சும்மா, தெரிந்துகொள்ளலாம் என்றுதான் கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
AK-47  ஐ ரசியாவிலும் விட அமெரிக்க இந்திய கருப்பு சந்தைகள்தான் அதிகம் தயாரிக்கின்றன.
இன்று உலகில் பாவனையில்  இருக்கும் 75% மானவை தயாரிப்பு நிறுவனத்தின் பெயரோ .. இடமோ இல்லாதவை.
 
இது பிரபலமாக அல்லது அதிக அளவில் பாவனைக்கு உட்படுவதற்கு காரணம். இலகுவான பராமரிப்பு.
எந்த சூழலிலும் பயன்படுத்த கூடியது. மழைக்காலம் என்றால் சில துப்பாக்கிகள் பிரச்சனைகளை கொடுக்கும் அது இராணுவ ரீதியான சண்டைகளுக்கு உதவாது. இந்தியாவின் SLR மிகவும் கனமானது அது திடீர் தாக்குதல்களை எதிர்கொள்ள ஒருபோதும் உதவாது. கனத்தை குறைத்து அலுமினிய உலோகத்தால் ஆனா அமெரிக்க தயாரிப்பு AR ரக துப்பாக்கிகள் மிகவும் விலையானவை. தவிர இதற்கான ரவைகள் தனித்துவமானவை.
கெரில்லா .....விடுதலை போராளிகளுக்கு இவை உதவுவதில்லை.
 
புலிகளை எடுத்தால் கூட ...... AR ரக துப்பாக்கிகள் தளபதிகளின் பாதுகாப்பு போராளிகளிடம்தான் அநேகமாக இருக்கும். நேரடியாக சண்டையில் இருப்பவர்கள் AK ரக துப்பாக்கிகளையே பாவிப்பார்கள். சிங்கள இராணுவமும் அதிக அளவில் அதை பாவனை படுத்துவதால் ............. சண்டையில் சிங்கள படைகளிடம் இருந்து  கைபெற்றும் ரவைகளை பாவித்தே சண்டையை தொடர்வது அவர்களுக்கு இலகுவாகிவிடும்.
 
மிகவும் இலகுவான தொழில் நுட்பம்!
சிறப்பான வடிவமைப்பு!
என்று பார்த்தால் அண்ணன் ................. வாழ்த்துக்கு உரியவர்!
 
உலகில் பல உயிர்களை பறித்து விட்டது.

இந்த துப்பாக்கி இல்லாவிட்டால் மனிதன் கத்தியாலும் கற்களாலும் சண்டையிட்டு செத்திருப்பான்.

இவரின் கண்டுபிடிப்பு கொலைகளை இலகுவக்கியதொடு மலிவாகவும் கிடைக்க வழிசெய்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Russian-President-Vladimir-Putin-C-pays-

ரஷ்ய தலைவரின் இறுதி வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

AK-47  ஐ ரசியாவிலும் விட அமெரிக்க இந்திய கருப்பு சந்தைகள்தான் அதிகம் தயாரிக்கின்றன.
இன்று உலகில் பாவனையில்  இருக்கும் 75% மானவை தயாரிப்பு நிறுவனத்தின் பெயரோ .. இடமோ இல்லாதவை.
 
இது பிரபலமாக அல்லது அதிக அளவில் பாவனைக்கு உட்படுவதற்கு காரணம். இலகுவான பராமரிப்பு.
எந்த சூழலிலும் பயன்படுத்த கூடியது. மழைக்காலம் என்றால் சில துப்பாக்கிகள் பிரச்சனைகளை கொடுக்கும் அது இராணுவ ரீதியான சண்டைகளுக்கு உதவாது. இந்தியாவின் SLR மிகவும் கனமானது அது திடீர் தாக்குதல்களை எதிர்கொள்ள ஒருபோதும் உதவாது. கனத்தை குறைத்து அலுமினிய உலோகத்தால் ஆனா அமெரிக்க தயாரிப்பு AR ரக துப்பாக்கிகள் மிகவும் விலையானவை. தவிர இதற்கான ரவைகள் தனித்துவமானவை.
கெரில்லா .....விடுதலை போராளிகளுக்கு இவை உதவுவதில்லை.
 
புலிகளை எடுத்தால் கூட ...... AR ரக துப்பாக்கிகள் தளபதிகளின் பாதுகாப்பு போராளிகளிடம்தான் அநேகமாக இருக்கும். நேரடியாக சண்டையில் இருப்பவர்கள் AK ரக துப்பாக்கிகளையே பாவிப்பார்கள். சிங்கள இராணுவமும் அதிக அளவில் அதை பாவனை படுத்துவதால் ............. சண்டையில் சிங்கள படைகளிடம் இருந்து  கைபெற்றும் ரவைகளை பாவித்தே சண்டையை தொடர்வது அவர்களுக்கு இலகுவாகிவிடும்.
 
மிகவும் இலகுவான தொழில் நுட்பம்!
சிறப்பான வடிவமைப்பு!
என்று பார்த்தால் அண்ணன் ................. வாழ்த்துக்கு உரியவர்!
 
உலகில் பல உயிர்களை பறித்து விட்டது.

அண்ண m-70 பாக்கேல்லியோ  இது இந்தியாவின் தயாரிப்பு (a.k 47 ) அந்தக் காலத்தில மண்டையன் குழுவும் ,தமிழ் தேசிய ராணுவமும் வைத்திருந்ததது .ஆனா ஒரு சதத்துக்கு உதவாதது .நாங்கள்  90 களில்  பயிற்சியின் போது குடுத்தோம் 

  • 2 weeks later...

அது M-70 என்பது எனக்கு இன்றுதான் தெரியும். தகவலுக்கு நன்றி.
நான் நாட்லில் இருந்த காலத்தில் புலிகள் அதை RAW AK (றோ ak) என்றுதான் அழைப்பார்கள்.
EP வலுகட்டயமாக இளைஞர்களை சேர்த்தபோது RAW றோ தான் அதை அவர்களுக்கு கொடுத்தது.
இந்திய இராணுவத்துடன் இந்தியா போய் பயிற்சி எடுத்துவிட்டு வந்து புலிகளை அழிக்க போவதாக கூறி ஊர் முழுதும் தாட்டு வைத்தார்கள். கூடி தாட்ட வர்கள்தான் புலிகளுக்கு எல்லாவற்றையும் கிண்டி எடுத்து கொடுத்தார்கள். இளவாலை சவக்காலையில் EP வந்து கிண்டியது என்று மக்கள் சொன்ன தகவலை கேட்டு புலிகள் கிண்டியதில் 175 வரையான RAW AK களை எடுத்தார்கள்.
அதுகும் தனி இரும்பினால் உருவாக்க பட்டதுதான். மற்றைய நாட்டு AK உடன் ஒப்பிடும்போது மிகவும் கனமானது. தனி இரும்பு என்பதால் அதன் சுடு குழல் எளிதில் துருபிடிக்க கூடியது. கூடிய பாராமரிப்பு அதிகம் தேவை. கெரில்லா போராளிகளுக்கு ஒருபோதும் உதவாது.
புலிகள் இராணுவ வடிவம் பெற்று இருந்ததால் அது உதவி இருக்கலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.