Jump to content

.இவர் [இவன் ] என்ன செய்கிறான்


Recommended Posts

வணக்கம் உறவுகளே ..............
 
உண்மையில் இந்தப்பதிவை இங்கே இணைத்து சில விடயங்கள தேடி அதனூடு பயணிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள வளர்ந்து வரும் கலைஞ்சன் என்ற சிந்தனையில் இங்கே இணைக்கிறேன் .
 
ஜெர்மனியில் வாழும் கலை சம்பந்தமான ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டு இந்த லிங்கை எனக்கு அனுப்பி .........தமிழனின் மானத்தை இந்த இளஞ்சன் வித்து விட்டான் என்றார் .......
 
பார்த்தேன் ,,,,,,,,மொழி விளங்கவில்லை .ஆனால் எதோ படம் காட்டுகிறான் என்று மட்டும் புரிந்தது .....ஒரு கீபோட்டை வைத்து குரங்கு விளையாட்டு காட்டுகிறான் என்பதை மட்டும் இவனது இசை சம்பந்தமான செயல்பாட்டில் அறிந்து கொண்டேன் .பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்க்கும் தொலைக்காட்சியில் இப்படி  இவன் கலையையும் ,எம் மானத்தையும் விற்று விட்டான் என்றே எனக்கு தோன்றுகிறது ............
 
கலையை ,அதன் சிறப்பை ,ஒரு வட்டத்திற்குள் ,தங்களை காட்ட வேண்டும் என்ற நோக்கில் தான் எம்முடைய முந்தய கலை படைப்புக்கள் ,கலைஞ்சர்கள் நடந்து கொண்டனர் ...........உன்னை நீயே அறிவாய்  என்ற வாசகத்திர்கிணங்க நாம் திறமைக்கும் ,உண்மைக்கும் முக்கியம் கொடுத்து .....திறமையான ,கலைஞ்சன்ர்களை ,படைப்புக்களை ,முன்னே கொண்டு வர முயற்சிப்போம் ................பொறாமை என்னும் பதத்தை கலை உலகம் மறக்கணும் .போட்டி என்னும் பதத்துடன் எம் கலையை நாமே ஆழுவோம் ,பூரணமாக ,ஆரோக்கியமாக .
 
இந்த இளஞ்சன் ஒரு வளர்ந்து வரும் கலைஞ்சன் .அனால் அவன் வழி நடாத்தப்பட்ட விதம் பிழையாக உள்ளது என எண்ணத்தான் தோன்றுகிறது .................இதற்கு இவனது பெற்றோர்களே முழுப்பொறுப்பு ................நன்றி ./
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழுமையாக அந்த ஒளிப்பதிவை பார்த்தேன்.
அதனை... இங்கு இணைக்கும் முயற்சியில்... பல தடவை முயன்று, தோற்று விட்டதால்...
முயன்றால்.. யாராவது இணையுங்கள். எனக்கு... அது நகைச்சுவையாக இருந்தது.
ஆனால்... மனைவியிடம்...
"இந்தப் பெடியனை, தாய்.. தகப்பன் எப்படி கட்டி ஆள்கிறார்கள்" என்று கேட்டேன்.
ந‌ல்ல‌ த‌மாஸ்... ஜேர்ம‌ன் தமிழ் சூப்ப‌ர் சிங்க‌ர். :D

Link to comment
Share on other sites

இந்த நிகழ்ச்சி வருடம் தோறும் யேர்மனிய தொலைக்காட்சியயில் நடைபெறும் நிகழ்ச்சி. SUPER STAR சிறந்த பாடகர்களுக்கான தேர்வுப்போட்டி வருடாவருடம் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வில் RECALL கிடைத்தால் அடுத்த கட்டத்திற்கு அழைக்கப்பட்டு அதில் தெரிவு செய்யப்படுவோர் மாலைதீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தொடர்சுற்றுப்போட்டியாக நடைபெற்று இறுதியில் நாடு திரும்பும் போது 15பேர்

தெரிவு செய்யப்பட்டு வருவார்கள். இவர்களை தெரிவு செய்வது நடுவர்கள் மட்டுமே.

 

தெரிவு செய்யப்பட்டவர்கள் 15பேரும் நேரடி மேடை நிகழ்வில் முதல்  பாடுவார்கள். அன்றைய நாளிலிருந்து பார்வையாளர்கள் வாக்களிப்பு தொடங்கும்.  முதல் நேரடி மேடையில் வாக்குகளின் அடிப்படையில் 5பேர் தவிர்க்கப்பட்டு அடுத்துவரும் 10பேரும் வாராவாரம் ஒவ்வொருவராக வாக்களிப்பின் படி விலக்கப்பட்டு இறுதியாக 2பேர் இறுதிச்சுற்றுக்கு வருவார்கள். இறுதிச்சுற்றில் வெல்கிறவருக்கு 5லட்சம் யூரோ பணமும் வழங்கப்பட்டு கௌரவம் பெறுவார்.

 

இம்முறை இந்த இளைஞன் தொலைக்காட்சியில் வந்ததும் ஒரு தமிழ் இளைஞன் வந்திருக்கிறான் என்ற எதிர்பார்ப்போடு தொலைக்காட்சி முன் குடும்பமாக எதிர்பார்ப்போடு காத்திருந்தோம். வந்த பையனோ தன்னை தமிழன் என்று சொன்னான். ஆனால் தன்னடக்கம் இல்லாத ஒருவராகி இறுதியில் நடுவர்கள் உனக்கு இசையென்பது வராது. வேண்டுமானால் வீட்டில் உனது மகிழ்ச்சியை நீ இசையாக அனுபவிக்கலாம் என்றார்கள்.

 

அடிக்கடி தற்போது இந்த நிகழ்ச்சி விளம்பரம் வருகிற போதெல்லாம் இந்த ஒளிப்பதிவு வந்து போகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், தமிழ் சூரியன், தமிழ் சிறி, சாந்தி!

 

இந்தப் பெடியின்ர பிரச்சனையை ஒரு பக்கம் விட்டுப்போட்டுப் பார்த்தால், எங்களிடம் எவ்வளவு பலம் இருக்கின்றது என்பது எம்மில் பலருக்குப் புரிவதில்லை!

 

ஒரு ஜேர்மன் மொழியிலுள்ள பதிவை, 7.40 மணிக்குத் தமிழ் சூரியன் இணைக்கிறார்! 

 

7.58 மணிக்குத் தமிழ் சிறியின் முதல் கருத்து வருகின்றது!

 

8.01 மணிக்குச் சாந்தியின் விளக்கம் கிடைக்கின்றது!

 

இப்படியான விடயம் ஒன்று யாழ் களத்தை விடவும், வேறு எங்குமே சாத்தியப்படாது என நினைக்கிறேன்!

 

ஜேர்மன் மட்டுமல்ல, உலகில் உள்ள எந்த மொழியிலும், பேச, எழுத, வாசிக்கத் தெரிந்த தமிழ் உறவுகள் இருப்பது எமது உண்மையான பலமாகும்! :lol:

 

எமது தலைவிதியை நாமே எழுதும் நிலை வருமானால், எமது பொருளாதாரத்தை நாமே கட்டியாளும் நிலை வருமானால், ஈழத் தமிழனுக்கு வானமே எல்லையாக இருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரமசுதன் ஆடிய தமிழ் டான்சை பார்த்தீர்களா... சாந்தி.
வாழ்க்கையே... வெறுத்துப் போச்சு எனக்கு.
"டீட்டர் போலன்", தனது ஆசனத்திலிருந்து... எழும்பி வந்து,
அந்தப் பெடியனுக்கு.. மைக் செற் பண்ணி வைத்தது... இன்னும் சூப்பர்.
கடைசியில்... நாலு, நடுவரும்... காதைப் பொத்திக் கொண்டு இருந்து விட்டார்கள்.
தமிழ் இளைஞன், ஜேர்மன் இளையோரை... ஒரு க‌லக்கு கலக்கி விட்டான்.
இந்தக் கிழமை பள்ளிக் கூடம் எல்லாம்... இது தான்.. ரொப்பிக் ரோக்.
அதிலும்... "டீட்டர் போலன்" நீங்க பாடியது... தமிழ்ப் பாடலா, ஆங்கிலப் பாடலா? என்று கேட்டது.. மறக்க முடியாது. :lol:

Link to comment
Share on other sites

உண்மையில் இந்த இளைஞ்சனிடம் எதோ ஒன்று இருக்குது .........எம் புலம்பெயர்வாழ் வாழ்வில் இந்த கலைத்தாகமுள்ள  இளைஞ்சனை இந்த நிலைக்கு இட்டு சென்ற நிலையில் நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆகிறோம் .....................
 
.இங்கே இதை நான் இணைத்தது ,இந்த இளைஞ்சனை கேவலப்படுத்தி ,நளினம் செய்யும் எந்த நோக்கமும் இல்லை ..............இந்த சம்பவம் தமிழீழ கலைஞ்சன் ஒவ்வொருவரையும் உறுத்தணும்........எம் கலை வளர்ச்சிக்கு தடையாக உள்ள ..மேடை மோகம் ,போலி புகழ் , பொறாமை ,ஆணவம் அனைத்தையும் களைந்து உலகத்தின் முன் எம் கலை சிறப்பை உயர்த்தணும் ................இணைந்து வாருங்கள் உங்களில் ஒருவனாக உயிர் உள்ளவரை சேர்ந்து பயணிக்க காத்திருக்கிறேன் ............. :)
Link to comment
Share on other sites

பரமசுதன் ஆடிய தமிழ் டான்சை பார்த்தீர்களா... சாந்தி.

வாழ்க்கையே... வெறுத்துப் போச்சு எனக்கு.

"டீட்டர் போலன்", தனது ஆசனத்திலிருந்து... எழும்பி வந்து,

அந்தப் பெடியனுக்கு.. மைக் செற் பண்ணி வைத்தது... இன்னும் சூப்பர்.

கடைசியில்... நாலு, நடுவரும்... காதைப் பொத்திக் கொண்டு இருந்து விட்டார்கள்.

தமிழ் இளைஞன், ஜேர்மன் இளையோரை... ஒரு க‌லக்கு கலக்கி விட்டான்.

இந்தக் கிழமை பள்ளிக் கூடம் எல்லாம்... இது தான்.. ரொப்பிக் ரோக்.

அதிலும்... "டீட்டர் போலன்" நீங்க பாடியது... தமிழ்ப் பாடலா, ஆங்கிலப் பாடலா? என்று கேட்டது.. மறக்க முடியாது. :lol:

உங்களுக்கு வாழ்க்கை வெறுத்துப்போச்சுது பிள்ளையள் ரெண்டும் பள்ளிக்கூடத்தில பிள்ளையள் அடிச்ச நக்கலை வீட்டில சொல்லிச் சொல்லி ஒரே பேச்சு. தொலைக்காட்சிக்கும் நடுவர்களுக்கும் ரசிகர்களுக்கும் நகைச்சுவைக் காட்சி ஆனால் பாடசாலைகளில் சக மாணவர்களால் இந்த நிகழ்ச்சி பிள்ளைகள் பலருக்கு மனவுளைச்சலைக் கொடுத்திருக்கிறது.

 

டீற்றாபோலன் இயல்பிலேயே தலைக்கனம் பிடித்த ஒரு கலைஞன். திறமையாளர்களைக் கூட தனது தலைக்கனத்தால் மேடையில் தளர வைத்து துரத்துகிற ஒருவர். அத்தகைய ஒரு மேடைக்கு அனுப்புகிற பெற்றோர் நண்பர்கள் தங்களது உண்மையான விமர்சனத்தை கட்டாயம் சொல்லி அவரை வழிப்படுத்தியிருக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உண்மையில் இந்த இளைஞ்சனிடம் எதோ ஒன்று இருக்குது .........எம் புலம்பெயர்வாழ் வாழ்வில் இந்த கலைத்தாகமுள்ள  இளைஞ்சனை இந்த நிலைக்கு இட்டு சென்ற நிலையில் நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆகிறோம் .....................
 
.இங்கே இதை நான் இணைத்தது ,இந்த இளைஞ்சனை கேவலப்படுத்தி ,நளினம் செய்யும் எந்த நோக்கமும் இல்லை ..............இந்த சம்பவம் தமிழீழ கலைஞ்சன் ஒவ்வொருவரையும் உறுத்தணும்........எம் கலை வளர்ச்சிக்கு தடையாக உள்ள ..மேடை மோகம் ,போலி புகழ் , பொறாமை ,ஆணவம் அனைத்தையும் களைந்து உலகத்தின் முன் எம் கலை சிறப்பை உயர்த்தணும் ................இணைந்து வாருங்கள் உங்களில் ஒருவனாக உயிர் உள்ளவரை சேர்ந்து பயணிக்க காத்திருக்கிறேன் ............. :)

 

 

ஆம்... தமிழ்ச்சூரியன்,

அவன் மேடைக்கு... வரும் போது, தான் வெல்வேன்... என்ற நம்பிக்கையுடன், வருகின்றான்.

வந்தவுடன்... மேடையில், உள்ள நடுவர்களிடம் துணிந்து போய்.. கை கொடுத்து, தனது அலப்பரையை... ஆரம்பிக்கின்றான்.

உண்மையில்.... நடுவர்களை, சரியாய்... கஸ்ரப் படுத்திப் போட்டான். :lol:

 

ஆனால்.. இதே.. நடுவர்களுக்கு, போட்டியில்.... தோல்வியுற்ற மற்றைய இளைஞர்கள், அவர்கள் மேசை மீதிருக்கும் கிளாஸ் தண்ணீரால் மூஞ்சையில் எத்தியிம், தாம் கொண்டு வந்த கிற்றாரை அவர்கள்... மேசை மேல் அடித்தும், உள்ளார்கள். :D

Link to comment
Share on other sites

ஆம்... தமிழ்ச்சூரியன்,

அவன் மேடைக்கு... வரும் போது, தான் வெல்வேன்... என்ற நம்பிக்கையுடன், வருகின்றான்.

வந்தவுடன்... மேடையில், உள்ள நடுவர்களிடம் துணிந்து போய்.. கை கொடுத்து, தனது அலப்பரையை... ஆரம்பிக்கின்றான்.

உண்மையில்.... நடுவர்களை, சரியாய்... கஸ்ரப் படுத்திப் போட்டான். :lol:

 

ஆனால்.. இதே.. நடுவர்களுக்கு, போட்டியில்.... தோல்வியுற்ற மற்றைய இளைஞர்கள், அவர்கள் மேசை மீதிருக்கும் கிளாஸ் தண்ணீரால் மூஞ்சையில் எத்தியிம், தாம் கொண்டு வந்த கிற்றாரை அவர்கள்... மேசை மேல் அடித்தும், உள்ளார்கள். :D

அண்ணா ...............முடியல  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு வாழ்க்கை வெறுத்துப்போச்சுது பிள்ளையள் ரெண்டும் பள்ளிக்கூடத்தில பிள்ளையள் அடிச்ச நக்கலை வீட்டில சொல்லிச் சொல்லி ஒரே பேச்சு. தொலைக்காட்சிக்கும் நடுவர்களுக்கும் ரசிகர்களுக்கும் நகைச்சுவைக் காட்சி ஆனால் பாடசாலைகளில் சக மாணவர்களால் இந்த நிகழ்ச்சி பிள்ளைகள் பலருக்கு மனவுளைச்சலைக் கொடுத்திருக்கிறது.

 

டீற்றாபோலன் இயல்பிலேயே தலைக்கனம் பிடித்த ஒரு கலைஞன். திறமையாளர்களைக் கூட தனது தலைக்கனத்தால் மேடையில் தளர வைத்து துரத்துகிற ஒருவர். அத்தகைய ஒரு மேடைக்கு அனுப்புகிற பெற்றோர் நண்பர்கள் தங்களது உண்மையான விமர்சனத்தை கட்டாயம் சொல்லி அவரை வழிப்படுத்தியிருக்க வேணும்.

 

அந்த நிகழ்ச்சியை... நடத்துவதே, RTL மூலமாக, டீட்டர் போலன் தான்.

அவரின் தலைக்கனமும், சுய விளம்பரமும் யாவரும் அறிவர்.

ஒரு முறை, தனது ஆட்களை செற் பண்ணி, தனது வீட்டில் துப்பாக்கியால் சுட வைத்து பரபரப்பு ஏற்படுத்தியவர்.

"டீற்றர் போலனை" அந்தப் பையன் ஆரம்பதிலேயே... அவமானப் படுத்தி விட்டான் சாந்தி.

 

கை கொடுக்கும் போது... வலது பக்கம் இருந்த, டீற்றர் போலனுக்கு கை கொடுக்காமல், நடுவில் இருந்த ஒருத்தனுக்கு கை கொடுத்து... மற்ற நடுவப் பெண்களிடம் உரையாடிய பிறகு.. நீயும்.. இங்கை தான் இருக்கிறியா... என்ற மாதிரி, "டீற்றர் போலனுக்கு" கை கொடுக்கின்றான்.

 

சரியான... வழிநடத்தல் இல்லாத பிள்ளை அவன்.

Link to comment
Share on other sites

https://www.facebook.com/suden.paramasuthan

 

இதுதான் அவருடைய முக நூல்பக்கம்.. விரும்பியவர்கள் அவருக்கு தனி தகவலில் ஆவது அறிவுரைகளைப் பக்குவமாகத் தெரிவிக்கலாம்.  :D

 

அந்த நடுவர்களாக கடமையாற்றிய 2 பெண்கள் இறுதியில் சுதனின் ஆட்டத்தைப் பற்றிக் கூறிய கருத்தில் ஜேர்மனியருக்கே உரிய காழ்ப்புணர்வும் கலந்திருந்ததை அவதானிக்க முடியும்.

 

(  http://www.clipfish.de/special/dsds/video/4037592/paramasuthan-mit-keyboard-beim-dsds-casting-2014 )

 

அதற்கு ஒருவர் எழுதிய கருத்து என்னைக் கவர்ந்தது. அதை இங்கு பகிர்ந்துகொள்ளுகிறேன்.

 

Iswaryaa Selliah · Abonnieren · University of Zurich · 237 Abonnenten

Bei allem Respekt verehrte Jurys, Ihr habt das Recht die Bewerber zu kommentieren und zu urteilen. Aber ihr könnt doch nicht ernsthaft die Kultur und Tradition anderer Ethnien beleidigen. Von wegen "Medizinmann-Tanz". HALLO?!?!?! Ein bisschen Respekt vor den anderen Kulturen, bitte!!!
(மரியாதைக்குரிய நடுவர்களே! உங்களுக்கு போட்டியாளரைப்பற்றி கருத்துக் கூறவும் முடிவு செய்யவும் உரிமை இருக்கிறது. ஆனால் உங்களால் மற்ற இனங்களின் கலாச்சாரத்தையோ பாரம்பரியத்தையோ அவமதிக்க முடியாது. ஏனென்றால் 'நோயாளி மனிதனின் நடனம்' என்பது. ஹலோ! தயவு செய்து கொஞ்சம் மரியாதை ஏனைய கலாச்சாரங்களுக்கும். ) :o  :D  

 

Link to comment
Share on other sites

மொழி புரியாத எமக்கு அந்த இளைஞன் மிக உற்சாகமான ஒரு நல்ல கலைஞனாக தெரிகிறான். நடுவர்களில் நடுவில் உள்ள ஒருவனைத் தவிர மற்றவர்கள் அசிங்கமாக மிக அருவருப்பான முக பாவங்களை காட்டுகின்றனர். இது அவர்களின் இயல்பான உடல் மொழியானால் இவர்களுடன் வாழும் எம்மவர்கள் பரிதாபத்துக்குரியவர்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொழி புரியாத எமக்கு அந்த இளைஞன் மிக உற்சாகமான ஒரு நல்ல கலைஞனாக தெரிகிறான். நடுவர்களில் நடுவில் உள்ள ஒருவனைத் தவிர மற்றவர்கள் அசிங்கமாக மிக அருவருப்பான முக பாவங்களை காட்டுகின்றனர். இது அவர்களின் இயல்பான உடல் மொழியானால் இவர்களுடன் வாழும் எம்மவர்கள் பரிதாபத்துக்குரியவர்களே.

 

ஹசான், புங்கையூரான் போன்றவர்கள் போன்று...

மற்றைய யாழ் உறவுகளும் தங்கள் கருத்தை தெரிவிப்பதை நான் மிக, ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன்.

ஏனெனில்... இது, சமூகம் சார்ந்த பார்வை, என்பதை... நாம் தட்டிக் கழிக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு வாழ்க்கை வெறுத்துப்போச்சுது பிள்ளையள் ரெண்டும் பள்ளிக்கூடத்தில பிள்ளையள் அடிச்ச நக்கலை வீட்டில சொல்லிச் சொல்லி ஒரே பேச்சு. தொலைக்காட்சிக்கும் நடுவர்களுக்கும் ரசிகர்களுக்கும் நகைச்சுவைக் காட்சி ஆனால் பாடசாலைகளில் சக மாணவர்களால் இந்த நிகழ்ச்சி பிள்ளைகள் பலருக்கு மனவுளைச்சலைக் கொடுத்திருக்கிறது.

------

 

உண்மை... சாந்தி,

பல மாநிலங்களில்..

இந்தச் செயலால்..பிள்ளைகள் மன உழைச்சலுக்கு, உள்ளாக்கப் பட்டிருக்கின்றார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ தமிழரையே கேவலப்படுத்திப் போட்டான். நேர போய் விளக்குமாத்தால சுழரச் சுழர அடிக்கவேணும் போல கிடக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான  நிகழ்வுகள்

உலகம் பூராகவும் நடக்கின்றன

 

 

இவ்வாறான நிகழ்ச்சிகளை பிரபலமாக்கவும்

நகைச்சுவையாக கொண்டு செல்லவும்

பலவற்றை பகிடியாகவே  எடுத்துக்கொள்கின்றனர்.

அவ்வாறு செய்பவர்களே ரசிகர்களிடமும்

பார்வையாளர்கள் மற்றும் நடுவர்களிடமும் வாக்குகளைப்பெறுகின்றனர்.

 

டென்மார்க்கில் நடந்து இது பொன்ற  இசைத்தெரிவில்

எனக்கு தெரிந்த  கல்வியங்காட்டை  பிறப்பிடமாகக்கொண்ட

இரு இளைஞர்கள் இறுதித்தேர்வு வரை வந்தார்கள்

ஆனால் பரிசை  தட்ட முடியவில்லை

சொல்லப்பட்ட  காரணம்

டென்மார்க்  மொழி  மற்றும் ஆங்கிலத்தில் உச்சரிப்பில்  குறைபாடு.. :(  :(

(இறுதித்தேர்வுக்கு மக்கள் வாக்களிப்பார்கள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் துனிச்சலான பொடியன்.. மென்மேலும் அவரது திறமையை வளர்த்துக் கொண்டு மீன்டும் வரவேண்டும்.

எம்மிடையே எவ்வளவொ  திறமையானவர்கள் இருந்தும் துனிவு இல்லாததால்  சும்மா வெறும் பாத்ரூம் பாடகர்களாகவே  இருக்கின்றார்கள். அவர்களை விட இவர் எவ்வளவோ மேல்.

 

ஏங்க! பாடசாலை வாசல்களிலேயே ஸ்கூட்டர்களிலும் , குந்துகளிலும்  இருந்துகொண்டு  கோட்டால் மூடிக்கொண்டு குலவிக்கொண்டிருக்கின்ற இளைஞ்ர்களைவிட இவர் பறவாயில்லைத்தானே. என்ன கொஞ்சம் ஆர்வக்கோளாறு...! சரியாகிடும்  உச்சத்துக்கு வருவார்.

 

உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லுங்கள் , அவன் கிடக்கட்டும், நீ ஏதாவது ஒரு துறையில் உன் திறமையை வளர்த்துக் கொண்டு ஏதாவது ஒரு மேடையில் இவந்தான்டா தமிழன் என்டு நிரூபி பார்ப்போம்.

 

இவராவது ஆறேழு  நிமிடம் தாக்குப் பிடித்தார், வந்தவுடனேயே மூடிக்கொண்டு போகிற பலரை இம்மாதிரி நிகழ்ச்சிகளில் பார்க்கிறோம்தானே...!!  :D

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

திரைகடல் ஓடி திரவியம் தேடு

ஆழ்வாப்பிள்ளை

தமிழன் திரைகடல் ஓடித் திரவியம் தேடினான். அன்றே அவனை உலகம் வியந்து பார்த்தது. ஆனாலும் அன்றைய காலங்களை விட தமிழரை அதிகளவு உலகம் அறிந்ததும், உலகத்தை தமிழர் அறிந்ததும் 1980களின் பிற்பாடே என்பது எனது கருத்து.

தமிழர்களின் எண்பது காலகட்டத்தின் பாரிய இடப்பெயர்வு அவர்களை உலகநாடுகளில் பெருமளவு பரவச் செய்தது. அப்படி இடம்பெயர்ந்த தமிழர்கள் தங்களுடன் தங்களது கலை, கலாச்சார விழுமியங்களையும் எடுத்துக்கொண்டே இடம் பெயர்ந்தார்களா? அல்லது இடம்பெயர்ந்த பலருக்கு தங்களது கலைகளில், கலாச்சாரங்களில் போதிய தெளிவுகள் இல்லையா? மேற்கத்தைய கலாச்சாரங்களை உள்வாங்கிக் கொண்டு எல்லாவற்றையும் மறந்து விட்டார்களா? அன்றாடம் தொல்லைப்படும் இயந்திரமான வெளிநாட்டு வாழ்க்கையில் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு 'பணம்...பணம்..' என அலைகிறார்களா தெரியவில்லை.

யேர்மனிய தொலைக்காட்சி ஒன்றில் பலர் பார்வையாளர்களாக இருக்கும் 'சுப்பர் ஸ்ரார்' நிகழ்ச்சி ஒன்றை சமீபத்தில் பார்த்தபொழுது எங்களது பாரம்பரிய கலைகளும் கலாச்சாரங்களும் நினைவுக்கு வந்தன. அந்த நிகழ்ச்சியின் போட்டியாளனாக பதினேழு, பதினெட்டு வயதுக்கு இடைப்பட்டவனான தமிழ் இளைஞன் வந்திருந்தான்.

நிகழ்ச்சிக்கு வந்த அந்த இளைஞனிடம் அமெரிக்க இளைஞர்களின் பாதிப்பு நிறைந்து இருந்தது. நிகழ்ச்சி நடுவர் ஒருவர் அவனது பெயரைப் பார்த்து விட்டு 'நீ தமிழனா?' என்று கேட்டுவைக்க இளைஞனும் மகிழ்ச்சி தளும்ப மீண்டும் அந்த நடுவருக்குக் கை கொடுத்தான். அந்த இளைஞன் தமிழ்ப்பாடலை அல்லது தமிழ் நடனத்தை அங்கு தரப் போகிறான் என நடுவர்கள் நினைத்து அவனிடம் கேட்க, அந்த இளைஞனும் அதை ஆமோதித்தான். தான் தன் முயற்சியில் இசை ஒன்று கோர்த்து வந்திருக்கிறேன். அதை 'கீ போர்ட்' இல் தவழவிட்டு தமிழ் நடனம் ஒன்று ஆடப் போகிறேன் என்றான். எனது மனதுக்குள் ஒரு குதூகலம். எங்கள் தமிழ் இளைஞர்களைப் பார்த்துப் பெருமிதம். அடுத்த தலைமுறை வெளிநாட்டில் தொலைந்து விடவில்லை. இதோ இங்கே அதிசயப்பட வைக்கப் போகிறார்கள். மனது நிம்மதியாக இருந்தது. கதிரையில் சுகமாகச் சாய்ந்து இருந்தேன்.

நிகழ்ச்சி ஆரம்பமானது. அந்த இளைஞன் தனது இசைக் கருவியில் வாசித்த இசை, 'டண்டணக்கு.. டண்டணக்கு..' இசைதான். இதுதான் தமிழிசையா? எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த இசையை.. இல்லை இம்சையை நடுவர்கள் இரசிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. அடுத்து பின்னணியில் இசையை ஒலிக்க விட்டு தமிழ் நடனம் ஆடப் போகிறேன் என்றான். நடுவர்கள் பெருந்தன்மையுடன் ஒத்துக் கொண்டார்கள். இளைஞன் ஆட ஆரம்பித்தான். எனக்கு மேசையின் கீழே போய் ஒழிந்து கொள்ளலாமா என்ற எண்ணம் தோன்றியது. என்ன பிரயோசனம்? தீக்கோழி போல தலையை மறைத்துக் கொண்டாலும் பல மில்லியன் யேர்மனியர்கள் பார்த்துக் கொண்டுதானே இருப்பார்கள். மனது அப்பொழுதுதான் குறுகத் தொடங்கியது.

அந்த இளைஞனுக்கு தமிழ்க் கலையைப் பற்றித் தெரிய வாய்ப்பே இல்லை என்பது எனக்குப் புரிந்து போனது. தமிழ் சினிமாக்களில் வரும் பாடல்களையும், ஆடல்களையுமே அவன் தமிழ்க்கலை என்று கருதுகிறான் என்று நினைக்கிறேன்.

ஒரு காலகட்டத்தில் 'றெக்கோர்ட் டான்ஸ்' என்று ஒழிவு மறைவுகளில் ஆடப்பட்ட நடனம், மெதுவாக சினிமாவுக்குள் புகுந்தது. அந்த நடனத்தையும் பம்பாய் நடன மாதுக்களைக் கொண்டு ஆடவிட, அதற்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்து, அவர்களின் கல்லாப்பெட்டியும் நிறைந்தது. படிப்படியாக அந்த நடனம் மெருகேற நாயகர்களும் சேர்ந்து ஆடத் தொடங்க, 'டாடி மம்மி வீட்டில் இல்லை.. தடைபோட யாரும் இல்லை விளையாடு நேரில் வந்து வில்லாளா..' வையும் கடந்து வந்து விட்டோம். இந்தப் பாடல்களும், அதற்கான அபிநயங்களுமே அந்த இளைஞனுக்கு தமிழிசையாகவும் தமிழ் நடனமுமாகிப் போனதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் இதைத் தனது ஒரு படைப்பாக அந்த இளைஞன் தரும் பட்சத்தில் யாருக்குமே பாதிப்பும் இல்லை, பழுதும் இல்லை. மாறாக தமிழிசை, தமிழ் நடனம் என்று அவன் தமிழை அங்கு முத்திரையிட்டதுதான் பிரச்சினையாகிப் போனது.

தொடர்ந்து அவனது நிகழ்ச்சியைப் பார்ப்போம். இளைஞனின் நடனத்தைப் பார்த்து நடுவர்கள் முகம் சுளிக்க ஆரம்பித்தார்கள். நிலமையை அவதானித்த இளைஞன் தனது சந்தர்ப்பம் பறி போய்விடுமோ என்று பயந்து அவசரமாக தனக்குப் பாடவும் வரும் என்றான். 'சரி பாடு' என்று அவர்கள் சந்தர்ப்பத்தை வழங்கினார்கள். பாட ஆரம்பித்தான். அவனது பாடலைப் பார்த்து, 'என்ன மொழியில் பாடுகிறாய்? தமிழ் மொழிதானே..?' என பிரதான நடுவர் கேட்க, 'இல்லை இது ஆங்கிலம்..' என இளைஞன் பதில் தந்தான்.

'புதுமையான ஆங்கிலமாக இருக்கிறதே' என அடுத்த நடுவர் ஏளனத்துடன் இடைமறிக்க, எல்லாமே குழப்பமாகிப் போனது.

'நீ வேண்டுமானால் உனது வீட்டில் தனிமையில் இருந்து பாடு. உனக்கு இசை வசப்படாது. உனக்குப் பாடவே வராது என்பது எங்களது கருத்து..' என்று தனது கருத்தை வைத்த பிரதான நடுவர் எழுந்து வந்து அவனது இசைக் கருவியின் மின் இணைப்பைத் துண்டிக்கும் நிலை வரை அங்கு மோசமாகிப் போனது.

இளைஞனுக்கு அவனது எதிர்பார்ப்பு கிட்டாமல் போனதில் ஏமாற்றம் இருந்திருக்கலாம். தனிமனிதனாக இல்லாமல் தமிழனாகத் தன்னையும், தன் கலையையும் இனம்காட்டி கேவலப்பட்டு அவன் நடுவர் கூடத்தில் இருந்து வெளியேறியது எனக்குப் பெரும் அவமானமாக இருந்தது.

அவன் கூடத்தை விட்டு வெளியேறிய பின்னர் இரண்டு பெண் நடுவர்கள் பேசிக் கொண்டார்கள்

'அவன் ஆடிய நடனம் அவர்களது பாரம்பரிய நடனமா? கேளிக்கை விடுதிகளில் ஆடும் நடனம் போல் இருக்கிறதே'

'எனக்குப் பார்த்தால் மருத்துவ மனிதன் (ஆபிரிக்க பழங் குடியில் அவர்களது மருத்துவர் நோய் தீர்க்க ஆடும் ஒருவித நடனம்) நடனம் போல் இருந்தது'

நடுவர்கள் பேசிக் கொண்டதும், நடந்துபோன சம்பவங்களும் எனக்கு ஒன்றைத் தெளிவாக்கியது. நமது அடுத்த தலைமுறைக்கு எங்கள் கலை, கலாச்சார பாரம்பரியங்களைத் தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கிறது. அதை அவர்களுக்கு தெளிவுபடுத்த, தெரியவைக்க எங்களுக்குத்தான் நேரம் இல்லை.

கோயில் கட்டி விட்டோம், தேர் செய்து, அதில் சாமியை வைத்து தெரு உலா வருகிறோம், அர்ச்சனைகள், அபிசேகங்கள் செய்கிறோம். இதற்கு மேல் என்ன? மற்ற எல்லாவற்றையும் சாமி பார்த்துக் கொள்வார்.

இப்பொழுது எங்கள் தேவை எல்லாம் பணம். நாங்கள் திரை கடல் ஓடி வராமல் விமானம் ஏறி பறந்து வந்திருக்கின்றோம். உலக நாடுகளுக்கு எங்களைத் தெரிகிறது. எங்கள் முன்னோர்கள் சொன்னது போல் திரவியம் தேடுகின்றோம். அதற்காகத்தான் நாங்கள் இன்று ஓடிக் கொண்டிருக்கின்றோம்.

பின் இணைப்பு, அந்த இளைஞன் கலந்து கொண்ட நிகழ்ச்சியை இந்த இணைப்பில் பார்க்கலாம்

http://www.clipfish.de/special/dsds/video/4037592/paramasuthan-mit-keyboard-beim-dsds-casting-2014

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=3012bdf8-57d7-43d4-8e1c-c80970c48858

Link to comment
Share on other sites

திறமை உள்ள (ஏதோ வகையில்) கலைஞன் என தெரிகிறது.துணிவு அவரின் பிளஸ் பொயின்ற். நடுவர்களும் , ஜேர்மன் மக்களும் இன்னும் இனவாதிகள் என்பதை இக்காணொளி காட்டி நிற்கிறது.18 வயது இளைஞன் தானே. சில பயிற்சிகளுடன் மீண்டும் பங்கு பற்றலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திறமை உள்ள (ஏதோ வகையில்) கலைஞன் என தெரிகிறது.துணிவு அவரின் பிளஸ் பொயின்ற். நடுவர்களும் , ஜேர்மன் மக்களும் இன்னும் இனவாதிகள் என்பதை இக்காணொளி காட்டி நிற்கிறது.18 வயது இளைஞன் தானே. சில பயிற்சிகளுடன் மீண்டும் பங்கு பற்றலாம்.

 

 

ஒரு சூட்டை இது அவருக்குள் ஏற்படுத்தியிருக்கும்...........

காலம் பதில் சொல்லட்டும்.....

Link to comment
Share on other sites

கிருபன் அண்ணா இணைத்த பதிவுடன் ஒத்துப்போக வேண்டி இருக்கிறது. தமிழரின் இசை, நடனம் என்றுவிட்டு டப்பாங் கூத்து ஆடியதை மன்னிக்கவே முடியவில்லை. ஜெர்மன் விளங்காவிட்டாலும் ஏதோ பெரிதாக வெட்டிப் பிடுங்கப் போவதாக சுதன் பீலா விட்டுவிட்டு  அவர் தனது சொந்தத் தயாரிப்பு என்றால் என்னத்தயாவது செய்து துலையலாம் ஆனால் தமிழர்களின் என்று சொல்லி செய்யும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஒரு கீபோட்டும் வாங்கி தலையையும் ஒரு கோணலா வெட்டி பெயிண்ட் அடிச்சு ஒரு தோட்டையும் குத்தினால் பெரிய மியூசிக் மன்னர்கள் என்ற எண்ணம் எமது இளையவர்கள் பலருக்கு. பிள்ளையல் பாவம் என்று எமது பெரியவர்களும் கண்டும் காணாமல் விடுகிறார்கள் அல்லது பொய்யாக அந்த மாதிரி இருக்கு என்று ஊக்கப் படுத்தி விடுகிறார்கள். விளைவு இப்படியான ஒரு பொது நிகழ்வில் எமது மானம் கப்பலேறி விடுகிறது. ஐரோப்பாவில், கனடாவிலில் இருக்கும் எமது இளையவர்கள் சிலரின் மியூசிக் விடியோக்களைப் பார்த்த்தால் ஒரு கிழமைக்கு நித்திரை வராது. நல்லகாலம் இங்கு அவுஸில்  இந்தமாதிரியான கூத்துக்கள் இல்லை. நன்றாக ஆயத்தம் செய்யாமல் மேடை ஏறக் கூடாது. உண்மையைச் சொன்னால் நடுவர்கள் அளவுக்குக் கூட எனக்குப் பொறுமை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இதில் பிரதான நடுவராக வருபவர் சகலரையுமே மட்டந்தட்டுபவர்.ஒருசில ஜேர்மனியர்களுக்கும் இவரை பிடிப்பதில்லை.காரணம் இவரின் ஒருவித நான் என்ற அகங்கார பேச்சுக்கள் தான் காரணம். குறிப்பிட்ட தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் தற்போதைக்கு இவரை விட்டால் ஆளில்லை.அதைவிட எல்லாமே விளம்பரவியாபாரங்கள். மில்லியன் கணக்கில் பிரளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிப்பவர்களுக்கு இதெல்லாம் சிறு தூசு.
 
ஆனால் இவரை விட எத்தனையோ திறமையான ஈழ இளைஞர்கள் நம்மிடையே உலாவுகின்றனர் என்பதையும் நாம் மறக்கக்கூடாது.அந்த ஒரு நிகழ்வை வைத்து ஒட்டுமொத்த ஈழக்கலைஞர்களையும் ஒரே தராசில் வைத்து பார்ப்பதும் தவறு.
எனினும் பரமதாசிற்கு என் வாழ்த்துக்கள். :D
Link to comment
Share on other sites

தன் நம்பிக்கயுள்ள இளைஞன் ........ நடுவர்களாக தெரிவுசெயயப்படுபவர்கள், இவ்வாறு மட்டம்தட்டி,கேனத்தனமாக கதைபவர்களாகவே இருப்பார், அப்பதான் ப்ரோக்ராம் சுவாரசியமாக போகும். இதிலும் பாக்க மொக்கையான கனபேர் வந்திரிக்கினம்.

Link to comment
Share on other sites

அந்தப் பையன் வந்து சும்மா பாடி, ஆடிப் போட்டு போயிருந்தால் யார் தான் அவனைப் பற்றிக் கதைபார்கள். கொலிவூட்டைப் பாருங்கள் மடோனா, பிறிட்னி ஸ்பியேர்ஸ், லின்சி லோகன்...... தங்களை பிரபலமாக வைத்திருக்க ஏதாவது குறுக்கு வழிகளைத் தானே கையாளுகினம். இவன் செய்ததில் தப்பே இல்லை.இது அவனின் தனிப்பட்ட விடயம். நீங்கள் ஏன் தமிழன் செய்திட்டான் எண்டு கத்துறியள்.??


:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கு பல்கலைக்கழகம் ஒன்றில் வேலை செய்யும் கோயம்புத்தூர்காரார் ஒருவரை சிலவருடங்களுக்கு முன்பு ஏன் தமிழகத்தில் ஊழல் செய்யும் திமுக அதிமுகவுக்கு வாக்களிக்கிறீர்கள் என்று கேட்டேன். திமுக, அதிமுக ஊழல் செய்தாலும் மக்களுக்கு ஓரளவு நலத்திட்டங்கள்செய்கிறார்கள். ஆனால் தேசிய கட்சிகள் தமிழகத்தை கண்டு கொள்வதில்லை என்றார். பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் சாதிக்கட்சிகள்.  தேதிமுகவுக்கு கொள்கையே இல்லை என்றார். இன்னுமொருவருடன்  கதைக்கும்போது திமுகவை வேண்டாதபோது அதிமுகவுக்கும் , அதிமுகவை வேண்டாதபோது திமுகவுக்கும் நடுநிலையானவர்கள் சிலர் வாக்களிக்கிறார்கள் என்றார்.  தமிழகத்தில் வறுமை கோட்டின் கீழ் இருப்பவர்கள் அதிகம். இவர்களுக்கு தேர்தல் நேரத்தில் பெரியகட்சிகள் பணம் குடுத்து கவருவார்கள் ( திருமங்கலம், R K நகர் தேர்தல் முடிவுகள்). ஒவ்வொரு தொகுதியிலும் , தொகுதியில் அதிக மக்கள் வாழும் சாதிக்காரரை வேட்பாளராக தேர்வு செய்வார்கள்.  தலித் சாதியினர் வன்னியருக்கு , வன்னியர் தலித்துக்கும் வாக்களிக்க மாட்டார்கள்.  சில தொகுதிகளில் சில வேட்பாளருக்கு தனிப்பட்ட செல்வாக்கு.  திமுக , அதிமுக்வுக்குள்ள நிரந்தரவாக்குகள், கட்சியில் தனக்கு போட்டியாளரை வேட்பாளராக தலைமை தெரிவு செய்ததினால் வேட்பாளரை விழுத்த சதி திட்டம் உட்பட பல காரணங்கள் ஒருவரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது.   இப்பொழுது தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை அதிகம். இதனால் அவர்கள் மோடியை தோற்கடிக்க திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். எம் ஜீ ஆர், ஜெயலலிதா மாதிரி பிரபல்யமான தலைவராக ஏடப்பாடி இல்லாதது, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்திருப்பது திமுகவுக்கு சாதகம். 
    • ஒவ்வொருவரும் எந்த மூலையில் இருந்து எழுதுகின்றார்களோ என்ற உங்கள் கூற்று உங்களுக்கும் சேர்த்தே  பொருந்தும்.   அரசியல் கட்டுரை அல்லது விமர்சனம்  சில விடயங்களை சுட்டிக்காட்டும் போது அதை எதிர் கொள்ள முடியாமல் சிங்கள இனவாத அரசை பற்றி கூறவில்லையே. அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்பது போன்ற கேள்வியை கேட்பது உங்கள் வாடிக்கை.  தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலத்தை தனது சிங்கள அரசு பாவித்தது என்று ஒரு கட்டுரையில் கூறியதை கவனிக்க மட்டீர்களா? அவ்வாறு அவர்கள்  கூறாவிட்டாலும் அது தானே உண்மை.   மேற்கண்ட  இணைப்புகளில் இருக்கும் உண்மைகளை  உங்களால் சகிக்கமுடியவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறேன்.  ஆனால்,  தமிழரசுகட்சி தனது அரசியல் பாதையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகளை விட தனது பாராளுமன்ற பதவிக்கு போட்டியாக வந்த தனது அரசியல் எதிரிகளை  ஒழித்துகட்டுவதற்கே முதலிடம் கொடுத்தது என்பதை  அன்றைய வரலாற்றை தெரிந்த அனைவரும் அறிவர்.  நேர்மையாக இவை பற்றி எழுதிய அன்றைய ஈழநாடு பத்திரிகை மீது அவதூறை அள்ளி வீசி,  எச்சரிக்கும் தொனியில்,  “ஈழநாடே வாயை மூடு”  என்று,   அன்று சுதந்திரன்  பத்திரிகை எழுதியது. அதன் பின்னர் எதிர்தது விமர்சனம் செய்தவர்களை வாயை மூட வைத்து இன்றைய மீள முடியாத  அவலநிலைக்கு தமிழ் மக்களை  இட்டு சென்றது இவர்களின் அரசியல் தொடர்ச்சியே.   நான் தமிழர் அரசியல் வரலாறு பற்றி  பேசும் போது  அவற்றின் உண்மைகளை  மறைப்பதற்காக என் மீது அவதூறு பொழிவதிலே நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்கள். நீ அந்த முகாம் அந்த இயக்கம் என்பது போன்ற இந்தப் பாணியை  நீங்கள்  பெற்றதும் அந்த  தமிழ் அரசியல் தொடர்ச்சி தான்.   உலக நாடுகளின் ஆதரவு இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களூடான  வெற்று  அரசியல் தமிழ் மக்களை மேலும் பலவீனமாக்கவே உதவும் என்பதையும் அது பற்றி உங்களைக்கோ உங்களை போல  மாய உலகில் சஞ்சரிப்பவர்களுக்கோ  கவலை இல்லை என்பதும் தெரிந்ததே.   நீங்கள் கூறியவாறு எவரையும் சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இவர்களை பற்றி உலகம் அறியும். போலி துவாரகா வரை இவர்களின் சுயநல அரசியல் நீண்டே  செல்கிறது. போலி துவாரகாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லோருமே தமிழ் தேசிய தூண்கள் என்ற பிம்பத்துடன் முன்னர் வலம் வந்து இன்று முகமூடி கிழிந்து நிற்பவர்களே.  தமிழ் தேசிய அரசியல்  உருவாக்கிய போலி பிம்பங்களை விற்று பணம் பண்ணும் அரசியலை செய்து அவர்கள் காசு பார்கிறார்கள்.  இலங்கை ஒற்றையாட்சியை  நான்  ஆதரிப்பவன் என்று என்னைக்க கூறுகின்றீர்கள்.   ஆனால்,  இன்று தேசியம் பேசும் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களே. இன்றைய தாயக/ புலம்பெயர் மக்களில் மிக பெரும்பான்மையினரை அரசியல் கதைக்கவே  ஆர்வமற்றவர்களாக மாற்றி,  பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று விலகி வாழும்  நிலையை ஏற்படுத்தியவர்களும் இவர்களே.  உங்களை போல என்னை போல ஒரு சிறு பகுதியினர் மட்டுமே இன்று  இலங்கையில் தமிழரின் எதிர்காலம் எப்படி அமையும், அமைய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு  அரசியல் விவாதங்களிலாவது ஈடுபட்டுள்ளோம்.  மிக பெரும்பான்மை தாயக/ புலம் பெயர் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தம்மை விடுவித்து  இலங்கை ஒற்றையாட்சியை ஏற்று அதன் கீழ் வாழ்வதை ஏற்று கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற ஜதார்தத நிலையை உங்களால் விளங்கி கொள்ள முற்படமாட்டீர்கள். ஆனல் இந்த உண்மையை கூறிய என் மீது வசைமாரி பொரிவீர்கள் என்பது அறிந்ததே. அது பற்றி கவலை இல்லை.   இந்த எனது பதிவுக்கு  பதிலாகவும் என்மீது  வசை மாரி தான் வரும் என்பதும் நான் அறிந்ததே. 
    • ஆசிய பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கை : கண்காணிப்பு விமானத்தை வழங்கும் அவுஸ்திரேலியா! ஆசிய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்கு இலங்கைக்கு சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தக திணைக்களத்தின் (தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பகுதி) பிரதி செயலாளர் மிச்சேல் சங் இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார். மிச்சேல் சங்கின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமையவே சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலங்கைக்கு வழங்குகிறது. சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் ஆள் கடத்தல் என்பவற்றை தடுப்பது உள்ளிட்ட இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முதற்கட்டமாக இந்த விமானம் வழங்கப்படுவதாக மிச்சேல் சங் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380118
    • ரஷ்ய எல்லை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட 68 யுக்ரேனிய ஏவுகணைகள். யுக்ரேன் வான்பாதுகாப்பு ஒத்துழைப்பினை விரைவுபடுத்தவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது யுக்ரேனுக்கான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார் ரஷ்ய படையினரின் வான் அச்சுறுத்தல் அதிகரித்துவருவதனால் அவசரமாக தமக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு தேவைப்படுவதாக யுக்ரென் ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலன்ஸ்கி அமெரிக்காவிடம் கோரிக்னை முன்வைத்திருந்தார் இந்த நிலையில் யுக்ரேனுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான ராணுவ உதவியில் 6 பில்லியன் பெறுமதியான வான்பாதுகாப்பு உதவித்தொகை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது இதேவேளை யுக்ரேனில் ரஷ்யா இன்று அதிகாலை பாரிய விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் கார்கிவ் நகரில் உள்ள வைத்தியசாலை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ரஷ்ய எல்லை பகுதியில் சுமார் 68 யுக்ரேனிய ஏவுகணைகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1380087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.