Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்மாவாணை எனக்கொரு ஆசை..!!!

Featured Replies

அம்மாவாணை எனக்கொரு ஆசை

1508535_10151933373638002_1210834797_n.j

அம்மாணை எனக்கொரு ஆசை

ஊரில படுக்கவேணும் என்ர மண்ணுக்கு மேல...

ஒப்பனுக்கெண்டாலும் நிம்மதியா நித்திரை கொள்ள..

எத்தனை நாளைக்கு இங்க குளிரில கிடந்து சாக

இஞ்சை ஒரு கோதாரியும் இல்லை காசைத் தவிர.!

சில்லம்பல்லமாய் சிதறிப்போச்சு எங்கட வாழ்க்கை

மக்கரிப்பாங்கள் எங்கட ஊருக்குள்ள வந்ததால.!

கடல் தண்ணி குண்டி நனைக்க கக்காவுக்கு இருந்த சுகம்

"ஏசிக்" கக்கூசுக்குள்ள ஒப்பனுக்கும் இல்லை.

கரவலை மீனில ஒரு சொதியும்..

கறுத்தப்பச்சையரிசி சோறும்...

கறுமொறெண்டு அப்பளப்பொரியலும்...

சுட்ட பத்தாம்பட்டி கருவாடும்...

உந்த "சைனீஸ்" காரண்ட "பிறைட் றைஸ்" பிச்சை வாங்கும்.

சாதுவா கோப்பிறேசன் கள்ளைப்போட்டு

தென்னை மர நிழலில சாரத்தைப்போட்டு

தலை மாட்டில "ரேடியோவில" பாட்டைப்போட்டு

சும்மா கிடந்தா நித்திரை கண்ணை செம்மும்.

அம்மாணை எனக்கொரு ஆசை

ஊரில படுக்கவேணும் என்ர மண்ணுக்கு மேல

கொடிகாமத்து கூழன் பிலாப்பழத்தை

கொண்டு வருவா சரசு மாமி சந்தை "வானில்"

நாலா புறிச்சு ஒரு பங்கு வாங்கி வந்து

நல்லா கையிலை எண்ணை பூசி 

சுழையை பிரிச்சுத்திண்டா புறங்கையில ஓடும் தேனா

"கூப்பன்" மாவில புட்டைக்குழைச்சு

சாதுவா தேங்காய்ப்பூவை மேல தூவி 

சீனியும் கொஞ்சம் போட்டு

கறுத்தக்கொழும்பான் மாம்பழத்தை துண்டாய் சீவி

குழைச்சு அடிச்சா சொல்லி வேலையில்லை.

கொட்டையை வடிவா சூப்பி 

திண்டபிறகு சருவத்துக்கு பக்கத்தில தாட்டு

வைச்சா முளைக்கும் மாங்கண்டு.

அம்மாணை எனக்கொரு ஆசை

ஊரில படுக்கவேணும் என்ர மண்ணுக்கு மேல

சில்லம்பல்லமாய் சிதறிப்போச்சு எங்கட வாழ்க்கை

மக்கரிப்பாங்கள் எங்கட ஊருக்கை வந்ததால

அண்ணை கனடாவில ஓடாய்தேஞ்சு 

என்னை எடுத்துவிட்டான் இஞ்சை

"ஏஜென்சி" காரனிட்ட காசைக்கொட்டி

குண்டி தேய உழைக்க வேணும் 

வாங்கின கடன் குடுக்க வேணும்

என்ன கோதாரிக்கு இஞ்சை அனுப்பினவங்கள்

ஒரு அறுப்பும் விளங்கயில்லை.

என்ர சினேகித பொடியள நினைச்சா கவலை வரும்

அம்மான்ர மடியை நினைச்சா அழுகை வரும்.

சாப்பிடும் போது பிரைக்கடிக்கும்

ஊரில மச்சாள் தான் நினைக்கிறாள் எண்டதும்

அவள் பாத்து கொடுப்புக்குள்ள சிரிச்சதுதான் நினைவு வரும்.

மச்சாளைப்பார்க்க பின்னெரத்தில மாமி வீடு

முட்டைப்பொரியலும் நண்டுக்கறியும் 

மருமோனுக்கு சக்க வசதி

விக்கல் வந்து நிமிந்து பாத்தா 

மச்சாள் தருவாள் செம்பில பச்சைத்தண்ணி

கடைசியாய் குண்டு கோப்பையில் தேத்தண்ணி

அம்மாணை எனக்கொரு ஆசை

ஊரில படுக்கவேணும் என்ர மண்ணுக்கு மேல

ஒப்பனுக்கெண்டாலும் நிம்மதியா நித்திரை கொள்ள

எத்தனை நாளைக்கு இங்க குளிரில கிடந்து சாக

இஞ்சை ஒரு கோதாரியும் இல்லை காசைத் தவிர

அம்மாவாணை எனக்கொரு ஆசை

என்னைத் திருப்பி அனுப்பவேணும்..!!!!

தமிழ்ப்பொடியன்

12.01.2014

Edited by தமிழ்ப்பொடியன்

  • தொடங்கியவர்
அம்மாவாணை- அம்மா மீது சத்தியம்
ஒப்பனுக்கு- கொஞ்சநேரம்
இஞ்சை- இங்கே
சில்லம்பல்லம்- சின்ன சின்ன துண்டாய்
கோதாரி, மக்கரிப்பான் - அநியாயம் செய்பவன்(இது யாழ்ப்பாணம் வடமராச்சி கிழக்கில் மிக வழமையான பேச்சு வழக்கு சொல்)
செம்மும்- நன்றாக
கூப்பன் மா- கோதுமை மா
 
சில யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கு தமிழ் மட்டக்களப்பிலோ,திருகோண்மலையிலோ பேசினால் சிரிப்பார்கள்.
 
கொப்பர்,கொம்மா,கோத்தை,பேந்து வாறம் இப்படியான பேச்சு வழக்கு சொற்களை பேசும் போது என்னைப்பார்த்து சிரித்தார்கள்.ஏனெண்டா அவர்களுக்கு அது விளங்கவில்லை. :)

அம்மாவாணை எனக்கும் ஆசை ஊரிலை என் மண்ணுக்கு மேல படுக்க வேண்டுமென்று..

  • கருத்துக்கள உறவுகள்

கொடிகாமத்து கூழன் பிலாப்பழத்தை

கொண்டு வருவா சரசு மாமி சந்தை "வானில்"

நாலா புறிச்சு ஒரு பங்கு வாங்கி வந்து

நல்லா கையிலை எண்ணை பூசி 

சுழையை பிரிச்சுத்திண்டா புறங்கையில ஓடும் தேனா

கூழன் பிலாப்பழத்தை ஞாபகப் படுத்தி விட்டீர்கள்... வாய் ஊறுது, தமிழ்ப் பொடியன்.

மற்றப் பலாப்பழங்களை விட, கூழன் பலாப்பழத்தில் வித்தியாசமான சுவை.

நல்ல தொரு பதிவுக்கு நன்றி. :)

ஊர் பேச்சு வழக்கில்  கவிதை அருமை தமிழ்ப்பொடி....

என்னதான் வசதி வாய்ப்புக்கள் இந்த வெளிநாட்டில இருந்தாலும் ஊர்ல இருக்கிற சந்தோசத்தின்ர எள்ளளவும் இங்க கிடைக்காது. :(

எப்பதான் அந்த சந்தோசங்களை மீண்டும் அனுபவிக்கப்போறமோ..? என்ற ஏக்கம் மட்டும்தான் மிச்சம் மீதியாக் கிடக்கு. :(

அம்மாவாணை எனக்கொரு ஆசை

1508535_10151933373638002_1210834797_n.j

அம்மாணை எனக்கொரு ஆசை

ஊரில படுக்கவேணும் என்ர மண்ணுக்கு மேல...

ஒப்பனுக்கெண்டாலும் நிம்மதியா நித்திரை கொள்ள..

எத்தனை நாளைக்கு இங்க குளிரில கிடந்து சாக

இஞ்சை ஒரு கோதாரியும் இல்லை காசைத் தவிர.!

சில்லம்பல்லமாய் சிதறிப்போச்சு எங்கட வாழ்க்கை

மக்கரிப்பாங்கள் எங்கட ஊருக்குள்ள வந்ததால.!

கடல் தண்ணி குண்டி நனைக்க கக்காவுக்கு இருந்த சுகம்

"ஏசிக்" கக்கூசுக்குள்ள ஒப்பனுக்கும் இல்லை.

கரவலை மீனில ஒரு சொதியும்..

கறுத்தப்பச்சையரிசி சோறும்...

கறுமொறெண்டு அப்பளப்பொரியலும்...

சுட்ட பத்தாம்பட்டி கருவாடும்...

உந்த "சைனீஸ்" காரண்ட "பிறைட் றைஸ்" பிச்சை வாங்கும்.

சாதுவா கோப்பிறேசன் கள்ளைப்போட்டு

தென்னை மர நிழலில சாரத்தைப்போட்டு

தலை மாட்டில "ரேடியோவில" பாட்டைப்போட்டு

சும்மா கிடந்தா நித்திரை கண்ணை செம்மும்.

அம்மாணை எனக்கொரு ஆசை

ஊரில படுக்கவேணும் என்ர மண்ணுக்கு மேல

கொடிகாமத்து கூழன் பிலாப்பழத்தை

கொண்டு வருவா சரசு மாமி சந்தை "வானில்"

நாலா புறிச்சு ஒரு பங்கு வாங்கி வந்து

நல்லா கையிலை எண்ணை பூசி 

சுழையை பிரிச்சுத்திண்டா புறங்கையில ஓடும் தேனா

"கூப்பன்" மாவில புட்டைக்குழைச்சு

சாதுவா தேங்காய்ப்பூவை மேல தூவி 

சீனியும் கொஞ்சம் போட்டு

கறுத்தக்கொழும்பான் மாம்பழத்தை துண்டாய் சீவி

குழைச்சு அடிச்சா சொல்லி வேலையில்லை.

கொட்டையை வடிவா சூப்பி 

திண்டபிறகு சருவத்துக்கு பக்கத்தில தாட்டு

வைச்சா முளைக்கும் மாங்கண்டு.

அம்மாணை எனக்கொரு ஆசை

ஊரில படுக்கவேணும் என்ர மண்ணுக்கு மேல

சில்லம்பல்லமாய் சிதறிப்போச்சு எங்கட வாழ்க்கை

மக்கரிப்பாங்கள் எங்கட ஊருக்கை வந்ததால

அண்ணை கனடாவில ஓடாய்தேஞ்சு 

என்னை எடுத்துவிட்டான் இஞ்சை

"ஏஜென்சி" காரனிட்ட காசைக்கொட்டி

குண்டி தேய உழைக்க வேணும் 

வாங்கின கடன் குடுக்க வேணும்

என்ன கோதாரிக்கு இஞ்சை அனுப்பினவங்கள்

ஒரு அறுப்பும் விளங்கயில்லை.

என்ர சினேகித பொடியள நினைச்சா கவலை வரும்

அம்மான்ர மடியை நினைச்சா அழுகை வரும்.

சாப்பிடும் போது பிரைக்கடிக்கும்

ஊரில மச்சாள் தான் நினைக்கிறாள் எண்டதும்

அவள் பாத்து கொடுப்புக்குள்ள சிரிச்சதுதான் நினைவு வரும்.

மச்சாளைப்பார்க்க பின்னெரத்தில மாமி வீடு

முட்டைப்பொரியலும் நண்டுக்கறியும் 

மருமோனுக்கு சக்க வசதி

விக்கல் வந்து நிமிந்து பாத்தா 

மச்சாள் தருவாள் செம்பில பச்சைத்தண்ணி

கடைசியாய் குண்டு கோப்பையில் தேத்தண்ணி

அம்மாணை எனக்கொரு ஆசை

ஊரில படுக்கவேணும் என்ர மண்ணுக்கு மேல

ஒப்பனுக்கெண்டாலும் நிம்மதியா நித்திரை கொள்ள

எத்தனை நாளைக்கு இங்க குளிரில கிடந்து சாக

இஞ்சை ஒரு கோதாரியும் இல்லை காசைத் தவிர

அம்மாவாணை எனக்கொரு ஆசை

என்னைத் திருப்பி அனுப்பவேணும்..!!!!

தமிழ்ப்பொடியன்

12.01.2014

அட விழுவாரே !!!!!!!!!!! குளம் குட்டை கடல் எண்டு ஒண்டும் விடாமல் நாறடிச்சு போட்டியளே :o :o ?? உந்த மீனுகளைதானே இஞ்சை சனங்கள் இம்போட் மீன் எண்டு வவாங்கி  தின்னுதுகள்  ............ :lol::D :D .

பெடியன் கவிதைக்கு பாராட்டுகள் :) .

  • கருத்துக்கள உறவுகள்

அட விழுவாரே !!!!!!!!!!! குளம் குட்டை கடல் எண்டு ஒண்டும் விடாமல் நாறடிச்சு போட்டியளே :o :o ?? உந்த மீனுகளைதானே இஞ்சை சனங்கள் இம்போட் மீன் எண்டு வவாங்கி  தின்னுதுகள்  ............ :lol::D :D .

அட போங்கோ கோமகன் பொடியன் விற்றமீன் கடலுக்கு இலவசமா குடுத்திருக்கிறான் நீங்கள் சும்மா பகிடி விட்டுக்கொண்டு. :lol:

பொடியனின் கிராமிய வழக்குமொழி நல்லாத்தானிருக்கு. 
 
எதுவும் இருக்கிற போது அதன் அருமை புரிவதில்லை. அது உறவுகள் தொடக்கம் நாங்கள் உலவிய தெருவரை பிரிந்த பின்னே அதன் வலிகள் தொடராய் அலைக்கும். அந்த அலைவு உங்களையும் விடவில்லை.

அண்ணை கனடாவில ஓடாய்தேஞ்சு 

என்னை எடுத்துவிட்டான் இஞ்சை

"ஏஜென்சி" காரனிட்ட காசைக்கொட்டி

குண்டி தேய உழைக்க வேணும் 

வாங்கின கடன் குடுக்க வேணும்

என்ன கோதாரிக்கு இஞ்சை அனுப்பினவங்கள்

ஒரு அறுப்பும் விளங்கயில்லை.

அம்மாவாணை எனக்கொரு ஆசை

என்னைத் திருப்பி அனுப்பவேணும்..!!!!

தமிழ்ப்பொடியன்

12.01.2014

ஓடாய் தேயிறனெண்டு சொன்ன அண்ணனை ஓய விடாமல் திட்டி ' நீ மட்டும் கனடாவில இருந்து கொண்டு வெளிநாடு கஸ்ரமெண்டு சொல்றியோ எருமையெண்டும் காசு மரம்போலாக்கி அண்ணனை கடன்காரனாக்கிய தம்பிகளே எங்களில் நிறைய. பொடியன் நிச்சயம் அந்தத் தம்பிகளில் ஒருவனாக இருக்கமாட்டீங்கள்.

திருப்பியனுப்புமட்டும் காவல் நிக்காமல் அண்ணன்ரை கடனைக் குடுத்திட்டு எழுதிக்குடுத்திட்டுப் போங்கொ அது மட்டும் உழையுங்கோ.

பாராட்டுக்கள்.. மண்வாசனை அது கமளும் தமிழுடன் நாசிக்குள் புகுந்தரிக்கிறது!!

கவிதை மிக நல்லாய் இருக்கு  :) போட்ட படம் தான் சகிக்க முடியலை!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை தமிழ்பொடியன்...

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பு, திரளியை வலையில இருந்து, நேர குழம்புக்குள்ள தட்டிப்போட்டீங்கள் போல கிடக்கு! :o

கவிதையில் மீன் வாசனை, மன்னிக்கவும் மண் வாசனை தூக்குது! :D

தொடர்ந்து எழுதுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மண்வாசனையுடன் மணக்கும் கவிதை ! :D

மீனுக்கு போஸ்ட்மார்டம் செய்தீங்களா இல்லையா ...! :lol:

அம்மாவான இப்படி கவிதைதான் நேக்கு பிடிக்கும் வாழ்த்துக்கள் .

  • தொடங்கியவர்

அம்மாவாணை எனக்கும் ஆசை ஊரிலை என் மண்ணுக்கு மேல படுக்க வேண்டுமென்று..

நன்றி யாழ்கவி

அம்மாவான இப்படி கவிதைதான் நேக்கு பிடிக்கும் வாழ்த்துக்கள் .

நன்றி அஞ்சரன்

நல்ல மண்வாசனையுடன் மணக்கும் கவிதை ! :D

மீனுக்கு போஸ்ட்மார்டம் செய்தீங்களா இல்லையா ...! :lol:

நன்றி சுவி

இப்பவும் என்ர புறங்காலில ஊரின் புழுதிமண் தான் ஒட்டிக்கிடக்கு..!!!

மீனுக்கு போஸ்மாட்டம் செய்து வயுத்துக்குள்ள புதைச்சு “எட்டுச்செலவும்” செய்தாச்சு..!!! :D

என்னப்பு, திரளியை வலையில இருந்து, நேர குழம்புக்குள்ள தட்டிப்போட்டீங்கள் போல கிடக்கு! :o

கவிதையில் மீன் வாசனை, மன்னிக்கவும் மண் வாசனை தூக்குது! :D

தொடர்ந்து எழுதுங்கள்!

அண்ணை மண்வாசனை இருக்கோ இல்லையோ என்ர கையில மீன்வாசனை நான் பாடையில போகுமட்டும் இருக்கும்.அதில எனக்குப் பெருமை. :)

கருவாட்டையும் பிலாப்பழத்தையும் ஒழிச்சு வைக்கேலாது பாருங்கோ :lol:

கவிதை மிக நல்லாய் இருக்கு  :) போட்ட படம் தான் சகிக்க முடியலை!

நன்றி அலைமகள் அக்கா!!!

உங்கட பேருக்குள்ள மீன் இருக்கு.

அலைகடல் ஏறித்தான் உதுகளை பிடிக்கிறனாங்கள்.

மன்னிக்கவேணும் அக்கா, புட்டும் மீன் கறியும் எனக்கு “அமுதம்” :rolleyes:

  • தொடங்கியவர்

அட போங்கோ கோமகன் பொடியன் விற்றமீன் கடலுக்கு இலவசமா குடுத்திருக்கிறான் நீங்கள் சும்மா பகிடி விட்டுக்கொண்டு. :lol:

பொடியனின் கிராமிய வழக்குமொழி நல்லாத்தானிருக்கு. 
 
எதுவும் இருக்கிற போது அதன் அருமை புரிவதில்லை. அது உறவுகள் தொடக்கம் நாங்கள் உலவிய தெருவரை பிரிந்த பின்னே அதன் வலிகள் தொடராய் அலைக்கும். அந்த அலைவு உங்களையும் விடவில்லை.

ஓடாய் தேயிறனெண்டு சொன்ன அண்ணனை ஓய விடாமல் திட்டி ' நீ மட்டும் கனடாவில இருந்து கொண்டு வெளிநாடு கஸ்ரமெண்டு சொல்றியோ எருமையெண்டும் காசு மரம்போலாக்கி அண்ணனை கடன்காரனாக்கிய தம்பிகளே எங்களில் நிறைய. பொடியன் நிச்சயம் அந்தத் தம்பிகளில் ஒருவனாக இருக்கமாட்டீங்கள்.

திருப்பியனுப்புமட்டும் காவல் நிக்காமல் அண்ணன்ரை கடனைக் குடுத்திட்டு எழுதிக்குடுத்திட்டுப் போங்கொ அது மட்டும் உழையுங்கோ.

அக்கா 

உங்கட குசும்பு பெரிய குசும்பு...

திண்ட மீனைத்தான் திருப்பி அனுப்புறனாங்கள்.lol

வெளிநாட்டுக்கு வரக்கூடாது எண்டு வலு பிடிவாதமா 2006 வரையும் இருந்தன்.விதி என் பிடிவாதங்களை சுக்கு நூறாக்கி கழுத்தைப்பிடித்து தள்ளிவிட்டது.

எழுதிக்குடுத்துவிட்டு போறதில வலு சந்தோசம்.ஆனால் எனக்கு என்ர ஊர் 1991 இல இருந்தமாதிரி வேணும்.

நரிகளும் நாய்களும் குரங்குகளும் பாம்புகளும் தான் இப்ப எங்கட ஊரில அதிகம்.

போய்க்கலைக்க வேண்டியதுதானே.. எண்டு நீங்கள் கேக்குறது என்ர காதுக்கு விழுகுது.

நான் இப்ப சுயநலவாதியாகிட்டன். 

நான்,வாழ்க்கை,குடும்பம் இப்பிடி என்ர வட்டத்தை சின்னதா கீறிட்டன் எண்டு மனம் உறுத்துகிறது.

இருந்தாலும் சில நேரங்களில் “சுயநலவாதியாக” இருக்கவேண்டியது காலத்தின் கட்டளை.

  • தொடங்கியவர்

அட விழுவாரே !!!!!!!!!!! குளம் குட்டை கடல் எண்டு ஒண்டும் விடாமல் நாறடிச்சு போட்டியளே :o :o ?? உந்த மீனுகளைதானே இஞ்சை சனங்கள் இம்போட் மீன் எண்டு வவாங்கி  தின்னுதுகள்  ............ :lol::D :D .

பெடியன் கவிதைக்கு பாராட்டுகள் :) .

கோமகன் அண்ணை 

கீரைக்கு போடும் முதல் தர உரம் கோழியின் கழிவு.

உருளைக்கிழங்குக்கு மனிதனின் கழிவாம்.

இப்பிடி கனக்க இருக்கு.

உரம் செய்யுற மூலப்பொருள்களை சொன்னால் ஒண்டும் தின்ன மாட்டியள் சொல்லிப்போட்டன் அண்ணை.. :lol:

நீங்கள் மீன்குழம்பும் புட்டும் சாப்பிட ஊருக்கு போக அங்கு உங்களை KFC  உணவகத்திற்கும் மக்டொனாட் உணவகத்திற்கும் கூட்டி செல்லுவினம். கவலைபடாதீர்கள் இது தான் யதார்த்தம். யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு வாழப்பழகுங்கள் தமிழ் பொடியன்.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாணை எனக்கொரு ஆசை
ஊரில படுக்கவேணும் என்ர மண்ணுக்கு மேல
ஒப்பனுக்கெண்டாலும் நிம்மதியா நித்திரை கொள்ள

எத்தனை நாளைக்கு இங்க குளிரில கிடந்து சாக
இஞ்சை ஒரு கோதாரியும் இல்லை காசைத் தவிர......

அடிமனதில் 

ஆழமாக பதிந்தவிட்ட நினைவுகள்

கனவுகள்

அந்த மண்ணின் வசந்தங்கள்

ஒருபுறம்

வேரறுந்த கோலம்

எல்லாம் இழந்து

தனிப்பறவையாய்

புரியாத மனிதர்கள்

தெரியாத மொழி

புலப்படாத காலநிலை.........

ஒரு புறமும்....

போக ஆசை

சீ

இருக்கவும் ஆசை.....

முடிவு தெரியாத ஆயுள்.............

ஒரே ஒரு தப்பை  நாம் செய்தோம்

தாயகத்தை காதலித்தோம்

அது விடுதலை பெறும்வரை

இந்த நிலை தொடரும்.........

வாழ்த்துக்கள் தம்பி

அந்த மண்ணுக்கு  எம்மையும் கொண்டு சென்றீர்

வாழ்க  வளமுடன்.....

வணக்கம் தமிழ்பொடியன்,

மண்வாசனை நிரம்பிய கவிதைக்கு முதலில் பாராட்டுக்கள்.

ஆனால், உண்மையாகவே அண்ணர் உங்களை வெளிநாட்டுக்கு அழைக்க வாங்கிய கடனை அடைக்க மட்டும்தான் வெளிநாட்டில் இருப்பீர்களா? கடனை அடைத்த பின் போய்விடுவீர்களா? ஆக, ஒரு பொருளாதார அகதியாகத் தான் உங்களை கருத முடிகின்றது. அப்படி வந்த பின் ஊர் திரும்புவேன் என்று சொல்வது போலித்தனமாக இருக்கின்றது எனக்கு.

ஏனென்றால், இங்கு வந்து சகல வசதிகளுடனும் வாழ்ந்து கொண்டே 'ஊரில் அப்படி இருந்தம்... ஊர் போல வராது' என்று சொல்லிக் கொண்டே ஒன்றுக்கு இரண்டு மூன்று வீடுகளை வாங்கிக் குவிக்கும் பல இலக்கிய வாதிகளை அடிக்கடி காண்கின்றேன். ஊர் பாசம் காட்டி கவிதை எழுதி வாசகர்களின் மென்னுணர்வுகளை தூண்டி விட்டு பின் இயல்பு வாழ்க்கையில் அது பற்றி பிரக்ஞை கொள்ளாது இருப்பவர்களையும் அடிக்கடி காண்கின்றேன்.

இது உங்களை விமர்சிப்பதற்காக எழுதியவை அல்ல. நாளாந்தம் நிறைய போலிகளை காண்பதால் ஏற்பட்ட கேள்விகள் இது.

என்னைக் கேட்டால், நான் பொருளாதார அகதியாகத்தான் சுயமாக புலம்பெயர்ந்தேன் (Self migration). ஊருக்கு ஒரு சில தடவைகள் போய் வர விரும்பினாலும் ஒருக்காலும் நிரந்தரமாக திரும்பிப் போக மாட்டேன்.

கவிதைக்கு பொய் அழகு .

நானும் நிழலியின் கட்சிதான் .

அண்ணை 

உங்கட மனசை தொட்டு சொல்லுங்கோ ...

பேசாமல் ஊரோட நிம்மதியா இருந்திருக்கலாம் எண்டு எப்பவாது ஒருநாள் நினைக்காமல் இருந்திருக்கமாட்டியள்.

வேளிநாடு எண்டு வந்திட்டா திரும்பி ஊரில போய் இருக்கிறதெண்டுறது சாத்தியம் குறைவான விசயம்.ஆனா மனசு ஏங்கும். அதைத்தான் கவிதையா எழுதியிருக்கன்.

மேலும் இதில என்ன பொய் இருக்கு எண்டு எனக்கு தெரியவில்லை. :D

எல்லாற்ற மன உளைச்சல்களையும் ஏக்கங்களையும் சில எதிர்பார்ப்புகளையும்  குழைச்சு அவிச்ச புட்டு இது.உணர்வோட திண்டு பாருங்கோ அப்பதான் ருசி விளங்கும். :rolleyes:

இங்க உள்ள எல்லாரும் "பொருளாதார அகதி" தான்.சாகும் வரை தனக்கும் தன்ர குடும்பத்துக்கும், சகோதரங்களுக்கும்,உறவினருக்கும் உழைச்சு குடுக்க வேண்டிய கட்டாயம் எல்லாருக்கும் இருக்கு.

மேலும் அவன் 2 வீடு வாங்கிட்டு இப்பிடி சொல்லுறான், 3 வீடு வாங்கிட்டு இப்பிடி சொல்லுறான் எண்டு சொல்லாதையுங்கோ அண்ணை. ஏன்?  வீட்டை வித்திட்டு ஊரோட போய் இரன் எண்டு சொல்லுவது அபத்தம்.என்னதான் பணத்துக்கு மேல புரண்டாலும் அப்பப்ப "ஊர் ஆசை" வரும்தானே!!! அவனும் மனிசன் தானே அண்ணை. அவனுக்கும் உணர்வுகள் பொதுதானே!!! அதில வேற கவிதை எழுதி வீடு வாங்குற இலக்கியவாதிகள் எங்கயப்பா இருக்கினம்? தயவு செய்து அவையின்ர தொடர்புகளை தாருங்கோ?

நானும் ஒரு வீடு வாங்க ஆலோசனை கேப்பம் :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு முந்தியெல்லாம் ஊருக்கு போகோணும் வாழோணும் எண்டொரு ஆசை இருந்ததுதான்.....இப்ப பிள்ளையளை நினைக்க ஒரே யோசினையாய்கிடக்கு.....போனாலும் வந்தாலும் அங்கை இருக்கிற பிளான் இல்லை...அதோடை அங்கத்தையான் வெதர்ரும் இனி ஒத்துவராது கண்டியளோ :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.