Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் என்ன செய்ய ??????

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்ப கொஞ்ச நாட்களாகவே யாழ்இணையத்துக்கு வர விருப்பமே இல்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் வரவேண்டும் வரவேண்டும். ஏதாவது எழுதவேண்டும் என்று எத்தனையோ முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை. எனக்கு யாழில் யாருடனும் பகையும் இல்லை. மனம் முழுவதும் எதோ வெறுமை சூழ்ந்தது போலவே எந்நேரமும் உள்ளது. என் மனதை எப்படியாவது பழைய நிலைக்குக் கொண்டுவர முயன்றும் முடியவில்லை. முகப்புத்தகத்தில் மனதைத் திருப்பினாலும் அதுகூட ஆர்வமாக இல்லை. என்ன செய்யலாம்??????????

  • கருத்துக்கள உறவுகள்

சுமே, இது மிகவும் சின்ன விசயம்!

வீதியில நடந்து போற நேரம், சாணியை மிதிச்சுப் போட்டீங்கள் என்றால், என்ன செய்திருப்பீர்கள்?

நிச்சயமாக, அந்த வீதியில் ஒரு நாளும் நடக்க மாட்டேன் என்று முடிவு செய்யமாட்டீர்கள் தானே! அதைப்போலத் தான் இதுவும் எண்டு நினைச்சுக்கொள்ளுங்கோ! :D

இல்லை, சுத்துப்பாதையால தான் போவன் எண்டு அடம் பிடிச்சால், நாளைக்கு அந்தப் பாதையிலையும் 'சாணி' கிடைக்காது எண்டு ஒரு உத்தரவாதம் இல்லைத்தானே! :icon_idea:

மனித மனம் மிகவும் அற்புதமான ஒரு விந்தை!

அதனை நெறிப்படுத்துவது இன்னும் அற்புதமான விந்தை!

நெறிப்படுத்தியவன் (ள்) இறையாகின்றான் (ள்) !

அதனை நெறிப்படுத்துங்கள்! வழிக்குக் கொண்டு வாருங்கள்!

ஒவ்வொரு நாளும், அவுஸ்திரேலிய நேரம் மாலை ஆறுமணிக்கு, யாழைத் திறந்தால், நீங்கள் கட்டாயம் நிற்பீர்கள் என்று தெரியும்!

அதையே தொடர்ந்து செய்யுங்கள்! 

அன்புடன்,

உங்கள் அபிமான விசிறி ! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வில்

கேள்விகள் மட்டும்  கேட்பதே ஒரு பிரச்சினை  தான்

அது தான் உங்களுக்கும் என்று நினைக்கின்றேன்....... :(

  • கருத்துக்கள உறவுகள்

வெளியில ஏதாவது ஒரு பிரச்சனைக்குள்  தலையைக் குடுத்துட்டு அந்த ஆத்திரத்தை யாழில் கொட்டுங்கோ ,  வெளியில்  கஸ்டமெனில் அப்பாவியாய் ஒரு சீவன் வீட்டுக்குள் நடமாடும்தானே....! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புங்கை, விசுகு அண்ணா, சுவி அண்ணா.

சுவி அண்ணா வாய்விட்டுச் சிரிக்கப்பண்ணிப் போட்டியள்.

வாழ்வில்

கேள்விகள் மட்டும்  கேட்பதே ஒரு பிரச்சினை  தான்

அது தான் உங்களுக்கும் என்று நினைக்கின்றேன்....... :(

நீங்கள் கூறுவது புரியவில்லை. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனித மனம் மிகவும் அற்புதமான ஒரு விந்தை!

அதனை நெறிப்படுத்துவது இன்னும் அற்புதமான விந்தை!

நெறிப்படுத்தியவன் (ள்) இறையாகின்றான் (ள்) !

அதனை நெறிப்படுத்துங்கள்! வழிக்குக் கொண்டு வாருங்கள்!

மனித மனம் அற்புதமானதுதான். அதேவேளை பெண்ணின் மனம் ஆண்களின் போன்றதன்று. சில பெரிய வலிகளைத் தாங்கினாலும் தூக்கி எறிய வேண்டிய சில சிறிய முள் குற்றல்களை தாங்க முடியாது எந்நேரமும் சித்திரவதையை அனுபவித்துக்கொண்டிருக்கும். அதிலிருந்து மீள்வதென்பது இலகுவானதல்ல.

அக்கோ நான் யாழுக்கு வருவதே இங்கு எழுதப்படும் அரசியல் கருத்துக்களை பார்த்து சிரிப்பதுக்குதன் மனம் லேசாகும் அது என்ன உங்களுக்கு மாறி நடக்கு அதுதான் விளங்கவில்லை பேஸ்புக்கை விட யாழ் நல்ல பொழுதுபோக்கு இடம் பாருங்கோ .

நீங்க வரணும் பழைய சுமேரியா :D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறுவது புரியவில்லை. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கோ.

சரி

விதி  யாரை விட்டது.... :lol:  :D

இப்போ

இந்த கேள்வியைக்கேட்டு 

இந்த திரியை  இங்கு திறக்க எவ்வளவு யோசித்தீர்கள்???

எத்தனை கேள்விகளை  உங்களுக்குள் கேட்டீர்கள்??

இதைப்புரிந்து கொண்டால் மீதி புரியும் என்று நினைக்கின்றேன்

வாழ்வில் ஆயிரம் கேள்விகள்

99 வீதம்

நாம் உருவாக்கிக்கொண்டவை தான்... :)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்ப கொஞ்ச நாட்களாகவே யாழ்இணையத்துக்கு வர விருப்பமே இல்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் வரவேண்டும் வரவேண்டும். ஏதாவது எழுதவேண்டும் என்று எத்தனையோ முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை. எனக்கு யாழில் யாருடனும் பகையும் இல்லை. மனம் முழுவதும் எதோ வெறுமை சூழ்ந்தது போலவே எந்நேரமும் உள்ளது. என் மனதை எப்படியாவது பழைய நிலைக்குக் கொண்டுவர முயன்றும் முடியவில்லை. முகப்புத்தகத்தில் மனதைத் திருப்பினாலும் அதுகூட ஆர்வமாக இல்லை. என்ன செய்யலாம்??????????

இது இயற்கை.. :blink: அதுக்கு என்ன செய்யமுடியும்?? :unsure:

Spoiler
:lol: :lol: :lol:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அஞ்சரண் , இசை வரவுக்கும் கருத்துக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இப்ப கொஞ்ச நாட்களாகவே யாழ்இணையத்துக்கு வர விருப்பமே இல்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் வரவேண்டும் வரவேண்டும். ஏதாவது எழுதவேண்டும் என்று எத்தனையோ முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை. எனக்கு யாழில் யாருடனும் பகையும் இல்லை. மனம் முழுவதும் எதோ வெறுமை சூழ்ந்தது போலவே எந்நேரமும் உள்ளது. என் மனதை எப்படியாவது பழைய நிலைக்குக் கொண்டுவர முயன்றும் முடியவில்லை. முகப்புத்தகத்தில் மனதைத் திருப்பினாலும் அதுகூட ஆர்வமாக இல்லை. என்ன செய்யலாம்??????????

சிவரிலை தலையாலை இடிக்கலாம் .

பொறுங்கோ சுமே உது வலு ஈசி!!

சுண்டூஊஊஊஊஊஊஊஉ எங்கை அந்தப் பழைய தும்புத் தடி???????? நண்டூஊஊஊஊஊஊஊஊஊஊ எங்கை அந்த புது விளக்குமாறு???????

எடுத்துக் கொண்டு அலை அக்காவுக்குப் பின்னாலை வாங்கோடா தம்பிமார்! 

41817-Clipart-Illustration-Of-An-Angry-G

:D  :lol:

depositphotos_22254945-Angry-man-with-br

காலநிலை மாறும்போது கூட மனதில் வெறுமை சூழ வாய்ப்புக்கள் உண்டு . குளிர் ,இருட்டு ,அணியும் குளிர்கால உடுப்புகள் மனதில்  ஒரு மந்த  நிலையை உருவாக்க வாய்ய்பு உண்டு .

கொஞ்ச நாட்களில் பறந்துவிடும் .தொடர்ந்து எழுதுங்கள் .வாசிக்கின்ற எங்களை அந்த நிலைக்கு தள்ளாவிட்டால் சரி . :D

என்ன சுமேரியர் வளந்திட்டா போலை கிடக்கு :wub: :wub: :unsure: :unsure: .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொறுங்கோ சுமே உது வலு ஈசி!!

சுண்டூஊஊஊஊஊஊஊஉ எங்கை அந்தப் பழைய தும்புத் தடி???????? நண்டூஊஊஊஊஊஊஊஊஊஊ எங்கை அந்த புது விளக்குமாறு???????

எடுத்துக் கொண்டு அலை அக்காவுக்குப் பின்னாலை வாங்கோடா தம்பிமார்! 

41817-Clipart-Illustration-Of-An-Angry-G

:D  :lol:

depositphotos_22254945-Angry-man-with-br

இது இரண்டும் ஆர் நண்டுவும் சுண்டுவுமோ ?????

என்ன சுமேரியர் வளந்திட்டா போலை கிடக்கு :wub: :wub: :unsure: :unsure: .

இப்பதான் முளைவிட்டிருக்கிறேன் நான்.

காலநிலை மாறும்போது கூட மனதில் வெறுமை சூழ வாய்ப்புக்கள் உண்டு . குளிர் ,இருட்டு ,அணியும் குளிர்கால உடுப்புகள் மனதில்  ஒரு மந்த  நிலையை உருவாக்க வாய்ய்பு உண்டு .

கொஞ்ச நாட்களில் பறந்துவிடும் .தொடர்ந்து எழுதுங்கள் .வாசிக்கின்ற எங்களை அந்த நிலைக்கு தள்ளாவிட்டால் சரி . :D

நீங்கள் சொல்வதும் உண்மைதான் அண்ணா. இந்தவருடம் பிறந்த நேரம் தொடக்கம் மழையும் குளிரும். வெளியே போகவே மனமில்லை.

சிவரிலை தலையாலை இடிக்கலாம் .

குட்டிச் சுவரோ நல்ல சுவரோ ??????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இப்ப கொஞ்ச நாட்களாகவே யாழ்இணையத்துக்கு வர விருப்பமே இல்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் வரவேண்டும் வரவேண்டும். ஏதாவது எழுதவேண்டும் என்று எத்தனையோ முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை. எனக்கு யாழில் யாருடனும் பகையும் இல்லை. மனம் முழுவதும் எதோ வெறுமை சூழ்ந்தது போலவே எந்நேரமும் உள்ளது. என் மனதை எப்படியாவது பழைய நிலைக்குக் கொண்டுவர முயன்றும் முடியவில்லை. முகப்புத்தகத்தில் மனதைத் திருப்பினாலும் அதுகூட ஆர்வமாக இல்லை. என்ன செய்யலாம்??????????

கிழமையிலை ஒருக்கால் ஆரெண்டாலும் ஒரு யாழ் உறவோடை புடுங்குப்படவும். :D

இல்லாட்டி  சனத்தை சமாளிக்கேலாது.... :icon_mrgreen:

நீங்கள் செய்யும் தப்பு, அதிகமாக மற்றவர்களிடம் விமர்சனத்தை ஏதிர்பார்ப்பது

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ.........................take it easy.....! அக்கா என்னதான் வந்தாலும் மனோபலத்தை  இழக்காதீர்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

எக்கோய் ரொம்ப கஷ்ட்டமா இருந்தால் வர பேசாமால் எஸ்கேப் ஆகிடுங்க அதான் பெட்டெர்

இல்லாட்டி வேற ஐடியில் வாங்கோ
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் செய்யும் தப்பு, அதிகமாக மற்றவர்களிடம் விமர்சனத்தை ஏதிர்பார்ப்பது

நீங்கள் எண்ணுவது தவறு

கிழமையிலை ஒருக்கால் ஆரெண்டாலும் ஒரு யாழ் உறவோடை புடுங்குப்படவும். :D

இல்லாட்டி  சனத்தை சமாளிக்கேலாது.... :icon_mrgreen:

யாழுக்கு வரவே மனம் வராமல் ஆரோட புடுங்குப்படுறது ??????

அய்யோ.........................take it easy.....! அக்கா என்னதான் வந்தாலும் மனோபலத்தை  இழக்காதீர்கள்!!

ஏற்கனவே இழந்தாச்சே

எக்கோய் ரொம்ப கஷ்ட்டமா இருந்தால் வர பேசாமால் எஸ்கேப் ஆகிடுங்க அதான் பெட்டெர்

இது கொஞ்சம் நல்லவிசயம் போல கிடக்கே.என்ன அன்பு

இல்லாட்டி வேற ஐடியில் வாங்கோ

இது கொஞ்சம் கஷ்டம்

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறன், யாழ் விதிகளில் ஒன்று, தேவையில்லாத விடயங்களுக்கெல்லாம் திரி தொடங்கப் படாது என்பது. எதுக்கும் ஒருக்காப் போய் வாசியுங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

பேசாம.. ஒரு பச்சை வீட்டை உங்கள் தோட்டத்தில்.. தயார் செய்து.. குளிர்காலத்திலும்.. பயிர் வளர்த்தீங்கன்னா.. உந்த உபத்திரபம் இருக்காது. பயிர்கள்.. செடிகள்.. மரங்களின்.. பச்சை மனது இலகு படுத்த உதவும். :)

Green spaces have lasting positive effect on well-being.

_72203529_crystalpalaceparkbbc.jpg
 
There is a growing body of evidence that suggests
 
urban green spaces are good for people's well-being

Living in an urban area with green spaces has a long-lasting positive impact on people's mental well-being, a study has suggested.

UK researchers found moving to a green space had a sustained positive effect, unlike pay rises or promotions, which only provided a short-term boost.

The authors said the results indicated that access to good quality urban parks was beneficial to public health.

The findings appear in the journal Environmental Science and Technology.

http://www.bbc.co.uk/news/science-environment-25682368

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்ப கொஞ்ச நாட்களாகவே யாழ்இணையத்துக்கு வர விருப்பமே இல்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் வரவேண்டும் வரவேண்டும். ஏதாவது எழுதவேண்டும் என்று எத்தனையோ முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை. எனக்கு யாழில் யாருடனும் பகையும் இல்லை. மனம் முழுவதும் எதோ வெறுமை சூழ்ந்தது போலவே எந்நேரமும் உள்ளது. என் மனதை எப்படியாவது பழைய நிலைக்குக் கொண்டுவர முயன்றும் முடியவில்லை. முகப்புத்தகத்தில் மனதைத் திருப்பினாலும் அதுகூட ஆர்வமாக இல்லை. என்ன செய்யலாம்??????????

யாழில் எனக்குப் பிடித்தது என்னவென்றால்! அதன் வரம்புகளுக்கு உட்பட்டு என் மன அழுத்தங்களையும் எண்ணங்களையும் அங்கு இறக்கிவைக்க முடிவதுதான்!! எனக்குச் சரியென்று பட்டதை அங்கு தயங்காமல் பதியமுடிகிறது. என்பதிவை, வரம்பைமீறி அவமானப்படுத்த எவருக்கும் அங்கு அனுமதியில்லை. விமர்சனங்கள் நிறையவே வரும்போதும் அவற்றில் எனக்கு உகந்ததை உள்வாங்கிக் கொண்டு ஏனையவற்றைப் புறந்தள்ளிவிடுவதற்கு எந்தத்தடையுமில்லை. யாருக்கும் பதில்தரவேண்டிய தேவையோ, அவசியமும் அங்கில்லை. இவைகளையும் மீறி எனக்கு மன அழுத்தம் ஏற்படுமாக இருந்தால்...! அது என்னை நானே சுயவிசாரனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளதாகவே உணரப்படல் வேண்டும்.  :(
 
சுமேரியர் என்ற உறவின் இசையை யாழ் இன்றுவரை இனிமையாகவே மீட்டிவந்துள்ளதை ஏனைய உறவுகளின் பின்னூட்டங்களும் வெளிப்படுத்தி உள்ளன. அந்த இனிமையை நானும் உணருகிறேன். :wub:
 
தண்ணீரைப் புனித நீராக்கிச் சுத்தமாக அருந்தினாலும் உடலானது அதில் குறைபிடித்து கழிவையும்கண்டு வெளியேற்றிவிடுகிறது. இதனைக்கண்டு மனமுடைந்து தண்ணிரே அருந்தாது தவிர்க்கமுனையும் அறியாமைக்கு ஒப்பாகவே உங்கள் பதிவிலுள்ள ஆதங்கத்தையும் காணமுடிகிறது.  :o
      
நடப்பவை எல்லாம் நன்மைக்கே! என்ற எண்ணமானது, பெரும் துன்பங்கள் ஏற்படும்போதும் மனம் பாதிப்படையாது பாதுகாக்கும்!!. :rolleyes:   
  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்சின் உவமானம் , தண்ணீரானது.....  நன்றாக உள்ளது .  இதுவும் கடந்து போகும். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.