Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்லாமீயராக மாறினார் யுவன் சங்கர்ராஜா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அடிக்கடி தமிழகத்து பிரபலங்கள் மதம் மாறினம். 1) நாத்திகராக இருந்த பெரியார்தாசன் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். அண்மையில் காலமானர். 2) பிரபுதேவாவின் காதலுக்காக கிருஸ்தமதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மதம் மாறினார். இப்பொழுது அவரகளின் காதல் முறிவடைந்துவிட்டது. 3) யூவன் சங்கர் ராஜா தனது மூன்றாவது திருமணத்துக்காக இந்து மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாறினார். இவர்களின் திருமணம் எவ்வளவு காலத்துக்கு செல்லும் அல்லது மகிழ்ச்சியாக இருப்பார்களா என்பது இனித்தான் தெரியும்.

  • Replies 100
  • Views 10.5k
  • Created
  • Last Reply

இப்ப அடிக்கடி தமிழகத்து பிரபலங்கள் மதம் மாறினம். 1) நாத்திகராக இருந்த பெரியார்தாசன் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். அண்மையில் காலமானர். 2) பிரபுதேவாவின் காதலுக்காக கிருஸ்தமதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மதம் மாறினார். இப்பொழுது அவரகளின் காதல் முறிவடைந்துவிட்டது. 3) யூவன் சங்கர் ராஜா தனது மூன்றாவது திருமணத்துக்காக இந்து மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாறினார். இவர்களின் திருமணம் எவ்வளவு காலத்துக்கு செல்லும் அல்லது மகிழ்ச்சியாக இருப்பார்களா என்பது இனித்தான் தெரியும்.

தமிழகத்தில் பச்சோந்தி தொல்லை ஜாஸ்தி.

chameleon_change_color_zpsd14198ac.gif

TR ராஜேந்தர் குடும்பமும் அல்லுலோயக்கு மாறிவிட்டார்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

பிறப்பினால் வரும் மதத்தையும் சாதியையும் காவிக்கொண்டு திரியவேண்டிய அவசியமில்லை. பிடிக்காவிட்டால் மதம் மாறவும் சாதி அடையாளத்தைத் துறக்கவும் அப்படியானவர்களை ஏற்றுக்கொள்ளவும் கூடிய சமூகம் இருக்கவேண்டும். இதை மறுப்பவர்கள் ஏதோ ஒன்றின் மீது வெறிபிடித்துத்தான் இருக்கின்றனர்.

ஒரு மதத்தின் கொள்கை பிடித்தால் அதனைப் பின்பற்றுவதில் எந்தத் தவறும் இல்லை.  அதற்காக மதம் மாறுவதுதான் பிழை.  மதம் மாறுவது என்பது சும்மா ஒரு சாக்குப் போக்கு.  தனக்கென ஒரு கொள்கை, சிந்தனைத்திறன் இல்லாதவர்கள்தான் மதம் மாறுகிறார்கள்.  நான் பிறப்பால் இந்து.  ஆனால், எனக்கு 11 வயதில் கிறிஸ்தவர்களின் நட்புக் கிடைத்தது.  அவர்களோடு சேர்ச்சுக்குச் சென்றிருந்தபோது, அவர்களின் வழிபாட்டு முறை மிகவும் பிடித்திருந்தது.  அதனால் அநேக ஞாயிறுகள் அவர்களோடு சேர்ச்சுக்குச் சென்றிருக்கிறேன்.  ஒரு வருடத்தில் இடப்பெயர்வின் காரணமாகச் சேர்ச்சுக்குச் செல்வது நின்றுவிட்டது.   இங்கு ஏழு நாட்களும் சேர்ச் திறந்திருக்கும்.  ஆனால், இப்போது மனம் நினைக்கும் போதெல்லாம் சேர்ச்சுக்கு போவதுண்டு.    சேர்ச்சுக்குச் செல்ல வேண்டுமென்பதாலோ, அவர்களின் வழிமுறைகள் பிடித்திருப்பதாலோ நான் மதம் மாறவில்லை.

இவர் மதம் மாறியதற்கு காரணம் அவர் விரும்பும் பெண்ணைத் திருமணம் செய்வதற்கே.  அதற்கு மதத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.  இளையராஜா தனக்கென ஒரு பெயரை உருவாக்கியது உண்மை.  ஆனால், இசையிலும் சரி, சொந்த வாழ்விலும் சரிஇ தனக்கான வாரிசை உருவாக்கவில்லை.  சொந்த வாழ்க்கையில் அவர் தோல்விதான் கண்டிருக்கிறார். 

மேலே கிருபன் எழுதிய கருத்தையும்,கீழே போக்கிரி எழுதிய கருத்தையும்  இணைத்து உள்ளேன்.இந்த இரு கருத்துக்களும் எவ் விதத்தில் ஒத்துப் போகின்றன :unsure: ஏன் கேட்கிறேன் என்டால் கிருபனின் இந்த கருத்திற்கு பச்சை குத்திய போக்கிரி கீழே இந்தக் கருத்தை எழுதியுள்ளார்.தயவு செய்து விளக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மட்டும் என்ன செய்கிறீர்கள் ? வெட்கமில்லாமல் கிறீஸ்த்தவத்தைத் திட்டித் தீர்க்கிறீர்கள். இந்துத்துவ வெறியர்கள் பற்றி நீங்கள் பேசப்போவதில்லை. ஏனென்றால் நீங்கள் ஒரு இந்துமத அடைப்படைவாத வெறியர். உங்களைப்பொறுத்தவரை அவர் இஸ்லாமியராக இருப்பது கிறீஸ்த்தவராக இருப்பதைவிட மேலானது. தூ....இதெல்லாம் ஒரு கொள்கையா??

இந்துத்துவ மதவெறி ஓநாய்களால் தலித்துக்கள் என்று தாழ்த்தி அழிக்கப்பட்ட அடிமைப்படுத்தப்பட்ட ஒரு சமூகம்தான் இளையராஜா - யுவன் சார்ந்த சமூகம். இளையராஜா தனது மனவுணர்வை வெளிக்கட்டவில்லை. ஆனால் மகன் வெளிப்படையாகக் காட்டியுள்ளார். 

உலகப்புகழ் பெற்ற ஏ. ஆர். ரகுமான் கூட இந்துவாகவிருந்து உங்களைப்போன்ற இந்துமத அடிப்படைவாதிகளால் சாதிக்கொடுமையால் பாதிக்கப்பட்டு சமூகத்தில் ஒதுக்கப்பட்டு வேறுவழியின்றித்தான் இஸ்லாமியராக மாறினார் என்பதாவது தெரியுமா உங்களுக்கு ? 

ஒருவன் இந்துமதத்தைவிட்டு வெளியேறுகிறான் என்றால் முதலில் அதற்கு என்ன காரணம் என்று யோசியுங்கள்( வெறுமனே பணத்துக்காகப் போனான், பட்டத்திற்காகப் போனான் என்று சப்பைக் கட்டுக் கட்ட வேண்டாம். யுவனிடமில்லாத பணமா? )பிறகு அவன் எந்த மதத்திற்குள் போகிறான், அது நல்லதா கெட்டதா என்பது பற்றிக் கவலைப்படலாம். 

ஈழத்தில் இந்துக்களைப்போன்றே விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து பலியான கிறீஸ்த்தவர்கள் இருக்கிறார்கள். இன்னும் உயிர்ப்புடன் செயற்படுகிறார்கள். எனது குடும்பமும் ஈழவிடுதலைப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்திருக்கிறது. உங்களைப்போன்றவர்கள் ஓரிருவர் இருந்தாலே போதும், எமதினத்தினை முற்றாக நாசம் செய்யும் அளவிற்கு கொண்டுசெல்லக்கூடியவர்கள். இனச்சுத்திகறிப்பென்று நாங்கள் சிங்களவனைக் குறை சொல்லத் தேவையில்லை. முதலில் முஸ்லீம்களை அழித்தோம், இன்று கிறீஸ்த்தவர்களை முன்னின்று அழிப்போம். அதன்பிறகு இந்துத்துவ ஈழம் கேட்கலாம். நீங்களெல்லாம் ஒரு தமிழர், உங்களுக்கு விடுதலை ஒரு கேடு ??

நல்லது நல்லது... எங்கே இடம் கிடைக்கும் என்று அலைகின்றீர்கள் போலும். முதலே அவர் எந்த மதத்தைப் பின்பற்றுகின்றார் என்பது அவர் பிரச்சனை என்றே சொன்னேன். தவிர, எனக்கு ஏன் கிறிஸ்தவத்தைப் பிடிக்காது என்பதற்கான காரணத்தையும் தெளிவாகத் தான் இதில் மட்டுமல்லாமல் பல தடவைகள் எழுதியுமிருக்கின்றேன். அதை எல்லாம் விட இங்கே இக்கருத்தில் மதவெறியராக இனம் காணும் அளவு உங்களின் அறிவினை எண்ணி வியக்கேன்.

கிறிஸ்தவம் மீது சொன்னவுடன் ஏதோ நீதிதேவை போல போடும் நாடகம் வேண்டாமே ராகுநாதன். உங்களுக்குள் திராவிட மிருகமோ, கிறிஸ்தவ மிருகமோ பதுங்கி இருக்கின்ற தேடல் எனக்கு அவசியமற்றது தான். ஆனால் இப்படிப் பலபேரை யாழ்களத்தில் கருத்துமோதல்களின் பிற்பாடு உணர்ந்திருக்கின்றேன். இப்படி நடுநிலைமை வேடமிட்டவர்கள் தனிப்பட்டரீதியில் பழகும்போது அவர்கள் என்ன மாதிரிப் பின்ணனி கொண்டிருக்கின்றார்கள் என்பது கற்றுக்கொண்ட பாடங்கள்... இஸ்லாமியராக இருக்கலாம், அது கிறிஸ்தவத்தை விட என்பதில் தூ என்பதற்கு என்ன இருக்கின்றது. அது தான் ஓரளவான உண்மை. கடவுளைக் காசுக்கு விற்கின்ற அளவு இன்னமும் இஸ்லாம் போகவில்லை. அங்கே ஏதோ உணர்வோ, வெறியோ... தன்மானத்துக்கு விலை பேசுகின்றார்கள் இல்லை.

கிறிஸ்தவம் தான் இந்த மானம் கெட்ட பிழைப்பினைச் செய்கின்றது. அது பின்பற்றினால் காசு, பதவி, வேலை என்று ஏதோ ஒன்றைத் தாரை வார்க்கின்றது. இப்படி மதம் மாறியவர்களில் ஒரு 20வீதம் பேர் கூடப் பக்தியோடு மதம் மாறியிருப்பின் அவர்களை மரியாதை செய்கின்றேன். அடிப்படை மதவெறியர் என்று சொன்னது, முன்பு பைபிளின் அசிங்கங்களைப் பட்டியலிட்டதன் வலிப்பாகவே உணர்கின்றேன்.

இளையராஜா ஒரு தடவை குமுதம் பதிலில் சாதி பற்றிச் சொன்னார். ஆனால் அதற்கு யுவன் இப்படி மதம் மாறியதற்கான காரணம் இது தான் என்று உங்களுக்குச் சொன்னரா? மனதில் தோன்றுவதை எல்லாம் உண்மை போல அடித்துச் சொல்ல உங்களால் தான் முடியும். இந்துத்துவ மதவெறி ஓநாய் அது இது என்று வக்கிரமாகப் புலம்புகின்றீர்களே, ஏன் இந்துக்கள் மாவீரர்களாக இல்லையா? இங்கே விடுதலைப் போராட்டத்தில் இந்துக்கள் வீரச்சாவு அடையவில்லையா?

இந்துக்களைப் பற்றி அசிங்கமாக எழுதும்போது எங்கய்யா போய்ச்சு உங்களின் நியாயம் தர்மம்? விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பதற்காக அவர்களின் தவறுகளை, குறைகளை மறைக்கலாம் என்று விதி உள்ளதா என்ன? ஆக அவர்கள் போராடியது ஈழத்துக்காக அல்ல, மதத்துக்காக என்றால் அது தேவையற்ற போராட்டம்? எந்த இந்த யாழ்களத்தில் இப்படி உங்களைப் போன்றவர்கள் முகமூடி போட்டு இந்து எதிர்ப்பினைக் கொட்டும்போது, யாராவது இந்துக்கள் "தமிழீழத்துக்கு நாங்களும் போராடுகின்றோம் உங்களுக்குத் தெரிவிக்காமல் விட்டார்களா என்ன? இந்த யாழ்களத்தில் முன்பும் நாரதர் , ஈழநாதன் உற்பட்ட சிலர் இதே போன்று இந்துத்துவம் பற்றிய வக்கிரங்களைக் கொட்டிக் கொண்டிருந்தனர். அதன் பிற்பாடு தான் திராவிடக்கும்பல்களின் மறுபக்கங்கள் பற்றிய கருத்துக்களை இங்கே பதிய வேண்டி ஏற்பட்டது. சொல்லப் போனால் இங்கே இது தான் பிரச்சனையே. எதிர்வரும் காலத்தில் இப்படியான நயவஞ்கர்கள் போடுகின்ற முகமூடிகள் பற்றி அவதானமாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தமிழீத்தை எதற்கெடுத்தால் இழுத்துக் கதைக்கின்ற வேலையை நிறுத்துங்கள். கிறிஸ்தவத் தேவாலயங்களை இடிப்போம், நொருக்குவோம் என்று நான் ஏதாவது கருத்துப் பகிர்ந்தால் வெறி பற்றிக் கதைப்பதில் ஓரளவு நியாமிருக்கின்றது. ஆனால் கிறிஸ்தவம் பிடிக்காமைக்கு ஒரு மனிதனு;ககு நியாயம் இருக்க்ககூடாது என்று கதைப்பது சரியன்று. உங்களுக்கு இந்துத்துவம் பிடிக்காவில்லை என்றால் நியாயமாகக் கதையுங்கள். ஆனால் அதற்கு ஓநாய்கள் , வெறியர்கள் என்று உங்களின் கருத்து இயலாமையைக் காட்டிக் கொள்ளாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அலட்டல்களுக்கு அப்பால் ஒரு செய்தி. சேரமான்பெருமாள் பற்றி நாங்கள் சிறுவயதில் படித்திருப்போம்.அவர் கைலாயம் போகும்போது, ஒளவையார் பிள்ளையாருக்கு அவசரமாகப் பூசை செய்ததாகவும், பிற்பாடு பிள்ளையார் ஒளவையாரைத் தூக்கிச் சேரமானோடு அனுப்பி வைத்தாகவும் படித்த ஞாபகம் யாருக்கும் உள்ளதோ தெரியவில்லை. உண்மையில் சேரமான் ஆனால் ஒருபக்கம் இஸ்லாம் என்றும் மறுபக்கம் கைலாயம் என்றும் பல குழப்பங்கள் உள்ளன. மதம் மாறினாரா என்பது சந்தேமாக இருக்கலாம். ஆனால் அவர் பற்றிய தகவல்கள் புதுமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தன.ஒளவையார்களில் இந்த ஒளவையார் பிள்ளையாரைக் கும்பிட்டதால் முருகனைக் கும்பிட்ட ஒளவையார் வேறு என்பதையும் கருத்தில் கொள்க.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய  மார்க்கத்தில் பெண்னுக்குத்தானே மணமகன் பணம் கொடுத்து  நிஹ்கா பண்ணுவார்... !  யுவன்  பெண் வீட்டாரிடம் பணம் கொடுத்து கலியாணம் செய்கிறார் போல...! :)

  • கருத்துக்கள உறவுகள்
தூயவன் சொல்வதும் உண்மை தான்...எல்லாக் கடவுளும் ஒன்று என கிறிஸ்தவர்கள் நினைத்தால் ஏன் காசைக் கொடுத்து,பதவியைக் கொடுத்து ஆட்களை மதம் மாற்றுகிறார்கள்?...உன் கடவுளை நீ கும்பிடு;என் கடவுளை நான் கும்பிடுகிறேன் என்று போட்டு இருக்கலாமே!...முஸ்லீம்கள் காசுக்காகவோ,பதவிக்காகவோ மற்றவரை மதம் மாத்தியதை நான் கேள்விப்படவில்லை.தங்கட மதத்தில் திருமணம் முடிக்க வேண்டும் என்பதால் மட்டுமே மற்றவரை மதம் மாத்தினார்கள்.
 
தமிழர்களிடம் தான் இனப்பற்று இல்லை, சைவர்களிடம் மதப்பற்றும் இல்லை.மற்ற மதத்தவர் தங்கட மதத்தில் குறைகளையோ,பிழைகளையோ தூக்கிப் பிடிப்பதில்லை.ஆனால் நாங்கள் ஒன்று என்டவுடன் ஒரு சின்னப் பிழையையும் பெரிசாக தூக்கிப் பிடிக்கிறோம்.
 
தலைப்புக்கு அப்பால் இந்த கருத்து எங்கேயோ போய் விட்டது.மன்னிக்கவும் :)
 
மிக உண்மை.. கண்ணுக்குத் தெரியவில்லை என்கிற காரணத்தினால் கடவுளை (அல்லது நமக்கு மேற்பட்ட சக்தியை) மறுதலிப்பவர்கள் உள்ளார்கள்.. அதுபோல கண்ணுக்குப் புலப்படாத இயக்கத்தையும் விமர்சிக்கிறார்கள்.. :huh::D

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் சொல்வதும் உண்மை தான்...எல்லாக் கடவுளும் ஒன்று என கிறிஸ்தவர்கள் நினைத்தால் ஏன் காசைக் கொடுத்து,பதவியைக் கொடுத்து ஆட்களை மதம் மாற்றுகிறார்கள்?...உன் கடவுளை நீ கும்பிடு;என் கடவுளை நான் கும்பிடுகிறேன் என்று போட்டு இருக்கலாமே!...முஸ்லீம்கள் காசுக்காகவோ,பதவிக்காகவோ மற்றவரை மதம் மாத்தியதை நான் கேள்விப்படவில்லை.தங்கட மதத்தில் திருமணம் முடிக்க வேண்டும் என்பதால் மட்டுமே மற்றவரை மதம் மாத்தினார்கள்.
 
தமிழர்களிடம் தான் இனப்பற்று இல்லை, சைவர்களிடம் மதப்பற்றும் இல்லை.மற்ற மதத்தவர் தங்கட மதத்தில் குறைகளையோ,பிழைகளையோ தூக்கிப் பிடிப்பதில்லை.ஆனால் நாங்கள் ஒன்று என்டவுடன் ஒரு சின்னப் பிழையையும் பெரிசாக தூக்கிப் பிடிக்கிறோம்.
 
தலைப்புக்கு அப்பால் இந்த கருத்து எங்கேயோ போய் விட்டது.மன்னிக்கவும் :)

அதுதுதுதுதுதுதுதுதுதுது

இதைத்தான்

என் இனம் சார்ந்து

என் மதம் சார்ந்து

எம் இயக்கம் சார்ந்து

நான் வாழ் நாள் பூராகவும் செய்கின்றேன்

ஆனால்

என்னையும் உங்களுக்கு பிடிக்கவில்லையே.............. :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

அதுதுதுதுதுதுதுதுதுதுது

இதைத்தான்

என் இனம் சார்ந்து

என் மதம் சார்ந்து

எம் இயக்கம் சார்ந்து

நான் வாழ் நாள் பூராகவும் செய்கின்றேன்

ஆனால்

என்னையும் உங்களுக்கு பிடிக்கவில்லையே.............. :(  :(  :(

விசுகு அண்ணா,நாங்கள் கடைப்பிடிக்க ஏற்கனவே ஒரு மதம் இருக்குது ஆனால் எங்களுக்கு என்று ஒரு நாடு இன்னும் இல்லை.அதற்காகத் தான் போராடுகிறோம்.புலிகள் செய்த பிழைகளை,எங்கள் தலைவர்கள் செய்கின்ற பிழைகளை பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்தால் கடைசி வரைக்கும் எமக்கு நாடு கிடைக்காது.எமக்கு ஒரு நாடு கிடைக்க வேண்டுமானால் அவர்களை சரியான பாதையில் போக செய்ய வேண்டும்.சரி/பிழைகளை சுட்டிக் காட்ட வேண்டும்.அவர்கள் செய்த/செய்கின்ற எல்லாத்திற்கும் ஆமாம் போட்டுக் கொண்டு இருந்தால் நடக்கப் போறது அழிவைத் தவிர வேறு ஒன்றும்  இல்லை.நீங்கள் ஆமாம் போட்டு,போட்டு மு.வாய்க்கலில் நடந்ததை தான் பார்த்தோமே.தவிர உங்களை நான் எங்கும் பிடிக்கவில்லை என்று சொல்லவில்லையே :)
 
இசை இயக்கம் எங்கள் கண்ணுக்கு முன்னால் தான் இயங்கியது :rolleyes:  :icon_idea:

அவர்கள் இருந்தபோது சுட்டி காட்டியிருந்தால் ...........
பிழைகளை திருத்தி கொள்ள அவர்களுக்கு வசதியாக இருந்திருக்கும்.
 
அவர்கள் இல்லாத போது சுட்ட்டி காட்டுவது.............
நானும் இருக்கிறேன் என்று வகுப்பில் எழுந்து நிற்பது போல் இருக்கு.

அப்பவே தவறுகளை தட்டிக் கேட்டு இருக்கலாம்/கேட்டு இருக்க வேண்டும் ஆனால் உங்கள் மாதிரி பெரிய தலைகள் இருக்கும் போது என்னை மாதிரி சின்ன வால்கள் ஆடக் கூடாது என்று பேசாமல் இருந்து விட்டேன் ^_^

தட்டி கேட்டவர்கள் பாடையில் தான் போனார்கள் .

கெடு குடி சொற்கேளாது .எத்தனை பேர் எத்தனை தரம் சொன்னார்கள் .

யுவன் செய்வது கேவலம், நான் விரும்பிய இசையமைப்பாளர்களில் ஒருவன் ஆனால் இப்படி செய்து சைவ மதத்தையே கேவலப்படுத்திவிட்டர். இவர் மதமாற்றத்துகுக் காரணம் தற்போதைய மனைவியை விவாகரத்து செய்யாமல் இன்னுமொருவரை மணக்க முயல்கிறார் என்று நினைக்கிறேன் ஏன் என்றால் இஸ்லாமியரால் 4 மனைவிகள் வைத்து இருக்கமாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உழுற மாடு எந்த ஊரிலையும் உழும் :D ....... மதம் மாறித்தான் வாழோணுமெண்டால் அதைவிட முட்டாள்த்தனம் வேறையொண்டுமில்லை :icon_idea: .....மதம் மாறித்தான் நல்லது செய்யோணுமெண்டு நினைக்கிறவனைமாதிரி ஒரு கள்ளன் உலகத்திலை வேறை ஒருத்தனுமில்லை.... :icon_idea:  :icon_idea:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பவே தவறுகளை தட்டிக் கேட்டு இருக்கலாம்/கேட்டு இருக்க வேண்டும் ஆனால் உங்கள் மாதிரி பெரிய தலைகள் இருக்கும் போது என்னை மாதிரி சின்ன வால்கள் ஆடக் கூடாது என்று பேசாமல் இருந்து விட்டேன் ^_^

இறந்தகாலம்! முடிந்துவிட்டது அங்கே இனி எந்த மாற்றத்தையும் எவராலும் செய்யமுடியாது.
 
இப்போ ஏன் ஆட்டுகிறீர்கள் என்பதுதான் எனது கேள்வி ?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்கள் இருந்தபோது சுட்டி காட்டியிருந்தால் ...........
பிழைகளை திருத்தி கொள்ள அவர்களுக்கு வசதியாக இருந்திருக்கும்.
 
அவர்கள் இல்லாத போது சுட்ட்டி காட்டுவது.............
நானும் இருக்கிறேன் என்று வகுப்பில் எழுந்து நிற்பது போல் இருக்கு.

ஒருவருக்கு, மதியுரைஞர் என்ற பதவியைக் கொடுத்துவிட்டு அவரின் பேச்சையே கேட்காதவர்கள்,  எங்கள் பேச்சையா கேட்டுவிடப் போகிறார்கள்?

ஒருவருக்கு, மதியுரைஞர் என்ற பதவியைக் கொடுத்துவிட்டு அவரின் பேச்சையே கேட்காதவர்கள்,  எங்கள் பேச்சையா கேட்டுவிடப் போகிறார்கள்?

சார் கொஞ்சம் விளக்கமாய் கூறினால் நாமும் தெரிந்து கொள்ளலாம் இல்லையா ...........
 
குத்து மதிப்பில் பேசினால் விளக்கம் தரத்தேவையில்லை ...............பொத்திக்கொண்டு இருந்தால் போதும் ...........வாயை  மதியுரைஞ்சர் விடயத்தில்   :icon_mrgreen:

Edited by தமிழ்சூரியன்

உலகப்புகழ் பெற்ற ஏ. ஆர். ரகுமான் கூட இந்துவாகவிருந்து உங்களைப்போன்ற இந்துமத அடிப்படைவாதிகளால் சாதிக்கொடுமையால் பாதிக்கப்பட்டு சமூகத்தில் ஒதுக்கப்பட்டு வேறுவழியின்றித்தான் இஸ்லாமியராக மாறினார் என்பதாவது தெரியுமா உங்களுக்கு ? 

ஒருவர் இந்து சமயத்திலிருந்து மதம் மாறி விட்டால் உடனே அதற்குள் சாதியை கொண்டு வந்து திணித்து இந்து சமயத்தை கேவலப்படுத்த நினைக்கும் உங்களையும் சண்டமாருதன் அண்ணா போன்றவர்களையும் என்ன செய்வது? <_<

ரகுமான் மதம் மாறியது எதற்காக என வாசியுங்கள். அல்லாவை வணங்கினால் அவர் சகோதரி பிழைத்துக்கொள்வார் என மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார். ^_^ இது தெரியாமல் நீங்கள் என்ன எழுதினாலும் அதை உண்மையென நினைத்து லைக் போடுபவர்கள் வேறு. :icon_idea:

His father, R K Shekhar, who was a composer, arranger and conductor for Malayalam films died when Rahman was just 9 years-old and his family rented out musical equipment as a source of income. Later there was a turning point when Dileep Kumar decided to rechristen himself as A R Rahman. This incident happened when Rahman's sister was very ill once. A Muslim friend suggested if he prayed in a particular mosque, his sister would recover and so did happen. This caused the entire family to convert to Islam.

http://www.iloveindia.com/indian-heroes/ar-rahman.html

ஒரு பேச்சுக்கு நான் இஸ்லாமிய சமயத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து விட்டு மதம் மாறினால் தான் திருமணம் செய்ய முடியும் என்று கூறியவுடன் மதம் மாறினால் நாளைக்கு துளசி இந்து மதத்தின் சாதிக்கொடுமையால் பாதிக்கப்பட்டு சமூகத்தில் ஒதுக்கப்பட்டு வேறு வழியின்றி தான் மதம் மாறி விட்டார் என யாழில் கூறினாலும் கூறுவீர்கள். :lol: செம கொமடி. :lol:

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ரகுராம் அண்ணாக்கு யாரோ சொல்லிவிட்டிட்டாங்க இந்து மதத்துக்கு எதிரா தீவிர பிரச்சாரம் பண்ணின்னா ஆண்டவர் சொர்கத்தின் கதவுகளை திறந்து உள்ளே இழுத்து சகல சுகங்களையும் தருவார் எண்டு...

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குழந்தை பிறக்கும் போது அதனுடைய மதம் எது எனத் தீர்மானிக்கும் அறிவு அதற்கு இல்லை! அதே போல அது ஆணாகவோ, அல்லது ஒரு பெண்ணாகவோ பிறக்கும் என்பதும் அந்தக் குழந்தையில் கட்டுப்பாட்டில் இல்லை! பின்னர் தாய், தந்தையர்களின் வழிநடத்தலில், புறக்காரணிகளின் பாதிப்புக்களால், இந்த உலகுக்கு ஏற்றமாதிரி அது தனது வாழ்வை அமைத்துக் கொள்கின்றது!

பின்னர் வளர்ந்த பிறகு, பல வேறு காரணங்களுக்காக, அது தனது மதத்தை மாற்றிக்கொள்கின்றது!

சில வேளைகளில், விருப்பமில்லாமலும் அது தனது மதத்தை மாற்ற வேண்டிய சூழல், புறக்காரணிகளால் ஏற்படுகின்றது!

இது முன்பும் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தது! இவர்கள் அப்போது ' சோத்துக் கிறிஸ்தவர்கள்' என அழைக்கப்பட்டார்கள்! இது ஆங்கிலேய காலத்தில் கிறிஸ்துவ மதத்துக்கு மாறியவர்கள் பற்றிய அவதானமாகும்! இதற்கு ஆறுமுகநாவலர் கூட விதி விலக்கல்ல! சிதம்பரத்துக் போகும் ஆசையினால், 'விவிலிய வேதத்தை' அவர் பேர்சிவல் பாதிரியாருக்காக (தவறானால் சரியான பெயரைத் தாருங்கள்) மொழி பெயர்த்துக் கொடுத்தார்! பின்னர் அதற்காகக் கிடைத்த ஊதியத்தில், சிதம்பரம் போய் வந்தார்! எனது உறவினர்கள் சிலர் இவ்வாறு மதம் மாறித் திரும்பவும் இந்து சமயத்துக்குத் திரும்பி வந்தார்கள்! இவர்கள் 'ஆசிரியர்' பதவிகளுக்காக மாறினார்கள் எனப் பின்னர் அறிந்தேன்! இப்படியான மதமாற்றமே, இப்போது 'யாழில்' நடைபெறுகின்றது என்பது எனது அவதானமாகும்!

போத்துக்கேயர் காலத்தில் நடந்த மதமாற்றமானது, மக்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டது! அது போன்ற மதமாற்றமெனில், அது விரும்பத் தக்கதல்ல என்பது எனது கருத்தாகும்!

காகத்துக்குச் சோறு வைத்தவர்களுக்குக் 'காச்சட்டையைக்' கழற்றிவிட்டுக் கசையடி விழுந்த காலம்!

இதில் ஆச்சரியம் என்னவெனில், இந்தக் காகத்துக்குச் சோறு வைப்பவர்களைத் தேடிப்பிடிப்பவர்கள், 'தமிழர்"! அவருக்குக் கொடுக்கப்பட்ட பதவியின் பெயர்  'கண்காணியார்"!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.youtube.com/watch?v=hmC6pgBtZ7w

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.