Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் பிரேரணை சமர்ப்பித்தது அமெரிக்கா : நம்பகத் தன்மையான சுயாதீன விசாரணைக்கு கோரிக்கை

Featured Replies

ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் இல­ங்கைக்கு எதி­ரான மூன்­றா­வது பிரே­ர­ணையை நேற்­றைய தினம் சமர்ப்­பித்­துள்ள அமெ­ரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்­ப­கத்­தன்­மை­மிக்க சுயா­தீ­ன­மான விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று கோரிக்கை விடுத்­துள்­ளன.
us-flag.jpg
 
அத்­துடன் இல­ங்­கைக்கு ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசேட ஆலோ­ச­னையும் தொழில்­நுட்ப உத­வியும் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்றும் இலங்­கை­யா­னது பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்தும் விட­யத்தில் மனித உரிமைப் பேர­வை­யுடன் ஒத்­துழைப்­புடன் செயற்­ப­ட­வேண்டும் என்றும் பிரே­ர­ணையில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.
 
வட மாகாண சபையும் வட மாகாண சபை முதல்­வரும் உரிய முறையில் இயங்­கு­வ­தற்கு இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு அமைய அதி­கா­ரங்­களும் வளங்­களும் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்றும் அமெ­ரிக்­கா­கவும் பிரிட்­டனும் கூட்­டாக மனித உரிமைப் பேர­வைக்கு சமர்ப்­பித்­துள்ள பிரே­ர­ணையில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.
 
ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 25 ஆவது கூட்டத் தொடர் நேற்­றுக்­காலை 9 மணிக்கு ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை தலை­மையில் ஆரம்­ப­மா­னது. இத­னை­ய­டுத்து சுவிட்­சர்­லாந்து நேரப்­படி நேற்று மாலை 4.00 மணி­ய­ளவில் அமெ­ரிக்கா இலங்­கைக்கு எதி­ரான பிரே­ர­ணையை சமர்ப்­பித்­துள்­ளது.
 
''இலங்­கையில் பொறுப்­புக்­கூறல் நல்­லி­ணக்கம் மற்றும் மனித உரி­மையை ஊக்­கு­வித்தல் '' என்ற தலைப்பில் அமெ­ரிக்கா சமர்ப்­பித்­துள்ள இந்த பிரே­ர­ணைக்கு பிரிட்டன் மொன்­ட­னேக்ரோ மெச­டோ­னியா மற்றும் மொரி­ஷியஷ் ஆகிய நாடுகள் இணை அனு­ச­ரணை வழங்­கி­யுள்­ளன.
 
பிரே­ர­ணையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள பரிந்­து­ரைகள் வரு­மாறு
 
1. ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை கடந்த பெப்­ர­வரி மாதம் 24 ஆம் திகதி இலங்கை தொடர்பில் வெளி­யிட்ட அறிக்­கையை வர­வேற்­கின்றோம்.
 
2. இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் சர்­வ­தேச மனித உரிமை சட்ட மீறல்கள் மற்றும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் தொடர்பில் நம்­ப­கத்­தன்­மை­மிக்க சுயா­தீ­ன­மான விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும். மேலும் தொடரும் மனித உரிமை மீறல்கள் நிறுத்­தப்­ப­ட­வேண்டும். ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­லகம் முன்­வைத்­துள்ள பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­த­வேண்டும்.
 
3. கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள் நிறை­வேற்ற மேல­திக நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இதில் நீதி, சமத்­துவம், பொறுப்­புக்­கூறல் மற்றும் அனைத்து மக்­க­ளுக்­கு­மான நல்­லி­ணக்கம் உறு­தி­ப்ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.
 
4. நாட்டில் மத ஸ்தலங்கள் மீதான தாக்­கு­தல்கள் குறித்து விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும். கோவில், பள்­ளி­வாசல் போன்­றவை மீது எதிர்­கா­லத்தில் தாக்­குதல் நடத்­தப்­ப­டாமல் தடுக்க நட­வ­டிக்கை வேண்டும்.
 
5. வெலி­வே­ரிய பகு­தியில் படை­யி­னரால் ஆயு­த­மற்ற ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்கள் தொடர்­பான விசா­ர­ணைகள் முடி­வுகள் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.
 
6. வட மாகாண சபையும் வட மாகாண சபை முதல்­வரும் உரிய முறையில் இயங்­கு­வ­தற்கு இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு அமைய அதி­கா­ரங்­களும் வளங்­களும் வழங்­கப்­ப­ட­வேண்டும்.
 
7. அக­தி­க­ளுக்­கான விசேட அறிக்­கை­யா­ளரை இலங்கை வர­வ­ழைத்­த­மையை வர­வேற்­கின்றோம். அத்­துடன் விசேட ஆணை­யா­ளர்­க­ளுடன் ஒத்­து­ழைக்­கு­மாறு கேட்­கின்றோம்.
 
8. இலங்­கையில் சர்­வ­தேச விசா­ரணை பொறி­முறை அவ­சியம் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்­ளையின் கோரிக்­கையை வர­வேற்­கின்றோம். தற்­போ­தைய பிரே­ரணை தொடர்பில் பேர­வையின் 27 ஆவது கூட்டத் தொடரில் வாய்­மூல விளக்­கமும் 28 ஆவது அமர்வில் முழு­மை­யான அறிக்­கையும் முன்­வைக்­கப்­ப­ட­வேண்டும்.
 
9. இலங்­கைக்கு ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசேட ஆலோ­ச­னையும் தொழில்நுட்ப உதவியும் வழங்கப்படவேண்டும்.
 
10. இலங்கையானது பிரேரணையை அமுல்படுத்தும் விடயத்தில் மனித உரிமைப் பேரவையுடன் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும்.
 
இதேவேளை, ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் சர்வதேச விசாரணை கோரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சுயாதீன விசாரணை மட்டுமே கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
 

http://virakesari.lk/?q=node/361872

  • கருத்துக்கள உறவுகள்

 

ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் இல­ங்கைக்கு எதி­ரான மூன்­றா­வது பிரே­ர­ணையை நேற்­றைய தினம் சமர்ப்­பித்­துள்ள அமெ­ரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்­ப­கத்­தன்­மை­மிக்க சுயா­தீ­ன­மான விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று கோரிக்கை விடுத்­துள்­ளன....
 
.....
 
இதேவேளை, ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் சர்வதேச விசாரணை கோரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சுயாதீன விசாரணை மட்டுமே கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
 

http://virakesari.lk/?q=node/361872

 

 

இதையும் நீர்த்துப்போகச் செய்ய இன்னமும் காலமும், நாடுகளும் இருக்கின்றன. அதையும் மீறி ஏதாவது வருமாவென்பது கடவுளுக்கே வெளிச்சம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

உக்கிரெயின் - றஷியா முரண்பாட்டினால் உலகு தலை போற பிரச்சினையில் மாட்டுப்படிருக்கிற இந்த தருணத்தை சிறிலங்கா தனக்கு சாதகமாக்கிக்கொள்ளுமா?

  • கருத்துக்கள உறவுகள்
6. வட மாகாண சபையும் வட மாகாண சபை முதல்­வரும் உரிய முறையில் இயங்­கு­வ­தற்கு இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு அமைய அதி­கா­ரங்­களும் வளங்­களும் வழங்­கப்­ப­ட­வேண்டும்.
இந்தியா சொல்லி களைத்து போய்விட்டது இப்ப அமேரிக்கா சொல்லுது....ம்ம்ம்ம்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா.. இதையே தான் காலம் பூராவும் சொல்லிக்கிட்டு இருக்கு. அவனுக்கு தேவை.. நம்மட பிரச்சனையை அவன் கூட இழுத்து வைச்சுக்கிட்டு..  தன்ர காரியத்தை பார்க்கிறது.

 

உதில எதுவுமே தமிழர்களுக்கு உபயோகமாவும் இல்ல.. தமிழர்கள் எதிர்பார்க்கும் நீதியை தருவதாகவும் இல்லை. :icon_idea:


ஐநா மனித உரிமை ஆணையாளரின் பிரேரணையைக் கூட உள்வாங்கி அமெரிக்கா பிரேரிப்புக்களை செய்யாதது ஏமாற்றம். ஐநா மூவர் குழு அறிக்கை செத்துப் போச்சு. நவி பிள்ளையின் அறிக்கை சொல்லளவில் பாராட்டப்பட்டதோடு சரி. செயல் அளவில் அமெரிக்கா.. இந்தியா வேண்டியதை மட்டுமே முன்மொழிகிறார்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விசாரணை பற்றி இந்தத் தீர்மானம் வலியுறுத்தாதது ஏமாற்றமளிக்கிறது.இப்பாழது நடப்பது 25 கூட்டத்தொடர் என்றால் இந்தத் தீர்மானத்தின் மீதான அறிக்கை 27வது 28வது கூட்டத்தொடரில் கொடுக்கப்பட வேண்டும் என்று சொன்னால் இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும்.இவர்களை நம்பி பயனில்லை.நமக்குத் தமிழகம்தான் இந்த விடயத்தில் உதவவேண்டும்.

http://inioru.com/?p=39507

இது வாக்கெடுப்புக்கு வரும்போது இலங்கையும் சேர்ந்து ஆதரவாக வாக்களிக்கலாம் அவ்வளவுக்கு மென்மையான அறிக்கை போலகிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழருடைய அவலத்திற்கு எந்த உச்ச உலகசபையிடமிருந்தும் நீதி கிடைக்கப்போவதில்லை என்பது இத்தனை துல்லியமாகத் தெரிந்தபின்னராவது, தமிழர்களுடைய பலேவேறுபட்ட அவைகள், அமைப்புக்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் பயனிக்க முன் வருமா???

  • கருத்துக்கள உறவுகள்

உலகநாடுகள் அனைத்தும் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே என்பதை உணர்ந்தாலும், இவ்விடையத்தை தமது நலன்களுக்காகவே பாவிக்கின்றது இனிமேலும் பாவிக்கும். ஆனால் நாம் வரலாற்று உண்மைகளையும், எமது அனுபவப்பாடங்களையும் கருத்திலெடுத்து, கூடியவிரைவில் எமக்கான விடுதலைநோக்கியஇன்னுமொரு போராட்டக்களமொன்றைத் திறப்போம். அதுவரை எமக்கு யார் எதிரி யார் நண்பர்கள் என்பதை அடையாளம் காணும் களமாக இப்படியான உலகப்பொதுச்சபைகளைப் பயன்படுத்துவோம். இன்னுமொரு மழைக்காலம் வரும் அது எமக்கானதாக இருக்கும் அங்கு குயில்கள் பாடுவதோடு நின்றுவிடாது போராடவும் செய்யும். எமக்கான நெல்மணிக்கான நாற்றை நாமே நடுவோம் அதில் வீரியம் பெறுவதற்காக அந்நிய இடுபொருட்களுக்குப் பதிலாக உயிர்க்கொடையாளரின் உணர்வுகளை இடுவோம். இனிமேல் விரியும் போர்க்களம் எமக்கானதல்ல எதிரிகளுக்கானது.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

உலகநாடுகள் அனைத்தும் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே என்பதை உணர்ந்தாலும், இவ்விடையத்தை தமது நலன்களுக்காகவே பாவிக்கின்றது இனிமேலும் பாவிக்கும். ஆனால் நாம் வரலாற்று உண்மைகளையும், எமது அனுபவப்பாடங்களையும் கருத்திலெடுத்து, கூடியவிரைவில் எமக்கான விடுதலைநோக்கியஇன்னுமொரு போராட்டக்களமொன்றைத் திறப்போம். அதுவரை எமக்கு யார் எதிரி யார் நண்பர்கள் என்பதை அடையாளம் காணும் களமாக இப்படியான உலகப்பொதுச்சபைகளைப் பயன்படுத்துவோம். இன்னுமொரு மழைக்காலம் வரும் அது எமக்கானதாக இருக்கும் அங்கு குயில்கள் பாடுவதோடு நின்றுவிடாது போராடவும் செய்யும். எமக்கான நெல்மணிக்கான நாற்றை நாமே நடுவோம் அதில் வீரியம் பெறுவதற்காக அந்நிய இடுபொருட்களுக்குப் பதிலாக உயிர்க்கொடையாளரின் உணர்வுகளை இடுவோம். இனிமேல் விரியும் போர்க்களம் எமக்கானதல்ல எதிரிகளுக்கானது.

 

 

எந்த  நிலையிலும்

நாம் தளர்ந்துவிடக்கூடாது

தளர்ந்துவிட முடியாது

 

உங்கள் கருத்து ஊக்கம் தருகிறது

தேவையை  சுட்டிக்காட்டி  நிற்கிறது

நன்றி ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ அமேரிக்கா இந்தா கப்பல் அனுப்புறோம், இந்தா போரை நிறுத்திறோம், எண்டு கடைசி மட்டும் நம்ப வைச்சு புலிகளை/மக்களை முள்ளிவாய்க்காலில் கொன்றது ஏனோ இப்போ ஞாபகம் வந்து தொலைக்குது. :unsure: 

இதை மறக்க ஏதாவது செய்ய முடியுமா அண்ணே :icon_idea:

இனி இறுதி யுத்தத்திற்கு ஆயுத்த படுத்தவேண்டியதுதான் .இனியும் இவர்களை நம்பி ஏமாறமுடியாது .அமேரிக்கா வந்தாலும் அடிதான் .அப்பத்தான் திருந்துவாங்கள் .

 

இனி இறுதி யுத்தத்திற்கு ஆயுத்த படுத்தவேண்டியதுதான் .இனியும் இவர்களை நம்பி ஏமாறமுடியாது .அமேரிக்கா வந்தாலும் அடிதான் .அப்பத்தான் திருந்துவாங்கள் .

 

நீங்கள் லீட் பண்ணுங்கோ நாங்கள் பின்னுக்கு வாறம்

  • கருத்துக்கள உறவுகள்

   

நீங்கள் லீட் பண்ணுங்கோ நாங்கள் பின்னுக்கு வாறம்

 

சரியான  தேர்வு

காத்திருக்கின்றோம்.....

இந்த முறை எந்த நாடு (அல்லது நபர்கள்) இலங்கைக்கு முட்டுக்கொடுத்து சகுனி வேலை பார்த்து இலங்கையை காப்பாற்றியது என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.... இலவு காத்த கிளிகளே.. ஜப்பான்...இந்தியா.... தெனாபிரிக்கா....சுமந்திரன்... புலம் தமிழர்கள் உலக அரசியலில் மிக பலமாக ஒவ்வொரு நாடாக கைக்குள் கொண்டுவரவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது... அதற்கு ஏற்ப செயல்படுவோம் ஒற்றுமையாக ஒற்றர்களை அடையாளம் கண்டு.. ஒன்றும் காலம் போகவில்லை..

சரியான தேர்வு

காத்திருக்கின்றோம்.....

என்னத்திற்கு? இலையான் அடிக்கவோ?

சும்மா பலூன் வெடித்தாலே ஆள் இரண்டு நாளா பேஸ்மெண்டை விட்டு வெளிவராது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.