Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.தேவியில் மோதி தந்தையும் மகனும் பலி

Featured Replies

4%281669%29.jpg
சுப்பிரமணியம் பாஸ்கரன்,நவரத்தினம் கபில்நாத்

கொழும்பிலிருந்து பளை நோக்கி பயணித்துகொண்டிருந்த யாழ்.தேவி ரயில்,வவுனியா புளியங்குளம் விளக்கு வைத்த குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தந்தையையும் மகனையும் இன்று காலை மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

ரயில் வந்து கொண்டிருந்த நேரம் இவர்கள் மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையினைக் கடக்க முற்பட்ட வேளையிலே இந்தவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்தவிபத்தில், வவுனியா சுந்தரபுரத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியம் சத்தியசுதன் வயது 32 மற்றும் அவருடைய மகனான சத்தியசுதன் டினோயன் ஆகியோரே இதன்போது ஸ்தலத்தியே பலியாகியுள்ளனர்.

நெடுங்கேணியில் உள்ள அவர்களின் உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பும் வழியில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தால் மனைவியை ஏ-9  பாதையில் இறக்கி விட்டு மாற்று வழியினூடாக வவுனியாவை சென்றடையும்நோக்கோடு புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வேளையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்

இத்தோடு சிங்கள தேசத்தின் யாழ் தேவி பலி எடுத்த எம் உறவுகளின் எண்ணிக்கை 10 ஐ எட்டும். இருந்தும் இவற்றை தடுக்க ஒரு நடவடிக்கையும் இல்லை. மக்களில் குறை கண்டுபிடிப்பதில் தான்.. அதிகாரிகளும் ஊடகங்களும் உள்ளன. வெளிநாடுகளிலோ.. இப்படி நடந்தால்..முறையான விசாரணைகளோடு... தண்டனைகளும்.. பாதுகாப்பு ஏற்பாடுகளும்... அதிகரிக்கப்படும். ஆனால் அங்கு..?????! மக்கள் எல்லாம் தெரிஞ்சிருக்கனும்.. யாழ் தேவி ஓட்டிறவர் கண்மூடிக்கொண்டு ஓட்டலாம்.. என்ற விதி.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி சொல்லமுடியாது நெடுக்ஸ். யாழ் தேவி ஓட்டுறவன் கண்ணை மூடி கொண்டா ஓடுறான் என்பது அல்ல கேள்வி. அப்போ மோட்டார் சைக்கிள் ஓடியவர் கண்ணை மூடி கொண்டு ஓடவில்லையா. அந்த புகையிரதம் வாறது தெரியாமலா கடவையை கடந்தவர்.

ஒரு விடயம் அவரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை.

இரண்டாவது அவர் கடந்தது பாதுகாப்பற்ற புகையிரத கடவை.

நாங்கள் வேணும் என்றால் எல்லா கடவையிலும் பாதுகாப்பு சமிக்கை அல்லது கடவை போட சொல்லி கேட்கலாம்.

அதுக்காக புகையிரத ஓட்டுனர் பிடரிக்குள்ளே கண்ணை வைத்து கொண்டா வந்தவர் என்று கேட்க முடியாது.

எல்லா கடவையிலும் வாகனங்களுக்கு வழிவிட்டு தான் யாழ் தேவி வரும் என்றால், அடுத்த நாள் தான் வந்து சேரும்.

இருப்பினும் மரணமடைந்த குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு இரங்கல்கள். :( 

இனிமேலும் மற்றவர்கள் அவதானமாக நடக்கவும்.
 
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துடன் உடன்படமுடியவில்லை, நெடுக்ஸ்.

இது ஒரு விபத்து.

ரயில்பாதை கடப்பவரின் கவனக்குறைவே காரணம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் கவனக் குறைவால், தனது மகனையும் பலி கொடுத்து விட்டார்.
கணவனையும், மகனையும்.... இழந்த அந்தப் பெண்ணுக்கு, எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து, கணவனையும் மகனையும் இழந்து தவிக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் ! 

* இதனை ஒரு பாடமாக கொண்டு இனி வரும் காலங்களில் அவதானமாக புகையிரதக் கடவையை கடக்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஏலவே இதே மாதிரி விபத்து நடந்தும் ஏன் திரும்ப திரும்ப நடக்குது? தவறுகள் ஏன் திருத்தப்படல்ல? சாரதி அனுமதிப் பத்திரம் இருக்கோ இல்லையோ இதற்கும் அதுக்கும் என்ன தொடர்ப்பு? இதே கடவையில் சிறுவர்கள் போய் அடிபட்டால் அப்பவும் இதே சாட்டை சொல்ல முடியுமோ?

Edited by nedukkalapoovan

"dumb ways to die"  போன்ற ஊடக பரப்புரைகளிநூடவது நாங்கள் மக்களூக்கு அறிவூட்டவேண்டும். அங்கே அதிகாரிகள் ஒன்றும் விரைந்து செய்யமாட்டார்கள். அப்படி நிலமை அங்கே. எனவே நாங்கள் வேறு வழியை தேடவேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

train+1.jpg முந்தியெல்லாம்  ரயில்பாதை கடவையிலை "கோச்சி வரும் கவனம்" போட்டிருப்பினம்....இப்ப ஒண்டும் இல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

இத்தோடு சிங்கள தேசத்தின் யாழ் தேவி பலி எடுத்த எம் உறவுகளின் எண்ணிக்கை 10 ஐ எட்டும். இருந்தும் இவற்றை தடுக்க ஒரு நடவடிக்கையும் இல்லை. மக்களில் குறை கண்டுபிடிப்பதில் தான்.. அதிகாரிகளும் ஊடகங்களும் உள்ளன. வெளிநாடுகளிலோ.. இப்படி நடந்தால்..முறையான விசாரணைகளோடு... தண்டனைகளும்.. பாதுகாப்பு ஏற்பாடுகளும்... அதிகரிக்கப்படும். ஆனால் அங்கு..?????! மக்கள் எல்லாம் தெரிஞ்சிருக்கனும்.. யாழ் தேவி ஓட்டிறவர் கண்மூடிக்கொண்டு ஓட்டலாம்.. என்ற விதி.

நெடுக்கால போவான் அவர்களுக்கு,

இந்த யாழ்தேவி "சிங்கள தேசத்தின் யாழ் தேவி" என அடையாளம் காணப்படும் வரைக்கும் இந்த இறப்புகள் தொடரும். இதற்கு காரணம் "சிங்கள தேசத்தின் யாழ் தேவி"க்கு சேவை செய்ய தமிழ் தேச மக்கள் முன்வர மாட்டார்கள். "சிங்கள தேசத்தின் யாழ் தேவி"  தமிழ் தேசத்துக்கு வருவதை தடை செய்யவும் முடியாதது.

ஆகவே இனிமேல் இந்த யாழ் தேவியை  இலங்கை மக்களின் யாழ் தேவி என அடையாளம் கண்டு அதற்கு தேவையான சேவைகளை செய்ய தமிழ் மக்களும் - தமது சொந்த பாதுகாப்பு கருதியாவது- முன்வர வேண்டும்.

அப்படி என்ன சேவையை தமிழ் மக்கள் செய்ய முடியும்?

எமது மக்களிடம் ஒன்றும் இல்லையே? என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள்.

ஏலவே இதே மாதிரி விபத்து நடந்தும் ஏன் திரும்ப திரும்ப நடக்குது? தவறுகள் ஏன் திருத்தப்படல்ல? சாரதி அனுமதிப் பத்திரம் இருக்கோ இல்லையோ இதற்கும் அதுக்கும் என்ன தொடர்ப்பு? இதே கடவையில் சிறுவர்கள் போய் அடிபட்டால் அப்பவும் இதே சாட்டை சோல்ல முடியுமோ?

அதற்கு தான் மாகாண சபை இருக்கிறது. இந்த கேள்விகளை மாகாண சபையிடம் எத்தனை பேர் கேட்டனர்? இந்த தளத்தை படிக்கும் ஆனந்தி சசிகரன் மாகாண சபை அங்கத்தவர். அவரிடம் இந்த கேள்விகளை கேட்க வெண்டும்.

மாகாண சபையா யாழ் தேவியை ஓட்டுகிறது? என்று நீங்கள் கேட்க கூடும். யாழ் தேவியை ஓட்டுபவர் மட்டும் தானா " யாழ் தேவி வருகிறது - வீதியை கடக்காதீர்கள்!" என்று கூறும் உரிமை உள்ளவர்? நல்ல மனம் படைத்த எல்லாருக்குமே அந்த உரிமை உள்ளது.

மாகாண சபை மனம் வைத்தால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கொடுத்து வீதிக்கடவைகளில் அபாயத்தை அறிவிக்கும் கடமையை இலகுவாகவே செய்ய முடியும். இனி ஒரு மரணம் கூட இப்படி இடம் பெறாமல் தடுக்க ஆனந்தி சசிகரன் மனம் வைத்தால் அவரால் நிச்சியமாக செய்ய முடியும்.

அடுத்தவர்களை குறை சொல்லாமல் தமது பிரச்சனைகளை தாமே தீர்க்க இலங்கை தமிழ் மக்கள் இனியாவது முயற்சி செய்ய வேண்டும்.

Edited by Jude

நெடுக்கால போவான் அவர்களுக்கு,

இந்த யாழ்தேவி "சிங்கள தேசத்தின் யாழ் தேவி" என அடையாளம் காணப்படும் வரைக்கும் இந்த இறப்புகள் தொடரும். இதற்கு காரணம் "சிங்கள தேசத்தின் யாழ் தேவி"க்கு சேவை செய்ய தமிழ் தேச மக்கள் முன்வர மாட்டார்கள். "சிங்கள தேசத்தின் யாழ் தேவி"  தமிழ் தேசத்துக்கு வருவதை தடை செய்யவும் முடியாதது.

ஆகவே இனிமேல் இந்த யாழ் தேவியை  இலங்கை மக்களின் யாழ் தேவி என அடையாளம் கண்டு அதற்கு தேவையான சேவைகளை செய்ய தமிழ் மக்களும் - தமது சொந்த பாதுகாப்பு கருதியாவது- முன்வர வேண்டும்.

அப்படி என்ன சேவையை தமிழ் மக்கள் செய்ய முடியும்?

எமது மக்களிடம் ஒன்றும் இல்லையே? என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள்.

அதற்கு தான் மாகாண சபை இருக்கிறது. இந்த கேள்விகளை மாகாண சபையிடம் எத்தனை பேர் கேட்டனர்? இந்த தளத்தை படிக்கும் ஆனந்தி சசிகரன் மாகாண சபை அங்கத்தவர். அவரிடம் இந்த கேள்விகளை கேட்க வெண்டும்.

மாகாண சபையா யாழ் தேவியை ஓட்டுகிறது? என்று நீங்கள் கேட்க கூடும். யாழ் தேவியை ஓட்டுபவர் மட்டும் தானா " யாழ் தேவி வருகிறது - வீதியை கடக்காதீர்கள்!" என்று கூறும் உரிமை உள்ளவர்? நல்ல மனம் படைத்த எல்லாருக்குமே அந்த உரிமை உள்ளது.

மாகாண சபை மனம் வைத்தால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கொடுத்து வீதிக்கடவைகளில் அபாயத்தை அறிவிக்கும் கடமையை இலகுவாகவே செய்ய முடியும். இனி ஒரு மரணம் கூட இப்படி இடம் பெறாமல் தடுக்க ஆனந்தி சசிகரன் மனம் வைத்தால் அவரால் நிச்சியமாக செய்ய முடியும்.

அடுத்தவர்களை குறை சொல்லாமல் தமது பிரச்சனைகளை தாமே தீர்க்க இலங்கை தமிழ் மக்கள் இனியாவது முயற்சி செய்ய வேண்டும்.

உண்மையில் இப்படியான விபத்துகளை தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது ரெயில்வே திணைக்களத்தின் வேலை. யாழ்தேவி இலங்கை மக்களின் வரிபணத்தில் இயங்குவது. இன மத பேதமின்றி அனைத்து மக்களாலும உபயோகபடுத்தப்படுவது. இதில் சிங்களம் தமிழ் என்ற பேதத்திற்கே இடம் இல்லை.  தொடரூந்து ஓட்டுனரில் எந்த  தவறும் இல்லை. இன்னும்  சொல்லப்போனால் அவருக்கு உளரீதியில்  இதில் அசெளகரியமே உண்டு. ஆனால் தொடரூந்து திணக்களத்திற்கு முக்கிய கடப்பாடு உண்டு.  நூறு வீத பொறுப்பும் அவர்களுக்கு உண்டு. அதை அவர்கள் தட்டி கழிக்க முடியாது. மேற்கு நாடுகளில் பாதுகாப்பு எச்சரிக்கை இல்லையென்றால்  இவ்வகையான விபத்துகளுக்கு  தொடரூந்து திணைக்களதின் மீது வழக்கு பதிவு செய்ய சட்டத்தில் இடம் உண்டு. மக்களும் தொடரூந்து கடவைகளை கடக்கும் போது மிகவும் அவதானமாக கடக்க வேண்டும். அதன் மூலம் இவ்வகையான தேவையற்ற விபத்துகளை தவிர்க்கலாம். புதல்வன் இங்கு இணைத்த  "dumb ways to die"  பரப்புரைக் காணொளி ஒரு சிறந்த வழிமுறை. புதல்வனுக்கு நன்றி.

ஜூட் நீங்கள் மாகாணசபையை இதற்கு குற்றம் கூறி உள்ளீர்கள். தொடரூந்து திணைக்களம் முழுக்க மத்திய அரசின் கீழ் இயங்குவது. ஏற்கனவே மாகாண போக்குவரத்து அமைச்சருக்கு  பஸ் ரயர் கொள்வனவு கட்டளைப்படிவம் தயார் செய்யும் அதிகாரம் மட்டுமே உள்ளது என்று மாகாண அமைச்சர் ஒருவரே பேட்டி கொடுத்திருக்கும் நிலையில் தேவையில்லாமல் மாகாண சபையை குற்றம் சாட்டியுள்ளீர்கள்.   அதிலும் முதலமைச்சர் மற்றும் முக்கிய  பொறுப்பில் உள்ள அமைச்சர்கள் இருக்க அவர்களை எல்லாம் விட்டுவிட்டு  30 மாகாணசபை உறுப்பினரில் ஒருவராக ஏற்கனவே காணாமல் போனவர்கள் விடத்தில் நீதியை நிலைநாட்ட தன்னால் இயன்ற  பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கும் அனந்தி சசிதரனை தேடிப்போய் குற்றம் சாட்டுகின்றீர்கள் என்றால் அதில் என்ன நியாயம் உள்ளது. அடுத்தவர்களை குற்றம் சாட்ட கூடாது என்று மற்றவர்களுக்கு புத்திமதி சொல்லும்  நீங்களே பொறுப்பானவர்களை முக்கிய பதவியில் இருப்பவர்களை  தவிர்த்துவிட்டு  தேடிப்போய் மாகாணசபையில்  எந்த பொறுப்பான பதவியிலும் இல்லாத  ஒருவரை குற்றம் சாட்டுவதில் என்ன உள்நோக்கம் உள்ளது என்பது உங்களுக்கு மட்டும் தான் தெரியும்.

மாகாண சபைக்கு ஏற்கனவே உள்ள அற்ப சொற்ப அதிகாரங்களையும் தன்னகத்தைவைத்து மாகாண சபையில் சர்வாதிகாரிபோல் இயங்கும் மாகாண ஆளுனர் சந்திர சிறியில் கூட குற்றம் சாட்டுவதற்கு உங்களுக்குள் இருக்கும் Slave Mentalitiy  உங்களுக்கு இடம் தரவில்லை.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கால போவான் அவர்களுக்கு,

இந்த யாழ்தேவி "சிங்கள தேசத்தின் யாழ் தேவி" என அடையாளம் காணப்படும் வரைக்கும் இந்த இறப்புகள் தொடரும். இதற்கு காரணம் "சிங்கள தேசத்தின் யாழ் தேவி"க்கு சேவை செய்ய தமிழ் தேச மக்கள் முன்வர மாட்டார்கள். "சிங்கள தேசத்தின் யாழ் தேவி"  தமிழ் தேசத்துக்கு வருவதை தடை செய்யவும் முடியாதது.

ஆகவே இனிமேல் இந்த யாழ் தேவியை  இலங்கை மக்களின் யாழ் தேவி என அடையாளம் கண்டு அதற்கு தேவையான சேவைகளை செய்ய தமிழ் மக்களும் - தமது சொந்த பாதுகாப்பு கருதியாவது- முன்வர வேண்டும்.

அப்படி என்ன சேவையை தமிழ் மக்கள் செய்ய முடியும்?

எமது மக்களிடம் ஒன்றும் இல்லையே? என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள்.

அதற்கு தான் மாகாண சபை இருக்கிறது. இந்த கேள்விகளை மாகாண சபையிடம் எத்தனை பேர் கேட்டனர்? இந்த தளத்தை படிக்கும் ஆனந்தி சசிகரன் மாகாண சபை அங்கத்தவர். அவரிடம் இந்த கேள்விகளை கேட்க வெண்டும்.

மாகாண சபையா யாழ் தேவியை ஓட்டுகிறது? என்று நீங்கள் கேட்க கூடும். யாழ் தேவியை ஓட்டுபவர் மட்டும் தானா " யாழ் தேவி வருகிறது - வீதியை கடக்காதீர்கள்!" என்று கூறும் உரிமை உள்ளவர்? நல்ல மனம் படைத்த எல்லாருக்குமே அந்த உரிமை உள்ளது.

மாகாண சபை மனம் வைத்தால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கொடுத்து வீதிக்கடவைகளில் அபாயத்தை அறிவிக்கும் கடமையை இலகுவாகவே செய்ய முடியும். இனி ஒரு மரணம் கூட இப்படி இடம் பெறாமல் தடுக்க ஆனந்தி சசிகரன் மனம் வைத்தால் அவரால் நிச்சியமாக செய்ய முடியும்.

அடுத்தவர்களை குறை சொல்லாமல் தமது பிரச்சனைகளை தாமே தீர்க்க இலங்கை தமிழ் மக்கள் இனியாவது முயற்சி செய்ய வேண்டும்.

நான் என்னையே இலங்கைப் பிரிஜை என்று அடையாளம் காண்பதை விரும்புவதில்லை. அது என் மீது சிங்களத்தால் திணிக்கப்பட்ட ஒரு அடையாளமாகவே பார்க்கிறேன்.

நாங்கள் எவ்வளவோ.. துயர்களை இந்தச் சிங்களவனால் அனுபவிச்சிருக்கிறம். ஏ9 சாலை தன் கட்டுப்பாட்டில் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக தமிழ் மக்களுக்கான அத்தனை வசதிகளையும் நிராகரித்தவன்.. இந்த சிங்களவன். தமிழ் மக்களை இலங்கை மக்களாகக் கருதி இருந்தால்.. போராளிகளோடு ஒரு உடன்படிக்கையை செய்து கொண்டு.. மக்களுக்கான சேவைகளை எவ்வளவோ அழகாக வழங்கி இருக்க முடியும்.

அந்த வகையில்... யாழ் தேவி.. சிங்கள தேசத்தின் அடையாளமாகவே வரும் போகும். அது கொணரும் இழப்புக்களும் சிங்கள தேசம் தமிழர்கள் மீது தோற்றுவிக்கும் ஒன்றாகவே இருக்கும்.

சிங்களப் படைகளை தமிழரின் நிலத்தில் பாதுகாக்க நவீன ஆயுதங்களை வாங்கிக் குவிக்க தெரிஞ்ச சிங்களவனுக்கு.. யாழ் தேவியின் வரவின் பின்னர் ஏற்பட்ட தமிழ் மக்களின் மரணங்களை தடுக்க எந்த உருப்படியான நடவடிக்கைகளும் இல்லை. அதுவும் அதிநவீன தானியங்கி தடைகள் எல்லாம் உலகில் ஏன் தென்னிலங்கையில்.. (தெகிவளையில் எப்பவோ போட்டிட்டார்கள்) உள்ள நிலையில்.. தமிழர் பகுதிகளில்.. இத்தனை சாவுகளின் பின்னரும் அவை கொணரப்படாமல்.. இழப்புக்களுக்கு.. தமிழர்கள் மீது குறைகாணும்.. இழி நிலையில் தான் சிங்களமும்.. சிங்களம் சார் ஊடகங்களும் உள்ளன.

எனவே.. யாழ் தேவி சரி.. சிங்களம் சார்ந்த எது எமது மண்ணிற்கு வந்தாலும்.. அது மனதளவில் எமது என்று ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கும். அது எம்மால் எமது மக்களுக்காக கொணரப்படும் வரை. நீங்கள்... வேணுன்னா.. இலங்கை என்றோ.. சிறீலங்கா என்று அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் பச்சோந்தித்தனமான கொள்கைகளை எங்களிடம் திணிக்கவோ.. ஏற்றுக் கொள்ளச் சொல்லவோ.. ஒரு நியாயமான காரணியும் இல்லை..! :):icon_idea:

என்ன தேசமோ இது என்ன தேசமோ .................................. :icon_mrgreen:

சிலருக்கு யாழுக்கு ட்ரெயின் போவது பிடிக்க வில்லை....போலே

முட்டாள் தகப்பனுக்கு ட்ரெயின் வருவது கேட்க்கவில்லையா?

நின்று ட்ரெயினை விட்டு பாதுக்காப்பாக போகவேண்டும் என்று மகனுக்கும் சொல்லி கொடுப்பதை விட்டுவிட்டு...

மோட்டார்சைக்கிளில் எப்படி ட்ரெயினை முந்தலாம் என்று காட்டியதால் வந்த வினை....

ட்ரெயினில் அடிபட்டு சாவது உலகம் முழுக்க நடைபெறுவது ..கரணம் 100%மும் முட்டாள் தனமாக ட்ரெயினை முந்த பார்த்து தான்...

முட்டாள் தகப்பன் அநியாயமாக மகனையும் காவு கொடுத்து விட்டான்......

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இப்படியான விபத்துகளை தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது ரெயில்வே திணைக்களத்தின் வேலை. யாழ்தேவி இலங்கை மக்களின் வரிபணத்தில் இயங்குவது. இன மத பேதமின்றி அனைத்து மக்களாலும உபயோகபடுத்தப்படுவது. இதில் சிங்களம் தமிழ் என்ற பேதத்திற்கே இடம் இல்லை.  தொடரூந்து ஓட்டுனரில் எந்த  தவறும் இல்லை. இன்னும்  சொல்லப்போனால் அவருக்கு உளரீதியில்  இதில் அசெளகரியமே உண்டு. ஆனால் தொடரூந்து திணக்களத்திற்கு முக்கிய கடப்பாடு உண்டு.  நூறு வீத பொறுப்பும் அவர்களுக்கு உண்டு. அதை அவர்கள் தட்டி கழிக்க முடியாது.

நீங்கள் இப்படி எழுதுவீர்கள் என்று தெரிந்து தான் நான் ஏற்கனவே இப்படி எழுதினேன்.

மாகாண சபையா யாழ் தேவியை ஓட்டுகிறது? என்று நீங்கள் கேட்க கூடும். யாழ் தேவியை ஓட்டுபவர் மட்டும் தானா " யாழ் தேவி வருகிறது - வீதியை கடக்காதீர்கள்!" என்று கூறும் உரிமை உள்ளவர்? நல்ல மனம் படைத்த எல்லாருக்குமே அந்த உரிமை உள்ளது.

ரயில்வே திணைக்களம் பாதுகாப்பு கடவை போடும்வரை தமிழ் மக்கள் அடிபட்டு சாவது என்ற முடிவுக்கு நீங்கள் வந்து விட்டீர்களா? நான் மேலே எழுதியது போல " யாழ் தேவி வருகிறது - வீதியை கடக்காதீர்கள்!" என்று கூறும் உரிமை நல்ல மனம் படைத்த எல்லாருக்குமே உள்ளது. நாளையில் இருந்து ஒரு நல்ல உள்ளம் இந்த வீதிக்கடவையில் நின்று "யாழ் தேவி வருகிறது, கடக்காதீர்கள்" என்று எழுதிய அட்டையை பிடித்திருக்க ரயில்வே திணைக்களம் தேவை இல்லை.

ஜூட் நீங்கள் மாகாணசபையை இதற்கு குற்றம் கூறி உள்ளீர்கள். தொடரூந்து திணைக்களம் முழுக்க மத்திய அரசின் கீழ் இயங்குவது. ஏற்கனவே மாகாண போக்குவரத்து அமைச்சருக்கு  பஸ் ரயர் கொள்வனவு கட்டளைப்படிவம் தயார் செய்யும் அதிகாரம் மட்டுமே உள்ளது என்று மாகாண அமைச்சர் ஒருவரே பேட்டி கொடுத்திருக்கும் நிலையில் தேவையில்லாமல் மாகாண சபையை குற்றம் சாட்டியுள்ளீர்கள்.   அதிலும் முதலமைச்சர் மற்றும் முக்கிய  பொறுப்பில் உள்ள அமைச்சர்கள் இருக்க அவர்களை எல்லாம் விட்டுவிட்டு  30 மாகாணசபை உறுப்பினரில் ஒருவராக ஏற்கனவே காணாமல் போனவர்கள் விடத்தில் நீதியை நிலைநாட்ட தன்னால் இயன்ற  பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கும் அனந்தி சசிதரனை தேடிப்போய் குற்றம் சாட்டுகின்றீர்கள் என்றால் அதில் என்ன நியாயம் உள்ளது.

மாகாணசபையை கேளுங்கள் என்று சொன்னால் அதற்கு அர்த்தம் அவர்கள் குற்றம் செய்தவர்கள் என்பதல்ல. அவர்களால் இந்த விடயத்தில் உதவி செய்ய முடியும் என்பதே அதன் அர்த்தம். உதவி செய்ய கூடியவர்களையும் அதற்கு மனம் வைக்க கூடியவர்களையும் நாடுவதே உதவிய பெற்று கொள்ள சிறந்த வழியாகும். ஆனந்தி சசிதரனை கேளுங்கள் என்றால் அவரில் குற்றம் என்று அர்த்தம் அல்ல. அவர் ஒரு காரியத்தை எடுத்தால் மிக சிறப்பாக செய்து முடிப்பவர், மக்கள் மேல் அக்கறை உள்ளவர், இதையும் செய்து தர கூடியவர் என்பதே அதற்கு அர்த்தம். எந்த கருத்தையும் எதிர்மறையாக பார்த்து, எல்லோரையும் எதிரியாக பாவித்து கருத்து பரிமாற்றம் செய்வதும் எமது மக்களின் அவலத்துக்கு ஒரு காரணமாகும்.

நீங்கள் இப்படி எழுதுவீர்கள் என்று தெரிந்து தான் நான் ஏற்கனவே இப்படி எழுதினேன்.

ரயில்வே திணைக்களம் பாதுகாப்பு கடவை போடும்வரை தமிழ் மக்கள் அடிபட்டு சாவது என்ற முடிவுக்கு நீங்கள் வந்து விட்டீர்களா? நான் மேலே எழுதியது போல " யாழ் தேவி வருகிறது - வீதியை கடக்காதீர்கள்!" என்று கூறும் உரிமை நல்ல மனம் படைத்த எல்லாருக்குமே உள்ளது. நாளையில் இருந்து ஒரு நல்ல உள்ளம் இந்த வீதிக்கடவையில் நின்று "யாழ் தேவி வருகிறது, கடக்காதீர்கள்" என்று எழுதிய அட்டையை பிடித்திருக்க ரயில்வே திணைக்களம் தேவை இல்லை.

மாகாணசபையை கேளுங்கள் என்று சொன்னால் அதற்கு அர்த்தம் அவர்கள் குற்றம் செய்தவர்கள் என்பதல்ல. அவர்களால் இந்த விடயத்தில் உதவி செய்ய முடியும் என்பதே அதன் அர்த்தம். உதவி செய்ய கூடியவர்களையும் அதற்கு மனம் வைக்க கூடியவர்களையும் நாடுவதே உதவிய பெற்று கொள்ள சிறந்த வழியாகும். ஆனந்தி சசிதரனை கேளுங்கள் என்றால் அவரில் குற்றம் என்று அர்த்தம் அல்ல. அவர் ஒரு காரியத்தை எடுத்தால் மிக சிறப்பாக செய்து முடிப்பவர், மக்கள் மேல் அக்கறை உள்ளவர், இதையும் செய்து தர கூடியவர் என்பதே அதற்கு அர்த்தம். எந்த கருத்தையும் எதிர்மறையாக பார்த்து, எல்லோரையும் எதிரியாக பாவித்து கருத்து பரிமாற்றம் செய்வதும் எமது மக்களின் அவலத்துக்கு ஒரு காரணமாகும்.

ஜீட் நான் உலக நடைமுறையையே எழுதினேன். உலகின் எந்த நாட்டிலும் போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் சமுக சேவை நிறுவனங்களாலோ அல்லது சமூக அக்கறை கொண்டவர்களாலோ  மேற்கொள்ளபடுவதில்லை. அது சட்டத்தின் பாற்பட்டது.பொதுவாகவே ஒரு தொடரூந்து வழிதடம் அமைக்கபடுவதென்றால் அதற்காக பாதுகாப்பு ஏற்படுகளுக்கும் சேர்த்தே திட்டத்தில் பணம் ஒதுக்கபட்டு சம காலத்தில் அது முன்னெடுக்கபடப்புடவதே உலக நடைமுறை. அந்த உலக நடைமுறைக்கு இலங்கை விதிவிலக்காக இருக்க முடியாது. இது விவாதத்திற்குரிய ஒரு விடயமே இல்லை. தெளிவான விடயம். 

 மேற்கு நாடுகளில் ஒரு வியாபார நிறுவனத்தின் வாசல் சரியாக சுத்தம் செய்யப்படாததால் ஒருவர் வழுக்கி விழுத்து விட்டால் கடை உரிமையாளரின் மீது வழக்கு தொடர்ந்து நட்ட ஈடு பெற முடியும். ஏன் நிலத்தை பார்த்து வர முடியாத முட்டாளா நீ என்று அவரிடம் கேள்வி எழுப்ப முடியாது.

ஒருவேளை இலங்கை தொடரூந்து திணைக்களமே இதில் தமது தவறும் இருக்கிறது என்று ஒத்து கொண்டாலும் நீங்கள் விடமாட்டீர்கள் போலிருக்கிறது.

Edited by tulpen

நெடுகர், சிங்கள யாழ்தேவி, முஸ்லீம் ஏரோபிளேன் எமக்கு வேண்டாம் என லண்டனில இருந்து முழங்க்காமல்.. இனியாவது நாட்டில் கஷ்டப்படும் மக்களுக்கு ஏதாவது உதவிசெய்யுங்கள்.

ஒருவேளை இலங்கை தொடரூந்து திணைக்களமே இதில் தமது தவறும் இருக்கிறது என்று ஒத்து கொண்டாலும் நீங்கள் விடமாட்டீர்கள் போலிருக்கிறது.

thlpen: அந்த தகப்பன் train வருவது தெரிந்தும்...கடவையை கடக்க வெளிகிட்டு இறக்கவில்லை என்று எப்படி தெரியும்?  :)

  • கருத்துக்கள உறவுகள்

உயரமானவரே! உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன்!!.

இங்கு யேர்மனியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருதடவை விபத்து நடந்தால் போதும்! ஆராயத் தொடங்கிவிடுவார்கள்!!. வேகக்கட்டுப்பாடு அறிவித்தல் மாற்றமடையும். அல்லது படக்கருவி பொருத்தப்படும். இல்லையெனில் வீதி மேலும் அகலமாகி அன்றி வட்டமாகிவிடும். விபத்து அங்கு மீண்டும் ஏற்படாதிருக்க செய்ய முடிந்த அனைத்தையும் மேற்கொண்டுவிடுவார்கள். யார் தவறிழைத்தார்கள் என்பதற்கும் இதற்கும் எந்தத்தொடர்பும் கிடையாது. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.