Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் வீட்டுச் சுவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது வீட்டு வரவேற்பறை பத்து வருடப் பழசு. ஆட்களைத்தான் மாற்ற முடியாது. சரி அறைகளின் வண்ணங்களையாவது மாற்றினால் மனதுக்கு இதமாக இருக்கும் எண்டு கணவரைக் கேட்டால், கணவர் அதுக்கென்ன மாத்துவம். எல்லாரும் சேர்ந்து பழைய பேப்பரை உரியுங்கோ. நான் பெயின்ற் அடிக்கிறன் என்றார். 

எனக்குத் தெரியும் உது நடக்காத வேலை எண்டு. ஏனென்டா போன வருசமும் இப்பிடித்தான் கொரிடோருக்குச் சொல்லி கடைசியா நான் தான் பெயின்ட் அடிச்சு முடிச்சது. அதனால நீங்களோ நாங்களோ ஒண்டும் செய்ய வேண்டாம். ஆட்களைப் பிடிச்சுச் செய்வம் எண்டு சொல்ல, வீணா ஏன் அவங்களுக்குக் காசு எண்டு இரண்டு மூண்டு நாள் இழுபறியில் பக்கத்து வீட்டில இருக்கிற போலந்துக் காரனைக் கேட்பதென முடிவெடுத்தேன்.

போன மாதம் அவன் முன் வீட்டு மதில் கட்டினதைப் பார்த்ததால் பக்கத்து வீட்டுக் காரன் எல்லா வேலையும் செய்வான் என எண்ணினேன். அடுத்த நாள் அவனைக் கண்டு கேட்க வீட்டினுள்ளே வந்து பார்த்துவிட்டு அதுக்கென்ன இரண்டு நாளில் செய்துவிடலாம். தளபாடங்களை ஒன்றாக அடுக்கி வை.நானே கவர் கொண்டுவந்து மூடிவிட்டு இன்னும் மூன்று நாட்களில் வேலையை ஆரம்ம்பிக்கிறேன் என்றான். நான் கூடக் காசு  வாங்கிறனான். நீ பக்கத்துவீடு என்பதால் £550 பவுண்ட்ஸ் தா என்றான். எனக்கோ சந்தோசம் பிடிபடவில்லை. கணவரிடம் கூறியபோது உது அதிகம் வேறு ஆட்களைப் பார்ப்போம் என்றார். இனி வேறு ஆட்கள் வேண்டாம். அவனையே வேலை செய்ய விடுவோம் என்றேன்.

சிறிது நேரத்தில் நானே பெயின்ற் வாங்கிறன். நீ நிறத்தைத் தெரிவு செய்து சொன்னால் போதும் என்று ஒரு புத்தகத்தையும் தந்துவிட்டுப் போட்டான். அவசர அவசரமா எல்லாச் சாமான்களையும் ஒதுக்கி எறிய வேண்டியதை எறிந்து ( அப்பதானே புதிது வாங்கலாம் ) சோபா செட், டிவி, சாப்பாட்டு மேசை, கதிரை எல்லாம் ஒண்டும் விடாமல் அடுக்கியாச்சு.

வியாழன் வாறன் எண்டு சொன்னவனைக் காணவில்லை. பகல் முழுதும் வேலைக்கும் போகாமல் இருந்தது ஒருபக்கம் சந்தோசம். இன்னும் அவனைக் காணவில்லையே என்ற எரிச்சலில் ஒரு மணிபோல் அவனது போனுக்கு அடித்தேன். நான் வெளியே ஒரு இடத்தில நிக்கிறன். வந்து உன்னோடு கதைக்கிறன் என்றவன் அன்று முழுவதும் வரவே இல்லை. எனக்குக் கோபம் ஒருபுறம் ஏமாற்றம் மறுபுறம் என்ன செய்வது என்று தெரியாமல் கணவருக்கு போன் செய்தேன்.

உனக்கு எப்போதும் எல்லாத்துக்கும் அவசரம் தான். இரண்டு மூண்டு பேரைக் கேட்டுப் போட்டுக் குடுத்திருக்கலாம் என்று எரியிற நெருப்பில் எண்ணெய் ஊற்றினார். இனி இவனைக் கொண்டு வேலை செய்விக்கக் கூடாது. நான் வேற ஆரையன் கூப்பிவம் என்றதற்கு பக்கத்து வீட்டுக் காரன். சும்மா மனஸ்தாபம் வேண்டாம். இண்டைக்கு வராட்டாலும் நாளைக்கு வருவான் தானே என்றார்.

சரி மனுஷன் சொல்லுறபடி கேட்டுத்தான் பாப்பம் என்றுவிட்டு இருந்தால் அடுத்த நாள் காலை வந்து இன்று வேலை தொடங்க முடியாது. எனக்கு ஒரு அவசர வேலை வந்துவிட்டது. சனியும் ஞாயிறும் நான் என் நண்பர்களுடன் வந்து செய்து முடித்துவிடுகிறேன் என்றான். சரி இனி என்ன செய்வது. ஒரு நாள் பொறுப்போம் என்று இருந்தால் சனிக்கிழமையும் வரவில்லை.

எனக்கோ கடும் கோபம். இனி உவனை வைத்து வேலை செய்யக் கூடாது என்றுவிட்டு ஒரு தமிழர் இருக்கிறார். அவருக்கு போன் செய்தார் கணவர். அவர் ஒரு வாரம் செல்லவே வருவதாகக் கூற வாங்கோ என்றுவிட்டார் கணவர். நான் போலந்துக் காரனுக்கு போன் செய்யவே இல்லை.

அடுத்த நாட் காலை நல்ல வெய்யில். வெள்ளனவே எழுந்து தோட்டத்தின் அழகை இரசித்துக்கொண்டு இருக்க, நீ விரும்பினால் இப்பொழுதே வேலை ஆரம்பிக்க முடியும் என்று பக்கத்து வீட்டுக் காரனிடமிருந்து போன். என்ன செய்வது என்று கணவருடன் கதைத்தால், சரி வரச் சொல் என்றார். வா என்று திரும்ப செய்தி அனுப்ப இரண்டு பேருடன் வந்தான். அட மூன்று பேர். அப்ப வேலை முடிந்து விடும் என்று எனக்குள் சந்தோசம். இரவு எட்டு மணிவரை மூன்று பேரும் சேர்ந்து பேப்பர் எல்லாம் உரித்து முடித்து, நாளை வந்து பிளாஸ்டர் செய்கிறோம் என்றுவிட்டுப் போய்விட்டனர்.

அடுத்த நாள் வந்து, நான் தெரியாமல் கூறிவிட்டேன். சாமான்கள் வாங்கவே நிறையக் காசு போட்டுது. இன்னும் £150 பவுண்ட்ஸ் தா என்றதும் எனக்குக் கோவம் வந்திட்டுது. நான் உனக்குக் கூட்டித் தர முடியாது. செய்யிறதானால் செய். அல்லது நான் வேறு யாரையாவது பார்க்கிறேன் என்றேன் கோபத்தோடு. சிறிது நேரம் ஒன்றும் கூறாது நின்றவன், சரி நானே செய்கிறேன். எனக்கு இதில் லாபம் இல்லை என்றபடி வேலையை ஆரம்பித்தான்.

அடுத்த நாளும் இன்னும் ஒருவருடன் வந்து சுவருக்குப் பூசிவிட்டு நான் ஊற்றிக் கொடுத்த கோப்பியையும் இருதடவை குடித்துவிட்டு, வேலை கிட்டத்தட்ட முடிந்தது. நாளை வந்து வெள்ளைப் பெயின்ட் அடித்தால் சுவர் எப்படி என்று தெரியும். அதன் பின் பைனல் கோட் அடிக்கலாம் நாளை உனது வேலை முடித்துவிடுவேன் அரைவாசிக் காசைத் தா என்றான். சரி என்று காசைக் கொடுத்துவிட்டு அடுத்த நாள் பார்த்துக்கொண்டு இருந்தால் ஆளைக் காணவில்லை. ஏன் நீ இன்று வரவில்லை என்றதற்கு நான் நாளைக்கும் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான்.

இனி என்ன செய்வது முள்ளில் சேலையைப் போட்டாகி விட்டது. பொறுக்கத்தான் வேண்டும் என்று வரும் கோபத்தைஎல்லாம் அடக்கியபடி காத்திருந்தேன். அடுத்த நாள் வந்து வெள்ளை அடித்து முடித்தான். சுவர்களைப் பார்த்தபோது மூன்று இடங்களில் பள்ளம் திட்டிகள் தெரிந்தது. என்ன இது ?? முன்பு சுவர் ஒழுங்காக இருந்ததே என்ன செய்தாய் என்றேன் நான். உன் வீட்டுச் சுவர் சரியில்லை. நீ காசு கூடத் தந்திருந்தால் வடிவாச் செய்திருப்பேன் என்றான். நீ நினைச்சு நினைச்க்ச்சுக் காசு கேட்டால் தர முடியாது. ஒழுங்காக வேலையை முடித்தால் தான் மிகுதிப் பணம் தருவேன் என்று கூறிவிட்டு நின்று கதைக்காது அங்கால் சென்றுவிட்டேன்.

சிறிது நேரத்தில் மீண்டும் என்னை அழைத்தான். நீயே பெயிண்டை வாங்கு என்னால் முடியாது என்பவனை என்ன செய்வது என்ற கோபம் வந்தாலும் வேலை முடியவேண்டும் என்று சரி என்றேன்.

அடுத்த நாள் விடிய ஞாயிறு. இன்றுடன் வேலை செய்யத் தொடங்கி எட்டு நாட்கள். வீடு முழுவதும் புழுதி. வரவேற்பறையில் இருந்து தொலைபேசி பார்த்து பத்து நாட்கள். இருந்து சாப்பிட மேசை இல்லை. கடைசி மகளுக்கு பள்ளி விடுமுறை. ஐ பாட்டே கதி என தன் அறையுள் முடங்கிக் கிடந்தாள். அவர்கள் வேலை செய்யும் இடம் கடந்து குசினிக்குள் போட்டு வர ஆடை முழுதும் வெள்ளைப் புழுதி.

சரி இன்று வந்துவிடுவான் என்று பார்த்துக்கொண்டு இருக்க பதினோரு மணிவரை அவனைக் காணவில்லை. போன் செய்தால் வருகிறேன் என்றுவிட்டு ஆடிப் பாடி வாறான். இன்று அந்த இடங்களைச் சரி செய்துவிடுகிறேன் என்றபடி வேலையை ஆரம்பிக்க, நானும் கணணியைப் போட்டுவிட்டு அதற்குள் மூழ்கிவிட்டேன். ஒரு மணித்தியாலம் சென்றிருக்கும். இப்ப சுவருக்குப் பூசியிருக்கிறேன். இரண்டு மணித்தியாலம் செல்லும் காய. பெயின்ரை எடுத்துவை அடிக்க என்றுவிட்டுச் சென்றுவிட்டான். நான் சென்று சுவரைப் பார்த்தேன். நல்ல நேராய் இருந்த சுவர்கள் பல இடங்களில் மேடுபள்ளமாக இருந்தது. எனக்கு அழுகை முட்டிக் கொண்டு வர சிலவேளை என் கண்கள் தான் பிரச்சனையோ என்று கைகளால் தடவிப் பார்த்தேன். ஒரே மேடு பள்ளம். அவனுக்கு போன் செய்து வரச் சொன்னேன்.

வந்து நின்றவனிடம் ஏன் இப்படிச் சுவர் இருக்கிறது என்று கேட்க தான் அரம் கொண்டுவந்து தேய் த்துவிட்டுத் தான் பெயின்ற் அடிப்பேன் என்று சொன்னதும் நம்பிக்கை வந்தது.மாலை எழு மணி வரை பெயின்ட் அடித்துவிட்டு, முதல் கோட் முடிந்துவிட்டது. நாளை வந்து மிகுதியை அடிக்கிறேன் என்று கூற, நான் போய் சுவரைப் பார்த்தேன். மேடு பள்ளத்துடன் பெயிண்டை அடித்து முடித்திருந்தான்.

என்ன நீ அதை நிரவாமலேயே பெயின்ட் அடித்திருக்கிறாய். அதுவும் இது வரவேற்பறை. உனக்கு வேலை தெரியாதா என்றேன் கோபமாக. உண்மையில் நான் காப்பெண்டர். ஆனால் நான் நன்றாகத்தானே செய்திருக்கிறேன் என்றான். எனக்கு இத்தனைநாள் இழுபட்டும் வேலையை ஒழுங்காகச் செய்யவில்லையே என்ற ஆதங்கம். இப்படியே விட முடியாதே என்று அழுகை முட்டிக் கொண்டு வர, உனக்கு வேலை தெரியாவிட்டால் ஏன் தெரியும் என்று கூறினாய். என் நாட்களையும் வீட்டையும் பழுதாக்கி விட்டாயே என்று அழத் தொடங்கினேன். ரியலி சொறி என்றபடி கதவைத் திறந்துகொண்டு வெளியேறினான்.

அடுத்த இரண்டு மணிநேரம் நானும் கணவரும் பலருக்கும் போன் செய்து ஒருவாறு ஒரு சைனீஸ் காரனை தொடர்புகொண்டு என் கணவர் சுவரைப் பளுதாக்கிவிட்டார். உடனடியாக நீ உதவவேண்டும் என்று கெஞ்சுவது போல் கேட்டேன். சரி செவ்வாய் தான் என்னால் வரமுடியும் என்றவாறு எனது முகவரியைக் குறித்துக் கொண்டான்.

இன்னும் ஒருநாள். அவன் வருவானோ இல்லையோ என்று பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்காக   மிகவும் அனுதாப படுகிறேன். பக்கத்து வீட்டுக்  காரன் பாவம் பிழைக்கட்டும் என்று பார்ததால்வரும்  வினை...இனி என்ன செய்வது பொறுமையாக இருங்க .இலகுவில் எவரையும் நம்பாதேங்க .

முடிந்த்தும்படம் எடுத்துபோடுங்க.. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொன்னால் நம்பமாட்டியள் போனகிழமை என்ரை வீடு முழுக்க நான்தான் பெயின்ற் அடிச்சனான் icon6m_zps6069767e.gif....போயும் போயும் போலந்துக்காரனை நம்பி....... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிலா அக்கா, குமாரசாமி.

மேரியம்மாவுக்கு இன்னும் ஏழரைச் சனி முடியேலைப் போலை  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொன்னால் நம்பமாட்டியள் போனகிழமை என்ரை வீடு முழுக்க நான்தான் பெயின்ற் அடிச்சனான் icon6m_zps6069767e.gif....போயும் போயும் போலந்துக்காரனை நம்பி....... :D

பெயின்ட் கூட அடிச்சுப் போடலாம். சுவர் அழுத்தம் இல்லை. அது தான் பக்கத்துவீட்டுக் காரனைக் கேட்க வேண்டயதாப் போச்சு

  • கருத்துக்கள உறவுகள்

போலந்துக்காரன் எல்லாம் தெரிந்த மாதிரிக் காட்டுவான்... உள்ளுக்கு விசயமில்லை.
உள்ளுக்கு விசயமுள்ளவன், நேரமில்லாமல் வேறு இடங்களில்... வேலை செய்து கொண்டிருப்பான்.
இப்படியான... உள் வீட்டு வேலைகளுக்கு, அயல் வீட்டுக் காரனை கூப்பிட்டது முதல் தவறு.
இனி... அவனை அடிக்கடி காணும் போதெல்லாம்.... பிரசர் ஏறுவதை தவிர்க்க முடியாது.  :D

Edited by தமிழ் சிறி

அக்காவிற்கு ரிஸ்க் எடுக்கின்றதேன்றால் ரஸ்க் சாப்பிடுவது போல . :icon_mrgreen: .

வீட்டை விற்று விட்டு புது வீடு வாங்குங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியர் வீட்டு சுவரில் பாம்பு உருண்டு தவண்டு பிரண்டு ஓடித்திரியுது.

  • கருத்துக்கள உறவுகள்

Estimate வாங்காமல் நான் எவரையும் வேலைக்கு எடுப்பதில்லை. அந்த estimate ஐ பார்க்கவே அவர்களின் திறன் பாதி தெரிந்துவிடும்.

சுமே கொஞ்சம் கொஞ்சமாக நல்ல கதை சொல்லியாக வளருகின்றார். 

அது சரி,  மனுசர்ட முகத்தைப் பார்த்தே ஆள் எப்படி என்று கண்டுபிடிப்பன் என்று சொல்கின்ற உங்களால் போலந்து காரனின் முகத்தைப் படிக்கேலாமல் போய் விட்டதே. இன்னும் டிரெயின்ங் காணாது என்று நினைக்கின்றன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்வு துரதிஷ்டவசம் ..மீண்டும் உங்கள் சுவர் அழகாய் பொலிவாய் கூடிய சீக்கிரம் மாறும்.

நீங்கள் பதிவை எழுதி இருந்த விதம் அருமை...

சிரிச்சு வயிறு நோகுது நிழலி.  :D  :D  :D  :D  :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், சுமே!

எல்லாம் முடிய எனக்கொருக்கால், எவ்வளவு மொத்தமா முடிஞ்சுது எண்டு சொல்லுங்கோ...!

நானும் கு.சானா அண்ணை மாதிரித்தான்... எல்லாத்தையும் நானே செய்யிறது..!.  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெயின்ட் கூட அடிச்சுப் போடலாம். சுவர் அழுத்தம் இல்லை. அது தான் பக்கத்துவீட்டுக் காரனைக் கேட்க வேண்டயதாப் போச்சு

போலந்துக்காரர் உந்த வேலையளுக்கு திறமான ஆக்கள் தான்....வேலையும் தெரிஞ்ச ஆக்கள்..அதோடை மலிவும்.....ஆனால் என்ன ஒண்டு பச்சைக்கள்ளர்....24 மணி நேரமும் கண்ணுக்கை எண்ணையை விட்டுக்கொண்டு  திரியோணும்......ஜேர்மனியிலை கார் இன்சூரன்ஸ் கூடினதெண்டால் உவங்களாலைதான்
 
அதோடை இன்னுமொண்டையியும் சொல்லோணும்....இஞ்சை எனக்கு தெரிஞ்ச ஒருத்தர்  வீட்டை வாங்கிப்போட்டு........வீட்டை திருத்த போலந்து சாமிக்கு 5000 ஈரோ குடுத்து ஏமாந்து போனார்.5000 ஈரோ குடுத்தது யன்னல் மாத்தவாம்.......போலந்துசாமி உப்பிடி எத்தினை இடத்திலை யன்னல் மாத்தினானோ ஆருக்குத்தெரியும்?..ரெலிபோன் அடிச்சால் இந்தா நாளைக்கு வாறன் எண்டு சொல்லுறானாம்......இதையே நூறு தரம் சொல்லியிருப்பானாம்....ரெலிபோன் கனெக் ஷனிலை அவன் இருக்கிறதே பெரிய புண்ணியமெண்டு வீடு வாங்கினவர் சொல்லுறார்......இதுக்காக வீடு வாங்கினவர் பொலிசு கோர்ட்டு கேசு.... எண்டு போகேலுமோ? ஏலாது....ஏனெண்டால் எல்லாம் கள்ள வேலையாச்சே.. :D

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

எனது வீட்டு வரவேற்பறை பத்து வருடப் பழசு. ஆட்களைத்தான் மாற்ற முடியாது. சரி அறைகளின் வண்ணங்களையாவது மாற்றினால் மனதுக்கு இதமாக இருக்கும் எண்டு கணவரைக் கேட்டால், கணவர் அதுக்கென்ன மாத்துவம். எல்லாரும் சேர்ந்து பழைய பேப்பரை உரியுங்கோ. நான் பெயின்ற் அடிக்கிறன் என்றார்.

கணவனே கண்கண்ட தெய்வம் என்று அனுபவப் பட்டதுகள் சும்மா சொல்லவில்லை... கணவனை நம்பியிருந்தால் !  போலந்துக்காரனை நம்பி மோசம்போக வேண்டிய தேவையுமில்லை ! சீனாக்காரனிடமும் போகவேண்டி வந்திருக்காது !!. இருந்தாலும் சீனன் வருவான்....

'என் வீட்டுச் சுவர்.' சீன மதில்போல் நீண்டு தொடர வாழ்த்துக்கள் !! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த உறவுகள் அலை, தமிழ்ச் சிறி, அர்ஜுன், முதல்வன், நிழலி, சசி,புங்கை பாஞ்ச ஆகியோருக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போலந்துக்காரன் எல்லாம் தெரிந்த மாதிரிக் காட்டுவான்... உள்ளுக்கு விசயமில்லை.

உள்ளுக்கு விசயமுள்ளவன், நேரமில்லாமல் வேறு இடங்களில்... வேலை செய்து கொண்டிருப்பான்.

இப்படியான... உள் வீட்டு வேலைகளுக்கு, அயல் வீட்டுக் காரனை கூப்பிட்டது முதல் தவறு.

இனி... அவனை அடிக்கடி காணும் போதெல்லாம்.... பிரசர் ஏறுவதை தவிர்க்க முடியாது.  :D

அவனை மட்டுமில்லை அவனோடு இருக்கும் மற்றவரைப் பார்க்கவும் பிரசர் கூடுது :D

அக்காவிற்கு ரிஸ்க் எடுக்கின்றதேன்றால் ரஸ்க் சாப்பிடுவது போல . :icon_mrgreen: .

வீட்டை விற்று விட்டு புது வீடு வாங்குங்கள் .

அதுக்காக அதிஷ்டமான வீட்டை விக்க முடியுமோ ???

Estimate வாங்காமல் நான் எவரையும் வேலைக்கு எடுப்பதில்லை. அந்த estimate ஐ பார்க்கவே அவர்களின் திறன் பாதி தெரிந்துவிடும்.

ஏழரைச் சனி முடியிற நேரம். என் நேரம் சரியில்ல.

நிகழ்வு துரதிஷ்டவசம் ..மீண்டும் உங்கள் சுவர் அழகாய் பொலிவாய் கூடிய சீக்கிரம் மாறும்.

நீங்கள் பதிவை எழுதி இருந்த விதம் அருமை...

நன்றி சசி

சுமே கொஞ்சம் கொஞ்சமாக நல்ல கதை சொல்லியாக வளருகின்றார். 

அது சரி,  மனுசர்ட முகத்தைப் பார்த்தே ஆள் எப்படி என்று கண்டுபிடிப்பன் என்று சொல்கின்ற உங்களால் போலந்து காரனின் முகத்தைப் படிக்கேலாமல் போய் விட்டதே. இன்னும் டிரெயின்ங் காணாது என்று நினைக்கின்றன். :rolleyes:

நான் சொன்னது தமிழற்ற முகத்தைத்தான் :lol:

போலந்துக்காரர் உந்த வேலையளுக்கு திறமான ஆக்கள் தான்....வேலையும் தெரிஞ்ச ஆக்கள்..அதோடை மலிவும்.....ஆனால் என்ன ஒண்டு பச்சைக்கள்ளர்....24 மணி நேரமும் கண்ணுக்கை எண்ணையை விட்டுக்கொண்டு  திரியோணும்......ஜேர்மனியிலை கார் இன்சூரன்ஸ் கூடினதெண்டால் உவங்களாலைதான்
 
அதோடை இன்னுமொண்டையியும் சொல்லோணும்....இஞ்சை எனக்கு தெரிஞ்ச ஒருத்தர்  வீட்டை வாங்கிப்போட்டு........வீட்டை திருத்த போலந்து சாமிக்கு 5000 ஈரோ குடுத்து ஏமாந்து போனார்.5000 ஈரோ குடுத்தது யன்னல் மாத்தவாம்.......போலந்துசாமி உப்பிடி எத்தினை இடத்திலை யன்னல் மாத்தினானோ ஆருக்குத்தெரியும்?..ரெலிபோன் அடிச்சால் இந்தா நாளைக்கு வாறன் எண்டு சொல்லுறானாம்......இதையே நூறு தரம் சொல்லியிருப்பானாம்....ரெலிபோன் கனெக் ஷனிலை அவன் இருக்கிறதே பெரிய புண்ணியமெண்டு வீடு வாங்கினவர் சொல்லுறார்......இதுக்காக வீடு வாங்கினவர் பொலிசு கோர்ட்டு கேசு.... எண்டு போகேலுமோ? ஏலாது....ஏனெண்டால் எல்லாம் கள்ள வேலையாச்சே.. :D

உண்மைதான் கள்ளம் செய்தால் தண்டனையையும் அனுபவிக்கத்தான் வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

என் கணவர் சுவரைப் பளுதாக்கிவிட்டார்

கடைசியில கணவன்மாரில பிழையை போட்டுவிட்டு தப்பிட்டீங்கள்.....பாவம் அந்த மனுசன் :D

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணவனே கண்கண்ட தெய்வம் என்று அனுபவப் பட்டதுகள் சும்மா சொல்லவில்லை... கணவனை நம்பியிருந்தால் !  போலந்துக்காரனை நம்பி மோசம்போக வேண்டிய தேவையுமில்லை ! சீனாக்காரனிடமும் போகவேண்டி வந்திருக்காது !!. இருந்தாலும் சீனன் வருவான்....

'என் வீட்டுச் சுவர்.' சீன மதில்போல் நீண்டு தொடர வாழ்த்துக்கள் !! :)

இனிச் சீனன் வந்தால் அவன் வேலை செய்து முடியும் மட்டும் நான் சீனனோட நிண்டு பாக்கிற வேலை தான் :D

சிரிச்சு வயிறு நோகுது நிழலி.  :D  :D  :D  :D  :D  :D  :D

உதுக்குப் பொய் ஆறும் சிரிப்பினமோ சுபேஸ்.

கடைசியில கணவன்மாரில பிழையை போட்டுவிட்டு தப்பிட்டீங்கள்.....பாவம் அந்த மனுசன் :D

எனக்கு சுவர் முக்கியமோ மனிசன் முக்கியமோ ?????

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில கணவன்மாரில பிழையை போட்டுவிட்டு தப்பிட்டீங்கள்.....பாவம் அந்த மனுசன் :D

கடைசியில் கதாசிரியரைப் பாஞ்சாலியாக்கிவிடும் முயற்சியோ ??  தொடரட்டும் பாரதக் கதை....  :D  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உப்பிடியான வேலையளுக்குச் சீனன்தான் திறம்.  மலிவாகவும் முடிப்பான்.  சீக்கிரமாவும் முடித்துவிடுவான்.  வேலையும் திறம். 

3 மாதத்திற்கு முதல் ஒரு குளியலறையைப் பெரிதாக்கி புதிதாகச் செய்து முடித்தார்கள்.   இருவர் 3 நாள் வேலை செய்தார்கள்.  Electric வேலை செய்வதற்கு ஒருவன் ஒருநாள் மட்டும் வந்து எல்லா வேலைகளையும் முடித்துவிட்டுப் போனான். வடிவாகவும் இருக்கு.  சிறிய இடத்தில் பெரிதாகவும் காட்டும்படிச் செய்து விட்டுச் சென்றார்கள். 

அதோடை சின்ன Kitchen க்குள்ளே Washer & Dryer உம்போட்டுக் கொடுத்துவிட்டுப் போனார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கு வீடு வாசல் படி , உங்களுக்கெல்லாம் இதுவும் வேனும் இன்னமும் வேணும். (நம்மாளையும் சேர்த்து).

நாலைந்து மாதத்துக்கு முன் மனைவி, வரவேற்பறையும் சாப்பாட்டு அறையும்  நிறம் மங்கீட்டுது பேப்பர் மாத்துவம் என்டு சொன்னாள். நானும் அடுத்தநாள் அவவுடன் கடைக்குப் போய் பெயின்ட் , பேப்பர் எல்லாம் வாங்கி வந்து , ஒவ்வொரு பக்கமாய் சாமான்களை அடுக்கி  உறையால் மூடி வடிவாய் எல்லாம் செய்து போட்டு , மிச்சத்தில் குசினியயும் செய்துவிட்டு, இஞ்சையப்பா இப்ப இருக்கும் மிச்சப் பேப்பருடன் இரண்டு பேப்பரும் , பத்து லிட்டர் பெயின்ரும் வாங்கினால் போதும் கோரிடோரையும் செய்வம் என்டு சொன்னன்.

உடன அவ அதுக்கு வேற பேப்பர்கள் ,வேற நிறப்  பெயின்ற் வாங்கிச் செய்ய வேணும் என்டாள். நானும் அதெல்லாம் வீன் செலவு , நிறைய சாமான்களும் மிஞ்சிப் போடும், பிறகு குப்பைல தான் போடவேணும் என்டு சொன்னால் கேட்கவில்லை. நீங்கல் சும்மாவிருங்கோ , பிள்ளைகள்  லீவுல வர நான் அவங்களைக் கொண்டு செய்யிறன் என்டாள்.

லீவும் வந்துபோய் ,அடுத்த லீவும் வரப் போகுது பிள்ளைகளும் வந்துட்டுப் போட்டினம் , கொரிடோர் அப்படியேதான் கிடக்கு நாலைந்து மாதமாய்...! :D :D

  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியின் சுவர் பார்க்க ஆவல் :D

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் வீடுகளுக்கு நல்ல சுவர் இருக்கிறதே பெரிய விசயம்.. :D இதுக்குள்ளை மேடு பள்ளம் இருந்தால் என்ன? :huh:  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.