Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ஆலயங்களில் இனித் தமிழிலும் பூஜை! - முதலாவது அருட்சுனைஞர் அணி பயிற்சிகளை முடித்தது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஆலயங்களில் இனித் தமிழிலும் பூஜை! - முதலாவது அருட்சுனைஞர் அணி பயிற்சிகளை முடித்தது. photo.png 

[Monday, 2014-04-21 08:42:26]
arusunaignanar-210414-150.jpg

இலங்கையில் முதன்முறையாக நடத்தப்பட்ட தமிழ் அருட்சுனைஞர் பயிற்சி நெறியில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்றுக்காலை கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. சைவ மகா சபை, சைவ நெறிக்கூடம், தெய்வத் தமிழ் அறக்கட்டளை ஆகியன இணைந்து சைவ மகா சபையின் கொக்குவில் தலைமைச் செயலகத்தில் மேற்படிப் பயிற்சி நெறியை நடத்தியிருந்தன. இந்தப் பயிற்சி நெறியில் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 36 பேர் பங்குபற்றியிருந்தனர். தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த செந்தமிழ் வேள்விச் சதுரர் சக்திவேல் முருகனார் தலைமையிலான விரிவுரையாளர்களால் இந்தப் பயிற்சி நெறி நடத்தப்பட்டது.

  

வடக்கு, கிழக்கிலுள்ள ஏராளமாக கிராமிய ஆலயங்கள் பூசை வழிபாடுகள் இன்றி இருக்கின்ற நிலையிலும் ஆலயங்களில் தமிழில் பூசைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மேற்கிளம்பியுள்ள நிலையிலும் மேற்படி தமிழ் அருட்சுனைஞர்கள் பயிற்றுவிக்கப்பட்டு முதலாவது அணிக்கு நேற்று சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கின்றது. இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்ட சக்திவேல் முருகனாரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டவர்களும் மேற்படி அருட்சுனைஞர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

 

arusunaignanar-210414-600.jpg

 

 

arusunaignanar1-210414-600.jpg

 

http://seithy.info/breifNews.php?newsID=107818&category=TamilNews&language=tamil

Bravo  நல்ல செய்தி

இங்கிலாந்தில் தேவாலயங்களில் இனி ஆங்கிலத்திலும் திருப்பலிப்பூசை வழிபாடுகள்  இடம்பெற பிரதமர் டேவிற் கமரூன் ஏற்பாடு செய்ய உள்ளார். அதை தொடர்ந்து ஜேர்மனி, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள தேவாலயங்களில் ஜேர்மன் மொழியிலும், பிரான்ஸில் பிரெஞ்சிலும் பூசை வழிபாடுகள் இடம் பெறும்.

Edited by tulpen

அத்தோடு என்ன ஜாதி..யார் என்று பார்க்காமல், கோயிலில் பூசை செய்ய விரும்புபவர்கள் எல்லாரும் அருட்சுனைஜர் ஆக வர வசதிகளும் (ஒரே சாராரை மட்டும் அய்யர் ஆக்காமல்) செய்ய வேண்டும்...அப்படி தான் இருக்கும் என்று நம்புகின்றேன்......

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்து நாட்டைப்பார்த்து இன்னும் என்னவெல்லாம் கிழம்பப்போகுதோ

  • கருத்துக்கள உறவுகள்

arusunaignanar-210414-600.jpg

 

தமிழில் பூசை வைப்பது, வரவேற்கக் கூடிய விடயம்.

ஆனால்.... பூசை செய்பவருக்கு, குடும்பி இருப்பது தான்... அழகு.

அதை மட்டும்.... வெட்டி விட வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றேன்.

சேட்டும் போடாமல் இருந்தால்... இன்னும் நல்லது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் செய்யப்போவது கோவிலில் ஆண்டவனுக்கு அர்ச்சனை
அர்ச்சனை செய்பவர்களாக இருப்பதால் அருட்சுனைஞர்  எனப் பெயரிட்டார்களா?

அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா??
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிவரும் காலங்களில் மச்சம் மாமிசத்துடன் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இனிவரும் காலங்களில் மச்சம் மாமிசத்துடன் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

 

அம்மன்/வைரவர்  கோயில் வேள்விகளில் முன்பும் கொடுத்தார்களே... (இல்லை என்றால்...ஆடு வெட்டி..பங்கு போட்டோமே)

அப்படி என்னதான் தப்பு செய்திட்டான் என் கட்சிகாரன்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மன்/வைரவர்  கோயில் வேள்விகளில் முன்பும் கொடுத்தார்களே... (இல்லை என்றால்...ஆடு வெட்டி..பங்கு போட்டோமே)

 

அதுதான் சொல்லுறன்......மட்டன் பிரியாணி குடுத்தால் என்ன குறைஞ்சே போவினம்.....சைவசயத்திலை நிறைய மாற்றங்கள் கொண்டுவர வேணும்...ஓரு சில மூடக்கொள்கையளை மூட்டைகட்டி எறியோணும்.சைவத்தை நவநாகரீகமாய் மாத்தோணும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் சொல்லுறன்......மட்டன் பிரியாணி குடுத்தால் என்ன குறைஞ்சே போவினம்.....சைவசயத்திலை நிறைய மாற்றங்கள் கொண்டுவர வேணும்...ஓரு சில மூடக்கொள்கையளை மூட்டைகட்டி எறியோணும்.சைவத்தை நவநாகரீகமாய் மாத்தோணும்.

 

ஐயோ அபச்சாரம்.:D.....சைவத்தை இருக்கிறமாதிரிவிட்டாலே பெரியவிடயம் ,சைவத்தை இந்து வந்து ஒவர்டெக் பண்ணியதால்தான் பிரச்சனை

வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ

வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ

வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல

உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.

 

- விபுலானந்தர் -

 

 

இவர்கள் செய்யப்போவது கோவிலில் ஆண்டவனுக்கு அர்ச்சனை

அர்ச்சனை செய்பவர்களாக இருப்பதால் அருட்சுனைஞர் எனப் பெயரிட்டார்களா?

அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா??

இவர்கள் ஆத்மீக வாத்தியார்கள்.

கடவுளுக்கே பாடமா? முதன் மொழி தமிழில் வேண்டும் என்றால் போற்றலாம். பாடம் எடுக்க வேண்டியது மக்களுக்கு. நாம் மூல ஆத்மீகத்தை, வாழ்கை அறிவை தமிழில் படிக்காமல் வேறு மொழி மாற்றங்களை வைத்து குழப்புகிறோம்.

இஸ்லாமிய இமாம், யூத ராபைகளிடம் இன ஒற்றுமை பற்றி பயின்று எங்களுக்கு சொல்லி தந்தால் நல்லா இருக்கும்.:)

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் செய்யப்போவது கோவிலில் ஆண்டவனுக்கு அர்ச்சனை

அர்ச்சனை செய்பவர்களாக இருப்பதால் அருட்சுனைஞர்  எனப் பெயரிட்டார்களா?

அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா??

 

 

 

இவர்கள் தான் கடவுள் என்று சொல்லாதவரை............... :(

இவர்கள் தான் கடவுள் என்று சொல்லாதவரை............... :(

 

தன்னை கடவுளென்னு எவன் சொன்னாலும் அவன் பொய்யந்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

தன்னை கடவுளென்னு எவன் சொன்னாலும் அவன் பொய்யந்தான்.

கடவுளையே பொய்யன் என்று சொல்ல இந்த இறைவனுக்கு இருக்கும் துணிச்சல் ... ஒ இறைவன் தானே கடவுள்!

தன்னை கடவுளென்னு எவன் சொன்னாலும் அவன் பொய்யந்தான்.

எல்லாம் கடவுள் என்று தெரிந்தவன் தன்னை மட்டும் கடவுள் என்று அழைக்கமாட்டான்.:)

பிறர் உழைப்பில் வயிறு வளர்க்கும் உந்த பூசாரிகளின் கொழுப்பையும் ஒருக்கா பாருங்கோ. உடுப்பி: "நீ பிராமணர் இல்லையா, இங்கே உட்கார்ந்து சாப்பிட முடியாது" என்று கூறி கல்லூரி உதவி பேராசிரியர் ஒருவர் உணவருந்தும் இடத்தில் இருந்து விரட்டி விடப்பட்ட சம்பவம் உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் நடந்துள்ளது. ஆலய நிர்வாகிகளுக்கு எதிராக அரசிடம் புகார் அளித்துள்ளனர் சமூக ஆர்வலர்கள். 800 ஆண்டுகள் பழமையான உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் கோயில் அதன் நிர்வாகிகளின் பாரபட்சமான நிர்வாகத்தால் அவ்வப்போது செய்திகளில் அடிபடுகிறது. கோயில் என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்ற மனப்பாங்கு இங்குள்ள சில நிர்வாகிகளுக்கு இருப்பதில்லை. பிராமணர் சாப்பிட்ட இலையின் மீது வேறு ஜாதியினர் உருண்டு அங்கபிரதட்சணம் செய்தால் உடலில் உள்ள வியாதிகள் தீரும் என்ற நம்பிக்கையை சிலர் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் விதைத்துள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அங்கபிரதட்சண சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வது உண்டு. ஆனால், கடந்த சில வருடங்களாக சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவதால் எச்சில் இலை அங்கபிரதட்சணத்துக்கு கூட்டம் குறைந்துள்ளது. இந்நிலையில் மணிப்பால் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவர் வனிதா என்.ஷெட்டி. இவர் உடுப்பி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு போஜனசாலையிலுள்ள தரைத்தளத்திற்கு சென்று சாப்பிட அமர்ந்துள்ளார். சாப்பாடு பரிமாறுவதற்கு முன்பாக ஊழியர் ஒருவர் வந்து வனிதாவிடம் அவர் பிராமண ஜாதியை சேர்ந்தவரா என்று கேட்டுள்ளார். அவர், இல்லை என்று கூறியதால் அங்கிருந்து வெளியேறி முதலாவது தளத்திலுள்ள பிற ஜாதியினருக்கான இடத்தில் அமர்ந்து சாப்பிடும்படி அந்த ஊழியர் கூறிட்டார். இதனால் அவமானமடைந்த வனிதா சாப்பிடாமலேயே அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் கோயில் நிர்வாகத்தின் பாரபட்சமான தன்மைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் முதல்வர் சித்தராமையாவை பார்த்து மனு அளித்துள்ளனர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய, உடுப்பி கிருஷ்ணர் கோயில் நிர்வாகி வித்யா வல்லபா தீர்த்த சுவாமி, இதுபோன்ற தவறு இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்வதாக தெரிவித்தார். உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள். Read more at: http://tamil.oneindia.in/news/india/refusing-food-non-brahmins-at-temple-kicks-off-row-198975.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூணிலும் இருக்கிறான்.  துரும்பிலும் இருக்கிறான.  உன்னிலும் இருக்கிறான்.  என்னிலும் இருக்கிறான்.  எம்முள் இருப்பவனை நாம் ஏன் வெளியில் தேடவேண்டும்?  எம்முள் இருப்வனுக்கு எம் மொழியே போதுமானது.

சூறாவளி: அந்த செய்தியை வடிவாக வாசிக்கவும்..அந்த கோயிலில் பிராமணருக்கும் மற்றவருக்கும் என்று இரண்டு வேறு இடங்கள் நீண்ட காலமாகவே இருந்திருகிறது...ஆகவே மற்றவரி அங்கே போக சொல்லியிருக்கிறார்கள்....சாப்பாடு என்றவுடன் என்ன ஏது என்றி பார்க்காமல் குந்திய பிச்சைகாரன் என்று அந்த வனிதாவை சொல்லலாமா?

 

கடவுளுக்கு சமஸ்கிருதம் மட்டும் தான் விளங்குமா தமிழ் விளங்காதோ...??  

 

முடிந்தால் உந்த மந்திரமே இல்லாமல் பூசை செய்ய முயற்சிக்கலாம்... !!!  

 

முடிய இல்லையா..?? 

 

தமிழ் கடவுள்களை விட சிங்கள கடவுள் பவர்புள்ளாக இருப்பதால்   "  நமோ தச , பகவதோ பகவத , சம்மங் சங் புத்தஸ்ச  எண்டு "  பாளி மொழியிலை பூசை செய்யலாம்...  !!! 

Edited by தயா

சூறாவளி: அந்த செய்தியை வடிவாக வாசிக்கவும்..அந்த கோயிலில் பிராமணருக்கும் மற்றவருக்கும் என்று இரண்டு வேறு இடங்கள் நீண்ட காலமாகவே இருந்திருகிறது...ஆகவே மற்றவரி அங்கே போக சொல்லியிருக்கிறார்கள்....சாப்பாடு என்றவுடன் என்ன ஏது என்றி பார்க்காமல் குந்திய பிச்சைகாரன் என்று அந்த வனிதாவை சொல்லலாமா?

நீங்கள் சொன்ன விடயத்தை முன்னரே அவதானித்தேன், வரும் பக்த்தர்கள் கொடுக்கும் அரிச்சனை போடுட்களும் தட்சணையாக கொடுக்கும் பணத்திலும் தமக்கான ஒரு தனி பகுதி அமைத்து உணவு உண்பார்களாம் அனால் அதே பத்தர்கள் அதில் வந்து குந்த கூடாதாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.