Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜூன் முற்பகுதியில் புளொட்டின் பொதுக் கூட்டம்

Featured Replies

உங்கட ரிமோட் கொன்றோளில் தான் போராட்டமே நடந்தது போலிருக்கு  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
இவளவு நேரமும் ....
புளொட்டின் கூட்டம் பற்றி பேசி கொண்டிருக்கும்போது .........
 
இதற்குள் கீழ்த்தரமான அடிமட்ட சிந்தனையோடு ஏன் முள்ளி வாய்க்காலை செருகிறீர்கள் ?
உங்களின் அடிமட்ட அறிவை இதில் வைத்தே எடை போடா முடியும்.
 
சிர்த்தார்த்தனின்  பதவி பற்றி பாராட்டு விழா எடுத்தீர்கள் ?
இந்த திரியில் அதற்குள் நின்றே ஆலவட்டம் சுற்றி பாருங்கள்.

உலகத்திற்கு தெரிந்த உண்மை ஒன்று

வாலுகள் சொல்லும் கதை முப்பதுவருடமாக சொன்னதுதான் .

தங்கள் வரலாற்றை தாமே எழுதி புல்லரித்து சொறிவது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட ரிமோட் கொன்றோளில் தான் போராட்டமே நடந்தது போலிருக்கு  :icon_mrgreen:

தனது சொந்த மண்ணின் விடிவிற்காக  நடந்த போரின் .....
ஒரு பாகுதியாகிலும் தெரியாது போனால். 
அவன் மனிதனாக இருக்க முடியாது ....
ஆக்கிரபிப்பு இராணுவம் வந்தால் ஈழத்தில் நாய்களே ஒன்று கூடி குரைத்து மக்களையும் போராளிகளையும் 
எழுப்பிவிடும்.
ஐந்தறிவு ஜீவனுக்கே தெரிந்திருக்க கூடியவற்றிட்கு .........
எதுக்கு ரிமோட் வைத்திருக்க வேண்டும் ?
 
நீங்கள் பேசாமல் வெளி உலகில் இருந்து ...... சிப்பாகி இந்த உலகிற்கு வாருங்கள்.
நிறைய பேசலாம்.

ஒரு பகுதியை மட்டும் ஒரு கண்ணால் பார்த்ததுதான் தவறு .

நாங்களும் சர்வதேசமும் நடந்தது எல்லாவற்றையும் உன்னிப்பாய்  பார்த்தோம் .

அதுதான் பெரிய வித்தியாசம் .

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திற்கு தெரிந்த உண்மை ஒன்று

வாலுகள் சொல்லும் கதை முப்பதுவருடமாக சொன்னதுதான் .

தங்கள் வரலாற்றை தாமே எழுதி புல்லரித்து சொறிவது.

ஆயிரம் ஆயிரம் ஆண்டு ............ உலகம் பூமி தட்டை என்றுதான் நம்பி கொண்டு இருந்தது.
 
ஆறாம் அறிவிற்கு ..... வேலை கொடுக்க தொடங்கும்போதுதான் 
அது உருண்டை என்று புரிந்தது.
 
"மின்னுவதெல்லாம் பொன் அல்ல" அப்படி என்றும் சொல்லுவார்கள் 
நீங்கள் கேள்வி பட்டது இல்லையா? 

ஒரு பகுதியை மட்டும் ஒரு கண்ணால் பார்த்ததுதான் தவறு .

நாங்களும் சர்வதேசமும் நடந்தது எல்லாவற்றையும் உன்னிப்பாய்  பார்த்தோம் .

அதுதான் பெரிய வித்தியாசம் .

இதை என்னால் இல்லை என்று மறுக்க முடியாது.
 
எதை தவறு என்று சொல்கிறீர்கள் ? என்று நீங்கள் எழுதினால்தான்.
ஒற்றை கண்ணால் பார்த்தவற்றையும் 
நெற்றி கண்ணால்  நீங்கள் பார்த்தவற்றையும்.........
 
தற்போதைய நிலவரத்தை வைத்து எது சரி எது தவறு என்று முடிவு செய்யலாம்.
 
ஒரு உண்மையை ஒத்துகொள்கிறேன் எனக்கு நெற்றி கண் கிடையாது. இதில் நீங்கள் பெருமைபட்டு கொள்ளலாம்.
  • கருத்துக்கள உறவுகள்

புளட் எண்பதுகளில் செயற்பட்டு, பிளவுபட்டு அழிவுண்டு செல்வாக்கு இல்லாமல் (வவுனியாவைத் தவிர) போயிருந்தது. அவர்கள் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்திலோ அல்லது அரசியலிலோ பெரிய செல்வாக்கு எதையும் செலுத்தவில்லை. இனியும் செலுத்தாது என்றுதான் கருதுகின்றேன்.

இப்படியான பொதுக்கூட்டங்கள் (தள மாநாடுகள்) பழைய நண்பர்களின் ஒன்றுகூடலாக அமையும். அதுதானே இப்ப ஃபாசன்!

அவர்களை யாரும் விரட்டி அடிக்க இல்லை அண்ணை...  

முதலிலை வரலாற்றை திருப்பி பாருங்கோ... !!   புலிகள் அவர்களை விடட்டிய போது  புலிகளை விட அவர்கள் பலமடங்கு பெரிய அளவில் இருந்தார்கள்...   

புலிகள்  600 பேர் இருந்த காலங்களில்  ரெலோ  2000 பேருக்கு மேலையும் புளட் 6000 பேருக்கும் மேலையும் இருந்தார்கள்...   ஈ பி  காறை கிட்டத்தட்ட புலிகளின் இரண்டு மடங்கு....

போராட்டம் ஆரம்பித்த காலங்களில் புலிகளை பலர் விரும்பவில்லை என்பதுக்கு இது நல்ல உதாரணம்...   ஆனாலும்  புலிகளின் பிரபல்யம் குறையவில்லை...   காரணம் என்னவாக இருக்கும்... ???

இப்படி புலிகளை விட அதிகமான தொகையில் மக்கள் மத்தியில் செல்வாக்கோடு இருந்தவர்களை புலிகள் விரட்டினார்கள் என்பது  கொஞ்சம் நெருடலாக இல்லையா இருக்கு...?? 

விரட்டிய கொலை செய்த புலிகளை மக்கள் கொஞ்சமும் விரும்பவில்லை...  அந்த காலங்களில் தான் இந்திய இராணுவம் இலங்கை வந்தது...  வந்த இராணுவத்தின்  கொடுப்பனவுகளோடு கூடிய தொண்டர் படையாக புலிகளால் விரட்டப்பட்டவர்களும் வந்தனர்...  புலிகளால்  கைது செய்யப்பட்டு விடுவிக்க பட்டவர்களை எல்லாம் மீளவும்  இந்திய இராணுவம் சேர்ந்தது....  சேர்ந்து  புலி வேட்டை ஆரம்பிக்கபட்டது... 

இந்த புலிகள் துரத்தினார்கள் எண்டு சொன்னீர்களே அவர்களை எல்லாம் என்ன காரணம் சொல்லி புலிகள் விரட்டினார்களோ அந்த வேலைகளை வெளிப்படையாகவே செய்ய ஆரம்பித்தனர்... 

புலிகளின் அசுர  வளர்ச்சி இதற்கு பின்னர்தான் ஏற்பட்டது ...   எப்படி வளர்ந்தார்கள் வளர காரணம் என்ன என்பதை உங்களின் சிந்தனைகே விட்டு விடுகிறேன்... !!!   

எந்த நியாயமும் எடுபடாது. புலிகள் செய்தது பயங்கரவாதம் என்று தீர்மானிக்கப்பட்டு சர்வதேசஉதவியுடன் அவர்கள் அழிக்கப்பட்டும் விட்டார்கள். இவை நடந்து முடிந்த கதை.

இயக்க குத்துப்பாடுகள் அவர்கள் எடுத்த தமிழர்களுக்கான விடுதலை என்ற முயற்ச்சி அனைத்தும் முடிந்து விட்டது. இப்போத இங்கே நடப்பது பழய சம்பவங்கள் அடிப்படையாகக் கொண்ட ஆழையாள் சொறிவது.

அந்தநேரம் புளட் ரெலொ ஈபி என பல இயக்கங்கள் அவர்களுக்கிடையிலான நேரடிச் சண்டைகள் கொலைகள். இப்போது அவர்கள் சார்பாக வாய்ச்சண்டைகள்.

இது ஒரு போதை. நான் மேலானவன் என்பதை நீ கீழானவன் என்று அடித்தோ இல்லை கொன்றோ இல்லை நக்கல் சொட்டை நொட்டை சொல்லியோ தேடும் ஒரு போதை. அதற்கு தொட்டுக்கொள்ளும் ஊறுகாய்தான் இயக்கங்கள் அவர்கள் சாரந்த சம்பவங்கள்.

ஒருவர் மாலதீவு என்பார் மற்றவர் புலிபோதை கடத்தினது என்பார் என்னுமொருவர் என்னுமொன்றைச் சொல்வார். இப்படியே இந்த ஆழையாள் சொறியும் தவறணைவிழையாட்டு தொடரும்.

என்னைப்பொறுத்தவரை எல்லாருக்கும் ஊறுகாய் கிடைக்கவேணும் என்று விரும்புகின்றவன். புலிக்கோஸ்டி சார்பானவர்கள் முழு ஊறுகாயையும் தாங்கள் அமுக்கப்பார்கின்றார்கள். அது ஏற்றுக்கொள்ள முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் கட்சி தொடங்கலாம், கூட்டம் கூடலாம் ஆனால் மக்கள் இதை ஏற்பார்களா என்பது கேள்விக் குறியே?

பூனை இல்லா வீட்டில் எலிகளுக்கு கொண்டாட்டம். எங்க ஒரு உறுமல் கேட்கட்டும் அப்ப பார்ப்பம் இவர்கள் எங்க போய் ஒழிப்பார்கள் என்று.

மகிந்த மாமா இப்பவும் வேட்டி கட்டிறவர் தானே

யாரும் கட்சி தொடங்கலாம், கூட்டம் கூடலாம் ஆனால் மக்கள் இதை ஏற்பார்களா என்பது கேள்விக் குறியே?

பூனை இல்லா வீட்டில் எலிகளுக்கு கொண்டாட்டம். எங்க ஒரு உறுமல் கேட்கட்டும் அப்ப பார்ப்பம் இவர்கள் எங்க போய் ஒழிப்பார்கள் என்று.

என்னும் கடிச்சு குதறுற வேட்டைக்குணத்தில் தான் இருக்கிறியள். ரத்த ருசி !!

அவர்களை யாரும் விரட்டி அடிக்க இல்லை அண்ணை...  

முதலிலை வரலாற்றை திருப்பி பாருங்கோ... !!   புலிகள் அவர்களை விடட்டிய போது  புலிகளை விட அவர்கள் பலமடங்கு பெரிய அளவில் இருந்தார்கள்...   

...இப்படி புலிகளை விட அதிகமான தொகையில் மக்கள் மத்தியில் செல்வாக்கோடு இருந்தவர்களை புலிகள் விரட்டினார்கள் என்பது  கொஞ்சம் நெருடலாக இல்லையா இருக்கு...?? 

விரட்டிய கொலை செய்த புலிகளை மக்கள் கொஞ்சமும் விரும்பவில்லை...  அந்த காலங்களில் தான் இந்திய இராணுவம் இலங்கை வந்தது...  வந்த இராணுவத்தின்  கொடுப்பனவுகளோடு கூடிய தொண்டர் படையாக புலிகளால் விரட்டப்பட்டவர்களும் வந்தனர்...  

இந்த புலிகள் துரத்தினார்கள் எண்டு சொன்னீர்களே அவர்களை எல்லாம் என்ன காரணம் சொல்லி புலிகள் விரட்டினார்களோ அந்த வேலைகளை வெளிப்படையாகவே செய்ய ஆரம்பித்தனர்... 

புலிகளின் அசுர  வளர்ச்சி இதற்கு பின்னர்தான் ஏற்பட்டது ...   எப்படி வளர்ந்தார்கள் வளர காரணம் என்ன என்பதை உங்களின் சிந்தனைகே விட்டு விடுகிறேன்... !!!

சகோதரப் படுகொலைகளை இந்தக் காலத்தில் புலிகள் அப்பட்டமாகவே செய்திருந்தனர். வீதிகளிலேயே மற்றைய இயக்க போராளிகள் கொல்லப் பட்டு அங்கேயே வைத்து அரைகுறையாக எரிக்கப் பட்ட சம்பவங்களை யாரும் மறக்க முடியாது.

தமிழ் சகோதரர்களின் புதைகுழி மீது நிறுவப் பட்ட ஏக பிரதிநிதித்துவம் அழியாமல் பாதுகாக்கப் பட்டதற்கு ஒரே காரணம் இலங்கை இனவெறி அரசின் தமிழ் மக்கள் மீதான காட்டுமிராண்டித் தனமான யுத்தமே.

மோசமான ஒரு சகோதரப் படுகொலை புலிகளின் உள்ளே இருந்த, உண்மையில் விடுதலையை நேசித்த, போராளிகளையே விரக்தி நிலைக்குத் தள்ளியது. முள்ளிவாய்க்காலில் அது போன்ற ஒரு அழிவைப் புலிகளும் மக்களும் சந்தித்து ஐந்து வருடங்களாகியும் இன்னும் சகோதரப் படுகொலையின் பெரிமிதம் தாழவில்லை.

எந்த நியாயமும் எடுபடாது. புலிகள் செய்தது பயங்கரவாதம் என்று தீர்மானிக்கப்பட்டு சர்வதேசஉதவியுடன் அவர்கள் அழிக்கப்பட்டும் விட்டார்கள். இவை நடந்து முடிந்த கதை.

இயக்க குத்துப்பாடுகள் அவர்கள் எடுத்த தமிழர்களுக்கான விடுதலை என்ற முயற்ச்சி அனைத்தும் முடிந்து விட்டது. இப்போத இங்கே நடப்பது பழய சம்பவங்கள் அடிப்படையாகக் கொண்ட ஆழையாள் சொறிவது.

அந்தநேரம் புளட் ரெலொ ஈபி என பல இயக்கங்கள் அவர்களுக்கிடையிலான நேரடிச் சண்டைகள் கொலைகள். இப்போது அவர்கள் சார்பாக வாய்ச்சண்டைகள்.

இது ஒரு போதை. நான் மேலானவன் என்பதை நீ கீழானவன் என்று அடித்தோ இல்லை கொன்றோ இல்லை நக்கல் சொட்டை நொட்டை சொல்லியோ தேடும் ஒரு போதை. அதற்கு தொட்டுக்கொள்ளும் ஊறுகாய்தான் இயக்கங்கள் அவர்கள் சாரந்த சம்பவங்கள்.

ஒருவர் மாலதீவு என்பார் மற்றவர் புலிபோதை கடத்தினது என்பார் என்னுமொருவர் என்னுமொன்றைச் சொல்வார். இப்படியே இந்த ஆழையாள் சொறியும் தவறணைவிழையாட்டு தொடரும்.

என்னைப்பொறுத்தவரை எல்லாருக்கும் ஊறுகாய் கிடைக்கவேணும் என்று விரும்புகின்றவன். புலிக்கோஸ்டி சார்பானவர்கள் முழு ஊறுகாயையும் தாங்கள் அமுக்கப்பார்கின்றார்கள். அது ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒண்டு மட்டும் நண்றாக புரிகிறது உங்கள் யாருக்கும் மனசாட்ச்சி என்பதே கிடையாது... 

பிரச்சினைகளை கண்டு ஓடி பதுங்கினவனும் அதை எதிர்கொள்ள திறணியையும் துணிவையும் கொண்டவனையும் ஒரே தராசில் வைத்து பார்க்கும்  இந்த மனநிலை அருவெருக்க தக்கது.. 

புலி எதிர்ப்பு வாதத்தை தவிர எந்த அரசியலும் செய்யாதவனும்  இந்த புலி எதிர்ப்பு வாதிகளையும் சமாளித்து பேரினவாத்தத்தை எதிர் கொண்டவனை பயங்கரவாதியாக  சித்தரிக்கும் இந்த வியாதி   தமிழர்களுக்கு மட்டும் தான் சொந்தம்... 

எந்த அமைப்பு அழிந்தாலும் அதுக்கு முக்கிய காரணமாக இருந்தவை உள் குத்து வெட்டுக்களே...  வரலாறுகள் எங்களுக்கும் தெரியும்...  தன் அமைப்புக்குள்ளேயே  ஒற்றுமை இல்லாதன் புலிகளோடை ஒற்றுமையாக சேர்ந்து போராடி இருப்பார்கள் அவர்களை தடை செய்தது எல்லாம் பிழை என்பது கூட உங்களை மாதிரி சிலரால் மட்டுமே சிந்திக்க முடியும்.... 

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் நீங்கள் கத்தினாலும் அந்த ஆள் இரண்டாவது விருப்பு வாக்கு பெற்று அரசியலில் இன்னும் இருக்கு .

யாரின்ர விருப்பு வாக்கு பெற்று? :D

1613854_776713459013826_8837351235118494

சகோதரப் படுகொலைகளை இந்தக் காலத்தில் புலிகள் அப்பட்டமாகவே செய்திருந்தனர். வீதிகளிலேயே மற்றைய இயக்க போராளிகள் கொல்லப் பட்டு அங்கேயே வைத்து அரைகுறையாக எரிக்கப் பட்ட சம்பவங்களை யாரும் மறக்க முடியாது.

தமிழ் சகோதரர்களின் புதைகுழி மீது நிறுவப் பட்ட ஏக பிரதிநிதித்துவம் அழியாமல் பாதுகாக்கப் பட்டதற்கு ஒரே காரணம் இலங்கை இனவெறி அரசின் தமிழ் மக்கள் மீதான காட்டுமிராண்டித் தனமான யுத்தமே.

மோசமான ஒரு சகோதரப் படுகொலை புலிகளின் உள்ளே இருந்த, உண்மையில் விடுதலையை நேசித்த, போராளிகளையே விரக்தி நிலைக்குத் தள்ளியது. முள்ளிவாய்க்காலில் அது போன்ற ஒரு அழிவைப் புலிகளும் மக்களும் சந்தித்து ஐந்து வருடங்களாகியும் இன்னும் சகோதரப் படுகொலையின் பெரிமிதம் தாழவில்லை.

புலிகள் Telo மீது கை வைக்க முன்னம் TELo வுக்கும் குத்து வெட்டு ஆரம்பித்து  இருந்தது... !!   தாஸ் அண்ணையை  யாழ்ப்பாண வாய்க்காலுக்கை போட்டு சுடும் போது  உங்களுக்கு அது சகோதர படுகொலையாக தெரியவில்லையாக்கும்..   இண்டு வரைக்கும் ஏன் எண்டு உங்களுக்கு தெரியாதாக்கும்... 

EPRLF க்குள்ளான குத்து வெட்டு ஆரம்பித்து  இராணுவ தலைமை பொறுப்பில் இருந்த டக்கிளஸ்  தேவானந்த ஆயுதங்களை எல்லாம் பதுக்கி விட்டு இந்தியாவுக்கு ஓடி போன கதை எங்களுக்கும்  தெரியும்... 

PLOTE அமைப்பின் மீது புலிகள் கை வைக்கவே தேவை இருக்கவில்லை....  தங்களை தாங்களே புத்தைத்து கொண்டார்கள்... 

நிலையான தலைமையை குடுத்து  பின்னாலை வாறவர்களை வளிநடத்த முடியாமல் தலைமை சண்டையில் அடிபட்டு போனவர்களை ஒழுங்காக வைத்திருக்க முடியாதவர்களிடம் ஆயுதம் எதுக்கு...?? 

  • கருத்துக்கள உறவுகள்
  1. ரெலோ புலிகள் இயக்கத்தின் கப்டன் லிங்கத்தை சுட்டு சகோதரப் படுகொலை செய்த நேரத்தில் புலிகள் செய்திருந்த சகோரரப் படுகொலையின் எண்ணிக்கை 0.
  2. புளொட் ஆறு புலிகளை சுழிபுரத்தில் வெட்டி புதைத்த நேரத்தில் புலிகள் செய்திருந்த சகோரரப் படுகொலையின் எண்ணிக்கை 0.

புலிகள் அன்று தமிழீழத்தை ஆண்டு கொண்டிருந்த அரசாக இருந்தால், மாற்று கொலைகார இயக்கங்களை கைது செய்து நீதி மன்றத்தில் நிறுத்தியிருக்கலாம். ஆனால், சிங்கள இராணுவத்திடம் அகப்படாமல் பதுங்கியும், அவர்களை முகாம்களுக்குள் முடக்கியும் போராடிக் கொண்டிருந்த காலத்தில் பதில் வேறு விதமாகத்தான் இருந்திருக்கும். பிஸ்டல், ஏ.கே.47, கிறனேட்டிடன் போராடியவர்களால் செய்ய முடிந்த தற்காப்பு அவ்வளவுதான்.

பி.கு: சங்கரை ஒரு அரசாங்கமே தூக்கில் போட்டுவிட்டதே என்று புலம்பி பிரியோசனம் இல்லை. ஆட்டோ சங்கர் செய்த கொலைகளுக்கு அன்றைய தமிழக அரசு சட்டப்படி என்ன செய்யமுடியுமோ அதையே செய்தது. கால ஓட்டத்தில் நீதிமன்றக் கொலைகளை நீக்கினால் அதுவே பரிணாம வளர்ச்சி.

ஒண்டு மட்டும் நண்றாக புரிகிறது உங்கள் யாருக்கும் மனசாட்ச்சி என்பதே கிடையாது... 

பிரச்சினைகளை கண்டு ஓடி பதுங்கினவனும் அதை எதிர்கொள்ள திறணியையும் துணிவையும் கொண்டவனையும் ஒரே தராசில் வைத்து பார்க்கும்  இந்த மனநிலை அருவெருக்க தக்கது.. 

புலி எதிர்ப்பு வாதத்தை தவிர எந்த அரசியலும் செய்யாதவனும்  இந்த புலி எதிர்ப்பு வாதிகளையும் சமாளித்து பேரினவாத்தத்தை எதிர் கொண்டவனை பயங்கரவாதியாக  சித்தரிக்கும் இந்த வியாதி   தமிழர்களுக்கு மட்டும் தான் சொந்தம்... 

எந்த அமைப்பு அழிந்தாலும் அதுக்கு முக்கிய காரணமாக இருந்தவை உள் குத்து வெட்டுக்களே...  வரலாறுகள் எங்களுக்கும் தெரியும்...  தன் அமைப்புக்குள்ளேயே  ஒற்றுமை இல்லாதன் புலிகளோடை ஒற்றுமையாக சேர்ந்து போராடி இருப்பார்கள் அவர்களை தடை செய்தது எல்லாம் பிழை என்பது கூட உங்களை மாதிரி சிலரால் மட்டுமே சிந்திக்க முடியும்.... 

யார் புலி எதிர்ப்பு வாதத்தை கட்டமைக்கின்றார்கள்? புலிகள் இருந்த காலத்தில் அனைவரையும் பகைத்து தமக்கான எதிரப்புவாதத்தை அவர்களே கட்டமைத்தார்கள். அவர்கள் இல்லாத காலத்தில் புலி ஆதரவரளர்கள் அதைச் செய்கின்றார்கள்.

இவ்வாறான முரண்பாடுகளுக்கு இந்த இனத்தின் அசைவியக்கம் காரணம் அது சரிசெய்யப்படவேணும் என்று பல பதிவுகளில் சுட்டிக்காட்டியும் உள்ளேன் அது என்னுமொருபக்கம்.

பிற இயக்கங்களை எதிர்த்ததென்பது இறுதியில் கருணா பிள்ளையான கேபி என புலிகளுக்குள்ளாகவே எதிர்ப்புவாதங்கள் பல்கிபெருகியது.

இவ்வாறன எதிர்புவாதங்களின் ஒட்டுமொத்த விழைவு இந்த இனத்தின் அழிவாக முடிந்தது. அதன்பிறகு இவற்றைக் கடந்துசெல்லவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றோம். ஆனால் அதை எவரும் விரும்பவில்லை. எங்கே எப்படி சொறியலாம் என்று அலையும்போது அதற்கான எதிர்வினைகள் தவிர்க்க முடியாதது.

மனட்சாட்சி பேரினவாதத்திற்கு எதிராகபோராடினார்கள் என்றெல்லாம் பேசும் போது இவ்வாறு போராடி மடிந்தவர்களின் நினைவுதினங்களை கூட பல பிரிவுகளாக அதற்குள்ளும் ஒரு பிரிவை ஒன்று எதிர்த்துப் பகைத்து நிற்பதற்கு என்னபெயர்?

மனட்சாட்சி இருந்தால் முதலில் அனைத்து தரப்பும் ஒரு அனுசரணைப்போக்கில் நடக்கப் பழகுதலே ஏற்படும். பகை வளர்ப்பதிலும் முரண்பாடுகளை தக்கவைப்பதிலும் மனட்சாட்சிக்கு என்ன வேலை இருக்கின்றது?

புளட்  ஒரு கூட்டத்தை போடட்டும் இல்லை ரெலோ ஈபி யார்வெண்டுமானாலும் போடட்டும். விரும்பினவன் கலந்துகொள் இல்லையேல் விடு. அதை விட்டுவிட்டு எந்த ஒன்றிற்குள்ளும் மூக்கை நுளைத்து நாட்டாமைத்தனம் பண்ண முற்படும் போது அதற்குள் தலையிட நேரிடுகின்றது.

இரண்டு விடயங்கள் தான் அடிப்படை. ஒன்று எல்ல கசப்புகளையும் கடந்து ஒரு பொதுத்தளத்தை நோக்கி நகர்வதுக்கான ஆதரவு- இது இனத்தின் அழிவு அதற்கான உள்ளக முரண்பாடுகளின் பங்கு என்பதில் இருந்து ஏற்படும் அனுபவ நிலை.

இரண்டாவது இதற்கு ஒத்துவராத நிலையில் ஆளையாள் சொறியும் நிலையை பன்மடங்காக விஸ்தரித்து நாட்டாமை நிலையை தகர்த்தெறிவது.

இவற்றை விட வேறு எதுவும் இல்லை. நான் செய்தது சரி நீ செய்தது பிழை நான் மேலானவன் நீ கீழானவன் நான் தியாகி நீ துரோகி என்ற நிலை இருக்கும் வரை அந்த வாதங்கள் முடிவுக்கு வராதது.

இப்படியான திரிக்குள் வந்து கருத்தெழுதுவது விருப்பத்துக்கு அப்பாற்பட்ட வலிந்திழுப்பு. என்ன செய்ய முடியும் விதி வலியது.

  • கருத்துக்கள உறவுகள்

யார் புலி எதிர்ப்பு வாதத்தை கட்டமைக்கின்றார்கள்? புலிகள் இருந்த காலத்தில் அனைவரையும் பகைத்து தமக்கான எதிரப்புவாதத்தை அவர்களே கட்டமைத்தார்கள். அவர்கள் இல்லாத காலத்தில் புலி ஆதரவரளர்கள் அதைச் செய்கின்றார்கள்.

இப்படியான  ஒரு இயக்கத்துக்கு விளக்கெரிக்க

ஒரு அஞ்சலி  செய்ய  ஏன் மக்கள் தாயகத்தில் துடிக்கிறார்கள்

ஆதிக்கர்கள் ஏன் அதை  தடுக்க இவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள்??

இதையும் சொன்னால்

நாங்களும் புரிஞ்சுகோமில்ல....  :(

May be people like and support only result oriented groups..? :o

இவ்வளவு இழப்புகளுக்கு பிறகும் இன்னும் சகோதரப் படுகொலைகளையும் இயக்க மோதல்களையும் நியாயப்படுத்திக் கொண்டு இருக்கின்றோம் என்பதைப் பார்க்கும் போது நாம் மேலும் மேலும் அழியத்தான் போகின்றோம் என்பதைத் தான் உணர முடிகின்றது.

தவறுகளை வரலாற்றின் பின் நோக்கி சென்று சரி செய்ய முடியாது. ஆனால் முன்னோக்கி செல்லும் போது தவறுகளை தவறாக ஒத்துக் கொண்டு எதிர் காலத்தில் அவை நிகழா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொது எதிரியான சிங்கள இனவாத அரசுகளுக்கு எதிராக தங்கள் இளமையையும் வாழ்க்கையையும் தியாகம் செய்து போராடப் போன ஏனைய இயக்க உறுப்பினர்களை மற்ற இயக்கங்களை விட புலிகள் தான் தீவிரமாக வேட்டையாடினார்கள்.   அதே புலிகள் தான் தாம் செய்த தவறினை வரலாற்றின் போக்கில் சரி செய்து கொள்வதற்காக 2002 இன் பின் (புலிகள் இராணுவ வெற்றியின் உச்சத்தில் இருந்த நேரத்தில்)  புளொட் தவிர்ந்த ஏனைய இயக்கங்களை ஒன்றிணைத்து அரசியல் செய்ய ஆரம்பித்தார்கள். ரெலோ, ஈ பி ஆர் எல் எவ் ஆகிய இயக்கங்களின் தலைமையை வன்னிக்கு அழைத்து ஒன்றாக அரசியல் செய்யும் அளவுக்கு அவர்கள் தங்களை மாற்றிக் கொண்டார்கள்.

ஆனால் நாங்கள் இன்னமும் அடிபட்டுக் கொண்டு இருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தான் நாங்களும் சொல்கிறோம்.. முள்ளிவாய்க்காலில் காலில் காயப் பட்டவர்களுக்கு காலையே எடுத்த நிகழ்வுகளும் உண்டு. மருத்துவ மனைகளில் என்றால் அதற்கு தேவை இருந்திருக்காது. அதுபோல சில முடிவுகளை எடுக்க வைப்பது சூழ்நிலை. புலிகள் வளர்ந்த பின் மின்கம்ப தண்டனைகள் ஏறக்குறைய இல்லாமலே போய்விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்காலில் சூழ்நிலைக்கு ஏற்ப கால்களை எடுத்தது தவறு என்றால் புலிகள் ஆரம்ப காலங்களில் செய்தவையும் தவறுகள்தான்.

குறிப்பு: ரெலோவை அழித்த காலகட்டங்கலில் நான் அங்கு இருந்தேன். எப்படா இவங்களுக்கு அடி போடுவார்கள் என்றுதான் முதலில் நினைக்கத் தோன்றியது. ஆனால் பிறகு கொஞ்சம் மனவருத்தமாகிவிட்டது.

யாழில் பலருக்கு உலக அரசியல்தான் தெரியாது என்று பார்த்தால் ஊர் அரசியலும் தெரியாது போலிருக்கு .

முதல் இயக்கங்களுக்கு இடையிலான  கொலை சுந்தரத்தின் கொலை .இந்த கொலையில் இருந்து இன்னமும் பலர் மீளவில்லை .புலியில் இருந்து பிரியும் போது புளொட்டின் தலைவர் உமா அல்ல .

வெறும் ஆயுத மோக கோஸ்டி என்று புலிகளை விட்டு சுந்தரம் தொடங்கிய  புது இயக்கத்தில் தான் அதிகம் மத்தியகுழு உறுப்பினர்கள் போனார்கள். அதன் பின்னர் தான் பிரபா போய் டெலோவுடன் சேர்ந்தது .இந்தியாவில் ஒதுங்கியிருந்த உமாவை பின்னர் தான் கொண்டுவந்து தலைவர் ஆக்கினார்கள் .சுந்தரம் தலைமையில் சிறிது என்றாலும் இரு தாக்குதல்கள் செய்தார்கள் .(ஆனைக்கோட்டை பொலிஸ் ஸ்டேசன் ).

அதே நேரம் புதியபாதையும் வெளிவந்தது .உருப்படியாக போராளிகள் வெளிவிட்ட முதல் பத்திரிகை .அமிரை கிழி கிழி என்று கிழித்து வெளிவந்தது .

டெலோவுடன் இருந்து இரு கொள்ளைகள் அடித்துவிட்டு மீண்டும் புலிகள் என்று இயங்க தொடங்கி பிரபா செய்த முதல் வேலை சுந்தரம் கொலை .

சுந்தரம் படை(பெரிய மென்டிஸ் ,சங்கிலி,மொக்கு மூர்த்தி  ) என்று ஒன்று புளோட்டுக்குள் அன்றே தொடங்கிவிட்டது விளைவு பழிக்கு பழி என்று இறை ,உமைவை போட்டார்கள். 

உமாவால் கடைசிவரை அவர்களை கட்டுப்படுத்த முயலவில்லை ,முடியவும் இல்லை .

83 கலவரத்தின் பின் ஆறாயிரம் பேரை சேர்த்து மாக்சிஸ கொள்கை என்று வெளியில் சொல்லி  பல வேலைத்திட்டங்களில் வேலை செய்தாலும் முழு புளோட்டும் அவர்கள் கைகளில் தான் இருந்தது .அதனால் தான் அழிந்தது .

மனட்சாட்சி பேரினவாதத்திற்கு எதிராகபோராடினார்கள் என்றெல்லாம் பேசும் போது இவ்வாறு போராடி மடிந்தவர்களின் நினைவுதினங்களை கூட பல பிரிவுகளாக அதற்குள்ளும் ஒரு பிரிவை ஒன்று எதிர்த்துப் பகைத்து நிற்பதற்கு என்னபெயர்?

மனட்சாட்சி இருந்தால் முதலில் அனைத்து தரப்பும் ஒரு அனுசரணைப்போக்கில் நடக்கப் பழகுதலே ஏற்படும். பகை வளர்ப்பதிலும் முரண்பாடுகளை தக்கவைப்பதிலும் மனட்சாட்சிக்கு என்ன வேலை இருக்கின்றது

இண்டைக்கு பழிகளை எல்லாம் தூக்கி புலிகள் மேலை போட்டுவிட்டு  தாங்கள் புனிதர்கள் ஆக காட்டும் இந்த மனப்பான்மை எண்டைக்குமே யாரையும் ஒண்றாக ஒட்ட விடாது... 

விட்டால் தங்களின் உள் முரன்பாடுகளை கூட புலிகள் மேல் போட்டு விட்டு ஒளிந்து கிடந்து வேடிக்கை பார்ப்பார்கள்... 

கைகளில் கிடைத்த ஆயுதங்களை வைத்து என்ன செய்வது எண்று தெரியாமல்  நீ பெரிதா நான் பெரிதா எண்று தங்களுக்குள் அடிபட்டு , சொந்த இயக்கத்துக்குள்  போராட வந்த போராளிகளை கூட  புலியின் உளவாளிகளாக பார்த்து  கிடங்கை கிண்ட வைத்து போட்டு தள்ளி தாட்டவர்கள்,   மாற்று இயக்கமான புலிகளோடு மிக நட்பாக இருந்தது போலவும் புலிகள் அதை ஏற்க மறுத்தது போலவும் தான் இருக்கிறது உங்கட வாதம்... 

வீரமாக சமத்துவம் பேசும் நீங்கள் யாராவது  புலிகளின் ஆதரவாளர்களுக்கு சமாந்தரமாக பேரினவாததுக்கு எதிராக போராட முன்வராத வரைக்கும் இந்த ஏற்றத்தாள்வு மனப்பான்மையை போக்க முடியாது...    எதிர்த்தரப்பால் செய்யப்பட்ட,  செய்யப்படும் துரோகங்கள் அதுவரை மறக்கப்படவும் மாட்டாது..  

இவ்வளவு இழப்புகளுக்கு பிறகும் இன்னும் சகோதரப் படுகொலைகளையும் இயக்க மோதல்களையும் நியாயப்படுத்திக் கொண்டு இருக்கின்றோம் என்பதைப் பார்க்கும் போது நாம் மேலும் மேலும் அழியத்தான் போகின்றோம் என்பதைத் தான் உணர முடிகின்றது.

யாரும்  நியாயப்படுத்தவில்லை...  ஆனால் இந்த சீண்டுதல்களுக்கு பதில் அளிக்கப்படுகிறது... 

ஒளிந்து நிண்டு  சகோதர படுகொலை எண்று வெறும் சீண்டுதல்களை மட்டும் செய்பவர்கள் தங்கள் தரப்பில் செய்யப்பட்ட கொலைகளையும்  நம்பிக்கை துரோகங்களையும்  ஒத்துக்கொள்வதோடு  மக்களுக்காக இதுவரை என்ன சாதித்தார்கள் என்பதை  நிரூபிக்கும் வரைக்கும் இந்த ஏற்றத்தாள்வான நிலைப்பாடுகள் எப்போதும் மாறப்போவது இல்லை.. . 

அதோடு நில்லாமல்  புலிகளின் ஆதரவாளர்களுக்கு சமாந்தரமாக  பேரினவாத சிங்களத்துக்கு எதிராக போராட முன்வரட்டும்...

Edited by தயா

சில ரகசியங்களை வெளிபடுத்த முடியாமையால் மற்ற இயக்கங்களின் உதவிகளை வெளிபடுத்த முடியவில்லை. விடுதலைப்புலிகளின் பல்வேறு பட்ட வெளிகள புலனாய்வு தாக்குதல்களுக்கு புலிகளால் ஒரு காலத்தில் சகோதரபடுகொலை (?) செய்யப்பட்ட இயக்கங்களும், அவற்றின் தலைமைகளும் உதவி செய்திருந்தன என்று என்னால் உறுதியாக கூறமுடியும்.

இது அந்த இயக்கங்களினது பெருந்தன்மைக்கும், விடுதலைப்புலிகளின் இலட்சியம் மற்றும் விடுதலை வேட்கை மீது மற்றைய இயக்கங்கள் வைத்திருந்த நம்பிக்கைக்குமான எடுத்துக்காட்டு.

இதில் சரி பிழை என்று வாதாட ஒன்றும் இல்லை. ஒரு காலத்தில் சரி என்பது இன்னொரு காலத்தில் பிழையாக அமையலாம்.

ஆனால் தமிழர்களை, ஒரு விடயத்தில் ஒற்றுமையாக ஒரே குழுவாக வைத்திருப்பது என்பது என்றைக்குமே சாத்தியமற்றது. அது இயக்கங்களுக்கும் பொருந்தும்.

Edited by பகலவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.