Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாஜக ஆட்சியமைந்தால் இவர்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்:-

Featured Replies

தற்போதைய தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் சிவசங்கர் மேனன், இலங்கை பிரச்னையில் தமிழருக்கு எதிராக செயல்பட்டதாக விமர்சனங்கள் உள்ள நிலையில் புதியவரது வருகை எதிர்பார்ப்புகளை கிளப்பியிருக்கிறது.

ajit-doval_CI.jpg

பஜக தலைமையிலான ஆட்சி அமைந்தால் பாதுகாப்புத்துறை ஆலோசகராக மத்திய உளவுத்துறையின் முன்னாள் தலைவர் அஜித் தோவல் நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய உளவுத்துறையின் முன்னாள் இயக்குனரான அஜித் தோவல், 1968ம் ஆண்டு கேரள பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியாக கடமையாற்றியிருந்தார். 2005ம் ஆண்டு ஜனவரி 31ம்தேதியுடன் ஐபிஎஸ் சேவையில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். தற்போது விவேகானந்தா சர்வதேச பவுண்டேசனின் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

1999ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகாருக்கு தீவிரவாதிகள் கடத்திச் சென்றபோது, இந்திய தரப்பு தூதராக செயலாற்றியவர் அஜித் தோவலாகும்.

மிசோ, பஞ்சாப் கலவரங்களின்போதும், காஷ்மீர் பிரச்னையின்போதும் தீரமுடன் செயலாற்றியுள்ளார். கீர்த்தி சக்கரா விருதுபெற்றுள்ள அஜித் தோவல் தீவிரவாத எதிர்ப்பிலும், பதிலடி தாக்குதல் வியூகங்கள் வகுப்பதிலும் புகழ் பெற்றவர்.

பாஜக தலைமையிலான அரசு அமைந்தால் அஜித் தோவலை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் சிவசங்கர் மேனன், இலங்கை பிரச்னையில் தமிழருக்கு எதிராக செயல்பட்டதாக விமர்சனங்கள் உள்ள நிலையில், புதிய பாதுகாப்பு ஆலோசகர் யார் என்பதும் அவரின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதும் அனைவரையும் கவனிக்க வைக்கிறது.

 

globaltamilnews.net

 

  • கருத்துக்கள உறவுகள்

அதே மலையாளி

இன்னுமொரு மலையாளியா? இந்தியாவில் உள்ள மற்ற இனத்தவர்களே...இப்போ மலையாளிகளை "கூட்டி கொடுப்பவர்கள்" என்னும் ரீதியில் தான் பார்கிறார்கள்......அதுவும் வளைகுடா நாடுகளில் இவனுகளின் தொல்லை அதிகம்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி என்னத்தை பறைஞ்சு????? எல்லாம் சுபம்.

  • கருத்துக்கள உறவுகள்

  :) இந்நாளைய சமூக நீதிக் கதை..! :rolleyes:

 

மும்பாயிலுள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் 'குட்டப்பன்' என்ற மலையாளி, படிப்பு குறைவாக இருந்ததால் அலுவலக உதவியாளராக (பியூன்) பணியிலிருந்தான். எப்பொழுதும் அலுவலகத்தில் யாராவது பேசிக் கொண்டிருக்கும்போது இடை புகுந்து "அது எனக்கு நல்லாவே தெரியும்", "அவரை எனக்கு நன்றாகத் தெரியும்" என்று அலட்டிச் சொல்வது அவனது பழக்கம்.

அந்த அலுவலகத்தில் அலுவலக மேலாளர், ஒரு சமயம் ஹாலிவுட் நடிகரான அர்னோல்ட் ஸ்வஸ்நேகர் பற்றி மற்றவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

 

அவ்வழியே போன குட்டப்பன் "சார், நம்ம ஆர்னியா? அவர் என்னுடைய நண்பராச்சே" என்று சொல்லவும், உடனே மேலாளர் சிரித்து விட்டு, "நீயோ கேரளாவில் ஏதோ ஒரு மல்லு கிராமத்தான்.. உனக்கு அர்னோல்டு நண்பரா? என்ன கிண்டலா?" என்று கேட்டார்.

 

"இதை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம். நான் எதுவும் செய்வதற்கில்லை" என்றான் குட்டப்பன்.

"அப்படியானால் அடுத்த வாரம் நான் அமெரிக்கா போகிறேன். நீயும் கூட வருகிறாய். அர்னோல்டு வீட்டுக்கு போய் என்ன என்று பார்த்திடுவோம்" என்றார் மேலாளர்.

 

குட்டப்பன் புன்னகையோடு ஒப்புக் கொண்டான்.

ஒரு வாரத்துக்குப்பின் இருவரும் அமெரிக்கா சென்றடைந்தனர். முதன் முதலில் நியூயார்க் சென்று அர்னோல்டை அவர் வீட்டில் சந்திப்பதாக ஏற்பாடு. அன்று அர்னோல்டின் தனிச் செயலாளரிடம் சொல்லிவிட்டு இருவரும் வரவேற்பறையில் காத்திருந்தபோது குட்டப்பனை பார்த்த அர்னோல்டு, உடனே ஓடோடி வந்து குட்டப்பனைக் கட்டிப்பிடித்து "ஹலோ குட்டப்பன், லாங் டைம் நோ ஸீ. வேர் வெர் யு மேன்?" என்று கேட்கிறார்.

 

பின்னர் குட்டப்பனோடு அர்னோல்டு ஒரு காபி சாப்பிடுகிறார். அதை அருகிலிருந்து கண்ட மேலாளர் அதிர்ச்சியுடன், "சரி..சரி நாம் போய் ஜார்ஜ் புஷ்ஷை பார்த்து விட்டு வருவோம். உனக்கு அவரைத் தெரியுமா என்ன என்று பார்த்து விடுவோம்" என்று சொல்ல, குட்டப்பனும் புன்னகையோடு ஒப்புக் கொண்டான்.

ஜார்ஷ் புஷ் வீட்டுக்குப் போனால், அவரும் அர்னோல்டு போலவே வந்து, குட்டப்பனை கட்டிப்பிடித்து, "வேர் வெர் யூ மை ப்ரண்ட் பார் லாங் டைம்..?" என அன்போடு விசாரித்தார். மேலாளரை வெளியில் உட்கார வைத்து விட்டு, குட்டப்பனோடு ஜார்ஷ் புஷ் தேநீர் அருந்துகிறார். வெளியில் வந்த குட்டப்பனிடம் மேலாளர், "நான் வாடிகன் போய் 'போப்' இடம் அருளாசி வாங்க விரும்புகிறேன். நீயும் வா" என்றார்.

குட்டப்பனும், மேலாளரும் வாடிகனில் உலகின் பல பகுதிகளிலிருந்து வந்த மக்களுடன் அருளாசிக்காக மைதானத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

அப்போது மேலாளர், "உனக்கு போப்பைத் தெரியுமா" என்று நக்கலாக கேட்க, "தெரியாமல் என்ன" என அலட்சியமாக சொன்னான் குட்டப்பன்.

 

மேலாளர் "எனக்கு நம்பிக்கையில்லை" என்று சொல்லவும், "கொஞ்சம் பொறுங்கள்" என்று சொல்லி கூட்டத்தில் புகுந்து விடுகிறான் குட்டப்பன்.

புதினைந்து நிமிடத்துக்குப் பின் குட்டப்பனின் கையைப் பிடித்தவாறு பால்கணியில் போப் தோன்றி கீழே காத்திருந்த மக்களை நோக்கி கையசைத்து ஆசீர்வதிக்கிறார். அப்பொழுது கீழே கூட்டத்தினரிடையே நின்றிருந்த குட்டப்பனின் மேலாளர் மயங்கி சாய்கிறார்.

அதை மேலிருந்து கண்ட குட்டப்பன் கீழே வந்து பார்த்தபோது அவனின் மேலாளர், செவிலியர்கள் மற்றும் முதலுதவியாளர்கள் புடை சூழ ஸட்ரெச்சரில் படுத்திருந்தார்.

 

குட்டப்பன் மேலாளரிடம், "என்ன ஆச்சு சார்?" எனக் கேட்டான்.

 

மேலாளர், "குட்டப்பா, நீ அர்னோல்டு பற்றி சொன்னாய்.... நான் நம்பிட்டேன். ஜார்ஜ் புஷ்... நான் நம்பிட்டேன். 'போப்'... அதையும் கூட நம்பிட்டேன். ஆனால், போப் உன் கையைப் பிடித்துக் கொண்டு பால்கணியில் நிற்கும்போது என்னருகே நின்ற இந்த மக்கள் கும்பல், "யாரப்பா அது.. நம்ம குட்டப்பன் கையைப் பிடிச்சிகிட்டு பால்கணியிலிருந்து நம்மையெல்லாம் ஆசீர்வதிக்கிறது..?" என்று பேசும்போது அதைக் கேட்ட நான் மனம் தாங்காமல் மயங்கிட்டேன்பா..! எப்படியப்பா இதெல்லாம்..?" என கண்ணீர் மல்க கூறினார்.

 

இதனால் கிடைக்கும் நீதி:

 

மலையாளியை குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள்...

 

 

-எப்பொழுதோ இணையத்தில் படித்தது, அனுபவித்ததும் கூட! :icon_idea:

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு மலையாளி, பாதுகாப்பு ஆலோசகராக வரவிருந்தால்....
பா.ஜ.க. ஆட்சி அமைக்காமலே இருக்கலாம். :(

  • கருத்துக்கள உறவுகள்

 

 ஆனால் போப் உன் கையைப் பிடித்துக் கொண்டு பால்கணியில் நிற்கும்போது என்னருகே நின்ற இந்த மக்கள் கும்பல் "யாரப்பா அது நம்ம குட்டப்பன் கையைப் பிடிச்சிகிட்டு பால்கணியிலிருந்து நம்மையெல்லாம் ஆசீர்வதிக்கிறது..?" என்று பேசும்போது அதைக் கேட்ட நான் மனம் தாங்காமல் மயங்கிட்டேன்பா..! எப்படியப்பா இதெல்லாம்..?" என கண்ணீர் மல்க கூறினார்.

 

குட்டப்பன், இவ்வளவு... பிரபல்யமாக என்ன காரணமாய்... இருக்கும். :D  :lol:

Chandrans-thattukada.jpg

 

யாரென்று நினைச்சீங்க

என்கௌன்டர் ஏகாம்பரம் பேர்வளி இவர்!!
 
இப்படியானவர்கள் தான் சிரிலங்காவிற்கு பாடம் கற்பிப்பார்கள்.
 
 
சி.மேனன்  போல் குழைபவர்கள் சிரிலங்காவை தடவி வால் பிடிப்பார்கள்.
 
இவர் பிறப்பால் மலையாளியா தெரியவில்லை. (உத்தர்காந்தில் பிறந்திருக்கிறார்) 

Mr.Ajit Kumar Doval

 

 

இவர் மலையாளி கிடையாது... !!   வடக்கு  இந்தியாவின் இமாலய தொடர் கொண்ட மாநிலமான  உத்திரகண்டில் பிறந்தவர்...  !!   சுத்தமாக  ஹிந்தியை தாய் மொழியாக  போசுபவர்...   டெல்லியை  இப்போதைய  வசிப்பிடமாக கொண்டவர்...  

 

இவர் BJP யின்  தீவீர ஆதரவாளரும் செயற்பாட்டாளரும்... 

 

 

 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மலையாளிகளையும் ஒரே நோக்கில் பார்ப்பது தவறு.
எம் ஜி ஆரும் பிறப்பால் மலையாளிதான் .இவர் மலையாளியாக இருந்தாலும் கூட 

அவருடைய செயல்களைப் பொறுத்தே எமது கருத்துக்களைத் தெரிவிக்கவேண்டும்.

யாரா இருந்தால் என்ன? இவர் கொங்கிரஸ் விசுவாசி இல்லை

ஈழ ஆதரவாளர்கள் லொபி பண்ண தொடங்கவேண்டும்.

இல்லையென்றால் ராகு கேது சக்கரைவத்தி கோவில் காணிக்கை என்று பீர்ரிசை பெட்டியுடன் அனுப்பிவிடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

அவசர அவசரமாக இலங்கை ஈழதமிழர்களையும் தமிழ் அமைப்புகளையும் தடைபட்டியலில் கொண்டுவந்ததுடன் அதை காங்கிரஸ் அரசு ஆமோதித்ததும் இதுக்குதானாக்கும்.

அவசர அவசரமாக இலங்கை ஈழதமிழர்களையும் தமிழ் அமைப்புகளையும் தடைபட்டியலில் கொண்டுவந்ததுடன் அதை காங்கிரஸ் அரசு ஆமோதித்ததும் இதுக்குதானாக்கும்.

தமிழகத்தில் ஈழ தமிழ் ஆதரவர்களிடம் படு தோல்வி அடைந்த கோபமும் போலி தடைக்கு காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை விவசாயி தடைசெய்யபட்ட அமைப்பின் உறுப்பினர் எமக்காக புதிய அரசில் கதைக்காமல் பன்னுவதே அவசர அவசரமாக இலங்கையரசின் தடை நாம் இதிலிருந்து சுதாகரிச்சு எழுமுன் காங்கிரசின் ஈழவழிப்பின் தடையங்கள் அழிவுக்குள்ளாயிருக்கும்.

இல்லை விவசாயி தடைசெய்யபட்ட அமைப்பின் உறுப்பினர் எமக்காக புதிய அரசில் கதைக்காமல் பன்னுவதே அவசர அவசரமாக இலங்கையரசின் தடை நாம் இதிலிருந்து சுதாகரிச்சு எழுமுன் காங்கிரசின் ஈழவழிப்பின் தடையங்கள் அழிவுக்குள்ளாயிருக்கும்.

வெளிநாட்டில் உள்ள பஞ்சாபி, தென்னிந்திய தொலைகாட்சிகளில் நோ பயர் சோன் காசை செலவழித்து ஒளிபரப்ப வேண்டும்.

மற்றும் கொங்கிரஸ் கொலைகார கூட்டத்தை தொடர்ந்து பலவீன படுத்தவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதே மலையாளி

 

 

இன்னுமொரு மலையாளியா? இந்தியாவில் உள்ள மற்ற இனத்தவர்களே...இப்போ மலையாளிகளை "கூட்டி கொடுப்பவர்கள்" என்னும் ரீதியில் தான் பார்கிறார்கள்......அதுவும் வளைகுடா நாடுகளில் இவனுகளின் தொல்லை அதிகம்....

 

 

இனி என்னத்தை பறைஞ்சு????? எல்லாம் சுபம்.

 

 

இன்னொரு மலையாளி, பாதுகாப்பு ஆலோசகராக வரவிருந்தால்....

பா.ஜ.க. ஆட்சி அமைக்காமலே இருக்கலாம். :(

 

 

அவரது கொள்கை என்ன என்று தெரியாமலேயே அவரது சாதி மற்றும் இனத்தை வைத்து அவரை வெறுக்கும் உங்களை அவர் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார். அவர் யாழ் களத்தை படிக்கும் தமிழ் தெரிந்தவராகவும் இருக்க கூடும்.. 

 

நீங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக எழுதிய மத வெறி கருத்துக்களை குடியரசு தலைவராக இருந்த அப்துல் கலாமும் படித்திருக்க கூடும். அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி நீங்கள் பெரிதாக அக்கறை கொள்வதில்லை என்பது தெளிவு. 

  • கருத்துக்கள உறவுகள்
அவர்கள் அடிப்பார்கள்தான் .......
அது வலிக்கும்தான் ...........
 
அனாலும் நீங்கள் அழகூடாது. மற்றவர்கள் பார்த்தால் அவர்கள் உங்களை அடிக்கிறார்களோ என்று சந்தேகபடலாம். அதலால் நீங்கள் சிரிக்க வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

அவரது கொள்கை என்ன என்று தெரியாமலேயே அவரது சாதி மற்றும் இனத்தை வைத்து அவரை வெறுக்கும் உங்களை அவர் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார். அவர் யாழ் களத்தை படிக்கும் தமிழ் தெரிந்தவராகவும் இருக்க கூடும்.. 

 

நீங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக எழுதிய மத வெறி கருத்துக்களை குடியரசு தலைவராக இருந்த அப்துல் கலாமும் படித்திருக்க கூடும். அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி நீங்கள் பெரிதாக அக்கறை கொள்வதில்லை என்பது தெளிவு. 

 

 

தனது இனமே  கொத்துக்கொத்தாக அழிக்கப்பட்டு

எரிக்கப்பட்டபோது

காதையும் கண்ணையும் வாயையும் பொத்திக்கொண்டு பதவியிலிருந்த

அப்துல் சலாமைவிட

தனது இனத்தக்கு அடி விழுந்தபோது

அழுது குரலெழுப்பும் சிறி

ஆயிரம் மடங்கு உயர்ந்தவர்

இதையும் அப்துல் சலாம் படிக்கட்டும்

படிக்கணும்..........

அப்ப அடுத்த இந்திய ஜனாதிபதியாக சிறியை நியமித்தால் போச்சு .

 

யார் மீது அனுதாபப்படுவது என்று தெரியவில்லை .யார் ஆட்சிக்கு வந்தாலும் எந்த நபர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக வந்தாலும் இந்திய வெளிநாட்டு கொள்கை பெரிதளவு மாறமாட்டாது.

சிலவேளை தமிழர்களுக்கு தீர்வு கொடுக்கசொல்லி தமிழ் நாட்டில் இருந்து ஏதும் அழுத்தம் வந்தால் (அவர்களையும் சேர்த்து கூட்டாட்சி ) இலங்கை -இந்திய ஒப்பந்தம் தான் அதி உச்ச தீர்வு .

 

புலிகள் எவர் வந்தாலும் எக்காலமும் இனி இலங்கையில் தலைஎடுக்கமுடியாது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.