Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 இந்திய பாராளுமன்ற தேர்தல் - 2014 திருவிழாவின் இறுதி முடிவு பட்டியல்.

 

13zmxeb.jpg

 

 

Source: Dinamalar.

 

அண்ணா ஒரு கணக்கு எனக்கு சரியாக புரியவில்லை. இது ஜெனநாயகத்திட்கு கொஞ்சம் புறம்பாக இருக்கிறது.
 
இந்திய சனத்தொகை 100 கோடி 
தமிழக சனத்தொகை  6 கோடி 
 
மொத்த தொகுதி 543.
 
ஜெயலலிதா கட்சி வென்றது 37 தொகுதி எனும்போது. இது 14.6 கோடி மக்களை பிரநித்துவ படுத்துகிறது.
இது மற்றைய மாநிலங்களை விட மத்திக்கு அமைச்சரை கொண்டு செல்லும் தகுதியை தமிழ் நாட்டுக்கு இரட்டிப்பாக்குகிறது.
 
இந்த கணக்கு சரியாக புரியவில்லை.
கொஞ்சம் உதவி செய்வீர்களா ????
  • Replies 474
  • Views 31.8k
  • Created
  • Last Reply

அஞ்சரனின்... பம்மாத்து,

விளையாட்டுக்களை... பரியாரிரும் அறிந்தது, மகிழ்ச்சி. :D  :lol:

சிறி அண்ணே இதில் பம்மாத்து விளையாடி என்ன இலாபம் பாருங்கோ ..

 

உங்களை போல இரண்டு சந்ததிக்கு சேர்த்து வைத்து விட்டு சாப்பாடு சேமிக்க இங்க வந்து அரசியல் தேசியம் பேசுவது சுகம் நாங்கள் அப்படியா அன்றாடம் கூலி வேலை செய்வோர் புளித்த கதை கதைக்க முடியாது மிக் 27 அடிவாங்கியவன் ஒரு நிம்மதி வாழ்க்கையை தான் விருப்புவான் ..

 

இணையத்தில் தேசியம் பேசி சீனை போட பாமார மக்களுக்கு தெரியாது அந்தவகையில் நிங்கள் கெட்டிக்காரர் . :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலில் தமிழகத்தின் தொகுதி வாரியான முடிவுகளை பார்க்கும் போது காங்கிரஸ் கட்சி தனித்து நின்று 30 ஆயிரம் 40 ஆயிரம் வாக்குகளையே பெற்று இருக்கின்றது.....இவளவு நாளும் திராவிட,கட்ச்சிகளின் முதுகில் சவாரி செய்து வந்து இருக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது......ஆக அழகிரி சொல்லுவது போல காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்தால் வெற்றி பெற்று இருக்கும் என்பது வெறும் ஊகம் தான்.....என்னைப்பொருத்தவரை தி மு க எடுத்த மிகச்சரியான முடிவு காங்கிரசை கழட்டி விட்டது.......ஆனால் மக்கள் அதை நம்பவில்லை ஒரு வேளை காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றினால் தி மு க வும் சில இடங்களில் வென்றால் அது காங்கிரஸ் ஆட்ச்சிக்கு முண்டு கொடுக்கும் என்பதும் மக்கள் தி மு க வை நம்பாததுக்கு ஒரு காரணம்......

கருணாநிதி தளங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று தெளிவாக உறுதியாக மக்களிடம் கூற முன்வரவில்லை......மதில் மேல் பூனையாகவே இருக்க விரும்பினார்.........

  • கருத்துக்கள உறவுகள்

"பா.ஜ., ஆட்சி 2 ஆண்டுகள் கூட நீடிக்காது'

மயிலாடுதுறை காங்., வேட்பாளராகப் போட்டியிட்டு தோற்ற மணிசங்கர் அய்யர்:

ரொம்ப பயந்துட்டாப்ல போல இருக்கு.....கவலை மறக்க தொட கூடாது.......டீயோடு கொஞ்சம் இஞ்சி, பனை வெள்ளம் கலந்து குடித்தால் இந்த பிரச்சினை கொஞ்சம் குறையும்.....

  • கருத்துக்கள உறவுகள்

13 ஆண்டுகளுக்கு பின் தி.மு.க., சந்தித்துள்ள இந்த "ஜீரோ' அனுபவம், அக்கட்சிக்கு மூன்றாவது முறை என்றாலும், ஒவ்வொரு முறையும் அதிலிருந்து மீண்டு, மீண்டும் தன்னை அக்கட்சி நிரூபித்திருப்பதையும் மறுக்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

13 ஆண்டுகளுக்கு பின் தி.மு.க., சந்தித்துள்ள இந்த "ஜீரோ' அனுபவம், அக்கட்சிக்கு மூன்றாவது முறை என்றாலும், ஒவ்வொரு முறையும் அதிலிருந்து மீண்டு, மீண்டும் தன்னை அக்கட்சி நிரூபித்திருப்பதையும் மறுக்கமுடியாது.

வழமையாக, லேடியின் அட்டகாசம் அதிகரிக்கும்போது டாடி முன்னுக்கு வருவார்.. :lol: ஆனாலும் இந்தமுறை அடி கொஞ்சம் பலமாகவே விழுந்துள்ளது.

டாடி பாடி ஆனால் திமுகவும் அம்பேல் ஆகவும் இடமிருக்கு..இல்லை என்றால்..அண்ணனும் தம்பியும் வடக்கு தெற்கு என்று பிரிதெடுப்பார்களோ தெரியாது...

  • கருத்துக்கள உறவுகள்

தி மு க வின் தலைமைக்கு குஷ்பூ வர வாய்ப்பிருக்கு ......

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப பயந்துட்டாப்ல போல இருக்கு.....கவலை மறக்க தொட கூடாது.......டீயோடு கொஞ்சம் இஞ்சி, பனை வெள்ளம் கலந்து குடித்தால் இந்த பிரச்சினை கொஞ்சம் குறையும்.....

பிறகும் ஏன் இந்தாளுக்கு டீயை ஞாபகபடுதுகிறீர்கள், டீயால் தானும் கெட்டு சூழ இருந்தவர்களையும் துரத்தி விட்டார்!!

Edited by Ahasthiyan

நாடு கடந்த அரசும், இதர புலம்பெயர் தமிழ் அமைப்புகளும், மோடியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து, இந்திய அரசுடன் நெருங்க வேண்டும்.

பாரதிய ஜனதா, புலிகளுக்கு ஆதரவாக நடக்காவிட்டாலும், எதிராக நடக்கவில்லை. அவர்களுக்கு புலிகளை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை.

இந்த சந்தர்ப்பத்தை, தமிழ் அரசியல் அமைப்புகள் தவற விடகூடாது என்பதே எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு கட்சியின்மீது ஏற்படும் வெறுப்பே மற்றக் கட்சிக்கு வாக்குகளாய்க் குவியுது...!

டாடி பாடி ஆனால் திமுகவும் அம்பேல் ஆகவும் இடமிருக்கு..இல்லை என்றால்..அண்ணனும் தம்பியும் வடக்கு தெற்கு என்று பிரிதெடுப்பார்களோ தெரியாது...

 

திராவிட கட்சிகள் இரண்டுக்கும் முடிவு காலம் தான், தி மு க அண்ணன் தம்பியால் பிரியும், அதே போல் லேடி விலகிய பின்னர் அதிமுக இருந்த இடம் காணாமல் போகும்

திராவிட கட்சிகள் இரண்டுக்கும் முடிவு காலம் தான், தி மு க அண்ணன் தம்பியால் பிரியும், அதே போல் லேடி விலகிய பின்னர் அதிமுக இருந்த இடம் காணாமல் போகும்

 

எம்.ஜி.ஆர் சாக இந்த அம்மா "வந்தது" போல்....இவவும் போக வேறு யாரவது இவவுக்கு "நெருக்கமானவர்கள்" வரலாம் :)

 

திருநாவுகரசு போன்றார் பேராசைப்படாமல் அதிமுகவில் இருந்திருந்தால் இவவிற்கு பின் அவர்கள் வந்திருக்கலாமோ தெரியாது..அல்லது அவர்களும் இவ்வுடன் இசைவாக நடந்திருக்கலாம்...அவர்கள் இவர் ஒரு நடிகை தானே என்று இலகு வாக எடுத்து விட்டார்கள் போலுள்ளது....

 

எல்லாம் முடிந்தா பிறகு கதைத்து என்ன பயன் :)

 

சிலவேளை ரஜனி பி.ஜே.பி யில் சேர்ந்தால்..இது மாறுமோ... :)

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

tamilaruvi-manian.jpg

மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கு விஜயகாந்த், ராமதாஸ் தான் காரணம்: தமிழருவி மணியன்.

 

காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

நரேந்திர மோடிக்கான ஆதரவலையும், காங்கிரசுக்கு எதிரான சூறாவளியும் சேர்ந்துதான் 30 ஆண்டுகளுக்குப் பின்பு மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சி ஆச்சரியப்படும் அரிய வாய்ப்பை உருவாக்கியுள்ளன. போலி மதச்சார்பின்மையும் சாதிய அழிவுச் சக்திகளும் இத்தேர்தலில் பரிதாபகரமான முடிவைச் சந்தித்துள்ளன.

மாயாவதி, முலாயம்சிங், லாலு பிரசாத் போன்றோரின் வீழ்ச்சியும், காங்கிரஸின் வரலாறு காணாத தோல்வியும் சாதி மதங்களைப் பயன்படுத்தி மக்களைப் பிளவுபடுத்தும் இழிந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதல் முயற்சியாக அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.

சிறுபான்மையினரின் அவநம்பிக்கையை அகற்றும் நடவடிக்கைகளிலும், நலிவுற்ற மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான செயல் முறைகளிலும் மோடியின் அரசு முனைப்புடன் ஈடுபடுவதன் மூலம் நாட்டைச் சீரழிக்கும் சாதிய, மதவாத சக்திகளிடமிருந்து மக்களை விடுவித்து வளர்ச்சிப் பாதையில் வலம் வருவதற்கு வழி வகுக்கும்.
 
தமிழகத்தில் இரண்டு முக்கிய நோக்கங்களுக்காக தேசிய ஜனநாயக் கூட்டணி அமைக்கப்பட்டது. காங்கிரசை வீழ்த்தவும், திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்கவும் உருவாக்கப்பட்ட இக்கூட்டணியின் நோக்கங்கள் ஓரளவு நிறைவேறியுள்ளன. காங்கிரஸ் அனைத்துத் தொகுதிகளிலும் மோசமான தோல்வியைத் தழுவி மீண்டும் எழ முடியாமல் விழுந்து விட்டது. தி.மு.க. ஒரு தொகுதியில் கூட வெற்றியைப் பெற முடியாமல் மக்களவைப் பிரதிநிதித்துவத்தை முற்றாக இழந்து விட்டது. இச்சூழலைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி, சட்ட மன்றத் தேர்தலுக்கான வியூகம் வகுப்பதில் ஈடுபட வேண்டும். தமிழகத்தில் 75 லட்சம் வாக்காளர்கள் இக்கூட்டணிக்கு வாக்களித்ததன் மூலம் மாற்று அரசியல் மலர தங்கள் ஆதரவைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.

விஜயகாந்தின் ஆரம்பகால அரசியல் ஊசலாட்டங்களும், மருத்துவர் ராமதாசின் பிடிவாதமான புறக்கணிப்பும், மாதக்கணக்கில் தொகுதி உடன்பாடு காண்பதில் கடைப்பிடித்த கேலிக்கூத்துகளும், கூட்டணித் தலைவர்கள் ஒருங்கிணைந்து ஒரு மேடையில் கூட வாக்காளர்களைச் சந்திக்காமல் தவிர்த்ததும் மோடியை மையமாகக் கொண்டு மக்களிடம் மலர்ந்த எதிர்பார்ப்பை முறியடித்துவிட்டன.

இந்தக் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கு விஜயகாந்த், ராமதாஸ் இருவரின் அணுகுமுறையே அடிப்படைக் காரணம். இதில் வாக்காளர்களைக் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. தவறுகளிலிருந்து பாடம் பெறுவதுதான் அரசியல் பண்புடைமை. ஆனால், ராமதாசும் விஜயகாந்தும் சட்டமன்றத் தேர்தலை நோக்கி சேர்ந்து களத்தில் நிற்பார்கள் என்பது சந்தேகத்திற்குரியது. தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த இருவர் மூலம் வலுப்பெறுவதற்கு வாய்ப்பில்லை. மாற்று அரசியல் மலர்வதற்குத் தன்னை முற்றாக அர்ப்பணித்துக் கொண்ட வைகோவின் தோல்வியை தமிழினத்தின் ஒட்டு மொத்தத் தோல்வியாக காந்திய மக்கள் கட்சி (கா.ம.க.) கருதுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்குள் வரவிருக்கும் சட்ட மன்றத் தேர்தலில் ஜெயலலிதாவிற்கு இன்றுள்ள சாதகமான சூழல் இருப்பதற்கு வாய்ப்பில்லை. மாற்று அரசியல் வளர்த்தெடுக்கப்படுவதற்கு ஏற்ற வியூகத்தை இனி காலம் தான் நமக்கு காட்ட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

 

நக்கீரன்.

 

பிற்குறிப்பு: தமிழருவி மணியன்... பா.ஜ.க. கூட்டணியை உருவாக்க ஆரம்பத்தில் பெரும் முயற்சி எடுத்தவர்.
பின் சில கட்சிகளிகளின் நட‌வடிக்கையால்... மனம் வெறுத்து ஒதுங்கிக் கொண்டார்.
 

  • கருத்துக்கள உறவுகள்

அ தி மு க வின் வெற்றியே சாதாரண அடிமட்ட கட்சிக்காக உழைத்த தொண்டர்களை முன்னுக்கு கொண்டு வந்து விடுவது........சாதாரண தொண்டனும் மிகப்பெரிய பதவியை வகிக்க முடியும்.......தி மு க வை பொருத்தவரை முக்கிய தகுதியே பணம் தான் கட்சிக்காக உழைத்த அடிமட்ட தொண்டன் இன்னும் அடிமட்டத்திலேயே இருக்கின்றான்.......

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை சொல்லுங்கோ ரதி, உங்களுக்கு இறுதி யுத்தம் நடந்து முடிந்து சரியாக எத்தனை வருடங்கள் என்று தெரியாதா ..?

என்ன செய்கிறது உங்கள மாதிரி கணக்கு விட எனக்குத் தெரியாது :)

இந்த தேர்தலின் ஒரே நல்ல விடயம் மோடியிடம் எல்லா அதிகாரத்தையும் கொடுத்ததே....

நல்ல வேளை தமிழ்நாட்டில் இருந்து  எந்த மந்திரியும் போக போவதில்லை (கையில் காலில் விழுந்து அன்புமணி வேண்டுவாரோ தெரியாது...வாய்பாயி நேரத்திலும் இருந்த படியால்..திறமையாக சுகாதார துறையில் செயல்பட்டதாகவும் கதை)..ஆகவே ஊழல் பட்டம் இந்த முறை கிடையாது...ஆனால் தமிழ் நாட்டு MPகள் பாராளுமன்றம் போகவே தேவையில்லை.....

 

சுப்பிரமணியம் சுவாமி வெளியுறவு மந்திரியாக (எலெக்சனில் நின்றாரா?) நியமிக்கப்படலாம் :) என்றும் ஒரு கதை..

 

உண்மை நிலையை பலர் அறியாமலே உள்ளனர்..

 

இந்திய அரசியல் அமைப்பின் படி மக்களவையில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்து வெற்றி பெற வேண்டுமானால் 3 இல் 2 பங்கு அதாவது 369 உறுப்பினர்களின் ஆதரவு தேவை தற்போது பாஜக கூட்டணிக்கு 339 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது ஆகவே தமிழ்நாட்டின் அதிமுக வின் கோரிக்கைகளை மறுக்க முடியாமல் மத்திய அரசு நிறைவேற்றியே ஆக வேண்டும். ஏன் எனில் அதிமுக தவிர்த்து திரினாமுல் காங்கிரஸ் , இன்னும் சில கட்சிகள் பாஜகவை ஆதரிக்காது , ஆகவே தமிழ்நாட்டிற்கு இந்திய அரசில் முக்கியத்துவம் கிடைத்தே தீரும் ,,

மாநிலங்களவையிலும் ஒரு சட்ட மசோதாவை வெற்றியாக்க 121 உறுப்பினர்களின் ஆதரவு தேவை அங்கு இப்போது பாஜகவுக்கு 46 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது கூட்டணியாக சேர்ந்தாலும் 77 உறுப்பினர்களின் ஆதரவே உள்ளது பாஜக ஆளும் மாநிலங்களில் இனி நடக்க போகும் மாநிலங்களவை தேர்தலில் கிடைக்கும் ஆதரவு 10 ஆக இருக்கும் ஆகவே அதற்கும் தமிழ்நாட்டு உறுப்பினர்களின் ஆதரவு தேவை , அதிமுக 11 உறுப்பினர்களை கைவசம் உள்ளது

காங்கிரஸ் போல பாஜக தமிழ்நாட்டை புறக்கணிக்காது , மத்திய அரசின் பிடி இப்போதும் மிழ்நாட்டின் கையில் தான் ஆனால் ஆட்சி கவிழ்ப்பு டிராமா தான் இனி எடுபடாது ,

 

மத்திய மின் தொகுப்பு , மீனவர்கள் தாக்குதல் , திட்ட ஒதுக்கீடு போன்றவற்றில் தமிழ்நாட்டின் குரலுக்கு இனி மதிப்பிருக்கும் தமிழ்நாடு தனித்து விடப்படவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

' அழகிரி என்ற ஒரு புள்ளையே இல்லை '- கருணாநிதி

சுண்டல்: பேசாமல் கட்சியை கலைத்தால் இந்த தொல்லையே இல்லை......

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று தேர்தல் முடிவுகள் உச்சத்தில் வெளிவந்து கொண்டிருந்த தருணம்.

தமிழக அரசியல் வரலாற்றில், திமுக முற்றுமுதலாக தோல்வியைத் தழுவி இருக்கிறது . திமுக தலைவர் கருணாநிதியின் கருத்தறிய , செய்தியாளர்கள் கோபாலபுரம் இல்லத்தில் காத்துக் கிடக்கிறார்கள். அவர்களோடு அதே தெருவில் அதிமுகவினர் சிலரும் காத்திருக்கிறார்கள்.

சில மணி நேரங்களில் கருணாநிதி வெளியே வருகிறார்.

செய்தியாளர்கள் தோல்வி குறித்து கேள்விக் கணைகளை அடுக்குகிறார்கள்.அதற்காகவே காத்திருந்த அதிமுகவினர்

பட்டாசுகளையும் வெடிகளையும் கொளுத்தி ஆர்ப்பரிக்கின்றனர் .அந்தக் குழுவினர் கையில் இனிப்புகளோடு அவரிடம் வந்து வெற்றியை பகிர்ந்து கொள்கின்றனர்..அவரும் புன்னகையோடு வாழ்த்துக்கள் கூறி இனிப்பை எடுத்துக்கொள்கிறார்.இந்தக் காட்சி பல தொலைக்காட்சி கேமராக்களில் பதிவாகி உள்ளது,ஆனால் எதிலும் வெளியாகவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

அண்ணா ஒரு கணக்கு எனக்கு சரியாக புரியவில்லை. இது ஜெனநாயகத்திட்கு கொஞ்சம் புறம்பாக இருக்கிறது.
 
இந்திய சனத்தொகை 100 கோடி 
தமிழக சனத்தொகை  6 கோடி 
 
மொத்த தொகுதி 543.
 
ஜெயலலிதா கட்சி வென்றது 37 தொகுதி எனும்போது. இது 14.6 கோடி மக்களை பிரநித்துவ படுத்துகிறது.
இது மற்றைய மாநிலங்களை விட மத்திக்கு அமைச்சரை கொண்டு செல்லும் தகுதியை தமிழ் நாட்டுக்கு இரட்டிப்பாக்குகிறது.
 
இந்த கணக்கு சரியாக புரியவில்லை.
கொஞ்சம் உதவி செய்வீர்களா ????

 

நீங்கள் இலங்கையின் பாராளுமன்ற மக்கள் விகிதாச்சார கணக்குப்படி இந்த கேள்வியை கேட்கிறீகளெனெ நினைக்கிறேன். சில புள்ளி விபரங்களை பார்த்துவிட்டு சொல்கிறேன் Mr.மருது.

 

10320574_656344214421152_383074454482397

  • கருத்துக்கள உறவுகள்

Manushya Puthiran

8 மணி நேரம் முன்பு ·

பிணம் தின்னிக் கழுகைப் பற்றிகேள்விபட்டிருக்கிறேன். இன்று புதிய தலைமுறையில் அதை ஒரு மணிநேரம் பேட்டி கண்டார்கள்.. அது பேசியதினுடைய சாராம்சமான கருத்து ’கலைஞர் செத்துட்டா தி.மு.கவின் இடத்தை பா.ஜ.க கைப்பற்றிக்கொள்ளலாம்’ என்பதுதான்.கலைஞர் 100வயது வாழ வேண்டும் என்று சொல்லிக்கொண்டே கலைஞர் சாவிற்குப் பிறகு பா.ஜ.க கூட்டணிக்கு என்ன நன்மைகள் விளையும் என்பதை அது நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு பேசியது...எம்.ஜி.ஆர் இறப்புக்குப் பிறகும் அதிமுக எழுச்சி கண்டதே என்று பேட்டியாளர் கேட்கிறார். ’’அது இரட்டை இலை மீதான மோகம்..ஜெயலலிதா கரிஷ்மா உள்ள லீடர்..ஆனா கலைஞர் செத்துட்டா தி.மு.க மண்ணோடு மண்ணா போய்டும்’’ என்று அது திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தது....இரட்டை இலை, கரிஷ்மா எல்லாம் இருந்தும் 96 லும் 2005லும் சட்டசபை தேர்தல்களில் அதிமுக ஏன் தோற்றது எனது குறித்தோ இதற்கு முந்தைய பாராளுமன்றத் தேர்தல்களில் அது ஏன் திமுகவை மிஞ்ச முடியவில்லை என்றோ பிணந்திண்னிக் கழுகிடம் கேட்டிருந்தா அதற்கு என்ன பதில் சொல்லியிருக்கும்?

கலைஞர் சாவிற்காக காத்திருக்கும் அந்தப் பிணந்தின்னிக் கழுகிற்கு இன்னொரு பெயர் உண்டு ...

  • கருத்துக்கள உறவுகள்

10320574_656344214421152_383074454482397

 

சிங்கை போட்டு... நசிக்கிறாங்க.

பாவம்யா... அவரு. :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வைக்கோ விற்கு ராஜ்ய சபா சீட்டு கொடுத்து பா ஜ க அழகு பார்க்குமா இருந்தால் அந்த கட்சி மீது மரியாதை இன்னும் கூடும்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.