Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விழிப்புணர்வில் நாம். . .

Featured Replies

புலம்பெயர் தேசங்களில் இங்கே எமக்கு பல பிரச்சனைகள் உள்ளன வேலை, மொழி, வீடு , சேமிப்பு,பிள்ளைகளின் படிப்பு, பிள்ளைகளின் கல்யாணம் (தகுந்த மணமக்கள் தேடல்), ஆரோக்கியம்,மன அழுத்தங்கள் , புதுப்புது நோய்கள் , ஊரில் உள்ள உறவுகளின் பிரச்சணைகள்............... இப்படி அதன் வடிவங்கள் பல. ஆனால் இங்கே  எமது பிரச்சனையை பற்றி , எமது தேவைகளைப் பற்றி எத்தனை பேர் கதைகிறார்கள்....? எமக்குள் உள்ள மன அழுத்தங்களைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? ஆகவே உறவுகளே நாம் இந்தத்திரியில் பின் வரும் விடயங்கள் பற்றி எழுதலாம் என நினைக்கின்றேன்.
 
நல்ல வேலை ஒன்றை தேடுவத்ற்குரிய வழிகள்/    நுட்பங்கள்
(பெண்களுக்கான) உடல்ரீதியாக கஸ்ட்டம் இல்லாத    வேலைகள்/ பகுதி நேர வேலைகளை தேடுதல்
 
வேலைத்தளங்களில் எமக்கு ஏற்பட்ட பிரச்சனைகள், அதை  நாம் இலகுவாக கையாண்ட அனுபவங்கள்
 
சிறந்த சேமிப்பு வழிமுறைகள்
 
அந்தந்த நாட்டுக்குரிய மொழிகளை இலகுவாக/குறைந்த  கட்டணத்தில் கற்ககூடிய  வழிமுறைகள்
 
பிள்ளைகளின் கல்வி
 
பிள்ளைகள் செய்த தவறுகள் , பிள்ளைகள் செய்யும்  தவறுகளைக் (அறிகுறி) கண்டுபிடித்தல் , அதை நாம் திறமையாக கையாண்ட விதம்
 
நாம் வாழும்  நாடுகளில் உள்ள சென்று பார்பதற்குரிய  அழகிய , ரம்மியமான இடங்கள்.
 
எமது நாடுகளில் வாழும் மற்றய நாட்டு மக்களிடம் இருந்து  நாம் கற்ற நல்ல விடயங்கள்.
 
வைத்தியர்களிடமிருந்து பெற்ற சிறந்த ஆலோசணைகள்
 
நாம் வாழும் நாடுகளில் உள்ள சிறப்பான/ சத்தான/  விரைவக சமைக்கக்கூடிய உணவுகள்.
குழந்தைகள் விரும்பிசாப்பிடக்கூடிய உணவுகள்
 
இப்படி இன்னும் பல விடயங்களில்........
 
நாம் எமது சொந்த அனுபவங்களை அல்லது கேள்விப்பட்ட விடயங்களை , ஆலோசனைகளை  இங்கு எழுதுவோம், இவை நிச்சயம் இன்னொருவருக்கு நல்ல பயனைக் கொடுக்கும்.
சில ஆலோசனைகள் எல்லாருக்கும் பயண்படும், சில குறிப்பிட்ட நாட்டில் உள்ளவருக்கு மட்டும் பயண்படும். எதுவாக இருந்தாலும் எமது அனுபவங்களை எழுதுவோம், அது சின்ன விடயமாக இருந்தாலும் பரவாயில்லலை.
 
நாம் எமக்குள் ஒற்றுமையாக ஆலோசனைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து எமது சமூக, பொருளாதார அந்தஸ்தை உயர்த்துவோம்.
 
 
(நான் இன்னும் எழுத வேண்டி இருப்பதால் , எனக்கு இந்த திரிக்கு பெயரிட நேரமில்லை (பெயரிடுவத்ற்குரிய கற்பனை வளமும் இல்லை) தயவு செய்து யாராவது இத்திரிக்கு பெயரிடுங்களேன்.
நான் எனது பதிவொன்றை நாளை பதிய முயற்சிக்கின்றேன்.)
 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இன்றைய காலகட்டத்திற்கு தேவையான அம்சங்களை அடக்கியுள்ள திரியாக தெரிகின்றது.
"புதிய பாதை" எனும் பெயர்  என் அறிவுக்கெட்டியது. இனி நம் ஜாம்பவான்கள் நவநாகரீக பெயர்களுடன் வந்தால் சந்தோசம். :D
 
உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துக்கள் ஆதவன். :)
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஆதவன்.நல்லதொரு முயற்சி.நம்மைப் போன்றவர்களுக்கு பல விசயங்கள் அறியக் கூடியதாய் இருக்கும்

புதிய பாதை என்று ஒரு இயக்கப் பத்திரிகை வந்த மாதிரி நினைவில் இருக்கிறது, தவறாயும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஆதவன்.நல்லதொரு முயற்சி..........

 

 

1. மனம்  திறந்து பேசலாம்..

.

 

2. வாழ ஒரு வழி ...காண்போம் ..

 

 

3..வாழ்க்கை வழமாக .

 

.4... வாழும் வகை  எப்படி  ...

  • கருத்துக்கள உறவுகள்

அறிந்ததும், அறியாததும்.

 எனது  அனுபவப்   பாதையில்...

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் வாழ்வில் ஏற்படும் பலவற்றை தொட்டுச் சென்று இருக்கிறீர்கள்.

தொடருங்கள்.

 

விழிப்புணர்வில் நாம். . .

நிஜங்களின் வழிகாட்டல்கள்

 

 

 

அறிந்ததும், அறியாததும்.

 

அறிந்ததும் அறியாததும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.  நானும் இத்திரியில் தொடர்ந்து எழுதுகிறேன்.   வேலைப்பளு காரணமாக இப்போதைக்கு என்னால் விரிவாக எழுத முடியாது.  ஆனால், சின்னச் சின்னதாக எழுத முடியும்.  

 

இத்திரி சமூகச்சாளரம் பகுதிக்குள் வந்தால் பொருத்தமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

'தூளி' என்று வைக்கலாம்!

 

தொட்டில் என்றும் பொருள் தரும் இந்த வார்த்தை, சிறுவர்களுக்கான 'வளர்ப்பு முறை' ஆலோசனைகள் பக்கத்திற்குப் பொருத்தமானது!

 

அத்துடன் மற்றும் பிறந்த நாட்டின் சிறப்புக்களையும் 'சுமந்து வர இருப்பதால்', தூளி என்பது பிறந்து வளர்ந்த இடம் என்றும் பொருள் படலாம்! :lol:  

  • கருத்துக்கள உறவுகள்

----

*வைத்தியர்களிடமிருந்து பெற்ற சிறந்த ஆலோசணைகள்
-----

 

ஆதவன் நல்லதொரு முயற்சி.

முடியுமானால்.... பலரும் தமக்கு தெரியாமல்,

மன அழுத்தம் (டிபிரேஷன்) பற்றி பாதிக்கப் பட்டவர்கள் எடுக்கும் மருத்துவ முறைகள்,

அது ஒருவரை ஆட்கொள்ளும் போது முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியவை,

எந்த வைத்தியரிடம் சிறந்த ஆலோசனை பெறலாம்,

இதனை கவனிக்காமல் விட்டால்.... ஏற்படும் விளைவுகள்,

இது ஒருவருக்கு ஏற்பட்டிருப்பதை.... எப்படி கண்டு பிடிப்பது போன்ற.....‌

விடயங்கள் பற்றிய தகவல்களை... பகிரும் படி கேட்டுக் கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"வளமான வாழ்வுக்கு வழிகாட்டி" எனற பொருள்பட "வளவாழ்வு" என்பது பொருத்தமாக அமையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை விடயங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்தனி திரிகளிக் அலச வேண்டியதாயிற்றே ஆதவன். முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 " அறிவோம் ஆயிரம்"

ஒருவழிப்பாதை .

நிலாப் பாட்டி என்று வைக்கலாம்.

நாங்கள் சின்ன வயசிலே இருந்தே நிலவை காட்டி, அங்கெ இருக்கும் பாட்டியை காட்டி தான் எத்தனையோ விடயங்களை எங்களுக்கு ஊட்டி இருக்கிறார்கள். அதனாலே நிலாப்பாட்டி என்ற தலைப்பு பொருந்தும் என்று நினைக்கிறேன்.

அல்லது அட்சயபாத்திரம் என்றும் வைக்கலாம். அள்ள அள்ள குறையாத கேட்பதை எல்லாம் தரும் பாத்திரம்.



சரி சட்டு புட்டு என்று ஒரு தலைப்பை வைத்து விடயத்தை தொடங்குங்கோ..

  • தொடங்கியவர்

SterilisationsassistentIn (Sterilization assistant)

 

 

நான் எனது மனைவிக்கு வேலை தேடும் போது (சுவிஸ் நாட்டில்) "SterilisationsassistentIn - Fachkunde" (zsva )எனும்  ஒரு துறை சம்மந்தமாக அறிந்தேன். இத்துறை என்னை மிகவும் கவர்ந்திருந்தமையினால் இது சம்மந்தமாக நான் அறிந்தவற்றை , உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 

„SterilisationsassistentIn“  அவர்களின் வேலை என்ன?

 

வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தும்  கருவிகளை  கிருமிநீக்கம் செய்து, மீண்டும் அவற்றை பயண்படுத்துவதற்கு தயார் செய்தல்.

 

இத்துறையில் உள்ள அனுகூலங்கள்.

 

·         உடல் ரீதியாக மிகவும் இலகுவான வேலை

·         மிகவும் கேள்வி உள்ள ஒரு துறை.

·         ஆர‌ம்ப மாதப் சம்பளமே 4500 - 5000 CHF

·         வைத்தியசாலைகளில் வேலை என்பதனால் பயமற்ற எதிகாலம், சிற‌ப்பான சலுகைகள்

·         மேலும் படித்து அடுத்தடுத்த பணிநிலைகளுக்கு உயரலாம்

·         மிக குறுகிய காலத்தில் இத்துறை சார் கல்வியைக் கற்றுக்கொள்ளலாம்    (2வாரம் பாடசாலை + 150 மணித்தியாலம் செய்முறை)

 

·   கற்பது இலகு, கற்றலின் முடிவுப்பரீட்சை இலகுவானது [கேள்விகளின் கீழ்    தரப்பட்டிருக்கும் நான்கு விடைகளில் சரியானதின் கீழ் கோடிடல்(MCQ)]

 

· வைத்தியசாலைகளில் வேலை என்ற படியால்  20% - 100% வரை செய்யலாம். பிள்ளைகள் உள்ள குடும்ப்ப் பெண்களுக்கு ஏற்றது.

 

இந்த வேலையை கற்பதற்கு நீங்கள் இரண்டு வாரம்  அதற்குரிய பாடசாலைக்கு செல்ல  வேண்டும், 150 (4வாரங்கள் )மணித்துயாலங்கள் வைத்தியசாலை ஒன்றில் செய்முறை செய்யவேண்டும்.

 

இத் துறையில் படிப்பதற்கு என்ன தகுதி வேண்டும்?

 

ஏதாவது மருத்துவத்துறை  சம்மந்தமான வேலைகள் அல்லது, மருத்துவத்துறை தொடர்புடைய தொழிற்சாலைகளில் வேலை செய்திருக்க வேண்டும். இந்த தகுதி இல்லாதவர்கள்.  zsva உள்ள ஒரு வைத்தியசாலையில்  ஒரு Schnupperzeit (tag)க்கு விண்ணப்பித்து , ஒரு நாள் அவர்கள் செய்யும் வேலையை பார்த்து அறிய வேண்டும், அதன் பின்னர் அவர்களிடம் praktikum க்கு விண்னப்பிக்க வேண்டும். அதன் பின்னர் நீங்கள் பாடசாலைக்கு விண்ணப்பிக்கவேண்டும்

 

இங்கே சுவிசில் இத்துறை சார்ந்த கல்வியை  Aarau இல் மட்டுமே படிக்கலாம், ஒரு மாததிற்கு 2 அல்லது 3 நாட்கள் படி 4 அல்லது 5 மாதங்களில் படித்து விடலாம்.

 

Deutschland இல் இரண்டு வாரத்தில் ஒரே தடவையில் படித்து விடலாம், வசதி உள்ளவர்கள்  deutschland  சென்று படித்து விட்டு இங்கே (சுவிசில்) வந்து praktikum  செய்து விட்டு பணியில் சேரலாம்

 

பின் வருவோர் இத்தொழில் துறைக்கு முயற்சிக்கலாம். என்பது எனது அபிப்பிராயம்

 

·         உடல் ரீதியாக கஸ்ட்டம் இல்லாமல் இலகுவான வேலை செய்ய விரும்புவோர்

·         புதிதாக திருமணம் முடித்து புலம் பெயர் நாடுகளில் வந்து மொழி கல்வியை          கற்றுக்கொண்டிருக்கும் பெண்கள்,

·         இங்கே பிறந்து வளர்ந்து இடையில் படிப்பை குழப்பிவிட்டு கடைகளிலும், தொழிற்சாலைகளிலும் வேலை செய்து கொண்டிருக்கும் பிள்ளைகள்.

·         Deutschland இருந்து சுவிசில் வேலை தேடுபவர்கள்.

 

இத் துறைசார் கல்வியை கற்கக்கூடிய இடங்கள்

 

(மேலதிக விபரம் தேவைப்படின் இவர்களுடன் மெயிலில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுங்கள்)

சுவிசில்

http://www.hplus-bildung.ch/bildung/categorieview/medizintechnik

 

deutschland இல்

http://www.dgsv-ev.de/conpresso/karte/index.php?rubric=Ausbildungsorte

https://germany.aesculap-academy.com/go/?action=AkadSearchResultList

 

SterilisationsassistentIn  வேலைத்தளமொன்றின் காணொளி இணைப்பு

https://www.youtube.com/watch?v=H9od3Se7Fk8$

 

 

 

இது சம்மந்தமாக google இல்தேட விரும்புவர்கள்  கீழ்வரும்  சொல்லைப் பாவிக்கலாம்.

Techn. SterilisationsassistentIn - Fachkunde I

 

 „SterilisationsassistentIn“  எனக் கொடுத்து  google translate இல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த போது பின்வருமாறு வந்தது  Sterilization assistant.

 

ஏனைய நாடுகளில் உள்ளவர்களும் உங்களது மொழியில் மொழி பெயர்த்து google  இல் தேடிப்பார்க்கலாம்

 

உங்களின் முயற்சிகள் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்

 

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடித்த ஒரு தலைப்பு " கற்றுக்கொண்டால் குற்றம் இல்லை" ..

எதையும் அறிந்து கொள்வதில் தவறில்லை தானே... :rolleyes: 

  • கருத்துக்கள உறவுகள்

"தேடலும் அதனூடான வெற்றிகளும்" என்பது பொருந்துமா?

  • தொடங்கியவர்

சிக்கனமாக வாகனம் ஓட்டல் 

 

சுவிசில் வாகன சாரதி அனுமதிப் பத்திரம் எடுத்தன் பின்பு , இரண்டு வகுப்புகளுக்கு(தலா ஒரு நாள்) செல்ல வேண்டும் (wab kurse)  அங்கே முதல் வகுப்பில்  பாதுகாப்பாக வாகனம் ஒடுதல், விபத்துக்களை தவிர்ப்பது சம்மந்தமாக சொல்லித்தருவார்கள்

 

இர‌ண்டாவது வகுப்பில் சிக்கன‌மாக வாகன ஒடுதல் (எரிபொருள் சேமிப்பு) சம்மந்தமாக சொல்லித்தருவார்கள். இர‌ண்டாவது வகுப்பின் போது நாம் அவர்களது காரில் ஒரு குறிப்பிட்ட தூரத்தை ஒட வேண்டும், பின்னர் அதே தூரத்தினை நாம் expert சொல்லும் முறைப்படி ஒட வேண்டும். இறுதியில் காரில்  பொருத்தப்ட்டிருக்கும் கணணி expert இன் முறைப்படி ஓடிய போது எத்தனை வீதம் எரிபொருளை நாம் சேமித்தோம் என கணித்துக் காண்பிக்கும். (நான் 22% சேமித்தேன்).

அதன் பின்னர் வகுப்பில்  எவ்வாறு எரிபொருளை சேமிக்கலாம் , அதன் நுட்பங்களை கற்பிப்பார்கள் , அங்கே கற்றவற்றை நான் உங்களுடன்  பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் பின்பற்றி பணத்தைச் சேமியுங்கள்.

 

உங்கள் வாகன ரயரின் காற்றழுத்தத்தினை கவனியுங்கள்.

 

ரயரின் அங்கிகரிக்கப்பட்ட காற்றழுத்தத்தினை (ரயரில் எழுதப்பட்டிருக்கும் அல்லது கராஜ்ஜில் கேளுங்கள்)விட 0.2 Bar அதிகமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு 0.2 Bar காற்றழுத்தம் குறையும் போதும் 10%வரையிலான எரிபொருள் இழப்பு எற்படும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள். மாதத்திற்கு ஒரு முறை கட்டாயம் check பண்ணுங்கள், நீண்ட தூர பயணத்திற்கு முன், அதிக சுமை ஏற்றும் சமயங்களில் கட்டாயமாக காற்றழுத்தத்தினை கவனியுங்கள்.

 

Accelerator இலிருந்து காலை எடுங்கள் எரிபொருளை சேமியுங்கள்

 

நீங்கள் பயணிக்கும் வீதியில் சிக்னலில் சிகப்பு ஒளிர்வதனை தொலைவிலேயே கண்டுவிட்டீர்கள், உடனே Accelerator  இலிருந்து காலை எடுங்கள் , சிக்னலின் அருகே செல்லும் வரை  accelerator  அமத்திவிட்டு பின்னர் பிரேக் பிடிப்பதனால் அதிகளவு எரிபொருளை நுகர்கின்றீர்கள்.

 

நீங்கள் 80 km/h வேகத்தில் செல்கிறீர்கள் தொலைவில் 50 km/hக்கு வேகம் குறைக்கப்படுவதைக் காண்கிறீர்கள், உடணடியாக accelerator இலிருந்து காலை எடுங்கள். 50 km/h சைகைக்கு அருகில் சென்று பிரேக் பிடித்து , வேகத்தினைக் குறைக்காமல், ஆரம்பத்திலேயே accelerator இலிருந்து காலை எடுப்பதன் மூலம் வேகத்தினைக் குறையுங்கள்.

இதே போல் தான் roundabout இலும் - roundaboutஇனைக் கண்டவுடன் காலை எடுங்கள்

இதே போல் தான் வீதிகளிலிருந்து திரும்பும் போதும், திரும்ப வேண்டிய இடம் வரும் வரை accelerator  இனை மிதித்து விட்டு பின்னர்  பிரேக் பிடித்து திருப்புவதைத் தவிர்த்து, முன்னரே accelerator இலிருந்து காலை எடுத்து படிப் படியாக வேகத்தைக் குறைத்து தேவை ஏற்படின் சிறிது பிரேக் பிடித்து, அளவான வேகம் எனில் ப்ரெஅக் பிடிக்காமலே திருப்புங்கள்.

 

கூடியளவு விரைவாக கியரைக் கூட்டுங்கள்.

 

மிக விரவாக கியரை உயர் எண்ணிக்கக்கு மாற்றச் சொல்கிறார்கள்.

காரை start செய்து உருளத்தொட்ஙியதும் 2 ஆவ்து கியருக்கு மாற்றச் சொல்கிறார்கள், 25 -30  km/h  இல் 3 ஆவதிற்கு மாற்றச் சொல்கிறார்கள். 40km/h ஐத் தாண்ட 3 இலிருந்து ஒரேயடியாக 5 ஆவதிற்கு மாற்றச் சொல்கிறார்கள்.சில கார்கள் இழுக்க கஸ்ட்டப் பட்டால் 4 ஆவதுக்கு மாற்றி 50km/h ஐத் தாண்ட 5 ஆவதிற்கு மாற்றச் சொல்கிறார்கள்.

 

கியரை கூட்ட  முன் நன்கு ரேஸ் செய்யும் பழக்கதை கைவிட சொல்கிறார்கள். ரேஸ் செய்யாமலே கியரை கூட்டுங்கள்(மாற்றுங்கள்)

 

தேவையற்ற பொருட்களை அகற்றுங்கள்

 

உங்கள் வாகனத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுங்கள்.

நிறை அதிகரிக்க எரிபொருள் நுகர்வும் கூடும்.

 

புகையிர‌த கடவையில் மற்றும் என்றில்லாமல், சிக்னல்கலிலும் மோட்டாரை  நிறுத்துங்கள்.

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல்கள்..! நன்றி ஆதவன்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

வருடாந்த மருத்துவ பரிசோதனை (Jahres kontrolle/ Annual health exam )

 

இங்கே சுவிசில் பலர் ஒவ்வொரு வருடமும் ம‌ருத்துவ பரிசோதனை செய்து கொள்வார்கள். நானும் இரண்டு தடவை செய்துள்ளேன். இறுதியாக 2 வருடங்களிற்கு முதல் செய்திருந்தேன். இரண்டு முறையும் மருத்துவ அறிக்கை ok யாக இருந்தது. அண்மையில் 40 வயதினை அடைந்திருந்தேன், 40 வயதின் பின்னர் ஒவ்வொரு வருடமும் Jahres kontroll செய்யுங்கள் என மணைவி சொல்லிக்க் கொண்டே இருந்தா,

 

போன வாரம் மருத்துவ பரிசோதணை செய்திருந்தேன்.

 

இதற்கு 2 நாட்கள் termin/ appointment  தருவார்கள் முதலாவது Termin இல் காலையில் (ஒன்றும் சாப்பிடாமல் வரச் சொல்லுவார்கள் ) சென்று குருதி (ஐந்தாறு tubeகளில் எடுப்பார்கள்) , சிறுநீர் கொடுக்க வேண்டும். பின்னர் அவர்களதணை lab இற்கு அனுப்புவார்கள், அத்துடன் வைத்தியர்  உடற்பரிசோதனை செய்வார் , இரண்டாவது Termin 4, 5 நாட்கள் கழித்து தருவார்கள் , lab இல் இருந்து வந்த report தொடரர்பாக வைத்தியருடன் கதைப்பதாக இரண்டாவது termin அமையும்.

 

இரண்டாவது Terminஇன் போது வைத்தியர் எனது blood report இணைப் பார்த்து விட்டு என்னை ஒரு வினேதப் பார்வை பார்த்தார் பின்னர் , உங்கள் உடலில் vitamin D மிக மிகக் குறைந்தளவில் தான் இருக்கிறது என்றார்.

உடனடியாக எனக்கு vitamin D ஊசி போட்டார்,  2 மாதத்திற்கு தேவையான vitamin D Tropfen (Drops) தந்தார். கொலஸ்ரோலும் சற்றுக் கூடியிருந்தது. vitamin D குறைந்தால் எலும்புகள் பலவீனம் அடையும், தசைகளிலும் மாற்றம் ஏற்படும். மிக மிக மிக அரிதாக புற்று நோய் ஏற்படக்கூடிய சாத்தியம் கூட உண்டு என்றார்.

 

இந்த 2 வருடங்களில் எனது வாழ்க்கை முறையில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை(ஒரெயொரு மாற்றம் 2 வயதுகள் கூடியிருந்தது) இருந்தும் vitamin D மிகக் குறைந்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

 

இலங்கையர்கள் பொதுவாக உடல் நலத்தில் அக்கறை குறைவு , sports செய்வது குறைவு, அவர்களது உணவு முறையும் சிறப்பானதாக இல்லை என்றார். சுவிசில் மாரடைப்பு ஏற்படும் வீதம், மற்றய இனத்தவருடன் ஒப்பிடும் போது   இலங்கையர் மற்றும் இந்தியர்களுக்கு மிக அதிகம் என்றார். ஒவ்வொரு வருடமும் மருத்துவ பரிசோதனை (Jahres kontrolle) செய்து கொள்ளச் சொன்னார்.

 

உண்மயில் எனது வைத்தியர் கூறியதணைத்தும் உண்மையே, நாம் எமது உடல் நலத்தில் அக்கறை குறைவு .

நாம் ஒவ்வொரு வருடமும் எமது குடும்ப வைத்தியரிடம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளல் வேண்டும். இதே போல் பெண்களும் ஒவ்வொரு வருடமும் குடும்ப வைத்தியரிடமும்,  குழந்தை மகப்பேறு/பெண்கள்  வைத்திய நிபுணர் ( Frauenarzt/ Gynecologist)  இடமும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளல் வேண்டும்.

(இங்கே சுவிஸ்காரர் பொதுவாக‌ இப்படி தான் செய்கிறார்கள்)

(நாம் சீராக sports செய்து, உணவுப் பழக்கங்களில் கட்டுப்பாடாக இருந்தால் 2,3 வருடங்களிற்கு ஒரு முறை செய்யலாம் அல்லது வைத்தியரின் ஆலோசணைப்படி செய்யலாம்)

 

நான் இப்போது எனது மற்றும் மனைவியின் குடும்ப வைத்தியரிடமும், மனைவியின் குழந்தை மகப்பேறு / பெண்கள் வைத்திய நிபுணர் (Frauenarzt / Gynecologist) இடமும் எமது பெயரினை வருடாந்த மருத்துவ பரிசோதனைக்காக பதிந்து வைத்துள்ளேன். அவர்கள் ஒவ்வொரு வருடமும் எமக்கு தொலைபேசி செய்து ஞாபகப் படுத்துவார்கள் (Termin (appointment) வைப்பார்கள்.)

 

 

நாம் எமது காரை ஒவ்வொரு வருடமும் service க்கு விடுவோம் ஒவ்வொரு10000 km க்கும் service க்கு விடுவோம். ஆணால் எமக்காக ஒவ்வொரு செக்கணும் இயங்கும் உடலைக் கவனிக்க‌ மாட்டோம்.

 

"நான் என்ர உடம்பில அக்கறை இல்லை"எனும் கூற்றை விட முட்டாள் தனமான கூற்று ஒன்று உலகில் உண்டா?

 

எதையும் வருமுன் காப்போம்!

 

நாம் எமது உடலை நேசிப்போம் , எமக்காக இல்லாவிடினும் எம்மைச் சார்ந்து உள்ள எமது குடும்பத்தினருக்காகவாவது.

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஆதவன்

  • கருத்துக்கள உறவுகள்
நல்லதொரு திரி ஆதவன்மூலம் பிரகாசிக்கிறது. தொடருங்கள்.
 
இத்திரியிலிருந்து ' இன்பத்தின் இரகசியங்கள் ' வெளிப்படுகின்றன. 
 
  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள திரி.தொடருங்கள் ஆதவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.