Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள திரைப்பட இயக்குனரைப் புகழ்ந்து பேசிய கவிஞர் ஜெயபாலன் தமிழ் உணர்வாளர்களால் நையப்புடைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

'With You, Without You'

A; Drama

Director: Prasanna Vithanage

Cast: Anjali Patil, Shyam Fernando

Rating: 3-half-stars.gif

Heartbreaking and beautifully tragic, Sri Lankan filmmaker Prasanna Vithanage’s With You Without You is evidence of a cinematic intelligence and the choice of form over script. While we might expect that Vithanage, already an acclaimed filmmaker in his come country, to make a good film, this is a film that stands out in the sad and depressing gamut of desi films.

With-You-Without-You.jpg

A still from 'With You, Without You'

Anjali Patil in her breakthrough role stars as Selvi, a young rural girl who gets married to a pawn shop owner, Sarathsiri (played by a somber Shyam Fernando). Right from the first frame of the film, we’re convinced that this is a film about doomed love. So when the two characters fall in love, we know what to expect in the end. And yet the film is an interesting watch because of the way Vithanage handles the material.

Atmosphere is the key here, as is the sensitive, subdued acting and direction. The reason for the big crack in the marriage between the two is devastating beyond belief, but Vithanage chooses subtlety to delve into the characters and tell his story. Again, anyone familiar with LTTE and Lankan political skirmishes can guess the conflict between the two characters, and the same conflict has been used before in cinema. With You Without You, however transcends the clichés because it does not rest on simple solutions and easy answers. The strength of the film rests on the fact that its themes are relevant no matter which country or time the characters are from.

Patil, a newcomer, portrays the paradoxes of her character skillfully and it is great to experience her grasp of such sensitive material. The turmoil of being married to someone whom you can’t help but hate is a difficult emotion to render, and both Patil and Fernando pull it off. Both characters, to some degree, are creatures of folly, who are liable to self-loathing. Director Vithanage resists the temptation to pump tacky melodramatic emotional uplift into the film’s austere atmosphere. In the end, you have to deal with the fact that sometimes letting go is the only solution for a complicated relationship — things don’t get easier or better defined. With You Without You is a lacerating movie to remind you of the same. It’s a tough movie to watch, but it sure is impossible to forget.

- See more at: http://www.mid-day.com/articles/movie-review-with-you-without-you/15394161#sthash.H05rMHMl.dpuf

  • Replies 81
  • Views 7.1k
  • Created
  • Last Reply

இதுக்கு பச்சை

அதே தன்னுடைய  இனத்தில் ஒருத்தில கொள்கையில் விடாப்பிடியாக .இருந்தால்  அவன் முட்டாள்......??? :(  :(  :(

மற்றவனை பலி கொடுத்துவிட்டு தான் வெள்ளைகொடி பிடிக்கவில்லை சதாம் .

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் உங்கள் புலி எதிர்ப்பு வன்மத்தை, காழ்ப்பு உணர்ச்சியை நன்றாகவே வெளிப்படுத்துகிறீர்கள்.
எதோ உங்களுக்கு ஒரு அற்ப சந்தோசம் கிடைக்குதாக்கும் ..தொடருங்கள் :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொண்ட கொள்கை மாறாமல் தூக்கு மேடையிலும் அமெரிக்கனை திட்டித்தீர்த்த தியாகி.. :D

 

 அர்த்தங்கள் மாறிவிடக்கூடாது எனும் ரீதியில்......எனது இந்த கருத்திற்கு மனமுவர்ந்து பச்சை வழங்கிய அன்பு உறவிடம்...அதனை திருப்ப பெறுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். நன்றி  :)  

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரை நினைச்சா பாவமாகிடக்கு.

பிரபல்யம் என்ற ஒன்றுக்காக எவ்வளவு கஸ்டபட்வேண்டிக்கிடக்கு.

இலங்கையில மாங்குளத்துக்கு போய் பராக்கு பார்த்து கொண்டிருந்த ஆமிக்காரனுக்கு முன்னால் பஞ் டயலாக் பேசி ஒரு செண்டிமெண்ட் சீன்.

பின் திரும்பி வந்து தற்புகழ்சி அறிக்கை விட்டு ரெண்டு செம காமெடி சீன்.

இப்ப இது. சண்டைக் காட்சி.

அடுத்தது கிளைமாக்ஸ்தான்.

தாகூரும் தாடிதான் ராப்பிச்சைகாரனும் தாடிதான்.

இவர் ஒரு பக்கா வேடதாரி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தில் அப்படி என்ன இருக்குது என்று எதிராக போராட வெளிக்கிட்டவை? வர,வர எதற்கு போராடுவது என்று ஒரு விவஸ்தை இல்லாமல் போயிட்டுது

மற்றவனை பலி கொடுத்துவிட்டு தான் வெள்ளைகொடி பிடிக்கவில்லை சதாம் .

இந்த கருத்தை நானும் கண்டிக்கிறேன்.அர்ஜீன் அண்ணா உணர்ச்சி வசப்பட்டு இங்குள்ளவர்கள் மேல் உள்ள கோபத்தில் இப்படி கேவலமாக பொய் எழுதக் கூடாது.

கவிஞரை நினைச்சா பாவமாகிடக்கு.

பிரபல்யம் என்ற ஒன்றுக்காக எவ்வளவு கஸ்டபட்வேண்டிக்கிடக்கு.

இலங்கையில மாங்குளத்துக்கு போய் பராக்கு பார்த்து கொண்டிருந்த ஆமிக்காரனுக்கு முன்னால் பஞ் டயலாக் பேசி ஒரு செண்டிமெண்ட் சீன்.

பின் திரும்பி வந்து தற்புகழ்சி அறிக்கை விட்டு ரெண்டு செம காமெடி சீன்.

இப்ப இது. சண்டைக் காட்சி.

அடுத்தது கிளைமாக்ஸ்தான்.

தாகூரும் தாடிதான் ராப்பிச்சைகாரனும் தாடிதான்.

இவர் ஒரு பக்கா வேடதாரி.

உங்கள் கருத்து உண்மையும் தான் பொய்யும் தான் .

முன்னரும் பதிவிட்ட விடயம் தான் இருந்தும் எழுத வேண்டி இருக்கு .லண்டனால் போய் புளொட்டில் எவரையும் சந்திக்காத நிலையில் MLA HOSTEL இல் இருந்து என்னை கூட்டிகொண்டுபோய் கேள்வி மேல் கேள்வி கேட்டார் .எல்லாமே புலம்பெயர்தர்கள் பற்றித்தான் ,பின்னர் டெல்கி சந்திப்பு ,மரீனா பீச் சந்திப்பு ,புளொட்டின் பாடசாலை வகுப்பு ,கனடா சந்திப்பு என்று தொடர்ந்தது .இன்றுவரை அவருக்கு என்னை தெரியாது .அதுதான் ஜெயபாலன் .

உண்மையான மனிதர் ஆனால் அடாவடியும் அத்துமீறலும் தான் தான் என்ற அகங்காரமும் தான் அவரின் இருப்பு .அதைவிட விட நடிப்பு அவருக்கு கை வந்த கலை.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவனை பலி கொடுத்துவிட்டு தான் வெள்ளைகொடி பிடிக்கவில்லை சதாம் .

 

ஊரிலே களவெடுத்து இந்தியாவுக்கு சாப்பிட காசு அனுப்பியதும் அதற்கு போத்தலும் சிகரட்டும் கொத்து பராட்டாவும் வாங்கி கொண்டு ஒரு தாடியும் வைத்து சுருள் சுருளாக புகை விட்டு மாக்சிசம் பேசி விடுதலை பற்றி கதைக்கும் அர்ஜுன் போன்றவர்களுக்கு  இப்படியான வரிகளை எழுதுவதில் ஆச்சரியமில்லை. அவரின் அரசியல் அறிவு பற்றி சொல்ல வேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
புதன், ஜூன் 25, 2014 - 16:33 மணி தமிழீழம் | வேந்தன்

சிங்கள திரைப்படமும் அதன் பின்னிருக்கும் NGO அரசியலும்....

 

தமிழ் ஸ்டுடியோ என்னும் நிறுவனத்தால் with you,with out you (பிறகு) என்கிற இந்த சிங்கள படம் பிரத்யேக காட்சியாக தமிழ்ப் பார்வையாளர்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது.

with%20you,with%20out%20you%20%20(1).JPG
இந்த படம் திரையிடும் முன்பே இணையங்களிலும் பொது ஊடக தளங்களிலும் தமிழ் உணர்வாளர்கள் எதிர்க்கிறார்கள் என்கிற திட்டமிட்ட பரப்புரையும் அதற்கு எதிரான கருத்துக்களுமாக முளைத்து அதன் ஒரு பகுதியாக திரையரங்கு நிரம்பி வழிந்தது..பொதுவாக உலக வரிசைத் திரைப்படங்கள் என்கிற இந்த வகைப்படங்கள் திரைப்பட விழாக்கள் மற்றும்,திரைப்பட இயக்கங்கள் மொத்தமாக திரையிடல் என்னும் பாணியை தவிர்த்து பொது அரங்கில் இப்படி திட்டமிட்டு பெரும் பொருட்செலவுடன் திரையிடப்படுவதில்லை..ஆனால் திரையிடப்பட்டது..அதுவும் தமிழ் ஸ்டுடியோ நிறுவனர் 22 மணி நேரங்களில் திட்டமிட்டது என்றார்..இவை எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்..

with%20you,with%20out%20you%20%20(2).JPG
டம் பார்க்க பெரும்பாலான அமைப்புகளும் வந்திருந்தன.. படத்தின் சாராம்சம் இதுதான். அகதியாக ஒரு யாழ்ப்பாண பெண் ,மலையக மக்கள் வாழும் பகுதியில் வசிக்கிறாள் ..ஒரு சிங்கள இராணுவ வீரன் நகை அடகுக் கடை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறான்.அந்த அடகுக் கடைக்கு அடிக்கடி நகை வைக்க வரும் பெண்ணின் சோகம் நிரம்பிய வலிகளைத் தாண்டி ,அவளது கண்களும்,உதடுகளும் அந்த இராணுவ வீரனை கவர்கிறது.அவளது துயர்மிக்க வாழ்வில் ஏற்படும் நெருக்கடிகளை பயன்படுத்தியும் அவள் மீது படரும் மெலிய காதல் உணர்வாலும் தூண்டப்பட்டு அவளை திருமணம் செய்து கொள்கிறான்.
with%20you,with%20out%20you%20%20(3).JPG
திருமணத்திற்கு பிறகுதான் அந்த பெண்ணிற்கு தான் திருமணம் செய்திருப்பது தனது இனத்தையே அழித்த சிங்கள இராணுவ வீரர்களில் அவனும் ஒருவன் என்கிற உண்மை தெரிகிறது.இராணுவம் தன் குடும்பம் மற்றும் மக்களை கொன்ற,பாலியல் வன்புணர்வுகள் அனைத்தும் அவள் மனபிம்பங்களில் இருந்து அழியாத ஓவியமாக அவள் நினைவுகளை கொன்று கொண்டிருக்க,அவனை வெறுக்கத் துவங்குகிறாள்.ஆனால் அந்த இராணுவ வீரன் அவளின் நிலையை புரிந்து கொள்கிறான்.இராணுவ வீரனாக தானும் தனது சக படையினரும் செய்த அட்டுழியங்களின் பிரதிநிதியாக மன்னிப்பு கோருகிறான் ..ஒரு கட்டத்தில் அவளை இந்தியாவிற்கு அனுப்புவதன் மூலம் தன் தவறுகளுக்கான விடுதலையாகவும் நினைக்கிறான்..அவனின் மனநிலையை புரிந்து கொள்கிறாள் ..ஆனாலும் அவள் தற்கொலை செய்து கொள்கிறாள்.

with%20you,with%20out%20you%20%20(4).JPG
மேலோட்டமாக காணும் பொழுது ஆகசிறந்த மாந்த நேயமிக்க கலைப்படைப்பாகத் தோற்றம் பெரும் இச் சினிமா கோரும் உள்ளடக்கமானது ..போரும் போருக்கு பிந்தைய நீதியற்ற வாழ்வில் சிதைக்கப்பட்ட தமிழர்களிடம் ஒரு சமரசத்தையும் சமாதானத்தையும் வலியுறுத்தி முடிகிறது. இப்படத்தின் இயக்குனர் பிரசன்னா விதானகே பொதுவில் ஒரு இடது சாரி சிந்தனையாளர் ...அவரின் திரைப்படங்கள் சிங்களர்களின் ஆதிக்கத்தையும் சேர்ந்து வாழ்தலையும் வலியுறுத்தியபடியே இருக்கின்றன.இப்படத்திலும் பல நுட்பமான காட்சிகள் வைக்கப்பட்டிருக்கின்றன.அதி உன்னத கலைப்படைப்பாக தோற்றம் பெரும் வகையில் ,அடகு நகைகள்,புத்தர் சிலை,கதை நாயகி பயன்படுத்தும் செப மாலை,மற்றும் பெட்டிக்குள் வைக்கப்பட்ட துப்பாக்கி ..இவைகளின் வழியே பல கதைகள் சொல்லப்படுகின்றன..ஆனால் சிங்கள பகுதியில் காட்டப்படும் மலையக மக்கள் குறித்த பெரும் பிம்பங்கள் ஏதுமில்லை.சாளரம் வழியே ஊடுரும் வனப்பு மிக்க மலைகளும்,விஜய் பட பாடல்களால் சமூகம் சுதந்திரத் தன்மையுடனும் இயல்பாகவும் இருப்பது போன்றான காட்சியமைப்புகளின் மூலம் படம் எதை உறுதி செய்கிறது என்பதை பார்வையாளர்கள் உணர்ந்து கொள்ளலாம்.

with%20you,with%20out%20you%20%20(5).JPG
படம் திரையிடப்பட்டு கேள்வி எழுப்பப்படும் பொழுது பிரசன்னா விதானகே பதில் கொடுக்க தயாராக இருந்தார்.அது அமைதியான ஒரு சூழலாகவே முடிந்திருக்க வேண்டிய வாய்ப்பு இருந்தது. படம் எங்கு நடக்கிறது என்கிற கேள்வியும்,தமிழ்ப் பாடல்கள் மட்டுமே இடம் பெரும் காரணம் என்கிற கேள்விக்கும் கவிஞர் ஜெயபாலன் முன்வந்து பதில் கொடுக்க துவங்கியதிலிருந்து அவ்விடத்தின் தன்மை மாறுபட்டது.. ஏன் தமிழ்ப் பாடல்கள் இடம் பெறுகின்றன என்கிற கேள்விக்கு..அது சிங்கள பகுதியில் வசிக்கும் மலையக மக்களின் பகுதி என்கிறார்.மலையாக மக்கள் சிங்கள பகுதியில் அவ்வளவு சுதந்திரமாகவா இருக்கிறார்கள்..சிங்கள பாடல்கள் கட்டுப்படுத்தப்பட்டு தமிழர்கள் வாழும் பகுதியில் தமிழ்ப் பாடல்கள் தான் ஒலிக்க வேண்டும் என்கிற சிங்கள சட்டம் ஏதேனும் இருக்கிறதா எனத் தெரிய வில்லை...?

with%20you,with%20out%20you%20%20(6).JPG
மே 17 இயக்கத் அருள் எழுந்து "தெற்காசிய முழுக்க ஒரு இன்டலக்சுவல் கூட கொல்லப்பட்ட ஈழ மக்களுக்கு நீதி கோரி நிற்க வில்லை,படைப்புகளை உருவாக்கியதில்லை,காத்திரமாக போராட முன்வந்ததில்லை,கள்ள மௌனத்தோடு பெரும் அமைதி காட்டினார்கள் ...ஆனால் போருக்கு பிந்தைய இந்த காலத்தில் சிங்களரின் தவறை(கொடும்பாதக செயல்களை ) மன்னித்து இணைந்து வாழும் படியான படைப்புகளையும் செயல்படுத்துவதும் எழுதுவதும் எமது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றார்..அமெரிக்கா போன்ற நாடுகள் விரிவாதிக்கம் செய்ய படுகொலைகளை நிகழ்த்தி விட்டு கடைசியாக படைப்புகளின் வழியே சிறு தவறுகள் செய்தது போல காட்டும் உத்தியே தாங்களும் செய்வது,படுகொலைகளை குறித்து படம் செய்தது உண்டா " என கேள்வி எழுப்ப, தமிழ் ஸ்டுடியோ அருண் இது பொலிடிகல் மீட்டிங் அல்ல என்றார்... கலகம் சார்பில் பேசிய கீரா "சினிமா என்பது அரசியல் இல்லாமல் வேறன்ன ..? பொலிடிகல் மீட்டிங் இல்லையென்றால் எல்லோரையும் அழைத்து படம் காட்ட வேண்டிய அவசியம் என்ன என்றார்...?" அதன் பிறகு சுழல் இன்னும் கடுந்தன்மைக்கு மாறியது..பலர் எழுந்து கேள்வி எழுப்பத் துவங்கினர்..பத்திரிக்கையாளர் செந்தில்குமார் மற்றும் வ.கௌதமனின் கேள்விகளுக்கு பிரசாந்த விதானகே அளித்த பதில் போதுமானதாக இல்லை...அதற்குள் ஜெயபாலன் கடுமையாக எழுந்து பேச துவங்க...நாம் வெளியேறினோம்..

with%20you,with%20out%20you%20%20(7).JPG
கிட்டத்தட்ட இந்த படம் திட்டமிட்டு போடப்பட்ட சூழலும் ,அதிக பார்வையாளர்களை உருவாக்க கையாண்ட முன்பின் உத்திகளும்,ஒரு ngo ஏற்படுத்தும் பின்னனியறி வேறன்ன...? பெரும் சலசலப்புக்கு மத்தியிலும் சிங்கள இயக்குனருக்கான ஆதரவுப் போக்கை உருவாக்கும் ஒரு முனைப்பும் இதில் அடங்கி கிடக்கிறது.

with%20you,with%20out%20you%20%20(8).JPG
படத்தின் இயக்குனர் தான் நினைத்ததை சொல்லி இருக்கிறார்..அவரின் மீதான நம்பகத் தன்மையை நாம் பரிசீலிக்க வேண்டியதை விட,படத்தை தமிழர்களுக்கு திரையிட்டுக் காட்டி ,ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முனைபவர்களின் பின் புலம் குறித்து சிந்திப்பது தமிழர்களுக்கு அவசியமான ஒன்று....இப்படம் திரையிடுவதன் மூலம் தமிழர்களின் மத்தியில் சிங்களர்களின் பேரன்பை..? புரிந்து கொள்ளுங்கள் என்று தமிழர்களுக்கு உணர்த்த முயன்றிருக்கிறார்கள்...
நாமும் அப்பேரன்பை நம்புவோமாக...ஆமென். 

கலகம்-கலை இலக்கிய தமிழ்த் தேசிய தடம்.
சிங்கள திரைப்பட இயக்குனரைப் புகழ்ந்து பேசிய கவிஞர் ஜெயபாலன் தமிழ் உணர்வாளர்களால் நையப்புடைப்பு!

http://www.pathivu.com/news/31915/57/NGO/d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சின்னவன் யாழ் இணையத்தை மஞ்சள் பத்திரீகை ஆக்கவேண்டாம்.

 

திரை அரங்கிற்க்கு வந்த தமிழ் உணர்வாலர்கள் பலர் உட்பட பெரும்பாலானவர்களுக்கு படம் தமிழருக்கு எதிரானதல்ல சார்பானது என்ற கருத்தே இருந்தது. குரல்மூலம் அவர்கள் அதனை வெளிப்படுத்தினார்கள்.                                                                                                                    

 

  மிக சிறுபாண்மையினரே ஒருசிலர் மட்டுமே கூச்சல்போட்டனர். கவிதமன் போன்ற ஒரிருவர் மட்டுமே நியாயமான சந்தேகங்களை கேட்டு உரையாடினர். ஒரு கைகலப்போ பொலிஸ் முறைப்பாடோ இடம்பெறவில்லை.

 

பதிவு போன்ற பதிரிகைகள் ஆதாரமில்லாத மஞ்சள் செய்திகளை யாழில் வெளியிடுவது வேதனை அளிக்கிறது. அத்தகைய சேதிகளை யாழில் மறுபிரசுரம் செய்ய  மோகன் நிழலி போன்றவர்கள் எப்படி அனுமதிக்கிறார்கள்.

 

ஜெர்மனியைச் சேர்ந்த என் உறவினரான இலங்கைபெண்ணை டெல்ஹியில் தடுத்து வைத்துத் துன்புறுத்தி அவர் தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக திருமுருகனோடும் வளர்மதியோடும் எனக்கு மோதல் நடைபெறுவது இரகசியமல்ல. ஈழம் பற்றி அவர்கள்பேசுவதாலேயே பொலிஸில் முறையிடவில்லை என்பதும் இரகசியமல்ல.

 

. என்னை சுடப்போவதாக மே17 ஆட்க்களுடன் வந்த குட்டையான ஒருவர் (வட்டுக்கோட்டை என்றாராம்) சொன்னதால்தான் என் அனைவி வாசுகியும் சிலரும் அவரை திட்டினார்கள். 

 

மோகனும் நிழலியும் யாழில் ஆதரமில்லாத மஞ்சள் செய்திகளை வெளியிடும் இணையதளங்களில் இருந்து செய்திகள் பகிரபடுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேணும்.

தமிழர்களுக்கு சார்பாக படங்களை எடுப்பதால் சிங்கள இயக்குனருக்கு. கவிஞர் ஜெயபாலன் அவர்களுக்கு ஏற்பட்ட இராணுவ பொலிஸ் கெடுபிடிகள் போல் இலங்கை செல்லும்போது அவருக்கும் ஏற்பட அதிக வாய்ப்பிருகிறது.
அதலால் தங்கள் வாழ்வை தமிழுக்கு அர்பணித்து தமிழர்களுக்காக வாழ்ந்துகொண்டிருக்கும் குறும்பட இயக்குணிகள் இலக்கிய விற்பன்னர்கள் தொடர்பை ஏற்படுத்தி. தமிழர்களுக்கு சார்பாக படங்களை எடுக்கும் அந்த இயக்குனரை தமிழ் நாட்டில் வைத்து பாதுகாக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். 
 
இவர்களுக்கு சினிமாவை சினிமாவாக பார்க்க தெரியாதா ??
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தில் அப்படி என்ன இருக்குது என்று எதிராக போராட வெளிக்கிட்டவை? வர,வர எதற்கு போராடுவது என்று ஒரு விவஸ்தை இல்லாமல் போயிட்டுது

 

விபஸ்தை துறையில் பட்டம் பெற்றவர்கள் வீட்டிற்குள் இருந்தால் .......... விபஸ்தை  தெரியாதவர்கள்தான் வீதியில் இறங்கி போராடமுடியும்.
விபஸ்தை தெரியாதவர்களே போராடுகிறார்கள் .............??
அப்படி என்றுகூட விபஸ்தை துறையில் பட்டம் அருளியவர்கள் அறிவிற்கு எட்டவில்லையே ?
 
அப்படி ஏன் நீங்கள் சிந்திக்க கூடாது ??
  • கருத்துக்கள உறவுகள்

மற்றவனை பலி கொடுத்துவிட்டு தான் வெள்ளைகொடி பிடிக்கவில்லை சதாம் .

 

ஆத்திரம்

பொறாமை

முடியாமை

பழி  தீர்த்தல்..  உள்ள  மனிதனிடமிருந்து  இப்படியான  பதில்கள் தான் வரமுடியும்...... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

1990 இரண்டாம் ஈழப்போர் ஆரம்பித்து காலம் போர் தீவிரமடைந்தது இலங்கை வெளினாட்டு முதலீட்டாளருக்கு செங்கம்பளம் விரித்தது கிட்டத்தட்ட 5 தசாப்பதகாலமாக நிறுத்தப்பட்டிருந்த கனிம அகழ்வு ஆரம்பிக்கப்பட்டது அதற்காக பல சலுகைகள் 5 சதவிகிதாமாக லெவி குறைக்கப்பட்டது மாசுக்கட்டுப்பாடு முற்றாக புறக்கணிக்கப்பட்டது முதலீட்டிற்கு பாதுகாப்பு என சத்தமில்லாமல் காய் நகர்த்தியது. ஆனால் முதலீட்டாளர்களிற்கு அதை விட உறுதி தேவைப்பட்டது தமிழர் தரப்பு அதன் பின்னாலிருந்த தந்திரம் புரியாமல் தேச நலன் என்ற சிந்தனையில் புறக்கணித்தார்கள் இதைதானே சிங்களம் விரும்பியது. 2003 இல் பாதுகப்பைஉதாரணம் காட்டி வெளினாட்டு நிறுவனத்தின் வெளியேற்றம் மேற்குலகின் வர்த்தகப்பதிப்புகளில் அளுத்தம் திருத்தமாகப்பதியப்பட்டது சில கனிமங்கள் இலங்கையில் மட்டுமே உள்ளது அது டன் ஒற்றிற்கு 2000 டாலர் வரையான பெறுமதியுடையது எந்த வித சுத்திகரிப்புமற்ற ஏற்றுமதி நிறுவங்களிற்கு கொள்ளை இலாபத்தை கொடுத்தது அவற்றை இழக்க ஐரோப்பிய முதலாளிகளுக்கு விருப்பம் இல்லை அதனால் அவர்கள் தமது கைகளை தமிழர் குருதியில் களுவி விட்டார்கள். சிங்களவன் எதை செய்தாலும் அதை கலையுணர்வுடன் அழகாக செய்வான் அதை புரிந்து கொள்ளமுடியாத தமிழன் கலை வேறு அரசியல் வேறு என்று பிதற்றிக்கொண்டு திரிவான்,தமிழன் வாங்கினது பத்தாது.

இந்தப் படத்தில் அப்படி என்ன இருக்குது என்று எதிராக போராட வெளிக்கிட்டவை? வர,வர எதற்கு போராடுவது என்று ஒரு விவஸ்தை இல்லாமல் போயிட்டுது

இந்த கருத்தை நானும் கண்டிக்கிறேன்.அர்ஜீன் அண்ணா உணர்ச்சி வசப்பட்டு இங்குள்ளவர்கள் மேல் உள்ள கோபத்தில் இப்படி கேவலமாக பொய் எழுதக் கூடாது.

 

இந்த அறிவாளிகளின் லேட்டஸ்ட் காமெடியில் ஒன்று `பிறகு’ என்ற சிங்கள இயக்குனரின் படத்திற்கு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.. படத்தை வெளியிட விட மாட்டோம் என்றெல்லாம் மிரட்டினார்கள் என்று ஓவர் பில்டப்புகளை கடந்த சில நாட்களாக அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதன்படி என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் இப்படி ஒரு படம் வருவது குறித்தோ.. அதை எதிர்க்க வேண்டும் என்று எந்த அமைப்பும் அறிவித்ததாக ஒரு தக்குனுண்டு செய்தி கூட வரவில்லை.

ஆனால் டாக்குமெண்ட்ரி வியாபாரி லீனா மேடம் உள்ளிட்ட ஈழ எதிர்ப்பு கும்பல், இந்த படத்திற்கு ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டம் நடத்துவது போல் மாய்ந்து மாய்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.-FB

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் டாக்குமெண்ட்ரி வியாபாரி லீனா மேடம் உள்ளிட்ட ஈழ எதிர்ப்பு கும்பல், இந்த படத்திற்கு ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டம் நடத்துவது போல் மாய்ந்து மாய்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.-FB

 

சின்ன  எதிர்ப்பு என்றால்

நம்ம பிழைப்பு

கௌரவம் :lol: என்னாவது.....??

லீனாக்கு ஓசி விளம்பரம் நடக்கு .

லீனாக்கு ஓசி விளம்பரம் நடக்கு .

 

டாக்குமென்டரி வியாபாரி என்று சொன்னதை மாற்றி, தனக்குத் தானே விபச்சாரி என்று கூறிக்கொண்டு விளம்பரம் தேடும் லீனா மணிமேகலை(  வியாபாரி / விபச்சாரி ) வித்தியாசத்தை யார் சொல்லிக்கொடுப்பது.

  • கருத்துக்கள உறவுகள்
ஆனால் டாக்குமெண்ட்ரி வியாபாரி லீனா மேடம் உள்ளிட்ட ஈழ எதிர்ப்பு கும்பல், இந்த படத்திற்கு ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டம் நடத்துவது போல் மாய்ந்து மாய்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.-FB

 

 

 

 
லீனாவின் பரமரசிகர்கள் இங்கும் உள்ளார்கள் வேந்தன்.
  • கருத்துக்கள உறவுகள்

&

இந்த அறிவாளிகளின் லேட்டஸ்ட் காமெடியில் ஒன்று `பிறகு’ என்ற சிங்கள இயக்குனரின் படத்திற்கு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.. படத்தை வெளியிட விட மாட்டோம் என்றெல்லாம் மிரட்டினார்கள் என்று ஓவர் பில்டப்புகளை கடந்த சில நாட்களாக அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதன்படி என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் இப்படி ஒரு படம் வருவது குறித்தோ.. அதை எதிர்க்க வேண்டும் என்று எந்த அமைப்பும் அறிவித்ததாக ஒரு தக்குனுண்டு செய்தி கூட வரவில்லை.

ஆனால் டாக்குமெண்ட்ரி வியாபாரி லீனா மேடம் உள்ளிட்ட ஈழ எதிர்ப்பு கும்பல், இந்த படத்திற்கு ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டம் நடத்துவது போல் மாய்ந்து மாய்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.-FB

ஓ நீங்கள் எதிராய் ஆர்ப்பாட்டம் செய்யேல்ல ஆனால் முட்டையில் மயிர் புடுங்குவிங்களாக்கும்...ஈழ உணர்வாளார்கள் என சொல்லிக் கொண்டு எத்தனை தயாரிப்பாளார்கள்,டைரக்டர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் யாராவது ஒருவர் உண்மையான போராட்டத்தில் வலியை சொல்கின்ற மாதிரி படம் எடுத்தீர்களா?...இதே படத்தை ஒரு தமிழன் எடுத்திருந்தால் வாயை மூடிக் கொண்டு மூச்சுக் காட்டாமல் படம் பாத்திருப்பீர்கள்.

எனக்கு லீனா மேடத்தையும் தெரியாது,ஒரு மண்ணாங்கட்டியையும் தெரியாது.உங்களுக்குத் தான் நன்றாகத் தெரியும்.நீங்களும் அந்தத் துறையில் தான் இருக்கிறீங்கள்.நான் இங்கு ஒருத்தருக்கும் ஆதரவாக கதைக்கவில்லை.என் பொதுவான கருத்தையே வைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
தமிழகத்தை நோக்கி நகர்த்தப்படும் வெட்டுக் காய்கள்!
ஜூன் 27, 2014
 
இந்த வாரத்தில் இரண்டு வெட்டுக் காய்கள் தமிழகத்தை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. ஒன்று, சுப்ரமணியசுவாமி ஊடான ஜெயலலிதா - மகிந்த சந்திப்பு விவகாரம். அடுத்தது, சர்ச்சைக்குரிய 'பிறகு' என்ற தமிழ்த் தலைப்புடன்  'ஒப நத்துவா ஒப எக்கா' என்ற சிங்களப் படத்தை தமிழகத்தில் திரையிட முயன்றது. 
 
தமிழீழ மக்களது துயரங்களுக்கு நீதி தேடும் தமிழக முதல்வரையும், அத்தனை துயரங்களுக்கும் காரணமான போர்க் குற்றவாளி மகிந்தாவையும் சந்திக்க வைக்கும் முயற்சி ஒன்றை, தமிழகத்தின் அரசியல் கோமாளியும், மகிந்தவின் நண்பருமான சுப்பரமணியசுவாமி மேற்கொண்டிருந்தார். தமிழக மீனவர் பிரச்சினையை மையப்படுத்தி இருவரையும் சந்திக்க வைப்பதன் மூலம், தமிழீழ மக்கள் தொடர்பான தமிழக முதல்வரது கடும் போக்கில் மாற்றங்களை உருவாக்கும் முயற்சியாகவே இது நோக்கப்படுகின்றது. 
 
இதற்கு அடுத்ததாக, சிறிலங்காவின் பிரசன்ன விதானகே இயக்கிய 'ஒப நத்துவா ஒப எக்கா' எனும் சிங்களப் படத்தின் 'வித் யூ, வித்அவுட் யூ' என்ற ஆங்கிலத் தலைப்பை 'பிறகு' என்ற தமிழ்ப் பெயருடன் சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோஸில் செவ்வாய்க்கிழமை சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. தமிழ் ஸ்டூடியோ அமைப்பு இதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தது.
 
இந்தப் படம், கடந்த வாரத்தில் வெளியிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும், படம் குறித்த சர்ச்சைகள் தீவிரமடைந்த நிலையில், பாதுகாப்பு குறித்த காரணங்களால் சென்னைத் திரையரங்குகளிலிருந்து ஞாயிறு அன்று விலக்கிக் கொள்ளப்பட்டது. இரு வருடங்களுக்கு முன்னால், சிறிலங்கா அரசால் இந்தப் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டு, பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டிருந்தது. படத்தில், சிங்கள ஆட்சியாளர்களுக்கு நெருடலான சில காட்சிகள் இருந்த காரணத்தாலேயே அது சிறிலங்காவில் திரையிட அனுமதி டறுக்கப்பட்டிருந்தது. அந்தக் காரணங்களுக்காக, இற்தப் படம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானதான கருத்துருவாக்கத்தேடு தமிழகத்தில் திரையிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 
 
முதலில், சிங்களப் படைப்பாளிகளோ, இலக்கிய கர்த்தாக்களோ தமிழர் தளங்களில் கால் பதிக்கும் முயற்சியை மேற்கொள்வதற்கு முன்னர் தமிழ் மண்ணில், தமிழர்களுக்கு நேர்ந்த அவலங்களின் உண்மை நிலைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். சிங்களப் படைகள்மீதும், சிங்கள அரசு மீதும், அவர்களது வெற்றிவாதத்தில் பங்கெடுக்கும் சிங்களப் பேரினவாதத்தின்மீதும் முன்வைக்கப்படும் ஆதாரங்களுடனான போர்க் குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்ள வேண்டும். அதன் பின்னராகவே, அதன் வலிகளுக்கான தீர்வு நோக்கிப் பயணிக்க முடியும். 
 
பிரசன்ன விதானகேயின் இந்தப் படத்திலும், நடந்தேறிய குற்றங்களின் ஒரு பகுதியை இராணுவ சிப்பாய்களின்மீது சுமத்திவிட்டு, சிங்கள ஆட்சியாளர்களையும், சிங்களப் பேரினவாதத்தையும் தப்பிக்க வைக்கும் முயற்சியே எத்தனிக்கப்படுகின்றது. அதுவும், யுத்த களத்து ரணங்களால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து விடுபட முடியாத தமிழ்ப் பெண்ணான செல்வியை, அவளது வலிக்குக் காரணமான அதே சிங்களப் படையின் சிப்பாயே வாழ்வு கொடுப்பதாகவும் இந்தப் படத்தின் கதைக்களம் நகர்கின்றது. உண்மைகள் மறைக்கப்பட்டு, அவள் மீண்டும் ஒரு பலிக் களத்தில் நிறுத்தப்படுகின்றாள். அது வெளிச்சத்திற்கு வந்தபோது, அவள் தன்னையே மாய்த்துக் கொள்கின்றாள். 
 
தமிழ் இனத்தின்மீதான சிங்களப் பேரினவாதத்தின் இன அழிப்பு நடவடிக்கைகளை ஒரு சிலரது குற்றச் செயல்களாக்கிவிட்டுத் தப்பிக்கும் முயற்சியில், அவர்களது குற்றங்களையும், நண்பர்கள் என்ற காரணத்தால் அதனை மறைத்ததையும் ஒப்புக்கொள்ளும் சரத்சிறி என்ற கதாநாயக பாத்திரத்தின் மூலமாக, இயக்குனர் பிரசன்ன விதானகே பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு எந்த நீதியை வழங்க முற்படுகின்றார்? எல்ல உண்மைகளை மறைத்துவிடுவதனாலும், அதற்குப் பரிகாரமாக, பாதிக்கப்பட்ட பெண் ஒருவரைத் திருமணம் என்ற பெயரில் மீள் வல்லுறவு கொள்வதனாலும் பிரச்சினைகள் முற்றுப்பெற்றுவிடும் என்று நினைக்கிறாரா? அதாவது, முப்பது வருடங்களுக்கு முந்தைய தமிழ்ச் சினிமாவில் வருவது போன்று, வல்லுறவுக்குள்ளாக்கியவனே அவளைத் திருமணம் செய்துகொள்ளும் நீதியை நிலைநாட்ட முற்படுகின்றாரா? அதுவும், சிங்களப் பேரினவாதத்தை ஆண் வல்லமையாகவும், தமிழினத்தின் இன்றைய நிலையை பெண் இயலாமையாகவும் கொண்ட பாத்திரப் படைப்புக்கள் சகிக்க முடியாத கொடூரங்கள். இறுதியில். தன்னையே மாய்த்துக்கொள்ளும் செல்வி, மீளவே முடியாத தமிழினத்தின் தோல்வியின் அடையாளமாக்கப்பட்டுள்ளாள். இல்லையெனில், அவளது துப்பாக்கி குறி தவறாமல் வெடித்திருக்க வேண்டும். அதற்கு, பிரசன்ன விதானகேயின் சிங்கள மேலாதிக்க வெற்றிவாதம் இடம் கொடுக்கவில்லை. 
 
மொத்தத்தில், தமிழகத்தை நோக்கி நகர்த்தப்பட்ட இரண்டு காய்களும் தமிழ்த் தேசியவாதிகளால் களத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்டது. 
 
- தமிழ்ச்செல்வன் 
  • கருத்துக்கள உறவுகள்

&

ஓ நீங்கள் எதிராய் ஆர்ப்பாட்டம் செய்யேல்ல ஆனால் முட்டையில் மயிர் புடுங்குவிங்களாக்கும்...ஈழ உணர்வாளார்கள் என சொல்லிக் கொண்டு எத்தனை தயாரிப்பாளார்கள்,டைரக்டர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் யாராவது ஒருவர் உண்மையான போராட்டத்தில் வலியை சொல்கின்ற மாதிரி படம் எடுத்தீர்களா?...இதே படத்தை ஒரு தமிழன் எடுத்திருந்தால் வாயை மூடிக் கொண்டு மூச்சுக் காட்டாமல் படம் பாத்திருப்பீர்கள்.

எனக்கு லீனா மேடத்தையும் தெரியாது,ஒரு மண்ணாங்கட்டியையும் தெரியாது.உங்களுக்குத் தான் நன்றாகத் தெரியும்.நீங்களும் அந்தத் துறையில் தான் இருக்கிறீங்கள்.நான் இங்கு ஒருத்தருக்கும் ஆதரவாக கதைக்கவில்லை.என் பொதுவான கருத்தையே வைத்தேன்.

 
எடுத்த 3 படங்கள் சென்சாரில்  இருக்கிறது அதில் ஒன்று 1994இல் செல்வமணி எடுத்தது இப்ப வயது 20.
அவற்றை சென்சருக்குளால் அக்கா எடுத்துவிட்டால் ............ அவர்களும் தொடர்ந்து படம் எடுப்பார்கள்.
 
இதுவும் என்னுடைய பொதுவான கருத்துதான்.
 
சினிமாவை இவர்களால் ஏன் சினிமாவாக பார்க்க முடியவில்லை?

"யாவும் கற்பனையே" என்று டைட்டில் கார்டில் போட்டிருந்தால் அந்த 3 படங்களையும் வெளியே விட்டிருப்பார்கள்....

"based on true story"  என்பது இடிக்குது போல உள்ளது...

 

ஏன் அந்த இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் நீதிமன்றம் செல்ல வில்லை??? செய்து பார்க்கலாமே...இப்போது எதிர்ப்பு கடினமாக இருக்காது என்று நினைக்கிறன்...

  • கருத்துக்கள உறவுகள்

என்னது லீனா மேடத்தைத் தெரியாதா????? இதைப் படித்துப் பாருங்கள். http://www.vinavu.com/2010/01/06/leena/

&

ஓ நீங்கள் எதிராய் ஆர்ப்பாட்டம் செய்யேல்ல ஆனால் முட்டையில் மயிர் புடுங்குவிங்களாக்கும்...ஈழ உணர்வாளார்கள் என சொல்லிக் கொண்டு எத்தனை தயாரிப்பாளார்கள்,டைரக்டர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் யாராவது ஒருவர் உண்மையான போராட்டத்தில் வலியை சொல்கின்ற மாதிரி படம் எடுத்தீர்களா?...இதே படத்தை ஒரு தமிழன் எடுத்திருந்தால் வாயை மூடிக் கொண்டு மூச்சுக் காட்டாமல் படம் பாத்திருப்பீர்கள்.

எனக்கு லீனா மேடத்தையும் தெரியாது,ஒரு மண்ணாங்கட்டியையும் தெரியாது.உங்களுக்குத் தான் நன்றாகத் தெரியும்.நீங்களும் அந்தத் துறையில் தான் இருக்கிறீங்கள்.நான் இங்கு ஒருத்தருக்கும் ஆதரவாக கதைக்கவில்லை.என் பொதுவான கருத்தையே வைத்தேன்.

 

நீங்கள் முட்டையில் மயிர்  புடுங்குங்க  யாரும் வேண்டாம் என்று சொன்னார்கலா...

 

 

 

 
எடுத்த 3 படங்கள் சென்சாரில்  இருக்கிறது அதில் ஒன்று 1994இல் செல்வமணி எடுத்தது இப்ப வயது 20.
அவற்றை சென்சருக்குளால் அக்கா எடுத்துவிட்டால் ............ அவர்களும் தொடர்ந்து படம் எடுப்பார்கள்.
 
இதுவும் என்னுடைய பொதுவான கருத்துதான்.
 
சினிமாவை இவர்களால் ஏன் சினிமாவாக பார்க்க முடியவில்லை?

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன பதில் எழுதுவது என்று தெரியாமல் மற்றவர் எழுதியதை குவேட் பண்ணி இப்படி எதையாவது கிறுக்குவீங்கள் என்பதை எதிர் பார்த்தது தான்...மக்களது வலியை மாத்திரம் சொல்கின்ற மாதிரி படம் எடுத்தால் எதற்காக தடை செய்யப் போகிறார்கள்?...மக்களது வலியை மாத்திரம் சொல்ல நினைத்தால் நிச்சயமாக சொல்லலாம்.அதற்கெல்லாம் திறமையும்,தமிழன் என்ட உணர்வும் வேண்டும்.வியாபாரத்தை நோக்கமாக கொண்ட தமிழக தயாரிப்பாளர்களிடம் அது இல்லவே இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.