Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐபோன் 6 & ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்.

 

xfw87l.jpg

 

 

 

நியூயார்க்:

 

பலரும் எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ்(6+)ஐ கலிபோர்னியாவில் உள்ள குபர்டினோ நகரில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

ஐபோன் 6 மாடல்களை அறிமுகப்படுத்தி, அந்நிறுவனத்தின் CEO டிம் குக் பேசுகையில், இன்று ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு மாடல்களும் மெலிதாக இருக்கும். ஐபோன் 6 போனின் டிஸ்பிளே 4.7 இன்ச் என்ற அளவிலும், 6 பிளஸ் போன் டிஸ்பிளே 5.5 இன்ச் என்ற அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்த போன்கள் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே உள்ளது.

 

இந்த போன்கள் மற்ற போன்களை விட 25 சதவீதம் வேகமாக இருக்கும். இந்த போன்கள் வளைவான முனை கொண்டதாக இருக்கும். ஐபோனுக்காக 1.3 லட்சம் அப்ளிகேசன்கள் உள்ளன. அதிகமாக விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள் ஐபோன்கள் தான். இன்றைய நாள் ஐபோன்கள் வரிசையில் மிகப்பெரிய சாதனை என கூறினார்.

 

 

2w65obd.jpg

 

f3rm1d.jpg

 

 

-தினமலர்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Leaked-iphone-6.jpg

 

 

அமீரகத்தில் இதன் (16 ஜிபி) தோராய விலை 3100 திர்ஹாம் (இந்திய விலை ரூ.51ஆயிரம்)  எனவும் இம்மாதம் 20 ந் தேதி வாக்கில் இங்கே சந்தையில் விற்பனைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. :o

  • கருத்துக்கள உறவுகள்

 

iPhone-Size-Comparison-Chart1.png

 

 

வர.வர.... உலகம் சிறிதாகிக் கொண்டு வருகிறதென்று பார்த்தால்......

ஐ போன், பெரிதாகிக் கொண்டு போகுது. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'சாம்சங்' கேலக்ஸி கியர் வாட்சுக்கு போட்டியாக, ஆப்பிள் வாட்ச் வேறை வெளியாகுதாம்! :o

 

 

362746-654e3d16-384e-11e4-8c2d-d7bb5a31a

 

362826-34d09aca-384f-11e4-8c2d-d7bb5a31a

  • கருத்துக்கள உறவுகள்

முடியலயப்பா..

 

இப்பத்தான்  மாற்றியது

 

அடுத்த தரம்.....?? :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

ஐஃபோன் 6, ஐஃபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள்

 

 ஐஃபோன் விரும்பிகளின் பல நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிய ஐஃபோன் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

ஐஃபோன் 6 மற்றும் ஐஃபோன் 6 ப்ளஸ் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இவை, முந்தைய ஐஃபோன்கள் திரையைவிட பெரிய திரையைக் கொண்டுள்ளது. முந்தைய மாடல்களை விட மெலிதாக உள்ளது.

 

இந்தப் புதிய மாடல்கள், சாம்சங் நிறுவன மொபைல்களுக்கு போட்டியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதோடு, நீண்ட காலமாக தொழில்நுட்ப ஆர்வலர்கள் எதிர்பார்த்த, கையில் அணிந்துகொள்ள வாகான ஆப்பிள் வாட்ச், புதிய ஐஃபோன்களோடு அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.

 

காலிபோர்னியா, பிளிண்ட் சென்டரில், 30 வருடங்களுக்கு முன் மேகிண்டாஷ் கணினி அறிமுகம் செய்யப்பட்ட அதே இடத்தில், புதிய ஸ்மார்ட் போன்களும், வாட்சும் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

16 ஜிபி அளவுள்ள ஐஃபோன் 6, 199 டாலர்களுக்கும், அதிகபட்சமாக 128 ஜிபி அளவுள்ள ஐஃபோன் 399 டாலர்களுக்கும் விற்கப்படவுள்ளது. 16 ஜிபி ஐஃபோன் 6 ப்ளஸின் விலை 299 டாலர்களாகவும், அதிகபட்சமாக 128 ஜிபி ஐஃபோன் ப்ளஸ் விலை 499 டாலர்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த போன்கள் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட 6 நாடுகளில் விற்பனைக்கு வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு வருகிறது. செப்டம்பர் 12 முதல் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 

 

இந்தியாவில் எப்போது?

 

 

அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை சமயத்திலோ, நவம்பர் மாதத்திலோ ஐஃபோன் 6 இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 16 ஜிபி ஐஃபோன் 5 எஸ் மாடல், இந்தியாவில் ரூ.41,500-க்கு விற்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் பேசும்போது, "புதிய ஐஃபோன்கள், முந்தைய மாடல்களை விட மெலிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவரை தாங்கள் தயாரித்ததில் இதுதான் சிறந்த மாடல்" என்றார்.

ஐஃபோன் 6 திரையின் நீளம் 4.7 இன்ச், ஐஃபோன் 6 ப்ளஸ் திரையின் நீளம் 5.5 இன்ச். முந்தையை ஐஃபோன் மாடலான 5 எஸ், 7.6 மி.மீ தடிமன் கொண்டது. ஆறாம் தலைமுறை ஐஃபோன் மாடலான 6, 6.9 மி.மீட்டரும், 6 ப்ளஸ் 7.1 மீட்டர் தடிமனும் கொண்டது.

8 மெகா பிக்ஸல் கேமரா கொண்ட ஐஃபோன் 6, செல்பி எடுத்துக் கொள்பவர்களுக்கு வசதியாக, முகங்களை சரியாக கண்டுணரும் அம்சத்தைக் கொண்டுள்ளது.

 

 

ஆப்பிள் பே!

இந்த முறை, முக்கியமாக ஆப்பிள் பே (apple pay) என்ற புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் பே மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட், டெபிட் கார்டுகளை, தங்கள் ஐஃபோன்களில் பதிவு செய்து கொண்டால், அதை வைத்தே பண பரிமாற்றங்களை விரைவாகவும், பாதுகாப்போடும் செய்ய முடியும்.

இந்த வசதி தற்போது, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மாஸ்டர் கார்ட் மற்றும் விசா ஆகிய தளங்களில் மட்டும் வேலை செய்யும். முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் செயல்படுத்தப்படும் இந்த அம்சம், விரைவில் உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என்று குக் தெரிவித்தார்.

 

ஆப்பிள் வாட்ச்

 

 

ஆப்பிள் வாட்ச்சில், செயலிகள் பயன்படுத்தவும், பயனர்கள் சொல்வதை எழுத்தாக பதிவு செய்துகொள்ளவும், ஐபோனுடன் இணைந்து செயல்படவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஐபோனில் இருக்கும் இணைய வசதியை பயன்படுத்திக் கொள்ளும் ஆப்பிள் வாட்ச், பயனர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள், அவர்கள் செல்லவிருக்கும் இடத்திற்கு இன்னும் எத்தனை தூரம் போன்ற விவரங்களையும் தருகிறது.

 

 

அடுத்த வருட துவக்கத்தில் விற்பனைக்கு வரும் இதன் விலை 349 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஐஃபோன் 5, 5 சி, 5 எஸ், 6, 6 ப்ளஸ் ஆகிய மாடல்களோடு இணைந்து வேலை செய்யும். ஆப்பிள் வாட் எடிஷன் என்ற பிரத்தியேக மாடல், 18 காரட் தங்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

தற்போது, ஸ்மார்ட்போன் சந்தையில், சாம்சங் நிறுவனமே 25.2 சதவீத விற்பனையோடு கோலோச்சுகிறது. அதற்கடுத்து ஆப்பிள் 11.9 சதவீத விற்பனையும், வாவே மொபைல்கள் 6.9 சதவீத விற்பனையும் செய்து வருகின்றன. 

 

 

http://tamil.thehindu.com/general/technology/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-6-%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-6-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6397383.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

10628444_742454949160277_671778494213724

உள்ளதும் போச்சு.......................

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா அய்போனின்ட வடிவை அடிக்கேலாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பிள் விலையையும் அடிக்கேலாது.

 

ஸ்ரிவ் ஜாப்புக்கு பிறகு.. ஆப்பிளின் இனோவேரிவ் தயாரிப்பு என்பது போய்.. கொப்பி அண்ட் பேஸ்ட் என்று வந்து நிற்குது. இது ஆப்பிளுக்கு பெரும் பின்னடைவு எனலாம்.

 

இனோவேசன் இல்லை என்றால் ஆப்பிள் தொடர்ந்து ஐபோன் மற்றும் ராப்லட்டுக்கள் சார்ந்து வாடிக்கையாளர்களை இழக்கும். காரணம் ஆப்பிளை விட திறமான போன்கள்.. மலிவாகவும்.. இலகுவிலும் கிடைத்து விடுகின்றன. இந்த நிலையை முறியடிக்க இன்றைய ஆப்பிள் நிர்வாகத்திடம்.. ஒரு உருப்படியான திட்டமும் இல்லை..!!! :o:icon_idea:

 

சாம்சங்கை சரிக்கட்டுவதில் ஆப்பிள் இப்போது கவனம் எடுத்திருப்பது.. சாம்சங்கிற்கு நல்ல சமிக்ஞைகளை வாடிக்கையாளர்கள் மத்தியில் வழங்கும். அத்தோடு சாம்சங் உட்பட மற்றைய போன்கள் ஆப்பிளின் விலையை காட்டியே முன்னுக்கு வந்துவிடுவார்கள்..!!! :rolleyes::)

  • கருத்துக்கள உறவுகள்

வடிவைதவிர மற்றவிதத்தில் குப்பை வேலைக்கு கிளம்பேக்கிலையே சார்ஜ் இருக்கா என அடிக்கடி பார்க்கனும் மதியத்துக்கு பிறகு அடிக்கட்டைக்கு பற்றி போயிடும் வேலை முடிந்து காரில் வருபவர்களை கவனித்தால் கார்சார்ச்சரையும் ஜபோனையும் கொழுவுவதில் மும்முரமாய் அந்த வாகன நெரிசலுக்குள் இருந்து கொள்ளுபடுவார்கள் .  

 

 பற்றி பிரச்சினையால் அதிக லாபமீட்டுவது நெட்வோர்க் கொம்பனிகள் தான் மாலைநேர பீக் ரைம் அதிக பழு இல்லாமால் இருக்கும் என நினைக்கிறன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வடிவைதவிர மற்றவிதத்தில் குப்பை வேலைக்கு கிளம்பேக்கிலையே சார்ஜ் இருக்கா என அடிக்கடி பார்க்கனும் மதியத்துக்கு பிறகு அடிக்கட்டைக்கு பற்றி போயிடும் வேலை முடிந்து காரில் வருபவர்களை கவனித்தால் கார்சார்ச்சரையும் ஜபோனையும் கொழுவுவதில் மும்முரமாய் அந்த வாகன நெரிசலுக்குள் இருந்து கொள்ளுபடுவார்கள் .  

 

 பற்றி பிரச்சினையால் அதிக லாபமீட்டுவது நெட்வோர்க் கொம்பனிகள் தான் மாலைநேர பீக் ரைம் அதிக பழு இல்லாமால் இருக்கும் என நினைக்கிறன். :rolleyes:

 

 

அது மட்டுமா  ஐயா

 

வீதியில் பயமில்லாமல் கதைக்கமுடியாது..

வேலையில் அங்க இஞ்ச மறந்து வைக்கமுடியாது

கண்ட இடத்தில  சார்ச் செய்யமுடியாது

கார் முன் சீற்றில வைச்சுவிட்டு அதை பார்த்தபடி  இருக்கணும்... :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி கூடிப் போயிற்றுது! :D "மூலை வட்டமாக இருக்கும்" என்கிற உப்புச் சப்பில்லாத தகவல்களையெல்லாம் சொல்லி புதிய பொருளை விற்க வேண்டிய நிலை! நெடுக்குச் சொன்னது போல எதை மாற்றினால் என்ன? என்னைப் போல கஞ்சர்கள் குடுக்கிற காசுக்கு என்ன மேலதிகமாகக் கிடைக்கும் எண்டு தான் தேடுவம், அதனால் சாம்சங்கும், கூகிள் நெக்சசும் எப்பவும் விற்பனையை அப்பிளிடம் இழக்க மாட்டா!

  • கருத்துக்கள உறவுகள்

Apple அப்பிள் தான் :D கிட்டவும் நெருங்கேலாது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Apple அப்பிள் தான் :D கிட்டவும் நெருங்கேலாது :lol:

 

உண்மை தான்! என்னைப் போன்ற ஏழைகளுக்கு கிட்டவும் நெருங்க இயலாது! :D

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச பிச்சைக்காரனும் Apple வைத்திருக்கிறான்....

உண்மை தான்! என்னைப் போன்ற ஏழைகளுக்கு கிட்டவும் நெருங்க இயலாது! :D

 

ஜஸ்ரினின் கஞ்சத்தனம் (சோம்பேறித்தனம்) இதிலிருந்தே தெரிகிறது.  ஐபோனுக்கே இப்படியா?  இரண்டு, மூன்று வேலை செய்தாவது ஐபோன் வாங்க மாட்டோம்   :icon_idea:  :icon_idea:  :icon_idea:  2-3 மாதம் Pizza Delivery செய்தால் போச்சு  :icon_idea:  :icon_idea:  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளதை சொல்லுறன்...இண்டு வரைக்கும் ஐ போனை தொட்டு பாத்தது கூட இல்லை.....தேவையுமில்லை...தேவைக்கு...பாதுகாப்புக்கு ஒரு போன் கையிலை இருக்கு.. :)  :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதை சொல்லுறன்...இண்டு வரைக்கும் ஐ போனை தொட்டு பாத்தது கூட இல்லை.....தேவையுமில்லை...தேவைக்கு...பாதுகாப்புக்கு ஒரு போன் கையிலை இருக்கு.. :)  :D  :icon_idea:

 

தேவைக்கு.... என்றது, புரியுது.

அது என்ன... பாதுகாப்புக்கு, என்றது புரியவில்லை. :D

தேவைக்கு.... என்றது, புரியுது.

அது என்ன... பாதுகாப்புக்கு, என்றது புரியவில்லை. :D

 

யாரும் சண்டைக்கு வந்தால் அதாலேயே எறிஞ்சு விழுத்தலாம்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் சண்டைக்கு வந்தால் அதாலேயே எறிஞ்சு விழுத்தலாம்.  :D

 

400px-Mobile_phone_evolution.jpg

 

குமாரசாமி அண்ணை, இப்பிடியான.... தொலைபேசியா வைச்சிருக்கிறார்? :D

அவர் ஜேர்மனியிலை வசிக்கிறன் என்று, இனி சொல்லப்படாது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

400px-Mobile_phone_evolution.jpg

 

குமாரசாமி அண்ணை, இப்பிடியான.... தொலைபேசியா வைச்சிருக்கிறார்? :D

அவர் ஜேர்மனியிலை வசிக்கிறன் என்று, இனி சொல்லப்படாது. :lol:

 

இந்தப் படத்தில் முன்னுக்கு இருக்கிறது மாதிரி (நீலம் சிறியது)  ஒரு நோக்கியா போன் வைத்திருந்தன். ஒருக்கால் சார்ஜ்ஜில் போட்டால் மூண்டு நாள் நிக்கும். கடைசிச் சொட்டு சார்ஜ் இருக்கும் வரை நம்பிக் கதைக்கலாம் ஒரு வருடத்துக்குள் ஏதொ எமது விசேசமான நாள் வரேக்க பிள்ளைகள் சேர்ந்து ஒரு சம்சுங்  கலக்ஸி ட்ரென்ட்,  தொடுதிரை போன் வாங்கித் தந்தார்கள். அது ஒவ்வொரு நாளும் சார்ஜில போடவேணும். சார்ஜ் 20% வந்தால் அடுத்த இரண்டு நிமிசத்தில அமாவாசைதான். இப்ப பழசைத் தேடிப் பார்க்கிறன் இன்னும் கிடைக்கேல்ல...!  :unsure::)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தில் முன்னுக்கு இருக்கிறது மாதிரி (நீலம் சிறியது)  ஒரு நோக்கியா போன் வைத்திருந்தன். ஒருக்கால் சார்ஜ்ஜில் போட்டால் மூண்டு நாள் நிக்கும். கடைசிச் சொட்டு சார்ஜ் இருக்கும் வரை நம்பிக் கதைக்கலாம் ஒரு வருடத்துக்குள் ஏதொ எமது விசேசமான நாள் வரேக்க பிள்ளைகள் சேர்ந்து ஒரு சம்சுங்  கலக்ஸி ட்ரென்ட்,  தொடுதிரை போன் வாங்கித் தந்தார்கள். அது ஒவ்வொரு நாளும் சார்ஜில போடவேணும். சார்ஜ் 20% வந்தால் அடுத்த இரண்டு நிமிசத்தில அமாவாசைதான். இப்ப பழசைத் தேடிப் பார்க்கிறன் இன்னும் கிடைக்கேல்ல...!  :unsure::)

 

நான்..... கடந்த, ஆறு மாதமாகத்தான்,  தவிர்க்க முடியாத காரணத்தால் கைத்தொலைபேசியே.... வைத்திருக்கின்றேன்.

பேர் தான்.... கைத்தொலை பேசியே தவிர, அது எனது Rucksack ற்குள் தான் இருக்கும்.

மத்தியான இடைவேளைக்கு தான், ஆராவது அடித்துப் பார்த்திருக்கிறார்களா என்று பார்ப்பேன்.

கிழமைக்கு, இரண்டு அழைப்புக்கு மேல்.... இதுவரை வந்ததில்லை :D.

ஏனென்றால்... அந்த நம்பர், என்ரை மனிசிக்கு மட்டும் தான் தெரியும். :lol:

 

இது தான், எனது கைத்தொலைபேசி (Nokia C2-05). எப்பிடி... நல்லாயிருக்கா?5a0129d7e0c782d7.jpeg:rolleyes:

Edited by தமிழ் சிறி

இந்தப் படத்தில் முன்னுக்கு இருக்கிறது மாதிரி (நீலம் சிறியது)  ஒரு நோக்கியா போன் வைத்திருந்தன். ஒருக்கால் சார்ஜ்ஜில் போட்டால் மூண்டு நாள் நிக்கும். கடைசிச் சொட்டு சார்ஜ் இருக்கும் வரை நம்பிக் கதைக்கலாம் ஒரு வருடத்துக்குள் ஏதொ எமது விசேசமான நாள் வரேக்க பிள்ளைகள் சேர்ந்து ஒரு சம்சுங்  கலக்ஸி ட்ரென்ட்,  தொடுதிரை போன் வாங்கித் தந்தார்கள். அது ஒவ்வொரு நாளும் சார்ஜில போடவேணும். சார்ஜ் 20% வந்தால் அடுத்த இரண்டு நிமிசத்தில அமாவாசைதான். இப்ப பழசைத் தேடிப் பார்க்கிறன் இன்னும் கிடைக்கேல்ல...!  :unsure::)

 

மற்றது, இந்த பழைய நீல போன் எத்தனை முறை கீழே விழுந்தாழும் உடையாமல் அசராமல் நிற்கும். தூக்கி எறிஞ்சு விளையாடக் கூட முடியும்.

இப்ப வரும் போன்கள் கீழே விழுந்தால் அவ்வளவு தான்.

 

நான் ஒரு முறை என் Blackberry யை மூத்தா பெய்யும் போது கொமர்ட்டுக்குள் விழுத்தி விட்டேன். பிறகு வெளியே எடுத்து ஒரு பைக்குள் அரிசியை நிரப்பி அதனுள் போனைப் போட்டு காய வைத்து 24 மணி நேரத்தின் பின் வேலை செஞ்சது. :) 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.