Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பண்ணைக் கடற்கரையோரம் மகிழ்ச்சியான ஒரு தருணம்!

Featured Replies

pannai%20Beach%201111421.jpg

யாழ். கோட்டைக்கு அருகில் பண்ணைக் கடற்கரையோரமாக பொழுதுபோக்குப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பூங்கா பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் "கிறீன் பார்க்" திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வருகிறது. 12 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படும் இந்தப் பூங்காவின் பணிகள் தற்போது 75 வீதம் பூர்த்தியடைந்துள்ளன என்று வடமாகாண நகர அமைச்சின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
 
இந்த வருட இறுதிக்குள் இந்த பொழுதுபோக்கு மையம் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா திறப்பதற்கு முன்னரே அதைப் பயன்படுத்த் தொடங்கிவிட்டனர் இயற்கையை விரும்பும் பலர். யாழ்ப்பாணம் வரும் தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணிகளும் இங்கு பொழுதைக் களித்து புகைப்படங்களை எடுப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. படங்கள்: நிருஜன் 
 
pannai%20Beach%201111424.jpg
 
pannai%20Beach%201111426.jpg
 
pannai%20Beach%201111425.jpg
 
pannai%20Beach%201111422.jpg
 
pannai%20Beach%201111423.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

ச்சா பிறகென்ன.. யாழ்ப்பாணம் சிங்கப்பூர் மாதிரி இருக்குது. நமக்கு எனி 13ம் தேவையில்ல. மகிந்த ராசா பாதங்களே தஞ்சம்.

இதனை விட கிட்டு பூங்கா ஒரு காலத்தில் ரெம்ப அழகாக இருந்தது. அப்போ சீமெந்துக் கூட நாட்டில சிங்களத்தின் தடை...!!!!!!! :):icon_idea:

அபிவிருத்திகளை வரவேற்க வேண்டும். அதேவேளை இதுவே போதும்.. என்று அடங்கிப் போதல் அடிமைத்தனம் ஆகும்..! :icon_idea:

எங்கள் மண்ணை நாங்களே நிர்வகிக்கின்ற போது.. இன்னும் கூடிய வினைத்திறனுள்ள அபிவிருத்திகளை செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு உரிய உரிமையும் கௌரமும் கொடுக்காமல் இவர்களது இயற்கையை மேலும் அழகாக்குவதில் என்ன பயன். இந்தப் புங்காவில் இராணுவக் கெடுபிடிகளற்று சுதந்திரமாக உலவும் பொழுதே உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும்.மக்களின் வீடுகளையும்,காணிகளையும் இராணுவம் அபகரித்துக்கொண்டு(உயர்பாதுகாப்பு வலயம்) மக்களைக் கடற்கரையில் விட்டுள்ளது என்பதே இதன் பொருள். முதலில் மக்களின் வீடுகளை அவர்களிடம் கையளியுங்கள் அதுவே அவர்களுக்கு மகிழ்ச்சி தரும்.

  • கருத்துக்கள உறவுகள்

ச்சா பிறகென்ன.. யாழ்ப்பாணம் சிங்கப்பூர் மாதிரி இருக்குது. நமக்கு எனி 13ம் தேவையில்ல. மகிந்த ராசா பாதங்களே தஞ்சம்.

இதனை விட கிட்டு பூங்கா ஒரு காலத்தில் ரெம்ப அழகாக இருந்தது. அப்போ சீமெந்துக் கூட நாட்டில சிங்களத்தின் தடை...!!!!!!! :):icon_idea:

அபிவிருத்திகளை வரவேற்க வேண்டும். அதேவேளை இதுவே போதும்.. என்று அடங்கிப் போதல் அடிமைத்தனம் ஆகும்..! :icon_idea:

எங்கள் மண்ணை நாங்களே நிர்வகிக்கின்ற போது.. இன்னும் கூடிய வினைத்திறனுள்ள அபிவிருத்திகளை செய்யலாம்.

பழைய யாழ் சந்தை,மற்றும் நவீன சந்தை போன்ற கட்டிடங்களை 1977/78 களில் எரித்து தமிழர்களை விழிப்படைய வைத்த ஆட்சியாளர்கள் தான் இன்று அபிவிருத்தி செய்கின்றார்கள்...

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குப் பேரு பூங்காவா?  :o:(

(ஒருவேளை சிங்களத்தில் அர்த்தம் அப்படியிருக்குமோ...! )

போரினால் கடுமையான உளவியல் சிக்கலை எதிர் கொண்டு இருக்கும் வடக்கு மற்றும் கிழக்கு சமூகத்துக்கு இவ்வாறான பூங்காக்கள் சிறிதளவேனும் மன ஆறுதலைக் கொடுத்து  உளவியல் ரீதியிலான திருப்தியைக் கொடுக்கும் என்று நம்புகின்றேன். முக்கியமாக வடக்கில் வேகமாக அதிகரித்து வரும் தற்கொலைகளை குறைக்க இவை ஒரு சிறு அளவுக்கேனும் உதவி புரியும்.

ஆடம்பர வாழ்க்கையும், மக்டொனால்ட்ஸ் சாப்பாடும், நவீன தொலைபேசிகளும், டப்லட்களும்,  வைத்திருக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கே இன்னும் தமிழ் தேசிய விடுதலை அவா இருக்கும் என்று நம்பும் போது,  இனப்பிரச்சனையையும் இன ஒதுக்கல்களையும் நேரடியாக அனுபவிக்கும் தாயக மக்களுக்கு விடுதலை பற்றிய பிரக்ஞை சிறிய விடயங்களக்காக அற்றுப் போகாது.

  • கருத்துக்கள உறவுகள்

இது போரினால் பாதிக்கப்பட்டு.. உள்ள மக்களைப் போய் சேருமாப் போல இல்லை. இது வெளிநாடுகளில் இருந்தும்.. தென்பகுதியில் இருந்தும் காசைக் கொடுத்து.. ஊரை ரசிச்சிட்டு.. ஊரை விட்டு கிளம்பிப் போறவைக்கு ஏற்படுத்தப்படும் வசதி.

அதுமட்டுமன்றி.. யாழ் கோட்டையும்.. சுற்றுப் புறமும்.. நெதர்லாந்து அரசின் நேரடி பண உதவியின் கீழ்.. அவர்கள் எம்மை ஆண்டதன் அடையாளத்தை நிலைநிறுத்த செய்யும் கைங்கரியத்தின்... கீழ் அமையும்.. செழிப்பே இது.

ஆனால் இன்னொரு பகுதியில் மக்கள்.. இன்னும் அகதிமுகாம்களில் கிடக்கின்றனர். குடிசைகளில் கிடக்கின்றனர். அவர்களுக்கு வெளிநாட்டு தமிழர்கள் தான் வந்து உதவனுன்னு சொல்லுற சிங்கள அரசு.. இங்கு செய்யும் செலவுகளைப் போல அதிகம் அங்கு தேவைப்படுகிறது. அதை செய்தால் தான் தற்கொலைகளை தடுக்க முடியுமே தவிர... பண்ணைக் கடலின் காற்றுவாங்கிவிட்டால்.. உள்ளம் தித்திக்கும் என்று.. எவராவது ஆராய்ந்து சொன்னார்களா என்ன..??! :D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பூங்காவைக்கட்டினால் வரவேற்கிறார்கள்

நாங்க

பள்ளிக்ககூடத்தைக்கட்டினால்

கலைச்சு கலைச்சு கடிக்கிறார்கள்...

இதைக்கேட்க  ஒரு நாதியில்லை... :(  :(  :(

பூங்காவைக்கட்டினால் வரவேற்கிறார்கள்

நாங்க

பள்ளிக்ககூடத்தைக்கட்டினால்

கலைச்சு கலைச்சு கடிக்கிறார்கள்...

இதைக்கேட்க  ஒரு நாதியில்லை... :(  :(  :(

விசுகு, ஒரு திரியில் விவாதித்து முடிந்த விடயங்களை மீண்டும் மீண்டும் ஏனைய திரிகளில் காவித் திரிந்து எழுதுவது அருவருத்தக்க விடயம். கடந்த சில நாட்களாக பல திரிகளில் நீங்கள் இவ்வாறு நடக்கின்றீர்கள்.

அவ்வாறே

ஒரு திரியில் எழுதப்பட்டு

பூட்டப்பட்ட விடயம்

இன்னொரு திரியில்  திறக்கப்பட்டதே...

நான் எழுதாது

ரிப்போட்  செய்திருந்தேனே..

பதில் இல்லையே

ஏன்.....??

அவ்வாறே

ஒரு திரியில் எழுதப்பட்டு

பூட்டப்பட்ட விடயம்

இன்னொரு திரியில்  திறக்கப்பட்டதே...

நான் எழுதாது

ரிப்போட்  செய்திருந்தேனே..

பதில் இல்லையே

ஏன்.....??

ஒரு விடயத்தை புரிந்து கொள்ளுங்கள். ஒருவர் ரிப்போர்ட் பண்ணி விட்டார் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அந்த திரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்தினை தனிமடலில் நிர்வாகத்திடம் கேட்கலாம். அதற்கு நிர்வாகம் பதில் கொடுக்காமல் விட்டால் நாற்சந்தியில் அது பற்றிக் கேட்கலாம்.

இதுதான் பல காலமாக யாழில் இருக்கும் நடைமுறை. நீண்டகாலமாக உறுப்பினராக இருக்கும் உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டியது.

உங்கள் பதிலின் மூலம், நீங்கள் தெரிந்து கொண்டே முடிந்த விடயங்களை காவித் திரிகின்றீர்கள் என்று புலப்படுகின்றது. ஏன் அவ்வாறு செய்கின்றீர்கள் என்று கேட்கும் போது, நான் ரிப்போர்ட் பண்ணியதுக்கு பதில் இல்லை என்பதால் தான் என்ற மாதிரி பொருள் வரும் வண்ணம் பதில் கொடுக்கின்றீர்கள்.

நன்றி

அவ்வாறு அர்த்தம் வைத்து எழுதவில்லை

முடிந்தவிடயத்தை கிளறுவதாக எழுதியதற்கே எழுதினேன்..

தவிர்க்கின்றேன்

நன்றி..

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குள்ளேவா...????

யாழில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாடல் படபிடிப்பு ஒன்றில் நடிகர் டனிஸ் மற்றும் நடிகை திவ்யா  :wub:
 
10703512_717285951699616_224464392569487

10659338_717285948366283_897961899943011

10696407_717285961699615_772720861972388

10592875_717285945032950_630128497080627

  • கருத்துக்கள உறவுகள்

ஐ ஜாலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முக்கிய அடிப்படை உரிமைகளை தர மறுத்து.......

மனதை மாற்றும் மனோன்மிய நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா ஈடுபடுகின்றது என்பதைத்தான் பல திரிகளில் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்/ சொல்லுகின்றார்கள்.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உரிமை கிடைக்கும் வரைக்கும் உடலுறவு கொள்ளக்கூடாது என்று நினைத்தால் தாயகத்தில் ஒரு சனமும் இருக்காது  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு உடலுறவுக்கும் உரிமைக்கும் இடையில் உள்ள வித்தியாசம் தெரியல்ல. நாயும் தான் உடலுறவு கொள்ளுது. உரிமையா கேட்குது. நாய் போல வாழக் கடவ என்று சொல்கிறார்கள் போலும்..! :lol:

உரிமை இல்லாததால் தான் உடலுறவு தந்த வெகுமதிகளை எல்லாம் ஆயிரக்கணக்கில் இழந்து விட்டு இன்று அகதியாகி நாடு நாடா.. அரசாங்கக் காசுக்கு உடலுறவு கொள்ளும் நிலையில் இருக்கிறான் தமிழன்..! இதையும்.. சிங்களவனின் மகிந்த சிந்தனைக்கு சிகரம் வைப்போர் சிந்திக்க வேண்டும். :D:lol:

அப்ப சரி உரிமை கிடைக்கும் வரைக்கும் எல்லாத்தையும் உறை நிலையில் வையுங்கோ.ஆனால் அங்கை மட்டும் இல்லை இங்கையும். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உரிமை என்ற வார்த்தையே பூமியில்.. உள்ளவனுக்குத் தான். இல்லாதவனுக்கு அல்ல. இந்த அடிப்படையையே புரிந்து கொள்ளாமல்.. விசமக் கருத்து எழுதிக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை..! அவற்றிற்கு பதில் எழுதுவது எங்களைப் பொறுத்தவரை அநாவசியம். :lol::icon_idea:

நல்ல விடையம்

கொட்டடி ,நாவாந்துரை , கரையூர் சனம் கக்கா போக மம்மெட்டியோடை ஒதுங்கின இடமெல்லாம் ஜெலிக்குது...!!
:icon_mrgreen:

எங்கட கோத்தா பிடிச்ச ஒரே சண்டை உந்த கடக்கரையிலை தானே...  அவருக்கும் ஒரு சிலை வைச்சால் இன்னும் மிளிரும்... !! 

  • கருத்துக்கள உறவுகள்

மண்டைதீவை.. சிங்கள கடற்படை விழுங்கினது தெரியாமல் இருக்க.. இங்கால.. நெதர்லாந்து எங்களை அடிமைப்படுத்திய சின்னமான... கோட்டையை சீரமைக்க கொடுத்த காசில.. விளையாட்டு நடக்குது.  எல்லாரும் எங்களை அடிமைப்படுத்திறதில தான் குறியா இருக்காங்க. கொலண்டில போய் நாங்கள் கோவில் கட்டனுன்னாலும்... பெமிசன் எடுக்கனும். அவன் கோட்டை கட்டினாலும்.. ஒன்னும் எடுக்கத் தேவையில்லை.. இன்றைக்கும்..!! :icon_idea::lol:

எமது பிரதேசங்களை நாமே எமது வரிப்பணத்தில் எமது சொந்த திட்டங்களின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யும் எமது உரிமையை பறித்து, எமது வரிப்பணம் முழுவதையும் கொழும்பு கொள்ளையிட்டு, எம்மை அடக்கி ஆண்டு கொண்டு, நாம் தெரிவு செய்த எமது பிரதிநிதிகளுக்கு சட்டப்படி உள்ள சிறிய அற்ப அதிகாரங்களை கூட மறுத்து, பிச்சை போடும் பாங்குடன் சிங்கள அரசு செய்யும் இந்த அற்ப செயல்களை பாராட் டுவதற்கு நான் ஒன்றும் அறிவற்ற முட்டாள் இல்லை . ஒவ்வொரு அறிவுள்ள மனிதனும் இவ்வாறே சிந்திப்பான் என நான் நினைக்கிறேன்.

அதற்காக இவ்வாறான அபிவிருத்திகள் தேவையில்லை என நான் கூறுவதாக தவறாக எவரும் எண்ணவேண்டாம். இதை விட பன்மடங்கு அபிவிருத்தியை செய்வதற்கான எமது வலு ஶ்ரீலங்கா அரசால் எம்மிடம் இருந்து அநீதியான முறையில் பறிக்கப்பட்ட ஜதார்த்தத்தை அறியாத பேதைகளாக நாம் இருக்கக்கூடாது.

Edited by tulpen

யாழ்ப்பாணமும் கொழும்பு மாதிரி வருகுது....

இந்த இடம் Galle-face மாதிரி வந்தா சனத்துக்கும் நல்ல பொழுது போக்கா இருக்கும்....சுற்றுலாத்துறையும் வளரும்....மக்கள் இந்த போரின் வேதனைகளில் இருந்து வெளிவரவும் உதவும்....

நல்ல முயற்சி.... நன்றி Holland

கோட்டையை வாங்கி (எடுத்து) ஒரு நல்ல ஹோட்டல் கட்டினால் நல்லது....

பார்க்க சந்தோசம் சந்தோசம் ஆக இருக்கு ,

முப்பது வருட போரில் எதையும் அனுபவிக்காமல் இருந்தவர்கள் இனியாவது கொஞ்சம் சந்தோசமாக இருக்க விடுங்கள் .

அரசியல் தீர்வு அரசியல்வாதிகளிடம் விட்டு விடுங்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.