Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா தமிழ் பெண்ணிற்கு ஜோதிடரால் வந்த துயரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

astrologer-473x315.jpg

 

முனியாப்பாவின் முகத்தை பார்க்க, அப்பாவியாய் இருக்கிறார் :lol: . 

அப்படிச் செய்யக் கூடியவர் மாதிரி தெரியவில்லை :D .

சாத்திரம் பார்த்த, சோதிடர் எக்கச்சக்கமாக மாட்டுப் பட்டுப் போனார். :icon_mrgreen:

தமிழ்சிறி, டோட்டுமூண்ட் தமிழ்க்கடைகள் உள்ள தெருவில் போய் பாருங்கோ எத்தனை சாத்திரிமாருக்கு விளம்பரமும் கொடுத்து கடைகளில் ஒரு இடமும் கொடுத்து சாத்திரம் பார்க்கிறார்கள். குடும்ப பிரச்சனைகள் உள்ளவர்கள் தமிழ்கடைகளில் வேலைசெய்யும் பணியாளர்கள் அல்லது முதலாளிகளிடம் தங்கள் சோகத்தை சொல்லிவிட அவர்களுக்கு இதுபோன்ற பரிகாரிகள் நுளைந்து நாசம் விளைத்த கதைகள் டோட்மூண்ட் நகரில் தமிழ்கடைகள் உள்ள பகுதியில் நடந்துள்ளது. வரி செலுத்தாமல் தமிழரை ஏமாற்றும் சாத்திரிமாரை டோட்மூண்டிலிருந்து துரத்தினால் பல நகரங்களிற்கு கள்ளச்சாத்திரிமார் ஏமாற்ற போகமாட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் இந்தியாவிலிருந்து விசாவில் வந்து சாத்திரம் பார்ப்பவர்.  இவரை யார் பிணையில் எடுப்பார்கள்?  அப்படியே எடுப்பதாக இருந்தாலும் அவர்களால் அத்தனை பணம் செலுத்தி எடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

 

இங்கு காதலனாக இருந்தாலும் பெண்ணின் விருப்பமின்றித் தொட்டாலே அது குற்றம்.  ஆகவே, இந்த வாதம் இங்கு எடுபடாது.  இவரால் வேறு பெண்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களையும் முன்வந்து காவல்துறையிடம் முறையிடுமாறும் காவல்துறை கேட்டுள்ளது.  ஆகவே, இது அவரைச் சிக்க வைப்பதற்காக நடத்தப்பட்ட நாடகமாகக்கூட இருக்கலாம்.   

 

பிணை எடுக்க முடியாதா? அது தான் ஆயிரக் கணக்கில் நம்மவர்கள் கொடுத்து இருக்கின்றார்களே.
 
மேலும் கறுப்பி தந்த செய்தியின் படி, பார்த்தால் பிணை வழங்கக் கூடிய அளவில் உள்ள சிறிய விடயமே. பெரிய விடயமாக இருக்கப் போவதில்லை. காரணம் இங்கே பலாத்காரம் நடைபெற வில்லை என நிருபிக்கபடும்.
 
ஆனால், நிழலி தந்த ஆங்கில ஊடக செய்திப் படி,  இந்த நிகழ்வு வியாழக் கிழமை நிகழ்ந்து உடனேயே போலிஸ் முறையீடு செய்யப் பட்டு உள்ளது. எனவே நீங்கள் சொல்வது சரியானது.

Edited by Nathamuni

லாச்சப்பலிலும் சில வருடங்களுக்கு முன்னர் மலையாளச் சாத்திரிமாரின் படையெடுப்பு இருந்தது. மூலை முடுக்குகளில் வெற்றிலையுடன் நிற்பார்கள். இப்போது எப்படியோ தெரியவில்லை. ஒன்றுமட்டும் நிச்சயமாகக் கூற முடியும், இவர்கள் இந்தியாவில் கோடீஸ்வரர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சனி வக்கிர நிவர்த்திக்கு சாத்திரிட்டப் போனால் முனி உக்கிர நிவர்த்தி செய்து  ஜெயிலேறி விட்டுது...!  :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

இதில் வந்து யாரில் பிழை அதிகம் இருக்கிறது இல்லை என்றதற்கும் அப்பால்..இப்போ எல்லாம் காவல்துறைக்குள் மொழி பெயர்ப்பு என்னும் பெயரிலும் தமிழ் மக்கள் வீடுகளில் நடை பெறும் களவுகள் மற்றும் இதர பிரச்சனைகளால் தமிழர்களே நிறையப் பேர் காவல்துறையோடு சேர்ந்து நிக்கிறார்கள்...அங்கே மிகவும் சாதரணமாக பணியில் இருந்து கொண்டு மற்றவர்களை,தமிழர்களை சக நட்புக்களைக் கூட எப்படி வெருட்டி ஆழுகிறார்கள் என்பதும் எனக்கு தெரியும்...சரி அதை விடுங்கள்...

ஒரு பெண் நேரடியாக போய் எனக்கு இவர் இப்படிச் செய்து போட்டார் என்று சொல்ல வேண்டி வந்திருக்காது...எப்படியாவது மனசில பயம் இருந்திருக்கும்..தன்னில் பிழை இல்லை அல்லது முழுப்பிழையும் தன்னில் வந்திடும் என்பற்காக பெண்மணி முந்திக் கொண்டாரோ தெரியவில்லை...இதில் உண்மைக்கு புறம்பாக நிறைய விடையங்கள் திரிக்கபட்டு இருக்கின்றன என்பதும் உண்மை...தமிழர்கள் ஊடாகத் தான் இந்த செய்தி பரவத் தொடங்கியது என்பதும் உண்மை..அது மட்டுமல்ல அந்தப் பெண் சற்றேனும் சுய புத்தியோடு,ஆங்கில அறிவோடு இருந்திருக்க கூடிய ஒருவராக இருந்திருந்தால் கண்டிப்பாக இப்படி நடக்க வாய்ப்புக்கள் மிக குறைவு...ஆண்கள் தங்கள் அதி மேதாவித் தனத்தை பெண்கள் மத்தியில் காட்டி நல் மதிப்பை பெறுவதற்காக பொன்சாக இருப்பதை தவிர வேறு வழி இல்லை..பெண்கள் தங்களை பத்தினிகளாகவும்,ஆண்கள் தங்களை ஏக பத்தினி விரதன்களாக இருக்கிறம் என சுய தம்பட்டம் அடித்தாயினும் தங்கள் காரியத்தில் கண்ணாக இருப்பது பல ஆண்டுகளாக நடக்கும் நாடகம் தான்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு  பேருடைய  சுக  செய்திகள் 

எவ்வளவுக்கு  மக்களால் விரும்பப்படுகின்றன :lol:

அலச விரும்புகின்றனர்  என்பதற்கு இத்திரி  சாட்சி... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

 

astrologer-473x315.jpg

Officers arrested Bhaskar Muniyappa, 30, and charged him with sexual assault.

He’s due in court on Oct. 22.

Police believe there may be more victims and are asking anyone with information to call them.

 

http://www.citynews.ca/2014/09/13/astrologer-accused-of-sexually-assaulting-client/

 

 

(Sexual assault takes many forms including attacks such as rape or attempted rape, as well as any unwanted sexual contact or threats. Usually a sexual assault occurs when someone touches any part of another person's body in a sexual way, even through clothes, without that person's consent.)

 

 

இப்படிச் செய்தி வந்திருப்பதால் நடந்தது என்ன என்று சம்பந்தப்பட்டவர்களின் வாக்குமூலத்தினால் மட்டுமே அறிய முடியும்.

சாத்திரி நாடு கடத்தப்பட வாய்ப்புக்கள் அதிகம். அத்துடன் இந்தக் கள்ளச் சாத்திரிகளுக்குக் கனேடிய அரசாங்கம் எந்த அடிப்படையில் விசா வழங்குகின்றது. பல ஆலயங்கள் மற்றும் ஆலய நிர்வாகிகள்  இந்தக் கள்ளச் சாத்திரிகளுடன் கூட்டணி அமைத்து  வைத்திருக்கலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சில தருணங்களில் இந்தச் சாத்திரிமாருக்குத் துண்டுபிரசுரம்  குடுக்கிற ஆக்களைக் காணேக்கை  கதப்பாவடியைப் பொத்திக் குடுக்கவேணும் போலை இருக்கும். ஊரிலை என்டால் செய்திருக்கலாம். இங்கே நாம தான் உள்ளே போகவேணும் :D எண்டுவிட்டு முகத்தை மறுப்பக்கம் திருபிக்கொண்டே செல்வேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

சில தருணங்களில் இந்தச் சாத்திரிமாருக்குத் துண்டுபிரசுரம்  குடுக்கிற ஆக்களைக் காணேக்கை  கதப்பாவடியைப் பொத்திக் குடுக்கவேணும் போலை இருக்கும். ஊரிலை என்டால் செய்திருக்கலாம். இங்கே நாம தான் உள்ளே போகவேணும் :D எண்டுவிட்டு முகத்தை மறுப்பக்கம் திருபிக்கொண்டே செல்வேன். :)

 

பிரான்சில் தமிழர்களைவிட

ஆபிரிக்கர்களின் அதிக்கம் இதில் அதிகம்...

 

தற்பொழுதும் செய்வினை சூனியங்களை  அதிகம் நம்புகிறார்கள்..

 

நான் கடை திறந்த ஆரம்பத்தில் ஒருத்தர் வந்து

ஆதிக்கம் செலுத்த நினைத்தார்

உது நம்மிடம் சரிவராது வேற இடம் பார் என்றதுக்கு

எண்ணி ஒரு வாரத்துக்குள் கடையைப்பூட்டிவிட்டு ஓடுவாய்  என்றுவிட்டு  

ஏதோ  எல்லாம் அவரது பாசையிலும் அல்லாவின் பாசையிலும் :lol: முணுமுணுத்தார்..

 

இப்ப 11 வருடம் ஆகுது..

எங்காவது கண்டால்

நான் நேரே பார்க்க

அவர் பார்வையை  மாற்றி  நழுவிவிடுவார்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பேருடைய சுக செய்திகள்

எவ்வளவுக்கு மக்களால் விரும்பப்படுகின்றன :lol:

அலச விரும்புகின்றனர் என்பதற்கு இத்திரி சாட்சி... :icon_mrgreen:

நீங்க நல்லவரா கெட்டவரா? :o
இந்த பெண்ணின் கதையை அவரின் கணவன் நம்பினால் அவரை விட இளிச்சவாயன் இந்த உலகில் இருக்க முடியாது. பல தடவை அழைத்து உறவு கொண்டாராம் அதன் பின் அவக்கு சந்தேகம் வந்ததாம்.  இந்த பெண் தனது தவறை மறைக்க அப்பாவி முனியப்பா கம்பி எண்ணுறார்.   :lol:
 
 

ஆஹா.... சூப்பர் ஐடியா..

 

'நிழலியானந்த சரஸ்வதி சாஸ்திர மகா நிலையம்' என்ற ஒரு சாத்திர மடம் ஒன்றை கட்டி விரைவில் பிசினஸ்சை ஆரம்பிக்க வேண்டியதுதான்...

 

கவனம் நிழலி...இப்பதான் ஒரு சாமியாரை இந்தியாவில ஆண்மை பரிசோதனை என்ற பேரில நாள் முழுக்க "நிப்பாட்டி" அனுப்பி இருக்கிறாங்கள். தெம்பா போன ஆள் திரும்பி சக்கர வண்டியில தான் வந்த்தது. எது செய்தாலும் பிளான் பண்ணி செய்வது நல்லது.  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி, டோட்டுமூண்ட் தமிழ்க்கடைகள் உள்ள தெருவில் போய் பாருங்கோ எத்தனை சாத்திரிமாருக்கு விளம்பரமும் கொடுத்து கடைகளில் ஒரு இடமும் கொடுத்து சாத்திரம் பார்க்கிறார்கள். குடும்ப பிரச்சனைகள் உள்ளவர்கள் தமிழ்கடைகளில் வேலைசெய்யும் பணியாளர்கள் அல்லது முதலாளிகளிடம் தங்கள் சோகத்தை சொல்லிவிட அவர்களுக்கு இதுபோன்ற பரிகாரிகள் நுளைந்து நாசம் விளைத்த கதைகள் டோட்மூண்ட் நகரில் தமிழ்கடைகள் உள்ள பகுதியில் நடந்துள்ளது. வரி செலுத்தாமல் தமிழரை ஏமாற்றும் சாத்திரிமாரை டோட்மூண்டிலிருந்து துரத்தினால் பல நகரங்களிற்கு கள்ளச்சாத்திரிமார் ஏமாற்ற போகமாட்டார்கள். 

 

எமது பகுதியில்.... இப்படியான, சாத்திரிகளை  காணக் கிடைக்குதில்லை சாந்தி.

சுமார் இருபது வருடத்துக்கு முன்  ஒருவர், நீங்கள் கூறிய மாதிரி தமிழ்கடை ஒன்றில் சாத்திரம் பார்க்க வந்தவர். அவர் எனது நண்பர் வீட்டில் ஒருசில நாள் தங்கியிருந்தார். காலையில் அவருக்கு முட்டைப் பொரியலுடன் சாப்பாடு வேணும்.

ஆனால்... சாத்திரியாரின்  கஸ்ரகாலம்....

வெள்ளிக் கிழமையும்..... முட்டைப் பொரியல்haushalt_0018.gif வேணும் என்று சொன்னதால்.....

நண்பர் அவரை வீட்டை விட்டு அனுப்பிவிட்டார்.

அதோடை.... போனவர் தான், அதுக்குப் பிறகு இந்தப் பக்கம் ஒரு சாத்திரி மாரும் வருவதில்லை. :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரும் சாத்திாியை குறை சொல்லும் அதே வேளை, கனடாமிரா் எந்த அடிப்படையில் இந்த செய்தியை  வெளியிட்டுள்ளது என்பது அடுத்த கேள்வி. வெளிவந்துள்ள செய்திகளின் அடிப்படையில் வியாழக்கிழமை கொடுத்த புகாாின் அடிப்படையின் அன்றே கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்றது ஆனால் கனாடா மிரா் என்ன சொல்கிறது அவா்களுக்கு அந்த செய்தியை வழங்கியது யாா்? 

சிலநேரம் ரொரன்ரோ காவல்துறையினா் இவா்களிடம் தான் குற்றப்பத்திாிகையை கொடுத்தாா்களோ என்னவோ தொியவில்லை. 

சம்மவம் நடைபெற்ற இடத்தில் தமிழ் வணிபநிறுவனங்கள் எதுகும் இல்லை. ஆனால் அருகிருக்கும் உயா்மாடிக்குடியிருப்புக்களின் நூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்கள் வசிக்கின்றன. 

இதில் சம்பந்தப்பட்ட பெண் தமிழா் தானா? பாஸ்கா் முனியப்பா ஒரு  தமிழ் சோதிடரா என்பவை உறுதிப்படுத்தப்படவில்லை. 

அது மட்டுமன்றி ரொரன்ரோ காவல்துறையின் இணையத்தில் sexual assault என்று மட்டுமே தொிவிக்கப்பட்டுள்ளது. 

 

A sexual assault is any form of unwanted sexual contact. It includes, but is not limited to, kissing, grabbing, oral sex and penetration.

 

சட்ட ரீதியில் $10,000 செலவு செய்ய முடியுமானால் இதன் தீா்பை சாதகமாக்கி கொடுக்க ரொரன்ரோ பெரும் பாகத்தில் நிறைய சட்டவல்லுனா்கள் இருக்கின்றனா்.  இது நடைபெற்றுள்ள 12 பிாிவில் இன்னும் இலகு..!

இந்த விசாரனை தொடா்பாக தகவல் தொிவிக்க :
12 Division-416-808-1200

 

 

 

Sexual Assault Alert, 
Bhaskar Muniyappa, 30, arrested, 
Photograph released, 
Police believe there may be more victims


Broadcast time: 14:16
Friday, September 12, 2014

12 Division
416-808-1200


The Toronto Police Service would like to make the public aware of an arrest in a Sexual Assault investigation. 

It is alleged that: 

- on Thursday, September 11, 2014, at approximately 1 p.m., a 38-year-old woman attended the Sri Vinayaka Astrologer at 2310 Keele Street 

- the male astrologer sexually assaulted her 

Bhaskar Muniyappa, 30, of Toronto, was arrested. 

He is charged with: 

1) Sexual Assault 

He is scheduled to appear in court at 2201 Finch Avenue West on Wednesday, October 22, 2014, at 1 p.m. 

Police believe there may be more victims 

Anyone with information is asked to contact police at 416-808-1200, Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477), online at www.222tips.com, text TOR and your message to CRIMES (274637), or Leave A Tip on Facebook
 

NR.30041.1410536094.jpg

Edited by Nitharsan

  • கருத்துக்கள உறவுகள்

 

கனடா தமிழ் பெண்ணிற்கு ஜோதிடரால் வந்த துயரம்
Ca.Thamil Cathamil September 15, 2014 Canada
 
கனடா ரொரொன்ரோ நோத்ஜோக் பகுதியில் தனது கணவன் மற்றும் பிள்ளையின் ஜாதகங்களைக் கொண்டு சென்ற 38 வயதான தமிழ் குடும்பப் பெண் ஒருவரை கணவனுக்கு கண்டம் இருக்கின்றது எனத் தெரிவித்து பெண்ணைக் கண்டம் பண்ணியுள்ளான் ஜோதிடன்.
 
அப் பகுதி ஜோதிட நிலையத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. 30 வயதான ஜோதிடரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
 
இவனிடம் ஜோதிடம் பார்க்கச் சென்ற குடும்பப் பெண்ணை கணவா் 6 மாதத்துக்குள் மரணமடைந்து விடுவார் என பயமுறுத்தி அதற்கு பரிகாரமாக இன்னொருவருடன் உடலுறவு செய்தால் கணவா் தப்பிவிடுவார் எனத் தெரிவித்து குறித்த குடும்பப் பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உறவு கொண்ட பின் பல தடவைகள் அப் பெண்ணை அழைத்து பரிகாரம் என்ற பெயரில் உடலுறவு கொள்ளவே சந்தேகப்பட்ட பெண் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.
 
இவரைக் கைது செய்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா். எதிர்வரும் 22ம் திகதி இவரை நீதிமன்றில் ஆயா்படுத்த நடவடிக்கை எடுத்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனா். குறித்த ஜோதிடா் மேலும் பல பெண்களை இவ்வாறு தெரிவித்து பாலியல் உறவு கொண்டதாகத் தெரியவருகின்றது.
 

 

 

கனம் கோட்டார் அவர்களே..! ஒரு திருமணமான பெண் என் கட்சிக்காரர் பலதடவை அழைத்து உடலுறவு கொண்ட பின்னரே அதுதான் உடலுறவோ என்று சந்தேகப்பட்டிருக்கிறார் என்றால், அது யார் குற்றம்...? இந்த சமூகத்தின் குற்றமா? அந்தப்பெண்ணின் கணவரின் குற்றமா? என் கட்சிக்காரரின் குற்றமா? உங்கள் குற்றமா? என் குற்றமா? அல்லது அசண்டையீனமாக இருந்த நம் அனைவரினதும்  குற்றமா?  :D

இரண்டு  பேருடைய  சுக  செய்திகள் 

எவ்வளவுக்கு  மக்களால் விரும்பப்படுகின்றன :lol:

அலச விரும்புகின்றனர்  என்பதற்கு இத்திரி  சாட்சி... :icon_mrgreen:

100% உண்மையான விசயம்....... :icon_mrgreen:     :D     :icon_idea:

கனம் கோட்டார் அவர்களே..! ஒரு திருமணமான பெண் என் கட்சிக்காரர் பலதடவை அழைத்து உடலுறவு கொண்ட பின்னரே அதுதான் உடலுறவோ என்று சந்தேகப்பட்டிருக்கிறார் என்றால், அது யார் குற்றம்...? இந்த சமூகத்தின் குற்றமா? அந்தப்பெண்ணின் கணவரின் குற்றமா? என் கட்சிக்காரரின் குற்றமா? உங்கள் குற்றமா? என் குற்றமா? அல்லது அசண்டையீனமாக இருந்த நம் அனைவரினதும்  குற்றமா?  :D

சுபேஸ் எப்போ தொடக்கம் இந்த வேலை????? நல்லா உழைப்பியள்... அதோட நல்லா வாங்கியும் கட்டுவியள்.....  :icon_mrgreen:     :D

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் செய்த பரிகாரம் டபுளா வேலை செய்திருக்கு.பரிகாராம் செய்திருக்கா விட்டால் கணவன் இறந்திருப்பார்.பரிகாரம் செய்த படியால் அந்தப் பெண்ணுக்கு 2 கணவன்மார் கிடைத்து விட்டனர். சரி இப்ப விடயத்துக்கு வருவம். இப்படித்தான் இலன்டனில் கடைத்தெருவொன்றில் ஒருவர் என்னை மறித்து தம்பி நான் ஒரு சாத்தரி இங்ச எங்காவது கடைகளில் இடம் கிடைக்குமா என்று கேட்டார்.அதற்கு நான் சொன்னேன் நானும் ஒரு சாத்திரிதான் நானும் இடம் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.இருந்தால் சொல்லுங்கள் என்றேன்.சாத்திரி மெல்ல நழுவிஜ விட்டார்.என் நண்பன் என்னடா இப்பிடிச் சொல்லிட்டியே என்றான். நான் சொன்னேன் இவங்களுக்கு இப்பிடித்தான் சொல்ல வேண்டும் என்றென்.புலம்பெயர்ந்த நாடுகளில்' இருக்கும் ஒலி,ஒளி,அச்சு ஊடகங்கள் காசுக்காக விளம்பரம் செய்வதை உடனே நிறுத்த வேண்டும்.வெளியில் கதைப்பது பகுத்தறிவு.கேட்டால் ஊடகம் நடத்த கணம் வேண்டும் என்பார்கள் இந்த ஊடக விபச்சாரிகள்.இந்தச் செய்தியை இந்தத் தமிழ் ஊடகம் திரித்து கிளுகிளுப்பாக எழுதியிருக்குது போல இருக்கு. ஆங்கில ஊடகம் எவ்வளவு நாகரிக மாக எழுதி இருக்கு.2பேர் சம்பந்தப்பட்ட விடயம் பெரிய செய்திகாக வருவது சம்பந்தப்பட்ட ஊடகத்தின் செங்தி வறுமையத்தான் காட்டுகிறது.

இதிலே பல கருத்துகள்.. மற்றவரை மட்டம் தட்டவும்.. ஏளனம் செய்யவும்... முட்டாளாக்கவுமே பயன்பட்டதோடல்லாமல், தமது அறிவு அதிகார உத்தரவை நிறைவேற்றும் நோக்கையே உமிழ்கின்றன!!  :o

  • கருத்துக்கள உறவுகள்

இதிலே பல கருத்துகள்.. மற்றவரை மட்டம் தட்டவும்.. ஏளனம் செய்யவும்... முட்டாளாக்கவுமே பயன்பட்டதோடல்லாமல், தமது அறிவு அதிகார உத்தரவை நிறைவேற்றும் நோக்கையே உமிழ்கின்றன!!  :o

இதில் இருவரும் மோசடி செய்திருக்கிறார்கள்.
இரு மோசடிகார்கள் கையும் மெய்யுமாக பிடிபட்டு இருக்கிறார்கள். ஒருவர் மனைவி மீது கணவன் வைத்த நம்பிக்கைக்கு பெருத்த துரோகம் இளைத்திருக்கிறார்.
 
இதில் எவ்வாறான கருத்தை நீங்கள் எதிர் பார்கிறீர்கள்???
 
இந்து கோவில்களில் மக்களை எய்த்து பிழைக்கும் பூசாரிகளையும் ...... பூசாரிகளை கொண்டு வந்து தமது வங்கி கணக்கை நிரப்பும் மோசடிகளையும் பாரட்டியா எழுத முடியும்??
மதம் என்ன சொல்கிறது என்பதை ..... ஒரு நாள் தனமும் நின்று நிதானித்து சிந்தித்தது இல்லை.
எமது மதம் என்று ....... பூசி மெழுகிவிட்டு காவடி எடுக்கும் அடாவடிகளை. அடுத்தவன் பார்த்தால் சிரித்து விட்டுதான் போவான். 
 
பலனை பாராதே ... கருமம் செய்.
நானும் மனைவியும் நலமாய் இருக்கோணும் என்று நட்சத்திரத்தை சொல்லி அர்சனை செய்ய சொல்லி சைவ மதம் சொல்லவில்லை. போலிகள்தான் செய்கிறார்கள் .............. எமது மதத்தை அசிங்கம் படுத்தி வருகிறார்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

இதிலே பல கருத்துகள்.. மற்றவரை மட்டம் தட்டவும்.. ஏளனம் செய்யவும்... முட்டாளாக்கவுமே பயன்பட்டதோடல்லாமல், தமது அறிவு அதிகார உத்தரவை நிறைவேற்றும் நோக்கையே உமிழ்கின்றன!!  :o

 

 

நல்லவர்கள் கல் எறியலாம் என்கிறீர்களா??? :(

நான் வரல இந்த விளையாட்டுக்கு.... :lol:  :D

 

இதில் எவ்வாறான கருத்தை நீங்கள் எதிர் பார்கிறீர்கள்???
 

நல்லவர்கள் கல் எறியலாம் என்கிறீர்களா??? :(

நான் வரல இந்த விளையாட்டுக்கு.... :lol:  :D

 

இதுதான் என்று குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை.. இருவர் சம்பந்தமான பிரச்சினையை சமயத்துடனும் சாத்திரத்துடனும் சம்பந்தப்படுத்துவதையும்... அந்த பெண் அறிவற்றவர் என்றவகையில் கருத்தளிப்பதையுமே சுட்டிக்காட்டினேன். 

 

கனடாவரைக்கும் வந்தவர்களுக்கு இதை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தெரியாதா, என்ன?!  :o  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

 

இதுதான் என்று குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை.. இருவர் சம்பந்தமான பிரச்சினையை சமயத்துடனும் சாத்திரத்துடனும் சம்பந்தப்படுத்துவதையும்... அந்த பெண் அறிவற்றவர் என்றவகையில் கருத்தளிப்பதையுமே சுட்டிக்காட்டினேன். 

 

கனடாவரைக்கும் வந்தவர்களுக்கு இதை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தெரியாதா, என்ன?!  :o  :lol:

 

 

இது போன்றதொரு பிரச்சினையில எனக்கொரு  அனுபவமுண்டு..

 

ஒரு குடும்பப்பிரச்சினைக்கு இரு தரப்பிலும் பேசவேண்டிவந்தது

 

கணவர் இருக்க

அந்த பெண்  இன்னொருவருடன் தன்னை  பகிர்ந்து கொண்டார்

அவர்  சைவ  சமயத்திலிருந்து  கத்தோலிக்க மதத்துக்கு புதிதாக மாறியிருந்தார்...

இது தப்பல்லவா  என நான் கேட்டபோது

அவர் சொன்ன  பதில்

பலமுறை இரந்து கேட்டால் கொடு என்று யேசு  சொல்லியுள்ளார் என்பதாகும்.....

நான் அதற்கு  அவருக்கு சொன்ன  பதில்

உங்களுக்கு சைவ  சமயத்தையும் புரியல

கத்தோலிக்கத்தையும் புரியல என்பதாகும்... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

 

இதுதான் என்று குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை.. இருவர் சம்பந்தமான பிரச்சினையை சமயத்துடனும் சாத்திரத்துடனும் சம்பந்தப்படுத்துவதையும்... அந்த பெண் அறிவற்றவர் என்றவகையில் கருத்தளிப்பதையுமே சுட்டிக்காட்டினேன். 

 

கனடாவரைக்கும் வந்தவர்களுக்கு இதை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தெரியாதா, என்ன?!  :o  :lol:

உங்களுடைய எண்ணம் புரிகிறது ..........
 
ஆனால் இதில் பெண்ணும் பெரிய மோசடி காரராக இருந்திருக்கிறார் என்பதனால்தான் அப்படியான கருத்துக்கள் வருகின்றன.
இவர் சாத்ரியிடம் எமாறுவதுபோல் ....... கணவனை ஏமாற்றி இருக்கிறார்.
 
இது கலியாணம் பேசுவோர் மீதுதான் அதிக குற்றம் என்பது என்னுடைய தனிபட்ட கருத்து.
கணவனின் துணையோடுதான் ...... மனைவி காமனை வென்றாக வேண்டும்.
வெளிநாட்டில் மாப்பிளை என்ற .... தகுதியை காட்டி வயது குறைந்த பெண்களை எலாவாளி ஆண்கள் முடித்து கொள்கிறார்கள். பின் பெண்கள் சாத்ரியுடன் போக வேண்டி வருகிறது.
இது பொதுவான கருத்து.
 இவர்களுடைய வாழ்வில் என்ன நடந்தது என்பது இனிதான் தெரிய வரும்.
 
போத்திலை உடைத்து குடிக்கிறான் இன்று திருவிழாத்தான் என்று பெண்கள் இருக்க .... அவர் அப்படியே இருந்த சோபாவிலேயே குறட்டை விட்டு தூங்கிவிடுவார். நாளும் நாளும் ஏமாற்றம் தொடரும்போது ....
நாலாம் நபரின் வருகை சுலபமாகிவிடுகிறது.  
  • கருத்துக்கள உறவுகள்

இது போன்றதொரு பிரச்சினையில எனக்கொரு  அனுபவமுண்டு..

 

ஒரு குடும்பப்பிரச்சினைக்கு இரு தரப்பிலும் பேசவேண்டிவந்தது

 

கணவர் இருக்க

அந்த பெண்  இன்னொருவருடன் தன்னை  பகிர்ந்து கொண்டார்

அவர்  சைவ  சமயத்திலிருந்து  கத்தோலிக்க மதத்துக்கு புதிதாக மாறியிருந்தார்...

இது தப்பல்லவா  என நான் கேட்டபோது

அவர் சொன்ன  பதில்

பலமுறை இரந்து கேட்டால் கொடு என்று யேசு  சொல்லியுள்ளார் என்பதாகும்.....

நான் அதற்கு  அவருக்கு சொன்ன  பதில்

உங்களுக்கு சைவ  சமயத்தையும் புரியல

கத்தோலிக்கத்தையும் புரியல என்பதாகும்... :(  :(  :(

இரந்து  கேட்க கூடிய சீரும் சிறப்புமான இடமா ???
முகவரியை தந்தால் ...
நாங்களும் பலமுறை கேட்டு பார்க்கலாம். 
 
 
ஒரு சின்ன நகைசுவை.....
 
ஒருவர் பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கேட்க போனார். பாதிரியார் என்ன தப்பு என்று கேட்டிருக்கிறார்.
எனக்கு ஒரு பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டு விட்டது நான் பாவம் செய்து விட்டேன் என்று சொல்லி இருக்கிறார். பாதிரியார் அந்த ஊரில் பல பாவ மன்னிப்பு கேட்டு வருவதால் தப்பு செய்ய கூடிய பெண்களை தெரிந்திருந்தார். பாதிரியார் கேட்டிருக்கிறார் ...... 
பெண் யார் என்ஜலாவா ?  பதில்: இல்லை 
மேரியா ?  இல்லை 
ரேஜினாவா ? இல்லை 
என்றுவிட்டு வெளியில் வந்திருக்கிறார். வெளியில் நின்ற நண்பர் பாவமன்னிப்பு பாதிரியார் தந்தாரா? என்று கேட்டிருக்கிறார். நண்பர் இல்லை புதிதாக மூன்று முகவரிகள் கிடைத்து இருக்கிறது. 
 
அதுபோலதான் உங்கள் கதையும் ..... 
சிறு துண்டு ரொட்டியையும் எட்டாக பகிர்ந்தவர் ஜேசு. வீணாக பாவத்தை தேடாதீர்கள் ....
முகவரியை பகிர்ந்து கொள்ளுங்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.