Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெ. தீர்ப்பு எதிரொலி: தமிழ்த் திரையுலகினர் நாளை உண்ணாவிரதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜெ. தீர்ப்பு எதிரொலி: தமிழ்த் திரையுலகினர் நாளை உண்ணாவிரதம்
 
 
 
 
cinema_jaya_2131802f.jpg
சென்னையில் 2013-ல் நடைபெற்ற 'இந்திய சினிமா நூற்றாண்டு விழா' நிகழ்ச்சி. | கோப்புப் படம்

 

 

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பின் எதிரொலியாக, ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகினரும் நாளை (செவ்வாய்க்கிழமை) மவுன உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கின்றனர்.

 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து எங்களது தமிழ்த் திரையுலகின் வருத்தத்தையும், உணர்வுகளையும் தெரிவிக்கும் வகையில், அறவழியில் ஒரு மாபெரும் மவுன உண்ணாவிரதப் போராட்டத்தை அனைத்து தமிழ்த் திரையுலகின் சார்பாக, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையின் முன்பு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தவுள்ளோம்.

 

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு மற்றும் சென்னை சிட்டி திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு, சினிமா பி.ஆர்.ஓ. யூனியன் உட்பட தமிழ்த் திரையுலகைச் சார்ந்த அனைத்துப் பிரிவினரும் கலந்துகொள்கின்றனர்.

இதையொட்டி, நாளை சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் திரைப்படம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளும், படப்பிடிப்புகளும், சின்னத்திரை படப்பிடிப்புகளும், அனைத்துத் திரையரங்குகளின் காட்சிகளும் மாலை 6 மணி வரை ரத்து செய்யப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் எங்கள் அன்பின் வெளிப்பாடு; நன்றி உணர்வின் வெளிப்பாடு. காலம் மாறும். தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கையுடன் தமிழ்த் திரையுலகம் உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

 

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article6457950.ece?homepage=true

என் தாயை கூண்டில் ஏற்றியவர்களுக்கு எதிரா நான் வரும் தேர்தலில் களமாடுவேன் என்பதை இங்கு கூறிக்கொள்கிறேன் ..அப்படி எல்லாம் நாளையை செய்தி வரும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஜெயலலிதா ஏதோ குற்றம் செய்யாதவர் போல் அல்லவா அவரைச் சார்ந்தவர்கள் நடந்து கொள்கின்றனர்.ஒரு அவமான செயலுக்கு வக்காலத்துவாங்கி உண்ணாவிரதம் இருக்கின்றார்கள். கேவலம்.
 
திரைப்படத்தில் ஊழல் செய்தவர்களுக்கு மக்கள் போராட்டம்  நடத்தி தண்டிப்பதாக காட்டுவார்கள்.
நிஜவாழ்க்கையில் ஊழல் செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்தால் உண்ணாவிரதம் இருப்பார்கள்.

இதுதான் உலகமகா நடிப்பு...

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதம் இருக்காவிட்டால் பிறகு படம் வெளிவராது..  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

திரையில மட்டும் தான் ஊழல் அரசியல்வாதியத் துரத்தித் துரத்திப் பின்னியெடுப்பீனம் போல இருக்கு! :D

இந்த உண்ணா விரதப் போராட்டத்தில் தானைத் தலைவி நமீதா கலந்து கொள்கின்றாரா? அவர் ஒரு வேளை உண்ணா விரதம் இருந்தாலும் இளைச்சுப் போய் விடுவார் என்று கவலையாக இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இனி  இதுவே.... ஒரு நோயாக, தமிழகம் எங்கும்...
வக்கீல், ஆட்டோ ஓட்டுனர், மல்லிகைப்பூ விற்போர் சங்கம் என்று....

எல்லாச் சங்கங்களும் உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இனி  இதுவே.... ஒரு நோயாக, தமிழகம் எங்கும்...

வக்கீல், ஆட்டோ ஓட்டுனர், மல்லிகைப்பூ விற்போர் சங்கம் என்று....

எல்லாச் சங்கங்களும் உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள்.

 
 
அது அம்மா ஜாமீனில் வரும் வரை தான்.
 
வாராவிட்டாலும் (வர மாட்டா எண்ட நிம்மதி), வந்தாலும் (வந்திடுவா எண்ட பயம்)  நின்று விடும். பயப்பிடாதீங்க  :D

 
 

இந்த உண்ணா விரதப் போராட்டத்தில் தானைத் தலைவி நமீதா கலந்து கொள்கின்றாரா? அவர் ஒரு வேளை உண்ணா விரதம் இருந்தாலும் இளைச்சுப் போய் விடுவார் என்று கவலையாக இருக்கு.

 

விஜய் வருவாரா?

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 
 

 
 

 

விஜய் வருவாரா?

 

 

அம்மா பாசம் யாருக்குத்தான் இல்லை எல்லோரும் வருவாக :D

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா பாசம் யாருக்குத்தான் இல்லை எல்லோரும் வருவாக :D

 

அவருக்கு அம்மா கொடுத்த வதையினால், அம்மா உள்ளுக்க போனவுடன், அவரது ரசிகர்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடுனார்கள்.
 
இவர் வாறது டவுட்டு... :rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு சினிமா சூட்டிங்கில் இருந்து பாடல் ரெக்கோடிங் வரை எல்லாமே ரத்தாமே!...நாதமுனி விஜய் கட்டாயம் போவார்.அவருக்கு பிழைக்க தெரியும்.:D

  • கருத்துக்கள உறவுகள்

ஜெ. தீர்ப்பு எதிரொலி: தமிழ்த் திரையுலகினர் நாளை உண்ணாவிரதம்

 

 

இதிலிருந்து தெரிவது என்னவென்றால்...

ஜெ.  பலமாகவே உள்ளார் முன்னரைவிட........ :( 

  • கருத்துக்கள உறவுகள்

ஜெ. தீர்ப்பு எதிரொலி: தமிழ்த் திரையுலகினர் நாளை உண்ணாவிரதம்

 

 

இதிலிருந்து தெரிவது என்னவென்றால்...

ஜெ.  பலமாகவே உள்ளார் முன்னரைவிட........ :( 

 

நான் வாசித்த வரை:
 
இந்த பிரச்னை தமிழக, கர்நாடக மாநில தண்ணிப் பிரச்சனையின் நீட்சி என்பதாகவே முடியப் போகிறது. 
 
ஜெயலலிதா இந்த சொத்து சேர்ப்பு விடயத்தில் பிழை விட்டிருந்தாலும், கர்நாடக நீதித் துறை, தனது மாநிலம் சார்பில், காழ்புனர்வுடன்  அளவுக்கு அதிகமாக பழி வாங்கி உள்ளது என வரப் போகிறது.
 
உதாரணமாக, தீரப்பு தந்த நீதிபதி வேண்டும் என்றே, சனிக் கிழமையையும், அதனுடன் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்களையும் தேர்ந்து எடுத்தார் என சொல்லப் பட்டு உள்ளது. அதாவது அப்பீல் செய்து உடனடியாக வெளிவர முடியாதவாறு  செய்யும் வண்ணமே இந்த தீர்ப்பு நாள் தெரிவு செய்யப் பட்டுள்ளது.
 
ஆகவே ஜெயலிலதா, முள்ளில் இருந்து சேலையை எடுப்புது போல், இந்த சிறை வாசத்தினை தமிழகத்துக்கு மாற்றி, தமிழக நீதமன்ற ஆளுமைக்கு கீழ் வந்த பின் இதை லாவகமாக  கையாண்டு மீண்டும் முன்னையை விட பெரும் பலத்துடன் வரப் போகிறார். 
 
ஆக, சிங்களவனின், நீதிமன்றில், புலிகளின் பெரும் தலைகள் நின்று இருந்தால் நாம் எப்படி நிலைமையில் உணர்வோமோ அதே போல் தான் அம்மா தமிழக எதிரி, கர்நாடகவிடம் இன்று நிற்பதாக தமிழகம் உணரப் போகிறது.
 
இந்த எதிரியிடம் மாட்டி விட்ட கருணாநிதி இன்னும் நாறப் போகிறார்.  :icon_idea:

 

 
 
உதாரணமாக, தீரப்பு தந்த நீதிபதி வேண்டும் என்றே, சனிக் கிழமையையும், அதனுடன் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்களையும் தேர்ந்து எடுத்தார் என சொல்லப் பட்டு உள்ளது. அதாவது அப்பீல் செய்து உடனடியாக வெளிவர முடியாதவாறு  செய்யும் வண்ணமே இந்த தீர்ப்பு நாள் தெரிவு செய்யப் பட்டுள்ளது.
 

 

 

20 திகதி சொல்ல இருந்த தீர்ப்பை 27 ஆம் திகதிக்கு மாற்ற செய்ததே ஜெயலலிதா தான். 20 ஆம் திகதி தீர்ப்பு சொல்ல இருந்த நீதிமன்றம்  வாஸ்துப்படி தனக்கு எதிரானதாக இருந்தமையால் புலிகளின் மூலம் ஆபத்து வரும் என்று பொய் சொல்லி நீதிமன்றத்தினை மாற்றக் கோரி 27 இல் தீர்ப்புச் சொல்ல வைத்தார். சனிக்கிழமை தீர்ப்பு சொன்னதன் காரணம் வார நாட்களை விட வார இறுதி என்றால் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்துவது இலகு என்பதால் தான்.

 

2001 இல் தமிழகத்தில் வழக்கு நடக்கும் போது, சாட்சியங்களை கலைத்து, முன்னுக்கு பின் முரணாக சாட்சியங்களை பேச வைத்து தன் அதிகாரத்து உட்பட்ட காவல்துறையை வைத்து அதிக தொல்லை கொடுத்தமையால் தான் தமிழகத்தில் வழக்கு நடத்த கூடாது என்று எதிர் தரப்பினர் கோரி கர்நாடகாவில் வழக்கை நடத்த ஆவன செய்தனர்.

 

நீதி மற்றத்தினையும் சட்டங்களையும் மதிக்க வேண்டிய முதலமைச்சர்,  வாய்தா வாய்தாவாக வேண்டி, வழக்கை இழு இழு என்று இழுக்க வைத்து இறுதியில் முக்கிய காலகட்டத்தில் வந்து தீர்ப்பை எழுத வைத்தார்.

 

இனியும் மேன்முறையீடு, தீர்ப்புக்கு தடை, தீர்ப்பு மீளாய்வு என்று இழுத்தடிக்கும் வேலைகளை செய்யத் தொடங்குவார்.

  • கருத்துக்கள உறவுகள்

20 திகதி சொல்ல இருந்த தீர்ப்பை 27 ஆம் திகதிக்கு மாற்ற செய்ததே ஜெயலலிதா தான். 20 ஆம் திகதி தீர்ப்பு சொல்ல இருந்த நீதிமன்றம்  வாஸ்துப்படி தனக்கு எதிரானதாக இருந்தமையால் புலிகளின் மூலம் ஆபத்து வரும் என்று பொய் சொல்லி நீதிமன்றத்தினை மாற்றக் கோரி 27 இல் தீர்ப்புச் சொல்ல வைத்தார். சனிக்கிழமை தீர்ப்பு சொன்னதன் காரணம் வார நாட்களை விட வார இறுதி என்றால் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்துவது இலகு என்பதால் தான்.

 

2001 இல் தமிழகத்தில் வழக்கு நடக்கும் போது, சாட்சியங்களை கலைத்து, முன்னுக்கு பின் முரணாக சாட்சியங்களை பேச வைத்து தன் அதிகாரத்து உட்பட்ட காவல்துறையை வைத்து அதிக தொல்லை கொடுத்தமையால் தான் தமிழகத்தில் வழக்கு நடத்த கூடாது என்று எதிர் தரப்பினர் கோரி கர்நாடகாவில் வழக்கை நடத்த ஆவன செய்தனர்.

 

நீதி மற்றத்தினையும் சட்டங்களையும் மதிக்க வேண்டிய முதலமைச்சர்,  வாய்தா வாய்தாவாக வேண்டி, வழக்கை இழு இழு என்று இழுக்க வைத்து இறுதியில் முக்கிய காலகட்டத்தில் வந்து தீர்ப்பை எழுத வைத்தார்.

 

இனியும் மேன்முறையீடு, தீர்ப்புக்கு தடை, தீர்ப்பு மீளாய்வு என்று இழுத்தடிக்கும் வேலைகளை செய்யத் தொடங்குவார்.

 

 

நிழலி நீங்கள் சொல்வது எனக்கு / எமக்கு புரிகிறது.
 
ஆனால் தமிழக மக்களுக்கு, Spin Doctors சொல்லப் போவது தான் நான் சொன்னது..  :rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

ஆக,.... எமது மதமும், கலாச்சாரங்களும்... ஒரு பகல் கொள்ளைக்கார அரசியல்வாதிக்காக உண்ணாவிரதம் இருப்பதையும், கடைகளின் கதவுகள் அடைப்பதையும் தான் நியாயப்படுத்துக்கின்றன என்றால், அந்த மதமும், அந்தக் கலாச்சாரமும் எனக்குத் தேவையில்லை என்றே நான் கூறுவேன்!

 

இதற்காக எனது மதத்தை இழிவாகக் கருதுகின்றேன் என்றோ, அல்லது எனது கலாச்சாரத்தைப் பழிக்கிறேன் என்றோ எண்ணி யாரும் என்னுடன் விவாதத்துக்கு வராதீர்கள்!

 

எமது மதத்தையும், எமது கலாச்சாரத்தையும் தொலைத்துவிட்டு, வேறு எவருடையதோ ஒரு மதத்தையும், கலாச்சாரங்களையும் தூக்கிப் பிடித்துக்கொண்டு திரிகிறோம்!

 

அதன் விளைவே... இவைகள் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்! 

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பின் எதிரொலியாக, ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகினரும் இன்று செவ்வாய்க்கிழமை   காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையின் முன்பு  மௌன, உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து உள்ளனர்.
cinemanews-1.JPG
'தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து எங்களது தமிழ்த் திரையுலகின் வருத்தத்தையும் உணர்வுகளையும் தெரிவிக்கும் வகையில் அறவழியில் ஒரு மாபெரும் மவுன உண்ணாவிரதப் போராட்டத்தை அனைத்து தமிழ்த் திரையுலகின் சார்பாக நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
cinemanews-2.JPG
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு மற்றும் சென்னை சிட்டி திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு, சினிமா பி.ஆர்.ஓ.யூனியன் உட்பட தமிழ்த் திரையுலகைச் சார்ந்த அனைத்துப் பிரிவினரும் கலந்துகொள்கின்றனர்.
cinemanews-3.JPG
 சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் திரைப்படம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளும் படப்பிடிப்புகளும் சின்னத்திரை படப்பிடிப்புகளும் அனைத்துத் திரையரங்குகளின் காட்சிகளும் மாலை 6 மணி வரைரத்து செய்யப்படுகிறது.
cinemanews-5.JPG
எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் எங்கள் அன்பின் வெளிப்பாடு, நன்றி உணர்வின் வெளிப்பாடு. காலம் மாறும். தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கையுடன் தமிழ்த் திரையுலகம் உள்ளது' என்று கூறியுள்ளனர்.
cinemanews-4.jpg

 

http://www.pathivu.com/news/34218/57//d,article_full.aspx

புங்கை இதற்கும் மதத்திற்கும்/கலாச்சாரத்திற்கும் என்ன சம்பந்தம்?

 

இது தமிழ்நாட்டின் கலாச்சாரம்...ஏன் 80களில் கரத்தாலும் யாழிழ் பரவலாக இருந்த கலாசாரம் என்று சொல்லலாமா?

 

இந்த சினிமா கூத்தாடிகள் அம்மாவை குளிர்விக்க போடும் கூத்தே...சினிமாதான் உங்களின் மதம்/கலாச்சாரமா????

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரையுலகினர் சரியான பச்சோந்திகள் என்றுதான் கூற வேண்டும்.

 

யார் ஆட்சிலிருந்தாலும் முதல்வருக்கு விழாவெடுத்து, மக்கள் வரிப்பணத்தில் அநாவசிய சலுகைகள் பெறுவதே இவர்களின் குறிக்கோள். இதே இடத்தில் கருணாநிதி இருந்தாலும் இதே துதிகள்தான் அசுரச் சுத்தமாக வந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
'அழகான கொண்டையிலே தாழம்பூவாம் அதன் உள்ளே இருப்பதுவோ ஈரும் பேனாம்'. அழகான தமிழ்நாட்டில் தமிழ்த் திரையுலகம். அதன் உள்ளே இருப்பது........ இந்தியனும் திராவிடனும்.  :(
 

10704003_375823675927595_156110941661314

 

1208495_375809942595635_1601485068593088

 

10635986_375830995926863_517145685228146

 

10310598_375823679260928_271107174510705

 

10646808_375823685927594_689947720740890

 

10672207_375816902594939_755782621262853

 

10711100_375816895928273_520730867766484

 

1525733_375814495928513_3430776812843370

 

1601358_375814202595209_3160258080860571

 

10473609_375806169262679_590609344060722

 

10431674_375941945915768_915784011975086

 

10417502_375954155914547_412234408481299

 

10653478_375833339259962_584938541486400

 

10696187_375833335926629_172303717791050

 

10639513_375808919262404_158307677491989

 

1924580_375808912595738_2543104446750351

 

10653760_375833332593296_411003947607744

 

10514664_375954162581213_126629503768223

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

எங்க

பெரிசுகள் ஒன்றையும் காணல....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க

பெரிசுகள் ஒன்றையும் காணல....

 

நமிதாவை தேடுகின்றீர்களா???  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

நமிதாவை தேடுகின்றீர்களா???  :lol:  :D

 

பெரிசு  என்பதை நீலத்தில் போட்டேனா என்று மீண்டும் வாசித்துப்பார்த்தேன்.. :lol:  :D

இன்றைக்கு வீட்டில விருந்து

வெளியில விரதம்.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.