Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உமாவை சுட்டபோது .

Featured Replies

10494439_746716525369425_226400409279449

  • Replies 51
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் போடும் போட்டியென்று வந்தால் வாயையும் மூக்கையும் பொத்திக்கொண்டு போக தயாரா?


உங்களை விட எமக்கு சமூகநலன் அதிகம்.

  • தொடங்கியவர்

இந்த சம்பவம் பற்றி உமாவிடம் கேட்டதுதான். 

 

பாண்டி பசாரில் உள்ள கீதா கபேயில் டீ அருந்திவிட்டு வெளியில் வரும்போது கண்ணன் "முழியன் வாறன் " என்று சொல்லும்போது வெடி விழுந்தது .வெடி விழுந்தது கண்ணனின் காலில் ,என்ன ஏது என்று தெரியாமல் சுற்றி நின்ற சனம் பிரபா ராகவன் இருவரையும் பொத்தி பிடித்துவிட்டது .தன்னிடம் இருந்த கை துப்பாக்கியை குப்பைக்குள் எறிந்துவிட்டு தான் மாறிவிட்டதாக சொன்னார் .

இனி சென்னையில் சில நாட்கள் இருக்க கூடாது என்று முடிவெடுத்து லண்டனில் இருந்து வந்த டொலர்கள் அடங்கிய பாக்குடன் கும்மிடிப்பூண்டி ஸ்டேசனில் அடுத்தநாள் காலை ரெயின் வருமட்டும் படுத்திருக்க தற்செயலாக வந்த போலிஸ் தட்டி எழுப்ப ஓட வெளிக்கிட்டு போலிஸ் சுட்டதில் அவ்வளவு டொலர் நோட்டுகளும் காற்றில் பறந்து என்ன நாட்டு பணம் என்று தெரியாமலே அதிகாலை அந்த சேரி சனங்கள் அதை பொறுக்கியது கண் கொள்ளா காட்சி என்று சொன்ன நினைவு .

இதுதான் எங்கள் மலரும் நினைவுகள் .


படம் போடும் போட்டியென்று வந்தால் வாயையும் மூக்கையும் பொத்திக்கொண்டு போக தயாரா?


உங்களை விட எமக்கு சமூகநலன் அதிகம்.

ஓடிவந்து எத்தனை பிளேன் ரெயின் கப்பல் எடுத்த படம் தானே போடுங்கோ . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

உமாவைச் சுட்டபோது.... உமா வாயில் விரலைச் சூப்பிக் கொண்டிருந்தார்...

உங்கள் அனைவருக்கும் என்ன பிரச்சனை.எல்லோரின் வாயும் நாறும்.கடைசியில் ஆளை ஆள் நாறடிக்கப்போகின்றீர்கள்.

 


உங்கள் அனைவருக்கும் என்ன பிரச்சனை.எல்லோரின் வாயும் நாறும்.கடைசியில் ஆளை ஆள் நாறடிக்கப்போகின்றீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ.... எதுக்கு, இந்த தலைப்பு?

 

அன்று இதே சீக்கியர்கள் தான் ஈழ விடுதலைப்போராளிகளை   கைது செய்தனர்

  • கருத்துக்கள உறவுகள்

முந்தித் தமிழ்நாடு போலீஸ் பாவாடை போன்ற காற்சட்டையே போடுறவை? :D

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: சென்னை பாண்டி பஜாரில் கடந்த 1982 ஆம் ஆண்டு  விடுதலைப்புலிகளுக்கும், பிளாட் இயக்கத்தினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டை  தொடர்பான வழக்கில் பிரபாகரன் உள்ளிட்ட 4 பேரின் பெயரை நீக்க வேண்டும் என்று  சிபிசிஐடி போலீசார், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 

சென்னை பாண்டி பஜாரில் கடந்த 1982 மே மாதம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை  சேர்ந்தவர்களுக்கும், பிளாட் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் துப்பாக்கிச் சண்டை  நடந்தது. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், ராகவன் (எ) சிவகுமார்  ஆகியோர் சுட்டதில் பிளாட் இயக்கத்தைச் சேர்ந்த ஜோதீஸ்வரன், முகுந்தன் (எ) உமா  மகேஸ்வரன் ஆகியோர் காயமடைந்தனர்.

 

இதையடுத்து, பிரபாகரன் மற்றும் சிவகுமாரை மாம்பலம் போலீசார் கைது செய்து  அவர்கள் மீது ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.  இந்நிலையில், மே 23ம் தேதி சிவனேஷ்வரன்(எ) நிரஞ்சன் சைதாப்பேட்டையில் கைது  செய்யப்பட்டார். மே 25ம் தேதி கும்மிடிப் பூண்டி ரயில் நிலையத்தில் உமா  மகேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மீதும் ஆயுத தடைச்சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர்  ஜாமீனில் வெளிவந்த இவர்கள் தலைமறைவானார்கள்.இந்த வழக்கு 7 ஆவது கூடுதல்  செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

4 பேர் மீதும் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  நீண்டநாட்களாக வழக்கு விசாரணை நடந்து தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வருகிறது.  வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி சார்பில் 3  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 

அதில்,"முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பிரபாகரன் இலங்கையில் நடந்த போரில்  கொல்லப்பட்டார்.அவரது உடல் நந்திக்கடல் பகுதியில் 2009 மே 19 ல்  கண்டுபிடிக்கப்பட்டது என்று டெல்லியில் உள்ள இன்டர்போல் உதவி இயக்குனர் தகவல்  அனுப்பியுள்ளார். 

சிவகுமார் இந்தியாவைவிட்டு வெளியேறி 15 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவர்  எங்கிருக்கிறார் என்ற தகவல் இல்லை. ஜோதீஸ்வரன், ஹாங்காங் நாட்டில் இருப்பதாக  தகவல் வந்துள்ளது. நிரஞ்சன் இறந்துவிட்டதாக சிபிசிஐடிக்கு தகவல் வந்துள்ளது. 

எனவே, இந்த வழக்கிலிருந்து பிரபாகரன், சிவகுமார், ஜோதீஸ்வரன், நிரஞ்சன்  ஆகியோரை நீக்குமாறு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.vikatan.com/new/article.php?module=news&aid=11341

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ.... எதுக்கு, இந்த தலைப்பு?

 

  • கருத்துக்கள உறவுகள்
அதில்,"முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பிரபாகரன் இலங்கையில் நடந்த போரில் கொல்லப்பட்டார்.அவரது உடல் நந்திக்கடல் பகுதியில் 2009 மே 19 ல் கண்டுபிடிக்கப்பட்டது என்று டெல்லியில் உள்ள இன்டர்போல் உதவி இயக்குனர் தகவல் அனுப்பியுள்ளார். சிவகுமார் இந்தியாவைவிட்டு வெளியேறி 15 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் இல்லை. ஜோதீஸ்வரன், ஹாங்காங் நாட்டில் இருப்பதாக தகவல் வந்துள்ளது. நிரஞ்சன் இறந்துவிட்டதாக சிபிசிஐடிக்கு தகவல் வந்துள்ளது.
உமாவைப்பற்றி இந்தியா ஒரு தகவலையும் சொல்லவில்லை காரணம் யாதோ?
  • கருத்துக்கள உறவுகள்

இப்போ.... எதுக்கு, இந்த தலைப்பு?

 

 

கிட்டத்தட்ட

30  வருடத்துக்கும் மேலாக

புலிகள் மீது ஏன் இவ்வளவு கோபம் என்று நீங்கள் கேட்டுவருகிறீர்கள்

அவர் ஆதாரம் தருகிறார்

 

எனக்கு இது தெரியும்

30 வருடமாக பழி வாங்குதலே குறி

80 களிலிருந்து அவர் வெளியில் வரவே இல்லை என.

ஆனால் தெரியாதது

தான் தமிழ் மக்களுக்காக போராடப்போனேன் என்றும் அவர்  சொல்வது தான்.... :(  :(  :(

  • தொடங்கியவர்

நேற்று ராகவனின் பிறந்த தினம் ,முக புத்தகத்தில் இந்த படமும் போட்டு வாழ்த்தும் தெரிவித்திருந்தார் ஒரு நண்பர் ,

பல வருடங்களின் பின்னர் பார்த்த அபூர்வபடம் என்று  இங்கு இணைத்தால் வழக்கம் போல வரிசையில் வந்துவிட்டார்கள் .

ஒற்றுமை ,விடுதலை உங்களுக்கு எல்லாம் ஒரு கேடு .

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையைப் பற்றி இவர் கதைக்கின்றார். மற்றய இயக்கங்கள் எல்லாம் அவர்களின் எதிரிகளால் அழிந்தார்ள் என்று எடுத்துக் கொண்டாலும் கூட, உள்வீட்டுப் பிரச்சனையால் அழிந்த இவர்கள் எல்லாம் ஒற்றுமை பற்றிக் கதைக்கின்றார்கள்.. கேடு.. வெட்கக்கேடு

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ராகவனின் பிறந்த தினம் ,முக புத்தகத்தில் இந்த படமும் போட்டு வாழ்த்தும் தெரிவித்திருந்தார் ஒரு நண்பர் ,

பல வருடங்களின் பின்னர் பார்த்த அபூர்வபடம் என்று  இங்கு இணைத்தால் வழக்கம் போல வரிசையில் வந்துவிட்டார்கள் .

ஒற்றுமை ,விடுதலை உங்களுக்கு எல்லாம் ஒரு கேடு .

அர்ஜுன்,
 
தேசியதலைவர் பிரபாகரன்போல உமாவிற்கு குடும்பம் பிள்ளைகள் இல்லையா? இவருடைய மனைவி, குழந்தைகள் படங்களை ஒருபோதும் கண்டதில்லை? மேலும் இவரின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை அறிந்துகொள்ள ஒர் ஆர்வத்தில் கேட்கிறேன் தவறாக நினக்காதீர்கள். 
  • தொடங்கியவர்

கொழும்பான்,

 

உமா  இயக்கதிற்கு  வர முதல் ஊரிலேயே காதலி வைத்திருந்தவர் .பின்னர் அவரை கலியாணம் முடித்து அவரும் இந்தியாவில் இருந்தார் .உஷா அக்கா என்று கூப்பிடுவோம்.இந்த விடயத்தை எல்லோருக்கும் தெரியாமல் ஓரளவு ரகசியமாகத்தான் உமா வைத்திருந்தார் .இப்போ பிரான்சில் இருக்கின்றார் .பிள்ளைகள் இல்லை .உமாவின் அப்பா அம்மா அக்கா தம்பிமார் எல்லோரும் எனக்கு நல்ல பழக்கம்.

அண்மையில் முகபுத்தகத்தின் ஊடாக தற்செயலாக உமாவின் அக்காவின் மகனை அடையாளம் பிடித்து சுகம் கேட்டேன் .என்னை மறந்துவிட்டார் .இந்தியாவிலேயே படித்து நல்ல வேலையில் இருக்கின்றார் .பெற்றோர் நலமாக இருப்பதாக சொன்னார் .

 

கொழும்பில் ஊர்மிளாவுடன் தொடர்பு என்று ஒரு கதை ,பின்னர் இந்தியாவில் கூட அப்படி இப்படி என்றார்கள் உண்மை பொய் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் .

உமாவை சுட்டபோது துப்பாக்கியில் இருந்து தோட்டா  வெளியேறியது  :D

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ராகவனின் பிறந்த தினம் ,முக புத்தகத்தில் இந்த படமும் போட்டு வாழ்த்தும் தெரிவித்திருந்தார் ஒரு நண்பர் ,

பல வருடங்களின் பின்னர் பார்த்த அபூர்வபடம் என்று  இங்கு இணைத்தால் வழக்கம் போல வரிசையில் வந்துவிட்டார்கள் .

ஒற்றுமை ,விடுதலை உங்களுக்கு எல்லாம் ஒரு கேடு .

இந்த படத்தில் ஏதும் இல்லை ...... இது எல்லோரும் பார்க்க வேண்டிய (பார்த்திருக்கதவர்கள்)ஒரு படம் என்றுதான் நான் நினைக்கிறேன். எமது ஈழ  விடுதலை போராட்டம் என்பது இப்படிதான் தொடங்கியது ... நடந்தது ... முடிந்தது. இதில் இருந்து நாம் அடுத்த கட்டத்திற்கு நகர முடிந்தால் அதுதான் சமூக நலன் சார்ந்த்தது. எதுவும் இருட்டில் நடக்கவில்லை எல்லாம் வெளியாகவே நடந்தது. அதில் அக்கறை இல்லது இருந்தவர்களுக்கு இவை புதிய செய்திகளாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.
 
இதில் வெறும் வாந்தி தனம் மட்டுமே இருக்கிறது என்று நான் சொல்கிறேன்.
(உங்களிடம் வேறு எதையும் எதிர்பார்க்கவும் இல்லை)
கரணம் 1- இது ஒரு (  ) முற்றுபெறாத வசனம். முடிவையும் தொடக்கத்தையும் மறைத்தல் எனும் தந்திரோபாயம் கையாள பட்டிருக்கிறது.
 
கரணம்-2 பின்பு எழுதிய கருத்தை படம் போட்டபோது கூட எழுதியிருக்கலாம். அப்போது எழுதாத கருத்து இப்போது வருகிறது(அதற்காக நீங்கள் எழுதியது பொய் என்று சொல்லவரவில்லை) என்றால் முன்பு சொல்லாமல் விட்டத்திலும் .... இப்போது சொல்வதிலும். ஒரு விடயம் மறைக்க பட்டிருகிறது.
 
புலிகள் இயக்கத்தில் இருந்து உமாவை விலத்தி விடவில்லை. ஊர்மிளாவின்  தகாத உறவிற்காக இவரை சுட வேண்டும் என்றுதான் எல்லோரும் முடிவெடுத்தார்கள். இதற்காக எல்லாம் ஒருவரை சுடுவதா என்று உமாவை விலத்தி அனுப்பியது பிரபாகரன்தான். அது உங்களுக்கும் தெரியும் ஊருக்கும் தெரியும். பின்பு நடந்ததெல்லாம் புலிகளை பழிவாங்க இளைஞர்களை ஏவிய விடங்களாகவே நான் பார்கிறேன் ( வேறு ஒரு நிஜாஜமான பார்வை உங்களுக்கு இருக்கலாம்). அதன் தொடர்ச்சியாக நடந்த சுடுபாடுதான் இது.
அடியும் தலையும் இன்றி ..... ஒரு வாந்தியாக இருப்பதாக எனக்கு படுகிறது.
 
பிராபகரன் எல்லோரயும் சும்மா சுட்டுக்கொண்டு திரிந்தார் என்று ஒரு பரப்புரையாக இது இல்லையா? (அதுதான் உங்கள் உள்நோக்கம்காக கூட இருக்கலாம்).
 
பண்ணையில் இவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒருவர் சிறிய பணத்துடன் குடும்ப கஷ்டம் காரணமாக ஓடிவிட்டார். எல்லோரும் அவரை சுடுவதென்று  முடிவெடுத்தார்கள் பிரபாகரன் சொன்னார் அவர் ஓடியதன் காரணம் அவருடைய குடும்ப நிலைமை என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும் பின்பு ஏன் அவரை சுட வேண்டும் என்றும் சுடுவதையும் தடுத்தார்.
ஓடியவரர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் அதுதான் இவர் தடுக்கிறார் என்று ஒரு கதையை இயக்கத்திற்குள் பரப்பிவிட்டு (ஐயர்தான் அதை பரப்பியதாக சொல்கிறார்கள்)  இவருக்கு தெரியாமல் அவரை சுட சிலர் முன்று இருக்கிறார்கள். பின்பு அதனால்  இயக்கத்திற்குள் பிரச்சனை படிருக்கிரார்கள்.
இறுதியில் பிரபாகரன் சர்வதிகாரி ஆனார் (ஆக்கபட்டர்). துவக்கை கண்டவுடன் சக போரளிகளியே பொழுதுபோக்கிற்கு சுட்டவர்கள். ஜெனநாயக  வாதிகள் ஆகிவிட்டார்கள்.
புலி எலி புறா எல்லாம் தமிழன்தான் விடயங்கள் எப்படி நடந்திருக்கும் என்பதை ஊகிக்க இது ஒன்றே போதும்.
உண்மைகளையும் நேர்மையாக நடந்தவற்றையும் விவாதிக்க உங்களால் ஒருபோதும் முடியாது.
அப்பப்ப சும்மா வசப்பு வார்த்தைகளை அள்ளிவிடலாமே தவிர.... 
நேர்மையுடன் நீங்கள் முன்வைத்த விடயம் என்று ஒன்றை கூற முடியுமா?
  • தொடங்கியவர்

உங்களுக்கு ஊற்றப்பட்ட ஈயத்தை உருக்கும் வரை எவர்  எதை எழுதினாலும் நீங்கள் ஏற்கப்போவதில்லை ,உங்கள் போன்றவர்களை தாண்டி நாங்கள் பலவருடங்கள் ஆகிவிட்டது .

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட ஆறேழு மாதங்களுக்கு முன்பு அம்பியின்

 

(ராகவனின் தம்பியே அம்பி ஆவார், இந்திய ராணுவம் இலங்கைத்தீவைவிட்டு வெளியேறியபின்னர் அவர்களால் கரைசேர்க்க முடியாத ஈபிஆர் எல்லெஃப் போராளிகள் வள்ளங்களின்மூலம் தமிழ்நாட்டுக்கு தப்பி வருவது வழக்கம், அவ்வேளையில் அவர்கள் தங்கள்வசமுள்ள நல்லரகத் துப்பாக்கிகளை ஆந்திர நக்சல்பாரிகளுக்கு விற்பதற்கு முயல்வதுண்டு அந்தவகையில் ராகவனின் தம்பியார் அம்பி இடைத்தரகராகச் செயற்பட்டு அல்லது வாங்கி வித்து பின்பு ஆந்திரப் பொலிசாரிடம் பிடிபட்டுக் கொஞ்சக்காலம் உள்ள இருந்தவர். இதேமாதிரி வேலையை ஈபிஆர் எல்லெப்பைச் சேர்ந்த மட்டக்களப்புக்குப் பொறுப்பாக இருந்த தொண்டைமானாறைப் பிறப்பிடமாக உள்ள ஒருவரும் செய்வதுண்டு அவ்வேளையில் அவர் இந்தியப் புலனாய்வுப்பிரிவில் மாதாந்தச் செலவுகாசும் வாங்குவது வளக்கம் மேலதிக விபரங்கள் தவிர்க்கிறேன்)

 

மகளது சாமத்தியச் சடங்குக்கு ராகவன் சென்னை போனது யாருக்காவது தெரிந்திருக்கலாம். அந்தவேளையில் பாண்டிபஜாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டுடன் சம்பந்தப்பட்டதாக ஒருவழக்கு அதுவரை நீதிமன்றத்தில் இவருக்கெதிராக கிடப்பில் இருந்தது அனால் ராகவன் சென்னைக்குச் சாமத்தியச்சடங்குக்குப் போவதற்காக அண்மையிலேயே அவரை அந்த வழக்கிலிருந்து விலக்கியுள்ளார்கள்.

 

தவிர ராகவன் சாமத்தியச் சடங்குக்கு மட்டும் போகவில்லை,

 

பரந்தன்ராஜன் மற்ரும் கனடாவில் இருக்கும் ஒரு முன்னை நாள் புலி ஆதரவாளர்

 

(அவர் இப்போது அமெரிக்க சந்தைப்படுத்தும் நிறுவனத்தில் வேலை செய்கிறார் மற்றும் இவரே முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தவேளை தமிழ்நாட்டில் காங்கிரசின் முக்கியஸ்தர் ஒருத்தருடன் பேச்சுவார்த்தை செய்ததாக ப். சிதம்பரம் அவர்களால் கூறப்பட்டவர்)

 

ஆனால் முள்ளிவாய்க்கால் அவலத்தின் முடிவு எப்படியிருக்கும் என்பது அவருக்கு முன்னமேயே இந்தியப் புலனாய்வாளர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இறுதி முயற்சியில் ராஜீவ்கந்தியது கொலைக்கான பொறுப்பையேற்று புலிகள் தரப்பில் ஆகக்குறைந்தது பொட்டம்மானையாவது பலிக்கடா ஆக்கும்படி கேட்கப்பட்டிருந்தது. அப்படியெனில் தலைவரைக் காப்பாற்றலாம் என்றும் கூறப்பட்டு, அது தலைவரால் நிராகரிக்கப்பட்டது.

 

அப்படியான கோரிக்கைக்கு தலைவரால் அளிக்கப்பட்ட பதில் "இவர்களது கோரிக்கைக்காக பொட்டம்மானை பலிக்கடா ஆக்குவதும் ஒரு சாதாரண முண்ணணிக்காவலரனில் இருக்கும் போராளியைப் பலிக்கடா ஆக்குவதும் எனக்கு ஒன்றே இதில் இரண்டையுமே நான் செய்யத் துணியமாட்டேன் என்பதாகவிருந்தது. ஆனால் இறுதிக்கணங்களில்என்ன நடந்தது என்பது தெரியாது எனிலும்ரிந்தியாவால் பொட்டம்மான் குறிவைக்கப்படுவதால், பொட்டம்மானை முள்ளிவாய்ய்காலில் இறுதிக்கணங்களில் எதாவது எக்குத்தப்பாக நடக்குமோ என்பதற்காக முதலிலேயே வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்பதி ஊகமாகச் சிலர் கூறுகிறார்கள். இக்குறுப்பை யாரும் அறுதியான முடிவாக எடுக்கவேண்டாம்.

 

மேற்படி சாமத்திய வீடு நடந்த காலகட்டத்தில் புலிகளின் ஒருசில உதிரிகளையும் பரந்தன் ராஜனையும் மற்ரும் முன்னள் புலி ஆதரவாளர்கள் மற்ரும் புலம்பெயர் ஆதரவாளர்களையும் உள்ளடக்கு ஒரு சந்திப்பு நடைபெற்று,

 

அதில் பரந்தன் ராஜன் தலைமையில் இலங்கைத்தீவில் மீண்டும் ஆயுதமேந்திய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான முயற்சி பற்றிய பேச்சுக்களில் புலிகள் உறுப்பினர்களது மறுப்பின் காரணமாக கைவிடப்பட்டதாக அறிய வருகின்றது.

 

கடந்தகாலங்களில் வெளிச்சத்தில் இல்லாத தலைவர்களை இப்போது முன்கொணர்ந்து அவர்களுக்கு முக்கிய அந்தஸ்துக்கொடுப்பதற்கு இங்கு சிலர் முயல்கிறார்கள் ஆனால் உயரப்பறந்தாலும் ஊர்ர்குருவி பருந்தாகமாட்டாது. இதில் புளொட் இயக்கத்தின் தலைவர் உமாமகேஸ்வரன் அவர்களும் அடக்கம்.

 

உமா அவர்கள் செய்த நல்லவேலை கனக்கப்பெடியளை களத்தில் இறக்கி தேவையில்லாமல் வீரச்சாவடையாது வைத்து அவர்களைத் தப்பப்பண்ணிப்போட்டார் இல்லாதுவிடின் தமிழர் சமூகம் இன்னுமொரு காத்திரமான மிகவும் ஆபத்தான ஒட்டுக்குழு ஒன்றுக்கு முகம்கொடுக்கவேண்டியிருக்கும்.

 

அதற்கான நல்ல உதாரணம், கடந்தகாலங்களில் சுவிஸைச்சேர்ந்த புலிக்குட்டி ரஞ்சன் எனப்படுபவருக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் அவர் ஊரில் இருக்கும்வரை எந்தத் தொடர்பும் இல்லை, சும்ம இருந்த பொடியனின் கடைக்கு உமா சுவிசுக்கு வந்தபோது ஒருக்கால் விசிட் அடிச்சதன்பலனாக இப்போதும் சுவிஸ் ரஞ்சனுக்குப் பின்னால் ஒளிவட்டம் தெரிகின்றது. அதனால் மற்றவர்கள் படும் துன்பம் சொல்லிப்புரியாதது.

 

சிலவேளைகளில் மனதுக்குள் இருக்கும் விடையங்களை யாரிடமாவது பகிரவேண்டும்போல் இருக்கும் இன்றும் அதுபோலவே....

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு ஊற்றப்பட்ட ஈயத்தை உருக்கும் வரை எவர்  எதை எழுதினாலும் நீங்கள் ஏற்கப்போவதில்லை ,உங்கள் போன்றவர்களை தாண்டி நாங்கள் பலவருடங்கள் ஆகிவிட்டது .

நீங்கள் தவறாக புரிந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
 
ஈயம் ஊத்தியது எங்கள் காதுகளில் .... உலகில் அநாகரீகம் பேசுவோரின் எண்ணிக்கை யாஸ்த்தியாகி போவதால் அது அப்படியே இருப்பதே நன்று.
 
உங்களால் உண்மைகளை பேச முடியுமா? என்றுதான் கேட்டு எழுதினேன்.
 
உங்களுடைய ஒரு வாந்தி தனமான வாதத்தை  fragment     வடிவில்  வைத்து வருகிறீர்கள்.
ஏன் முன்னும் பின்னும் நடந்ததை உங்களால் எழுத முடியவில்லை?

 

 

உமா அவர்கள் செய்த நல்லவேலை கனக்கப்பெடியளை களத்தில் இறக்கி தேவையில்லாமல் வீரச்சாவடையாது வைத்து அவர்களைத் தப்பப்பண்ணிப்போட்டார் இல்லாதுவிடின் தமிழர் சமூகம் இன்னுமொரு காத்திரமான மிகவும் ஆபத்தான ஒட்டுக்குழு ஒன்றுக்கு முகம்கொடுக்கவேண்டியிருக்கும்.

 

 

 

புலி ஒட்டுக்குழுக்களான பிள்ளையான் கருணா குழுக்கள் போன்று மோசமாக அவர்கள் இருந்திருக்கவாய்ப்பில்லை. எனினும் கருணா அம்மான் சகோதரச் சண்டையை தவிர்த்து பல ஆயிரம் போராளிகளின் உயிரை காப்பாற்றியிருக்கின்றார் உண்மையையும் அலட்சியப்படுத்தமுடியாது.

 

இன்றய நிலையில் பலமான ஒட்டுக்குழு என்றால் அது புலி ஒட்டுக்குழுத்தான். கருணா பிள்ளையான் கேபி என பல தரப்பு இருக்கின்றது. இறுதியில் புலிகளுக்கும் அரசோடு ஒட்டுவதைத்தவிர வேறு வளியிருக்கவில்லை. ஆனால் ஒட்டப்போன நடேசன் புலித்தேவன் மற்றும் ஏனையோர்களை சிங்களம் ஒட்டவும் விடவில்லை. 

 

அனைத்து விடுதலை இயக்கங்களின் கதையும் கடசியில் ஒட்டுக்குழுக்களாகத்தான் முடிந்தது. மக்களும் ஒட்டுவதைத் தவிர வேறு மார்க்கம் இருக்கவில்லை. 

 

விடுதலைக்கென்று புறப்பட்டு செத்தவர்களை விட (ஒட்டமுற்படும் போது செத்தவர்கள் உள்ளடங்கலாக) மற்றயவர்கள் எல்லோரும் ஒட்டுக் குழுக்கள் அல்லது ஒட்டு தனிநபர்கள். 

 

இது நவம்பர் மாதம். விடுதலைக்கென்று புறப்பட்டு உயிர்விட்ட அனைவரையும் நினைவு கூரும் மாதம். புலிகள் புளட் ரெலோ ரெலா ஈபிஆர்எல்எவ் ஈபிடிபி என பல இயக்கங்களைச் சேர்ந்த உயிர் நீர்தவர்களையும் மக்களையும் நினைவு கூரும் மாதம். அந்தவகையில் பிரபா உமா சபா நபா என பல தலைவர்களின் நற்குணங்களை தெரிந்தவர்கள் தொடர்ந்து பதியுங்கள்.  

Edited by சண்டமாருதன்

  • கருத்துக்கள உறவுகள்

புலி ஒட்டுக்குழுக்களான பிள்ளையான் கருணா குழுக்கள் போன்று மோசமாக அவர்கள் இருந்திருக்கவாய்ப்பில்லை. எனினும் கருணா அம்மான் சகோதரச் சண்டையை தவிர்த்து பல ஆயிரம் போராளிகளின் உயிரை காப்பாற்றியிருக்கின்றார் உண்மையையும் அலட்சியப்படுத்தமுடியாது.

 

இன்றய நிலையில் பலமான ஒட்டுக்குழு என்றால் அது புலி ஒட்டுக்குழுத்தான். கருணா பிள்ளையான் கேபி என பல தரப்பு இருக்கின்றது. இறுதியில் புலிகளுக்கும் அரசோடு ஒட்டுவதைத்தவிர வேறு வளியிருக்கவில்லை. ஆனால் ஒட்டப்போன நடேசன் புலித்தேவன் மற்றும் ஏனையோர்களை சிங்களம் ஒட்டவும் விடவில்லை. 

 

அனைத்து விடுதலை இயக்கங்களின் கதையும் கடசியில் ஒட்டுக்குழுக்களாகத்தான் முடிந்தது. மக்களும் ஒட்டுவதைத் தவிர வேறு மார்க்கம் இருக்கவில்லை. 

 

விடுதலைக்கென்று புறப்பட்டு செத்தவர்களை விட (ஒட்டமுற்படும் போது செத்தவர்கள் உள்ளடங்கலாக) மற்றயவர்கள் எல்லோரும் ஒட்டுக் குழுக்கள் அல்லது ஒட்டு தனிநபர்கள். 

 

இது நவம்பர் மாதம். விடுதலைக்கென்று புறப்பட்டு உயிர்விட்ட அனைவரையும் நினைவு கூரும் மாதம். புலிகள் புளட் ரெலோ ரெலா ஈபிஆர்எல்எவ் ஈபிடிபி என பல இயக்கங்களைச் சேர்ந்த உயிர் நீர்தவர்களையும் மக்களையும் நினைவு கூரும் மாதம். அந்தவகையில் பிரபா உமா சபா நபா என பல தலைவர்களின் நற்குணங்களை தெரிந்தவர்கள் தொடர்ந்து பதியுங்கள்.  

முப்பது வருட விடுதலை போரை வேறு விதமாக சுருக்கி எழுதலாமா என்று யோசித்தேன். முடியாது.
 
என்னோ ஒரு ஆராய்ச்சி  என்ன ஒரு அறிவார்ந்த சிந்தனை.
நடந்த அனைத்தையும் அக்குவேறு ஆணி வேறாக பிரித்துவைக்கும் உண்மை.
 
ஆகா ஓகோ! 
இதுக்குதான் தலயிலே கிட்னி இருக்கோணும் என்று சொல்வது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.