Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலைத்தீவில் குடிநீர் இல்லை; அவசர நிலை பிரகடனம்

Featured Replies

141205155739_maldives_water_crisis_court
 
இந்தியப் பெருங்கடலில் இருக்கும் தீவுத் தேசமான மாலத் தீவுகளின் தலைநகரில் பாதுகாப்பான குடிநீர் தீர்ந்துபோயுள்ளதையடுத்து அந்நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
 
அங்கு வேகமாகக் குறைந்துவரும் புட்டிகளில் அடைக்கப்பட்ட குடிநீரை பெற்றுக் கொள்வதில் மக்களிடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
கடைகள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
தலைநகர் மாலேயிலுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, குடிநீர் வழங்கும் குழாய்கள் மூடப்பட்டுள்ளன.
 
அந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்பட்டு மக்களுக்கான குடிநீர் விநியோகம் தொடங்க ஐந்து நாட்கள் ஆகும் என்று மாலத்தீவின் அரசும் கூறுகிறது.
இந்நிலையில் இந்தியா, இலங்கை மற்றும் அமெரிக்காவிலிருந்து விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் அங்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
எனினும் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளில் பிரத்யேகமாக கடல்நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் செயல்பட்டு வருவதால் அவர்கள் யாரும் இந்த நெருக்கடியால் பாதிக்கப்படவில்லை.
 
தண்ணீர் தட்டுப்பாடு குறித்து மாலேவில் உள்ள இலங்கை முஸ்லிம் ஏ எம் ஜதீர் வழங்கும் விவரங்களை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்

அட இப்பிடியும் பிரச்சனையா

புளொட் மாலைதீவை பிடித்திருந்தால் உந்த பிரச்சனை வந்திருக்காது .குறிப்பாக "தண்ணி " பிரச்சனை .

மாலைதீவில் உள்ள இப் பிரச்சனை மாலைதீவுடன் தீரப் போகிற பிரச்சனை அல்ல, பூமியில் வாமும் அத்தனை மனிதர்களினதும் எதிர்காலம் தொடர்பானது. முகமது நசீத் பற்றி யாழில் எழுத வேண்டும் என்று பல நாட்களாக நினைத்ததுண்டு. நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Tamil_News_thumb_113129520141206011423.j

 

மாலே: இந்தியப் பெருங்கடல் நாடுகளில் ஒன்றான, 'சார்க்' அமைப்பில் இணைந்துள்ள, மாலத்தீவு நாட்டில் கடும் குடிநீர் பிரச்னை ஏற்பட்டதால், விமானம் மூலம் இந்திய அரசு, மாலத்தீவுக்கு குடிநீர் சப்ளை செய்தது.நான்கு புறமும் தண்ணீரால் சூழப்பட்ட, ஏராளமான குட்டித் தீவுகளை கொண்ட மாலத்தீவில், ஆறுகள் கிடையாது என்பதால், அங்கு குடிநீர் ஆதாரங்கள் இல்லை. கடல் நீரையே, சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்துகின்றனர். கடல் நீரை குடிநீராக்கும் தொழிற்சாலை யில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டு கடும் சேதம் அடைந்ததால், குடிக்க தண்ணீர் இன்றி, தலைநகர் மாலேயில் உள்ள, ஒரு லட்சம் மக்களும் தவித்தனர். இதை அறிந்த இந்திய அரசு, தானாக முன்வந்து, தண்ணீர் கொடுக்க தயாரானது. இந்திய அரசின் சரக்கு விமானம் ஒன்றில், பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி, நேற்று மதியம், அந்த விமானம் மாலே சென்றடைந்தது. அதுவும் போதாது என்று, கடற்படையின் பிரமாண்ட ரோந்து கப்பலான, 'ஐ.என்.எஸ்., சுகன்யா'வில், மாலே நகருக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இதனால், மாலத்தீவு நாட்டின் குடிநீர் பஞ்சம் தற்காலிகமாக தீர்ந்தது. 

 

http://www.dinamalar.com/

இந்தியா படம் காட்டுகிறது. மாலைதீவின்மேல் அக்கறை எதுவும் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு வேண்டியவங்க ரெண்டு பேர் இன்னிக்குத்தான் மலேக்கு ரூர் போக பிளேன் ஏறினாங்க.  என்ன பாடு படப் போறாங்களோ தெரியல.

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீர் பிரச்சனை வரும் என்டால் சேர்த்து வைத்திருக்க மாட்டார்களா?

தண்ணீர் பிரச்சனை வரும் என்டால் சேர்த்து வைத்திருக்க மாட்டார்களா?

 

ரதி, செய்தியை வடிவாக வாசிக்கவில்லையா (அதென்ன வடிவா வாசிக்கிறது / வடிவில்லாமல் வாசிக்கிறது என்று கேள்வி கேட்கக் கூடாது).

 

தலைநகர் மாலேயிலுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, குடிநீர் வழங்கும் குழாய்கள் மூடப்பட்டுள்ளன.

 

 

என்று போட்டுள்ளனர். இது திடீரென்று ஏற்பட்ட நிலமையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

புளொட் மாலைதீவை பிடித்திருந்தால் உந்த பிரச்சனை வந்திருக்காது .குறிப்பாக "தண்ணி " பிரச்சனை .

 

 

அது தான் கனடாவில்  தண்ணி பிரச்சினை இல்லைப்போலும்.... :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, செய்தியை வடிவாக வாசிக்கவில்லையா (அதென்ன வடிவா வாசிக்கிறது / வடிவில்லாமல் வாசிக்கிறது என்று கேள்வி கேட்கக் கூடாது).

என்று போட்டுள்ளனர். இது திடீரென்று ஏற்பட்ட நிலமையாக இருக்கும்.

ஓ...மன்னிக்கவும்:D

  • கருத்துக்கள உறவுகள்

குடிநீர் இன்றி தவிக்கும் மாலத்தீவுக்கு விமானத்தில் தண்ணீர்! - இந்தியா உதவி 

 

 

Maldives-india-watter-suply-061214-200-w

மாலத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டு குடிநீர் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் அந்நகரில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் குடும்பத்தினர் வசிக்கும் மாலே நகரில் ஏராளமான பொதுமக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் விநியோகிக்கும் கடைகளும் சூறையாடப்பட்டன. இந்த அவசர நிலையை சமாளிக்க அந்நாட்டு அமைச்சர் இந்தியா, இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளிடம் உதவி கோரியுள்ளார்.

   

இதையடுத்து இந்தியாவில் இருந்து குடிநீரை ஏற்றிக் கொண்டு முதல் விமானம் மாலத்தீவை அடைந்துவிட்டது. குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சீரடைய மேலும் சில நாட்கள் ஆகும் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

  • தொடங்கியவர்

மாலத்தீவு: குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பொது விடுமுறை

 

கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்தால் பழுது ஏற்பட்டதன் காரணமாக கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கும் மாலத்தீவின் தலைநகர் மாலேயில் இரு நாட்கள் பொது விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

 

 
மாலைதீவு தலைநகர் மாலேயில் வியாழக்கிழமை பிற்பகல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் நீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
 
இதையடுத்து அந்நாட்டுக்கு இந்தியா வெள்ளிக் கிழமையன்று விமானம் மூலம் குடிநீரை அனுப்பி வைத்தது. இலங்கை மற்றும் சீனாவில் இருந்தும் குடிநீர் பாட்டில்கள் தற்போது வந்துள்ளன.
இருந்தும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கும் மாலேயில் ஆள் ஒருவருக்கு இரண்டு லிட்டர் என்ற கணக்கில் பாதுகாப்புப் படையினர் நீரை விநியோகித்து வருவதாக அங்கு வசிக்கும் இலங்கையரான முஹம்மத் ஜதீர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
 
கிணற்று நீரை கழிப்பரைத் தேவைகளுக்காக மக்கள் பயன்படுத்திக் கொண்டுவருவதாகவும் அவர் கூறினார்.
சுத்திகரிப்பு நிலையத்துக்குத் தேவையான உதிரிப் பாகங்கள் கொண்டுவரப்பட்டு விட்டதாகவும், இரு தினங்களில் நிலைமை மேம்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 

மாலத்தீவு மிகச்சிறிய நிலப்பரப்பை கொண்ட தீவு. அங்கு ஆறு ஏரி போன்ற நன்னீர் மூலங்கள் எதுவும் கிடையாது. கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்துகிறார்கள்.

அங்கு தண்ணீர் அனுப்பும் இந்தியா இலங்கை போன்ற நாடுகள் அவர்களின் கடல்நீரை குடிநீராக்கும் தொழில்நுட்பத்தை பெற்று தங்கள்நாட்டிலும் குடிநீர் பற்றாக்குறை எற்படும் காலத்தில் பயன்படுத்தலாம்.

அதுசரி சுத்திகரிக்கப்பட்ட கடல்நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த இயலுமா.?

  • கருத்துக்கள உறவுகள்

If the water would be pure and drinkable, you can use it for agriculture purpose as well

  • கருத்துக்கள உறவுகள்

விலைதான் எக்கச்சக்கமாக இருக்கும்.. சொட்டு நீர்ப்பாசனம் செய்யலாம்.. :D

சொட்டுநீர் பாசனம் நல்ல பயனுள்ள திட்டம் தான். நீர் வரப்பில் பாய்ந்து வீணாவதை தவிர்த்து நேரடியாக வேர்ப்பகுதியில் நீரை வழங்க முடியும். ஆனால் மரவகை செடி வகைகளுக்கு சரி. நெல் முதலிய தானிய வகைகளுக்கு சரிவராதே. சொட்டு நீர் பாசனத்திற்கு கனிசமான அளவு முதலீடும் தேவை. மழைக்காலங்களில் முறையான மழைநீர் வடிகால்களும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளும் இருந்தால் போதுமான அளவு நிலத்தடி நீரை பெருக்கலாம். கிணறுகளிலும் நீர் மட்டம் உயரும். ஏரி குளங்கள் கண்மாய்களிலும் நீரை பாசனத்துக்கு பயன்படுத்தலாம். நீர் வேளாண்மையில் நம் முன்னோர்கள் தன்னிகரற்ற ஆளுமை பெற்றிருந்தனர். இப்போதை அரசாங்கங்களுக்கு சண்டை பிடிக்கவே நேரம் போதவில்லை. 2040ம் ஆண்டளவில் உணவுத் தேவையானாது இதுவரை உலகில் பயன்படுத்திய அளவிற்கு நிதராக இருக்குமாம். மூன்றாம் உலகப் போர் உணவு உற்பத்தியில் செழிப்பாக இருக்கும் நாடுகளை கைப்பற்றுவதையே பிரதானமாக கொண்டிருக்கும். ஆகையால் யாழ் கள உறவுகளே ஆளுக்கொரு தானிய வைப்பறைகளை கட்டி முடிந்த அளவு சேமித்து வைப்பீர்களாக. கார் பைக் என்டு காசை கரியாக்காமல் ஒரு காணியை வாங்கி ஏரை பூட்டுங்கள்.

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் அல்லாதர்

தொழுதுண்டு பின்செல்ல கடவார்"

வள்ளுவனை போல் ஒரு தீர்க்கதரிசி இல்லையப்பா :)

  • கருத்துக்கள உறவுகள்

குடி தண்ணீருக்கு, கடல் நீர் சுத்திகரிப்பு ஆலைகளை மட்டுமே நம்பியிருப்பது சரியாகப் படவில்லை.
இந்தியா, ஸ்ரீலங்காவிலிருந்து கடலுக்கு அடியில், குழாயை தாட்டு...

தண்ணீரை இறக்குமதி செய்வது பற்றி மாலைதீவு திட்டம் தீட்ட வேண்டும். :)

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=m6mkNJ8mHL0

  • தொடங்கியவர்

From Salt Water to Drinking Water

 

மாலத்தீவு மிகச்சிறிய நிலப்பரப்பை கொண்ட தீவு. அங்கு ஆறு ஏரி போன்ற நன்னீர் மூலங்கள் எதுவும் கிடையாது. கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்துகிறார்கள்.

அங்கு தண்ணீர் அனுப்பும் இந்தியா இலங்கை போன்ற நாடுகள் அவர்களின் கடல்நீரை குடிநீராக்கும் தொழில்நுட்பத்தை பெற்று தங்கள்நாட்டிலும் குடிநீர் பற்றாக்குறை எற்படும் காலத்தில் பயன்படுத்தலாம்.

அதுசரி சுத்திகரிக்கப்பட்ட கடல்நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த இயலுமா.?

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பெரிய தீவில் அவசர காலத்திற்கு ஒரு மாற்றுத் திட்டமும் (contingency plan) இல்லை, மொத்த உற்பத்தியையும் ஒரேயொரு சுத்திகரிப்பு தொழிற்சாலையை மட்டுமேவா நம்பி இருப்பார்கள்? :o

 

இங்கே இருக்கும் 'பாய்கள்' கூட மக்கள் பயன்பாட்டிற்கான எந்த அத்தியாவசிய உற்பத்திக்கும் மாற்று தொழிற்சாலைகளை திட்டமிட்டே நிர்மாணித்து வருகிறார்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

... இந்தியா, ஸ்ரீலங்காவிலிருந்து கடலுக்கு அடியில், குழாயை தாட்டு...

தண்ணீரை இறக்குமதி செய்வது பற்றி மாலைதீவு திட்டம் தீட்ட வேண்டும். :)

 

அறிவுக்கொழுந்து சிறி, அற்புத யோசனைகளை ? அள்ளிவிடுகிறீர்கள்.

 

வாழ்த்துக்கள். :)

 

வீடியோ இணைப்புக்கு நன்றி Gari அண்ணா. சிறியண்ணே  கடல் மார்க்கமாக சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். ஆழ் கடல் வழியாக அவ்வளவு செலவு செய்ய இரண்டு நாடுகளும் முன் வராது.  சரி உங்களுக்கு லன்காபுரியில் இருந்து  தண்ணிர் கொண்டு திட்டம்
வரும்  எப்படி உதித்தது எண்டு கட்டாயம் சொல்ல  வேண்டும்  விளக்கமாக :lol:


இவ்வளவு பெரிய தீவில் அவசர காலத்திற்கு ஒரு மாற்றுத் திட்டமும் (contingency plan) இல்லை, மொத்த உற்பத்தியையும் ஒரேயொரு சுத்திகரிப்பு தொழிற்சாலையை மட்டுமேவா நம்பி இருப்பார்கள்? :o

 

இங்கே இருக்கும் 'பாய்கள்' கூட மக்கள் பயன்பாட்டிற்கான எந்த அத்தியாவசிய உற்பத்திக்கும் மாற்று தொழிற்சாலைகளை திட்டமிட்டே நிர்மாணித்து வருகிறார்கள். :)

 

பாய்கள் பிரியாணி மட்டும்தான் நன்றாக வைப்பினம் எண்டல்லோ நினைத்திருந்தேன் :icon_idea:
 

  • கருத்துக்கள உறவுகள்

மாலத்தீவு: குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பொது விடுமுறை

.....

கிணற்று நீரை கழிப்பரைத் தேவைகளுக்காக மக்கள் பயன்படுத்திக் கொண்டுவருவதாகவும் அவர் கூறினார்.
சுத்திகரிப்பு நிலையத்துக்குத் தேவையான உதிரிப் பாகங்கள் கொண்டுவரப்பட்டு விட்டதாகவும், இரு தினங்களில் நிலைமை மேம்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 

 

 

இந்த கிணற்று நீராவது இருக்கிறதே, அதைக்கொண்டு ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் (Reverse osmosis -RO) என்ற வேதியியல் முறைப்படி ஆழ்கிணறு/துளைகிணறு/நிலத்தடி தண்ணீரை குடிநீராக்கி பயன்படுத்தலாமே?

 

பொட்டல் பாலைவன அடியில் தென்படும் நிலத்தடி நீரையே இந்த முறையில் குடிநீராக்கி பயன்படுத்துகிறார்கள். இந்த தயாரிப்பில் பல்வேறு கட்டங்களில் இடையிடையே மீந்து வரும் தண்ணீரை சாலையின் நடுவே வளரும் பேரீச்சை மரங்களுக்கும், பூச்செடிகளுக்கும் பாய்ச்சுகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.