Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடிவேலு மகன் திருமண வீட்டில் நுழைந்த போலிஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலு என்பதற்காக இல்லை எந்த வெடிவேலு இந்த வேலையை செய்திருந்தாலும் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும். இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளில் பெண்ணடிமைத்தனம் எப்படி இருக்கு என்பதை இங்கு யாருக்கும் பந்தி பந்தியாக எழுதித்தான் புரியவைக்கவேண்டியதில்லை. ஏனெனில் நாங்களும் அந்த உலகத்தில் இருந்துதான் வந்தவர்கள். பெற்றோர்களால் செய்துவைக்கப்படும் இப்படியான இளவயது திருமணங்கள் ஒரு ஆரோக்கியமற்ற சமூகத்தையே உருவாக்கும். தாய்தான் குழந்தையின் உலகை உருவாக்கும் முதல் சிற்பி. பெண்கல்வியின் முக்கியத்துவம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. சமூகத்தில் நன்கு தெரியப்பட்ட வடிவேலு ஒரு தவறான முன்னுதாரமாக இருக்கும்போது அதைப்பற்றி சுட்டிக்காட்டி எழுவதும் விவாதிப்பதும் சமூக அக்கறைகொண்டவர்கள் செய்யவேண்டியதே.

Edited by சுபேஸ்

  • Replies 78
  • Views 6.3k
  • Created
  • Last Reply

                    இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் பெண் என்பவள் அணைத்து உரிமைகளையும் வாய்ப்புகளையும் பெற வேண்டும் என்று நீங்கள் சொல்வது நிற்சயம் ஏற்றுகொள்ள வேண்டியதே, எனினும் இங்கு நிலைமை வேறு, தனது திரைத்துறையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் அடிப்படையிலே வடிவேலு தனது மகனின் திருமணத்தை அவரது ஆரம்பகால வாழ்க்கையின் மீதான பற்றில் ஒரு ஏழை பெண்ணை மருமகளாக ஏற்று கொண்டுள்ளார்,  தனது தொழில் முறை சார்ந்த எவரையும் அவர் தனது மகன் திருமணதிற்கு அழைக்கவில்லை, ஏனெனில் அவர்களிடம் இருந்து விலகி நிற்கவே விரும்புகிறார், விலகி இருக்க அவருக்கு தெரிந்த வழி முறை இது என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும்.  ஒரு ஏழை குடும்பத்தில் பெண் எடுத்ததை வாழ்த்த கடமைப்பட்டுள்ளோம்.

                     இங்கு தவறு நமது சமுகத்தின் மீதே உள்ளது, எந்த விதத்தில் இந்த மணமானது இருபாலாராலும் ஏற்று கொள்ள பட்டுள்ளது, தனது தந்தையின் மனகசப்பை போக்க உள்ள வழியாக திருமணத்தை தந்தைக்கு கட்டுப்பட்டு மகன் ஏற்று கொள்கிறார், தனது குடும்பத்தில் ஏழ்மைநிலை இதிலிருந்து மீளும் என்ற நம்பிக்கையில் பெண் இதை ஏற்று கொள்கிறார்.

 

                  இது தானே நமது பாரம்பரிய திருமண முறை, இப்படி தானே நமது பெற்றோர்களும் அவர்களது பெற்றோர்களுக்கு கீழ் படிந்து நடந்து வந்துள்ளனர், பிள்ளைகளை சுயமாக முடிவெடுக்க இந்த தமிழ் சமுகம் விடுகிறதா ?  கீழ்படிதல் என்பது இங்கு மரபு வாழையடி வாழையாக, பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை நல்ல பொருளாதரத்தை நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்க விரும்பும் பெற்றோர் அவர்களது வாழ்வின் முக்கியமான முடிவை அவர்களை சுயமாக முடிவெடுக்க விடுவதில்லை. இதில் படித்தவர் படிக்காதவர் என்ற பேதம் இல்லை.

                     பெற்றோர்கள் வழி காட்டுபவராக இருக்க வேண்டுமேயன்றி அவர்களது வழியில் திணித்தல் ஆகாது. பெண்களை வெளியில் அனுப்பினால் தவறாக பேசுவார்கள், அவர்களது உடையை விவாத பொருளாக்குவர்கள், அவர்களது நடத்தையை கேலி பேசுவார்கள், ஆண் நண்பர் இருந்தால் தூற்ற படுவார்கள் என எல்லா விதத்திலும் பெண்களை பேசு பொருளாக்கும் ஒரு சமுகத்தில் பெண்  பிள்ளையை பெற்ற நடுத்தர ஏழை பெற்றோர்கள் மடியில் கனத்தை வைத்து கொண்டு எப்படி  அவர்களது படிப்பையும் வயதையும் பொருட்படுத்துவார்கள் என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்ட சூழ்நிலையியல் சார்ந்த சுய பாதுகாப்பு கணக்கீட்டு முடிவாகும்.

 

                    மாற்றம் என்பது நம்மில் இருந்தே தொடங்குதல் வேண்டும் நமது வீடுகளில் இருந்தே. அதுவே நம்மால் முடிந்த ஆக சிறந்த உதவியாகும் இந்த விடயத்தில்..

Edited by ராஜன் விஷ்வா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இந்த திரியில் ஆக்கபூர்வமான விவாதங்களை தந்த அனைவருக்கும் நன்றி.
 
அதேவேளை, தேவை இன்றி, தனிமனித தாக்குதலில் ஈடுபட முனைந்தவர்கள் கவலையினை தந்தார்கள். தமிழ்சிறி விஸ்கி அட்வைஸ் தந்தார். என்ன நடந்தது ஒரு மூத்த உறுப்பினருக்கு என கவலை கொள்ள வைத்தார்.
 
உங்களுக்கு பிடிக்காவிடில் ஒதுங்கி விடுங்கள் அல்லது ஆக்க பூர்வமாக விவாதியுங்கள். அதற்கான களமே இது.
 
முதலாவதாக இந்த செய்தியில் உள்ள முதல் தவறு: இது மதுரையில் நடந்த திருமணமாக சொல்லப்பட்டு உள்ளது. பின்னர் இல்லை இது சென்னையில் சென்னை ராஜா முத்தையா மண்டபத்தில் நடந்ததாக சொல்லப் படுகின்றது.
 
அடுத்ததாக இங்கே பலரது ஆதங்கம், ஒரு வசதி குறைந்த பெண், வசதியான குடும்பம் ஒன்றினுள் போகிறார். வாழ்த்தாமல் இது என்ன நியாயப் பிளப்பு என்பதாகும். அந்தப் பார்வையில் எனக்கு பிரச்னை இல்லை.
 
நான் சிறிது வித்தியாசமான பார்வையுடன் இதனை நோக்குகின்றேன்.
 
வடிவேலு போன்ற கோடீஸ்வரர்கள், பல ஏழைகள் வாழ்வுக்கு உதவமுடியும். உதவ வேண்டும்.
 
உறவுக்கார குடும்பத்தில் பெண் எடுப்பதும், உதவுவதும், தொண்டு இல்லை. வழமை. வெளியே முன்பின் தெரியாத குடும்பத்தில் பெண் எடுத்து, தத்து எடுத்தேன் என்றால் அது தான் தொண்டு.
 
மேலும் வடிவேலு தான் பணத்தினை சுஜமாக தேடினார். அவர் விருப்பு வெறுப்பினை பொறுத்தே மகனுக்கு சொத்து கிடைக்கும்.
 
மகன் படித்து, நல்ல வேலையில் இருக்கிறார் அல்லது மகன் நல்ல பிசினஸ் செய்கிறார். சுஜமாக கை நிறைய சம்பாதிக்கின்றார். அவருக்கு பெண் தேடினோம். இந்த ஏழை பெண் கிடைத்தார், கணவர் தொடர்ந்து படிக்க வைப்பார் என்றால் அது ஏற்புடையது.
 
இங்கே இந்த 18 வயதான பெண்ணை, வடிவேலு தனது பணத்தில் படிக்க உதவுவார் என்றால், பிறகு ஏன் மகனுக்கு கலியாணம் செய்து வைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகின்றதே.
 
என்னைப் பொறுத்த வரையில் அந்த பெண், ஒரு பலியாடு போல் தெரிகிறார். அதுதான் மேலே எனது பதிவில் 'கால்கட்டு' என்ற சொல்லைப் பாவித்தேன். அத்துடன் இப்போது நிச்சயதார்த்தம், படித்து முடித்ததும், 21 வயதுக்குப் பின் கலியாணம் என்று வடிவேலு சொல்லி இருந்தால்.... அங்கே அவர் உயர்ந்த மனிதராக நின்றிருப்பார்.
 
மேலும் இங்கே பலரைப் போல் நானும் வடிவேலின் தீவிர ரசிகன் தான். அது வேறு விடயம்.
 
மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள் !

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு வாழ்த்துக்கள் !  சிக்ஸ்டீனும் பெற்று ஸ்வீட்டாய் வாழட்டும்....! :D

  • கருத்துக்கள உறவுகள்

 

பசிக்கு உணவு போட்டால்தான் மனிதன் எழுந்தே நிற்கமுடியும்.
பின்பு அதில் இருந்துதான் எங்காவது நகரமுடியும்.
 
உணவிற்கும் வசதியில்லாத பெண்ணிற்கு ..... ஒரு வாழ்வை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.
இனி இப்படி ஒரு வசதியான இடத்திற்கு வந்த பெண் ... படிப்பை தொடரலாம்.
அவருடைய கடந்தகால படிப்பை பொறுத்தே அது தொடரும். 
 
இனி அந்த பெண்ணிற்கும் வடிவேலா படிக்க முடியும்? 
 
18 வயது திருமணம் பிழையானது என்றால்.
பள்ளி வயது மாணவர்களுக்கு அடிப்படை  கல்வி வசதி செய்யாதிருப்பது அதை விட கொடியது.
அரசு செய்யும் தவறுகளுக்கு ஒரு வடிவேலு என்ன செய்ய முடியும்? 

 

 

:o  ........இங்கிட்டுமா...... :D
 
.போற இடம் எல்லாம் ஒரே புகை மண்டலமாய் இருக்கு :lol:  ...........இந்த விளையாட்டுக்கு நான் வரலப்பா .ஏற்கனவே நொந்து நூலாகிட்டேன் . :icon_idea:
 
மணமக்களுக்கு வாழ்த்துக்கள் .
  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியின் முக்கியத்துவம் வடிவேலு பெரிய கோடீஸ்வரனாக இருந்தும்
தனது ஒரே மகனின் திருமணத்தை மிக எளிமையாகக் கொண்டாடியதே.

அந்தத் திருமணத்தைக் குழப்ப யாரோ திட்டமிட்டு மணமகளின் வயதைக் காட்டிப் புகார் அளித்துள்ளார்கள்.
அந்தப் புகாரிலும் உண்மை இல்லை எனத் தெளிவான பின்னரே திருமணம் நடந்திருக்கின்றது.

 

சட்டத்தை மீறி இங்கு எதுவுமே நடக்கவில்லை.ஆனால் கருத்தாளர்களான நாதமுனி அவர்களும்  நெடுக்ஸ் அவர்களும் தங்களின் அனுமானத்தினை மட்டுமே வைத்து எழுதும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.
நடக்காத ஒன்றை இனி நடக்கப் போவதாகக் கூறும் ஜோதிடர்கள் போல இவர்கள் கூறும் கருத்துக்களுக்கு எப்படிப் பதில் கிடைக்கும்.

நடந்த விடயத்தில் இருக்கும் நல்ல செய்தியை மட்டும் பார்க்காமல்
பெண் கல்வி, கட்டாயத்திருமணம் என அள்ளிவீசிக் கருத்துக்களைப் பதிந்தாலும் வடிவேலு வடிவேலு தான்.

 

இவரைப் பின்பற்றி மற்றைய திரையுலகப் பெரிசுகளும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.  


 

  • கருத்துக்கள உறவுகள்

பலரது கருத்துக்களும் ஒவ்வொரு  பக்க நியாயங்களையும்  சொல்கின்ற போதும்

அந்த 18 வயதுப்பெண்ணை  வாழ்த்த எனக்கு இப்பவும் மனம் வருகுதில்லை.....

பாழாய்ப்போன மனம் அவளை எனது மகளாக பார்த்து தொலைக்குது....

 

 

வடிவேலுவிடம் எதையாவது அதிகம் எதிர்பார்த்துவிட்டேனோ.????.

 

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலுவின் மகளின் திருமணத்தின் பின்னால் என்ன அரசியல் இருக்குதோ எனக்குத் தெரியாது.ஆனால் பெண்கள் இள வயதில் திருமணம் செய்வதை தடை செய்ய வேண்டும்.18 வயதில்/அதற்கு முதல் திருமணம் செய்து 40 வயதுக்கு முதல் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea:  :icon_mrgreen:  :icon_idea:  :icon_idea:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

உது இந்த படிப்ப பற்றி பேசுறது யாழ்ப்பாணத்து புத்தி அது வெளிநாட்டுக்கு வந்தாலும் போக இன்னும் ஒரு 4 தலைமுறை ஆகும்....

வந்தமாம் வாழ்த்தினமாம் எண்டில்லாம இலவச அட்வைஸ் பண்ணிக்கிட்டு

மற்றது இந்தியாவை பொறுத்த வரை சர்வசாதாரணம் வேளைக்கே கல்யாணம் கட்டி கொடுப்பது.....

  • கருத்துக்கள உறவுகள்

முதல் உங்க யாழ்ப்பாண மூளையால இந்திய வாழ்க்கை முறையை பற்றி யோசிக்கிறதா நிறுத்துங்க........ :D

  • கருத்துக்கள உறவுகள்

முதல் உங்க யாழ்ப்பாண மூளையால இந்திய வாழ்க்கை முறையை பற்றி யோசிக்கிறதா நிறுத்துங்க........ :D

 

இதை  வன்மையாக  கண்டிக்கின்றேன்   சுண்டல் :D

நாங்கள் ஒற்றுமையாக கருத்து எழுதினால் தான்

யாழ்ப்பாண குணத்திலிருந்து மாறியிருக்கின்றோம் என அர்த்தம் கொள்ளலாம் :lol:

ஆனால் இங்கு....??? :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உது இந்த படிப்ப பற்றி பேசுறது யாழ்ப்பாணத்து புத்தி அது வெளிநாட்டுக்கு வந்தாலும் போக இன்னும் ஒரு 4 தலைமுறை ஆகும்....

வந்தமாம் வாழ்த்தினமாம் எண்டில்லாம இலவச அட்வைஸ் பண்ணிக்கிட்டு

மற்றது இந்தியாவை பொறுத்த வரை சர்வசாதாரணம் வேளைக்கே கல்யாணம் கட்டி கொடுப்பது.....

 

சுண்டல்,
 
படிப்பு அல்ல வயசு தான் இங்க அலசப் படுகின்றது..... :D
  • கருத்துக்கள உறவுகள்
முதலில் இந்த திரியை வடிவேலுவிற்க்கு அனுப்பி வைக்கணும் ஆல் என்ன கொமண்ட் குடுக்கும்  :D
 
"நான் உளைவைச்சதுக்கு இவிக ஏன் விசத்தை குடிக்கிரானுவ பிக்காளி பயலுகளா"
  • கருத்துக்கள உறவுகள்

18 வயசு மேஜர் பொண்ணு தானே இதில உங்களுக்கு என்ன probs ?

வடிவேலு அரசியலில் நுழைந்து பாவம் நொந்து போய் இருக்கும் போது பலரும் விளையாட தான் செய்வாங்க...... அந்த பொண்ண சைட் அடிச்ச பையனா கூட இருக்கலாம் இப்பிடி போன் போட்டு சொன்னது....

மற்றது வடிவேலுவின் குடும்பத்துக்கு சுத்தமா படிப்பில்லை போல என்று சொன்னது நீங்க தானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

18 வயசு மேஜர் பொண்ணு தானே இதில உங்களுக்கு என்ன probs ?

வடிவேலு அரசியலில் நுழைந்து பாவம் நொந்து போய் இருக்கும் போது பலரும் விளையாட தான் செய்வாங்க...... அந்த பொண்ண சைட் அடிச்ச பையனா கூட இருக்கலாம் இப்பிடி போன் போட்டு சொன்னது....

மற்றது வடிவேலுவின் குடும்பத்துக்கு சுத்தமா படிப்பில்லை போல என்று சொன்னது நீங்க தானே?

 

சொன்னது நான் இல்லை தலைவா..... வடிவேலுவே தான்...
 
திரும்பவும் முதல்ல இருந்தா.... ஐயோ முடியல்ல.... :o

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பியுமா.....?? :lol:

ஐயோ

நான் வரல............ :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

 

சுண்டல்,
 
படிப்பு அல்ல வயசு தான் இங்க அலசப் படுகின்றது..... :D

 

 

எங்களுக்கு வயதெல்லாம் பிரச்சனையாகத் தெரியவில்லை.

நடிகர் வடிவேலு அவர்கள் தனது ஒரே மகனுக்கு ஆடம்பரமில்லாமல்

அதுவும் பழைய உறவுகளை மறக்காமல் தனது சொந்தங்களுக்குள்ளேயே

ஒரு பெண்ணைத்தேடி அவருக்குத் திருமணம் செய்து வைத்தது தான்

பெரிய விடயமாகத் தெரிகின்றது.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் வல்வை அக்கா.. ஒரு ஏழைப் பெண்ணை 18 வயதில் திருமண பந்தத்துக்குள் தள்ளுவதை தட்டிக் கேட்கக் கூடாது என்றா சொல்ல வாறீங்க.

 

அப்படின்னா... யாழ் களத்தில் பெற்றோரா உள்ள நீங்கள் உட்பட உங்களின் 18 வயது தாண்டிய பிள்ளைகளை கலியாணம் முடிக்கப் போறியா.. யுனிவேர்சிட்டி போகப் போறியா என்று கேட்டுவிட்டா.. யுனிவேர்சிட்டிகளுக்கு அனுப்பினீர்கள்..??! அதென்ன உங்கட பிள்ளை என்றால் ஒரு நியாயம்.. அடுத்தவன் பிள்ளை என்றால் பல்கலைக்கழகம் போற வயசில பள்ளியறை போகனுன்னு நினைக்கிறது. உங்கட பிள்ளை 21ம் நூற்றாண்டில வாழ அது 16ம் நூற்றாண்டில் வாழனுமா..??! ஏன் அந்தப் பிள்ளைக்கும் 21ம் நூற்றாண்டு சலுகைகள் வசதிகள் கிடைக்க குரல் கொடுக்கக் கூடாது.

 

பெண்களின் உரிமைக்காக குரல்கொடுப்பதாகச் சொல்லும் நீங்கள்.. ஒரு பெண்ணின் உயர்கல்வி அவளின் அறியாமையோடு பறிக்கப்படுவதை... நியாயப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடிவதாக இல்லை. பெண்ணுரிமை எல்லாம்.. எழுத்திலும்.. பேச்சிலும்.. ஊருக்கும் போல. வீட்டுக்கு என்றால்.. வேறையோ என்னமோ..???!

 

ஒரு சினிமா பிரபல்யம் வீட்டில் இப்படி நடந்தால்.. கிட்டத்தட்ட 60% கையெழுத்துத்தறிவு வீதம் கொண்ட தமிழ்நாட்டில் உள்ள 18 வயசுப் பெண்களின் நிலை என்ன என்று சிந்தித்துப் பார்த்தீர்களா..?????!

 

இங்கு சிலர் இதற்கு வக்காளத்து வாங்கக்கூடும். ஏனெனில் இன்று வெளிநாட்டு விசாவைக் காட்டி 18 வயசுப் பெட்டையள ஊரில போய் கலியாணம் கட்டிக் கொண்டு வந்து குடும்பம் நடத்திறவையை புகலிடத்தில் அதிகம் காண முடிகிறது. அதுங்க இங்கு படும் அல்லல்கள்.. யார் அறிவார்..???! அப்படியானவை இதனை நியாயப்படுத்த முன்னிற்பினம்..!!! :icon_idea::):rolleyes:

 

தட்டிக் கேட்பதானால் தமிழ்நாட்டுக்குப் போயல்லோ கத்தவேண்டும் நெடுக்ஸ். இதில் யாழில் நிண்டு படம் காட்டக் கூடாது :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

18 வயதென்று ஆகிவிட்டபின்னர் கட்டிக் குடுப்பதில் சட்டரீதியான் சிக்கல் எதுவுமில்லையே ? பிறகேன் வடிவேலுவையும் மகனையும் பந்தாடுகிறீர்கள் ?

 

பெண் படிக்க விரும்பி, ஆனால் வடிவேலுவும், மகனும் மறுத்தால் அது கண்டிக்கத் தக்கதுதான், ஆனால் இதுகூட உண்மையா இல்லையா என்று தெரியாதபோது, எதுக்கு நாம் அவசரப்பட வேண்டும் ?

 

சிலவேளை வடிவேலுவின் சமூகத்தில் இது சாதாரணமானதாகக் கூட இருக்கலாம். இதேபோல பல பழங்குடி சமூகங்கள் இந்தியாவில் இருக்கின்றனவே? அப்படியிருக்க வடிவேலுவை மட்டும் திட்டுவதில் என்ன பயன்?

 

ஒருவேளை வடிவேலு தனது பணப் பலத்தினாலும், பிரபலத்தினாலும் வற்புறுத்தியே இந்தக் கல்யாணம் நடக்கிறதென்றால், அது பொலீஸ் பார்க்கவேண்டிய வேலை.

 

இந்தியாவில் நடக்கும் எல்லா பால்ய வயதுத் திருமணங்களுக்கும் எதிராக நாம் போர்க்கொடி தூக்காதபோது, 18 வயதில் மணம் முடிக்கும் ஒரு பெண்ணை வடிவேலுவின் மருமகள்  என்கிற காரணத்தினால் மட்டும் திட்டுகிறோம் என்றால், அது சரியாகப் படவில்லை.

 

ஆனால், நான் நிச்சயம் இந்தத் தவறை விடப்போவதில்லை. இது எனது கொள்கை மட்டுமே. வடிவேலுவினதும், அவரது மகனினதும், மருமகளினதும் பிரச்சினை, அவர்களுக்கு மட்டுமே உரித்தானது. என்னால் சொல்வதற்கு எதுவுமில்லை என்பதுதான் எனது தாழ்மையான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

18 வயதென்று ஆகிவிட்டபின்னர் கட்டிக் குடுப்பதில் சட்டரீதியான் சிக்கல் எதுவுமில்லையே ? பிறகேன் வடிவேலுவையும் மகனையும் பந்தாடுகிறீர்கள் ?

 

பெண் படிக்க விரும்பி, ஆனால் வடிவேலுவும், மகனும் மறுத்தால் அது கண்டிக்கத் தக்கதுதான், ஆனால் இதுகூட உண்மையா இல்லையா என்று தெரியாதபோது, எதுக்கு நாம் அவசரப்பட வேண்டும் ?

 

சிலவேளை வடிவேலுவின் சமூகத்தில் இது சாதாரணமானதாகக் கூட இருக்கலாம். இதேபோல பல பழங்குடி சமூகங்கள் இந்தியாவில் இருக்கின்றனவே? அப்படியிருக்க வடிவேலுவை மட்டும் திட்டுவதில் என்ன பயன்?

 

ஒருவேளை வடிவேலு தனது பணப் பலத்தினாலும், பிரபலத்தினாலும் வற்புறுத்தியே இந்தக் கல்யாணம் நடக்கிறதென்றால், அது பொலீஸ் பார்க்கவேண்டிய வேலை.

 

இந்தியாவில் நடக்கும் எல்லா பால்ய வயதுத் திருமணங்களுக்கும் எதிராக நாம் போர்க்கொடி தூக்காதபோது, 18 வயதில் மணம் முடிக்கும் ஒரு பெண்ணை வடிவேலுவின் மருமகள்  என்கிற காரணத்தினால் மட்டும் திட்டுகிறோம் என்றால், அது சரியாகப் படவில்லை.

 

ஆனால், நான் நிச்சயம் இந்தத் தவறை விடப்போவதில்லை. இது எனது கொள்கை மட்டுமே. வடிவேலுவினதும், அவரது மகனினதும், மருமகளினதும் பிரச்சினை, அவர்களுக்கு மட்டுமே உரித்தானது. என்னால் சொல்வதற்கு எதுவுமில்லை என்பதுதான் எனது தாழ்மையான கருத்து.

 

ரகு அண்ணே.. இந்தியாவில் பெண்ணின் திருமண வயது 21 ஆக்கப்படனும் என்ற குரல் எழுந்திருப்பது அறிஞ்சிருக்கீங்களோ இல்லையோ..???! முதலில அதுக்கு பதில் தேடுங்க...!! அப்படி ஏன் குரல் எழுப்பிறாங்க..???! சும்மா வேலை மிணக்கெட்டா..???! அடி நுனி புரியாமலா...???! :icon_idea::)

 

சிலபேர், டபக்கெண்டு வருவினம். முழுவதும் வாசிக்கமாட்டினமாம். அரைகுறை அறிவோட, அதி மேதாவித்தனமாக கேள்விகள் கேப்பினமாம்.
 
தலையில குட்டு விழுற மாதிரி பதில் விழுந்துதெண்டால், வாரிச் சுருட்டிக் கொண்டு, வேற திரிக்குப் போய் புழுதியை அங்க கிளப்புவினம்.. பிறகு இந்தப் பக்கம் வாரயினம்...
 
இதே தொழிலாப் போச்சு, சில பேருக்கு....  :)  ^_^
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் உள்ள சில அண்ணன்கள் தான் யாழ்ப்பாணப் புத்தின்னு சொல்லிக்கிட்டு திரியுறாங்க.. ஆனால் தமிழகத்திலும் சிந்தனை மாறீட்டு அண்ணன்களா. சிட்னில இருந்து வாற அண்ணன் இன்னும் என்ன சட்னி அரைக்கிற காலத்தில இருக்கிறார் போல. :):D

 

பெண்கள் 23 ! ஆண்கள் 27 ! ல் திருமணம்

 

திருமணம், பிரியாணி இந்த இரண்டிற்கும் ஏதாவது பொருத்தம் இருக்கிறதா?’ என்று கேட்டால், `இரண்டிற்கும் மிகப்பெரிய பொருத்தம் இருக்கிறது’ என்கிறார்கள், இன்றைய டீன்ஏஜ் பெண்கள்! ,'எப்படி?’ என்று அவர்களிடமே திருப்பிக்கேட்டால், `திடுக்’ விளக்கம் ஒன்றை சிரித்துக்கொண்டே தருகிறார்கள்.

 

`பிரியாணி வெந்து தயாராக இருக்கும்போது, எப்போது பரிமாறுவார்கள், சாப்பிடலாம் என்று உமிழ்நீர் ஊற காத்திருப்போம். `சாப்பிட்டு’ கைகழுவியதும் இவ்வளவுதானா என்று ஆசை எல்லாம் அடங்கிப் போகும். அதுபோல்தான் திருமணமும் இருக்கிறது’ என்று கல்லூரி காளையர்களும், கன்னியர்களும் தரும் விளக்கம் கல்யாண ஆசையில் இருப்பவர்களை அப்படியே குப்புறத்தள்ளும் விதத்தில் இருக்கிறது.

திருமணத்தில் இன்றைய இளைய தலைமுறை இவ்வளவு வெறுப்பாக இருக்க என்ன காரணம்?

 

`பள்ளமும், மேடும், குப்பையும் நிறைந்த ஒரு சாலையில் நாம் நடந்து சென்று கொண்டிருக்கும்போது வருகிற மழை போன்றது திருமணம். அப்போது நாம் உடனே குடை பிடிக்கவேண்டும். கையில் இருக்கும் பையை நனையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அணிந்திருக்கும் சுடிதாரை சகதிபடாமல் மேலே சுருட்டவேண்டும். கீழே பார்த்து பள்ளத்தில் விழுந்துவிடாமல் நடக்கவேண்டும். எதிரேயும் அந்தப்பக்கம், இந்தப் பக்கம் வரும் வாகனங்களையும் பார்க்கவேண்டும். இத்தனை சிரமத்தை அனுபவிக்க விருப்பமின்றி நாம் மழையே வேண்டாம் என்றுதானே சொல்வோம். அப்படித்தான் நாங்கள் திருமணத்தையும் வேண்டாம் என்று சொல்கிறோம்…’ என்கிறார், கல்லூரி மாணவி தன்யா.

`திருமணத்திற்கு பெண் பார்க்கும் சடங்குகள் இப்போதும் பழைய பாணியில்தான் நடந்துகொண்டிருக்கின்றன. அது எங்களுக்கு பிடிக்கவில்லை’ என்கிறார், மாணவி சரிகா.

 

`திருமணமான புதிதில் தனியாக தாய் வீட்டிற்கு வந்தாலே கணவரோடு சண்டையா? என்று கேட்டு வறுத்தெடுத்து விடுவார்கள்’ என்று கவலைப்படுகிறார், மாணவி டெய்சி.

 

தென்னிந்திய மாணவிகளிடம் பிரபல தனியார் அமைப்பு ஒன்று எடுத்த சர்வேயில் கல்யாணத்திற்கு எதிராக இப்படிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள், மாணவிகள்.

 

சர்வேயில் பங்குபெற்ற மாணவிகளில் 46 சதவீதம் பேர், `திருமணம் செய்யாமலே தனியாக வாழ விரும்புகிறோம்’ என்று கூறி அதிர்ச்சி அளித்திருக்கிறார்கள்.

 

பெண்களிடம், `ஆண்களுக்கு பொருத்தமான திருமண வயது எது என்று நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டபோது சர்வேயில் கிடைத்த பதில் ருசிகரமானதுதான்.

 

25 முதல் 30 வயது பொருத்தமானது என்று 73 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள். 21 முதல் 25 தான் ஆண்களுக்கு பொருத்தமான வயது என்று 14 சதவீதம் பேரும், 30 முதல் 35 வயதுக்குள்தான் ஆண்கள் திருமணத்திற்கு பக்குவப்படுகிறார்கள் என்று பத்து சதவீதம் பேரும், 35 வயதுக்கு மேல்கூட ஆண்கள் திருமணம் செய்துகொள்ளலாம் என்று 3 சதவீத பெண்களும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

எந்த மாதிரியான வேலையில் இருக்கும் ஆண்களை பெண்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பு கிறார்கள்? என்ற சர்வே கேள்விக்கு கிடைத்திருக்கும் பதில் மிகவும் கவனிக்கத்தகுந்தது.

 

வங்கியில் வேலை பார்ப்பவர்கள், அரசு வேலைபார்ப்பவர்கள், பள்ளி ஆசிரியர், தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிபவர்கள், தொழிற் கல்வி தொடர்புடைய பணிகளில் இருப்பவர்கள் ஆகியோர், பெண்கள் `ஓகோ’ சொல்லும் முதலிடத்தில் இருக்கிறார்கள். சொந்த தொழில் செய்பவர்கள், என்ஜினீயர், கல்லூரி ஆசிரியர்கள் போன்றோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கிறார்கள். டாக்டர், போலீஸ், ராணுவம் போன்ற துறையில் இருக்கும் ஆண்கள், பெண்கள் விரும்பும் பட்டியலில் கடைசி இடத்தில்தான் இருக்கிறார்கள்

 

மதம், ஜாதியின் மீது இருக்கும் ஈடுபாடு பெண்களுக்கு போகவில்லைதான்! தன் பிரிவை சேர்ந்தவர்களைத்தான் திருமணம் செய்துகொள்வோம் என்று 53 சதவீத பெண்கள் சொல்கிறார்கள். 47 சதவீதம் பேர் ஜாதி, மதத்தை கடந்தும் திருமணம் செய்துகொள்வோம் என்று கூறியிருக்கிறார்கள்.

 

`உடலுறவு பற்றிய விஷயங்கள் தெரியுமா?’ என்ற கேள்விக்கு பெண்கள் தயக்கமின்றி பதில் அளித்திருக்கிறார்கள். செக்ஸ் பற்றி தெரியும் என்று சொன்னவர்கள், 43 சதவீதம் பேர். தெளிவாகத் தெரியாது என்றவர்கள் 35 சதவீதம் பேர். மீதமுள்ளவர்கள், `தெரியாது’ என்று கூறியிருக்கிறார்கள்.

 

பெண்களுக்கு திருமணத்தின் மீதான ஆர்வம் குறைகிறது என்பதுதான் இந்த சர்வேயின் முக்கிய கருத்தாக இருக்கிறது.

`திருமணம் செய்யாமலே தனியாக வாழ விரும்பும் பெண்களின் சதவீதம் அதிகரித்திருப்பது கவனிக்கத்தகுந்ததுதான். கால மாற்றம் இன்றைய டீன்ஏஜ் பெண்களை இப்படி திருமணத்திற்கு எதிராக கருத்து சொல்ல வைக்கிறது. அந்த காலத்தில் பெண் குழந்தை பிறந்தாலே, அவள் வளரும் முன்பே, அவளைப் பற்றிய திருமண சிந்தனை பெற்றோரிடம் வளர்ந்துவிடும். அதனால் திருமணத்தை நோக்கியே அவள் வளர்க்கப்படுவாள். அவள் விரும்பிய உடையை கேட்டால், அவள் விரும்பிய பொழுதுபோக்கை கேட்டால், அவள் விரும்பிய பயணத்தை கேட்டால், `உனக்கு முதல்ல கல்யாணம் ஆகட்டும். உன் ஆசைகளை எல்லாம் கணவர் தீர்த்துவைப்பார்’ என்று கூறி, திருமணம்தான் ஒரு பெண்ணுக்கு `ஆதியும் அந்தமும்’ என்ற நிலையை உருவாக்கி வைத்திருந்தார்கள். அதனால் பெண் எல்லாவற்றிற்கும் கல்யாணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தக் காலம் அப்படி! இந்தக் காலம் அதற்கு நேர்மாறாக மாறி நிற்கிறது.

 

இன்று பெண்கள் வாழ்க்கையை வரிசைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். முதலில் படிப்பு, இரண்டாவது வேலை, மூன்றாவது வீடு- வாகனம் என்று வாழ்க்கை சவுகரியங்களை ஏற்படுத்துதல், நான்காவது வாழ்க்கையை சுதந்திரமாக அனுபவித்தல், ஐந்தாவது இடத்தில் திருமணத்தை வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான விஷயங்களை முதல் நான்கு நிலையிலும் மகிழ்ச்சியாக கொண்டாடி முடித்துவிடுவதால், ஐந்தாவது நிலையில் இருக்கும் திருமணம் தேவையா? என்ற எண்ணம் அவர்களுக்குள் எழுகிறது.

திருமணம் செய்துகொண்டால் சுதந்திரம் பறிபோய்விடும் என்று நினைக்கிறார்கள். நிறைய கடமைகளும், பொறுப்பும் வந்துவிடும் என்று தயங்குகிறார் கள். அக்கம் பக்கத்தில் தம்பதிகள் வாழ்க்கையில் நடக்கும் நெகட்டிவ்வான விஷயங்களை மட்டும் பார்த்து விட்டு, நமக்கும் இப்படி வாழ்க்கை அமைந்துவிட்டால் என்ன செய்வது என்று பயம் கொள்கிறார்கள்.

இந்த மாதிரியான கவலைகளோ, பயமோ பெண்களுக்கு தேவையில்லை. ஏன்என்றால் பெண்கள், ஆண்களைவிட மனவலிமை கொண்டவர்கள். தாயாகி குழந்தையை தைரியமாக பிரசவிப்பாள். ஒருவேளை அவள் விதவை ஆனால்கூட, அவசரப்பட்டு மறுமணம் செய்து கொள்ளமாட்டாள். மனவலிமையோடு தனித்திருந்தாவது தன் குழந்தையை வளர்ப்பாள். ஆனால் மனைவி இல்லாமல் போனால், தனது குழந்தையை வளர்க்க அவசரமாக ஆண் திருமணம் செய்துகொள்வார். எப்படிப்பட்ட சூழ்நிலை என்றாலும் அதை தாக்குப்பிடித்து பெண்கள் முன்னேறிச் சென்று விடுவார்கள். அப்படிப்பட்ட மனவலிமை இன்றைய பெண்களிடமும் இருக்கிறது. அதை உணராத பெண்கள்தான் திருமணத்தைப் பற்றி இப்படி எல்லாம் கருத்து தெரிவிக்கிறார்கள், கவலைப்படுகிறார்கள்.

 

காதல் தோல்வியால் பெண்கள் கல்யாணத்தை வெறுக்கிறார்கள் என்றும் சொல்லமுடியாது. காதலும், காதல் தோல்வியும் இல்லாத பெண்களுக்குத்தான் திருமணம் நடக்கவேண்டும் என்றால், ஊரில் ஒருசில பெண்களுக்குகூட திருமணம் நடக்காது. காதலும், காதல் தோல்வியும் இன்று வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கம் ஆகிவிட்டது.

 

இந்த சர்வேயில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில விஷயங்களுக்கு விளக்கம் தருகிறேன். இங்கே கருத்துகளை பதிவு செய்திருக்கும் டீன்ஏஜ் பெண்கள் வாழ்க்கையின் முதல் கட்டமான படிப்பில் நின்று கொண்டிருக்கிறார்கள். புது விஷயங்களை கற்பது, புதிதாக சிந்திப்பது, அதிரடியாக கருத்து தெரிவிப்பது என்ற கட்டத்தில் நின்று கொண்டிருக்கும் அவர்களுக்கு திருமணத்தின் யதார்த்தம் தெரியாது. அதனால், `கல்யாணத்தில் ஆர்வம் இல்லை. திருமணமே செய்துகொள்ளமாட்டோம்’ என்றெல்லாம் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அடுத்த வருடத்திலே காதலிக்கலாம், ரகசிய கல்யாணம் செய்துகொள்ளலாம். எதுவும் நடக்கலாம்.

 

பெண்கள் 23 வயதிலும், ஆண்கள் 27 வயதிலும் திருமணம் செய்துகொள்ளவேண்டும். பெண்கள் இளமை, அழகு, ஜொலிப்பு எல்லாம் இருக்கும்போதே திருமணம் செய்துகொள்ளவேண்டும். 27 வயதுக்குப் பிறகு அவர்கள் திருமண ஆசை கொண்டு தேடிப்பிடித்தாலும் அவர்கள் விரும்பியது போன்ற மாப்பிள்ளை கிடைக்காது. அதன் பிறகு தமக்கு கல்யாணம் ஆகுமா? என்ற கேள்வி வந்துவிடும். 30 வயதைத் தொடும் போது எதிர்காலத்தைப் பற்றிய பயமும், திருமணத்தைப் பற்றிய ஏக்கமும் உருவாகிவிடும்.

முதிர்கன்னியாகிவிட்டால் பெண்களுக்குள் அவநம்பிக்கை உருவாகிவிடும். அப்போது அவர்களிடம் இருக்கும் பணம், பதவி, அழகுக்கு சமூகம் கொடுக்கும் மரியாதையும் கரையத் தொடங்கிவிடும்.

 

அவரை திருமணம் செய்துகொள்ள போட்டி போட்ட ஆண்கள் எல்லாம் வேறு கல்யாணம் செய்துகொண்டு, குழந்தைகளோடு வலம் வந்து கொண்டிருப்பார்கள். அப்போது அந்த பெண்ணுக்கு தன் மீதே அவநம்பிக்கை தோன்றும். பின்பு யார் என்றாலும் பரவாயில்லை திருமணம் நடந்தால்போதும் என்ற நிலைக்கு போய்விடுவார்கள். அப்படிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சிக்கு பதில் துக்கமாக மாறிவிடும்.

 

அதனால் பெண்கள் 23 வயதிலும், ஆண்கள் 27 வயதிலும் திருமணம் செய்துகொள்ளவேண்டும். திருமணம் என்பது இன்றைய பெண்களுக்கு தடைக் கற்கள் அல்ல, அவர்கள் முன்னேறிச் செல்ல போடப்படும் படிக்கற்கள்…’ என்கிறார், அவர்.

 

http://www.sikams.com/ladies/168-relationships/22229--23---27---.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.