Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

132 மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்! சென்னையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அஞ்சலி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
708.jpg
 
பாகிஸ்தானின் பெஷாவர் ராணுவப் பள்ளியில் நடந்த கொடூரமான தாக்குதலில் உயிரிழந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்களின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும், தீவிரவாதத்திற்கு எதிராகவும் வியாழக்கிழமை சென்னை முகப்பேறு வேலம்மாள் பள்ளியில் கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
 
ஆயிரக்கணக்கான மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் தங்கள் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்தனர்.
 
மாணவர்களாகிய நாங்கள் எந்த நிலையிலும், எக்காலத்திலும் தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடுவோம்.
 
தீவிரவாதம் எந்த ரூபத்தில் எந்த மொழியில், எந்த இனத்தில் வந்தாலும் அதனை நாங்கள் முழு தைரியத்துடன் ஒன்றாக இணைந்து எதிர்ப்போம். போராடுவோம்.
 
மக்களையும் பொருட்களையும் அழிக்கின்ற தீவிரவாதம் இவ்வுலகில் எந்த மூலையுலும் நடைபெறாமல் பாகாப்பு உணர்வோடும், பகுத்தறிவோடும் நடந்து கொள்வதோடு இணைந்தே தீவிரவாத்தை எதிர்ப்போம். இவ்வாறு தீவிரவாதத்திற்கு எதிரான உறுதிமொழியையும் மாணவர்கள் எடுத்துக்கொண்டனர்.  
 
படங்கள்: அசோக்
 
  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்...

  • கருத்துக்கள உறவுகள்

அரச பயங்கரவாதிகள் செய்யும் செயலையும் இந்த மாணவ சமுதாயம் கண்டிக்க வேண்டும்.....

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி மாணவி மரணத்தை கண்டித்து சுகாசினி போராடிய விடயம்தான் நினைவுக்கு வருது.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பாராட்ட வேண்டியோ அன்றேல் பங்குகொள்ளவேண்டியோ எதுவுமே இல்லை.

சொல்லப்போனால் ஒரு சமூகம் சார்ந்த பொதுவான ஒரேமாதிரியான மனத்துணிவை எதிர்நோக்கிய அல்லது உள்வளத்துக்கு எதிரான தாக்குதலுக்கு இந்தியர்கள் குறிப்பாக நடுத்தர, மேல் நடுத்தர வர்க்கத்தினர் ஆட்பட்டிருக்கின்றனர். அதையே இந்நிகழ்ச்சி குறிப்பிட்டுச்சொல்லும் செய்தி.

அதாவது தம்மை எதிர்காலத்தில் காத்துக்கொள்வதற்காக எதிரி என்று நினைக்கும் ஒருவருக்கு அவர்கள் எல்லாம் சேர்ந்து நாங்கள் மிகவும் நல்லவர்கள் எங்களை ஒண்டும் செய்துவிடாதீர்கள் எனச்சொல்லும் செய்தியே இது.

இது பாகிஸ்தானின்மீதான பயங்கலந்த ஒரு கூழைக்கும்பிடு.

விளக்கமாகச் சொன்னால் -----------------------------------------------------------------------

இங்கு ஒன்றுகூடி நிற்கும் பாதிக்குழந்தைகளுக்கு எதற்காக நிற்கிறோமெனும் செய்தியே தெரியாமல் இருக்கலாம்.

தனியார் பாடசாலைகளும் அதன் நிர்வாகமும் தங்கள் காசுகாய்க்கும் மரத்தைப் பாதுகாக்க இப்படி ஒரு கூத்தை அரங்கேற்ரியிருக்கிறார்கள்.

இதைவிட நாண்டிக்கிட்டுச் சாகலாம். ---------

எதிரி என்றால் ஓ என்னவாக இருந்தாலும் நீ எதிரியே உன்னை நீ திருத்திக்கொள், உனது நாட்டின் குழந்தைகளுக்கு முறையான பாதுகாப்பு உரிமையைக் கொடு என்று தெருவில் இறங்கிக் கூச்சல்போட்டால் அது வீரம் அல்லது தில்லு என்று சொல்லாம்.

Edited by நிழலி
அருவருப்பான / அநாகரீகமான சொற்கள் நீக்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கையால் ஆகாத சமூகம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொத்தத்தில் எதிரி நாட்டுக் குழுந்தைகள் செத்தால் எமக்கென்ன என்று இருக்க வேண்டும் என்று சொல்ல வாறீங்களா? இங்கு எதுகுமே அரசியல் சாராமல் பார்க்க படவில்லை...! பகிஸ்தானில் நாய் செத்தால் கூட ... இந்தியாவில் அது அரசியல் தான்.. 

ஒரு பெரும் போரில் வகை தொகையின்றி குழந்தைகளை பலி கொடுத்த எம் சமூகத்தில் இருந்து இத் திரிக்கு வரும் பதில்கள் பொறுப்பற்றவை மட்டுமல்ல, கண்டிக்கப் பட வேண்டியவை. தாயகத்தில் தம் குழந்தைகளை பலியானதைப் பார்த்திராத, போரை ஒரு சினிமாவாக பார்த்தவர்களால் மட்டுமே இன்னொருவரின் வேதனையை நியாயப்படுத்த முடியும்.

அரச பயங்கரவாதத்துக்கு சமாந்தரமாக தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் செய்யும் செயலை எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது. அதுவும் பள்ளிச் சிறுவர்களை தமது இலக்காக தேர்ந்தெடுத்து படுகொலை செய்யும் மனிதர்களை, அவ்வாறு செய்து விட்டு அதற்கு மத ரீதியிலான விளக்கம் கொடுக்கும் பயங்கரவாதிகளின் செயல் கடுமையான கண்டனத்துக்குரியது.

இதே இஸ்லாமிய பயங்கரவாதம் நாளை நாம் வாழும் மேற்குலகின் பாடசாலைகளையும் குறிவைக்க திட்டம் இடும் என்பதையும் மறக்க வேண்டாம்.

-----

சென்னை பள்ளிக் குழந்தைகளின் செயல் உன்னதமானது. எதிரி நாடென்றாலும் அங்கு வாழும் குழந்தைகளின் இழப்புக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வை ஒருங்கு செய்த பாடசாலைக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தனது இனத்தை சேர்ந்த....
செஞ்சோலை மாணவர்களை, ஸ்ரீலங்கா குண்டு வீசி கொன்ற போது....
வராத இரக்கம், இப்ப வந்திருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

கொடூரமாக உயிரிழந்த அனைத்து மாணவர்களது ஆத்மாவும் சாந்தியடையட்டும்....பாக்கிஸ்தான் அவர்களுக்கு எதிரி அங்கே செத்தவுடன் இங்கே குரல் கொடுக்கிறார்கள்.இலங்கை அவர்களுக்கு நண்பன் அது தான் இவர்கள் வேடிக்கை மட்டும் பார்த்தார்கள்.மனித அழிவுகளை கூட சுய நலத்திற்கு பயன்படுத்தும் கேடு கெட்ட நாடு இந்தியா

தனது இனத்தை சேர்ந்த....

செஞ்சோலை மாணவர்களை, ஸ்ரீலங்கா குண்டு வீசி கொன்ற போது....

வராத இரக்கம், இப்ப வந்திருக்குது.

தமிழ் சிறி,

இதுக்கு முக்கிய காரணம் மீடியாக்கள் (Media) தான்.  அன்று செஞ்சோலையில் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்ட போதும் சரி, நாகர்கோவிலில் 45 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் சிங்கள வான்படையின் குண்டுகளால் சிதைக்கப்பட்ட போதும் சரி சர்வதேச மீடியாக்கள் மட்டுமன்றி தமிழக மீடியாக்களும் கடும் கள்ள மெளனத்தினை கடைப்பிடித்தனர். ஆனால் இன்று பாகிஸ்தானில் குழந்தைகள இஸ்லாமிய அடிப்படைவாத வெறியர்களால் கொல்லப்படும் போது அது தமக்கு சாதகமான செய்தி என்பதால் வகை தொகையின்றி படங்கள் வீடியோக்கள் மூலம் எல்லாரையும் சென்றடைய வைக்கின்றனர்.

எம் துயரங்களை கண்டும் இப்படியான கள்ள மெளனம் சாதித்த தமிழக திராவிட / பார்ப்பனிய ஊடகங்களைத் தான் நாங்கள் காசு கொடுத்து எங்கள் வீடுகளில் இருந்து தினமும் பார்த்து  ஊக்குவித்தும் வருகின்றோம்.

இனியாவது புலம்பெயர் நாட்டில் இருக்கும் படித்த தலைமுறையாவது ஒரு பலம்வாய்ந்த ஊடக நிறுவனம் ஒன்றை தோற்றுவிக்க வேண்டும்.

உண்மை...

நாம் தொடவேண்டிய பகுதி  இது

  • கருத்துக்கள உறவுகள்

....

இனியாவது புலம்பெயர் நாட்டில் இருக்கும் படித்த தலைமுறையாவது ஒரு பலம்வாய்ந்த ஊடக நிறுவனம் ஒன்றை தோற்றுவிக்க வேண்டும்.

அந்த உருப்படியான காரியத்தை முதலில் செய்யுங்கள்.

தமிழகத்திலும் அந்நிறுவனம் காலூன்றி வளர்ந்து பரப்புரை செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள்(Tehreek-e-Taliban = TTP)பாடசாலை ஒன்றில் நிகழ்த்திய வெறியாட்டத்தில் 132 குழந்தைகள் உட்பட 144 பேர் வரை கொடுரமாக கொல்லப்பட்டது தெரிந்ததே. இந்தயங்கரவாத தாக்குதலில் இந்திய உளவுத்துறைக்கும் ஆப்கானிய உளவுத்துறைக்கும் தொடர்பு இருப்பதாக நோர்வே நாட்டை சேர்ந்த Senter for Internasjonal og Strategisk analyse (SISA) எனப்படும் சர்வதேச முலோபாய பகுப்பாய்வு மையத்தின் தலைவர் திரு. ஹெல்கே லுரோஸ் நோர்வேஜிய செய்தி நிறுவனமான NTB க்கு தெரிவித்துள்ளார். http://www.abcnyheter.no/nyheter/2014/12/17/214128/terroristene-bak-skolemassakre-stottes-fra-kabul

Edited by vanangaamudi

கொடூரமாக உயிரிழந்த அனைத்து மாணவர்களது ஆத்மாவும் சாந்தியடையட்டும்....பாக்கிஸ்தான் அவர்களுக்கு எதிரி அங்கே செத்தவுடன் இங்கே குரல் கொடுக்கிறார்கள்.இலங்கை அவர்களுக்கு நண்பன் அது தான் இவர்கள் வேடிக்கை மட்டும் பார்த்தார்கள்.மனித அழிவுகளை கூட சுய நலத்திற்கு பயன்படுத்தும் கேடு கெட்ட நாடு

மிக நல்ல விடயம் ,எவர் எந்த அரசியல் செய்தாலும் சிறுவர்கள்  மனதில் இப்படி ஒரு எண்ணத்தை வளர்ப்பது வரவேற்கத்தக்கது .

குழந்தைகளின் அழிவு தாங்கமுடியாதது அதைவிட்டு ஒரு நிகழ்வுடன் இன்னுமொன்றை ஒப்பிட்டு காலம் முழுக்க சலித்துக்கொண்டிருக்க முடியாது .எல்லா நிகழ்வுகளும் தனித்தன்மையானவை .

  • கருத்துக்கள உறவுகள்

கொடூரமாக உயிரிழந்த அனைத்து மாணவர்களது ஆத்மாவும் சாந்தியடையட்டும்.

சென்னை மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்துக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல விடயம் ,எவர் எந்த அரசியல் செய்தாலும் சிறுவர்கள்  மனதில் இப்படி ஒரு எண்ணத்தை வளர்ப்பது வரவேற்கத்தக்கது .

குழந்தைகளின் அழிவு தாங்கமுடியாதது அதைவிட்டு ஒரு நிகழ்வுடன் இன்னுமொன்றை ஒப்பிட்டு காலம் முழுக்க சலித்துக்கொண்டிருக்க முடியாது .எல்லா நிகழ்வுகளும் தனித்தன்மையானவை .

http://www.yarl.com/forum3/index.php?/topic/150570-காலியில்-யுத்த-வெற்றி-காணொலிகள/

அர்ஜூன், நேரம் கிடைக்கும் போது....

நேற்று, யாழ்களத்தில் இணைக்கப் பட்ட இந்தப் பதிவையும் வாசியுங்கள்.

அவனவன், தன் இனத்துக்கு... குழந்தைப் பருவத்திலேயே தன்மான உணர்வை ஊட்டுகின்றான், நாம்... தான், ரொம்ப அப்பாவிகளாய்..... பாவம், புண்ணியம் பார்த்து, இருக்க... இடமும் இல்லாமல் இருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி,

இதுக்கு முக்கிய காரணம் மீடியாக்கள் (Media) தான்.  அன்று செஞ்சோலையில் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்ட போதும் சரி, நாகர்கோவிலில் 45 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் சிங்கள வான்படையின் குண்டுகளால் சிதைக்கப்பட்ட போதும் சரி சர்வதேச மீடியாக்கள் மட்டுமன்றி தமிழக மீடியாக்களும் கடும் கள்ள மெளனத்தினை கடைப்பிடித்தனர். ஆனால் இன்று பாகிஸ்தானில் குழந்தைகள இஸ்லாமிய அடிப்படைவாத வெறியர்களால் கொல்லப்படும் போது அது தமக்கு சாதகமான செய்தி என்பதால் வகை தொகையின்றி படங்கள் வீடியோக்கள் மூலம் எல்லாரையும் சென்றடைய வைக்கின்றனர்.

எம் துயரங்களை கண்டும் இப்படியான கள்ள மெளனம் சாதித்த தமிழக திராவிட / பார்ப்பனிய ஊடகங்களைத் தான் நாங்கள் காசு கொடுத்து எங்கள் வீடுகளில் இருந்து தினமும் பார்த்து  ஊக்குவித்தும் வருகின்றோம்.

இனியாவது புலம்பெயர் நாட்டில் இருக்கும் படித்த தலைமுறையாவது ஒரு பலம்வாய்ந்த ஊடக நிறுவனம் ஒன்றை தோற்றுவிக்க வேண்டும்.

நிழலியின் கருத்துக்கு.... நீண்ட பதில் அழிக்க வேண்டும். கூடுமானவரை முயற்சிக்கின்றேன்.

நாம், ஒட்டுமொத்தமாக... தமிழக திராவிட / பார்ப்பனிய ஊடகங்களை குற்றம் சொல்லி விட்டு, தப்பிக்க முடியாது.

ஈழப் போர் நடந்து கொண்டிருந்த நேரம், சுயாதீனமாக போராடிய மாணவர்களையும் தனது தந்திரத்தால்... பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தப் போராட்டத்தை நசுக்கியது தி.மு.க. அரசு. அந்த அரசியல்வாதிகளையும்... தமிழக மக்கள் தான் தேர்ந்து எடுத்தார்கள்.

நாம் தமிழக ஊடகங்களை மட்டும் நம்பியிராமல், எம்மால்... அங்கு தலை சிறந்த ஊடகத்தை உருவாக்க முடியும்.உதாரணத்துக்கு.... லைக்கா, ஐங்கரன் போன்ற நிறுவனங்கள்... தமிழகத்தில் கோலோச்சும் போது... ஊடகம் நடாத்துவது சிரமம் அல்ல.

ஆனால்... அதற்குரிய மனம் எம்மினத்தில் இல்லை.

அதற்கு மேலாக, போராட்டம் நடந்த காலத்தில்..... புலிகளுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படாமல், அவர்கள் எதிர் பார்த்தற்கும் மேலாகவே... வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் உதவினார்கள்.

எஞ்சிய அந்தப் பணத்தில் கூட.... இப்படியான ஊடக நிறுவனங்களை உருவாக்க முடியும். கே.பி. போன்றவர்கள் அதனை சிங்களத்திற்கு கொடுத்து, தம்மை பாதுக்ககின்றார்கள். எஞ்சிய மற்றவர்களோ... அதனை நாடு கடந்த தமிழீழ அரசுக்கு அவ்வப் போது... சிறு பகுதியாக கொடுத்து, அவர்களின் நடவடிக்கைகளை ஊக்குவிக்க மனம் இன்றி, வந்தவரை லாபம் என்று இருக்கின்றார்கள்.

இவற்றைப் பார்க்கும் போது... எனது  இனத்தின் மீது, தீராத வெறுப்புத்தான் ஏற்படுகின்றது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா, ஐங்கரன் போன்றவை தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டால் அவை ஏதோ ஒரு வகையில் மத்திய அரசால் செல்லாக்காசு ஆக்கப்படும்.. காலப்போக்கில் அழிக்கப்பட்டுவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பாராட்ட வேண்டியோ அன்றேல் பங்குகொள்ளவேண்டியோ எதுவுமே இல்லை.

சொல்லப்போனால் ஒரு சமூகம் சார்ந்த பொதுவான ஒரேமாதிரியான மனத்துணிவை எதிர்நோக்கிய அல்லது உள்வளத்துக்கு எதிரான தாக்குதலுக்கு இந்தியர்கள் குறிப்பாக நடுத்தர, மேல் நடுத்தர வர்க்கத்தினர் ஆட்பட்டிருக்கின்றனர். அதையே இந்நிகழ்ச்சி குறிப்பிட்டுச்சொல்லும் செய்தி.

அதாவது தம்மை எதிர்காலத்தில் காத்துக்கொள்வதற்காக எதிரி என்று நினைக்கும் ஒருவருக்கு அவர்கள் எல்லாம் சேர்ந்து நாங்கள் மிகவும் நல்லவர்கள் எங்களை ஒண்டும் செய்துவிடாதீர்கள் எனச்சொல்லும் செய்தியே இது.

இது பாகிஸ்தானின்மீதான பயங்கலந்த ஒரு கூழைக்கும்பிடு.

விளக்கமாகச் சொன்னால் -----------------------------------------------------------------------

இங்கு ஒன்றுகூடி நிற்கும் பாதிக்குழந்தைகளுக்கு எதற்காக நிற்கிறோமெனும் செய்தியே தெரியாமல் இருக்கலாம்.

தனியார் பாடசாலைகளும் அதன் நிர்வாகமும் தங்கள் காசுகாய்க்கும் மரத்தைப் பாதுகாக்க இப்படி ஒரு கூத்தை அரங்கேற்ரியிருக்கிறார்கள்.

இதைவிட நாண்டிக்கிட்டுச் சாகலாம். ---------

எதிரி என்றால் ஓ என்னவாக இருந்தாலும் நீ எதிரியே உன்னை நீ திருத்திக்கொள், உனது நாட்டின் குழந்தைகளுக்கு முறையான பாதுகாப்பு உரிமையைக் கொடு என்று தெருவில் இறங்கிக் கூச்சல்போட்டால் அது வீரம் அல்லது தில்லு என்று சொல்லாம்.

அருமையான.... கருத்து, எழுஞாயிறு. :)

  • கருத்துக்கள உறவுகள்

தனது இனத்தை சேர்ந்த....

செஞ்சோலை மாணவர்களை, ஸ்ரீலங்கா குண்டு வீசி கொன்ற போது....

வராத இரக்கம், இப்ப வந்திருக்குது.

சும்மா அவை செய்யவில்லை, இவை செய்யவில்லை என்று சொல்ல வேண்டாம். யாழில் அப்பொழுது வந்த செய்திகள் சில. வராதவை பல. 1)கோவை- திருப்பூரில் சிங்கள தேசியக் கொடிகள் எரிப்பு http://www.yarl.com/forum3/index.php?/topic/12909-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/ 2)முல்லைத்தீவு படுகொலை: சென்னையில் இன்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பா http://www.yarl.com/forum3/index.php?/topic/12950-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/?hl=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88#entry212475 3)முல்லைத்தீவு படுகொலை - தமிழக சட்டமன்றம் கண்டனம் http://www.yarl.com/forum3/index.php?/topic/13018-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D/?hl=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88#entry212574

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிச் சிறார்கள் படுகொலை செய்யப்பட்டதை எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் நியாயப்படுத்த முடியாது. இந்தக் கொலைகளை நாம் செஞ்சோலைக் கொலைகளுடனும், புதுக்குடியிருப்புக் கொலைகளுடனுன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். எங்கு இறந்தாலும் குழந்தைகள் குழந்தைகளே.

பாக்கிஸ்த்தான் சிங்களத்துக்கு ஆதரவு கொடுக்கிறதென்பதை மறுக்கவில்லை. அதற்கும் இங்கே கொல்லப்பட்ட குழந்தைகளுக்கும் என்ன தொடர்பு? சிங்களத்துக் கொடுக்கப்படும் ஆதரவிற்கு இந்தக் குழந்தைகள் எந்த விதத்தில் காரணமானார்கள் ? இந்தக் குழந்தைகளில் எந்தக் குழந்தை சிங்களத்துக்கு ஆதரவு கொடுக்கும் தீர்மானத்தை எடுத்தது ? அப்படியிருக்க குழந்தைகள் காட்டுமிராண்டிகளால் பலி எடுக்கப்பட்டதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள் ?

இந்தக் குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு தமிழகத்தில் பள்ளிச் சிறார்கள் இரங்கல் தெரிவிப்பது எப்படித் தவறாகும் ? சரி, சென்னையில் பள்ளிச் சிறார்கள் தாம் செய்வது புரியாமலோ அல்லது பள்ளி நிர்வாகத்தின் அனுசரணையின் பேரிலோதான் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோமே, இதற்குள் எப்படி அரசியல் வந்தது ? இப்படி ஒரு இரங்கலைச் செய்வதன் மூலம் அந்தப் பள்ளியோ அல்லது சிறுவர்களோ அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் எந்தவிதமான அனுகூலத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தார்களென்பதை இங்கே கருத்தெழுதும் நண்பர்கள் கூறினால் அறிந்துகொள்ள ஆர்வம்.

ஈழத்தில் பள்ளிச் சிறார்களாகட்டும், இளைஞர்களாகட்டும், முதியவர்களாகட்டும், யார் சிங்களத்தால் கொல்லப்பட்டாலும் இடைவிடாது இரங்கலும் ஆர்ப்பாட்டமும் இன்றுவரை நடத்துவது யார் ? அதே தமிழகச் சிறார்களும், மாணவர்களும்தானே?? அப்படியிருக்க "நாங்கள் செத்தால் சும்மாயிருக்கிறீர்கள், பாக்கிஸ்த்தான்காரன் செத்தால் இரங்கல் தெரிவிக்கிறீர்கள்" என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது நியாயமா?? எழுதும்போது, என்ன எழுதுகிறோம், அல்லது யாரை விழிக்கிறோம் என்கிற கவனம் கூட இல்லாமலா சகட்டுமேனிக்கு எழுதுவது ?

இன்று இந்தியாவும், பாக்கிஸ்த்தானும் முகம்கொடுக்கும் மிகப்பெரிய பிரச்சினை இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதம் என்றால் அது மிகையாகாது. இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாத மிருகங்களால் வகை தொகையின்றி நாள்தோறும் பாக்கிஸ்த்தானியர்களும், இந்தியர்களும் கொல்லப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆகவே பாதிக்கப்பட்டு வரும் இரு சமூகங்கள் தம்முள் இரங்கலையும், ஆதரவையும், சகோதரத்துவத்தையும் காட்டிக்கொள்வதில் எப்படித் தவறிருக்க முடியும் ?

இங்கே கருத்தாடும் நண்பர்களுக்கு ஒரு விடயத்தை இறுதியாகக் கூறி முடிக்கிறேன்' 131 பள்ளிச் சிறுவர்கள் தற்கொலைத் தாக்குதலிலும், துப்பாகிச் சூட்டிலும் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி வந்ததும், சமூக வலைத் தளங்களான டுவிட்டரிலும், முகப் புத்தகத்திலும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள்  தமது அயல் நாட்டில் கொல்லப்பட்ட சிறார்களின் குடும்பங்களுக்கு ஆறுதலும், இரங்கலும் தெரிவித்துக்கொண்டிருந்தனர். இது சில மணிநேரத்திலேயே லட்சக்கணக்காக, மில்லியன் கணக்கான இரங்கல்ச் செய்தியாக மாறியது. பதிலுக்கு பாக்கிஸ்த்தான் மக்களும் தமக்கு இந்தியர்கள் நல்கிய ஆறுதலுக்கும், ஆதரவிற்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர். இங்கே அரசியல் கிடையாது. இலாப நட்டம் கிடையாது. இருப்பதெல்லாம் சக மனிதனுக்கு மனிதன் காட்டும் இரக்கமும், ஆதரவும்தான்.

முடிந்தால் அப்பாவிகள் கொல்லப்படுவதைக் கண்டிப்போம். முடியாவிட்டால் கொல்லப்படுவதை நியாயப்படுத்தாமலாவது இருப்போம். அதுவே மனிதத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய கைம்மாறாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய... பூசனிக்காய்,
விவாதமும், நல்லெண்ணமும்.. எமக்கு ஒத்து வராது.
பாகிஸ்தானுக்குக்கும், இந்தியனுக்கும் என்ரால்...... அங்கு போய் படுங்கோ. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய... பூசனிக்காய்,

விவாதமும், நல்லெண்ணமும்.. எமக்கு ஒத்து வராது.

பாகிஸ்தானுக்குக்கும், இந்தியனுக்கும் என்ரால்...... அங்கு போய் படுங்கோ. :lol:

என்ன, இப்படிச் சொல்லி விட்டீர்கள் சிறி ?? :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.