Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவை ஏசியதால் மயங்கி விழுந்தார் அனந்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மாவை ஏசியதால் மயங்கி விழுந்தார் அனந்தி
02-01-2015 05:27 AM
Ananthi300.jpg
வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் வெள்ளிக்கிழமை (02) காலையில் திடீரென மயக்கம் போட்டு வீழ்ந்துள்ளார்.
 
தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, அனந்தியை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஏசியதாலேயே அவர் மயக்கம் போட்டு வீழ்ந்துள்ளதாக தெரியவருகின்றது.
 
அனந்தியை தொடர்புகொண்ட போது, அவர் மயக்கமடைந்து உடல் நலம் குன்றியிருப்பதாக அவரது வீட்டிலுள்ளவர்கள் தெரிவித்தனர்.
 
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதை அனந்தி சசிதரன் பகிரங்கமாக எதிர்த்து வந்தார்.
 
இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையை சேர்ந்தவர்களுக்கும் அனந்திக்கும் இடையில் கருத்து முரண்பாடு இருந்து வந்துள்ளது.
 
இதனையடுத்தே, மாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு அனந்தியை ஏசியுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • கருத்துக்கள உறவுகள்

மாவையின் தொலை பேசி இலக்கம் என்ன?
நாமும்.... திருப்பி, நாலு பேச்சு பேச கேட்டேன்.

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்
அனந்தி அவர்களை ஒரு நெஞ்சுரம்கொண்ட வீரப்பெண்மணியாக அவருடன் பழகியவர்கள் மூலமும், ஊடகங்கள் மூலமும் அறிய முடிந்துள்ளது. தற்பொழுது ஊடகம் ஒன்றே அவரை உரமற்றவராகத் தெரிவிக்கிறது. இந்த ஊடகமானது, நம்பகமான வட்டாரத்தை நம்புவதைவிடவும், அனந்தி அவர்களை நேரடியாகப் பேட்டிகண்டபின் செய்தியை வெளியிட்டிருக்கலாம். :mellow:   
 
  • கருத்துக்கள உறவுகள்

மாவையின் தொலை பேசி இலக்கம் என்ன?

நாமும்.... திருப்பி, நாலு பேச்சு பேச கேட்டேன்.

நாங்களும் யோசித்தோம். சம்பந்தருக்கு பக்கத்தில இருந்து எல்லாத்துக்கும் தலையாட்டினாப் போல.. மாவை சிறந்த தலைவர் என்று அர்த்தமில்லை. உங்களால் மக்களைப் புரிஞ்சு கொண்டு அரசியல் செய்ய முடியல்லைன்னா கூண்டோடு அரசியலை விட்டு விலகுங்க. நாங்க வந்து அரசியல் செய்யுறம். மேற்கு நாடுகள் பூரா.. 20..30.. 40 வயசுக் காரங்க தான் ஆட்சி பண்ணுறாங்க.

நீங்க தான் பழைய கிழடுங்க.. இருந்துகிட்டு மக்களையும்.. ஊரையும் ஏய்கிறீங்க. இன்றைய தலைமுறை நேர்மையான.. மதிநுட்பமான.. காலத்துக்கும் மக்கள் விருப்புக்கும்..  நாட்டுக்கும் அவசியமான அரசியலையே முன்னெடுக்க விரும்புது என்று சொல்லுவமுன்னு.

இல்ல.. இப்ப தேர்தல் முடிய.. ஆட்சிமாற்றம் வந்தால்.. அடுத்தது பாராளுமன்றத் தேர்தல். அதுக்கு உண்டியல் குலுக்கிட்டு இங்கின வரத்தானே வேணும் வரட்டும். கேட்கிற கேள்வில.. மாவை.. சுருண்டு விழட்டும்.எதுக்கு நடிப்பு.. கொழும்பில ஒரு சீன்.. யாழ்ப்பாணத்தில ஒரு சீன். இவர்கள் அந்தக்காலம் தொடங்கி இப்படி டபிள் சீன் போட வெளிக்கிட்டுத்தான்.. ஒவ்வொத்தரா.. மேல போய் சேர்ந்தவை.

ஆக்கிரமிக்க வந்த சிங்களவனை எதிர்த்து தூக்கிய துப்பாக்கிகள்..இவர்களை நோக்கியும் ரவையை கக்க வேண்டிய தேவை இந்த இரட்டை வேடத்தால்.. மக்களை ஏமாற்றி தங்கட சுயலாப அரசியலை முன்வைச்சதால் தான் வந்தது. இவையை கருத்துச் சொல்லி திருத்த முடியுமுன்னா.. சம்பந்தன் இப்ப திருந்தி இருக்கனும். அது புலிகள் இருக்கும் வரை... டோமண்டா இருந்திட்டு.. மீண்டும் பழைய குரங்குப் புத்தியை காட்டுது.

சம்பந்தன்.. சுமந்திரன்.. மாவை போற போக்குச் சரியில்ல. மக்கள் உதை விரும்புவினம் என்று மட்டும் நினைக்காதேங்க. :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப சம்பந்தன் சுமந்திரன் லிஸ்டில வலிகாமத்து மைந்தன் மாவையாரையும் சேர்த்திட்டீங்கள் அடுத்தது ஆர்? மெய்யே நீங்க வந்து அரசியல் செய்ய இவையே தடைக்கல்லாக நிக்கினம்? :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

ஆம். நேர்மையான அரசியல் செய்ய முடியாமல்.. இந்த காட்சிக்கு கோலம் மாறும் ****** ***.. மக்களின் உரிமை.. உடமை.. உயிரை.. பணயம் வைச்சு.. தங்க சுகபோக அரசியலை முன்னெடுக்கினம்.
 
மாவை.. அங்க ஒன்றும் வெட்டிக்கிழிக்கல்ல. சுயநிர்ணய உரிமை பற்றி பேசுறது.. பிற சம்பந்தன் பக்கத்தில இருந்து கொண்டு தமிழீழத்தை கைவிட்டாச்சு.. ஐக்கிய இலங்கைக்க ஒன்றுக்கு இருப்பம்.. என்றதுக்கு தலையாட்டுறது.. இது மாவைட பழைய பாணி தான்.
 
இவர்கள் காலத்து அரசியல்வாதிகளில்.. கூட்டமைப்பில்.. உண்மையாக இருந்த ஒரே தலைவர் என்றால்.. அது ஜோசப் பரராஜசிங்கம் ஐயா என்று அடிச்சுச் சொல்லலாம். அவர் எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணிதலுக்கும் இடமில்லாமல்.. மக்கள் என்ன பேச விரும்பினமோ அதை அறிஞ்சு எங்கும் பேசக் கூடியவர். அதனால அவரை இவையே போட்டுக்கொடுத்து போட வைச்சார்களோ என்று சந்தேகமா இருக்குது. குறிப்பாக சம்பந்தன்.. தன்ர பதவியை தக்க வைக்க.
 
இதுங்க உருப்படியா இளைஞர்கள் அரசியல் செய்ய விடுமாப் போல தெரியல்ல. எனி ஒரு இளையர் அணி வெளிநாடுகளில் இருந்து வந்து தான் இவைக்கு அரசியல் வகுப்பு எடுக்க வேண்டும் போல் உள்ளது. இப்படியே விட்டால்... அது கடைசில.. சேர் பொன்கள் பல்லக்கில் பவன வந்த காலத்தில போய் நிற்கும். அந்தளவுக்கு துதிபாடல் அரசியலும்.. சலுகைகள் தேடும் அரசியலையும் நோக்கி..  போய்க்கிட்டிருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல். இதுக்காக எல்லாம் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கல்ல. இவர்கள் தமிழ் தேசியம் என்பதுக்குள்.. பதுங்கி இருந்து.. தங்கள் உளுத்துப்போன சலுகை பெறும்.. சுயலாபக் கட்சிகளை வளர்க்க தொடர்ந்து இடமளிக்க முடியாது.
 
நேர்மையான மக்கள் விரும்பும் அரசியலை முன்னெடுக்க முடியல்லைன்னா.. மாவையோ.. எவருமோ.. மற்றவையை திட்டிறத விட்டிட்டு தாங்கள்.. அரசியலை விட்டு விலகி.. வெளிநாடுகளுக்கு அனுப்பி செற்றிலாகிட்ட பிள்ளைகளோடு வந்து பேரப்பிள்ளைகளை.. பூட்டப்பிள்ளைகளை.. கொஞ்சிக்கிட்டு.. சிவனேன்னு மேல போற வேலையை பார்க்கட்டும். தாயக அரசியலை எப்படி முன்னெடுக்கனுன்னு.. தாயகத்திலும்.. புகலிடத்திலும் உள்ள இளைஞர்களுக்கு தெரியும். :icon_idea::)

நியானி: பண்பற்ற சொல்லாடல் நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

நான் கதைத்ததால் தான் அனந்திக்கு இவ்வாறு ஏற்பட்டதென்றால் நான் அதற்கு மனம் வருந்துகின்றேன்- மாவை http://www.pathivu.com/news/36540/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் மீது மிரட்டல்களையும்

சொல் ஆயுதத்தை வன்மையாக பாவிப்பதையும் அனுமதிக்கமுடியாது

ஆயுத மிரட்டல்களுக்கோ

ஆயுத அச்சுறுத்துல்களுக்கோ

அஞ்சாத சகோதரி அவர்கள்

இந்த மிரட்டலால் மயங்கிவிழுந்துள்ளது 

அதன் கடுமையைக்காட்டி நிற்கிறது....

இந்த  வன்முறையை  வன்மையாக கண்டிக்கின்றேன்......

நான் கதைத்ததால் தான் அனந்திக்கு இவ்வாறு ஏற்பட்டதென்றால் நான் அதற்கு மனம் வருந்துகின்றேன்- மாவை

mavai-1.jpgஇன்று காலை அனந்தி சசிதரனுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, அனந்தியை கடுமையாகத் திட்டிதாகவும் அதனால் அனந்தி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போதே மயங்கி விழுந்ததாக தெரியவந்தது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாவை சேனாதிராஜா  தொடர்பு கொண்டு கேட்டபொழுது அவர்  கூறுகையில்,

நான் தொலைபேசி அழைப்பெடுத்து அனந்தியிடம் பேசியது உண்மைதான். ஆனால் ஊடக செய்திகள் சொல்லும்படி நான் அவரை திட்டவில்லை. நாட்டு நிலை குறித்தே பேசியிருந்தேன். என்னை பற்றி பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. நான் ஒரு வயது முதிர்ந்த அரசியல்வாதி ஒருபோதும் அப்படி பேசுபவர்கள் அல்ல. நான் கதைத்ததால் தான் அனந்திக்கு இவ்வாறு ஏற்பட்டதென்றால் நான் அதற்கு மனம் வருந்துகின்றேன்´ என்றார்.

தொடர்புடைய செய்தி;-

அனந்தி சசிதரனிற்கு அலைபேசியூடாக மாவை சேனாதிராசா கடுமையான மிரட்டல்?

http://www.pathivu.com/news/36540/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்களும் யோசித்தோம். சம்பந்தருக்கு பக்கத்தில இருந்து எல்லாத்துக்கும் தலையாட்டினாப் போல.. மாவை சிறந்த தலைவர் என்று அர்த்தமில்லை. உங்களால் மக்களைப் புரிஞ்சு கொண்டு அரசியல் செய்ய முடியல்லைன்னா கூண்டோடு அரசியலை விட்டு விலகுங்க. நாங்க வந்து அரசியல் செய்யுறம். மேற்கு நாடுகள் பூரா.. 20..30.. 40 வயசுக் காரங்க தான் ஆட்சி பண்ணுறாங்க.

நீங்க தான் பழைய கிழடுங்க.. இருந்துகிட்டு மக்களையும்.. ஊரையும் ஏய்கிறீங்க. இன்றைய தலைமுறை நேர்மையான.. மதிநுட்பமான.. காலத்துக்கும் மக்கள் விருப்புக்கும்..  நாட்டுக்கும் அவசியமான அரசியலையே முன்னெடுக்க விரும்புது என்று சொல்லுவமுன்னு.

இல்ல.. இப்ப தேர்தல் முடிய.. ஆட்சிமாற்றம் வந்தால்.. அடுத்தது பாராளுமன்றத் தேர்தல். அதுக்கு உண்டியல் குலுக்கிட்டு இங்கின வரத்தானே வேணும் வரட்டும். கேட்கிற கேள்வில.. மாவை.. சுருண்டு விழட்டும்.எதுக்கு நடிப்பு.. கொழும்பில ஒரு சீன்.. யாழ்ப்பாணத்தில ஒரு சீன். இவர்கள் அந்தக்காலம் தொடங்கி இப்படி டபிள் சீன் போட வெளிக்கிட்டுத்தான்.. ஒவ்வொத்தரா.. மேல போய் சேர்ந்தவை.

ஆக்கிரமிக்க வந்த சிங்களவனை எதிர்த்து தூக்கிய துப்பாக்கிகள்..இவர்களை நோக்கியும் ரவையை கக்க வேண்டிய தேவை இந்த இரட்டை வேடத்தால்.. மக்களை ஏமாற்றி தங்கட சுயலாப அரசியலை முன்வைச்சதால் தான் வந்தது. இவையை கருத்துச் சொல்லி திருத்த முடியுமுன்னா.. சம்பந்தன் இப்ப திருந்தி இருக்கனும். அது புலிகள் இருக்கும் வரை... டோமண்டா இருந்திட்டு.. மீண்டும் பழைய குரங்குப் புத்தியை காட்டுது.

சம்பந்தன்.. சுமந்திரன்.. மாவை போற போக்குச் சரியில்ல. மக்கள் உதை விரும்புவினம் என்று மட்டும் நினைக்காதேங்க. :icon_idea::)

 “உங்களால் மக்களைப் புரிஞ்சு கொண்டு அரசியல் செய்ய முடியல்லைன்னா கூண்டோடு அரசியலை விட்டு விலகுங்க. நாங்க வந்து அரசியல் செய்யுறம்”

அண்ணே.. வாங்க.. வாங்க.. உங்கள் வரவு நல்வரவாகட்டும். வெளிநாட்டில் இருந்து சவுண்டு விடும் யாரும் ரிஸ்க் எடுத்து இங்கே வரமாட்டார்கள் என்ற கெட்ட பெயர் நீங்க போகிறது..  இதோ தொடங்குகிறது புதிய அத்தியாயம்!

ஒரு பெண் மீது மிரட்டல்களையும்

சொல் ஆயுதத்தை வன்மையாக பாவிப்பதையும் அனுமதிக்கமுடியாது

ஆயுத மிரட்டல்களுக்கோ

ஆயுத அச்சுறுத்துல்களுக்கோ

அஞ்சாத சகோதரி அவர்கள்

இந்த மிரட்டலால் மயங்கிவிழுந்துள்ளது 

அதன் கடுமையைக்காட்டி நிற்கிறது....

இந்த  வன்முறையை  வன்மையாக கண்டிக்கின்றேன்......

ஆயுத மிரட்டல்களுக்கோ, ஆயுத அச்சுறுத்துல்களுக்கோ, அஞ்சாத சகோதரி அவர்களை கடுமையாக மிரட்டி மயங்க வைத்த மாவை பெரிய கில்லாடியாக இருப்பார் போலிருக்கிறதே... இவர்தான் சரியான ஆள், மைத்திரியை மடக்க!

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத மிரட்டல்களுக்கோ, ஆயுத அச்சுறுத்துல்களுக்கோ, அஞ்சாத சகோதரி அவர்களை கடுமையாக மிரட்டி மயங்க வைத்த மாவை பெரிய கில்லாடியாக இருப்பார் போலிருக்கிறதே... இவர்தான் சரியான ஆள், மைத்திரியை மடக்க!

ஓமோம்

மீண்டும் ரத்தப்பொட்டு வைக்கலாம் வாங்கோ.............. :(

  • கருத்துக்கள உறவுகள்

மேப்பன் இல்லாத மந்தைகள் போல ஆகிவிட்டார்கள் தமிழ் பிரமுகர்கள் 

 “உங்களால் மக்களைப் புரிஞ்சு கொண்டு அரசியல் செய்ய முடியல்லைன்னா கூண்டோடு அரசியலை விட்டு விலகுங்க. நாங்க வந்து அரசியல் செய்யுறம்”

அண்ணே.. வாங்க.. வாங்க.. உங்கள் வரவு நல்வரவாகட்டும். வெளிநாட்டில் இருந்து சவுண்டு விடும் யாரும் ரிஸ்க் எடுத்து இங்கே வரமாட்டார்கள் என்ற கெட்ட பெயர் நீங்க போகிறது..  இதோ தொடங்குகிறது புதிய அத்தியாயம்!

ஆயுத மிரட்டல்களுக்கோ, ஆயுத அச்சுறுத்துல்களுக்கோ, அஞ்சாத சகோதரி அவர்களை கடுமையாக மிரட்டி மயங்க வைத்த மாவை பெரிய கில்லாடியாக இருப்பார் போலிருக்கிறதே... இவர்தான் சரியான ஆள், மைத்திரியை மடக்க!

அது சரி்ங்க நீங்க ஏன் அவரை கனடாவுக்கு கூப்பிறீங்க.

நாங்களும் யோசித்தோம். சம்பந்தருக்கு பக்கத்தில இருந்து எல்லாத்துக்கும் தலையாட்டினாப் போல.. மாவை சிறந்த தலைவர் என்று அர்த்தமில்லை. உங்களால் மக்களைப் புரிஞ்சு கொண்டு அரசியல் செய்ய முடியல்லைன்னா கூண்டோடு அரசியலை விட்டு விலகுங்க. நாங்க வந்து அரசியல் செய்யுறம். மேற்கு நாடுகள் பூரா.. 20..30.. 40 வயசுக் காரங்க தான் ஆட்சி பண்ணுறாங்க.

நீங்க தான் பழைய கிழடுங்க.. இருந்துகிட்டு மக்களையும்.. ஊரையும் ஏய்கிறீங்க. இன்றைய தலைமுறை நேர்மையான.. மதிநுட்பமான.. காலத்துக்கும் மக்கள் விருப்புக்கும்..  நாட்டுக்கும் அவசியமான அரசியலையே முன்னெடுக்க விரும்புது என்று சொல்லுவமுன்னு.

இல்ல.. இப்ப தேர்தல் முடிய.. ஆட்சிமாற்றம் வந்தால்.. அடுத்தது பாராளுமன்றத் தேர்தல். அதுக்கு உண்டியல் குலுக்கிட்டு இங்கின வரத்தானே வேணும் வரட்டும். கேட்கிற கேள்வில.. மாவை.. சுருண்டு விழட்டும்.எதுக்கு நடிப்பு.. கொழும்பில ஒரு சீன்.. யாழ்ப்பாணத்தில ஒரு சீன். இவர்கள் அந்தக்காலம் தொடங்கி இப்படி டபிள் சீன் போட வெளிக்கிட்டுத்தான்.. ஒவ்வொத்தரா.. மேல போய் சேர்ந்தவை.

ஆக்கிரமிக்க வந்த சிங்களவனை எதிர்த்து தூக்கிய துப்பாக்கிகள்..இவர்களை நோக்கியும் ரவையை கக்க வேண்டிய தேவை இந்த இரட்டை வேடத்தால்.. மக்களை ஏமாற்றி தங்கட சுயலாப அரசியலை முன்வைச்சதால் தான் வந்தது. இவையை கருத்துச் சொல்லி திருத்த முடியுமுன்னா.. சம்பந்தன் இப்ப திருந்தி இருக்கனும். அது புலிகள் இருக்கும் வரை... டோமண்டா இருந்திட்டு.. மீண்டும் பழைய குரங்குப் புத்தியை காட்டுது.

சம்பந்தன்.. சுமந்திரன்.. மாவை போற போக்குச் சரியில்ல. மக்கள் உதை விரும்புவினம் என்று மட்டும் நினைக்காதேங்க. :icon_idea::)

பார்ரா..நெடுக்கர் இலங்கை சென்று அரசியல் செய்ய முடியாமைக்கு காரணம் சம்பந்தரும் மாவையும் என்று எனக்கு தெரியாமல் போய்ட்டுது  :lol:  :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Mavai threatens Ananthy for BBC interview on election stand

[TamilNet, Friday, 02 January 2015, 14:10 GMT]

Popularly elected NPC Councillor Ananthy Sasitharan was taken to medical care at fainted state on Friday morning after she was threatened over the phone by ITAK leader and TNA parliamentarian Mavai Senathirajah to resign from the ITAK and the TNA. The controversial threat comes following an interview to the BBC Tamil Service by Ms Ananthy on Thursday. In the interview, Ms Ananthy went on stating that she would be either abstaining from the voting or nullifying her vote as no Tamil with self-respect would be voting for any of the two mainstream candidates in the SL presidential race. Ignoring the opposition from the grassroots, the Establishment-centric hierarchy of the TNA last week decided to support the common opposition candidate Maithiripala Sirisena.

While the main contestants in the election and the powers backing them are open about their agendas that totally disregard the aspirations of Eezham Tamils, the TNA leadership has sabotaged a historic opportunity in which the Eezham Tamils could have pitched their stand to international knowledge by rejecting both the candidates, commented political observers in the island. As far as the TNA is concerned, the genocide-partnering powers have succeeded in converting struggle politics into quisling politics, the observers further said.

Even those among the Tamil voters who wish to get rid of Mahinda Rajapaksa and do not see any option other than voting for Maithiripala wanted the TNA to remain with self-respect and not adopt a position without securing any guarantee from the opposition candidate on the pertinent demands of the Tamil people, the political observers further noted with concern.

TNA's NPC Councillor from Mulliaththeevu, Mr Raviharan, ITAK Youth Wing leader Mr Sivaharan, former parliamentarian and NPC Councillor Shivajilingam have already voiced against TNA backing a candidate, who has failed to meet any of the crucial Tamil demands.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37568

இதுக்கே மயங்கினால் எப்படி?

பாராளுமன்றம் போனால் மேர்வின் சில்வா விட்ட எத்தினையை கேட்கவேண்டும் அதுக்கெல்லாம் இப்பவே பழகினால்தான் உண்டு.

மாவையாரும் போம்பிளையளிட்ட பேசும்போது சிரிச்சு பேச கற்றுக்கொள்ளவேண்டும். சம்பந்தரோட பேசுரமாதிரி எல்லாரோடையும் பேச முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி்ங்க நீங்க ஏன் அவரை கனடாவுக்கு கூப்பிறீங்க.

அங்கதான் தமிழ் ஈழம் அமைக்கப் போறம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமோம்

மீண்டும் ரத்தப்பொட்டு வைக்கலாம் வாங்கோ.............. :(

ரத்தப் பொட்டு? 83-க்கு முதல் வைச்ச ரத்தப் பொட்டா? 83-க்கு பிறகு வைச்ச ரத்தப் பொட்டா?  ரெண்டு பகுதியும் போட்டினம் ஐயா.. வெளிநாட்டுக்கு அல்லது மேலே!

அங்கதான் தமிழ் ஈழம் அமைக்கப் போறம்

போறன் அப்புடீன்னு சொல்லுங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போறன் அப்புடீன்னு சொல்லுங்க.

சேச்சே.. துணைக்கு நாலைந்து பேர் வர்ரதா சொல்லியிருக்கினம். போறம்.... forum-ல் அமைக்க போறம்.

10922337_1578624135708415_15256317395945

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா டக்ளஸ் மிமிக் செய்தும் மகிந்தவுக்கு சாமரம் வீசுகிறார் எனில் தோல்வி நிச்சயம் என்பதே காரணம். பல்டி அடிக்கவும் இவர்கள் தயங்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா டக்ளஸ் மிமிக் செய்தும் மகிந்தவுக்கு சாமரம் வீசுகிறார் எனில் தோல்வி நிச்சயம் என்பதே காரணம். பல்டி அடிக்கவும் இவர்கள் தயங்க மாட்டார்கள்.

மக்கள் மீது கூட்டமைப்பிற்கு அக்கறை இருந்திருந்தால் .......
மைத்திரியுடன் எப்போதோ கைகோர்த்து .... இந்த பல்டிகளுக்கு முற்று புள்ளி வைத்து. 
தமிழ் மக்களின் பலத்தை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து இருக்க முடியும்.
சுயநல பிசாசுகள் மக்களை பிச்சு தின்னவே லாயக்கு.
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு நீங்க ஊருக்கு போராட போறதா சொன்னதும் என்மனசில் வந்தது வடிவேலு மயில்சாமி ஜோக் தான்.

நீங்க ஊருக்குப் போனா - அப்ப எலிசபெத் ( திரிசா) மகராணியோட வாழ்க்கை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.