Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனச்சாட்சி உள்ளவர்கள் இனச்சாட்சியை மறக்கலாமா? கூட்டமைப்பின் ஜனநாயகப்பிரிவு!!

Featured Replies

பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த விதமான நிபந்தனைகளுமின்றி, பகிரங்க ஆதரவு தெரிவித்தமை தியாக வேள்வித் தீ அணைந்துவிட்டதாவென்ற கேள்வியெழுப்பியுள்ளது கூட்டமைப்பின் ஜனநாயகப்பிரிவு.
யாழ்.ஊடக அமையத்தினில் இன்று நடந்த அவசர பத்திரிகையாளர் சந்திப்பினில் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் மற்றும் இளைஞரணி செயலாளர் வி.எஸ.சிவகரன் ஆகியோருடன் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

tna_demo_01.jpg
அதே வேளை தமிழரசுக்கட்சியின் பிரதி தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் உட்பட வடக்கு-கிழக்கிலுள்ள பல கூட்டமைப்பு பிரமுகர்களும் தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.

அங்கு உரையாற்றிய இளைஞரணி செயலாளர் வி.எஸ.சிவகரன் தனது உரையினில்:

வடக்கு கிழக்கை தாயகமாக் கொண்டிருக்கும் தமிழ் மக்களால், 2009க்கு மே மாதத்திற்கு பின்னர் தங்களது தேசியத் தலைமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது, எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி இடம்பெறவுள்ள சிறிலங்காவிற்கான ஜனாதிபதி தேர்தலில், பொது எதிரணி வேட்பாளரென்று அழைக்கப்படும், மைத்திரிபால சிறிசேனவிற்கு எவ்விதமான நிபந்தனைகளுமின்றி பகிரங்க ஆதரவை வழங்கியமையானது, அரசியல் நோக்கில் ஒரு வரலாற்று தவறென்று கூறுவதுடன், இன்று எமது கட்சித் தலைமை எடுத்திருக்கும் மேற்படி முடிவானது, கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலான எமது மக்களின், போராளிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் செயலென்றும் கூறுகின்றோம். இதனை நாம் வன்மையாக கண்டிப்பதுடன், எமது தாயக மக்கள் இந்த வரலாற்று தவறிற்கு உடன்படப் போகின்றனரா என்னும் கேள்வியையும் தூய தமிழ்த் தேசிய உரிமையுடன் கேட்டுநிற்கிறோம். நெஞ்சு பொறுக்கவில்லை.

tna_demo_02.jpg
தமிழ்த் தேசியத்தில் தீவிர பற்றுறுதி கொண்டவர்கள் என்னும் வகையில் நாம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எமது கட்சிக்;குள் விவாதித்து வந்திருக்கிறோம். சிறிலங்காவில் ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கான தயாரிப்புக்கள் வெளித்தெரிந்த பின்னணியில் தான் நாம் இந்த விவகாரத்தை கட்சிக்குள் பேசு பொருளாக்கினோம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு நிதானமாகவும், தமிழ் மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் மட்டுமே முடிவு எடுக்க வேண்டுமென்று வாதாடினோம். கட்சித் தலைமையுடன் போராடினோம். இந்த பின்புலத்தில்தான் மகிந்த ராஜபக்சவின் நண்பரும், மகிந்தவின் அரசாங்கத்தில் சுகாதார அமைச்சரகாகவும் பிரதி பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி, தீவிர இனவாத எதிரணியுடன் இணைந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து தெற்கின் தேர்தல் களம் சூடடைந்தது. சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய தீவிர இனவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த அத்துரலிய ரத்ன தேரர், பாட்டலி சம்பிக்க ரணவக்க, தமிழீ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் முதன்மையாக பக்களித்த முன்னைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் ஒரணியில் திரண்டனர்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு பகிரங்கமாக பங்குகொள்வதை நாம் வன்மையாக எதிர்த்து நின்றோம். எதிரணி வேட்பாளர் மைத்திரிபாலவிற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் விவாதம் எழுந்த போதும், அதனையும் நாம் வன்மையாக எதிர்த்தோம். கடந்த காலத்தில் நடந்த கூட்டங்களான 28.09.2014, 17.10.2014, 14.12.2014 ஆகியவற்றில் வலியுறுத்தியிருந்தோம். மகிந்த ராஜபக்ச என்னும் பெயரை நாம் உச்சரிக்க கூட விரும்பவில்லை அவர் தமிழனப் படுகொலை துரோகி ஏனெனில் அது உச்சரிக்கக் கூட தகுதியான ஒன்றல்ல என்பதே எங்களின் நிலைப்பாடு. எம்மைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி தேர்தலில் பங்குகொள்ளுமாறு எங்கள் மக்களை கோருவதானது, அவர்கள் தலையில் மண்ணை வாரி நாசமாகப் போங்கள் என்று கூறுவதற்கு ஒப்பானதென்று வாதிட்டோம். ஒரு சிலரது கொழும்பு மட்ட உயர்வர்க்கத் தொடர்புகளைக் கொண்டு, தமிழ் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாதென்றும் நாம் வாதிட்டோம் அத்துடன் கண்ணை விற்று சித்திரம் கீறுவதற்கு ஒப்பானது என்றோம். ஆனால் கட்சியின் தலைமைப்பீடம் எங்களது கோரிக்கைகளுக்கு எந்த விதமான மதிப்பும் அளிக்காமல், தற்போது மைத்திரிபால சிறிசேனவிற்கு எவ்வித நிபந்தனைகளுமின்றி, பகிரங்க ஆதரவை வழங்கியிருக்கிறது. மேலும் கட்சியின் உறுப்பினர்களை பகிரங்கமாக மைத்திரிபாலவிற்காக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவும் உத்தரவிட்டிருக்கிறது. 

இத்தனை அழிவுகளுக்கும், படிப்பினைகளுக்குப் பின்னரும் கூட, தெற்கின் சிங்கள தலைவர், அதிலும் நேற்றுவரை மகிந்த ராஜபக்சவின் செயற்பாடுகளுக்கு தோளோடு தோள் நின்று தமிழினப்படு கொலைக்கு உடந்தையாக இருந்த மைத்திரிபால சிறிசேனவிற்காக தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்குமாறு எங்கள் தலைமை பணித்திருக்கின்றதென்றால், இதனை எவ்வாறு மனச்சாட்சியுள்ளவர்களால் ஏற்றுக்கொள்ள முடியும்.? 

எவ்வாறு நாம் இந்த அநீதி குறித்து வாய் திறவாது இருக்க முடியுமா? நாம் பதவிக்கு ஆசைப்பட்டவர்களல்ல தேசம் பறி போய் விட்டது. தேசியத்தையும் இழக்கலாமா? 

நாம் ஏன் மைத்திரிபாலவிற்கு பகிரங்க ஆதரவு வழங்கக் கூடாதென்று வாதிடுகிறோம்?

மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையை கூர்ந்து அவதானித்தால், அதில் ஒரு இடத்தில் கூட வடக்கு கிழக்கை தாயகமாகக் கொண்ட எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஒரு வார்த்தைதானும் இல்லை. ஆனால் அதற்கு மாறாக, சிங்கள மக்களின் வாக்குகளை கவர்ந்திழுக்கும் நோக்கில், சர்வாதிகாரம் தலைதூக்கி விட்டதாகாகவும், ஊழல் மலிந்துவிட்டதாகவும் கூறி, அதனை தன்னால் மட்டுமே மாற்றியமைக்க முடியுமென்றும் வாதிட்டிருக்கின்றார். சுருங்கச் சொன்னால், தான் கதிரையில் அமர்ந்தால் சிங்கள மக்களின் வாழ்வில் புத்தெழுச்சி ஏற்படும் என்பதே அவரது விஞ்ஞாபனத்தின் சாரம். இதனை பிறிதொரு கோணத்தில் நோக்கினால் இலங்கையில் இன்று நிலவும் பிரச்சினைகள் அனைத்திற்குமான சர்வலோக நிவாரணியாக ஆட்சி மாற்றம் ஒன்றே பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. 

ஒரு சாதாரண சிங்கள குடிமகனின் கண்ணோட்டத்தில் நோக்கினால் இது சரியானதொரு பார்வையாக இருக்கலாம். ஆனால் ஒரு சிங்கள குடிமகன் எதிர்கொண்டுவரும் பிரச்சினையும், வடக்கு கிழக்கை தாயகமாகக் கொண்டு வாழ்ந்துவரும் தமிழ் குடிமகன் எதிர்கொண்டுநிற்கும் பிரச்சினையும் ஒன்றுதானா? மைத்திரிபாலவை பொறுத்தவரையில் அவரது முழுக் கவனமும் சிங்கள மக்களை கருத்தில் கொண்டதாகவே இருக்கிறது. யுத்த வெற்றியையே முதன்மைப்படுத்தி வருகிறார். ஜாதிக ஹெல உறுமயவுடன் அவர் செய்துகொண்ட உடன்படிக்கை, தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான கோரிக்கையான சமஸ்டிக் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரிப்பதாக தெரிவித்திருக்கின்றார். தமிழ் மக்களின் சமஸ்டி கோரிக்கையை பகிரங்கமாகவே நிராகரித்திருக்கும் ஒருவருக்கு வாக்களிக்குமாறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆணையிடுவது சரியானதொரு அரசியல் முடிவுதானா? இப்படியான கேள்விகளின் அடிப்படையில் தான் நாம், மைத்திரிபால சிறிசேனவிற்கு பகிரங்க ஆதரவை வழங்குவதை கட்சிக்குள் எதிர்த்தோம். 

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான முடிவின் பேரில் இவ்வாறானதொரு முடிவை எடுத்திருக்கின்றனர். நாங்கள் தலைமையின் முடிவு குறித்து அதிருப்பதியில் இருந்துகொண்டிருந்த போதே, எங்களது கணிப்பு முற்றிலும் சரியென்பதை நிரூபிக்கும் வகையில், பொது எதிரணியில் அங்கத்துவம் வகித்துவரும் பிரதான கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, 13வது திருத்தச்சட்டத்தின் அதிகாரத்தை குறைத்து, ஆளுனரின் அதிகாரத்தை அதிகப்படுத்துவதற்கு மகிந்த ராஜபக்ச இணங்கினால், தங்களால் அவருக்கு ஆதரவு வழங்க முடியுமென்று பகிரங்கமாக கூறியிருக்கின்றார். அவ்வாறாயின் இன்று ஹெல உறுமய மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பது ஏலவே தமிழ் மக்களுக்கு பெயரளவில் இருக்கின்ற அதிகாரங்களைக் கூட பறிப்பதற்கான ஒரு உடன்பாட்டின் அடிப்படையில்தானா? இணைந்த வடக்கு கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான ஒரு அதிகாரப் பகிர்வு என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இதற்காக எமது மக்கள் கொடுத்த விலை சொல்லில் வடிக்க முடியாதவை. ஆனால் பொது எதிரணியில் இணைந்து கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரோ, வடக்கு கிழக்கு இணைப்பிற்கு தாம் ஒரு போதும் உடன்படப் போவதில்லை, வடக்கிலிருந்து கிழக்கை பிரிக்க வேண்டும் என்னும் அடிப்படையில் தான் தமது கட்சியே உருப்பெற்றிருக்கிறது என்ற குறிப்பிட்டிருக்கின்றார். 

இப்படியான அறிவித்தல்களின் பொருள் என்ன? சிங்கள இனவாதம் மிகவும் நுட்பமாக தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை வலுவிழக்கச் செய்யும் சூழ்சிiயை அரங்கேற்றியுள்ளது. கூட்டமைப்பின் தலைமையின் பகிரங்க ஆதரவிற்கான அறிக்கையின் பின்னர்தான் அவர்கள் இந்த கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர். இப்போது கூட்டமைப்பின் தலைமையால் இது தொடர்பில் எந்தவொரு பதிலையும் சொல்ல முடியாது. சிங்கள இனவாதத்தின் நுட்பமான சூழ்சித்திறனை கருத்தில் கொண்டுதான் நாம் ஏற்கனவே கட்சித் தலைமையை எச்சரித்திருந்;தோம். பகிரங்க ஆதரவு வழங்க வேண்டாமென்று மன்றாடினோம். ஆனால் இன்று நாங்கள் எதைக் குறித்து அச்சப்பட்டோமோ, அதுவே இறுதியில் நிகழ்ந்திருக்கிறது. 

இலங்கை காலனித்துவத்தின் பிடியிலிருந்து விடுபட்ட நாளிலிருந்து, எங்கள் மக்கள், தங்களின் உரிமைகளுக்காக போராடி வந்திருக்கின்றனர். இந்த போராட்டத்தில் ஆகுதியாகிப் போனோர் பல்லாயிரம் ஆகும். அவர்களின் உரிமை வேட்கையும் தியாகங்களும் ஒரு சில சுகபோகிகளின் காலில் மிதிபட்டு நசிவதை எங்களால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. நீங்களே சொல்லுங்கள் இதனை ஏற்றுக் கொள்ளலாமா? மைத்திரிபால சிறிசேன தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில், ‘தீவிரவாதத்தால் நாடு மூன்று தசாப்தங்களாக, சமூக மற்றும் பொருளாதார ரீதியான சவால்களுக்கு முகம் கொடுத்தாக குறிப்பிட்டிருக்கின்றார். (ப-ம் 8). ஆனால் எங்கள் இளைஞர்கள் அத்தகையதொரு வன்முறைப் பாதையை ஒரேயொரு மார்க்கமாக தெரிவு செய்வதற்கு பின்னாலிருந்த நியாயமான காரணங்கள் தொடர்பில் அவர் கிஞ்சித்தும் கரிசனை கொள்ளவில்லை. இதுதான் தெற்கின் சிங்கள தலைவர்களின் ஒருமித்த மனோபாவம். அன்று தந்தை செல்வாவினால் முன்வைக்கப்பட்ட சமஸ்டிக் கோரிக்கையை அன்றைய சிங்களத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தால், இத்தீவில் இரத்தம் சிந்தவேண்டிய சூழல் உருவாகியிருந்திருக்காது. ஆனால் நாட்டில் ஜனநாயகத்தை மலரச் செய்யவுள்ளதாகவும், அதற்காக தன்னுடன் கைகோர்க்குமாறும் தமிழ் மக்களுக்கு அழைப்புவிடும் மைத்திரிபால சிறிசேனவினால் தமிழ் மக்களின் சமஸ்டிக் கோரிக்கையை இன்றும் கூட ஏற்றுக்கொள்ள முடியாமல்தானே இருக்கிறது. இப்படியொரு நிலையில் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாம் மைத்திரிபாலவிற்கு பகிரங்கமாக ஆதரவு வழங்க முடியும்? கடந்த அறுபது வருடங்களின் எங்களது மக்களின் சார்பில், சிங்களத் தலைவர்களுடன் எத்தனையோ எழுத்து மூல உடன்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை அனைத்துக்கும் என்ன நிகழ்ந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். எழுத்து மூல உடன்பாடுகளைக் கூட மதிக்காத தெற்கின் தலைவர்களா கனவான் உடன்பாட்டை மதிக்கப் போகின்றார்கள்? இன்று சந்திரிக்கா குமாரதுங்க எதிரணியில் இருப்பதை எங்களின் ஒரு சில தலைவர்கள், தமிழ் மக்களுக்கு சாதகமாக காண்பிக்க முயல்கின்றனர். தனது ஆட்சியின் எத்தனை இடப்பெயர்வுகளை எங்கள் மக்களுக்கு பரிசளித்தவர் இந்த சந்திரிக்கா. வடகிழக்கிலே வாழும் ஒவ்வொரு தமிழனும் இதனை அறிவானே! இவரை ஒரு நம்பிக்கையாக கொண்டால் அதைவிட முட்டாள்தனம் வேறில்லை.

இதைத்தான் கட்சிக்குள் கேட்டோம் ஆனால் கட்சி எங்களின் நியாங்களுக்கு செவிசாய்க்கவில்லை அதனால்தான், நாங்கள் நேசிக்கும் மக்களிடம் எங்கள் நியாயங்களை சொல்கிறோம். நாங்கள் இவ்வாறு பகிரங்கமாக அறிக்கைவிடுவது, எங்களது கட்சியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அல்ல மாறாக, எங்கள் கண் முன்னே, ஒரு வரலாற்றுத் தவறு நிகழ்வதை கண்ட பின்னரும் கூட, அதனை தவறு என்று உரைக்காதிருந்தால், நாமும் மனச்சாட்சி இல்லாத அரசியல் வியாபாரிகள் ஆகிவிடுவோம். அது எங்கள் மக்களுக்கு நாம் செய்யும் வரலாற்றுத் துரோகமாகும். அதனாலேயே எங்கள் கண்டனத்தை பதிவு செய்கிறோம்.

மறக்க முடியுமா?

எமது அறுபது வருட இனவிடுதலைப் போராட்டத்தில் பல இலட்சம் தமிழ் உடன்பிறப்புக்களை இழந்திருக்கின்றோம். பல தீர்க்க தரிசனமான தமிழினத் தலைவர்களை இழந்திருக்கின்றோம். தாயக மண்மீட்பு போரிற்காக நாற்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களை இழந்திருக்கின்றோம். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வலி சுமந்த வாழ்வில் மூழ்கியிருக்கின்றோம்.

இறுதி யுத்தத்திலே முள்ளிவாய்க்காலில் 146,679 தமிழ்மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். செம்மணி திருக்கேதீஸ்வரம், முள்ளிவாய்க்கால் என புதைகுழிகளுக்கு மேலே வாழ்கின்றோம். சத்தியத்தின் மீது வாழத்துணிந்து விட்டால் சாதாரண மனிதனும் சாதனை படைக்கலாம் என்பதே இன்றைய ஒவ்வொரு தமிழனதும் அடிப்படை சிந்தனையாக உள்ளது. ஏனெனில் அனைத்தையும் இழந்துவிட்டான்.
எமது அடிப்படைக் கோரிக்கையான தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமையுடன் இணைந்த வடகிழக்கு இதுவே எமது நீண்டகாலக் கோரிக்கைக்கு மைத்திரியின் உச்சபட்ச வகுப்பு வாதிகளின் கூட்டணியில் இது சாத்தியமா?

முடிவில் தமிழ்த் தேசியம் வீழ்ச்சியை நோக்கி நகர்வதுடன் ஐக்கிய தேசியக்கட்சியை வடகிழக்கில் வளர்ப்பதற்குரிய நடவடிக்கை ஆகும். சமஸ்டி கோரினோம், தனிநாடு கோரினோம். சுயநிர்ணய உரிமை கோரினோம். இன்று எந்த அதிகாரமும் இல்லாத 13வது திருத்தமாகிய மாகாண சபையா முடிவு?

எனவே எமது கருத்து காலம் பதில் சொல்லும் மனசாட்சி உள்ளவர்கள் உங்கள் உறவுகள் இலட்சிய வேட்கைக்காக துடிதுடித்து இறந்ததை ஒரு கனம் சிந்தியுங்கள் சிங்கள ஏகாதிபத்தியம் தமிழ் மக்களை சிறை வைக்கப் போகிறது என்பது மட்டும் வரலாற்று உண்மை.

ஆகவே இராஜதந்திர ரீதியாக தமிழ்மக்களை வழிநடத்தும் உன்னதமான நிலையில் இருந்து கூட்டமைப்பு தவறி வரலாற்றுத்துரோகம் செய்துவிட்டது.

உங்கள் மனச்சாட்சிப்படி நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள் வரலாறு சிலரை துரோகிகளாகவே பதிவு செய்யும் என்பது கடந்தகால அனுபவமென தெரிவித்தார்.

http://www.pathivu.com/news/36573/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சரியான நடவடிக்கை

வாழ்த்துக்கள்...

இந்த "ஜனநாயகப் பிரிவு" என்னும் பெயரை பார்த்ததுமே விளங்குகின்றது, இதன் பின்னால் புலம்பெயர் குழப்பவாதிகள் இருப்பதை. மக்கள் தேர்தலில் ஜனநாயகரீதியாக தமது பதிலை சொல்லுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் நீங்கள் கூறுவது உண்மையாக இருக்கலாம் ஆனால் வெறுமனே பெயரைப்பார்த்தவுடனே ஊகத்தின்னடிப்படையில் புலம் பெயர் குழப்பவாதிகள் என்று எவ்வாறு ஒரு ஊடகவியலாளரான நீங்களே கூறலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

சரியான விடயத்துக்கு சொல்பவர்கள் எப்படிக்குழப்பவாதிகளாகலாம்.கனவான் ஒப்பந்தம் செய்ததாக சொல்லும் சம்பந்தர்தான் குழப்பவாதி .எழுத்தில் எழுதிய ஒப்பந்தங்களையே கிழித்து எறிந்தவர்களுக்கு கனவான் ஒப்பந்தம் கால்தூசு.13 ஆம் திருத்தத்தின் வலிமையைக் குறைத்து ஆளுநருக்கு அதிகாரத்தைக் கூட்டினால் மகிந்தவுக்கு ஆதரவளிக்கத்தயார் என்று எதிரணிக் கூட்டணியின் முக்கிய உறுப்பினரான சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார்.அதை விடக் குறைந்த விடயத்தைத்தானே அவர் மைத்திரியிடம் எதிர்பார்த்திருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த "ஜனநாயகப் பிரிவு" என்னும் பெயரை பார்த்ததுமே விளங்குகின்றது, இதன் பின்னால் புலம்பெயர் குழப்பவாதிகள் இருப்பதை. மக்கள் தேர்தலில் ஜனநாயகரீதியாக தமது பதிலை சொல்லுவார்கள்.

 

 

நீங்கள் இன்னும் பழையநிலையிலிருந்து வெளியில் வராததற்கு நாம் என்ன செய்யமுடியும்??

தாயகத்திலிருந்தபடி

ஐனநாயக வழிகளில் நம்பிக்கை கொண்டு

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை பகிரங்கமாக நடாத்துபவர்களை இவ்வாறு ஒழிந்திருந்து கொண்டு தாக்குவது தான் உங்களுக்குத்தெரிந்த பத்திரிகை தர்மமா??

 

துரோகிப்பட்டம் கொடுக்கிறார்கள என மூக்கைசிந்திபடி

நீங்கள் அந்த வேலையை  சச்சிதமாக செய்து வருகின்றீர்கள்  சபேசன்

நான்கு விரல்கள் உங்களைத்தான் காட்டி நிற்கின்றன

பதில் சொல்லுங்கள்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேர்தலுடனாவது கூட்டமைப்புக்கு ஒரு முடிவு கிடைக்கவேண்டும்.
நெல்லிக்காய் மூட்டை மெல்ல மெல்ல அவிழ்ந்து கொண்டிருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த "ஜனநாயகப் பிரிவு" என்னும் பெயரை பார்த்ததுமே விளங்குகின்றது, இதன் பின்னால் புலம்பெயர் குழப்பவாதிகள் இருப்பதை. மக்கள் தேர்தலில் ஜனநாயகரீதியாக தமது பதிலை சொல்லுவார்கள்.

 

அப்போ கூட்டணிக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்றும் சொல்லுங்களேன்?

வேறு யாராக இருக்க முடியும் ,அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையும் நெடியவன் கோஷ்டியும் தான் இந்த குழுதான் ஜெனிவாவில் ஐ நா மனிதஉரிமை ஆணையகத்தின் தீர்மானத்தை எரித்தவர்கள் .இவர்களுடன் சிவாஜிலிங்கம் ,கஜேந்திரன் கஜேந்திரகுமாரும் நின்றவர்கள் ஆனந்தியும் பங்குபற்றி இருப்பார் ,நாங்கள் சம்பந்தர் ஐயாவிற்கு கொடுத்த அழுத்தத்தினால் ஆனந்தியை ஸ்ரீலங்காவுக்கு கூப்பிட்டபடியால் அனந்தி பங்குகொள்ளவில்லை .இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கோ இவர்களுடைய நடவடிக்கையை .

மறவன் புலவு சச்சிதனந்தனுக்கு பாராட்டு பத்திரம் வாசிப்பவர்களுக்கு இவரைப்பற்றி தெரியுமா ,இந்தச் செய்தியை காலையில் பார்த்தவுடன் இவருடன்(அறவளிப்போராட்டக்குழு ) இணைந்து பணியாற்றிய ஒருவருடன் தொடர்பு கொண்டு கதைத்தபொழுது ,சச்சி தற்பொழுது டக்கி ,சந்திரகுமாருடனும் தொடர்பில் இருப்பதாக சொன்னார் .

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரை யார் விமர்சித்தாலும் அலர்களைத் துரோகிகள் என்று அழைக்கத்துவங்கிவிட்டார்கள் சில சம்பந்தரின் விசுவாசிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரை யார் விமர்சித்தாலும் அலர்களைத் துரோகிகள் என்று அழைக்கத்துவங்கிவிட்டார்கள் சில சம்பந்தரின் விசுவாசிகள்.

சம்பந்தர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரல்ல, ஆனால் அவரை விமர்சித்தவர்களைத் துரோகிகள் என அழைதவர்கள் யார்?
  • கருத்துக்கள உறவுகள்

மறவன் புலவு சத்திதானந்தன் தமிழரசுக் கட்சியின் நீண்ட கால உறுப்பினர் அவரை பற்றி ஆதாரமில்லாத செய்தி மேலே எழுதப்பட்டுள்ளதே

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

புலவர் ஸார் பொதுஅரங்கில் வந்துவிட்டால் விமர்சனங்களுக்கு உட்பட்டுத்தான் ஆக வேண்டும். அவரை துரோகி என்று எவரும் கூறவில்லை. கரியிடம் என்ன சொல்ல முயல்கிறார் என கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கலாம்.

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

டக்கியோடு தொடர்பில் இருக்கிறாராம் என்றால் வேறு எப்படி அர்த்தமாம்?????

முளையிலேயே ஆனந்தி பற்றி அறியவேண்டிவந்தது தமிழர்களுக்கு பெரிய நன்மை .

அடுத்த தேர்தலில் கட்டு காசும் கிடைக்காது . கடந்த தேர்தலில் கூட்டமைப்புடன் இல்லாவிட்டால் அதே நிலை தான் வெற்றி பெற்ற அனைவருக்கும் நடந்திருக்கும் .

எடுப்பார் கைப்பிள்ளை ஆனதன் பலனை அனுபவிக்கத்தான் வேண்டும் . :(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களது மிகப்பெரிய ஒரே சக்தி புலத்து தமிழர்கள்தான் அதனை ஒரு ஒழுங்கான அமைப்பின் கீழ் ஒருங்கமைக்க முடியாமல் பிளவடைந்து காணப்படுகிறது,இன்னிலையில் ஊகத்தினடிப்படையிலோ அல்லது நண்பர்கள் சொன்னார்கள் என்றதன் அடிப்படையில் கருத்து வைத்தால் அதன் தாக்கம் தமிழர்களுக்கே பின்னடைவு.இந்த இக்கட்டான் காலகட்டத்தில் எல்லோருக்கும் ஒரே அணியாக நின்று தமிழர் பிரச்சனைக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். தமிழ் இணையத்தளத்தில் யாழுக்கு மட்டுமே மற்றய தளங்களுக்கில்லா சிறப்பு உண்டு, அதனால் யாழ் உறுப்பினர் அனைவருக்கும் அந்த சிறப்பு உண்டு.

ஏற்கனவே முடிந்த தேர்தலிகளில் தமிழ் மகள் கூட்டமைப்புக்கே வாக்களித்தார்கள், அதிலிருந்து பிரிந்து போனவர்கள் தனியே நின்று கட்டுக்காசும் இல்லாமல் போனார்கள். இங்கேயும் சிலர் கூட்டமைப்பை கேலி செய்தார்கள் அனாலும் கூட்டமைப்பே தமிழ் மக்களின் தெரிவாக இருந்தது. 

 

நடக்கவிருக்கும் சனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க போறார்கள் என்பதை பொறுத்து கூட்டமைப்பின் அரசியல் எதிர்க்காலம் நிர்ணகிக்கப்படும். 

 

இனிவருங்காலங்களில் இந்த கூட்டமைப்பு இதே கூட்டமைப்பக இருக்கபோவதில்லை என்பது மாத்திரம் நிச்சயம். 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் யாரையுமே பகிரங்கமாக ஆதரிக்காது மக்களிடமே அந்த முடிவை விட்டிருக்கலாம். இப்படி நிபந்தனையற்ற ஆதரவென்று காலில் விழுந்திருக்கக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல்களை தமிழ் மக்கள் அணுகும் முறை இராஜதந்திர அடிப்படியில் அமைய வேண்டும். இராஜதந்திர அடிப்படை என்றால் என்ன? இந்த தேர்தலில் தமிழ் மக்களின் கூட்டு நடவடிக்கையின் விளைவு என்னவாக இருக்கும் என்று பார்த்து அதன் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கை இராஜதந்திர நடவடிக்கையாகும்.
தமிழ் மக்கள் இந்த தேர்தலில் எவ்வாறாக வாக்களிக்கும் சந்தர்ப்பங்களை கொண்டிருக்கிறார்கள்?

  1. மக்கள் கூட்டாக இராஜபக்சவுக்கு வாக்களிக்க முடியும்.
  2. மக்கள் கூட்டாக மைத்திரிக்கு வாக்களிக்க முடியும்.
  3. தேர்தலை கூட்டாக புறக்கணிக்கும் சந்தர்ப்பம் உண்டு.
  4. வாக்குகளை கூட்டாக செல்லுபடியற்றதாக்கலாம்.
  5. மக்கள் தமது விருப்பப்படி எதையும் செய்யும் சந்தர்ப்பம் உண்டு.

இவை ஒவ்வொன்றையும் செய்வதால் என்ன பயன் விழையும் என்று பார்ப்போம்.

 

மக்கள் கூட்டாக இராஜபக்சவுக்கு வாக்களித்தல்

 இன்றைய நிலை அடுத்த ஆறு வருடங்களுக்கு தொடர்வதை தமிழ் மக்கள் உறுதி செய்வர். இராஜபக்ச அரசு இந்த தமிழ் மக்களின் அங்கீகாரத்தை, சர்வதேச ரீதியாகவும் தமது ஆட்சி முறைக்கு கிடைத்துள்ள தமிழ் மக்களின்  அங்கீகாரமாக காட்டி தமிழ் பிரதேசங்களில் தமது ஆட்சி முறையை நிரந்தரமாக்குவர்.

 

தனது பிரதிநிதியான ரணிலை தமிழ் மக்கள் மீண்டும் நிராகரித்ததை அவதானிக்கும் அமெரிக்க அரசு, தமிழ் மக்களுக்கு எந்த மாற்று தீர்வும் கிடைப்பதற்கும் உதவ முன்வராது. போர்க்குற்ற விசாரணைகள் அமெரிக்க அரசின் நலன்களை மட்டும் முன்வைத்து இடம்பெறும். ஆனால் இராஜபக்ச அரசுக்கான தமிழ் மக்களின் அங்கீகாரம் காரணமாக போர்க்குற்ற விசாரணைகள் பலமிழந்து போகும்.

 

மக்கள் கூட்டாக மைத்திரிக்கு வாக்களித்தல்

சிங்கள மக்கள் இரண்டு சம பிரிவாக பிளவுபடும் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் வாக்குகள் மைத்திரியின் வெற்றியை உறுதிப்படுத்தும். தமிழ் தேசியம், சமஷ்டி, போர்க்குற்ற விசாரணைகள் என்பவற்றை பகிரங்கமாக நிராகரித்த  ஒரு ஆட்சியை தமிழ் மக்கள் தெரிவு செய்வர். 

 

போர்க்குற்றங்கள் செய்து தமிழ் மக்கள் மீது தொடரும் இராணுவ ஆட்சி முடிவுக்கு வரும். அமெரிக்க அரசு இலங்கையில் நீண்டகால அமைதியும் சமாதானமும் தனது நலன்களுக்கு தேவை என்று கருதினால், ரணில் மூலம் ஒரு நிரந்தர தீர்வுக்கு  வழி சமைக்கும். ஆனால் அந்த தீர்வு தமிழ் ஈழம் அல்ல.

 

 

வாக்குகளை கூட்டாக செல்லுபடியற்றதாக்கல்

தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றுக்கொள்ளாத சிங்கள தலைமைகளை தமிழ் மக்கள் நிராகரித்த செய்தியை மீண்டும் ஒருமுறை சர்வதேசம் அறிந்து கொள்ளும். ஆனால் இது அறியப்பபட்ட ஒன்று. மேலும் சர்வதேசம் இந்த செய்தியை அறிந்து அதனால் தமிழ் மக்களுக்கு பயன் ஏதும் கிடைக்க போவதில்லை. அமெரிக்காவின் பிரதிநிதியான ரணில் இருக்கும் எதிர்கட்சி இதனால் தோற்று போனால் - இராஜபக்ச வென்றால் - தமிழ் மக்கள் தனக்கு மீண்டும் ஒருமுறை துரோகம் செய்ததாக  அமெரிக்கா எடுத்துக்கொள்ளும்.

 

தேர்தலை கூட்டாக புறக்கணித்தல்

வாக்குகளை கூட்டாக செல்லுபடியற்றதாக்குவதால் உண்டாகும் விளைவுகளுக்கு மேலாக வாக்களிக்காத தமிழ் மக்களின் வாக்குகள் கள்ள வாக்குகளாக போடப்பட்டு அதனை செய்யும் பகுதி வெற்றி  பெறும்  சந்தர்ப்பம் அதிகரிக்கும். 

 

மக்கள் தமது விருப்பப்படி எதையும் செய்தல்

மன்னார் ஆயர் மற்றும் உலகத் தமிழர் பேரவை மக்களை கட்டாயம் வாக்களிக்கும் படி கேட்டுள்ள நிலையில், குறிப்பிடத்தக்க அளவிலான தமிழ் மக்கள் இராஜபக்ச ஆட்சியை அகற்ற கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்துவர். இது மைத்திரிக்கு ஆதரவாக வாக்களிப்பதாக அமையும். ஆனால் படிப்பறிவு குறைந்த பாமரர் வாக்களிக்காது விடுவர் அல்லது குழம்பிப்போய் வேறு யாராவது வேட்பாளருக்கு வாக்களிப்பர். இது இராஜபக்ச வெல்லும் சாத்தியத்தை அதிகரிக்கும்.

 

 

முடிவான பரிந்துரை

தமிழ் மக்கள் தம் மீதான இன்றைய இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர கிடைத்துள்ள ஒரு அரிய சந்தர்ப்பம் இந்த தேர்தல். அதை சரியாக பயன்படுத்த, மைத்திரிக்கு வாக்களிக்க வேண்டியது தவிர்க்க முடியாது. அது மைத்திரியின் கொள்கைகளுக்கு ஆதரவான நிலைப்பாடாக கருதப்படும். ஆனால் இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர கொடுக்கப்பட வேண்டிய விலை அது. இந்த விலை அதிகம், ஆனால் அதனால் கிடைக்கும் பயன் - இராணுவ ஆட்சியை அகற்றுதல் - இந்த விலைக்கு கிடைக்கும் மிகவும் பயனுள்ள அரிய பலன். அதை தவற விடக்கூடாது.

 

அமெரிக்க அரசு இந்த தேர்தலில் ரணிலின் (மைத்திரியின்) வெற்றியை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறது. இந்த வெற்றிக்கு தமிழர் அளிக்கும் ஆதரவு, அமெரிக்காவுக்கு ஆதரவாக தமிழர் உதவுவதை உலகுக்கு காட்டும். அமெரிக்கா இந்த ஆதரவை, முன்னர் தமிழர் தேர்தலை புறக்கணித்து ரணிலுக்கு வெற்றி கிடைப்பதற்கான சந்தர்ப்பத்தை குறைத்ததுடன் ஒப்பிட்டு பார்த்து, தனது நிலைப்பாட்டில் திருத்தம் செய்து கொள்ள உதவும். 

 

ஆகவே தமிழர் வெறுப்புடன் என்றாலும் மைத்திரிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். இது ஒரு கசப்பான மருந்து. ஆனால் அதன் பலன் கருதி செய்யப்பட  வேண்டிய ஒன்று. 

 

 

 

 

 

 

 

மறவன் புலவு சத்திதானந்தன் தமிழரசுக் கட்சியின் நுpண்ட கால உறுப்பினர் அவரை பற்றி ஆதாரமில்லாத வெய்தி மேலே எழுதப்பட்டுள்ளதே

 

ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவதற்கு முன் புலிகளின் சார்பில் ராஜீவ்வை காசி ஆனந்தனும் சச்சியும் சந்தித்து கதைத்திருக்கின்றார்கள் ,கொலையின் பின்பு விசாரணைக்குழுக்கள் இவர்களை விசாரித்துள்ளார்கள் இதன் காரணமாக சச்சிக்கு ஸ்ரீலங்கா வருவதற்கு தயக்கம் இருந்தது .டக்கி ,சந்திரகுமாரின் தயவிலைதான் ஸ்ரீலங்கா வந்தவர் இதற்கு ஆதாரமாக அவரின் நண்பர்கள் பல விடயங்களை சொன்னார்கள் அதில் 2013இல் மறவன்புலவில் இவர் நடாத்திய பொங்கல் விழாவுக்கு சந்திரகுமாரை பிரதம விருந்தினராக மாலை போட்டு வரவேற்பு செய்திருக்கின்றார் .

தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினருக்கு ஒரு தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரை அழைக்க முடியாமல் போனது ஏன் ?இந்த துரோக கும்பலுடன் என்னத்திற்கு கொஞ்சல்கள் ,குலாவல்கள் ?

இவர் ஸ்ரீலங்கா வந்ததிலிருந்து தமிழரசுக்கட்சியின் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடதிலை என்று கட்சி மட்டத்தில் விசாரித்த பொழுது சொன்னார்கள் .

உங்களுக்கு சச்சியின் மின்னஞ்சல் ,தொலைபேசி எண்கள் தேவை என்றால் தரலாம் .

இங்குள்ளவர்களை போல் யூகத்தின் அடிப்படையில் அல்லது கூகிளில் தேடி கருத்து முன் வைப்பதில்லை .என்னுடைய கருத்துகளுக்கு ஆதாரங்கள் வைத்திருக்கின்றேன் .

 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பேச்சுவார்த்தையில் சச்சி இணைந்திருந்தார் என்பது உங்கள் கருத்தின் மூலமாக முதல் முதலாக அறிகிறேன்,மற்றும் நீங்கள் கூறும் காரணங்களில் உண்மைதன்மை உள்ளது போலவே உள்ளது. எனது கருத்திற்காக வருந்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது எஜமான் தோத்துடுவார் போல கிடக்கு, எனக்குத்தான் ஒரே தேர்தல் வேலை. எலும்புத்துண்டுகளை மூட்டை மூட்டையாக எறியுற்றார். நான் ஒரே பிசி, இருந்தாலும் என் கருத்தைச் சொல்லிப்போகிறேன்.

கூட்டமைப்பு மிகச்சரியான முடிவை எடுத்துள்ளது. யாழ் தளத்தில் நடக்கும் கருத்துக்கணிப்பில் 49% பேர் மைத்திரியை ஆதரிக்க வேண்டும் என்றே சொல்ல்கிறார்கள். புலத்திலே இந்த நிலை. ஊரில் 75% க்குமேல் மக்கள் விரும்புவது ஆட்சிமாற்றத்தையே.

2005 இல் முட்டாள்த்தனமாக மகிந்தவை வெல்ல வைத்ததையே தலைவரின் புத்திசாதுரியம் என்று சிலாகிக்கும் தமிழ்நெட், பதிவு, நெடியவன், நெடுக்கு வகையறாக்களே தொடர்ந்தும் மகிந்த வெல்ல வைக்கப் பிரயத்தனம் எடுக்கிறனர். இதில் சிலருக்கு தமது புலயாவாரம் படுத்துவிடும் எந்த பயம். சிலருக்கு 2005 இல் தலைவர் செய்தது போல் தாமும் "தற்கொலை ராசதந்த்ஹிரம்" செய்து பார்ப்போம் எண்ட நப்பாசை.

மிகவும் பலவீனமான நிலையில் இருந்தபடி கூட்டமைப்பு எடுக்கும் முடிவு இது. சம்பந்தன் சொல்லி இருப்பது போல, யாரிடமும் எந்த கோரிக்கையும் இல்லை. அரசியல் தீர்வு என்பது பிளாக்மெயில் மூலம் எட்ட்டப்பட முடியாது. தனிநாட்டை கைவிட்டு நாம் இதயசுத்தியுடன் ஒரு தீர்வை கோர தயாராகவுளோம் என்னும் சமிக்ஞையை தெற்க்கு மக்களுக்கு சொல்லும் ஒரு நடவடிக்கை இது.

புறக்கணிப்பு என்பதும் மகிந்தவுக்கு ஆதரவு என்பதும் ஒண்டுதான், ரெண்டுமே மகிந்தவின் வெற்றிக்கே வழிசமைக்கும்.

சச்சி - மிகவும் மோசமான பேர்வழி - மகிந்தவிடம் பெட்டி வாங்கக்கூடிய ஆள். அனந்தி பிரபாவை போல் தற்கொலை அரசியல் செய்ய விழைகிறா. சச்சி போன்றவர்கள் தாம் காசு பார்ப்பதற்கு இவவை எடுப்பார் கைப்பிள்ளையாக பாவிக்கிறனர்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்கள் மகிந்தவை அப்புறத்தவேண்டுமென்று நினைத்தால் தனிச் சிங்களப் பகுதிகளில் மகிந்தவுக்கு 50 வீதத்திற்கு மேற்பட்ட ஆதரவு இருக்கக்கூடாது. ஆனால் கருத்துக்கணிப்புக்களின் பிரகாரம் பிற இனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாழும் மாவட்டங்களில்தான் மைத்திரிக்கு 50 வீதத்திற்கு மேலான ஆதவரவு உண்டு. எனவே ஆட்சிமாற்றம் வேண்டும் என்று விரும்பும் நடுத்தர, படித்த சிங்களவர்களுடன் முஸ்லிம்களும், தமிழர்களும் (மலையகத் தமிழர் உட்பட) சேர்ந்துதான் மகிந்தவை ஆட்சியில் இருந்து அகற்ற முடியும் என்ற நிலை. இந்த நிலையைச் தமிழ்க்கூட்டமைப்பு சாதகமாகப் பயன்படுத்தி தமிழர்களுக்குக் குறைந்த பட்சம் இராணுவ அழுத்தம் இல்லாத வாழ்வையாவது தருமாறு பேரம் பேசியிருக்கலாம். எதுவிதமான உறுதிகளையும் அதிகாரபூர்வமாகப் பெற்றுக்கொள்ளாது மைத்திரிக்கு ஆதரவு என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது சரியான முடிவுமல்ல. சாணக்கியமான முடிவுமல்ல. அதிகாரபூர்வமில்லாமலே மைத்திரிக்கு ஆதரவைக் காட்டியிருக்கமுடியும்.

தமிழர்களின் அடிப்படை அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான தமிழர்களின் ஆதரவும் பலமும் வட மாகாணசபைத் தேர்தலில் மூலம் கிடைத்திருந்தும் கொள்கையில் உறுதியில்லாத, தெளிவாக மக்களை வழிநடாத்தமுடியாத தலைமைதான் கூட்டமைப்பில் உள்ளது. இவர்கள் எதுவித உரிமைகளையும் பெற்றுத் தரமாட்டார்கள். மாறாக இணக்க அரசியலுக்குச் சென்று சலுகைகளை வேண்டுமானால் தங்களுக்குப் பெற்றுக்கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது எஜமான் தோத்துடுவார் போல கிடக்கு, எனக்குத்தான் ஒரே தேர்தல் வேலை. எலும்புத்துண்டுகளை மூட்டை மூட்டையாக எறியுற்றார். நான் ஒரே பிசி, இருந்தாலும் என் கருத்தைச் சொல்லிப்போகிறேன்.

கூட்டமைப்பு மிகச்சரியான முடிவை எடுத்துள்ளது. யாழ் தளத்தில் நடக்கும் கருத்துக்கணிப்பில் 49% பேர் மைத்திரியை ஆதரிக்க வேண்டும் என்றே சொல்ல்கிறார்கள். புலத்திலே இந்த நிலை. ஊரில் 75% க்குமேல் மக்கள் விரும்புவது ஆட்சிமாற்றத்தையே.

2005 இல் முட்டாள்த்தனமாக மகிந்தவை வெல்ல வைத்ததையே தலைவரின் புத்திசாதுரியம் என்று சிலாகிக்கும் தமிழ்நெட், பதிவு, நெடியவன், நெடுக்கு வகையறாக்களே தொடர்ந்தும் மகிந்த வெல்ல வைக்கப் பிரயத்தனம் எடுக்கிறனர். இதில் சிலருக்கு தமது புலயாவாரம் படுத்துவிடும் எந்த பயம். சிலருக்கு 2005 இல் தலைவர் செய்தது போல் தாமும் "தற்கொலை ராசதந்த்ஹிரம்" செய்து பார்ப்போம் எண்ட நப்பாசை.

மிகவும் பலவீனமான நிலையில் இருந்தபடி கூட்டமைப்பு எடுக்கும் முடிவு இது. சம்பந்தன் சொல்லி இருப்பது போல, யாரிடமும் எந்த கோரிக்கையும் இல்லை. அரசியல் தீர்வு என்பது பிளாக்மெயில் மூலம் எட்ட்டப்பட முடியாது. தனிநாட்டை கைவிட்டு நாம் இதயசுத்தியுடன் ஒரு தீர்வை கோர தயாராகவுளோம் என்னும் சமிக்ஞையை தெற்க்கு மக்களுக்கு சொல்லும் ஒரு நடவடிக்கை இது.

புறக்கணிப்பு என்பதும் மகிந்தவுக்கு ஆதரவு என்பதும் ஒண்டுதான், ரெண்டுமே மகிந்தவின் வெற்றிக்கே வழிசமைக்கும்.

சச்சி - மிகவும் மோசமான பேர்வழி - மகிந்தவிடம் பெட்டி வாங்கக்கூடிய ஆள். அனந்தி பிரபாவை போல் தற்கொலை அரசியல் செய்ய விழைகிறா. சச்சி போன்றவர்கள் தாம் காசு பார்ப்பதற்கு இவவை எடுப்பார் கைப்பிள்ளையாக பாவிக்கிறனர்.

கூட்டமைப்பு எக்காரணம் கொண்டும் மகிந்தவை ஆதரிக்க முடியாது.

அப்படி ஆதரிப்பது மகிந்த செய்த எல்லா கொடுமைகளும் சரி என்ற நிலையை தோற்றுவிக்கும்.

ஆக ஒருவரை ஆதரிப்பது என்று முடிவு கட்டினால் மைத்திரிதான் சரியான தெரிவு எனபது குழந்தைக்கும் தெரியும்.

அதை ஏன் எதிரணி கட்சி பலவீனமாக தொடக்க நிலையில் இருந்த போது செய்யவில்லை?  முன்பு ஆதரிப்பதன் மூலம் ஒரு உடன்படிக்கையையும் செய்திருக்கலாம் அவர்களுக்கும் அது தேவையாக இருந்திருக்கும்.

இப்போ அவர்கள் இவர்களை எட்டியும் பார்க்கவில்லை.( எந்த வேட்பாளரும் தமது வெற்றியை உறுதி செய்வதில் குறியாக இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும்) இவர்கள் நீங்கள் வெறுத்தாலும் நாங்கள் காதலிப்போம் என்ற குரங்கு தனத்தில் ஒரு இனத்தையே அடகு வைத்திருக்கிறார்கள்.

எதிர் கருத்து எழுதி எதையும் தக்க வைக்கலாம். ஆனால் உண்மை நிலை எனக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும் யாவருக்கும் தெரியும்.

(பாவம் சிலர் 5 அறிவுடன் மனிதரக  பிறந்துவிட்டார் அவர்களை விட்டு).

தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு செய்த துரோகம் பற்றிதான் யாவரும் பேசுகிறார்களே தவிர. மைத்திரிதான் ஒரே தெரிவு என்பதில் யாருக்கும் எதிர் கருத்து கிடையாது.

நெடியவன் கொடியவன் என்ற கூல்பாணியை விட்டுவிட்டு

உங்களுடைய தெளிவான அரசியல் நிலையில் நீங்கள் இந்த முடிவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்??

தமிழ் மக்கள்   கூட்டமைப்பு சிங்கள பேரினவாதம் இந்த மூன்றுக்குளும் நின்று இது சரியானது என்று எண்ணினால்... ஏன் என்று எழுத முடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.