Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் சிறீலங்காவின் ஒட்டுக்குழுவினரின் நூல் வெளியீடு! இயக்குநர் வி.சேகர் புறக்கணிப்பு - வ. கௌதமன்

Featured Replies

baan%20autha%20eluthu.jpgசிறீலங்கா அரசுடன் இணைந்து தமிழீழ விடுதலைக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்ளும் "சாத்திரி" அல்லது "சிறீ" என்றழைக்கும் சிறீரங்கநாதன் கெளரிபாலன் என்பவர் வருகின்ற 9 ஆம் திகதி தமிழகத்தில் நூல் வெளியீடு ஆயுத எழுத்து என்ற நூலினை வெளியிடுகின்றார். இதனால் தமிழகத்தில் உள்ள உணர்வாளர்கள் பலத்த எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நூலை வெளியிடுவதற்கு இருக்கிறார் டெக்கான் குரோனிக்கலின் ஆசிரியரான பகவான் சிங். இவர் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸின் நண்பர் ஆவார் , இவர் 2009 ஆண்டிற்கு பின்னர் சென்னையில் இருந்த இலங்கை துணைத் தூதர் அம்சாவின் விருந்தினராக கொழும்பு சென்றார். அங்கே நட்சத்திர விடுதியொன்றில் தங்கியிருந்து விருந்துண்ட பகவான் சிங், சிங்கள அரசினரைச் சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய பின்னர் அவர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். சிறீலங்கா அரடனும், டக்ளஸுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்துவருகிறார் டெக்கான் குரோனிக்கலின் ஆசிரியரான பகவான் சிங். இந்த நூல் வெளியிட்டு விழாவில் இந்திய புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய ஹரிகரன் போன்றவர்களும் கலந்துகொள்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்த விழாவில் ஈபிடிபியின் கருணாகரனும் கலந்துகொள்கிறார்.

தமிழீழப் போராட்டம் தொடர்பாகவும், தமிழீழப் போராளிகள் தொடர்பாகவும் தமிழகத்தில் உள்ளவர்கள் மத்தியில் உண்மைக்குப் புறம்பான விசமத்தனமான பரப்புரைகளை மேற்கொள்வதற்காக இவர்கள் முனைகிறார்கள்.

இதனை கண்டித்து இயக்குநர் வ. கௌதமன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை;-

kovutham.pngஎன் உயிருக்கு நிகரான தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!

எங்கேயாவது, எப்பொழுதாவது தமிழ் இனத்திற்கு ஒரு விடியல் பிறந்து விடாதா என உலக தமிழினம் காத்து கிடக்கின்ற வேளையில் எதிரிகள் இடைவிடாது துன்பங்களையும், துயரங்களையும் தந்து கொண்டேயிருப்பது ஒரு புறமென்றால்,

எம் இனத்தில் பிறந்து எம் மொழி பேசும் வேறு சிலரோ அதனினும் கொடிய நிகழ்வுகளில் ஈடுபடுவதுதான் துயரத்திலும் துயரமாக மனசெல்லாம் வலிக்கிறது.

2009 வரை எங்கள் ஈழ தலைமையையும், எங்கள் போராளிகளின் புனிதத்தையும் புகழ் பாடியவர்களும், அல்லது வாய்மூடி மவுனித்து கிடந்தவர்களும் இப்பொழுது மார்த்தட்டிக் கொண்டு படைப்புகள் செய்து நீதிமான்களாக காட்டிக்கொள்வது என்பது வெட்கத்திலும் வெட்கக்கேடான செயல்.

"ஆயுத எழுத்து" இந்த படைப்பு யாருக்கு சாதகமாக எழுதப்பட்டது. தமிழினத்திற்காகவா? தமிழினத்தை அழிக்க நினைக்கின்ற எதிராளிகளுக்காகவா?

"சனல்4 "தயாரித்த ஆவணப்படத்தினை வெள்ளையர்களே அதுவும் ஐநா மன்றத்தில் பார்த்து கதறி கதறி அழுதார்களே, அதனைப்பற்றி தமிழ் இரத்தம் ஓடுகின்றவர்கள் எத்தனை பேர் எழுத்தில் ஆவணமாக்கினீர்கள்!

எம் போராளி பெண்களை ஆடை களைந்து இறந்த நிலையில் சிங்கள காடையர்கள் வன்புணர்ச்சி செய்தார்களே... எத்தனை பேர் எழுத்தில் செதுக்கினீர்கள்! எங்கள் நிலம் இன்றும் பறிக்கப்படுகிறதே, எங்கள் சகோதரிகள் நான் எழுதி நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்த நிமிடத்திலும் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே இதனைப்பற்றி ஏன் உங்கள் விரல்கள் எழுதவில்லை? எழுதாது... உங்கள் விரல்கள் அடங்கி உள்ளங்கைகள் எங்கள் எதிரிகளிடம் "பலமாக" கைக்குலுக்கியிருக்கின்றன.

என் மண்ணை, எங்கள் மக்களை, எம் உரிமைகளை - ஆளவந்த, அழிக்க வந்த,அபகரிக்க வந்தவர்களை எதிர்ப்பதற்க்குத்தான் எங்கள் தலைமை ஆயுதப்போராட்டத்தை கையிலெடுக்க நேர்ந்தது.

அதற்காகத்தான் எங்கள் குடும்பத்திலிருந்தே எங்கள் பிள்ளைகளை தேர்ந்தெடுத்து போராடினார்கள். இவ்வளவு பேசும்,எழுதும் நீங்கள் சொல்லுங்கள் - எங்கள் போராளிகள் யாராவது ஒரு சிங்கள பெண்ணை சிதைத்ததாக ஆதாரம் காட்ட முடியுமா?

ஒரேயொரு அப்பாவி சிங்கள குடும்பத்தையாவது கொண்று போட்டதாக ஆவணங்களை எடுத்து வைக்க முடியுமா?

கிட்டத்தட்ட நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட எங்கள் போராளி தெய்வங்களை கொச்சைப்படுத்த உங்களுக்கு எப்படி மனம் வந்தது?

என்னை திரைத்துறையில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் வி.சேகர் "ஆயுத எழுத்து" புத்தக விவாதத்தில் அவரும் பங்குபெறுவதாக அறிந்து சொல்ல முடியாத வேதனையோடு அவரை தொடர்பு கொண்டு நான் பேசிய போது "உன் உணர்வை புரிஞ்சுக்கிறேன், இரவு அந்த படைப்பை படித்துவிட்டு உன்னிடம் பேசுகிறேன்" என்றார்- நேற்று 6.01.2015 மதியம் 1.30க்கு நான் அந்த விழாவை புறக்கணிக்கின்றேன், தமிழர்களுக்கு எதிரான எந்த நிகழ்விலும் நான் பங்கெடுக்க மாட்டேனென்று உறுதியளித்தது- மனதுக்கு ஆறுதலாக இருந்தது, மகிழ்ச்சியாகவும் இருந்தது.

யாருக்கும் இல்லாத அக்கறை இவனுக்கு மாட்டும் ஏன் என்று என் இனத்தில் எதிரிகளும் என் இனத்திற்குள்ளாகவே வாழும் விதண்டாவாதிகளும் கேட்கக்கூடும் .

தமிழன் ஒருவனுக்கு இந்த உலகின் எந்த மூலையில் தீங்கு நேர்ந்தாலும் அதனை தட்டி கேட்கின்ற உரிமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு என்கின்ற முறையிலும் , அதுவும் அந்த தவறு நாங்கள் வாழ்கிற தமிழ் மண்ணில் நடக்கும் போது கைக்கட்டிக் கொண்டு சும்மா வேடிக்கை பார்க்கமுடியாது என்கிற நிலையிலும், எல்லாவற்றிக்கும் மேலாக தாய்தமிழ் மண்ணில் "இனி என்ன செய்ய போகிறோம் " "இறுதி யுத்தம்" : விழவிழ எழுவோம்" எங்கள் அப்பா இப்படி எண்ணற்ற ஆவண படைப்புகளினுடாக தமிழர் மனங்களில் தணலாக எரியவிட்ட ஆவண படைப்பாளன் என்கின்ற உரிமையிலும் இதற்கு கண்டனம் தெரிவிப்பது எனது தார்மீக உரிமை என்று உறுதியோடு தெரிவித்துக்கொள்கின்றேன்

09-01-15 அன்று நிகழ்விக்கும் நிகழ்வில் பங்கு கொள்ளது மானத்தோடு வெளிவந்த இயக்குநர் வி.சேகர் அவர்களை போன்று -எம் மண்ணுக்காகவும் , மக்களுக்காகவும் வாழ்கின்றேன் என்று சொல்பவர்கள் அந்த விழாவினை புறக்கணித்து வெளிவரவேண்டும். இல்லையென்றால் காலம் அவர்களை வெளிச்சம் போட்டு காட்டும். "இவர்கள் எம் இனத்தின் துரோகிகள்" என்று.

நன்றி

இப்படிக்கு

வ. கௌதமன்

மூலம்: http://www.pathivu.com/news/36691/57//d,article_full.aspx

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா அரசுடன் இணைந்து தமிழீழ விடுதலைக்கு எதிராக பிரச்சாரங்களை  மேற்கொள்ளும் "சாத்திரி" அல்லது "சிறீ" என்றழைக்கும் சிறீரங்கநாதன் கெளரிபாலன் என்பவர்  வருகின்ற 9 ஆம் திகதி தமிழகத்தில் நூல் வெளியீடு ஆயுதா எழுத்து என்ற நூலினை வெளியிடுகின்றார். இதனால் தமிழகத்தில் உள்ள உணர்வாளர்கள் பலத்த எதிர்ப்பினை தெர்வித்து வருகின்றனர்.

------

 

அட.....  யாழ்கள சாத்திரி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலையும்,இந்தப்பெயரும் தேவைதானா?????

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் புத்தகத்தில் சாத்திரி என்ன எழுதியிருக்கிறார் என்பது யாருக்காவது தெரியுமா ?

 

சாத்திரி எப்போது இலங்கையரசுக்கு ஆதரவாக மாறினார் ?

 

டெக்கான் குரொனிக்கலுக்கும் சாத்திரிக்கும் என்ன சம்பந்தம் ?

 

சாத்திரிக்கும் ஹரிஹரனுக்கும் என்ன சம்பந்தம் ?

 

இதற்குள் திராவிட இயக்க செயலாளர் எப்படி வந்தார் ?

 

கருணாகரன் யர் ?

 

இறுதியாக, புலிகள் எதிரி இனப்பெண்களை மானபங்கப்படுத்தவில்லை என்பது 100 இற்கு 100 உண்மை. ஆனால் எதிரியினக் குடும்பங்களை கொல்லவில்லை என்று கெளதமன் கூறுவது அறியாமை. எல்லையோரக் கிராமங்களிலும், பஸ்வண்டிகளிலும், ரயில்களிலும், வங்கிகள் மற்றும் அரச கட்டிடங்களிலும்  முஸ்லீம் பள்ளிவாசல்களிலும் என்று பல நூற்றுக்கண்கான அப்பாவிகளைக் கொன்றிருக்கிறார்கள். அவர்களின் அரசியல் என்னவாக இருந்தாலும், அவர்கள் கொல்லப்பட்டமைக்கு நாம் என்னதான் நியாயங்களைக் கற்பித்தாலும் கூட , அவர்கள் சிவிலியன்கள்தான். ஆக, புலிகள், நாங்கள் எதிரியினத்தின் அப்பாவிகளைக் கொன்றுதானிருக்கிறோம் என்று அவரிடம் கூறுங்கள்.

 

 

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலையும்,இந்தப்பெயரும் தேவைதானா?????

 

 

சாத்திரி  நல்லதொரு எழுத்தாளர்

எனக்குப்பிடித்த எழுத்தாளர்.....

 

யாழ் களத்திலே

ஒரே குடும்பமாக வளர்ந்தவர்கள் நாங்கள்

அந்தவகையில்

போராட்டத்தையும்

அதில்  போராளிகள் செய்த சிறுசிறு குறும்புகளையும்

கதைகளையும் இணைத்து ஒன்றாக்கி

அது தான் இது

இது தான் அது என அவர் எழுதத்தொடங்கிய போது

யாழ் உறவுகளான நாங்கள் அதை கண்டித்தோம்

இந்த பாதையிலிருந்து விலகும்படி   கெஞ்சிக்கேட்டோம்

 

ஆனால் அவர்.....????

இன்று....??? :(  :(  :( ..

 

 

இறுதியாக, புலிகள் எதிரி இனப்பெண்களை மானபங்கப்படுத்தவில்லை என்பது 100 இற்கு 100 உண்மை. ஆனால் எதிரியினக் குடும்பங்களை கொல்லவில்லை என்று கெளதமன் கூறுவது அறியாமை. எல்லையோரக் கிராமங்களிலும், பஸ்வண்டிகளிலும், ரயில்களிலும், வங்கிகள் மற்றும் அரச கட்டிடங்களிலும்  முஸ்லீம் பள்ளிவாசல்களிலும் என்று பல நூற்றுக்கண்கான அப்பாவிகளைக் கொன்றிருக்கிறார்கள். அவர்களின் அரசியல் என்னவாக இருந்தாலும், அவர்கள் கொல்லப்பட்டமைக்கு நாம் என்னதான் நியாயங்களைக் கற்பித்தாலும் கூட , அவர்கள் சிவிலியன்கள்தான். ஆக, புலிகள், நாங்கள் எதிரியினத்தின் அப்பாவிகளைக் கொன்றுதானிருக்கிறோம் என்று அவரிடம் கூறுங்கள்.

இந்தக்கால கட்டத்தில் இந்தக்கேள்விகளை கேட்பது ஏன்.இவற்றிற்கு விடை கண்டால் மட்டும் எம் விடுதலை தாகம் தீர்ந்து விடுமா .......இனப்படுகொலை ஒன்றை உலகிற்கு அம்பலப்படுத்த வேண்டிய,அதை எடுத்துக்கூறவேண்டிய இந்த நேரத்தில்  ........................
 
தான்  குற்றமற்றவன் என்று எதிரி உலகிற்கு காட்டுவதற்கு எம்போராட்டத்தையும் ,விடுதலைப்புலிகளையும் பயங்கரவாதம் என்னும் பட்டியலை சுமக்க வைத்து கோழைத்தனமாக எம்மை கொலை செய்தான் .உங்கள் கேள்விகளால் ,தேடலால் எதிரி நல்லவனாகிறான் ,விடுதலைபுலிகளும் ,தமிழரும் மேலும் மேலும் பயங்கரவாதிகளாகவே உலகிற்கு காட்ட நினைக்கும் எதிரிக்கு துணை நிற்கப்போகிறீர்களா ?????

இந்த நிலையும்,இந்தப்பெயரும் தேவைதானா?????

இப்ப என்ன நடந்துவிட்டது சாத்திரிக்கு ,இலவச விளம்பரம் தான் அதிகரித்திருக்கின்றது .

 

புலிகள் ,புலிவாலுகள் பற்றி உலகம் அறிந்ததுதானே .தம்முடன் இல்லாதவர்களை கொலை செய்யவும் சேறடிக்கவும் என்றுமே பின்னிற்க மாட்டார்கள் .

இப்ப அவர்களை எவரும் கணக்கில் எடுப்பதே இல்லை அரைவாசி வாலுகள் கட்சி மாறி மற்றவர்கள் பின்னால் திரிய தொடங்கி பலவருடங்கள் ஆகிவிட்டது .

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்தக்கால கட்டத்தில் இந்தக்கேள்விகளை கேட்பது ஏன்.இவற்றிற்கு விடை கண்டால் மட்டும் எம் விடுதலை தாகம் தீர்ந்து விடுமா .......இனப்படுகொலை ஒன்றை உலகிற்கு அம்பலப்படுத்த வேண்டிய,அதை எடுத்துக்கூறவேண்டிய இந்த நேரத்தில்  ........................
 
தான்  குற்றமற்றவன் என்று எதிரி உலகிற்கு காட்டுவதற்கு எம்போராட்டத்தையும் ,விடுதலைப்புலிகளையும் பயங்கரவாதம் என்னும் பட்டியலை சுமக்க வைத்து கோழைத்தனமாக எம்மை கொலை செய்தான் .உங்கள் கேள்விகளால் ,தேடலால் எதிரி நல்லவனாகிறான் ,விடுதலைபுலிகளும் ,தமிழரும் மேலும் மேலும் பயங்கரவாதிகளாகவே உலகிற்கு காட்ட நினைக்கும் எதிரிக்கு துணை நிற்கப்போகிறீர்களா ?????

 

 

தமிழ்ச் சூரியன்,

 

நான் தேவையில்லாமல் கேள்வி கேட்கவில்லை. சிலவேளைகளில் தமிழகத்து உறவுகள் எமக்கு உதவுவதாக எண்ணிக்கொண்டு தவறான செய்திகளைத் தருகிறார்கள். ஆனால் நடந்த அனைத்து மனிதவுரிமை மீறள்களும் அனைவருக்கும் தெரிந்தவைதானே? அப்படியிருக்க, நான் எதுவுமே செய்யவில்லை என்று யாருக்காகச் சொல்லுகிறார்கள்? நாம் இப்போது புலிகள் எவரையுமே கொல்லவில்லை என்று கூறினால் யாராவது நம்புவார்களா??

 

ஒன்றில் பேசாமல் இருக்கவேண்டும், அல்லது சரியானதைப் பேசவேண்டும், அப்படியில்லாமல் தவறானதைச் சொல்லுவதால் மட்டும் எதுவுமே மாறிவிடப்போவதில்லை.

இப்ப என்ன நடந்துவிட்டது சாத்திரிக்கு ,இலவச விளம்பரம் தான் அதிகரித்திருக்கின்றது .

புலிகள் ,புலிவாலுகள் பற்றி உலகம் அறிந்ததுதானே .தம்முடன் இல்லாதவர்களை கொலை செய்யவும் சேறடிக்கவும் என்றுமே பின்னிற்க மாட்டார்கள் .

இப்ப அவர்களை எவரும் கணக்கில் எடுப்பதே இல்லை அரைவாசி வாலுகள் கட்சி மாறி மற்றவர்கள் பின்னால் திரிய தொடங்கி பலவருடங்கள் ஆகிவிட்டது .

புலிகளை யாரும் கணக்கெடுப்பதில்லையா? காலை நித்திரையால் எழுந்தவுடனேயே 7.11 மணிக்கே கோப்பி கூட குடிக்க முன்பே புலியைபற்றி புராணம் பாடதொடங்கீடீங்க நீங்க. பிறகு எப்படீங்க அப்படி சொல்லலாம்.
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன நடந்துவிட்டது சாத்திரிக்கு ,இலவச விளம்பரம் தான் அதிகரித்திருக்கின்றது .

புலிகள் ,புலிவாலுகள் பற்றி உலகம் அறிந்ததுதானே .தம்முடன் இல்லாதவர்களை கொலை செய்யவும் சேறடிக்கவும் என்றுமே பின்னிற்க மாட்டார்கள் .

இப்ப அவர்களை எவரும் கணக்கில் எடுப்பதே இல்லை அரைவாசி வாலுகள் கட்சி மாறி மற்றவர்கள் பின்னால் திரிய தொடங்கி பலவருடங்கள் ஆகிவிட்டது .

அண்ணே உங்களுக்கு இதெல்லாம் பழகின விசயங்கள்.இனி புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை,நான் புலியில் இருந்தேன் என்ற பெயருடனேயே சாக விரும்புகிறேன்.வேறு எந்த அடைமொழியும் எனக்கு வேண்டாம்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தகத்தை படிக்காமல் புத்தகத்தில் உள்ளதை தீர்மானம் செய்யக்கூடாது. கலந்துரையாடலை கேட்டபின்னர் கலந்துரையாடல் பற்றி விமர்சனம் செய்வது நல்லது. இந்தக்காலத்தில் ஒட்டுக்குழு பற்றியெல்லாம் யார் கணக்கில் எடுக்கிறார்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

புத்தகம் படித்த படியால்தான்  சொல்லுகிறம்  கிழவி .உங்களுக்கும்  வேணுமா மெயில் அனுப்பவும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன நடந்துவிட்டது சாத்திரிக்கு ,இலவச விளம்பரம் தான் அதிகரித்திருக்கின்றது .

 

புலிகள் ,புலிவாலுகள் பற்றி உலகம் அறிந்ததுதானே .தம்முடன் இல்லாதவர்களை கொலை செய்யவும் சேறடிக்கவும் என்றுமே பின்னிற்க மாட்டார்கள் .

இப்ப அவர்களை எவரும் கணக்கில் எடுப்பதே இல்லை அரைவாசி வாலுகள் கட்சி மாறி மற்றவர்கள் பின்னால் திரிய தொடங்கி பலவருடங்கள் ஆகிவிட்டது .

 

உங்களுக்கு தற்பொழுது பிடிக்கும்  எழுத்தாளர்கள் யார் என்று பார்த்தால் தெரியும்

அவர்கள் புலிகள் மீது சேறு பூசுபவர்களாக இருப்பார்கள்

இது ஒன்றே போதும்

உங்கள் நோக்கத்தையும்

அவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள....

யாழுக்கு கதை சொல்லவேண்டாம்

எல்லாம் பதிவிலுண்டு...

இன்று பாரிசில் பத்திரிகையில் வந்த செய்திக்காக கொலைவெறி ஆட்டம் ஆடியவர்களுக்கும் சாத்திரியின் புத்தகத்தை தடை செய்ய வேண்டுமென்பவர்களுக்கும் என்ன வித்தியாசம் .

அவர்கள் அதை பெருமையாக புனிதமாக நினைக்கின்றார்கள் அந்த அடையாளத்துடனேயே சாகவும் விரும்புகின்றார்கள் .

 

அறிவு வளராதவரை நாகரீகம் அடையாத வரை இப்படியான  சிந்தனையுடன்  சொர்க்கத்திற்கு போகவேண்டியதுதான் .


புலிகளை யாரும் கணக்கெடுப்பதில்லையா? காலை நித்திரையால் எழுந்தவுடனேயே 7.11 மணிக்கே கோப்பி கூட குடிக்க முன்பே புலியைபற்றி புராணம் பாடதொடங்கீடீங்க நீங்க. பிறகு எப்படீங்க அப்படி சொல்லலாம்.

கொஞ்சமாவது சிலரை நாகரீகம்  அடைய வைக்கலாம் என்ற நப்பாசைதான் .

  • கருத்துக்கள உறவுகள்

யாரது இந்தச் செய்தி போட்டிருப்பது?

அட, நம்ம பதிவு காரர்கள்

ஊரில் இருக்கும் அத்தனை பேரையும் துரோகி என்று பட்டம் கட்டி

படு கேவலமாக ஊடக சுதந்திரத்தினை பாவிக்கும்

கூட்டம் போட்ட ஒரு செய்தியா இது

நானும் ஆயுத எழுத்து பற்றி பெரிசாக அலட்டிக் கொள்ளேல

இனி பதிவு இப்படி போட்டிருக்கின்ற படியால

ஒருக்கா வாங்கி வாசிக்க வேண்டும்.

வ.கெளதமன், கத்தியை வெற்றிகரமாக எதிர்த்து ஒரு இடத்திலும்

திரையிடாமல் செய்து வெற்றி பெற்ற ஆள் அல்லவோ...

அவர் சொன்னா கேட்க கூட்டம் இருக்கு என்று ஒரு நப்பாசை வேற அவருக்கு

கொஞ்சமாவது சிலரை நாகரீகம் அடைய வைக்கலாம் என்ற நப்பாசைதான் .

உங்களால் அடைய முடியாதது மற்றவர்களாவது அடையவேண்டும் என்று விரும்பும் உங்களின் நல்ல மனசு பாராட்டுக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்

ஓசி விளம்பரத்துக்காக சர்ச்சைக்குரியவர்களை சம்பந்தப்பட்ட புத்தக்கத்தை எழுதியவரே கூப்பிட்டிருப்பார். இதெல்லாம் இப்ப வியாபார விளம்பர யுக்தி ஆகிவிட்டது.

 

இவர்களின் ஆட்டம்.. திருவிழா முடிஞ்சதுக்கு அப்புறம் தான். பாவங்கள்.. எப்படி கூட்டத்தை கூட்டுறது.. இப்படித்தான் கூட்டலாம். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன நடந்துவிட்டது சாத்திரிக்கு ,இலவச விளம்பரம் தான் அதிகரித்திருக்கின்றது .

 

புலிகள் ,புலிவாலுகள் பற்றி உலகம் அறிந்ததுதானே .தம்முடன் இல்லாதவர்களை கொலை செய்யவும் சேறடிக்கவும் என்றுமே பின்னிற்க மாட்டார்கள் .

இப்ப அவர்களை எவரும் கணக்கில் எடுப்பதே இல்லை அரைவாசி வாலுகள் கட்சி மாறி மற்றவர்கள் பின்னால் திரிய தொடங்கி பலவருடங்கள் ஆகிவிட்டது .

இந்திய முன்னாள் இராணுவத்தினர் எழுதிய புத்தகங்கள் முன்னைநாள் பத்திரிகை செய்திகளை மேற்கோள் காட்டி நிராஜ் டேவிட் அவர்கள் எழுதிய தொடரில்.
 
பிழைகள் இருந்தால் சுட்டி காட்டியிருக்கலாம்.
அவர் மலாயன் கபேயில் சாம்பாரு வைக்க தான் லாயக்கு என்று எழுதிய அநாகரீக சேறு அடித்தவர் நீங்கள்.
 
பத்திரிகையை எப்படி மதிக்க வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும்.
நீங்கள் கரைவதால் ..........
மலத்தை சந்தனம் என்று எடுத்து யாரும் பூசபோவத்தில்லை.
 
எல்லோருக்கும் மூக்கு இருக்கிறது மணம் தாங்க முடியாது. 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனய்யா
குலைக்கும் நாயின் வாலைக் கடிக்கிறீர்கள்?
கடியாது.
இது
கடி
யாதோ?

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களே சாத்திரிக்கு நல்ல பப்பிளிசிட்டி தேடிக் கொடுத்து விடுவார்கள்.அப்படி என்ன சாஸ்திரி எழுதியிருக்கிறார் என புத்தகத்தை வாசித்துப் போட்டு எழுதுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

சரி இந்த புத்தகத்தை படித்தவன் சொல்லுகிறேன்.

90 மட்டும் சாத்திரி எழுதியதில் தவறுகள் இல்லை. ஆனால் அதற்கு பிறகு எழுதியது எல்லாம் பச்சை பொய். புளுகு மூட்டைகள். இதற்கு பினால் இருக்கும் புலனாய்வும் அரசியலும் சாத்திரிக்கும் ராவிற்கும் தான் வெளிச்சம்.

புத்தகத்தின் பகுதிகளை நான் இங்கே இணைக்க தயார் எதிர் கொள்ள நீங்கள் தயாரா ..??

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருந்த போது இருந்த சாத்திரி வேறு

இப்போதுள்ள சாத்திரி வேறு.

 

2009 இன் பின் புலியான புலியெல்லாம் பதுங்க சாத்திரி மட்டும் தன்னை புலியென்று அடையாளப்படுத்த ரொம்பவும் பாடுபட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சாத்திரியின் புத்தகத்தினை வாங்கி அதாவது பணம் கொடுத்து வாங்கிப் படிக்க வேண்டும் என்கின்ற ஆவலைத் தூண்டிய புலத்து புலிப் பினாமி ஊடகங்களுக்கு நன்றி.

கௌதமன், புகழேந்தி தங்கராஜ், சீமான், நெடுமாறன் போன்றோர் புலத்து புலிப் பினாமிகளின் பணத்தில் இயங்குகின்றவர்கள்.

இவர்களின் விதிவிலக்காக கொளத்தூர் மணி, சு.ப.வீரபாண்டியன், அறிவுமதி போன்ற சிலரும் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஒருவர் எழுதும் புத்தகத்தில் யாவற்றையும் சரி என எதிர்பார்க்க முடியாது. தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர புத்தகத்தினை தடை செய்யத் தூண்டுவது நாகரீகமான செயல் அல்ல.

தமிழகத்து உணர்வாளர்களை சரியான முறையில் பயன்படுத்தாமல்- தொட்டதுக்கு எல்லாம் அவர்களைப் பயன்படுத்துவதானது அவர்கள் மீதான நம்பிக்கையீனங்களைத்தான் அதிகரிக்கச் செய்கின்றன.

கருணாகரன் யார் என ரகுநாதன் கேட்டு இருந்தார்.

இறுதிக் காலம் வரை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் செய்திப் பணிப்பாளராக பணியாற்றி இருந்தார். அதேபோன்று வெளிச்சம் இதழின் ஆசிரியராகவும் இருந்தவர்.

இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகள் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டார்கள் என்பதனை இவரிடம் இருந்துதான் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

------------------------

வெளியில் ஒரு கதை கூறும் மருத்துவர்களான சத்தியமூர்த்தி, சண்முகராஜா போன்றவர்கள் கூட விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தில் நடந்து கொண்ட விதத்தினை தமக்கு நெருங்கியவர்களிடம் கூறி வேதனைப்பட்டு உள்ளனர்.

தவறுகளே செய்யாதவர்கள் விடுதலைப் புலிகள் என்று தலை கீழாக நின்று வாதாடினாலும் அனைவருக்கும் புலிகளின் கொடூர முகம் தெரிந்தே உள்ளது.

---------------------

Edited by நிழலி
ஆதாரமற்ற குற்றச்சாட்டு + அவமானப்படுத்தும் வரிகள் நீக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, ஆதாரமான குற்றச்சாட்டினை எப்படி உங்களுக்குத் தருவது?

சுட்டுக் கொன்றவனை நான் தேடிப்பிடித்து அறிமுகப்படுத்தவா? அல்லது பாதிக்கப்பட்ட தந்தையினை உங்களிடம் அறிமுகப்படுத்தவா?

விடுதலைப் புலிகளுக்காக தம்மையே அர்ப்பணித்தவர்களின் பிள்ளைகளை எல்லாம் நாய் பிடிகாரர்கள் போல் வந்து பிடித்துச் செல்ல முயன்ற போது- விடுதலைப் புலிகளிடம் இருந்து தமது பிள்ளைகளை காப்பாற்ற அவர்கள் பட்ட பாட்டினை எல்லாம் கூறினால்- இல்லை இதுவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றுதான் கூறுவீர்களோ?

புலிகளுக்கு ஆதரவாக கருத்துக் கூறுபவர்களை எந்த ஆதாரத்தினை வாங்கிக்கொண்டு வெளியிட அனுமதிக்கின்றீர்கள் என அறியத்தர முடியுமா?

அப்படி எனில் விடுதலைப் புலிகள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என உங்கள் யாழ். களத்தில் நியாயம் கற்பிக்க முனைகின்றீர்களா? அல்லது அவர்களை கடவுளே வந்தாலும் விமர்சிக்கக்கூடாது என விரும்புகின்றீர்களா?

உங்களின் தமிழ்த் தேசியத்தின் அளவுகோல்தான் என்ன?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த மண்ணில் இருந்து அரசியல் செய்கின்றது. ஆனால், புலத்தில் இருந்து கொண்டு கருத்து எழுதி விமர்சிக்க உங்கள் தளத்தில் அனுமதிக்கின்றீர்கள். அதேபோன்று புலிப் பினாமி ஊடகங்களான தமிழ்நெட், பதிவு போன்றவை கூட்டமைப்புக்கு எதிராக விசத்தினையும் கக்கி, அவர்களுக்கு எதிரான கஜேந்திரகுமார் அணி, அனந்தி அணி ஆகியவற்றின் அறிக்கைகளையும், இல்லாத-பொல்லாத செய்திகளை வெளியிடும் போது அவற்றை எல்லாம் இங்கே இணைக்கின்றீர்களே அல்லது அனுமதிக்கின்றீர்களே இவை எல்லாம் எத்தகயை அளவுகோலில் என அறியத்தர முடியுமா?

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

நான் சாத்திரியாரின் ஆயுத எழுத்து புத்தகத்தை முழுமையாகப் படித்துள்ளேன். பல விடயங்கள் இந்த யாழ் களத்திலேயே கதைகளாக அவர் பதிந்தவைதான். முதல்வன் குறிப்பிட்டதுபோல் நாவலில் வரும் "அவன்" காயப்பட்டு சிங்கப்பூர் செல்லும் வரை சொல்லும் விடயங்கள், உயிராபத்துக்களை துச்சமெனக் கொண்ட ஓர்மம் கொண்ட போராளிகளின் கதைகள். அதன் பின்னர் வரும் விடயங்கள் பல கதைகளாக எல்லோருக்கும் தெரிந்த விடயங்கள்தான். ஆனால் எழுத்தில் வரவில்லை. சாத்திரி எழுத்தில் கொண்டு வந்திருக்கின்றார். அதனை புத்தகத்தைப் படிக்காமல் மாட்டுக்குக் குறிசுடுவதைத் தொழிலாகக் கொண்டவர்கள் ஓட்டுக்குழு, துரோகி என்று குறிசுடுவார்கள்.

இது வரலாற்றுப் புத்தகம் என்று சொல்லப்படவில்லை என்பதைக் கவனித்தால் குத்திமுறிய வேண்டியதில்லை.

வேறு திரியில் நான் வைத்த கருத்து..

 

சாத்திரியாரின் "ஆயுத எழுத்து" நூல்கள் சில நண்பர் ஒருவரின் உதவியால் கைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்திருந்தது. விடுமுறையில் இருப்பதால் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். சாத்திரியார் யாழ் களத்தில் எழுதிய பல கதைகளும் இந்நூலில் அடக்கப்பட்டிருக்கின்றது. இளவயதில் இயக்கத்தில் இணைந்து, உயிரைத் துச்சமாகக் கருதி ஓர்மத்துடன் போராடிய இளைஞன் ஒருவன் படிப்படியாக வெவ்வேறு பிரிவுகளில் வேலை செய்யும்போது ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்பாக உள்ளது. வஞ்சகத்தின் பாதையில் ஆனால் தாயகம் நோக்கி என்ற கோஷத்துடன் செய்வதெல்லாம் தமிழீழத்திற்கே என்ற நம்பிக்கையில், சொல்லைவிடச் செயலே முக்கியம் என்ற கருத்தியலில், கட்டளைகளின் காரணங்களைக் கேட்காது கடமைகளைச் செவ்வனே செய்யும் நேர்மையான விடுதலைப் போராளிகளின் பண்புகளை வெளிக்கொண்டு வருகின்றது. அத்தோடு வெளிநாடுகளில் நடந்த சில சம்பவங்களின் பின்னணிகளையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

ஜேம்ஸ் பொண்ட் பாணியிலான நிழல்மனிதர்களைக் கதாநாயகர்களாகக் கொண்டு திகிலூட்டும் ஆங்கிலப் படங்களில் வரும் கதைகள் போன்று சில கதைகள் உள்ளன. நம்பமுடியாத பலவற்றைச் சாதித்தவர்கள் நிறைந்த இயக்கத்தில் இப்படியும் நடந்தும் இருக்கலாம் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது.

சாத்திரியாரின் புத்தகத்தில் உள்ளவற்றில் பிரச்சினையான விடயங்கள் என்று சில முகப்புத்தகங்களில் அலசப்படுகின்றன. அவை இவைதான்:

  • துர்க்கை அம்மன் கோவிலில் கொள்ளையடித்தது.
  • பிரான்சில் கஜன், நாதன் ஆகியோரைக் கொன்றது.
  • ஆயுதங்களுக்காக போதைப் பொருள் கடத்தியது.
  • இயக்கப் போராளிகள் (வெளிநாட்டுப் பிரிவினர், வெளியகப் புலனாய்வுப் பிரிவினர்) தண்ணி அடிப்பது, விலைமாதர்களுடன் தொடர்பு.
  • தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார்.
இதெல்லாம் முன்னர் யாழில் அலசப்பட்டவைதான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.