Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

TNA ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு- ஒரேபார்வையில் கோரிக்கைகளும் பதில்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் உள்ளிட்ட அரசாங்கத் தரப்புக்குமிடையிலான சந்திப்பு இன்று (12.01.2015) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது ஜனாதிபதித் தேர்தலின்போது வடகிழக்கு மக்கள் தமக்கு வாக்களித்தமைக்காக முதலில் மிக்க நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கூறினார். இதன்போது கருத்துத் தெரிவித்த இரா. சம்பந்தன் அவர்கள், தமது பிரச்சினைகளுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் தங்கள் வாக்குகளை தங்களுக்கு அளித்துள்ளார்கள் என்றார்.

அத்துடன் இதுவரை காலமும் நாங்கள் மகிந்த ராஜபக்ச அவர்களின் அரசாங்கத்திடம்; பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். ஆயினும் அவர்கள் எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதன்படி, இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியமர அனுமதிக்க வேண்டும். நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின்கீழ் விடுதலை செய்யவேண்டும்.

காணாமற்போனவர்கள் விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு ஆளுநர்கள், அரசாங்க அதிபர்கள் மற்றும் மாகாண அமைச்சின் செயலர்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது.

அத்துடன் ஒரு நல்லிணக்க சமிக்ஞையாக முதலில் வடக்கிற்காவது தமிழ் ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்றும், வவுனியா மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்களை மாற்றுவது தொடர்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், திருகோணமலையில் எட்டுவருட காலமாக இராணுவ அதிகாரி ஒருவர் அரச அதிபராக இருப்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

மற்றும் சுன்னாகம் மின்சார சபையினால் ஏற்பட்டிருக்கும் கழிவுஎண்ணெய் கசிவானது பல கிராமங்களை பாதித்திருப்பதுடன் அது வடக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டி, இதனால் மேலும் பல கிராமங்களும் பாதிக்கப்பட்டுவருதும், குடிநீர் கெட்டுப்போய், குளிப்பதற்குக் கூட பயன்படுத்த முடியாத நிலைமையிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்கப்பட்டது.

அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கான பாஸ்நடைமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது. அத்துடன் இனப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வு காலக்கிரமத்தில் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு அரச தரப்பினர் பதிலளிக்கையில், இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினை தொடர்பில் குழுவொன்றை அமைத்து இடங்களை இனங்கண்டு அவர்களை மீள் குடியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விபரங்கள் திரட்டப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆளுநர்களை மாற்றுவதைப் பொறுத்தமட்டில் ஒன்பது ஆளுநர்களையும் மாற்றுவதற்கு உத்தேசித்துள்ளோம். ஆகவே ஆளுநர்கள் மாற்றத்தின்போது இந்த விடயமும் கவனத்திற் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர்கள் மாற்றம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும்.

வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கான பாஸ் நடைமுறையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் குழுவொன்றை நியமித்து அதனூடாக அவ்விடயம் முன்னெடுத்துச் செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNA க்கும் ஆளும் தரப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு–  சுமூகமானதும் சாதகமானதுமான சூழல் உருவாக்கம்:-

இலங்கையின் புதிய ஆளும் தரப்பிற்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இன்றைய முக்கிய சந்திப்பில் மீள் குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, பலாத்காரமாகப் பறிக்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைத்தல், உள்ளிட்ட நடைமுறைப் பிரச்சனைகள் பேசப்பட்டதாகவும் அதற்கு ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேன,  பிரதம மந்திரி றணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜதசேனாரட்ண ஆகியோரிடம் இருந்து சாதகமான பதில்கள் வழங்கப்பட்டதாக அரசாங்க தரப்பில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரியவருகிறது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115468/language/ta-IN/article.aspx

 

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

காலம் காலமாக இலங்கை ஜனாதிபதிகள் சொல்லும் குழுக்களை அமைத்து தமிழர்களுக்கு தேவையான உடனடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம் என்று சம்மந்தன் குழுவினரிடம் சொல்லி இருக்கின்றார் மைத்திரி..... அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை அந்த குழுக்கள் தமிழர் பிரச்சனைகளை ஆராய்ந்து இழுத்தடித்து கொண்டிருக்கும் என்பது தான் கடந்த கால அனுபவங்கள் ....

  • கருத்துக்கள உறவுகள்

காலம் காலமாக இலங்கை ஜனாதிபதிகள் சொல்லும் குழுக்களை அமைத்து தமிழர்களுக்கு தேவையான உடனடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம் என்று சம்மந்தன் குழுவினரிடம் சொல்லி இருக்கின்றார் மைத்திரி..... அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை அந்த குழுக்கள் தமிழர் பிரச்சனைகளை ஆராய்ந்து இழுத்தடித்து கொண்டிருக்கும் என்பது தான் கடந்த கால அனுபவங்கள் ....

 

ஆனாலும் இந்த முறை சற்று வித்தியாசம்

100 நாட்கள் ஓடிவிட்டால் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்துவிடும்

காலம் காலமாக இலங்கை ஜனாதிபதிகள் சொல்லும் குழுக்களை அமைத்து தமிழர்களுக்கு தேவையான உடனடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம் என்று சம்மந்தன் குழுவினரிடம் சொல்லி இருக்கின்றார் மைத்திரி..... அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை அந்த குழுக்கள் தமிழர் பிரச்சனைகளை ஆராய்ந்து இழுத்தடித்து கொண்டிருக்கும் என்பது தான் கடந்த கால அனுபவங்கள் ....

இதுதான் உண்மை என்றாலும் கதைக்க போகாமல் எந்த தீர்வும் வராது .

முயற்சி உடையோர்  இகழ்சி அடையார் . :lol:

மைத்திரி - கூட்டமைப்பின் சந்திப்பும் வெளிவரும் செய்திகளும் – தமிழ் ஊடகங்களும் - வரதன்

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியையும் பிரதமரையும் அமைச்சர் ராஜிதவையும் சந்தித்த செய்திகள் ஊடகங்களில் வந்துகொண்டு இருக்கின்றன...

 
பொதுவாக கூட்டமைப்பு பிரதிநிதிகள்  இவர்களைச் சந்தித்து இன்ன இன்ன கோரிக்கைகளை முன் வைத்தனர் என்பதே அறிக்கையாக  விடப்பட வேண்டும். 
 
ஆனால் ஒரு ஊடகத்தில் மட்டும்  அச் சந்திப்பின் குறுக்கு வெட்டுச்  செய்தியாக  இவர் இதைக் கேட்டார்.  இவர் முக்கியமான விடயமாக இதனைக் கேட்டார் . சித்தர் மிக முக்கிய விடயமான இதனைக் கேட்டார். சுரேஷ் மிக முக்கியமான விடயமாக கைதிகள் விடயத்தைக் கேட்டார் என்று வெளியிடப் பட்டது. 
 
இதில் எது முக்கிய விடயம் என்று பார்த்தால் எல்லாமே முக்கியமான விடயங்கள் தாம்.  ஒன்றை விட்டு மற்றது மேலானதாக இல்லை. 
 
இவை எல்லாவற்றையும் விட  அரசில் ஏற்கனவே இணைந்து ள்ள ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கக் கூடாது அவர் ஊழல்கள் செய்த ஒருவர் என்று இவர்களில் ஒருவர் கேட்டார் எனவும்  அதற்கு அரசு தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது எனவும் - ஏனெனில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது எனவும் அதனால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப் பட்டதாக அந்த இணையத்தில் செய்தி வந்தது.
 
 செல்வம் அடைக்கலநாதன்தான் இந்தக் கேள்வியைக் கேட்டார் எனவும் செய்தி வந்தது. செல்வம்  அப்படி ஒரு கேள்வி கேட்டிருக்க  அவர் அரசியல், பேச்சு வார்த்தை, கூட்ட அனுபவங்கள் இல்லாதவர் அல்ல. ஊடகத்திற்கு செய்தி கொடுத்தவர் டெலோ இயக்கத்தின் மீது ஒரு காழ்ப்பை ஏற்படுத்த இப்படி ஒரு செய்தியைக் கொடுத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. தவிரவும் அத்தகைய ஒரு கேள்வியை அவர் கேட்டு இருந்தால் கூட தவிர்க்கப்பட வேண்டியவை எவை என்பது ஊடக மட்டத்தில் இருப்பவர்களுக்கு புரிந்திருக்க வேண்டும்.
 
நான் தொடர்ந்தும் வாசித்தேன்.. சம்பிக்க ரணவக்கவுக்கும் அமைச்சர் வழங்கப் படாது ஏனெனில் அவர் இனவாதம் பேசிய ஒருவர் - அதானால்  அவருக்கும் கொடுக்கக் கூடாது என்று யாரும் கேட்டார்களா என்று. அப்படிக் கேட்கப்படவில்லை. 
 
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கேள்வி கேட்கலாம் என்றுதலைவர்  சம்பந்தர் பணிதிருப்பாரோ என்னவோ  அப்படியொரு கேள்வியும் எழவில்லை. இன்னும் ஒருவர் போய் இருந்தால் கேட்டிருக்கக் கூடும். 
 
 சிலவேளை சிவாஜி லிங்கம் அண்ணர் போயிருந்தால்  இந்த ஊடகதிற்குச் செய்தி கொடுத்தவர் - இப்படி ஒரு கேள்வியை சிவாஜிலிங்கம் அவர்கள் கேட்டதாகவும் - அரசு தரப்பில் நிகழ் கால தமிழர் பிரச்சினை தொடர்பாக பேசுங்கள் என்று தயவாகக் கேட்கப்பட்டதாகவும் அந்த எக்ஸ்ஸ்  ரேரிப்போர்ர்டுக்குச் செய்தி கொடுத்திருக்கலாம் 
 
பேச்சுக்களின்  போது முக்கியவிடயங்கள் பேசப்படுவதுடன்  சாவகாசமாக வேறு சில விடயங்களும் கதைக்கப்படுவது வழக்கம். பேசப்பட்டு தீர்மானம் எடுப்பதையே  செய்தியாகக் கொடுக்க வேண்டும் .அங்கு  கதைப்பதெல்லாவற்றையும்  செய்தியாக்குவது இன்றைய காலத்தின் குறிப்பாக சிறுபான்மை மக்களின் ஒற்றுமை  அவசியப்பட்டுள்ள  வேளையில் தேவையானதல்ல. 
 
இப்படித்தான்  சந்திரிகா அம்மையார் காலத்தில் அரச தமிழ் ஊடகங்களின் செயற்பாடு அபிவிருத்தி பற்றிய குழு அமைக்கப்பட்டுக் கூட்டம் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் (நானும் அதில் சுயாதீன தொலைக் காட்சியின் தமிழ் நிகழ்ச்சி அதிகாரி என்ற வகையில் பங்குபற்றினேன்)  ஆலோசனைக் குழுவில் பங்கேற்ற மூத்த தமிழ் முற்போக்கு எழுத்தாளர்  ஒருவர் - தமது முக்கிய விடயங்களில் ஒன்றாக  அவற்றில் முதன்மையாக தினகரன் வாரமஞ்சரி ஆசிரியர் (அன்று) அனந்த்  பாலகிட்ணரை  மாற்றவேண்டும்  என்று  கேட்டார். அதற்கு சந்திரிகா அம்மையார் சொன்ன பதில் - தமிழ் ஊடகங்களில் உள்ள ஆளணி மற்றும் தொழிநுட்ப வசதிகள்   பற்றிப்  பேசவே இந்தக் கூட்டத் தொடர் ஒழுங்கு செய்யப்பட்டது . அவற்றைப் பற்றிப் பேசுவோம்  என்றார்! 
 
கூட்டமைப்புப் பிரதிநிதிகள் என்ன கோரிக்கைகளை முன்வைத்தனர் என்பதும் அவற்றுக்கு என்ன பதில்கள் சொல்லப்பட்டன என்பதுமே செய்தியாக வருதல் கூட்டமைப்பின் இன்றைய கால நிலைக்குப் பொருத்தமாகும் . இன்னார்   இந்தக் கேள்வியைக் கேட்டார்  என்று வகைப்படுத்திப் பிரசுரம் செய்வது பொருத்தமாகப் படவில்லை.
 
ஒரு காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கூட்டங்கள் அல்லது  ஜே ஆருடன் அல்லது வேறு யாருடனும் சந்திக்கும்போது இடம்பெறும் உரையாடல்கள் அல்லது காரசாரமான அல்லது சுவையான அம்சங்கள் தினபதியில் வருவதுண்டு. சிந்தாமணி கண்டீபத்தில் வருவதுண்டு. ஆனால் செய்தியாக வரும்போது  வெறும் செய்தியாகவும்  காண்டீபதில் வரும்போது தனிப்பட்ட உரையாடல்கள் வாதங்கள் போன்றனவும் வரும். இவற்றை உள்ளிருந்து கொடுத்தவர் தமது மனைவியின் பெயரில் தினபதியின் நிருபராகவும்  (சுகுணம் ஜோசெப் ) கூட்டணியின் சிரேஷ்ட உறுப்பினராகவும் இருந்த அமரர் ஜோசெப் பரராஜசிங்கம் என்பது உள்ளிருந்தவர்களுக்கே தெரிந்த விடயமாகும். 
 
ஆனால்  ஜோசெப் அண்ணர்  மரியாதையான முறையில் செய்திகளையும்  காண்டீபதிற்கு ஏற்றவகையில் சுவையான விடயங்களையும் கொடுத்தார். 
 
ஆனால் இன்று உள்ளே பல "டூப்பிளிகேட் "ஜோசேப்புக்கள்  தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினுள்  உள்ளனரா? என்று  வரும் செய்திகளைப் படிக்கும்போது உணரவேண்டியுள்ளது.
 
அப்படியாயின் அது கட்சிக்கு நல்லதல்ல என்பதை இக்கட்டுரையாளரின் ஊடக அரசியல் அனுபவத்தினூ டாகக்  .குறிப்பிட வேண்டியுள்ளது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவுக்கு இது சமர்ப்பணம்.
 
நியூசிலாந்தில் இருந்து வரதன்:-
 
  • கருத்துக்கள உறவுகள்

கறுமம் இதை எப்படி சரி செய்வது..??! எல்லாம் கடவுள் செயல்..??! மீண்டும் செல்வாவின் வார்த்தைகளோடு..?!! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

66359f26f6960c1631c8aba8deee6d82.jpg

தமிழ் மக்களிடம் நான்  கடமைப்பட்டுள்ளேன்  அவர்களின் பிரச்சினைகள்  எனக்கு நன்கு தெரியும் அவற்றைக் கொள்கை ரீதியில் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. 
அதன்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தமிழ்தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார். 

மேலும், வடக்கு , கிழக்கு மக்கள் தங்களுடைய வாக்குகளை இட்டு என்னை ஜனாதிபதியாக்கியுள்ளனர். நான் அவர்களிடம் கடன்பட்டுள்ளேன். அதற்கான நன்றிக்கடனை நான்  தீர்க்க வேண்டும். 

இங்குள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிவேன். அதனை கொள்கை ரீதியாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.

இன்றைய சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினரும் செயலாளருமான  மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=425613804913874636

  • கருத்துக்கள உறவுகள்
Sampanthan-300-seithycom.jpg

பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வைத் தாருங்கள் அதன் பிற்பாடு அமைச்சரவையில் அங்கம் வகிப்பது குறித்து கவனத்தில் கொள்ளலாம் என இன்று அரசாங்கத் தரப்புடன் நடந்த சந்திப்பில் இரா. சம்பந்தன் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

அமைச்சரவைக்கு வாருங்கள் நீங்கள் எங்களிடம் கேட்கத் தேவையில்லை நீங்களே நடைமுறைப்படுத்தலாம் என கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனிடம் அமைச்சர் ராஜித சேனாரட்ண விடுத்த கோரிக்கையை இரா.சம்பந்தன் நிராகரித்து விட்டார்.

இந்த நிலையில் பாராளுமன்ற அமர்வின் பின் தீர்வு குறித்த விடயங்களிலும் உரிய கவனம் செலுத்தப்பட உள்ளதாக பதில்கள் பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

http://seithy.com/breifNews.php?newsID=124508&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தபிக்குகள் பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருப்பாங்கள் எண்டுறியள்??? உள் வேலையள் ஏதோ பெரிசாய் நடக்குதெண்டு நினைக்கிறன்.... :D

புத்தபிக்குகள் பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருப்பாங்கள் எண்டுறியள்??? உள் வேலையள் ஏதோ பெரிசாய் நடக்குதெண்டு நினைக்கிறன்.... :D

மகிந்த அடுத்த தேர்தலோடு மீண்டும் பாரலுமன்றம் வர சந்தர்ப்பங்கள் உண்டு. அப்படி வந்தால் மகிந்தவுக்கு இருக்கும் ஒரே அரசியல் தெரிவு எந்தவொரு திர்வையும் எதிர்த்து தன்னை ஒரு சிங்கள தேசசியவாதியாக காட்டி ஆட்சியை மீண்டும் பிடிப்பதே.

பெட்டியை கட்டத்தான் இருக்கு . :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
புடிச்சு வைச்ச பிள்ளையாரிட்டை நேர்த்திக்கடன் வைக்கிறமாதிரி......
கொஞ்சப்பேர் அவங்களிட்டைப்போய் விண்ணப்பம் குடுத்துட்டு வந்திருக்கினமாம்.
ஏனெண்டால் அவங்களுக்கு  ஈழத்தமிழங்களின்ரை பிரச்சனை துண்டற தெரியாதேல்லே.... :lol:  :lol:  :lol:
இவையள் குடுத்த விண்ணப்பங்களுக்கு எப்ப ஓமெண்டுவினம் எண்டு டிப்புளோமா படிச்சவனுக்கும் தெரியாது.....
பள்ளிக்கூடம் போகாதவனுக்கும் தெரியாது... :D
 
 
ஏனெண்டால் ஈழத்தமிழர் பிரச்சனை உலகத்திலை தீர்க்கேலாத இடியாப்ப பிரச்சனை பாருங்கோ... :o
 
 
இவையும் கதைச்சுப்போட்டு வந்தினமாம்....
அவங்களும் பாப்பம்..பரிசீலிப்பம்....யோசிப்பம்.....எண்டு சொல்லி கலைச்சு விட்டிருக்கிறாங்கள்...ஆனால் ஒண்டுக்கும் மறுப்பு தெரிவிக்கேல்லை. :icon_mrgreen:
 
அடுத்த நாலு வருசத்துக்கு இது காணும் ராசா.. :icon_idea:

காலம் காலமாக இலங்கை ஜனாதிபதிகள் சொல்லும் குழுக்களை அமைத்து தமிழர்களுக்கு தேவையான உடனடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம் என்று சம்மந்தன் குழுவினரிடம் சொல்லி இருக்கின்றார் மைத்திரி..... அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை அந்த குழுக்கள் தமிழர் பிரச்சனைகளை ஆராய்ந்து இழுத்தடித்து கொண்டிருக்கும் என்பது தான் கடந்த கால அனுபவங்கள் ....

மேற்குலக நண்பேன்!

  • கருத்துக்கள உறவுகள்
ஆர். சம்பந்தனின் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த குழுவினர் இன்று பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடியுள்ளனர்.

இன்று பகல் 12 மணி முதல் ஒரு மணி 30 நிமிடம் வரையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

இந்த சந்திப்பு தொடர்பான விபரங்களுடன் இணைந்து கொள்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்

இந்த சந்திப்பின் போது, தேசிய பிரச்சனை தீர்வு குறித்து ஆராய குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்ததாக சுமந்திரன் குறிப்பிட்டார்.

இதேவேளை சுன்னாகத்தில் மின்சார உற்பத்திற்கு பயன்படுத்தப்படும் கழிவு எண்ணெய் நிலத்திற்குள் செலுத்தப்படுவதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இதனால் பல கிராமங்களுக்கான குடிநீருக்கு பாதிப்பு ஏற்படுகின்றமையும் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நல்லிணக்க அடிப்படையில் வடக்கு மாகாணத்திற்கு தமிழர் ஒருவரை ஆளுனராக நியமிப்பது குறித்து ஆலோசிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதன் போது கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களுக்கு பொது மன்னிப்பை வழங்குவது குறித்து ஆராயுமாறும் கூட்டமைப்பினர் கேட்டுக்கொண்டனர்.

இதன்போது கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறித்த பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சரவைக்குள் அங்கம் வகிப்பது சிறந்தது என சுட்டிக்காட்டினார்.

எனினும், அதற்கு பதிலளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், 1977 ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவும் இவ்வாறான ஒரு கோரிக்கையை முன்வைத்த போதும் தாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு சுமூகமான நிலையொன்று ஏற்படுத்தப்படும் போது அமைச்சரவைக்குள் இடம்பெறுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராயும் என்று சம்பந்தன் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2ம் இணைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் உள்ளிட்ட அரசாங்கத் தரப்புக்குமிடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது ஜனாதிபதித் தேர்தலின் போது வடகிழக்கு மக்கள் தமக்கு வாக்களித்தமைக்காக முதலில் மிக்க நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கூறினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த இரா. சம்பந்தன் அவர்கள், தமது பிரச்சினைகளுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் தங்கள் வாக்குகளை தங்களுக்கு அளித்துள்ளார்கள் என்றார்.

அத்துடன் இதுவரை காலமும் நாங்கள் மகிந்த ராஜபக்ச அவர்களின் அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். ஆயினும் அவர்கள் எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதன்படி, இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியமர அனுமதிக்க வேண்டும்.

நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின்கீழ் விடுதலை செய்யவேண்டும்.

காணாமற்போனவர்கள் விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடகிழக்கு ஆளுநர்கள், அரசாங்க அதிபர்கள் மற்றும் மாகாண அமைச்சின் செயலர்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது.

அத்துடன் ஒரு நல்லிணக்க சமிக்ஞையாக முதலில் வடக்கிற்காவது தமிழ் ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்றும், வவுனியா மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்களை மாற்றுவது தொடர்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், திருகோணமலையில் எட்டு வருட காலமாக இராணுவ அதிகாரி ஒருவர் அரச அதிபராக இருப்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

மற்றும் சுன்னாகம் மின்சார சபையினால் ஏற்பட்டிருக்கும் கழிவுஎண்ணெய் கசிவானது பல கிராமங்களை பாதித்திருப்பதுடன் அது வடக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டி, இதனால் மேலும் பல கிராமங்களும் பாதிக்கப்பட்டு வருவதும், குடிநீர் கெட்டுப்போய், குளிப்பதற்குக் கூட பயன்படுத்த முடியாத நிலைமையிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்கப்பட்டது.

அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கான பாஸ்நடைமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது. அத்துடன் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வு காலக்கிரமத்தில் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு அரச தரப்பினர் பதிலளிக்கையில்,

இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினை தொடர்பில் குழுவொன்றை அமைத்து இடங்களை இனங்கண்டு அவர்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விபரங்கள் திரட்டப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆளுநர்களை மாற்றுவதைப் பொறுத்தமட்டில் ஒன்பது ஆளுநர்களையும் மாற்றுவதற்கு உத்தேசித்துள்ளோம்.

ஆகவே ஆளுநர்கள் மாற்றத்தின் போது இந்த விடயமும் கவனத்திற் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர்கள் மாற்றம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும்.

வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கான பாஸ் நடைமுறையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் குழுவொன்றை நியமித்து அதனூடாக அவ்விடயம் முன்னெடுத்துச் செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNA_M_1212015_1.jpg

TNA_M_1212015_2.jpg

tamilwin.com

 

  • கருத்துக்கள உறவுகள்
வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கான பாஸ் நடைமுறை என்பது யாழ்செல்லும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற தமிழருக்கானது என நினைக்கிறேன். அது ஒரு அரசியல் சட்டமாகவோ அன்றிச் சாதாரணச் சட்டத்தில் இருப்பதாகவும் தெரியவில்லை. கோத்தபாயாவின் தன்னிச்சையான நடைமுறை அது. அதனைத் தொலைபேசியிலேயே ஒரு சொல்லில் சனாதிபதி நீக்கிவிடலாம். இதனை நீக்குவதற்கே நடவடிக்கை எடுக்கப்படும் என்பவருக்கு.... ?  இலங்கையில் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சனையைத் தீர்க்கும் நடவடிக்கை எடுக்க, அவருடைய , எஞ்சியுள்ள ஆயுள்காலம் தன்னும் போதுமா..... ???? சம்பந்தன் கூட்டணியின் காதில் மட்டுமல்ல, கண் மூக்கில் பூச்சுற்றினாலும் அவர்கள் புளாங்கிதமடையும் நிலையே காணப்படுகிறது.  
 

Edited by Paanch

மீள்குடியேற்றம் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு விசேட குழு அமைக்க முடிவு

TNA%20455dg55.jpg

 

 

தேசிய அர­சாங்கம் அமை­யப்­பெற்று சரி­யான பாதையில் பய­ணிக்­கு­மானால் அதில் இணை­வது குறித்து தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு ஆராயும். ஆனால் அமைச்­சுப்­ப­த­விகளை ஏற்­கப்­போ­வ­தில்­லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறு­தி­படத் தெரி­வித்­துள்­ளது.

தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­பது குறித்த செயற்­பா­டு­களை கையாள்­வ­தற்கு விரைவில் விசேட குழு­வொன்று நிய­மிக்கப்­ப­ டவேண்டுமென்றும் கூட்­ட­மைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அர­சாங்­கத்தில் வடக்கு, கிழக்கில் அமைச்­சர்­க­ளா­கவும், அர­சியல் பிர­தி­நி­தி­க­ளா­கவும் பத­வி­வ­கித்து தமிழர் விரோதச் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­ட­வர்­களை புதிய அர­சாங்­கத்தில் இணைத்­துக்­கொள்­ளக்­கூ­டாது எனவும் வலி­யு­றுத்­தியுள்ள தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு, சொந்த நிலங்­களில் மீள்­கு­டி­யேற்றம், நீண்­ட­கா­ல­மாக தடுப்பில் உள்­ள­வர்­களின் விடு­தலை, வடக்கு கிழக்கு மாக­ணங்­களில் ஆளு­நர்கள், பிர­தம செய­லா­ளர்கள், அர­சாங்க அதி­பர்களின் இட மாற்றம், மாவட்ட ஒருங்­கி­ணைப்பு குழுக்­க­ளுக்கு முத­லை­மைச்சர் மற்றும் அப்­பி­ர­தே­சங்­களில் உள்ள சிரேஷ் அர­சியல் பிர­தி­நிதி ஆகி­யோரைக் கொண்ட இணைத்­த­லைமை நிய­மனம் உள்­ளிட்ட விடங்கள் தொடர்­பா­கவும் விரி­வாக பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளது.

 

புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்­கத்­த­ரப்­பி­ன­ருக்கும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புக்கும் இடை­யி­லான விசேட சந்­திப்­பொன்று நேற்று நண்­பகல் 12.00மணிக்கு ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடைபெற்றது.

ஒன்­றரை மணித்­தி­யா­லங்கள் வரை நீடித்த இச்­சந்­திப்பில் அர­சாங்­கத்­த­ரப்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ராஜித சேனா­ரட்ன, ஜனா­தி­பதி செய­லாளர் பீ.பி.அபேகோன் பாது­காப்புச் செய­லாளர் பி.எம்.யு.டி. பஸ்­நா­யக்க ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

 

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மையில் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சேனா­தி­ராஜா, ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலை­வரும் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஸ் பிரே­மச்­சந்­திரன், ரெலோ அமைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ.சுமந்­திரன், சிவ­சக்தி ஆனந்தன் மற்றும் புளொட் அமைப்பின் தலை­வரும் வட­மா­கா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான தர்ம­லிங்கம் சித்­தார்த்தன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்­கேற்­றி­ருந்­தனர்.

 

குறித்த சந்­திப்பு தொடர்­பாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

இன்­றை­ய­தினம்(நேற்று) புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்­றதன் பின்னர் அவர் தலை­மை­யி­லான அர­சாங்­கத்­துடன் முதற் சந்­திப்பில் நாம் கலந்து கொண்­டி­ருந்தோம். இதன் போது பொது­மக்­களின் பிரச்­சி­னைகள் உள்­ளிட்ட முக்­கிய விடங்கள் குறித்து பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருந்தோம்.

 

சொந்த நிலங்­களில் மீள்­கு­டி­யேற்றம்

குறிப்­பாக கடந்த 30வரு­டங்­க­ளுக்கும் மேலாக வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் தமது சொந்தக் காணி­களில் மீள்­கு­டி­யே­ற­மு­டி­யாத நிலையில் இருக்­கின்­றார்கள். தேசிய பாது­காப்பு என்ற அடிப்­ப­டையில் தேவைக்கு அதி­க­மா­க­வுள்ள இரா­ணு­வத்­தினர் இம்­மக்­களின் காணி­களை கைய­கப்­ப­டுத்­தி­யுள்­ளனர். உத­ரா­ண­மாக யாழ்ப்­பா­ணத்தில் வலி.வடக்கு, கிழக்­கு­மா­கா­ணத்தில் சம்பூர், வன்னிப் பிர­தே­சத்தை எடுத்­துக்­கொண்டால் பர­விப்­பாஞ்சான், உள்­ளிட்ட பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணிகள் கைய­ளிக்­கப்­ப­டா­தி­ருக்­கின்­றன. இதனால் அவர்கள் தமது சொந்த நிலங்­களில் மீள்­கு­டி­யே­ற­மு­டி­யா­த­நி­லையில் முகாம்­களில் அகதி வாழ்வை தொடர்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்த நிலை தொடர்ந்தும் நீடிக்­காது முற்­றுப்­புள்ளி வைக்­கப்­ப­ட­வேண்டும் என நாம் எடுத்துக் கூறினோம்.

 

அதன்­போது யுத்தம் மற்றும் அசா­தா­ரண நிலை­மை­களால் இடம்­பெ­யர்ந்­துள்ள தமிழ், முஸ்லிம், சிங்­கள மக்கள் உள்­ளிட்ட அனை­வரும் அவர்­க­ளுடை சொந்த நிலங்­களில் மீள்­கு­டி­யேற்­றப்­ப­டு­வதை கொள்கை ரீதி­யாக அர­சாங்­கத்­த­ரப்­பினர் ஏற்­றுக்­கொண்­டனர். அத்­துடன் அம்­மக்கள் மீளவும் மீள்­கு­டி­யே­று­வ­தற்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்­காக சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­னரை உள்­வாங்­கி­ய­தான விசேட குழு­வொன்று அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.

 

நீண்­ட­கா­ல­மாக தடுப்பில் உள்­ள­வர்­களின் விடு­தலை

யுத்­தத்தில் நேர­டி­யாக தொடர்­பு­டை­ய­வர்கள் சுதந்­தி­ர­மாக நட­மா­டிக்­கொண்­டி­ருக்­கையில் சாத­ர­ண­மா­ன­வர்கள் நீண்­ட­கா­ல­மாக தடுப்­புக்­களில் தடுத்து கைக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் அர­சியல் நோக்­கங்­க­ளுக்­கா­கவும் , சந்­தே­கத்தின் பேரிலும் பலர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­க­ளுக்கு சமூ­கத்­துடன் இணை­வ­தற்கு ஒரு சந்­தர்ப்­ப­ம­ளிக்கும் வகையில் பொது மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தி­ய­துடன் கடந்த காலத்தில் ஜே.பி.யின் இரண்டு கிளர்ச்­சி­களின் போது கைது செய்­யப்­பட்­ட­வர்கள் பிற்­கா­லத்தில் பொது­மன்­னிப்­ப­ளித்த வர­லா­று­களும் இந்த நாட்டில் காணப்­ப­டு­கின்­றன என்­ப­தையும் எடுத்துக் கூறினோம்.

 

வடக்கு கிழக்கு மாகா­ணங்­களின் நிரு­வாகம்

அதே­நேரம் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் இரா­ணு­வத்தின் கட­மை­யாற்றிய அதி­கா­ரிகள் ஆளு­நர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்கள் மாற்­றப்­ப­ட­வேண்டும். சிவில் சமூ­கத்­ததைச் சார்ந்­த­வர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும். மேலும் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் காணப்­படும் அனைத்து மாவட்­டங்­களில் பதவி வகிக்கும் சிங்கள அர­சாங்க அதி­பர்­களும் இட­மாற்­றப்­ப­ட­வேண்டும். அத்­துடன் கடந்த அர­சாங்­கத்தில் மக்­களின் அன்­றாட செயற்­பா­டு­களை கையாள்­வ­தற்­காக அரச திணைக்­க­ளங்கள் மற்றும் நிறு­வ­னங்­களில் நிய­மிக்­கப்­பட்டு சரி­யான முறையில் செயற்­ப­டாத அதி­கா­ரி­களும் இட­மாற்­றப்­ப­ட­வேண்டும் என்றும் நாம் கோரினோம்.

 

ஒருங்­கி­ணைப்­புக்­குழு

வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் உள்ள மாவட்ட ஒருங்­கி­ணைப்பு குழுக்­க­ளுக்கு அந்­தந்த மாகா­ணங்­களைச் சேர்ந்த முத­ல­மைச்­ச­ரையும் அம்­மா­கா­ணங்­க­ளி­லுள்ள மாவட்­டங்­களில் காணப்­படும் சிரேஷ்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரை இணைத்­த­லை­வர்­க­ளாக நிய­மிக்க வேண்டும் என வலி­யு­றுத்­தினோம் என்றார்.

 

இதே­வேளை குறித்த சந்­திப்பு தொடர்­பாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் வௌிவி­வ­காரச் செய­லா­ள­ரு­மான எம்.ஏ சுமந்­திரன் கூறு­கையில்,

நாம் சொந்த நிலங்­களில் மீள்­கு­டி­யேற்றம், நீண்­ட­கா­ல­மாக தடுப்பில் உள்­ள­வர்­களின் விடு­தலை, வடக்கு கிழக்கு மாகாண நிரு­வாகம், ஒருங்­கி­ணைப்­புக்­குழு உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் ஆராய்ந்­தி­ருந்தோம்.

 

தேசிய அர­சாங்கம்

அதே­நேரம் குறித்த சந்­திப்பில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை தேசிய அர­சாங்­கத்தில் இணைந்து கொள்­ளு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. அவ்­வி­டயம் தொடர்­பாக எமது நிலைப்­பாட்டை அவர்­க­ளி­டத்தில் தௌிவாக குறிப்­பிட்டோம். அதா­வது தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு அமைச்­சுப்­ப­த­வியை ஏற்­க­மாட்­டது என தீர்­மா­னித்­துள்­ளது. அத்­துடன் தேசிய அர­சாங்­க­மொன்று அமை­யப்­பெற்று அதன் செயற்­பா­டுகள் சரியான பதையில் பயணிக்குமானால் அதில் இணைவது தொடர்பில் நாம் உரிய நேரத்தில் ஆராயந்து பரிசீலனை மேற்கொள்வோம். இன்றைய நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடனடியாக இணைந்து கொள்ளும் நிலையில் இல்லை என எடுத்துக் கூறினோம்.

 

தமிழர் விரோதிகளை இணைக்க கூடாது

அதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைச்சர்களாவும் அரசியல் பிரதிநிதிகளா கவும் பதவிகளை வகித்து தமிழர் விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை தற்போதைய அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளக்கூடாது என்பதை மிகவும் ஆணித்தனமாக வலியுறுத்தினோம்.

 

இனப்பிரச்சினை தீர்வு

மேலும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை விரைவில் பெற்றுக்கொள் வதற்கான எமது நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தியதுடன் தீர்வு நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இருதரப்பினரையும் உள்ளடக்கிய விசேட குழுவொன்றையும் அமைக்குமாறு நாம் கோரிக்கை விடுத்தோம் அதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது என்றார்.

 

இதேவேளை யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் குடிநீர் மாசடைந்துவருவது தொடர்பில் எடுத்துக்கூறி இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கூட்டமைப்பினர் கோரியுள்ளனர். இந்த விடயம் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

 

http://virakesari.lk/articles/2015/01/13/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81

Edited by Athavan CH

வரவேற்க  வேண்டியது ..குற்றம் குறை பிடிக்க ஒரு  குறுப் வெளிநாட்டில்  இருக்கும்  அதை  எல்லாம் காதில் எடுக்காது  உங்களுக்கு  என்ன  தேவையோ  அதை  செய்யுங்கள் கூட்டமைப்பே .. :lol:

 

நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின்கீழ் விடுதலை செய்யவேண்டும்.

காணாமற்போனவர்கள் விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களை பொறுத்தவரை இவர்கள் ஆயுதமற்ற புலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களை பொறுத்தவரை இவர்கள் ஆயுதமற்ற புலிகள்

 

எனக்கு அப்படித் தோன்றவில்லை புத்தன் அவர்களே! இவர்கள் பலிகளாகத் தெரிகிறார்கள். 

எதுவும் நல்லது  நடக்குதே இல்லையோ அப்படி நடந்திடும் என்று பலரின் வயிற்றில் புளியை மட்டும் கரைக்கின்றார்கள் .. :lol:

வரவேற்க  வேண்டியது ..குற்றம் குறை பிடிக்க ஒரு  குறுப் வெளிநாட்டில்  இருக்கும்  அதை  எல்லாம் காதில் எடுக்காது  உங்களுக்கு  என்ன  தேவையோ  அதை  செய்யுங்கள் கூட்டமைப்பே .. :lol:

 

 

சும்மா இருங்க அஞ்சரன். ஏற்கனவே எமது நாட்டு அரசியல்வாதிகள் தங்களுக்கு என்ன தேவையோ அதை தான் செய்வார்கள். அதுக்குள்ள நீங்களும் எண்ணெய் ஊற்றுறீங்க. தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல்  அபிலாசைகளை நிறைவேற்றுமாறு கேளுங்கள். அதற்கான பலத்தையே மக்கள் அவர்களுக்கு அளித்துள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒமோம் ஆட்டிலறியும், தாங்கியும், சர்வதேச ஆதரவும் ஆயிரமாயிரம் நன்கு பயிற்றப்பட்ட தீரர்களும் கூட்டமைப்பு பின்னால் நிக்கினம், இவை சும்மா பிசுகோத்து விசயத்துகெல்லாம் மைத்திரியிட்ட கெஞ்சீனம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.