Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு பேயை எதிர்த்து ஐந்து பேயை ஆதரிக்கிறார்கள்! காசி ஆனந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லங்கையில் நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலும்  முடிவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இருண்டகாலம் ஒன்றினுள் தள்ளியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தவறான நிலைப்பாட்டின் அணுகுமுறையின் விளைவே இது!

நிகழ்ந்து முடிந்த இலங்கைத் தேர்தலில் மகிந்த ராஜபக்‌ஷேவை எதிர்த்து நின்றவர்கள் யார்?

 

p8.jpg

 

மைத்திரிபால சிறீசேன யார்? முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்த கடைசி நான்கு நாட்கள் மகிந்தவின் குறுங்காலப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர். பொன்சேகா யார்? ஒன்றரை லட்சம் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள வெறிப்படைத் தளபதி. சந்திரிகா குமாரதுங்கா யார்? சிங்களப் படைவெறியர்கள் கிரிசாந்தியைப் படுகொலை செய்த காலத்தில் கோனேஸ்வரியின் பெண்குறியில் வெடிகுண்டைச் செருகி வெடிக்கச் செய்தபோது சிங்கள அரசியாக இருந்தவர். ரணில் விக்கிரமசிங்கே யார்? சிங்களர் குடியேற்றத்தைத் தொடங்கிய இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்காவின் கட்சிக்காரர். சிங்களச் சிறைக் காவலர்களைக்கொண்டு குட்டிமணியின் கண்களைப் பிடுங்கி எடுத்த ஜெயவர்த்தனாவின் வழி வந்தவர். ஜனதா விழுக்தி பெரமுனாவினர் யார்? வடக்கு  கிழக்கு இணைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துத் தமிழீழத் தாயகத்தை இரண்டாக உடைத்தவர்கள். இவர்களைத்தான் ஆதரித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. ஒரு பேயரை எதிர்த்து ஐந்து பேய்களை ஆதரித்தார்கள்.

 

 

தேர்தல் பரப்புரையில் தமிழர்களுக்குக் கூட்டாட்சி (சமஷ்டி) தரமாட்டேன் என்றார் சிறீசேன. அண்மையில் சென்னை வந்த வடமாகாண முதலமைச்சர் விக்னேசுவரன், ''ஒற்றையாட்சியின் கீழ் தமிழர் சிக்கலைத் தீர்க்கமுடியாது'' என்றார். அப்படியானால், எந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காகச் சிறீசேனவை ஆதரித்தீர்கள்? தமிழீழத்தில் குடி கொண்டுள்ள சிங்களப் படைகளைத் திரும்பப் பெறமாட்டேன் என்று பரப்புரை செய்தவர் சிறீசேன. சிங்களப் படையின் பிடியில் தமிழீழ மக்கள் அன்றாடம் கொடிய வதைக்குள்ளாகிறார்கள் என்று சென்னை வந்த விக்னேசுவரன் சொன்னார். அப்படியானால், எதற்காக சிறீசேனவை ஆதரித்தீர்கள்?

 

சிறீசேனவை ஆதரிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தேர்தல் காலத்தில் சொன்ன விளக்கம் இன்னும் சினமூட்டுவதாய் இருக்கிறது. 'மகிந்த ராஜபக்‌ஷே சர்வாதிகாரி. ஒரு ஜனநாயகச் சூழலில்தான் தமிழர் சிக்கலைத் தீர்க்கமுடியும். எனவேதான் சிறீசேன மைத்திரிபாலவை ஆதரிக்கிறோம்’ என்றார் சம்பந்தர்.

p9.jpg

ஆங்கிலேயன் இலங்கையை விட்டு வெளியேறிய பின்பு கடந்த 66 ஆண்டுகளாய் குடியரசுத் தலைவர்களாகவும் பிரதமர்களாகவும் வந்த அத்தனை சிங்களவர்களும் தங்களை ஜனநாயகவாதிகள் என்றுதான் சொல்லிக்கொண்டார்கள். ஆனால் நடந்தது என்ன? இதே ஜனநாயகவாதிகள்தான் 3 லட்சம் தமிழர்களைப் படுகொலை செய்தார்கள்.

 

 

13 லட்சம் தமிழர்களை இலங்கைக்கு வெளியே ஏதிலிகளாக விரட்டி அடித்தார்கள். ஒரு லட்சம் தமிழ்ப் பெண்களை விதவைகளாக்கினார்கள். 20 ஆயிரம் தமிழ்ப் பெண்களைப் பாலியல் வதைக்கு உள்ளாக்கினார்கள். 2 லட்சம் தமிழர் வீடுகளை இடித்துத் தள்ளினார்கள். 2,076 இந்துக் கோயில்களைக் குண்டுவீசித் தகர்த்தார்கள். 66 ஆண்டுகளாக ஈழத்தில் நடைபெறும் சிங்கள ஜனநாயகம் பற்றி அறியமாட்டீர்களா என்ன? சிறீசேன மைத்திரிபாலவை எப்படி நீங்கள் சனநாயகவாதி ஆக்கிக்கொண்டீர்கள்?

 

முள்ளிவாய்க்கால் விடுதலைப் போரில் மாவீரர்களான 10,000 விடுதலைப்புலிகளும் இன்னுயிர் நீத்த ஒன்றரை லட்சம் தமிழர்களும் தங்கள் உயிரீகத்தால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையம் வரை கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

 

p9a.jpgநீங்கள் இன்று செய்திருப்பது என்ன? 'ஒரு புதிய அரசு வந்திருக்கிறது. பொறுத்திருந்துதான் இனி நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று அமெரிக்கா  பிரிட்டன் போன்ற நாடுகள் கருதும் நிலையை உருவாக்கியிருக்கிறீர்கள். ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் 'மார்ச் மாதத் தீர்ப்பு’ என்ன ஆகுமோ என்ற கவலை உலகத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

 

தலைவர் வைகோ பிரெசில்ஸில் முதல் தடவையாக முன்வைத்த, பின்னால் புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மையாரால் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட உலகத் தமிழீழ மக்களிடையேயான தமிழீழ விடுதலைக் கருத்துக் கணிப்புக் கோரிக்கை என்னாகுமோ என்னும் தளர்வுநிலை தோன்றியுள்ளது.

 

இலங்கை அரசுக்கும் இந்தியாவுக்கும் இடையே சீனா குறித்து நிலவிவந்த முறுகல் நிலையைச் சிறீசேன அரசு குறுகிய காலத்துக்குத் தளர்த்துவதுபோல் நடித்தால், மறைமுக சீன உறவை வைத்துக்கொண்டு நாடகமாடினால், தமிழீழ மக்களைவிட்டு இன்னும் கூடுதலாக இந்திய அரசு விலகி நிற்க நேருமோ என்ற கவலை வேறு தமிழீழ உணர்வாளர்களிடையே குடி கொண்டிருக்கிறது.

 

எல்லாவற்றுக்கும் மேலாக முள்ளிவாய்க்காலில் மூண்டு ஈழத்தமிழர் நெஞ்சங்களில் எரிந்துகொண்டிருந்த விடுதலைக் கனல் 'மகிந்த ராஜபக்‌ஷேவைத் தண்டித்தாயிற்று’ என்ற நிறைவோடு தணிந்து போகுமோ என்னும் ஏக்கத்தையும் இந்தத் தேர்தல் முடிவு உருவாக்கி இருக்கிறது. நீட்டி நிமிர்த்தாமல் சுருக்கமாகச் சொல்வதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அணுகுமுறை தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்திருக்கிறது.

தமிழீழ விடுதலை கேட்பது இலங்கை அரசியல் அமைப்புக்கு எதிரானதாக தேசத் துரோகமாக இருக்கலாம். ஆனால்  தமிழீழத் தாயகத்தை இலங்கை அரசியல் அமைப்பில் இடம்பெறச் செய்வதைத் தேர்தலின்போது தமிழீழ மக்களின் கோரிக்கையாக முன்வைத்துத் தேர்தலில் தனியாகக் களம் இறங்கியிருந்தால் அது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு கூறாக, தொடர்ச்சியாக இருந்திருக்கும். தமிழர்களை வடக்கு,  கிழக்கு என ஓரிரு மாகாணங்களாகப் பார்க்கும் கொடுமைக்கு எதிராக  மாகாணங்கள் அல்ல.. அவர்கள் ஒரு 'தாயகம்’ என்னும் உண்மையை நிலைநாட்ட உலகறியச் செய்யும் வாய்ப்பாக அது அமைந்திருக்கும்.

 

இனி என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோடு பேச்சு வார்த்தை உடன்படிக்கை என்று காலம் இழுத்தடிக்கப்படலாம். அப்படி ஏதேனும் ஓர் உடன்படிக்கை ஏற்படுமானால் அந்த உடன்படிக்கையை ஒரு குப்பைக்கூடை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கலாம். உப்புச் சப்பில்லாத ராஜீவ்  ஜெயவர்த்தனா உடன்படிக்கைகூட 27 ஆண்டுகளாக இழுபடுவதையும் சிங்கள இனவெறி அரசின் கால்களில் மிதிபடுவதையும்தானே பார்க்கிறோம்.

 

எது எவ்வாறாயினும் இந்தத் தளர்வுநிலை, தமிழர்களே தங்கள் தலையில் மண்ணைப் போட்டுக்கொண்டதன் விளைவான இந்தத் தொய்வு நிலை,  தமிழர்களின் ஏக்கப் பெருமூச்சு இவை எதுவும் நிலையானவை அல்ல. எங்கோ ஒரு மூலையில் தமிழீழ விடுதலை நெருப்பு இன்னும்தான் எரிந்துகொண்டிருக்கிறது என்பதை உறுதியாக நம்புங்கள்.

 

 

முள்ளிவாய்க்காலுக்கு முன்பு பிரபாகரனைத் தலைவர் என்று ஏற்றுக்கொண்ட சம்பந்தர் இன்று பிரபாகரனைச் சர்வாதிகாரி (ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் 31.12.2014) என்று வர்ணிக்கிறார்.

எல்லாம் முடிந்ததென அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் எதுவும் முடிந்துவிடவில்லை!

 

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=102886

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஒரு பேயை எதிர்த்து ஐந்து பேயை ஆதரிக்கிறார்கள்! காசி ஆனந்தன்

 

 

மிக மிக பொருத்தமான வசனம். :D

இவர் தலைவர் வன்னிக்கு அழைத்தபோதும் செல்லாமல், தமிழ்நாட்டில் இருந்தார்... இந்திய அரசிடமிருந்து எதைச் சாதித்தார்?

எல்லாம் பேய்கள்தான்.. மக்கள் விரும்புவது சுவாசிக்க சிறிது அவகாசம்...
அதைக்கூட இவரால் புரிந்து கொள்ள இயலாமல், இவர் இருக்கும் இருப்பு இறுக்குகிறது!

ஆள்  பேய்காய்  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

விசில் குஞ்சுகளுக்கு ஏற்ற ஆள். ஒரு நாட்டுப்பற்றாளர் இல்லை இல்லை ஒரு மாமனிதர்! :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை ஒற்றுமைப்படுத்துவது நாய்வாலை நிமிர்த்துவதற்கு ஒப்பானது என்ற கருத்து பலரிடமும் நிலவும் வேளையிலும். அதனை முறியடித்து தமிழர் அனைவரையும் மிகப் பலமான நிலையில் இன்று ஒற்றுமைப்படுத்தியுள்ள சக்தி ஒன்று உள்ளது. அதுதான் விரக்தி. யார் எதனைச் செய்ய முயன்றாலும் அச் செயல்களை  தன்மூலமாகவே பார்க்க வைக்கும் அதீத சக்தியாக விரக்தி உள்ளது.  :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அடேங்கப்பா சிங்களவன் எதை செய்தாலும் மன்னிப்போம் மறப்போம் கை கோர்ப்போம்.
 
ஆனால் தமிழீழம் மலர்க எண்டு சொன்வர்களை  மன்னிக்கமாட்டோம்...தூற்றுவோம்...அழியும் வரை தூற்றுவோம்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இன்றைய ஆட்சியாளரின் பின்னணிகளை தெரிந்தும் எம்மவர்கள் அவர்களுக்கு வக்காளத்து வாங்குகின்றார்கள். 
அண்ணை எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்பது இங்கே தெரிகின்றது.
  • கருத்துக்கள உறவுகள்

... அதுதான் விரக்தி. யார் எதனைச் செய்ய முயன்றாலும் அச் செயல்களை  தன்மூலமாகவே பார்க்க வைக்கும் அதீத சக்தியாக விரக்தி உள்ளது.  :o

 

திக்கற்ற கையறு நிலை. சிறிதேனும் ஒற்றுமையுடன் அவதானமாக இருந்திருக்கலாம்.

 

இருளுக்குப்பின் வெளிச்சம் வராமலா போய்விடும்? என்ற நம்பிக்கையில் இருக்கவேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்னர் கூறிய விடயம்தான்.

90-களின் பிரேமதாச அரசுடன் பேச்சுவார்த்தை முறிவடைந்தவுடன் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையில் போர் மூண்டது.

அப்போது விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையாவிடம் கெஞ்சிக் கூத்தாடி இந்தியாவுக்கு தப்பியோடியவர்தான் இந்த காசி ஆனந்தன்.

இதே காசி ஆனந்தன் தாயகப் பிரதேசங்களில் பல இளைஞர்களை புறப்படு தமிழா போருக்கு என்று எழுச்சி வசனம் பேசியவர்.

தனது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்.

இந்த இடத்தில் புதுவை இரத்தினதுரை போற்றக்கூடிய ஒருவர். அவர் மக்களோடு மக்களாக இருந்த கவிஞரும் கூட. தனது மகளை போராட்டத்தில் சிறிது காலம் பணியாற்ற வைத்தவர். இறுதிப் போரின் பின்னர் அவரது நிலையினை அறிய இன்றும் அவரது குடும்பம் போராடிக் கொண்டு இருக்கின்றது.

ராஜீவ் கொலைக்குப் பின்னரும் தமிழ்நாட்டில் நின்று பிடிக்கின்றார் என்றால் அது காசி ஆனந்தனுக்குத்தான் வெளிச்சம்.

இந்த சந்தேகம் அங்கு உள்ள தமிழக உணர்வாளர்களுக்கும் நியாயமாகவே எழுந்து இருக்கின்றது.

'ஒரு பேயை எதிர்த்து ஐந்து பேயை ஆதரிக்கின்றார்கள்' என ஜூனியர் விகடனில் அழகு தமிழில் கூறுகின்றார்.

வடக்கு - கிழக்கு மக்கள் என்னதான் செய்ய வேண்டும் என இவர் போன்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்?

'மாற்றம் என்பது மானிட தத்துவம்' இது கண்ணதாசன் கூறியது.

காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாம் மாற்றமடையாமல் விட்டால் காலம் எம்மை அழித்துவிடும்.

இதுதான் விடுதலைப் புலிகளுக்கும் ஏற்பட்டது.

செப். 11-க்கு பின்னைய காலம் போராட்ட அமைப்புக்களுக்கு ஏற்புடைய காலமாக இருக்கவில்லை.

ஆனால், விடுதலைப் புலிகளின் தலைவர் அன்டன் பாலசிங்கம் உள்ளிட்ட எத்தனையோ பேரின் ஆலோசனையினை செவிமடுக்கவில்லை. அதன் பலனை அவர் அனுபவித்துவிட்டார்.

ஜனவரி 8 இல் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் அலரி மாளிகையினை விட்டு மகிந்தவினை வெளியேற்ற முடிந்த அமெரிக்கா மற்றும் இந்தியாவால் அன்று பெருந்தொகையான தமிழர்கள் மடிந்து கொண்டு இருந்த போது போரை நிறுத்துமாறு ஏன் கேட்க முடியாமல் போய் இருந்தது? (இவ்வளவுக்கும் புலத்தில் அனைத்து தமிழர்களும் வீதியில் இறங்கி போராடினார்கள்)

ஏனெனில் விடுதலைப் புலிகள் அனைத்துலக சமூகத்தின் ஆலோசனையினை கேட்கவும் இல்லை. கேட்க விரும்பவும் இல்லை.

உண்மையில் அன்று நினைத்து இருந்தால் அனைத்துலக சமூகத்தால் இறுதிப் போரை நிறுத்தி இருக்க முடியும்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

போரை நிறுத்தி.. பிறகு என்ன செய்திருக்கலாம் நிர்மலன்??

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தமிழ்  மக்களை ஏமாற்ற  ஆறாவது பேயாகக் கூட்டமைப்பு மற்றைய  ஐந்து பேய்களுடன் கூட்டு வைத்துள்ளது.

காலம் செல்லச் செல்ல இந்த சனநாயகவாதிகளின் முகமூடிகள் கழன்று விழும்.  அப்போதும் தமிழர் தெரிந்தோ தெரியாமலோ ஒன்று சேர்ந்து இன்று எடுத்த முடிவை அன்றும் அவர்களை வீழ்த்த எடுக்க வேண்டும் என்பதே அவா. அனந்தி போன்றவர்களின் தள்ளிவைப்பால்   கூத்தாணிக் கூத்தாடிகளின் முகமூடிகள் கழன்று விழத் தொடங்கிவிட்டது.  மற்றவை விரைவில்.

ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்த பிரேரணை இலங்கையை தம் பக்கம் இழுக்கவும் மற்றது மகிந்தவை அகற்றவுமே . 2009 இல் புலிகளை அகற்ற உதவி செய்த மாதிரி . 
உண்மையை சொல்லின் அமெரிக்காவின் நோக்கம் என்னவோ அதனை தான் செய்கிறார்கள் . 
 
மிக பலமான நிலையில் இருந்த எங்கள் ராணுவ பலம் அதுதான் எங்கள் புலிகளை எப்படி தடை செய்து தனிமை படுத்தி , பிளவுற வைத்து இறுதியில் எவ்வளவு மக்கள் இறந்தாலும் பரவாயில்லை ஆனால் புலிகள் முற்றாக அழியவேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள் என்பதை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும் .
 
இப்ப உள்ள நிலையில் வீராப்பு வசனங்கள் பேசுவதை விட்டுட்டு நடப்பதை செய்ய வேண்டும் .
 
முதலில் இப்படி வசனங்களை கதைப்பதை விட்டுட்டு ஏதிலிகளான மக்கள் , நிராதவரான போராளிகள் மற்றும் காயப்பட்ட போராளிகள் , பெண் போராளிகள் , இவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கோ . இப்ப கூட்டமைப்பினர் செல்லும் பாதை சரியானதே .
 
ஆனால் சிங்களம் மீளவும் ஏமாற்றினால் உலக நாடுகளுகளின் உதவியுடன் தான் நாம் ஏதையும் செய்ய முடியும் .அதனால் தான் கூடமைப்பினர் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆலோசனைகளை கேட்கிறார்கள்.
 
இப்ப உள்ள நிலையில் வேற எதுவும் சாத்தியப்படாது.
  • கருத்துக்கள உறவுகள்

போரை நிறுத்தி.. பிறகு என்ன செய்திருக்கலாம் நிர்மலன்??

 
 
போரை நிறுத்தியவுடன் .......
அவுஸ்டேலியா வில் இருந்து ஒரு கால் வந்திருக்கும்.
 
ஒரு மாறுதலாக மக்களை மாற்றி இருக்கலாம்.
வடக்கில் சிங்களவரும் ...
தெற்கில் தமிழரும் மாறியிருந்தால் இனப்பிரச்சனை எளிதாக முடிந்திருக்கும். 
 
புலிகள் கேட்டிருப்பார்களா ?? 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
காசி ஆனந்தனின் ஆரம்பகால வரலாறுகள் தெரிந்தவர்கள் ஒருகாலமும் அவரை தூற்றமாட்டார்கள். :(
 
அவரின் இன்றைய வாழ்க்கை நடைமுறை  
எமக்கு தேவையில்லாத பிரச்சனை.  :icon_idea:
 
ஒரு காலகட்டத்தில்......
ஈழத்தமிழர் உரிமைகள் பிரச்சனையையொட்டி இவர் ஒரு மாபெரும் கதாநாயகன்.
தமிழர் உரிமைகளுக்காக சிங்களவர்களின் சித்திரவதைகளை அனுபவித்து இன்றும் உயிரோடு இருக்கும் ஒரு உறவு.
சிங்களவனின் அடிமட்ட புத்திகளை தெரியாதவர்கள் இவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
உரிமைக்காக உண்ணாவிரதமிருந்து உயிர் துறக்கும் நிலையில் இருந்த இவரிடம் கேட்டுப்பாருங்கள் சிங்களவனின் மனோநிலைகள் பற்றி.... :icon_idea:  :icon_idea:  :icon_idea:
 
தொடர்வீர்களானால் தொடரும்....
  • கருத்துக்கள உறவுகள்

 

காசி ஆனந்தனின் ஆரம்பகால வரலாறுகள் தெரிந்தவர்கள் ஒருகாலமும் அவரை தூற்றமாட்டார்கள். :(
 
அவரின் இன்றைய வாழ்க்கை நடைமுறை  
எமக்கு தேவையில்லாத பிரச்சனை.  :icon_idea:
 
ஒரு காலகட்டத்தில்......
ஈழத்தமிழர் உரிமைகள் பிரச்சனையையொட்டி இவர் ஒரு மாபெரும் கதாநாயகன்.
தமிழர் உரிமைகளுக்காக சிங்களவர்களின் சித்திரவதைகளை அனுபவித்து இன்றும் உயிரோடு இருக்கும் ஒரு உறவு.
சிங்களவனின் அடிமட்ட புத்திகளை தெரியாதவர்கள் இவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
உரிமைக்காக உண்ணாவிரதமிருந்து உயிர் துறக்கும் நிலையில் இருந்த இவரிடம் கேட்டுப்பாருங்கள் சிங்களவனின் மனோநிலைகள் பற்றி.... :icon_idea:  :icon_idea:  :icon_idea:
 
தொடர்வீர்களானால் தொடரும்....

 

 

மிகச்சரியான சவால்....

 

தவறுகள்  சுட்டிக்காட்டப்படணும் என்ற ரீதியில் 

எமக்காக உழைத்தோரை  ஒதுக்குதலும்

உதாசீனப்படுத்திஅவமதிப்பதும்  தவறு..

 

என்னைப்பொறுத்தவரை

காசி அண்ணரை நோக்கி விரல் நீட்ட 

எனக்கு  தகுதியில்லை..........

 

அவர்

ஒரு ராஐதுரையாகாமல்

முரளிதரன்

பிள்ளையான் 

இளையபாரதி ஆகாமல்

என்றும் எம்முடன் நிற்பவர்

அவர் நினைத்திருந்தால்

இவர்களைவிட மேலான இடங்களில் இருந்திருக்கலாம்...

 

அந்த மண்ணிலிருந்து வரும் குரல்கள் சொல்ல முடியாத சூழலில்

அந்த மண்ணின் உண்மை முகத்தை அவர் வெளியிலிருந்து சொல்கிறார்.

Edited by விசுகு

ஆரம்ப வரலாறு என்று பார்த்தால் அனைத்து அரசியல்வாதிகளும் இதில் அடக்கம் .ஆனந்த சங்கரி ,டக்கி, கருணா இப்படி பட்டியல் மிக நீளம் .

கருணாநிதியை விட இதற்கு சிறந்த உதாரணம் இல்லை .

நியானி: ஒரு வரி நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஆரம்ப வரலாறுகள்/கொள்கைகள் எல்லோருக்கும் உண்டு.
 
அதை தக்கவைத்திருப்பதுதான் அவனவனின் திறமை. :icon_idea:  :icon_idea:  :icon_idea:
 
காசிஆனந்தனின் வரலாறுகள் தெரியாவிட்டால் தெரிந்தவர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழீழம் சம்பந்தப்பட்ட வரலாறுகள் / உணர்ச்சிகள் பள்ளியில் படித்த்து வருவதல்ல...
கண் முன்னே நடந்தவைகளை வைத்தே போராட்டங்கள் உதித்தது.
 
குடி கும்மாளம் படம் பட்டியல் என்று இருப்பவர்களுக்கு நாடும் சிந்தனையும் ஒரு கேடு... :icon_mrgreen:
பலர் சொல்லும் போர்க்குற்ற விசாரணை ஒரு நாளும் இலங்கையைப் பிரிக்கப் பயன் படுத்தப் பட மாட்டாது. அந்த விசாரணையை முன்னெடுக்கும் நாடுகளின் நோக்கமும் அது தான். அவர்கள் இலங்கையை எதிரியாகப் பார்க்கவேயில்லை. (எதிரியாகப் பார்த்திருந்தால்.. உதாரணமாகப் பொருளாதாரத் தடையாவது கொண்டு வந்திருக்கலாமே ?)
 
அத்தோடு போர்க்குற்ற விசாரணை ஐ.நா. வில் மேடையேறுவதும் சிரமம். ஏனென்றால் சீனா, ரஷியா போன்ற நாடுகள் அவற்றை நிராகரிக்கும். அப்படி மேடையேறினாலும் சீனா ஐ.நா. வின் தீர்மானத்தை நிச்சயமாக  வீட்டொ செய்யும். இதன் மூலம் இலங்கை ஒரு நிரந்தர சீன நன்பனாகி விடும். இதையெல்லாம் மேற்கு யோசிக்காமல் இருக்குமா ?
 
மேற்கு தன் நலன்களை இலகுவான முறையில் பேணவே முயற்சிக்கும். இப்படி சிக்கல் நிறைந்த பாதைகளை தெரிவு செய்ய மாட்டார்கள்.
 
காசி இன்னும் போர்க்குற்ற விசாரணை தொனியிலேயே நிற்கிறார். 
 
இப்போதைய தேர்தல் நடை பெறாமல் இன்னும் இரண்டு வருசத்துக்கு இப்படியே ஐ.நா. பேய்க்காட்டிக் கொண்டிருந்தால் இவர் மிஞ்சி மிஞ்சி கவிதை தான் பாட முடியும்.
 
 
 

வண்ணை ,காசி ,மாவை அந்த காலம் முடிந்து முப்பது வருடங்கள் சிலர் இப்பவும் அங்கே  தான் .

பாலூத்த வேண்டியவர்கள் பலர் இருக்கினம் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பந்தி பந்தியாக எழுதும் மாற்றுக்கருத்து குண்டுமணிகளுக்கு பதிலுடன் கூடிய என் ஒரு வரிக்கேள்விகள். :)
 
ஈழ மக்களின் போராட்டம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது?
எதற்காக ஆரம்பிக்கப்பட்டது? ஆரம்ப காரணகர்த்தாக்கள் யார்?
அவர்கள் எதற்காக கொடுமைப்படுத்தப்பட்டார்கள்?
எதற்காக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்கள்?
உண்ணாவிரதம் மோசமடைந்த போது எதற்காக சைக்கிள் ரியூப்பை வாய்க்குள் திணித்து பால் ஊற்றினார்கள்? என்ன வாக்குறுதியுடன் உண்ணாவிரதம் முடிக்கப்பட்டது?
இவற்றுக்கு பின்னரும் சிங்களம் ஈழத்தமிழனுக்கு என்ன உரிமையை வாரிவழங்கியது?
 
இனக்கலவரங்கள் வேறு விடயம்.
 
சரி விடுவம். 
 
இன்று சர்வதேசம் எமது ஈழப்பிரச்சனையை திரும்பி பார்க்க வைத்த காரண கர்த்தாக்கள் யார் யார்??
ஈழம் ஈழம் என புலம்பெயர் நாடுகளின் வீதிகளில் அமைதிப்போராட்டங்கள் நடத்தியது யார்?
 
திண்ணையில் வெட்டிப்பேச்சு பேச உலகநாடுகள் சிங்களத்திற்கு அழுத்தத்தை கொடுத்து விட்டார்களோ என்னவோ?  :lol:  :lol:  :lol:
 
 
அது சரி...????? 
 
போர்க்குற்றவாளி சரத் பொன்சேகாவை தேர்தலில் வெற்றிபெற்றவுடன் புனிதராக்கிய சிங்களம் ஏன் இன்னும் போர்க்கைதிகளை உடனடியாக விடுவிக்கவில்லை? :(  :(  :(
 
ஏன் அவர்கள் இன்னும் ஆயுததாரிகளா?  :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.